Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. அனாதை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேரைக் கொன்று, 200 பவுன் நகைகளைக் கொள்ளையடித்த மருதப்பன் மீதான வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியிருந்தது. வழக்கின் நிலவரத்தைத் தெரிந்து கொள்ள பத்திரிகையாளர்களும் பொதுமக்களும் நீதிமன்றத்தில் குவிந்திருந்தனர். சரியாக பத்து மணிக்கு உள்ளே நுழைந்த நீதிபதி, இருதரப்பு நியாயங்களையும் கேட்டபிறகு பேச ஆரம்பித்தார். ‘‘மருதப்பனின் கைரேகையும், அவருடைய இருப்பிடத்திலிருந்து எடுக்கப்பட்ட நகைகளும், மருதப்பன்தான் குற்றவாளி என்பதை உறுதிப்படுத்துகிறது. மருதப்பன் ஆறுமாத கைக்குழந்தையின் உயிரைக்கூட விட்டு வைக்கவில்லை. அந்த ஆறு மாத கைக்குழந்தை இவர் கொள்ளையடிப்பதை தடுக்கப்போவதில்லை. இது மிகவும் கொடூரமான செயல். மருதப்பனிடம்…

  2. கடமை ‘‘டேய்... மாதவா! முதல்ல இந்தக் காபியைக் குடிடா. அப்பா வந்தபிறகு ஸ்கூல் ஃபீஸ் விஷயமா பேசிக்கலாம்...’’ வேண்டா வெறுப்பாக காபியை வாங்கிக் குடித்தான் மாதவன். அப்போது வெளி வாசலில் நுழைந்துகொண்டிருந்தார் அப்பா. ‘‘அப்பா வந்தாச்சு! ஸ்கூல் ஃபீஸ் பத்தி கேட்கணும்னு சொன்னியே... இனி உன் பாடு, உன் அப்பா பாடு...’’ என சொல்லிவிட்டு சமையலறைக்குச் சென்றாள் கலா. தயங்கியபடி அப்பாவிடம் பேச்சுக் கொடுத்தான் மாதவன். ‘‘அப்பா! ஃபர்ஸ்ட் டேர்ம் ஸ்கூல் ஃபீஸ் இருபதாயிரம் ரூபா கட்டணும். ஒரு செக் தந்தா போதும்...’’ மாதவனை முறைத்தார் அப்பா. ‘‘என்னாலே ஸ்கூல் ஃபீஸ் எல்லாம் தரமுடியாது. அதெல்லாம் நீயே பாத்துக்க வேண்டியதுதான்...’’ கறாராகச் சொன்னார் அப்பா. ‘‘இப்படிச் சொன்னா எப்படிப்பா? உங்களுக…

  3. 10 செகண்ட் கதைகள் பயம் திருடிய சிசிடிவி கேமராவை, தன் சொந்த வீட்டில் மாட்டினான் திருடன். - வேம்பார் மு.க.இப்ராஹிம் விளக்கம் 'புரளின்னா என்ன?' என்று கேட்ட பேரனுக்கு, 'வாட்ஸ்அப் மெசேஜ்' என்றார் தாத்தா. - வேம்பார் மு.க.இப்ராஹிம் திட்டம் கடும் பண நெருக்கடிக்கு ஆளான ஆளும் கட்சி ஆதரவு எம்.எல்.ஏ., `அரசுக்கு எதிராக அறிக்கை விடலாமா?' என்று யோசித்துக்கொண்டு இருந்தார். - ரா.ராஜேஷ் ஷவர் `எவ்வளவு பெரிய ஷவர்' என்றது, மழையில் நனைந்த குழந்தை. - சங்கரி வெங்கட் வேலை `இங்கே, டாஸ்மாக்கை எல்லாம் அடிச்சு மூடுறாங்க, அங்கேயே வேலை தேடிக்கோ' என்று நண்பனுக்குத் தகவல் கொடுத்தான் பீகாரி. - கி.ரவிக்குமார் …

  4. பரமேஸ்வரி அத்தையின் மகள் - சிறுகதை சிறுகதை: சுகா, ஓவியங்கள்: செந்தில் பரமேஸ்வரி அத்தை சரியாகத்தான் சொல்லியிருக்கிறாள். அசோக் நகரில் உள்ள புகழ்பெற்ற பள்ளியை அடுத்த வலது, பிறகு இடது வளைவில் உள்ள மெடிக்கல் ஸ்டோர், பல் மருத்துவமனையைத் தாண்டி நான்காவது பில்டிங். அத்தை சொன்ன மாதிரியே செங்காமட்டை கலரில் பெயின்ட் அடித்திருந்த அப்பார்ட்மென்ட்டை லட்சுமணனால் எளிதாகக் கண்டுபிடிக்க முடிந்தது. வாசலில், அடையாளத்துக்குச் சொல்லப்பட்டிருந்த மாநகராட்சியின் பச்சை வண்ணக் குப்பைத் தொட்டியும் இருந்தது. ‘`இந்த பில்டிங்தான்'’ என்றபடி ஆட்டோவை நிறுத்தி இறங்கினான். காம்பவுண்டையொட்டி அமைந்திருந்த செக்யூரிட்டி அறையில் உள்ள பதிவேட்டில் கையெழுத்திட வேண்டியிருந்தது. `‘யார் வீ…

    • 1 reply
    • 20.5k views
  5. அமைதிக்குப் பெயர்தான் சாந்தி.... 'சாந்தி எழும்பு பிள்ளை' றோட்டில ஒரே சனநடமாட்டமாக் கிடக்கு. என்ன பிரச்சினையோ தெரியாது.' என்றபடி படலையைத் திறந்து தெருவை நோட்டமிட்டாள் மலர். 'என்னக்கா என்ன பிரச்சினை?' என்று பக்கத்து வீட்டு மனோகரியை கேட்டாள். 'என்னவோ தெரியாது. எல்லோரும் வெளிக்கிட்டுப் போகினம். ஆமி இறங்கீற்றுதெண்டு கதைக்கினம். உண்மையோ தெரியாது' என்றபடி மனோகரியும் தன் வீட்டு படலையை பூட்டினாள். வீதியில் செல்பவர்கள் பதட்டத்துடனும் அவசரத்துடனும் ஓடிச்செல்வதனைக் காணக்கூடியதாய் இருந்தது. மலரின் மனதுக்குள் நிறையக் குழப்பங்கள். கணவன் மாணிக்கத்தை நினைக்க என்ன செய்வதென்று தெரியால் திகைத்தாள். இப்படி ஒவ்வொரு முறையும் ஒடிப்போய்விட்டு வீட்டுக்குத் திரும்பி வந்த சந்தர்ப்பங…

    • 5 replies
    • 1.6k views
  6. ஒரு நிமிடக் கதை: பயணம் “கோகுலுக்கும் ஹரிணிக்கும் போரடிக்குது. நாளைக்கு மகா பலிபுரம் போயிட்டு வரலாம்பா. போக வர மூணு மணி நேரம்தான். நம்ம கார்லயே போயிட்டு வந்துடலாம். நீங்களும் வாங்க!” - அப்பா ராகவனிடம் சொன்னான் பிரபாகர். “போகலாம். ஆனா பஸ்ல போனா நானும் வர்றேன். கார்ல போறதா இருந்தா நான் வரலைப்பா” - அப்பா சொன்னதைக் கேட்டு வியப்பாக இருந்தது பிரபாகருக்கு. “பஸ்லயா? இங்கேயிருந்து பஸ் ஸ்டாண்டுக்குப் போயி, அங்கேயிருந்து மகாபலிபுரம் பஸ் பிடிக்கணும். அங்கேயும் ஒவ்வொரு இடத்தையும் பார்க்க ஆட்டோவோ டாக்ஸியோ பிடிக்கணும். கார்ல ஈஸியா போயிட்டு வர்றதை விட்டுட்டு என்னப்பா சொல…

  7. திருடன் காலையில் வழக்கம்போல வாக்கிங் புறப்பட்டேன். எப்போதுமே டிராக் சூட், ஷூ எல்லாம் அணிந்த பிறகு பர்ஸில் இருந்து பத்து ரூபாய் எடுத்து பையில் வைத்துக் கொள்வேன். ஒருவேளை வழியில் கிறுகிறுப்பு வந்துவிட்டால் ஒரு சோடா வாங்கவாவது பணம் வேண்டுமே? இதுவரை அப்படியொரு சூழல் வந்ததில்லை என்பதால் பத்து ரூபாய்க்கு சோடா கிடைக்குமா என்பது பற்றிக்கூட யோசித்ததில்லை. டிராக் சூட் போல, ஷூ போல பத்து ரூபாய் என்பதும் வாக்கிங் வஸ்துக்களில் ஒன்றாகிவிட்டது. அந்தவகையில் பத்து ரூபாயை எடுக்கலாம் என்று ஃப்ரிட்ஜின் மேல் இருந்த பர்ஸை எடுத்தபோது கொஞ்சம் உள்வாங்கி இருந்தது. முந்தைய தினம்தான் ஏடிஎம்மில் இருந்து மூவாயிரம் ரூபாய் எடுத்திருந்தேன். மகனுக்கு செருப்பு வாங்க முந்நூறு ரூபாய் எடுக்கப் போனபோத…

    • 1 reply
    • 3.1k views
  8. ஒரு நிமிடக் கதை: புதிய தலைமுறை ஊரே அந்த வீட்டின் முன் கூடி யிருந்தது. பூங்கோதைக் கும்கூட அவள் கணவன் மேல் சந்தேகம் இருக்கவே செய்தது. கோபமாய் அமர்ந்திருந்த சின்னராசுவை நெருங்கிய அவள், “இப்போ ஊரே கூடிவந்து நிக்குது. இவங்களுக்கு என்ன பதில் சொல்லப் போற?” என்றாள். அதற்கு சின்னராசு, “இங்க பாரு…. நான் முன்ன மாதிரி எல்லாம் இல்ல. திருடிப் பொழைக்கிறதை விட்டுட்டேன். கட்டுன பொண்டாட்டி, நீயே என்னை நம்பலை... அவங்களால என்ன பண்ணமுடியுமோ அதை பண்ணிக்கச் சொல்லு” என்றான் முடிவாக. அவன் பேசியதைக் கேட்ட ஊராரும் போலீஸில் புகார் கொடுப்பதாய் சொன்னார்கள். அடுத்த இரண்டு மணி நேரத்தில் காவல்துறை ஜீப் புழுதியைக் கிளப்பிவி…

  9. வேண்டியது வேண்டாமை அம்மா வருத்தமாக உட்கார்ந்து கொண்டிருப்பதைப் பார்த்து வேதனையாக இருந்தது. காலையில் மாயா இறந்ததாக செய்தி கிடைத்து அப்பா அவசரமாக கிளம்பிச் சென்றதிலிருந்தே அம்மா இப்படித்தான் வருத்தத்தைச் சுமக்கிறாள். ‘‘அம்மா, எதுக்காக துக்கப்படறீங்க? பீடை ஒழிஞ்சதுன்னு நிம்மதியா இருங்க...’’ என்றேன். என்னை உற்றுப் பார்த்தாள். நான் கூறியது மனிதாபிமானம் குறைந்த வாக்கியம் என்பது எனக்கே தெரிந்ததுதான். ஆனால், கடந்த பல வருடங்கள் எங்களுக்குத் தொடர்ந்து கிடைத்து வந்த வலியும், ஏளனப் பார்வைகளும் என்னை அப்படிக் கூற வைத்தன. ஆனால், இப்போது அம்மாவிடமிருந்து வெளிப்பட்ட வார்த்தைகள் திகைப்பை அளித்தன. ‘‘உங்க அப்பாவை நினைச்சால் பாவமாய் இருக்குடா. இதிலி…

  10. ஆலடி பஸ் - சிறுகதை சிறுகதை: இமையம், ஓவியங்கள்: ஸ்யாம் ``கொஞ்சம் நவுந்து குந்து'' என்று வடக்கிருப்புக்காரி சொன்னாள். ``ஆளு வருது!'' பிரியங்கா சொன்னாள். ``ஆளு வரப்ப எந்திரிச்சுக்கிறேன். இப்ப நவுந்து குந்து.'' ``கடக்கிப் போயிருக்காங்க. இப்ப வந்துடுவாங்க.'' ``பஸ் ஒங்க ஊட்டுதா?'' ``கவர்மென்ட்டுது.'' ``அப்பறம் என்னா... நவுந்து குந்து.'' ``ஆளு வருதுன்னு ஒனக்கு எத்தன வாட்டி சொல்றது? வேற எடம் பாத்து குந்து.'' ``ஆளு வரப்ப வரட்டும். நீ நவுந்து குந்து. இல்லன்னா வழிய வுடு'' என்று வடக்கிருப்புக்காரி முறைப்பது மாதிரி சொன்னாள். இரண்டு ஆள்கள் உட்காரக்கூடிய சீட்டில் முதலில் பிரியங்கா உட்கார்ந்திருந்தாள். பக்கத்தில் ஜன்னலையொட்டியிருந்த …

  11. 10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: ஸ்யாம் ட்ரீட்மெண்ட் ``கண் வலின்னு பையன் அழுறான்...'' என்றவரிடம், ``காலைல 50MB, மதியம் 50MB, நைட்டு 50MB மட்டும் மொபைல பார்க்கச் சொல்லுங்க... சரியாயிடும்'' என்றார், டாக்டர். - சி.சாமிநாதன் லாஸ்ட் ஸீன் ``கடைசியா எப்ப பார்த்தீங்க?'' என விசாரித்த போலீஸ்காரரிடம் வாட்ஸ்அப் லாஸ்ட் ஸீனைக் காட்டினார் பக்கத்து வீட்டுக்காரர். - கிருஷ்ணகுமார் காதல் ``நம்ம பொண்ணு லவ் பண்ண ஆரம்பிச்சுட்டான்னு எப்படி சொல்ற!'' ``நேத்து சேலை கட்டிப் பார்த்தாள்!'' - கி.ரவிக்குமார் கதை ``சும்மாச் சும்மா கதை கேட்டு நச்சரிக்கக் கூடாது. பாட்டியை சீரியல் பார்க்கவிடு...'' என்றாள் அம்மா! - பெ.பாண்டியன் என் ஆளு அவள் என் ஆளு என்ப…

  12. மஹாபலி ( சிறுகதை) - சுஜாதா மகிஷாசுரமர்த்தினி குகைக்கு முன்னால் பெங்காலிகள் 'ஆஷோன்... ஆஷோன்...' என்று ஆரவாரத்துடன் போட்டோ பிடித்துக் கொள்ள... சென்னை-103-ஐச் சேர்ந்த 'அன்னை இந்திரா மகளிர் உயர்நிலைப் பள்ளி'யின் ஆசிரியைகள் டீசல் வேனிலிருந்து ஆரவாரத்துடன் உதிர்ந்து, மஹாபலிபுரத்தின் சரித்திர முக்கியத்தை விளக்கும் வகையில், ''இங்கதாண்டி 'சிலை எடுத்தான் ஒரு சினைப் பெண்ணுக்கு' ஷூட்டிங் எடுத்தாங்க...'' என்று வியக்க, கற்சிற்பிகளின் உளி சத்தம் எதிரொலிக்க, பிள்ளையர்களும் கொள்ளை முலைச் சுந்தரிகளும் சிலை வடிவில் டூரிஸ்டுகளுக்குக் காத்திருந்தார்கள். 'கல்லோரல் சீப்பா கிடைக்கும்னு யாரோ சொன்னாங்களே?' இவற்றையெல்லாம் கவனிக்காமல் ஊடே நடந்த அந்த இளைஞன், கரைக்கோயிலின் அ…

    • 1 reply
    • 1k views
  13. ஒரு நிமிடக் கதை: சுற்றுலா “மேகலா..! அருணுக்கு லீவு விட்டாச்சு.. அப்பாவுக்கு போன் பண்ணி நாம கிராமத்துக்கு வர்றோம்னு சொல் லிடவா..?” சம்பத் கேட்டார். “ஹையா..! வசந்த் அண்ணாவோட நல்லா விளையாடலாம்..” - என்று அருண் உற்சாகமாய் சொல்ல, மேகலா மட்டும் “யோசிப்போங்க..” என்று பட்டும் படாமல் பேசினாள். “இதுல யோசிக்க என்ன இருக்கு” என்று கோபத்துடன் சொல்லிவிட்டு ஆபீசுக்கு கிளம்பினார் சம்பத். கிராமத்தில் சம்பத்தின் வயதான அப்பாவும் அம்மாவும் இருக்கிறார்கள். அண்ணன், விவசாயத் தைப் பார்த்துக் கொண்டு அங்கேயே இருக்கிறார். ஒவ்வொரு வருடமும் லீவுக்கு அருணை கூட்டிக்கொண்டு அங்…

    • 1 reply
    • 1k views
  14. வால்வாயணம் - சிறுகதை தென்றல் சிவக்குமார் - ஓவியம்: ரமணன் “உங்க அபார்ட்மென்ட்ல சிசிடிவி இல்லையா?” “இருக்குப்பா... அது எதுக்கு இப்ப?” - திகிலுடன் நான். “சிம்பிள்டி... டேப்ஸ் எடுத்துப் பார்த்துட்டு அதை ப்ரூஃபா வெச்சு லோக்கல் போலீஸ், இல்லன்னா மகளிர் காவல் நிலையம், அதுவும் வேணாம்னா ஹ்யூமன் ரைட்ஸ் வரைக்கும்கூட காக்ரோச் பண்ண முடியும்...” ‘அப்ரோச்’ என்று அவள் சொன்னதுதான் குழப்பத்தின் ஏதோ ஒரு சுழற்சியில் எனக்கு ‘காக்ரோச்’ என்று கேட்டது என்பது இந்நேரம் உங்களுக்குப் புரிந்திருக்கும். சுதாரிப்பதற்குள், “நம்ம கீதாவோட தம்பி லாயர்தான்... நா வேணா பேசிப் பார்க்கவா...” என்று அடுத்த சுற்றைத் தொடங்கினாள். வேறு வழியே இல்லாமல் “செகண்ட் கால்ல வினோத் வராருப்பா... அப…

  15. *****************மானசீகன்**************** நான் முதன்முதலாக சர்ச்சுக்குப் போனது ஒரு காதல் விவகாரமாகத்தான்.என்னுடைய நண்பன் மணிகண்டன் ஒரு கிறிஸ்டியன் பெண்ணைக் காதலித்தான். அவள் பெயர் கேத்தரின். பேரழகி, தேவதை என்பதெல்லாம் அவளைப் பொறுத்தவரை குறைப்பிரசவ வார்த்தைகள். அவள் முகபாவனைகளும், உடலசைவும், உடைகளின் சரசரப்பும் யாரும் அறியாத ஒரு மலரின் வாசனையை இந்த மண்ணில் பரப்பிக் கொண்டிருந்தன.. எல்லாவற்றையும் விட அவள் அழகாகப் பாடுவாள். மைக் முன்பாக அவளைப் பார்க்கையில் , ஒரு நீர்வீழ்ச்சி காலத்தின் கட்டளையால் உறைந்து நிற்பதைப் போலிருக்கும். பெரும்பாலும் எஸ். ஜானகியின் பாடல்கள்.அவள் குரலில் எப்போதும் ஒரு மென்சோகம் இழையோடும். எதிர்பாராத தருணங்களில் அதுவே ஒரு சிறுத்தையாக உரு…

  16. நானே கொல்லப்பட்டேன்!(நிமிடக்கதை) மட்டக்களப்பு நகரமே அன்றுகாலைப் பொழுதைப் பறிகொடுத்திருந்தது. காந்தியின் சிலை வெண்துணியால் மறைக்கப்பட்டிருந்தது. எதிர்க்கட்சித்தலைவர் கட்சித்தலைவர் பேச்சாளர் என அனைவரையும் நித்திரைத் தூக்கத்திலே இருந்து எழுப்பிக்கொண்டுவந்ததுபோல் தோன்றியது. காந்தி இன்றுதான் இறந்தாரோ என்ற ஐயம் ஏற்படுமளவில் அவர்களது முகம் சோகமே உருவாகக் காட்சியளித்தது. அவர்களின் முன்னால் சில காவல்துறையினரும் இந்தியத்துணைத்தூதர் பாதுகாப்பு அதிகாரிகளென நின்றுகொண்டிருந்தனர். காவல்துறை ஆய்வாளர்களால், பலமணிநேரமாகியும் கண்டுபிடிக்கவே முடியவில்லை காந்தியின்கண்ணிலிருந்து வழியும் குருதிக்கான கரணியத்தை. மோப்பநாயொன்று குருதிபடிந்த இலையொன்றோடு வந்தது.எந்த மரத்து இலை என்று பார்த்த எங்…

    • 8 replies
    • 1.5k views
  17. ஜனனம்! “பேரன் பிறந்ததை மகிழ்வோடு பதிவுசெய்ய வந்திருக்கேன்” என்று சொல்லியும், எனக்குப் பழக்கமான அந்த அலுவலர், “கொஞ்சம் வெளியே வெயிட் பண்ணுங்க. இவர் வேலை முடிஞ்சு போனப்புறம் உள்ளே வாங்க!” என்று கண்டிப்பாகச் சொல்லி, என்னைத் துரத்தாத குறையாக அனுப்பிவிட்டார். ‘சரிதான்... என் முன்னாடி லஞ்சம் வாங்கக்கூச்சம் போல!’ என்று நினைத்தபடி வெளியே வந்தேன். வெளியே நின்றிருந்த ஒருவர், “என்ன சார், டெத் கேஸைப் பதிவு பண்ணப் போனவர் இன்னும் உள்ளேதான் இருக்காரா?” என்று கேட்டதும், என் நெஞ்சில் சாட்டை அடி விழுந்தது. மகிழ்ச்சி பதிவாகும் நேரத்தில் நெருடல் வேண்டாமே என்றுதான் என்னை வெளியே அனுப்பியிருக்கிறார். http://www.eegarai.net

  18. Started by நவீனன்,

    பிணக்கு - ஜெயகாந்தன் மெட்டியின் சப்தம் டக்டக்கென்று ஒலித்தது. வளையொலி கலகலத்தது. கூடத்தில் எட்டு வயதுப் பேரன் முத்து வலது புறமும், நான்கு வயதுப் பேத்தி விஜி இடது புறமும் நித்திரையில் ஆழ்ந்திருக்க, நடுவே படுத்திருந்த கைலாசம் பிள்ளை தலையை உயர்த்திப் பார்த்தார். கையில் பால் தம்பளருடன் மருமகள் சரஸா மகனின் படுக்கை அறைக்குள் நுழைவது தெரிந்தது. தன் மீது விழுந்த பார்வையால் சரஸாவின் தலை கவிழந்தது. கிழவருக்குக் கொஞ்சம் குறும்பு அதிகம் தான்! கைலாசம் பிள்ளையின் பார்வை அவளைப் பின்தொடர்ந்து சென்றது. அவள் அறைக்குள் நுழைந்தாள். ‘கிரீச்’சென்ற ஒலியுடன் கதவு மூடியதும், மேலே செல்ல முடிய…

  19. சாக்கடலில் சேற்றுக்குளியல் ஜோர்தானுக்கான சுற்றுப் பயணத்திப்போது மத்­தி­ய­கி­ழக்கு பிராந்­தி­யத்­தில் உல்­லாசப் பய­ணி­களின் சுவர்க்கம் என்று அழைக்­கப்­ப­டு­கின்­ற­தான நாடு­களின் வரி­சையில் இஸ்­லா­மி­யர்­களைப் பெரும்­பான்­மை­யாகக் கொண்­ட­மைந்­துள்ள நாடாக ஜோர்தான் திகழ்­கின்­றது. சம்­பி­ர­தா­ய­பூர்­வ­மான பாரா­ளு­மன்றக் கட்­ட­மைப்பைக் கொண்டு மன்னர் ஆட்­சியின் கீழான இயக்­கத்­தி­லுள்ள ஜோர்தான் அம்மான் எனும் பெயரை தலைநக­ராகக் கொண்­டுள்­ளது. மிகப் பிர­மாண்­ட­மா­னதும் எழில்­மிக்­கதும் அதே­நேரம் கண்­கவர் கட்­டட அமைப்­பு­களை கொண்­ட­மைந்­துள்ள ஜோர்தான் நாட்டின் பிர­தம அமைச்­ச­ராக ஹனி அல்– முல்கி காணப்­ப­டு­கிறார். கீழ்­சபை, மே…

  20. மரியாதை இருப்பதிலே நல்ல சட்டையாகப் பார்த்து இஸ்திரி போட்டுக்கொண்டிருந்தேன். ‘‘என்னம்மா… கல்யாணத்துக்குக் கிளம்பலயா…?’’ வெளியே அப்பாவின் குரல் கேட்டது. வாசலில் பாத்திரம் துலக்கிக்கொண்டிருந்த சாந்தியிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. கட்டாயம் ‘இல்லை’ என்று தலையாட்டி இருப்பாள், என்று யோசிக்கும்போதே அப்பாவின் குரல் சத்தமாக ஒலித்தது. ‘‘ஏன்டா… கூட்டிட்டு போல?’’ ‘‘நா மட்டும்தான் போறேன்...” ‘‘ஏன்? அது எங்க போவுது வருது. இந்த கிராமத்திலே பிறந்து இங்கேயே வாக்கப்பட்டு கிடக்கு. அதுக்கும் ஆசை இருக்காதா? புள்ளைகளுக்கும் பராக்கா இருக்கும்...’’ ‘‘வேணாம்ப்பா. வெயில் ஜாஸ்தியா இருக்கு. ஞாயிற்றுக்கிழமை வேற… பஸ்ஸெல்லாம் கூட்டமா இருக்கும்...’’ பேசிக்கொண்டே சட்டையை மாட்டிக்கொண்டேன். பாத்தி…

  21. ஏவல் - சிறுகதை நாஞ்சில் நாடன், ஓவியங்கள்: ஸ்யாம் ‘எட்டு, பத்து மாசமாச்சு... இப்படி ஓட்டம் தொடங்கி. சின்னப்பாடா? வில்லுக்கீறி எங்கே கெடக்கு, வீரகேரளமங்கலம் எங்கே கெடக்கு?’ சலிப்பாய்ச் சலித்தபடி இலுப்பாற்றுப் பாலத்தின் கீழே, பாறைமேல் சலசலத்தோடும் வெள்ளத்தின் ஓசையும், தலைக்கு மேல் நித்திலம் பூத்த கருங்கோட்டுப் புன்னை கவித்திருந்த மையிருட்டுமாகக் கால் நீட்டிப் படுத்தது ஏவல். நேரம் நள்ளிரவும் மறிந்து கீச்சான்களின் சில்லொலி. தூரத்தில் ஆழ்ந்த மோனத்தில் திளைத்திருந்தது தாடகை மலை. பாலத்தின் கீழே, கல்லுக்கட்டுச் சுவரோரம், சின்ன முக்கோணக் கல்லில், மஞ்சளை அப்பிய பீடத்தில் குடியிருந்த பாலத்தடி மாடன் எழுந்து, ஏவல் பக்கத்தில் குத்துக்காலிட்டு அமர்ந்தார். அவருக்கு…

  22. 10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: ஸ்யாம் கடன் ``அக்கா, உன் புதுப் புடைவையைப் பத்து நிமிஷம் கடன் கொடுக்கா... புரொஃபைல் போட்டோ எடுத்துட்டு திருப்பிக் கொடுத்துடுறேன்'' என்றாள் தங்கை. - நந்தகுமார் மனசு 'என்னமோ.. தெரியல... ரிசார்ட்ல தங்கினா தேவலாம்ன்னு மனசு அடிச்சிக்குது' என்றார், ஆளுங்கட்சி எம்எல்ஏ. - வி.வெற்றிச்செல்வி தீர்ப்பு நண்பர்களின் சண்டையைச் சுமுகமாக்க ஐடியா கொடுத்தார் அப்பா, “பிரகாஷ் ஃபேஸ்புக் ஐ.டிக்கு ஒரு ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுடா சுந்தர்!” - விகடபாரதி புரிதல் கையில் பிரியாணிப் பொட்டலத்தைப் பார்த்ததும் ``அப்பா, குடிச்சுட்டு வந்திருக்கார்'' என்றது குழந்தை. - வேம்பார் மு.க.இப்ராஹிம் பேய…

  23. கார்குழலி ‘சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தன் இந்தளவா கீழ்த்தரமாக இறங்கிவிட்டான்?’ கேள்வியை கண்களில் தேக்கியபடி புலவர் தண்டியை பல்லவ இளவரசனான ராஜசிம்மன் நோக்கியது ஒரே ஒரு கணம்தான். அதற்குள் ‘ஓம் நமச்சிவாய... ஓம் நமச்சிவாய...’ என சபையில் இருந்த அனைவரின் உதடுகளும் ஏக காலத்தில் உச்சரிக்கத் தொடங்கின. இளவரசனை அணைத்தபடி புலவர் தண்டியும் சிவநாமாவளியை உச்சரிக்கத் தொடங்கினார். ராஜசிம்மனின் உள்ளத்தில் பக்தியோ, சிவ ஸ்வரூபமோ இப்போது இல்லை. கோபம் எரிமலையாய் கொந்தளித்துக் கொண்டிருந்தது. புலவர் தன் கைகளில் பிரசாதமாக அளித்த நாகலிங்க புஷ்பத்தை மெல்லத் திறந்தான். உள்ளே பொன், வெள்ளி, செம்பினால் செய்யப்பட்ட பல்லவ நாணயம் மின்னியது. முன்புறம் ரிஷப உ…

  24. ஒரு நிமிடக் கதை- ஏக்கம் உணவு இடைவேளைக்கான மணி ரீங்காரமிட்டது. மழலையர் பள்ளிக்குள் ஸ்வேதா சாப்பாடு கூடையுடன் நுழையும்போதே வாட்ச்மேன் தடுத்தார். “ம்மா, இன்னைக்கு கரஸ்பாண்டன்ட் வந்திருக்காங்க. நீங்க உங்க குழந்தைக்கு சாப்பாடு ஊட்டி விடறதை பார்த்தாங்கன்னா பிரச்சினை ஆயிடும். ப்ளீஸ், சாப்பாட்டை எங்கிட்ட கொடுத்துட்டு போயிடுங்க!” என்று கெஞ்சினார். “என்னப்பா சொல்ற. என் மகளை இங்க சேர்த்ததில் இருந்து நான்தான் அவளுக்கு சாப்பாடு ஊட்டி விட்டுட்டுப் போறேன். அதுவுமில்லாம, ஹெச்.எம். என் கூட படிச்ச தோழி. யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க” என்று அவரை அலட்சியப்படுத்திவிட்டு உள்ளே சென்ற ஸ்வேதா தனக்காக காத்திருந்த மகளுக்கு சாப்பாடு ஊட்ட ஆ…

  25. "நாளைக்கு செந்தளிப்பா இன்னும் அழகா இருக்கோணும் அம்மா சீக்கிரம் படனை" அம்மா சொல்லிவிட்டு கதவை மெதுவாக மூடி சென்றாள். அவள் அப்படித்தான் நடந்தால் நிலமதிராது. இரண்டு அண்ணன்கள் செல்லமாய் வளர்ந்த எனக்கு கொஞ்சம் துடுக்குதான். ஒருமுறை பள்ளி ஆசிரியை அடித்ததை அறிந்து அவருடன் சண்டைக்கு போன அப்பா என் மேல் துரும்பு விழுந்தாலும் துடித்து போகும் பாசம் .எனது சந்தோசமே அவரது சந்தோசமென வாழ்கிற ஜீவன். எல்லோரும் தூங்கிவிட்டார்களா.. அப்படி அமைதியாக இருக்கிறது. அந்த நிசப்தத்திலும் என் இதயத்தின் துடிப்பு எனக்கு கேக்கிறது. ஏன் இந்த படபடப்பு? ஏன் இந்த சலனம்? நாளைக்கு எனக்கு திருமணம் மாப்பிள்ளை இலண்டன். எல்லா இலட்சணங்களும் குணங்களும் கலந்த கலவை போல. ஏன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.