கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3070 topics in this forum
-
ரத்னா! ''அம்மா... உங்களைப் பார்க்க ஒருத்தர் வந்திருக்கார்... பேரு உலகநாதனாம், உங்களை அவருக்குத் தெரியுமாம்... அவரை உங்களுக்கும் தெரியுமாம்,'' செங்கம்மா சொன்னபோது, ஆச்சரியத்துடன் பார்த்தாள், ரத்னா. ''எப்ப வந்தார்... இப்ப தானே கதவை திறக்கிறோம்.'' ''வாசலை பெருக்கி, கோலம் போடலாம்ன்னு கதவைத் திறந்தேன்... இந்த அய்யா வந்தார்.'' ''உலகநாதனா... அவர் ஏன்... எப்படி... எதற்கு, அவர் தானா அல்லது வேறு யாராவதா... இது என்ன புது கதை! சரி... வரச்சொல்!'' உலகநாதன் தடுமாறியபடி உள்ளே வந்தார். கையில் தடி, தாடி, நைந்து போன வேட்டி, சட்டை. தன்னையறியா…
-
- 1 reply
- 911 views
-
-
ஐரோப்பா-1, அழியா ஊற்று - ஜெயமோகன் 2016 வரை நான் சென்ற நாடுகள் அனைத்துமே ‘புதிய’ உலகங்கள். இன்றைய நாகரீகம் உருவாகத் தொடங்கிய பின்னர் மனிதர்கள் குடியேறி சமைத்துக்கொண்டவை. நான் இந்திய எல்லையைக் கடந்து சென்ற முதல் அயல்நாடு கனடா. 2001 செப்டெம்பரில் அ.முத்துலிங்கம் அவர்களின் அழைப்பின்பேரில் அந்நாட்டுக்குச் சென்றேன். முதல்வெளிநாடு என்பது எவருக்கும் எண்ண எண்ணக் கிளர்ச்சியூட்டும் நினைவு. இன்றும் நயாகராவும், மேப்பிள்காடும், டிம் ஹார்ட்டன் டீக்கடையில் அமர்ந்து பேசிய இலக்கியமும் நினைவில் இனிக்கின்றன. அதன்பின்னர் 2006 ல் சித்ரா ரமேஷ் முயற்சியால் சிங்கப்பூருக்கும் அங்கிருந்து மலேசியாவுக்கும் சென்றேன். 2009 ஏப்ரலில் ஆஸ்திரேலியாவுக்கு நோயல் நடேசன் அவர்களின் அழைப்பால் …
-
- 13 replies
- 5k views
-
-
குருவின் சதி! … தாழையடி சபாரத்தினம். September 23, 2018 சிறப்புச் சிறுகதைகள் (12) – மூத்த படைப்பாளர்களின் சிறுகதைகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் – தாழையடி க.சபாரத்தினம் எழுதிய ‘குருவின் சதி’ என்ற சிறுகதை இடம்பெறுகின்றது. தொடரும் காலங்களில் ஏனைய சிறுகதைகள் வெளிவரும். அடர்ந்த காட்டினூடே நடந்து கொண்டிருந்தான் அந்த வாலிபன். அவன் செல்வதற்கு வழி செய்துகொண்டு முன்னால் இருவர் சென்றனர். பின்னாலும் வில்லும் வேலும் ஏந்திய வீரர்கள் சென்றுகொண்டிருந்தனர். தாரகைகள் புடைசூழப் பவனி செல்லும் வான்மதி போல் வீரர்கள் மத்தியில் ஏறுநடை போட்டு நடந்து கொண்டிருந்தான் அவன். திரண்ட புயங்களும், பரந்த மார்பும், பால் வடியும் முகமும் – அவன் வீரன் மட்டுமல்ல;…
-
- 2 replies
- 1.3k views
-
-
அவளது வீடு - சிறுகதை நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு...எஸ்.ராமகிருஷ்ணன், ஓவியங்கள்: ஸ்யாம் 'வீடு வாடகைக்கு விடப்படும்’ என்ற விளம்பரத்தைப் பேப்பரில் பார்த்ததும், அதன் தொலைபேசி எண்ணைக் குறித்துக்கொண்டாள் அகல்யா. அலுவலகம் முடிந்து போகும் வழியில், 'அந்த வீட்டைப் பார்த்துவிட வேண்டும்’ என்று நினைத்தபடியே, லன்ச் பாக்ஸையும் குடிநீர் பாட்டிலையும் எடுத்து ஹேண்ட்பேகில் வைத்துக்கொண்டு ஸ்கூட்டியில் கிளம்பினாள். அவள் வேலை செய்யும் ஆடிட்டர் அலுவலகம், மந்தைவெளியில் இருக்கிறது. மறைமலைநகரில் இருந்து கிளம்பி அலுவலகம் போவதற்கு எப்படியும் 1.30 மணி நேரத்துக்கு மேல் ஆகும். 'நேரத்துக்குள் போகாவிட்டால், அரை நாள் சம்பளத்தைப் பி…
-
- 2 replies
- 4k views
-
-
வீரயுக நாயகன் வேள் பாரி - 1 புதிய வரலாற்று தொடர்சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ., முன்னுரை இளைப்பாற நிழலின்றித் தவிக்கும் வழிப்போக்கனின் கண்ணில் படும் பெரும் ஆலமரம்போல, மூவேந்தர்களும் மன்னர்கள் பலரும் ஆண்ட தமிழகத்தில், தவித்தலைந்த உயிர்களுக்காகத் தன்னையே தந்தவன் வேள்பாரி. தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர். பறம்பு நாட்டின் நிலவளம் அவர்களின் கண்களை உறுத்தியது. பாரிக்கு எதிராகத் தனித்தனியே அவர்கள் மேற்கொண்ட போர் முயற்சிகள் கைகூடவில்லை. இறுதியில் மூவேந்தர்களும் ஒன்றிணைந்தனர். அவர்களின் கூட்டுப்படை பாரியின் பறம்புந…
-
- 127 replies
- 526.1k views
-
-
என்னுயிர் நீதானே... - ஒரு நிமிடக்கதை சுபாகர் என்னுயிர் நீதானே... ''சாமி, நான் இந்த ஊருக்கு வந்து ஏழு வருஷம் ஆச்சு. ஒரு ஹோட்டல்ல சப்ளையர் வேலை பாக்கு றேன். ஏனோ தெரியலை, உங்களைப் பார்த்ததுமே என் கதையைச் சொல்லி அழணும் போல இருக்கு!'' என்றான் அவன். …
-
- 1 reply
- 1.2k views
-
-
அப்பாவைப் பார்க்கணும்! அருண் வயசு 27. சிவந்த நிறம். எடுப்பான மூக்கு. அழகான உருண்டை முகம். இன்றைய இளைய தலைமுறை இளைஞன். ஒரே ஒரு சின்ன விசயம் இடறல். இன்றைய இளைஞர்கள் விருப்பம் போல் கொஞ்சமாய் முடி உள்ள தாடி வைத்துக் கொள்ளப் பிடிக்காது. ஒரு நாள் விட்டு மறுநாள் முகச் சவரம் செய்து கொள்வான். மீசையும் அளவாய் அழகாய் இருக்கும். இவனைக் கடக்கும் எந்தப் பெண்ணும் ஓரக் கண்ணாலோ, அடிக்கண்ணாலோ பார்க்காமல் போகமாட்டார்கள். அந்த அளவிற்கு இவனுக்கு உடல்மொழி, முக வசீகரம், கண்கள் கவர்ச்சி. அம்மாவுடன் பேச நேரம் பார்த்துக் கொண்டிருந்த இவனுக்கு இந்த ஞாயிற்றுக்கிழமை மணி 10. 10 நேரம் வசதியாக அமைந்தது. அம்மா …
-
- 2 replies
- 1.9k views
-
-
லண்டன்: பல முகங்களில் ஒரு வரவேற்பு! விமானப் பயணத்தின்போது இறக்கை பக்கவாட்டிலுள்ள ஜன்னலோர இருக்கைகளைத் தேர்ந்தெடுப்பது என் வழக்கம். இயற்கையில் தனக்கு மறுக்கப்பட்ட ஆற்றல்களைத் தன்னுடைய அசாத்தியமான முயற்சிகளால் எட்டிப்பிடிப்பதில் மனித குலம் காட்டிவரும் இடையறாத யத்தனத்துக்கான அபாரமான குறியீடாக விமானத்தின் இறக்கைகள் தோன்றுவது உண்டு. உச்சத்தில் நிற்கு…
-
- 7 replies
- 2.7k views
-
-
சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் பிறக்கும்பொழுது பூமியில் தன் இடத்தை அறிந்துகொள்ள முடியாத மனிதன் இறக்கும்பொழுதும் செல்லும் இடத்தைக் கணிக்க முடியாதவனாக இருக்கிறான். ""கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்'' என்பதற்கு ஏற்றார்போல சொர்க்கம், நரகம் என்பது எல்லாம் கண்டு வந்து சொன்னவர் என்று எவரும் இலர் என்பதே உண்மை. இப்படிப்பட்ட ஆரம்பமும், முடிவும் அறிய முடியாத உலக வாழ்க்கையில் அடுத்த கணம் என்ன நடக்கும் என்பதைச் சொல்ல முடியாத நிலையில் மனிதர்கள் எதிர்கொள்ளும், வேதனைகளும், சோதனைகளும் ஓய்வில்லாத அலைகளுக்கு ஒப்பாக இருக்கிறது. இன்பம் என்பது எட்டிப்பார்த்துவிட்டு போகும் வானவில்லாக இர…
-
- 29 replies
- 7.4k views
-
-
‘சத்ரு’ – பவா செல்லதுரை அவன் காசிரிக்கா நாரினால் கயிற்றுக் கட்டிலோடு இழுத்துக் கட்டப்பட்டிருந்தான். சுற்றி நின்றிருந்தவர்களின் முகங்களில் மரணமேறி இருந்தது. சிலர் ஆர்வத்தின் நுனியிலிருந்தார்கள். அவன் பிடிவாதமாய் கண் திறக்காமல் கிடந்தான். ரங்கநாயகி கிழவி தனி பொம்பளையாகப் பதட்டமின்றி, அவன் தலைமாட்டில் குந்தி இருந்தாள். அவள் நிதானத்தில் அனுபவம் குழைந்திருந்தது. மௌனம் எல்லோருக்கும் பொதுவாய் பரவி இருந்தது. அந்தச் சின்னக் குடிசை,தன் உள்புறம் இதற்குமேல் ஒரு ஆளையும் அனுமதிக்காத பிடிவாதத்தில் இருந்தது. வீட்டின் வெளி, புதுசாய் பார்க்கிற எவரையும் பயமுறுத்தும். நீண்டு, அகன்று பரவியிருந்த பாறைகளின் நடுவில் ஒதுங்கியிருந்த மண்திட்டில், கட்டியிருந்த கூரையின் வெளியில் நின்று பார்த…
-
- 2 replies
- 1.3k views
-
-
ஒரு நிமிடக் கதைகள்! ராஜேஷ்குமார் இரண்டாவது இன்னிங்ஸ் நியூ ஜெர்ஸியில், ஃபைனல் சொல் யூஷன் சாஃப்ட்வேர் கம்பெனி. லன்ச் இடை வேளை. கேன்ட்டீனில் உட்கார்ந்து சிக்கன் சீஸையும், யோகார்டையும் கொறித்துக் கொண்டு இருந்தபோது, மெர்ஸி வந்தாள். ‘‘என்ன ஷிவா… ரீட்டாவைக் காதலிக்கிறி யாமே, நிஜமா? உன்னோட பி.சி&யில் அவ போட்டோ, அவளோட பி.சி-யில் உன் போட்டோ..! டூயட் பாடாதது ஒண்ணுதான் குறையாம்! ஆபீஸே புகையுது!’’ ‘‘பேத்தல்!’’ ‘‘நம்ப மாட்டேன். இன்னிக்கில்லேன் னாலும் என்னிக்காவது ஒரு நாள் பூனைக்குட்டி வெளியே வந்துடும்…’’ என்றபடி மெர்ஸி எழுந்து போக, அந்த இடத்தில் வந்து உட்கார்ந்தாள் ரீட்டா. ‘‘மெர்ஸி பேசியதை நானும் கேட்டேன். எனக்குத் தெரிஞ்சு அதுல பாதி நிஜம்! ந…
-
- 0 replies
- 504 views
-
-
மனசும் மனசும் வெளியே அடித்த வெயில் பார்வதியின் அறைக்குள்ளும் லேசாய் எட்டிப் பார்த்தது. உள்ளே வந்த கௌரி ஓடிக் கொண்டிருந்த ஃபேனின் அளவைக் கூட்டினாள். பிறகு கொஞ்சம் கஷ்டப்பட்டு படுக்கையிலிருந்து பார்வதியை நிமிர்த்தினாள். உட்கார வைத்து ஒரு கையில் தாங்கி பிடித்துக் கொண்டாள். கௌரி பார்வதியின் முதுகை உற்றுப் பார்த்தாள். ஆங்காங்கே சிவப்பாய் தெரிந்தது. மெல்ல அந்த இடங்களில் பவுடரைத் தூவினாள். விரல்களால் மெதுவாய் தேய்த்த போது வந்த எரிச்சலில் பார்வதியின் முகத்தில் இருந்த ரேகைகள் நெளிந்தது. "ஒண்ணுமில்லம்மா.. எல்லாம் சரியாயிடும்..'' என்று கௌரி ஆறுதலும் சொன்னாள். அப்படியே பார்வதியிடம் அந்த விஷயத்தையும் சொன்னாள்:…
-
- 1 reply
- 881 views
-
-
ஒருநிமிடக் கதை : தலையைச் சுத்தி ஒரு மொட்டை! உடல் தேறி, ஆபீசுக்குப்போகப்போவதாகச் சொன்னதும் மகிழ்ந்த மீனாட்சி, மகன் கால்களில் செருப்புடன் தலை முடி வெட்டக் கிளம்பியதும் திடுக்கிட்டாள். இப்போதுதான் செந்தில் உடல் நலம் தேறி நடமாடத்தொடங்கி இருந்தான். அவன் பார்த்துப்பான் என்று கை விரித்து டாக்டர் சொன்னபோது ஒருநிமிடம் மூச்சு நின்றுபோய்தான் வந்தது அவளுக்கு. டாக்டர்…டாக்டர் என்று பின்னால் ஓடிப்போயும் கிடைக்காத பதிலால் சிறிது நேரம் திகைத்து , ஒரு... ஒருரூபாய் காயினை மஞ்சள் துணியில் முடிந்து “அப்பா, வெங்கடாசலபதி பெருமானே, நீதான் துணை. நல்ல படியா புள்ள ப…
-
- 1 reply
- 4.3k views
-
-
ஓர் ஊரின் கதை ஊருல தெருக்கள் இருக்கும். ஆனா, ஒரு தெருவே ஊராய் இருக்குமா? இருக்கே! நம்பிக்குறிச்சிங்கிற ஊர், அப்படி ஒரு தெருதானே! ஒரு காலத்துல ஓகோன்னு இருந்த ஊர். இப்ப, வெற்று அடையாளங்களோட, கட்டட மண்ணும் குட்டிச் சுவருமாக் கிடக்கு. சோலைவனம் போலப் பூத்துச் செழிச்சிருந்த ஊராக்கும் இது! இப்ப கரடு தட்டிப் போன காட்டுப் பகுதி மாதிரில்ல காணப்படுது. ஓ! எப்பேர்ப்பட்ட மனுசங்க நடமாடின மண் இது! இங்க மொதல் வீடே தபால் பண்ணைத் தாத்தா வீடுதான். கறுப்பா இருந்தாலும் கம்பீரமா, லெட்சணமா இருப்பாங்க. வெள்ளை மீசையைக் கெத்தா முறுக்கி விட்ருப்பாக. அவுக ஊர்வழி போறப்ப தூள் க…
-
- 0 replies
- 1.4k views
-
-
அவளை நீங்களும் அறிவீர்கள்! - ச.பாலமுருகன் ச.பாலமுருகன் நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... அவளை நீங்களும் அறிவீர்கள்! நடுப் பகலில்கூட சூரிய ஒளியை மட்டுப்படுத்தி அனுமதிக்கும் அடர் வனம் அது. மாலையில் பொழிந்த ஆலங்கட்டி மழையால் நிலம் நன்கு குளிர்ந்திருந்தது. வனத…
-
- 0 replies
- 819 views
-
-
வெள்ளைக்காரன் அ.முத்துலிங்கம் சிண்டரெல்லா கதையில் யார் கதாநாயகன் அல்லது நாயகி என்று கேட்டேன். நான் கேட்டது ஓர் ஆறு வயது பெண் குழந்தையிடம். அந்தக் குழந்தை பதில் சொல்ல ஒரு விநாடிகூட எடுக்கவில்லை. ’மணிக்கூடு’ என்றது. நான் திடுக்கிட்டுவிட்டேன். சிண்டரெல்லாவைச் சொல்லலாம், அல்லது ராசகுமாரனை சொல்லலாம். அல்லது தேவதையை சொல்லலாம். ஏன் சிண்டரெல்லாவின் இரண்டு சகோதரிகளைக் கூடச் சொல்லியிருக்கலாம். இது புதுவிதமாக இருந்தது. யோசித்துப் பார்த்தேன். அந்தக் குழந்தை சொன்னது சரிதான். மணிக்கூடு இல்லாவிட்டால் கதையே இல்லையே. அதுதானே முடிச்சு. 12 மணி அடிக்கமுன்னர் சிண்டரெல்லா வீடு திரும்பவேண்டும். இதுதான் தேவதையின் கட்டளை. ஆகவே கதையில் முக்கியமானது மணிக்கூடுதான். …
-
- 0 replies
- 739 views
-
-
பிள்ளை மனம் கல்லு "ஏம்மா உனக்கு ஒருதடவ சொன்னா புரியாதா நல்ல மாட்டுக்கு ஒரு சூடு அதான் மாச மாச பெட்ரோல் போட்டு உன்ன பாக்க வரோம்ல நீ ஏன் இப்படி வந்து நிக்கிற காலங்காத்தாலே அழுதுட்டு வந்து நிக்கிற உன் மூஞ்சியை பாத்தா வெலங்குமா என் பொண்டாட்டி காலையிலயே ராமாயணம் பாட ஆரம்பிச்சுட்டா தேவையா எனக்கு உன் வயித்துல பொறந்தேன் பாரு...ச்சே.'' இதை கேட்ட மூத்தவள் பங்கஜத்தின் நெஞ்சம் வெடித்து விடாதா என்று தன் கையாலாகாத நிலையை எண்ணி மருகினாலே தவிர, வேறு ஏதும் செய்ய முடியாத நிலை. பெண்டாட்டி பேச்சை கேட்டு பணம் ஒன்றே பெரிது என்று கருதும் பிள்ளைகளை பெற்ற தன் இழிநிலை. பெண்பிள்ளையின் அருமை இப்போதல்லவா புரிகிறது? எவ்வளவு சந்தோஷத்துடன் பெற்ற இரண்டு…
-
- 0 replies
- 628 views
-
-
நான்காம்முறைப் பயணம் - சிறுகதை போப்பு, ஓவியங்கள்: செந்தில் ஐந்து லிட்டர் வண்ண டப்பாக்கள் அத்தனையும் இறக்கி முடித்துவிட்டு அடுக்குகளைச் சீர்செய்வதுபோல் ஆசுவாசமாகிக்கொண்டிருந்தேன். பெயின்ட் வாசனை, அனிதா பயன்படுத்தும் பவுடர் வாசனையை நினைவூட்டியது. வண்டியுடன் வந்த சுமை இறக்குவோர், பைகளை இரண்டு, மூன்றாகத் தலையில் தூக்கிக்கொண்டு மெல்லோட்டம் போட்டுவந்து, மளமளவென்று இறக்கிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் இயங்கும் வேகமும் லாகவமும் நாட்டிய பாவம்போல் இருந்தன. அவர்களது மீசை, தலைமுடி, புருவம், கை-கால் முடி... என உடல் எங்கும் சீராக வெள்ளைப் பனித்துகள்கள்போல தூசி படிந்து இருந்தது. உடலில் எங்கு தொட்டாலும் பவுடர். அவர்கள் மீது படிந்தி…
-
- 0 replies
- 1.3k views
-
-
அப்பாஸ்புரம் அய்யனார் சாமி - சிறுகதை பிச்சையம்மான் - ஓவியங்கள்: வேலு குளிருக்கு, மாராப்புத் துண்டை இழுத்துப் போர்த்தியிருந்தது. பாதரசக்கட்டை உடைந்துபோயிருந்ததால், கரந்தமலையில் விட்டெறிந்து நாளாகிவிட்டது. கையில் துருப்பிடித்த அரிவாள்… புதிய அரிவாளை அடித்துக் கொடுக்க மலையில் ஆள் இல்லை. மாராப்பு மணி, கரந்தமலையில் ஒரு மரத்தில் காற்றில் ஆடியபடியே பல ஆண்டுகளாகக் கிடக்கிறது. அழுக்குப்படிந்த குதிரையில் ஊர் எல்லையில் இருக்கும் முத்தரங்குளத்தில் வந்து நின்றது அய்யனார் சாமி. நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் பலனாக, முத்தரங்குளம் கரை உயர்த்திக் கட்டப்பட்டிருந்தது. செங்குளத்தைத் தாண்டும்போதே குதிரை இளைக்கத் தொடங்கியதால், முத்தரங்குளத்த…
-
- 0 replies
- 2k views
-
-
பெத்த அம்மா...வளர்த்த அம்மா... கிரிக்கெட் மேட்ச்சில் வெற்றி பெற்ற குஷியுடன் மட்டையைச் சுழற்றியபடி வீட்டில் நுழைந்தான் கார்த்திக். சமையலறையில் எண்ணெய்யில் பொரியும் பூரியின் மணம் வாசலிலேயே வரவேற்றது. "ஹை... பூரி ...'' மட்டையை ஒரு பக்கம் வீசி எறிந்தான்... கை கால் கழுவிக் கொண்டு சாப்பாட்டு மேஜையின் முன் உட்கார்ந்து கொண்டு தாளம் போட்டபடி கத்தினான்... " அம்மா டிபன்'' "மல்லிகா கார்த்திக் வந்துட்டான் பாரு.இந்தா அவனுக்கு கொண்டுபோய் கொடு''...ஒரு தட்டில் நாலைந்து பூரிகளை வைத்து குருமாவையும் ஊற்றி நீட்டினாள் வனஜா. "வேண்டாண்டியம்மா உன் பிள்ளைக்கு நீயே பரிமாறு. சொல்லிட்டேன்...'' "உனக்கும்தான…
-
- 1 reply
- 5.3k views
-
-
"சித்தப்பா பூங்கா" தர்ஷன் அருளானந்தன் சமீப நாட்களில் எல்லாம் பஸ் ஏறுவதற்காக ஓராம் கட்டை சந்திக்கு வந்தால் அவனுக்குள் தோன்றி மறைந்து கொண்டிருக்கும் அந்தக் கனவு தன் உள்ளத்தில் எங்கேயோ ஒரு புல்லாங்குழல் இனிமையானதோ, துன்பகரமானதோ எனப் புரியாத ஒரு இராகத்தை மீட்டிக் கொண்டிருக்கின்றது. அவ்வளவு எல்லையற்றதாக இருந்தது அவனது மகிழ்ச்சியும், வேதனையும்.கண்களைத் செருகி கனவில் வந்த சித்திரங்களை ஆராய்ந்தான். விசித்திரமான சீருடையுடன் அழகான மனிதர்களின் அரைப்பட போட்டோக்கள் மதில்கள் முழுவதும் தெரிந்தன.'வீரவணக்கம்' என்னும் தலையங்கத்தின் கீழே. விசித்திரமான மந்திரப் பாட்டுப் பொட்டியில் இருந்து துள்ளலும் , இனிமையுமான சங்கீதம் பரவிக் கொண்டிருந்தது. கிளைகளும் மரங்களும், இலைகளும் பூக்க…
-
- 0 replies
- 999 views
-
-
கம்பமதயானை* ‘எத்தனையளவு உள்ளே போகிறேனோ அத்தனை பசுமை மலைகள்.’ டானடா சண்டூகா (ஜென் கவிதைகள்) – தமிழில்: ஷங்கரராமசுப்பிரமணியன் கண்ணுக்கெட்டிய உயரம் வரை மலையை இருள் சூழ்ந்திருந்தது. பெளர்ணமி நிலவின் வெளிச்சத்தைக் குடித்துக்கிறங்கிப்போயிருந்த மந்தமான இருள். வண்டாரி, பழையூ, செம்பட்டி, அத்திபட்டி ஊர்களிலிருந்து துணைக்கு வந்திருந்த ஆள்களுடன் செல்வராஜும் ஜோதியும் மலையிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தார்கள். மஹாலிங்கத்தின் தரிசனத்துக்காகச் சாரை சாரையாக மக்கள் தாணிப்பாறை வழியாய் வந்துகொண்டிருந்தாலும் சாப்டூர் சுற்றின கிராமத்து மக்களுக்கு இன்னும் இதுதான் குறுக்குப் பாதை. தாணிப்பாறையிலிருந்து செல்வதைவிடவும் தூரம் குறைவுதான். ஆனால், ஏறி இறங்கக் க…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஒளி வளர் விளக்கு - சிறுகதை காயத்ரி சித்தார்த் - ஓவியங்கள்: ஸ்யாம் அனு பேசினாள். கல்லூரி வாட்ஸ் அப் குரூப்பிலிருந்து எப்படியோ என் நம்பரைப் பிடித்திருக்கிறாள். நம்பவே முடியவில்லை. நாங்கள் இளங்கலை முடித்து 21 ஆண்டு ஆகிறது. இடையில் இரண்டு முறைதான் பேசினோம். நான்தான் அவள் வீட்டு லேண்ட்லைன் நம்பரைத் தொலைத்துவிட்டேன். நாங்கள் வீடு மாறும்போதெல்லாம் எங்கள் போன் நம்பரும் மாறிக் கொண்டிருந்தது. என்னுடைய மொபைல் நம்பரையும் நான் ஆறு முறை மாற்றிவிட்டேன். கடைசியாக மாற்றியது ஏர்செல் பிரச்னையில். நான் வாட்ஸ் அப் குரூப்களைத் திறந்து பார்ப்பதேயில்லை. பெரும்பாலும் ஃபார்வேர்டு மெசேஜுகள். குட்மார்னிங், குட்நைட், ஹீலர்கள், போலி இ…
-
- 0 replies
- 2.1k views
-
-
ஜான்ஸி மலையகம் வாசகத்திற்கு ஏற்பவே சூழவும் மலைகளைக் கொண்டு விளங்கியது. அதிலும் சிறப்பு என்னவென்றால் அம்மலைகள் பார்ப்போர் கண்களுக்கு குளிர்ச்சியையும் மனதிற்கு இன்ப மகிழ்ச்சியையும் அள்ளித்தெளிக்கும் பச்சைப்பசேல என்ற தேயிலைச் செடிகளால் ஆட்சி செய்யப்பட்டுக் கொண்டு இருந்ததுதான். இதனைத் தவிர மரக்கறித் தோட்டங்கள், மெய்சிலிக்கும் நீர்வீழ்ச்சிகள், பனிமூட்டங்கள் என பல வகைப் பண்புகளையும் சிறப்புக்களையும் கொண்ட பண்டாரவளையில் அம்பிட்டிய என்பது ஒரு சிறிய தோட்டக் கிராமம். அதில் பெரும்பாலானோர் தேயிலைத் தோட்டங்களில் வேலை பார்த்தனர். அதிலும் பெண்கள் தான் பெரும்பான்மையாக இருந்தது. அவர்களின் ந…
-
- 0 replies
- 1.2k views
-
-
தண்டனை! ''அந்தப் புள்ளைங்க ஏதாவது செய்துகிட்டா, நீங்கதான் பொறுப்பேத்துக்கணும்; என்னையெல்லாம் இதுல சம்பந்தப்படுத்தக் கூடாது...'' என்றார், கடுமையாக, தலைமை ஆசிரியை. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி அது; அன்று மாதாந்திர தேர்வு, நடந்து கொண்டிருந்தது. யாஸ்மினுக்கு வகுப்பு இல்லை என்பதால், ஆசிரியர் ஓய்வு அறையில் உட்கார்ந்து, தன் குறிப்பேட்டில், எழுதிக் கொண்டிருந்தாள். அப்போது, உதவி தலைமை ஆசிரியையும், அறிவியல் ஆசிரியையும், யாஸ்மினை தேடி வந்தனர். 'இந்த அநியாயத்தக் கேளுங்க மிஸ்...' என்றபடி…
-
- 0 replies
- 1.3k views
-