Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. வேட்டை - வா.மு.கோமு உச்சி வெய்யில் ஏறியிருந்தது. தலைக்குச் சூடு தெரியாமலிருக்க, தோளில் கிடந்த துண்டை உதறி உருமாலைக் கட்டுக் கட்டியிருந்தார் ஆரப்பன். தரையைத் தொட்டுவிடுமோ என்கிற மாதிரி, அடிக்கடி தொங்கி வரும் நாக்கை வாய்க்குள் இழுத்துக்கொண்டு டைகர் அவருக்கும் முன்னால் வேலியோரமாக அவரைப் பத்திரமாகக் கூட்டிப் போவதுபோல் நடந்தது. இருவருமே சங்கித்தான் போயிருந்தார்கள். போக, இருவருக்கும் வயதும்வேறு ஆகிவிட்டது. ‘‘ஏப்ரல்லயே வெய்யொ இந்தப் போடு போட்டா, இன்னமும் மே மாசமுன்னு ஒண்ணு முழுசாக் கிடக்கே டைவரே! ஒடம்புல இருக்குற எல்லா மசுருகளும் கருகிப்போயிரும். கருகல் வாசம் நம்ம மூக்குக்கே அடிக்கும் பாரு, வடைச் சட்டி தீயுற வாசமாட்டொ” டைகரிடம் சொல்ல…

  2. Started by நவீனன்,

    தண்டனை! அதிகாலை ஐந்து மணி- முகத்தைக் கழுவி, துடைத்த துண்டை தோளில் போட்டபடி, பழைய சைக்கிளை வெளியே எடுத்தான் ரத்தினம். கட்டடம் கட்டும் மேஸ்திரி அவன். சத்தம் கேட்டு விழித்துக்கொண்டாள், அழகேஸ்வரி. ''யோவ்... நாழி வளத்தாம சீக்கிரம் போயிட்டு வா... வேல நிறைய கிடக்கு,'' பதிலுக்குத் தலையை அசைத்தபடி மெதுவாய் சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தான். 10 நிமிடத்தில் மெயின் ரோட்டிலிருக்கும் அரச மரத்தடி டீக்கடையை வந்தடைந்தான். அப்போது தான் பாய்லரை பற்ற வைத்து, முதல் குவளை டீயை ஆத்தி முடித்தான் கடை மாஸ்ட…

    • 1 reply
    • 1.3k views
  3. Started by நவீனன்,

    துறவு வாழ்க்கையே வெறுத்துவிட்டது. பொழுது விடிந்து பொழுது போனால் தொல்லை... தொல்லை... தொல்லைதான்... என்ன சுகம் வேண்டிக் கிடக்குது? பேசாமல் சந்நியாசம் கொள்ளப்போகிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்த சிவா உண்மையிலேயே சந்நியாசி ஆகிவிட்டார். காவியுடை தரித்து, வேதங்களையும் புராணங்களையும் கரைத்துக் குடித்தாயிற்று... பிரசங்கங்கள் செய்ய அவை பயன்பட்டனவே தவிர, அவர் உண்மையில் தேடிய உள்ளத் தெளிவோ, சந்தோஷமோ, ஆத்ம திருப்தியோ கிடைக்கவேயில்லை. ஆரம்பத்தில் அவர் காசிக்குப் போனார். பின், திருக்கயிலாய மலை யாத்திரை செல்லும் வடஇந்திய யாத்திரிகர்களோடு சேர்ந்து இமயமலை ஏறினார். வழியிலி…

  4. டெரரிஸ்ட் - சிறுகதை ஷான் கருப்பசாமி - ஓவியங்கள்: கோ.ராமமூர்த்தி 20 வருடத்துக்கு முன்பான கல்லூரி வாழ்க்கை, வேறொரு பிறவியைப்போல இருக்கிறது. முற்பிறவியிலிருந்து யாரையாவது மீண்டும் சந்திக்கும்போது, நெற்றியைச் சுருக்கி யோசிக்க வேண்டியிருக்கிறது அல்லது விழிகளை விரித்து ஆச்சர்யப்பட வேண்டியிருக்கிறது. சதையைக் கூட்டியோ, சிகையை உதிர்த்தோ அல்லது வெளுத்தோ அவர்கள்மீது விளையாடியிருக்கும் காலம். வெங்கடேஷும் அப்படித்தான் இரண்டு மடங்கு குறுக்கில் வளர்ந்திருந்தான். பாதி முடியை இழந்திருந்தான். கல்லூரியில் எங்களுக்கு ஜூனியர். வெவ்வேறு துறை. ஆனால், ஹைதராபாத்தில் மூன்று நட்சத்திர விடுதியின் வரவேற்புப் பகுதியில் தூரத்தில் பார்த்தபோதே வெங்கடேஷை எனக்கு அடை…

    • 1 reply
    • 2.1k views
  5. ஒருநிமிடக் கதை: தேவைக்குத் தகுந்தது மாதிரி..! சிவா மிகவும் பதைபதைப்புடன் இருந்தான். அட்ரினல் சுரப்பிகள் ஓவர்டைமில் வேலை செய்து கொண்டிருந்தன. இருப்பா அல்லது இறப்பா அளவிற்குப் பெரிய விஷயம் இல்லை. ஆனாலும் இருப்பா, கல்தாவா என்பது அந்த முப்பது வயது, வேலை இல்லாமல் இப்போது ஒரு ட்ரெய்னியாக எடுக்கப்பட்டு, இன்னும் சில வாரங்களில் வேலை நிச்சயமாக்கப்படும் நினைப்பில் தெருக் கோடி சாரதாவை அடிக்கடி பார்த்து, அசட்டுத்தனமாக இளித்து, எதிர்பார்ப்போடு காதலைச் சொல்ல நினைத்தவனுக்குப் பெரிய விஷயமாகத்தான் இருக்கும். சென்ற வாரம்தான் தலைமை எடிட்டர் காது குடைந்த சுகத்தில் மூழ்கி இருந்த வ…

  6. தாய்மையே வெல்லும்! "அவன் வந்துவிடுவானோ எனும் அச்சத்துடன் தேவகியும் கோமதியும் ரயில்நிலைய இருக்கையில் நிலை கொள்ளாமல் அமர்ந்திருந்தார்கள். "நான் பொறந்தப்பவே கழுத்தை நெறிச்சோ வாயில நெல்லைப் போட்டோ என் கதைய முடிச்சிருந்தா இப்ப இந்தக் கஷ்டம் வந்திருக்காதில்லம்மா'' என்ற தேவகி வானத்தை நோக்கினாள். வானம் இருண்டு கிடந்தது. இடி முழக்கங்களும் மின்னல் வீச்சுக்களும் பூமியை துவம்சம் செய்யப்போவது போல் தொடர் தாக்குதல் நடத்தத்தொடங்கி இருந்தன.. மெல்ல மெல்ல மழையும் இறங்கிற்று, பயணிகள் ஆங்காங்கே ஒதுங்கி, ஒண்டிக் கொண்டு நின்றார்கள். "ரயில் எப்ப வரும்?'' "வருமோ வராதோ.. வந்தாதான் தெரியும்'' இத்தகைய …

  7. முகம் - போகன் சங்கர் நான் அவளை உணர்வதற்குள் மிக நெருங்கியிருந்தேன். சப்பாத்துப் பாலத்தின் மீது அமர்ந்துகொண்டு, மெதுவாய் ஓடும் தாமிரபரணியில் கால்களை அளைந்து கொண்டு நேராகப் பார்க்கையில், ஓரங்கள் கசிந்து தெரிந்தவள் பக்கப் பார்வையில் மிகப் பிரகாசமாகத் துலங்கினாள். தெருவில் அவ்வப்போது யாராவது எச்சரிப்பது உண்டுதான். “சார் ராத்திரியில அந்தியில சூச்சிச்சிப் போணும். அந்தப் பாலத்துலே ஒரு சூலி வாதை உண்டாக்கும்.’’ “சூலி வாதைன்னா?” “நிறைகர்ப்பத்துல செத்துப்போன பொண்ணு.” “செத்தா போனா? கொன்னு தாழ்த்தியது” என்பார் ஒருவர். “யார் கொன்னது?” “யாரு கொல்வா?அவளோட தந்தையோ உடம்பிறந்தானோ பர்த்தாவோ காமுகனோ அரசனோ...” “எப்போ ந…

    • 1 reply
    • 1.9k views
  8. துபாய் ரிட்டர்ன் அதிகாலை வந்த குறுஞ்சேதி. “மச்சி இன்று துபாயிலிருந்து சென்னை வருகிறேன். மாலை 8 மணிக்கு வந்துருவேன்...” படித்தபின் அதற்கேற்றவாறு எல்லா வேலைகளையும் முன்னதாக முடித்துவிட்டு மதிய அலைச்சலுக்குப்பின் குட்டித்தூக்கம் போட்டுவிட்டு மாலை 6 மணிக்கு எழுந்து பார்க்கையில் 7 மிஸ்டு கால்கள். பெரும்பாலும் அறிமுகமில்லாத எண்களின் கால்களை எடுப்பதில்லை. சரமாரியான மார்க்கெட்டிங் கால்கள் தொந்தரவின் உச்சம். தெரிந்த எண்களுக்கு மட்டும் பதிலளித்து பேசிவிட்டு குமரகம் டீக்கடையில் தஞ்சம். நான்கு ரோடும் வெட்டிக்கொள்ளும் கார்னர் அது. ஹாரன் சத்தங்கள் நொடிக்கொரு முறை காதைப் பிளக்கும். இருந்தாலும் பீட்டர் அண்ணனின் ஸ்ட்ராங்கான இஞ்சி டீக்காக எதையும் பொறுத்துக் …

  9. தாண்டி வா பெண்ணே! வேலை முடிந்து விட்டது. ஆனால், நிமிர்ந்து பார்ப்பதற்கே அச்சமாக இருந்தது. எங்கே வாசு வந்து நிற்பானோ என்று இருந்தது. ஆனால், விழிகள் தன்னிச்சையாக இயங்கின. இரண்டு பக்கமும் அடிப்பார்வையாக அவனைத் தேடின. ''வேலை முடிஞ்சுதா கல்பனா?'' அவன்... அவன்... அவனே தான்... வந்து விட்டான். ''இல்லே... ஆமா... முடியலே,'' என்று குழறினாள். ''ரிலாக்ஸ் கல்பனா... நோ டென்ஷன் ப்ளீஸ்... நான் வெயிட் பண்றேன்.'' ''ஏன்... ஏன் வெயிட் பண்ணணும்?'…

    • 1 reply
    • 899 views
  10. லண்டன்: பல முகங்களில் ஒரு வரவேற்பு! விமானப் பயணத்தின்போது இறக்கை பக்கவாட்டிலுள்ள ஜன்னலோர இருக்கைகளைத் தேர்ந்தெடுப்பது என் வழக்கம். இயற்கையில் தனக்கு மறுக்கப்பட்ட ஆற்றல்களைத் தன்னுடைய அசாத்தியமான முயற்சிகளால் எட்டிப்பிடிப்பதில் மனித குலம் காட்டிவரும் இடையறாத யத்தனத்துக்கான அபாரமான குறியீடாக விமானத்தின் இறக்கைகள் தோன்றுவது உண்டு. உச்சத்தில் நிற்கு…

  11. பிறழ்வு ( சிறுகதை ) : ஜீ.முருகன் அது நடிகை மோனிகா பெலூச்சிதான். ஒரு கட்டிலில் அவள் அமர்ந்திருக்கிறாள். மரக்கட்டிலா இரும்புக்கட்டிலா ஞாபகம் இல்லை. மேக்கப் பூசிய அந்த முகம், உதட்டுச் சாயம் சற்றே கலைந்த உதடுகள், வெறுமையான கைகள், கீழாடை விலகி வெளிர்ந்த தொடையுடன் நீண்டிருக்கும் கால்கள்… அதற்குக் கீழே அவன் அமர்ந்திருக்கிறான், ஆமாம் கீழேதான். அவன் சொல்கிறான், “இப்படியும் சில அழகிகள் இருக்கிறார்கள். அவர்கள் சில நேரங்களில் கொஞ்சம் பகட்டாக தங்களைக் காட்டிக்கொள்கிறார்கள். இதில் தப்பில்லை…” சற்று தள்ளி முறத்தில் ஏதோ புடைத்துக்கொண்டிருக்கும் அவன் அம்மா சிரிக்கிறாள். மோனிகா பெலூச்சியைப் பார்த்து அவன் கேட்கிறான், “உங்களை முத்தமிட்டுக்கொள்ளலாமா?” அவன் …

  12. ஒருநிமிடக்கதை: நடிப்பு! ஏதோ ஒரு நேரத்தில் நாம் காட்டும் ரியாக்‌ஷன் நம் வாழ்க்கையையே முடிவு செய்துவிடுகிறது. இந்தப்பாடத்தை மிக நன்றாகப் படித்து டிஸ்டிங்ஷனுடன் பாஸ் செய்யுமளவிற்குத் தேர்ந்துவிட்டான் குமார். செய்து கொண்ட கல்யாணம் இதில் பெரும் பங்கு வகித்தது.ரொட்டியின் மிக அருமையான பதத்தில் தட்டில் போடப்படும் தோசையை இனம் கண்டுபிடிக்க முடியாமல் திணறும் தருணத்தில் அவனிடம் கேள்வி கேட்கப்படும். “என்னங்க... டிபன் பிடிச்சிருக்கா..” வேகமாகத் தலையை ஆட்டி மிக அற்புதமாக ”அமிர்தம்’’ என்று சொல்லி அது தோசையா ரொட்டியா என்ற எசகுபிசகான பதில் சொல்லி, கேள்வி கேட்ட…

  13. ஞாயிறு என்பது விடுமுறை நாளல்ல... காலை நேர பரபரப்பில் உழவர் சந்தை சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. காய்கள் வாங்கிய பையை எடுத்துக் கொண்டு சந்தையைவிட்டு வெளியில் வந்து கொண்டிருந்தான் சிவகுமார். ""சார் ...சார் ...சாரோய் ...'' யாரோ கூப்பிடும் குரல் கேட்டது. தன்னைத் தான் கூப்பிடுகிறார்களா என்றபடி மெல்ல திரும்பி குரல் வந்த திசையைப் பார்த்தவன், தன்னைத்தான் என்பதை உணர்ந்து ""என்னம்மா என்னையா கூப்பிட்டே?'' என்றவாறு அங்கே கடை போட்டிருக்கும் பெண்மணியைப் பார்த்துச் சென்றான். என்ன சார் ...போன வாட்டி வந்தப்பவே நாட்டு பப்பாளி இல்லையான்னு கேட்டே... இன்னிக்கு ஒனக்காகவே வாங்கிட்டு வந்து வச்சிருக்கேன் கண்டுக்க…

  14. கற்பு!… ( சிறுகதை ) வரதர். July 03, 2018 சிறப்புச் சிறுகதைகள் (6) – மூத்த படைப்பாளர்களின் சிறுகதைகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் – தி.ச.வரதராசன் எழுதிய ‘கற்பு’ என்ற சிறுகதை இடம்பெறுகின்றது. தொடரும் காலங்களில் ஏனைய சிறுகதைகள் வெளிவரும். மாலை நாலரை மணி. பிள்ளையார் கோயில் கணபதி ஐயர் வீட்டில் முன்விறாந்தையில் மூர்த்தி மாஸ்டரும் ஐயரும் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். எங்கெல்லாமோ சுற்றிவந்து கடைசியில் இலக்கிய உலகத்திலே புகுந்தார்கள். ”மாஸ்டர், நீங்கள் ‘கலைச்செல்வி’யைத் தொடர்ந்து படித்து வருகிறீர்களா?” என்று கேட்டார் ஐயர். ”ஓமோம், ஆரப்பத்திலிருந்தே ‘பார்த்து’ வருகிறேன். ஆனால் எல்லா விடயங்களையும் படித்திருக்கிறேனென்று சொல்ல முடியாது. ஏ…

    • 4 replies
    • 1.8k views
  15. சயனைடு - சிறுகதை ப.தெய்வீகன் - ஓவியங்கள்: ஸ்யாம் சயனைடு உட்கொள்வதன் மூலம் எவ்வாறு உயிரிழப்பது என்பது, அப்போது எங்கள் கூட்டத்தில் மிக முக்கிய விவாதமாக இருந்தது. சயனைடை அதிகம் பயன்படுத்தும் போராளிகள் எப்போதும் அதைக் குப்பியில் அடைத்து, கழுத்தில் கட்டியிருப்பர். ஆபத்து நெருங்கும் தருணத்தில் அந்தக் குப்பியின் மூடியைக் கழற்றி சயனைடு தூளை வாயில் போட்டு விழுங்கி இறந்துவிடுவர் என்பது சுதா, தான் படித்த ஏதோ ஒரு புத்தகத்தை மேற்கோள் காட்டிச் சொன்ன கதை. மணிவண்ணன், தனது பக்கத்தில் வேறொரு தகவலை வைத்திருந்தான். ``எதிரிகள் தங்களைச் சூழ்ந்துகொள்ளும் தருணங்களில், சயனைடு மூடியைக் கழற்றி வாயில் போட்டு விழுங்குதற்கெல்லாம் போராளிகளுக்கு நேரம் கிடைக்க…

  16. புது நாத்து நம்மூர்ல இப்ப மயிலுங்க நடமாட்டம் அதிகமாயிடுச்சுடி. மொதல்ல ரெண்டு மயிலு வந்திருக்குன்னு கோதை சொன்னா. நான் நம்பவேயில்ல. நாலுநாளு கழிச்சு நம்ம கொல்லை மூங்கிகுத்து பக்கம் ரெண்டு நின்னத நானே என் கண்ணால பாத்தேன். ரெண்டும் அம்புட்டு அழகு. மயிலு இங்க நின்னா தோகைங்க அங்க கெடக்கு. அம்மாம் பெரிசு. அதுங்க கழுத்தை பாத்துகிட்டே இருக்கலாம் போலிருக்கு. பளபளன்னு அப்புடி ஒரு நெறம். திருபுவனம் பட்டை வெட்டி தச்சு விட்டது மாதிரி அப்படியொரு நெகுநெகுப்பு. அடுத்த ஒருவாரத்துல ஏகப்பட்ட மயிலுங்க வந்துடுச்சு.'' லட்சுமி போனில் கதையளக்க, பவித்ரா ஜன்னல் கம்பிகளைப் பிடித்தபடி ஆர்வத்துடன் கேட்டு கொண்டிருந்தாள். …

  17. பாற்கஞ்சி! … சி.வைத்திலிங்கம். June 30, 2018 சிறப்புச் சிறுகதைகள் (5) – மூத்த படைப்பாளர்களின் சிறுகதைகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் – சி.வைத்திலிங்கம் எழுதிய ‘பாற்கஞ்சி’ என்ற சிறுகதை இடம்பெறுகின்றது. தொடரும் காலங்களில் ஏனைய சிறுகதைகள் வெளிவரும். ........ ‘ராமு, என் ராசவன்னா குடிச்சுடுவாய், எங்கே நான் கண்ணை மூடிக்கொள்கிறேன். குடிச்சிடு பார்க்கலாம். நாளைக்குப் பாற்கஞ்சி…’ ‘சும்மாப்போம்மா. நாளைக்கு நாளைக்கென்று எத்தனை நாளா ஏச்சுப்பிட்டாய். என்னதான் சொல்லேன். கூழ் குடிக்க மாட்டேம்மா.’ ‘இன்னும் எத்தனை நாள் பஞ்சமடா? வயலிலே நெல் முத்தி விளைஞ்சு வருது. ஒனக்கு வேணாம்னா பாற்கஞ்சி தாரனே’ ‘கூழைப் பார்த்தாலே வவுத்தைப் புரட்டுதம்மா…

  18. எழுந்திருங்க தாத்தா….. ப்ளீஸ்…… “நுரையீரல் புற்று….நான்காம் நிலை…..இன்னும் ஆறு மாசம்தான் சார்….” – கனத்த இதயத்தோடு மருத்துவர் தாத்தாவை நோக்கி வரும் பாசக்கயிற்றின் வேகத்தைக் கணித்துக் கூறினார். அப்பாவும் கோமதிநாயகம் சித்தப்பாவும் உள்ளுக்குள் சுக்குநூறாக நொறுங்க ஆரம்பிக்கும் சத்தத்தை உணர்ந்தவராய் , “ஒரு மருந்து இருக்கு. அத குடுத்தா அப்பாவுக்கு ஒத்துக்கிடுமான்னு பரிசோதனை செய்யணும். அதோட முடிவுகள் வர பத்து நாள் ஆகும். அது மட்டும் நல்ல விதமா வந்துச்சுன்னா அந்த மருந்த வச்சு இன்னும் ரெண்டு வருஷத்துக்காவது எமன வெரட்டீரலாம்” என்றார். அந்த ஒற்றை நம்பிக்கைக் கீற்றைப் பற்றிக் கொண்டிருந்தோம் அனைவரும். “எங்க …

  19. Started by நவீனன்,

    கொடை வீட்டில் ஒரு வாரமாகவே அம்மாவுக்கும் மகளுக்கும் இடையே இந்தப் பிரச்னை ஓடிக்கொண்டிருந்தது. இருவருக்கும் இடையில் மாட்டிக் கொண்டது ரகுதான். "" பாருங்கப்பா இந்தம்மாவை, புரியவே மாட்டேங்குது. நான் எதைச் செஞ்சாலும் குற்றம் கண்டுபிடிச்சி திட்றாங்க'' எனக் குற்றப்பத்திரிகை வாசித்தாள் திவ்யா. ""அம்மாதானே சொல்றாங்க... விடும்மா. நான் பேசிக்கிறேன்'' என்றான். ஆனால், மனைவியிடம் பேசி எளிதாகச் சம்மதிக்க வைக்க முடியாது என்பது அவனுக்குத்தான் தெரியும். ""நீங்க ஒவ்வொரு விஷயத்திலும் அவளுக்குத்தான் சப்போர்ட் பண்றீங்க, ரொம்ப மாறீட்டா. சரியில்லை. அவ செய்ய நினைக்கிறதை சாதிச்சிடுறா, அதுக்…

  20. கற்படிகள் - சிறுகதை ஜி.கார்ல் மார்க்ஸ் - ஓவியங்கள்: ஸ்யாம் ராமமூர்த்தி அந்த வீட்டை நெருங்கி அதன் வெளிப்புற இரும்புக் கதவின் மீது கைவைத்து உள்ளே பார்த்தார். தாழ்வாரமும் கார் நிறுத்துமிடமும் ஆளரவமற்று இருந்தன. அது ஒரு தனித்த, அலுவலர்கள் குடியிருப்பாக இருந்தது. கதைவைப் பற்றியபடி சிறிது நேரம் யோசித்துக்கொண்டே நின்றவர், பிறகு வலது கையை உள்ளே விட்டு கதவின் கொண்டியைச் சுழற்றினார். மெல்லிய உராய்வுடன் அது விலகியது. நடந்து உள்ளே போய், நிலைக்கதவை ஒட்டியிருந்த அழைப்புப் பொத்தானைத் தயக்கத்துடன் அழுத்தினார். அது அந்தச் சூழலுக்குச் சற்றும் பொருத்தமற்ற வகையில் ட்ரிங்... எனும் பழைய தொலைபேசி ஒலியைப் போன்ற, நீண்ட நாராசமான சப்தத்தை உள்ளே எழுப்பியத…

  21. ஒருநிமிடக் கதை: டைம்..! அங்கே இருந்த இருக்கைகள் யாவையும் யாரோ ஒருவரால் இறுக்கிப் பிடிக்கப்பட்டிருந்தது. மணிக்கணக்காக இப்படித்தான் இருக்கிறது. எழுந்து, இருக்கையில் கைக்குட்டை அல்லது கையில் இருந்த ஃபைல் என்று இடத்தை பத்திரப்படுத்தி பின் ரிசப்ஷனுக்குச் சென்று, ஏதோ விசாரித்து வந்தார்கள். என்ன கேட்கப்பட்டது என்பதை அறிய கம்பசூத்திரம் தெரிய வேண்டாம், கேட்டது காதுகளில் விழவும் வேண்டாம். வேறு வேறு தொனிகளில், வேறு வேறு மொழிகளில், வேறு வேறு டெசிபலில் இது ஒன்றுதான் கேட்கப்பட்டிருக்கும் … “ டாக்டர் என்னை எப்போ கூப்பிடுவார்?” காத்திருப்பின் …

  22. அம்மாவின் கைமணம்! கல்யாணத்துக்கு இன்னும் இருபது நாள்தானப்பா இருக்கு.. இன்னமும் ஒங்க சித்தப்பா, அத்தைகளுக்கு பத்திரிகை கொடுக்கலையே..'' ""என்னப்பா செய்றது. நேரம் சரியா இருக்கே.. என்னோட ஆபீஸ் ஆட்களுக்கு இன்று கொடுத்து முடிக்கல. தபால்ல அனுப்புவோம்னு சொன்னா கேக்க மாட்டீங்கிறிங்க.. நேர்லதான் போய் கொடுக்கணும்னு சொல்றீங்க.. அதுலயும் நானும் ஒங்க கூட வரணும்ங்கிறீங்க'' ""இல்லப்பா. என்னோட ஒடம்பொறப்புக்களுக்கும் மூணாவது மனுஷாளுக்கு அனுப்புற மாதிரி தபால்ல அனுப்புறது சரி இல்லப்பா. நாம எல்லாரும் நேர்ல போய்த் தர்றதுதான் மரியாத..'' ""அப்ப கொஞ்சம் பொறுங்க.. என்னோட வேல…

  23. அழகி - க.கலாமோகன் நான் அவளது அழகில் மயங்கிவிடவில்லை. பலர் அவளது அழகின் நிழலைத் தொடுவதற்குக் கனவு கண்ட வேளைகளில் நானோ அவளது நிர்வாணத்தின் உரிமையாளன் ஆக. அவள் ஓர் பண்டம் அல்லாத போதும் எனது மனைவியாகிய தினத்திலிருந்து என்னைக் கடவுள் எனக் கருதுவதற்கு எமது திருமணம் வலிந்தே நடத்தப்பட்டதை ஓர் காரணமாகச் சொல்லலாம். எனக்கு நல்ல படிப்பு, நல்ல வேலை எல்லாம் கிடைத்தபோதும் இந்தத் திருமணக் கேள்வியில் உண்மையிலேயே ஓர் குருடனாக இருந்துவிட்டேன். ஆம், திருமணத்துக்கு முன்னர் எனக்கு அவளது முகம் தெரியாது. அவளது மனத்தின் ஆசைகளும் தெரியாது. ஆம், என்னைப் பெற்றவர்கள் கேட்ட சீதனத் தொகை என்னைக் குருடனாக்கியது என்பதுதான் உண்மை. அவள் அழகி என்பதுகூட திருமண முதல் நாளில்தான் எனக்குத் தெரியும். …

  24. பித்தளை நாகம் - சிறுகதை இவனுக்கு, இப்போது பஞ்சாலையின் இதயமான `கார்டிங்’ பிரிவின் இயந்திரப் பராமரிப்புத் துறையில் பணி. துறையில் மொத்தம் இரண்டு குழுக்கள். இயந்திரத்தை அக்கு அக்காகக் கழட்டி மாட்டுபவரை பொருத்துநர் எனலாமா? அல்லது... கழட்டி? பெருசுகள்கூட ``ஆ...மா இவுரு பெரிய கழட்டி, போடா மூடிட்டு!’’ என்பார்கள். இந்தப் பிரிவின் `கழட்டி’ வின்சென்ட். கழட்டிக்கு ஓர் `எடுபிடி’ ஜெயக்குமார். எடுபிடிக்கு ஓர் `அல்லக்கை’ குமரவேல். ஆக, மூவர் உள்ளிட்ட `பழுதுபார்க்கும் குழு’. இரண்டாவது குழு `சுத்தக்குழு’. இந்தக் குழுவினர் ஓடிக்கொண்டிருக்கும் இயந்திரங்களை முறைவைத்து வாரம் ஒருமுறை நிறுத்தவேண்டும். பிறகு அவற்றின் உடைகளைக் களைந்து, `கம்ப்ரசர்’கொண்டு காற்…

  25. Started by நவீனன்,

    மகவு பொண்ணோட அம்மாவும் பையனோட அம்மாவும் சேர்ந்து நடத்துற திருமணம்ன்னாலும் எந்தக் குறையும் யாரும் காண முடியாத அளவுக்கு மூணுநாள் சடங்குகள் எல்லாத்தையும் சிறப்பா செய்து ஊரு, உறவெல்லாம் மெச்சும்படியா நடத்தி வெச்ச கல்யாணம் சங்கரன், பார்வதி கல்யாணம். வந்தவங்களெல்லாம் வாயார வாழ்த்தினர். தெய்வ சங்கல்பம் என்றே புகழ்ந்தனர். அந்த பரமசிவனும் பார்வதியும் கண்ணுக்கு காட்சி தருவதுபோல தம்பதிகள் இருந்ததா நெகிழ்ந்து புகழ்ந்தனர். பொருத்தமின்னா அப்படி ஒரு பொருத்தம். உறவினர்களிலும், நண்பர்களிலுமாக ஒருவர், "டேய் சங்கரா நல்லா ஷேமமா, அந்நியோன்யமா இருக்கணும்டா. சீக்கிரமா புதுவரவு இருக்கட்டும்டா'' லேசான வெட்கத்துடன் சங்கரனும…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.