கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3070 topics in this forum
-
சுவடுகள் டேய் சுந்தர் ஓடாதே.. .இங்க வா'' பக்கத்து கம்பார்ட்மெண்டில் இருந்து, குரு இருந்த கம்பார்ட்மென்டுக்கு ஓடி வந்த சிறுவன். பின்னால் ஓடி வந்தவள் லதா மாதிரி இருந்தது. ஒன்பது பத்து வகுப்புகளில் உடன் படித்தவள். மூக்குத்தி மினுங்களோடு அத்தனை மாற்றம் இல்லாமல் அதே சிரிக்கும் முகம். கைக்கெட்டும் தூரத்தில் ஓடியவனைப் பிடித்து நிறுத்தி அவளிடம் ஒப்படைத்தபடியே, ""நீங்க... நீ... லதாதானே...?'' என்றான் குரு. ""ஆமா..நீங்க...?'' ""ஓ... டென்த் பி செக்ஷன்...'' ""குரு.. குருமூர்த்தியா... சுத்தமா அடையாளம் தெரியாம இப்படி குண்டு போட்டிருக்கீங்க...'' என்றவாறு தாவத் தயாராய் இருந்த மகனை இழுத்துப…
-
- 1 reply
- 3.7k views
-
-
தலைக்கடன் - இமையம் ஓவியங்கள் : மணிவண்ணன் மகளிர் காவல் நிலையத்தின் வாசலுக்குச் சற்றுத் தள்ளி, கிழக்கிலிருந்த இலுப்பை மரத்தின் நிழலில் உட்கார்ந்திருந்த தன்னுடைய அம்மா, அண்ணன், அண்ணியை நோக்கி, இடுப்பிலிருந்த குழந்தையுடன் சாலையைக் கடந்துவந்தாள் சீனியம்மா. “புள்ளக்கி என்னா வாங்கிக் கொடுத்த?” என்று மேகவர்ணம் கேட்டாள். அதற்குச் சீனியம்மா பட்டும்படாமலும் “டீயும் பன்னும்தான்” என்று சொன்னாள். காவல் நிலையத்தின் பக்கம் பார்த்தாள். பிறகு, தலையைக் கவிழ்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்த தன்னுடைய அண்ணன் சுந்தரத்தைப் பார்த்ததும் சீனியம்மாவுக்கு அழுகை வந்துவிட்டது. அழுகையை மறைப்பதற்காக அங்குமிங்கும் பார்த்தாள். அப்போதும் அவளுக்கு அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. …
-
- 1 reply
- 2k views
-
-
ஒரு நிமிடக் கதை: பேப்பர் வழக்கு கணேசன் புது வீடு மாறி வந்து ஒரு மாதம்தான் ஆகிறது. அக்கம் பக்கம் யாரும் இன்னும் நண்பர்கள் ஆகவில்லை. புன்சிரிப்புக்களோடு மட்டும் அறிமுகங்கள் முடிந்துவிட்டன. கனேசனுக்கு எப்போதும் நியூஸ்பேப்பர் ராசி மிக அதிகமாகவே உண்டு. அனைவருக்கும் காலை பேப்பர் வந்துவிடும். இவருக்கு மட்டும் லேட்டாக வரும். சரி, பக்கத்து வீட்டில் போடும் ஆளுக்கு மாற்றிப்பார்கலாம் என்றால் அவர்கள் வீட்டிலிருந்தே விசிறி அடித்த பேப்பர் சுருள் வாசல் தண்ணீரில் நனைந்து, எடுக்கும்போதே எண்ணெய்யில் விழுந்த பூரி போல் சொட்டச்சொட்ட கைகளுக்கு வந்து ஒரே விரிப்பில் பிசுபிசுத்து துண்டுகளாகப் போய்விடும். சரி இ…
-
- 1 reply
- 854 views
-
-
உதிரக் கள்: இலங்கைப்பயண அனுபவங்கள் by ம.நவீன் விமான நிலையத்தில் ஒவ்வோர் ஆண்டும் தொடங்குவதற்கு முன்னரே அந்த ஆண்டுக்கான வல்லினத்தின் செயல்திட்டங்களைக் குழுவாக அமர்ந்து விவாதிப்பது வழக்கம். பெரும்பாலும் திட்டமிடப்படும் 95 சதவிகிதம் நடவடிக்கைகள் செயலாக்கம் பெற்றுவிடுவதுண்டு. திட்டங்கள் வகுப்பதில் இரண்டு விதிமுறைகளைக் கடைப்பிடிக்கிறோம். முதலாவது, அது தனி ஒருவருக்கு மட்டும் பலனளிக்கும் விதமாக அமைந்துவிடக்கூடாது. அடுத்தது, அத்திட்டம் ஏதோ ஒருவகையில் மலேசியத் தமிழ் இலக்கியத்தை ஒருபடி முன்னகர்த்திச் செல்ல வேண்டும். இலங்கைப் பயணம் அப்படி மனதில் தோன்றியதுதான். ‘வல்லினம் 100’ களஞ்சியத்தை இலங்கையில் அறிமுகம் செய்வதன் வழி மலேசிய – சிங்கப்பூர் நவீன தமிழ் இலக்கிய…
-
- 4 replies
- 2.4k views
-
-
வெந்து தணிந்தது காலம்...- சிறுகதை வெந்துதணிந்ததுகாலம்...- மு.சிவலிங்கம் அந்த மாமரம்¸ ஆல மரத்தைப் போல அடர்ந்து¸ படர்ந்து விரிந்திருந்தது. கடந்த மூன்று மாதங்களாக மழை பெய்து ஓய்ந்திருக்கும் காலம். இப்போது வெய்யிற் காலமாகியும் புழுதி பறக்காமல் ஈர நிலம் எங்கும் வியாபித்திருந்தது. மரத்தில் புதிய தளிர்கள் துளிர்த்து¸ பச்சைப் பசேலெனச் செழித்திருந்தன. காற்றில் சலசலக்கும் இலைகளும்¸ கிளைகளும் குளிர்ந்தக் காற்றை அள்ளி வீசிக் கொண்டிருந்தன. அந்த மரமே அங்கு தவித்திருக்கும் அகதிக் குடும்பங்களுக்கு கூரையாக¸ வீடாக¸ ஊராக¸ பாதுகாப்பாகக் குஞ்சுகளை இறக்கைக்குள் அணைத்து வைத்திருக்கும் பேடாக ஆதரவளித்துக் கொண்டிருக்கிறது. நெருப்பாய் எரிக்கும் வெய்யிற் காலங்களில் சுகமான நிழலைக் கொடுக்கின்றது.…
-
- 0 replies
- 1.2k views
-
-
மனிதனும்... மனிதமும்! பச்சையப்பனிடம் பேசிவிட்டு திரும்பிய கணத்திலிருந்து மனதில் பாரம், நடையில் துவளல். எனக்கு வயது 62. அரசாங்க உத்தியோகத்திலிருந்து ஓய்வு. எனது ஊர் கடற்கரையை ஒட்டிய இடம். எனது வீட்டிற்கும் கடலுக்கும் துல்லியமாக 3 கி.மீ. எனக்கு எந்தவித நோய், தொந்தி, தொப்பை எதுவும் கிடையாது. பெற்ற பெண் பிள்ளைகளுக்குத் திருமணம் முடித்து விட்டு ஓய்வூதியத்தில் நிம்மதியான வாழ்க்கை. நான் தினம் காலை 4.45 க்கு எழுந்து முகச்சவரம் செய்து, பல் துலக்கி, கழிப்பறை இயற்கை உபாதை வேலையை முடித்து விட்டு சரியாய் 5.20 மணிக்கு பொல பொலவென்று விடியும் பொழுதில் என் தெரு திருப்பத்தில் இருக்கும் சாலையில் கிழக்குப் பக்கம் த…
-
- 0 replies
- 574 views
-
-
முரண்- கோமகன் 2010 “ஹொப்பித்தால் ட்ருசோ”வின் பிரதான வாயிலில் இருந்து உள்ளே செல்லும் நீண்ட சாலையில் காலைப்பனி மூடியிருந்தது. அதன் இருமருங்கிலும் நின்றிருந்த பைன் மரங்கள் இலைகளைத்துறந்து துக்கம் கொண்டாடிக்கொண்டு இருந்தன. அதன் கிளைகளில் இருந்த மொக்குகளில் பனி உறைந்து காலை வெளிச்சத்தில் பளபளத்தது. இருபக்கமும் பனிச்சொரியல் மூடியிருக்க நடுவே வீதி சுத்தமாக்கப்பட்டு கருஞ்சாரையாய் நீண்டு சென்றது. ஆங்காங்கே பனியில் சறுக்காமல் இருக்க உப்புத்தூவப்பட்டிருந்தது. “இந்த மரங்களே இப்படித்தான் வசந்தகாலத்தில் இலைகளால் நிறைந்து அத்தனை பறவைகளையும் தமக்குள் வைத்துக்கொண்டு ஒரேயடியாக சந்தோஷத்தைக் கொண…
-
- 14 replies
- 2.7k views
-
-
மனைவியின் பதினாறாம் நாள் காரியங்கள் நடந்து முடிந்து, வந்த உறவுக்காரர்கள் கிளம்பிச் செல்ல, மனைவியின் படத்தை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார் கதிரேசன். அப்பாவைப் பார்க்க, யமுனாவுக்கு பாவமாக இருந்தது. அம்மா இல்லாமல், இனி அப்பா எப்படி தனியாக வாழப்போகிறார். தோட்டத்தில் அண்ணி நிற்பது தெரிய, அவளை நோக்கிச் சென்றாள். ""அண்ணி, உங்ககிட்டே மனசுவிட்டு பேசணும்ன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். உறவுக்காரங்க புறப்பட்டுப் போனதால இப்பத்தான் தனிமை கிடைச்சிருக்கு.'' என்ன விஷயம் என்பது போல, அவளைப் பார்த்தாள் வித்யா. ""அம்மாவும், அப்பாவுமாக இருந்தவரைக்கும், அடுத்தவங்களுக்கு தொந்தரவு தராமல் இரண்டு பேருமாக இருந்துட்டாங்க. இனி, அப்பாவின் நிலைமையை நினைச்சா கவலையா இருக்கு அண்ணி. இனி, அவ…
-
- 5 replies
- 8.3k views
- 1 follower
-
-
சுடரும் புன்னகை! பேப்பர்காரரை இன்னும் காணோமே? மணி ஏழரை ஆகப்போகிறது. மற்ற நாள்ன்னா வீட்டை பூட்டிவிட்டு போயிறலாம். அவரும் வரண்டாவில் பேப்பரை போட்டு விட்டு போயிருவாரு. அவரு கைமாற்றாக இரண்டாயிரம் ரூபாய் கேட்டாரு. "வீட்டு வாடகைக்கு கொடுக்கணும். ஒரு வாரத்தில் மகனுக பணம் அனுப்பினதும் கொண்டுவந்து தர்றேன் சாரு'ன்னாரு என்று முணுமுணுத்தவாறே சுவர்க்கடிகாரத்தையும், வீட்டு வாசலுக்கும் இவரது கண்கள் பந்தாடிக் கொண்டிருந்தன. மனைவி குளித்து தயாராவதற்குள் பேப்பர்காரர் வீட்டிலேயே கொடுத்துட்டு வந்துறலாமே. அவருக்கும் வீட்டு வாடகைப் பிரச்னை தீரும். நமக்கும் மனசு அலை பாயாம ஓர்மையா வெளியூர் கிளம்பத் தோதாயிருக்கும் என்று பணத்தை …
-
- 0 replies
- 612 views
-
-
பாம்பு - சிறுகதை சிறுகதை: அபிமானி, ஓவியங்கள்: ஸ்யாம் வாசலை விட்டு வெளியே வந்துகொண்டிருந்த திவாகரனின் கண்களில் அது படக்கெனத் தெரிந்து, பளிச்சென ஒளிர்ந்து, பட்டென மறைந்தது. மின்னல் தெறிப்பின் விநாடி ஒளிர்வு. இமைமூடும் வேகத்தில் அவசர மறைவு. மரப்பலகை அடுக்கின் கீழ் அது விறுவிறுவென ஊர்ந்து போனதை அவரது மூளை தன் ஞாபக ஏட்டில் சட்டெனப் பதித்துக்கொண்டதால், உடனே அதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியாமல் திணறினார். `அது பாம்புதானே? பாம்புபோலத்தானே இருந்தது... பாம்பாகத்தானே இருக்க வேண்டும்!’ நன்றாகத் தீர்மானித்துக் கொண்ட பிறகே, கறாரான முடிவுக்கு வந்தார். `பாம்புதான். நிச்சயமாக... அது பாம்புதான்.’ அதிர்ந்துபோனார் திவாகரன். விதிர்விதிர்த்துப் போனது தேகம். உ…
-
- 0 replies
- 2.3k views
-
-
மஞ்சள் நிற நோட்டீஸு! மஞ்சள் நிற நோட்டீஸு! த டுப்புச் சுவர்கள், விபத்துக்கள் நடக்காமலிருக்கக் கட்டப் படுபவை. ஆனால், தடுப்புச் சுவரில் மோதி ஒருவன் காயம் பட்டுக்கொள்வது என விதியிருந்தால், யார் என்ன செய்ய முடியும்? கார்த்திகேயனுக்கு அது நிகழ்ந்தது. இருபத்து மூன்று வயது நிரம்பியிராத இளைஞன் அவன். பன்னிரண்டாம் வகுப்பு முடித்து, எவ்வளவோ பல காலங்கள் முடிந்துவிட்டதான சோர்வு அவனுக்குத் தட்டியிருந்தது. வெட்டியாக ஊரைச் சுற்றுகிறான் என்ற ‘நற்பெயர்’ வேறு! அப்…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஒரு நிமிடக் கதை: காதலின் பொன் வீதியில் சேகரின் பிள்ளைக்குக் கல்யாணம் நிச்சயமாகி இருந்த செய்தியைக்கேள்விப்பட்டு , அவனைப்பார்க்கச்சென்றேன். " வா சரவணா... இன்னும் நிச்சயதார்த்த தேதி முடிவுசெய்யவில்லை. அப்புறம் சொல்ல நினைத்தேன்" அவன் கைகளைப்பிடித்து குலுக்கினேன். " நமக்குள் என்ன பார்மாலிடீஸ், ஆமாம், உன் பையனும் உன்னைப்போல் ரொமாண்டிக்கா, அதான் லவ் மேரேஜ்ஜா?" அவன் மிகவும் அவசரமாக " சே..சே..இல்லடா.... இது நாங்க பார்த்து செஞ்சு வைக்கும் கல்யாணம் தான்.என்ன , பையனும் பொண்ணும் ஒரே காலேஜ், ஆனால் டிபார்ட்மெண்ட் வேற பாரு , சந்திச்சிருப்பாங்க ஆன…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஒரு நிமிடக் கதை: கடி "என்னது...உடம்பு அரிக்கிறதா....எரிச்சலா...அரிப்பா?" கோமதியிடம் நூறாவது முறையாகக் கேள்வி கேட்கப்பட்டது. இந்தக் கேள்விகளுக்கான ஆரம்பம் நேற்று அவள் சொன்ன சில வார்த்தைகள்...அவை " என்னன்னு தெரியலை... ஒரு வாரமாகவே இரவு முழுவதும் உடல் அரிக்கிறது. தூங்கப் போகும்போது இருப்பதில்லை...." சொல்லிமுடிப்பதற்குள் தலைக்குத்தலை முடிவுகள் சொல்லப்பட்டது.. " கோமதி... வீட்டிலே சுகர் ஹிஸ்டரி இருக்கு...எனக்கென்னவோ இது அதன் அறிகுறி போல்தான் தெரிகிறது" இது கணவர். " அம்மா, எதைச்சாப்பிட்ட....எனக்கென்னவோ அலர்ஜிதான்னு தோணறது..." இது மகன். …
-
- 1 reply
- 1.3k views
-
-
லட்டு - ஜி.கார்ல் மார்க்ஸ் ஓவியங்கள் : செந்தில் இந்தக் கதையைப் படிக்கத் தொடங்குவதற்குமுன்பு, நீங்கள் இந்த ‘லட்டு’ எனும் வார்த்தையை எவ்வாறு உச்சரித்தீர்கள் என்பதை நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். ‘ட்’ அப்புறம் ‘டு’ என்கிற வார்த்தைகளுக்கு மிகவும் அழுத்தம் கொடுத்து அதை உதிரச்செய்து விடாமல் ‘Latdu’ என மென்மையாக, அதேசமயம் Laddu என்று நீர்த்துப் போனதாகவும் அல்லாமல், வாஞ்சையாக அதை உச்சரிக்க முடிந்தால், இந்தக் கதை உங்களுக்குப் பிடித்துவிடும். “மென்மை, வாஞ்சை போன்ற வார்த்தைகள் ரொம்பவும் க்ளிஷேவானவை ஆயிற்றே... எதற்காக ஒரு கதையை இப்படித் தொடங்குகிறான்...” என்று உள்ளுக்குள் எழுந்துவரும் எரிச்சலை மறைத்துக்கொண்டு, “சரி சரி... மேலே சொல்...” என்று வாசிப்பதைத் தொடர்…
-
- 0 replies
- 1.9k views
-
-
கண்ணாடிக் குருவி நாலு சுசியாப்பம், ஒரு சுருள்போளி வாங்கி வந்திருந்தான் நாகராசு. அதை தேவியிடம் கொடுத்து அக்காளிடம் கொடுக்கச் சொல்லியிருந்தான். பேருந்தை விட்டு இறங்கி வீட்டுக்கு நடந்து வந்ததில் கலைந்திருந்த தலைமுடி, அரும்பிய வியர்வை, இன்னபிற ஒப்பனைகளை தன் இருகைகளாலும் சரிசெய்து கொண்ட தேவி, நாகராசுவிடமிருந்து வாங்கிய பலகாரப் பொட்டலத்தை, ஸ்டைலாக விரல் நுனியில் கோர்த்துக் கொண்டாள் ""மதனீ...'' வீட்டுக்குள் காலடி எடுத்துவைக்கும் முன்பாக குயில்போல ஒரு குரல் விடுத்தாள்,தேவி. பின்னால் நாகராசு நின்றான். சட்டென உள்ளே நுழைய முடியா வண்ணம் நிலைப்படிவரைக்கும் வீட்டுக்குள் ஒருகும்பல் குடியிருந்தது. உள்ளே கலைஞர…
-
- 0 replies
- 850 views
-
-
நான் அகதி - பயணம் ஆரம்பம் - 1 தாலா பானுவால் ஒரு வார்த்தைகூடப் பேசமுடியவில்லை என்பதால் அவர் கணவர் முகமது மூலமாகவே அவர்கள் கதை வெளியுலகுக்கு வந்திருக்கிறது. அவர்கள் பர்மாவைச் சேர்ந்தவர்கள். பர்மா என்று சொல்லும்போதே அவர் கண்கள் மினுமினுப்போடு விரிகின்றன. பர்மா என்பது அவரைப் பொறுத்தவரை ஒரு நாடல்ல, குட்டி சொர்க்கம். கனவில் மட்டுமே காணக்கூடிய மயக்கமூட்டும் காட்சிகளை ஒருவர் பர்மாவில் அசலாகக் காணமுடியும். விக்டோரியன் கட்டடங்களும் அடுக்குமாடிக் குடியிருப்புகளும் நவீன வர்த்தக வளாகங்களும் நிரம்பியிருந்தாலும் பர்மாவை நவீனத்துவம் இன்னமும் முழுக்க முழுங்கிவிடவில்லை. அழகிய ஓடைகள், பச்சைப் பசேலென்று விரிந்திருக்கும் கானகப் பகுதிகள், ஒருவேளை பொம…
-
- 17 replies
- 5k views
-
-
பிரிகூட்டில் துயிலும் விதைகள் - சிறுகதை நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... பாப்லோ அறிவுக்குயில், ஓவியங்கள்: ம.செ., சிறு வட்டமாகச் சுழன்று, மெள்ள விரிவடைந்து மேலெழும்பிய 'மூக்கரா காற்றின்’ ஒலியால் மிரண்ட ஆடுகள் எல்லாம், சருகுகளையும் குப்பைக் கூளங்களையும் உள்ளிழுத்தபடியே மிக வேகமாகச் சுழல்வதைக் கண்டு, தலையைத் தூக்கிப் பார்த்த மறுகணமே தீய்ந்துகிடந்த புல்பூண்டுகளைக் கரண்டத் தொடங்கின. தரிசு நிலம் எங்கும் வெயில் கொளுத்தியது. கோவணத்துணியாக விழுந்திருந்த நிழலில் ஒதுங்கிய பெருமாள், ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார். செம்மறிகள் என்றால் மேய்ப்பதில், வளைப்பதில் இவ்வளவு சிரமம் இருக்காது. இவை யாவும் வெள்ளாடுகள்... சிறிது நேரம் கண்ணயர்ந்தாலோ, தலை மற…
-
- 0 replies
- 1.9k views
-
-
பிடிகயிறு - சிறுகதை நர்சிம், ஓவியங்கள்: ஸ்யாம் பிடிமாடாப் போச்சேடா தவுடா!'' - சொல்லிக்கொண்டே ஓடியதில் மூச்சு முட்டியது பாண்டிக்கு. கையில் இருக்கும் பிடிகயிற்றைச் சுற்றிக்கொண்டே சற்று நின்று மூச்சுவாங்கிய பாண்டியை, பரிதாபமாகப் பார்த்தான் தவுடன். ''விடப்பா, நிண்டு விளையாடுச்சு. நல்லவேள, குத்தித் தூக்கத் தெரிஞ்சிச்சு அந்தப் பாளமேட்டுக்காரனை. எல்லக் கவுறு வந்ததும் தாவிப் பம்மிப் படுத்துட்டான் தாயளி. இல்லேண்டா அவென் கொடலு கொம்புல தொங்கிருக்கும்!'' அதை ஆமோதிப்பது போல பார்த்துக்கொண்டிருந்தான் பாண்டி. கிட்டத்தட்ட ஆறேழு கிலோமீட்டர் ஓடிய களைப்பு, அவர்களின் முகங்களிலும் இடுப்புகளிலும் தெரிந்தன. கையை மாற்றி மாற்றி இடுப்பைப் பிடித்தவாறே அங்கிருந்த…
-
- 2 replies
- 2.6k views
-
-
இலையுதிர் காலம் - சிறுகதை சிறுகதை: ஹேமி கிருஷ், ஓவியங்கள்: ஸ்யாம் இலையுதிர்காலம் ஆரம்பமாயிருந்தது, சாலையெங்கும் சருகுகள் உதிர்ந்திருந்தன. அந்த மளிகைக் கடைவாசல் முழுவதும் பாதாம் இலைகள் உதிர்ந்திருந்தன. மளிகைக் கடையின் ஷட்டரைத் திறந்துகொண்டு வெளிவந்தான் கதிர். குளிர் பட்டவுடன் மயிர்க்கால்கள் சிலிர்த்தன. கைகளைக் குறுக்கே கட்டிக்கொண்டான். என்றைக்காவது லோடு வரும் நாள்கள் இப்படிக் கடையிலேயே தங்குவதுண்டு. வாசல் முன் விரவியிருந்த சருகுகளைப் பெருக்க முனைந்தான். இரவின் பனியினால் சருகுகள் நமத்துப்போயிருந்தன. இதுவே மாலையாக இருந்தால் பகல் வெயிலால் காய்ந்த சருகுகள் மொறுமொறுவென இருக்கும். அதன் மீது அங்குமிங்கும் சரக் சரக்கென்று நடப்பான். இலைகள்…
-
- 0 replies
- 2.7k views
-
-
துர்சலை - கணேசகுமாரன் ஓவியங்கள் : செந்தில் இரவுக் காற்றுக்கென்று தனி இசை உண்டு. அது தடாக நீரின் சிகை கலைத்து விளையாடிக்கொண்டிருந்தது, விளையாட்டுப் பிள்ளையின் குதூகலத்துடன். காற்றின் மெல்லிய வருடலில் நீரில் மிதந்துகொண்டிருந்த முழுமதி நெளிந்து நெளிந்து தடாகப் படியைத்தொட்டு மீண்டு கொண்டிருந்தது. ‘‘உங்கள் கண்களில் தெரியும் சோர்வினைப் பார்த்தால், இரவுறக்கம் இன்று தள்ளிப்போகும்போல் தெரிகிறது துர்சலை’’ என்றாள் மாதங்கி. துர்சலை வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்திருந்தாள். ஒரு முழுநீளத் துகில்; அவ்வளவுதான். அதைத்தான் உடல் முழுவதும் சுற்றியிருந்தாள். தான் அமர்ந்திருந்த இடம்வரை தன்னிருப்பைப் படரவிட்டிருந்த நிலவொளியைத் தன் வெண்சங்கு நிறப் பாதத்தால் நிரடியபடி சொன…
-
- 0 replies
- 988 views
-
-
மனம் தேவகாந்தன் ‘நிக்கலஸ் ஏன் அவ்வாறு செய்தான்?’ விடை தேடிக்கொண்டு ஏற்கனவே கிடந்த கேள்விகளோடு, அப்போது இன்னொரு கேள்வியும் இராஜலிங்கத்தின் மனத்துள் சேர்ந்துகொண்டது. ‘அதெல்லாம் கள்ளக் கூட்டம். கறுவல்களோடெல்லாம் சேர்ந்து நீ இனிமேல் விளையாடப் போகவேண்டாம்’ என மகன் அனூஷனுக்கு கண்டிப்புச் சொன்ன ஆனந்தி, கூடத்துள்ளிருந்து எல்லாம் கண்டுகொண்டிருந்த தந்தையிடம் திரும்பி, ‘பாத்தியளேயப்பா, அதுகள் செய்த வேலையை? நாளைக்கு ஸ்கூலுக்குப் போய் இதைப்பற்றி கொம்பிளெய்ன் பண்ணியிட்டு வந்திடுங்கோ. எல்லாத்தையும் இப்பிடியே சும்மா விட்டிடேலாது’ என்றுவிட்டு மேலே போய்விட்டாள். …
-
- 2 replies
- 810 views
-
-
அருட்பெருஞ் சோதி அந்த மனித வாழிடம் அமைக்கப்பட்ட கோளிற்கு ஜோதி என்று பெயர் வைத்து நூறு வருடங்கள் ஆகின்றன. இரண்டு சூரியன்களில் ஒன்று மறைந்து மற்றொன்று வடமேற்கே உதித்துக் கொண்டிருக்கிறது. மொத்தம் ஆறு நிலவுகள். எதுவுமே முழு நிலாவாகத் தெரியாது. நிரந்தர பிறைகள். இரு சூரியன்களும் மாறி மாறி களைப்பின்றி வழங்கும் ஒளி வெள்ளம். இருள் வராதது என்பதால் ஜோதி என்று ஒரு காலத்தில் மனிதன் அறிந்த முதல் புவியை ஒத்த இந்த கோளுக்கு பெயர் வைத்தார்கள். பூமிகா நடுங்கிய இதயத்தோடு ஜன்னல் வழியே வெளியே பார்த்தாள். அவளது அண்ணன் துபிவிய போர் வீரர்களின் பிடியில் சிக்கி திமிறிக் கொண்டிருந்தான். இதை அவளால் ஏற்க முடியாது. தடுத்து நிறுத்தியே ஆகவேண்டும். ஆதவன் வலியைப் பொறுத்துக் கொண்டு பல்…
-
- 0 replies
- 676 views
-
-
தளை "காதே காந்தா- தனகத சிந்தா வாதுல கிம் தவ நாஸ்தி நியந்தா! த்ரிஜகதி ஸஜ்ஜன-ஸங்கதி-ரேகா பவதி பவார்ணவ- தரணே நெüகா' அந்த விடியற்காலை ஐந்து மணிக்கு பக்கத்தில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோயிலிலிருந்து ஒலிபெருக்கியில் ஆதிசங்கரரின் பஜகோவிந்த ஸ்லோகம் ராகத்துடன் ஒலித்து, கோமளவல்லியை தூக்கத்தில் இருந்து எழுப்பியது. ஒலி சன்னமாக இருந்தாலும் கோமளவல்லியின் செவிகள் வழியாக பயணித்து, நாளங்களை உசுப்பி, அவளை முழு விழிப்பு நிலைக்கு கொண்டு வந்தது. ஆதிசங்கரரின் பஜகோவிந்தத்தில் கோமளவல்லியின் கணவர் வேதமூர்த்திக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. அவரும் தூக்கத்தினின்று விழித்து கேட்கிறாரா என்பதை அ…
-
- 7 replies
- 2.1k views
-
-
ஒரு நிமிட கதை: கண்டிஷன் “மணி! நம்ம வீட்டுல குடியிருக்கிறவங்க அடுத்தவாரம் வீட்டைக் காலி பண்ணிடுவாங்க. வேற ஆள் யாராவது இருந்தா கூட்டிட்டு வாப்பா!” வீட்டு புரோக்கர் மணியின் கடைக்குள் ஏறி வந்த பழனியப்பன் சொன்னார். கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக பழனியப்பனின் வீட்டு மாடி போர்ஷனுக்கு வாடகைக்கு ஆள் கூட்டி வருவது மணிதான். பழனியப்பனின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி இதுவரை ஐந்து குடும் பங்களுக்கு மேல் வாடகைக்கு வந்து போய் விட்டார்கள். “அதுக்கென்னங்கய்யா… பார்த்துட்டாப் போச்சு. இந்தப் பத்து வருஷத்துல எத்தனை பேரை கூட்டிட்டு வந்திருக் கிறேன். யாராவது எந்தப் பிரச்சனையாவது பண்ணினாங் களா? சர…
-
- 0 replies
- 923 views
-
-
ஒரு நிமிடக் கதை: யானை மன்னரின் கை நாடியைப் பிடித்துப் பார்த்த அரண்மனை வைத்தியர் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியை அமைச்சர் நல்லசிவம் உணர்ந்தார். “வைத்தியரே... மன்னர்..” உதட்டைப் பிதுக்கினார் வைத்தியர்.. தலையை இருபக்கமும் அசைத்தார். “துடிப்பு குறைகிறது.. தாங்காது.” திரைக்கு அப்பால் அறையின் வெளியே தளபதி, ராஜகுரு, பிரதானி கள், பிரபுக்கள், நிலக்கிழார்கள், ஜமீன்தார்கள். “சரி விஷயம் நம்முடன் இருக்கட்டும்.. வெளியே கசிய வேண்டாம்.” திரைக்கு வெளியே வந்த அமைச்சர்.. “மன்னர் நலமாக இருக்கிறார்.. கவலை வேண்டாம்..ஆனால் ஒரு வாரத்துக்குள் …
-
- 0 replies
- 1.1k views
-