Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேரும் விழுதும்

கலைகள் | கலைஞர்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

வேரும் விழுதும் பகுதியில் கலைகள், கலைஞர்கள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் கலைகள், கலைஞர்கள் பற்றிய அவசியமான கட்டுரைகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
இசை சம்பந்தமான பதிவுகள் "இலக்கியமும் இசையும்" என்ற புதிய பகுதியிலேயே இணைக்கப்படல்வேண்டும்.

  1. மாற்றுக் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் அண்ணா. அறிஞர் அண்ணா மறைந்து 45 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், அரசியலில் அவர் காட்டிய நெறிமுறைகள் முன்பு எப்போதையும்விட இன்றுதான் மிகவும் அவசியமாக இருக்கின்றன. முன்பைவிட இன்றுதான் அண்ணா மிகவும் தேவைப்படுகிறார். 1931-ல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயிலும் போது, அவர் பெற்ற அரசியல் உணர்வும், கையாண்ட தன்னிகரற்ற தமிழ், ஆங்கில மொழித் திறனும், ஆளுமை யும் வாழ்நாள் இறுதிவரை ஒளிர்ந்தன. கல்லூரியில் நடைபெற்ற ஆங்கிலக் கட்டுரைப் போட்டியில் ‘மாஸ் கோவில் கொந்தளிக்கும் மக்கள் அணிவகுப்பு’ என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரை ஒரு இலக்கியமாகவே திகழ்கிறது. அந்தக் கட்டுரையில், ‘‘மூலதனம் இன்றியமை யாதது. ஆனால், முதலாளித்துவம் அப்படியன்று. மூலதனம…

  2. “தமிழ்ப் பாரம்பரியம் பேசுபவர்கள் கடைசியில் சாதியெனும் கழனிப்பானையில் கையை விடுவதைத்தான் நாம் பார்க்கமுடிகிறது” - பிரளயன் நேர்காணல் & எழுத்து: ம. நவீன் சந்திரசேகர் என்ற இயற்பெயரைக் கொண்டவர், பிரளயனாக அறியப்பட்டது வானம்பாடி இயக்கத்தின் தொடர்பறாத நீட்சியினால்தான். மை ஸ்கீல் அறவாரியமும் வல்லினமும் இணைந்து மலேசியாவில் முதன் முதலாக ஏற்பாடு செய்திருந்த வீதி நாடக முயற்சிக்குப் பயிற்சி வழங்கவே தமிழகத்திலிருந்து குறுகியகால வருகையளித்திருந்தார் பிரளயன். அந்தக் குறுகியகால நட்பில் அவரது தத்துவக்கூர்மையையும் வரலாற்று அறிவையும் ஆய்வுத்தெளிவையும் அறிய முடிந்தது. பத்தாண்டு காலம் மார்க்சிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியர், பத்திரிகையாளர், திரை இணைஇயக்குநர் வரை எங்கெங்கோ அலைந்திருந்தா…

  3. - க.ஆ.கோகிலவாணி இதுவரை இலக்கியத்துறையில் நிகழ்த்தப்படாத சாதனையொன்று இலங்கையின் கிழக்கிலங்கையில் கடந்த சனிக்கிழமை(30) நிகழ்த்தப்பட்டது. தன்னை ஓர் எழுத்தாளன் என இந்த உலகமே அறிந்துகொள்ள வேண்டும் என்ற உத்வேகத்துடன் 12 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக எழுதி சானையை நிலைநாட்டியுள்ளார் எழுத்தாளர் அனிஸ்டஸ் ஜெயராஜ். வித்தியாசமான சிந்தனையோட்டம்கொண்ட இக் கலைஞன், “கரன்சி இல்லாத உலகம்“ என்ற தொடரினை எழுதி, இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார். நிமிடத்துக்கு 10 சொற்கள், மணித்தியாலத்துக்கு 6 பக்கங்கள் என தொடர்ச்சியாக 12 மணித்தியாலங்கள் இவர் எழுதியுள்ளார். மொத்தமாக 77 பக்கங்களையும் 7,582 சொற்களையும் கொண்ட இவரது 'கரன்சி இல்லாத உலகம்' தொடரானது இன்று இலக்கியத்துறையில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது…

  4. பாரதியின் செய்தியையும் கவித்துவத்தையும் வரும் தலைமுறைகளிடம் கொண்டுசெல்வது அவசியம். சமீபத்தில், ஒரு தமிழ்க் கவிஞரின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை அலுவலகப் பயன்பாட்டுக்காக வாங்கிவந்தேன். கல்லூரியிலிருந்து களைத்து வந்த மகள் என் முன் வந்து உட்கார்ந்தாள். கவித்தொகுதியைக் கொடுத்து நான் வட்டமிட்டிருந்த கவிதை களையாவது படித்துக் கருத்துச் சொல்லும்படி கெஞ்சினேன். அட்டையையும் பின்னட்டையையும் பின்னட்டைக் குறிப்பையும் திருப்பித் திருப்பிப் பார்த்தாள். பிறகு புத்தகத்தைப் புரட்டினாள். இதென்ன எழுத்துரு, குழந்தைகள் புத்தகம் மாதிரி என்றாள் எரிச்சலுடன். என் கெஞ்சல் கொஞ்சமும் பலனளிக்கவில்லை. புத்தகம் மீண்டும் என் கைக்கு வந்துவிட்டது. இளம் தலைமுறையினரிடம் பாரதியைக் கொண்டு செல்வது எப்படி என்று …

  5. கல்கியின் பலம் எழுத்தில் மட்டுமல்ல, அவரது சமூகச் செயல்பாடுகளிலும் இருக்கிறது. விடுதலைப் போராட்டக் காலத்திலும் அதற்குப் பின்புமான காலத்திலும், தமிழகத்தின் அரசியலில் சமூக கலாச்சார வரலாற்றை ஆய்வு செய்யும் எவருக்கும் கல்கியின் எழுத்துகள் ஒரு மாபெரும் புதையல். ‘பொன்னியின் செல்வன்’ என்ற வரலாற்றுப் புதினத்தை எழுதியதால் மூன்று தலைமுறை கடந்தும் வாசிக்கப்படுபவர் அவர். ஆனால், இந்த ஒரு காரணத்துக்காக மட்டும் கல்கி அறியப்படுவாரேயானால், அது அவரது ஆளுமைக்குச் சிறப்பாகாது. முன்னோடிப் பத்திரிகையாளர், புனைகதை எழுத்தாளர், கலை விமர்சகர், கட்டுரையாளர், பாடலாசிரியர், தேச விடுதலைப் போராட்டத்தில் நேரடியாகப் பங்குபெற்ற அனுபவம் கொண்டவர் போன்ற பன்முகத் தன்மை கொண்டவர் கல்கி. சம கால ஆளுமைகளை அவர் நு…

  6. எழுத்தாளர் ஜெயமோகன்| கோப்புப் படம். எண்பதுகளின் இறுதியில் எழுதத் தொடங்கிய ஜெயமோகன் தமிழ் இலக்கிய உலகின் பிரதான ஆளுமைகளில் ஒருவர். நாவல், சிறுகதை, விமர்சனம், தத்துவம், வரலாறு எனப் பல தளங்களில் இயங்கும் இவர், பெரும் விவாதங்களையும் தொடர்ந்து உருவாக்கிவருபவர். தற்போது மகாபாரத இதிகாசத்தை வெண் முரசு என்னும் பொதுத் தலைப்பில் ஒவ்வொரு நாளும் ஒரு அத்தியாயம் எனப் பத்தாண்டுகள் திட்டமிட்டு எழுதத் தொடங்கியிருக்கிறார். மகாபாரதத்தை நாளுக்கொரு அத்தியாயமாக எழுதிவருகிறீர்கள். இதற்கான உந்துதல் எது? மகாபாரதத்தை முழுமையாக எழுதுவது சிறு வயதிலிருந்தே இருந்துவந்த ஒரு கனவு. ஆனால் அதைத் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தேன். ஒரு நாள் காய்ச்சலின் காரணமாக உடல் சோர்ந்திருந்தது. கணிப்பொறியின் முன்னால் உட்க…

  7. அன்னக்கிளியும் கவிக்குயிலும் பத்ரகாளியும் வெளிவந்ததற்குப் பிறகான காலகட்டம் அது. இளையராஜா என்னும் மாய மகுடிக்காரர் தமிழ் சினிமாவின் இசை ரசிகர்களை, பாம்புகளாக ஆட்டி வைத்துக்கொண்டிருந்த தருணம். அதுவரை நாங்கள் பார்த்த இயற்கைக் காட்சிகளுக்கு வயலின் கோர்வையால் வண்ணமேற்றி, எங்கள் கற்பனையை விரித்த இசைக் கலைஞனின் வசந்த காலம். நான் என்பது அப்போது நான் மட்டுமல்ல. முருகேசன், வாசு, பாலு, ஞானசேகரன், கார்த்தி, சேகர் என்ற நண்பர் குழாம். தினமும் எல்லோரும், தளத்தெரு என்ற எங்கள் கிராமத்திலிருந்து, இரண்டு கி.மீ. தூரத்திலிருந்த காரைக்காலுக்கு சைக்கிள் களில் பயணிப்போம். இப்போதைய பழைய பேருந்து நிலையத்துக்கு எதிரே இருந்த ஆறுமுகம் ஸ்வீட் ஸ்டால்தான் எங்களுக்குப் பிடித்தமான இலவச இசையரங்கம். கடையின…

  8. குட்டி ரேவதி சந்திப்பு – பிரிவினை கோஷங்களும் முற்போக்கு அரசியலும் ரா.கிரிதரன் கடந்த ஜூலை மாதம் 20 ஆம் தேதி, லண்டன் தமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் அமைப்பின் அழைப்பின் பெயரில், கவிஞர் குட்டி ரேவதி `பெண் கவிதையும் சமூக மாற்றமும்` என்ற தலைப்பில் உரையாடினார். கவிஞர் மாதுமை வழிப்படுத்திய இக்கூட்டத்தில், எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன் மற்றும் பல இலங்கைத் தமிழ் வாசகர்கள் கலந்துகொண்டனர். வரலாற்றுப் பிரக்ஞை என்றால் வீசை என்ன விலை, நம்மைச் சுற்றியிருக்கும் அதிகார மதங்களின் உலகளாவிய அழித்தொழித்தல் பற்றிய அறியாமை, இந்தியப் பண்பாடு மற்றும் மதச் சிந்தனைகள் பற்றிய அவதூறு, `முற்போக்கு அறிவுஜீவி` எனும் பட்டத்துடன் பன்முக இந்திய மரபு பற்றிய அற்பத்தனமான இழிச்சொற்கள், `மூத்தகுடிக்…

  9. (கோப்புப் படம்) “செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே…” என்று துவங்கும் மகாகவி பாரதியார் கவிதையின் இனிமையையும் தனித்துவத்தையும் ரசித்து பாராட்டாதவர்களும் இல்லை; வியக்காதவர்களும் இல்லை. பாரதியாருக்குப்பின் எத்தனையோ உலகம் போற்றும் தமிழ் கவிஞர்களும் கவிதைகளும் படைக்கப்பட்ட போதிலும், இன்றும் அவரது கவிதைகளும், அதில் அவர் கையாண்ட அழகியலும் ஈடுசெய்ய முடியாததாகவே இருக்கிறது. ஆனால், அவர் ஒரு கவிதைப் போட்டியில் கலந்துக்கொண்டு, இந்த கவிதையைச் சமர்ப்பித்தபோது, அவருக்கு மூன்றாம் இடம்தான் கிடைத்தது என்றால் நம்ப முடிகிறதா? ஆம்! 1900-க்களில் நடந்த ஒரு கவிதைப் போட்டியில்தான் இப்படியான ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. “இந்த கவிதைக்கு ரூ.100 பரிசாக வழங்கப்பட்ட…

    • 0 replies
    • 782 views
  10. மு .ஹரிகிருஷ்ணன் - நேர்காணல்-ஷோபா சக்தி நேர்காணல்-ஷோபா சக்தி மு .ஹரிகிருஷ்ணன் - சில வருடங்களிற்கு முன்பு தமிழகத்தின் மேற்குச் சிறு கிரமமான ஏர்வாடியில் நடந்த கூத்துக் கலைவிழாவுக்குச் சென்றிருந்தேன். கிராமத்து மக்கள் , நாட்டுப்புற ஆய்வாளர்கள், நாஞ்சில் நாடன், பொதியவெற்பன் என மூத்த எழுத்தாளர்களிலிருந்து லீனா, சந்திரா, இசை என இளைய தோழர்கள்வரை கூடியிருந்தார்கள். விடிய விடியக்கூத்தும் கட்டப் பொம்மலாட்டமும் கூத்துக் கலைஞர்களை மதிப்புச் செய்தலும் என நிகழ்ந்த அந்த அற்புத இரவின் சூத்திரதாரி ஹரிகிருஷ்ணன். ‘ஒரு அசல் கலைஞனுக்கு பேரனாகவும், ஒரு அசல் இரசனைக்காரிக்கு மகனாகவும் பிறந்த எனக்கு, என்னை எழுத்தாளன் என்று சொல்லிக்கொள்வதைவிடக் கூத்துக் கலைஞன் என்று சொல்லிக்கொள்…

    • 0 replies
    • 2.6k views
  11. ‘விடை பெறுவது நடராஜ, சிவம், இந்தக் கம்பீரமான குரலைக் கேட்காத, சட்டென அடையாளம் காணாத இலங்கைத் தமிழனே இருக்க முடியாது. அவ்வளவுக்கு ஆழமான தனித்துவமான, ஆழமான, ‘பேஸ்’ குரல் அவருடையது. நேரில் பார்த்தால் குரலைப் போலத்தான் இளமையாக, தோற்றத்திலும் பேச்சிலுமாகத் தெரிகிறார் நடராஜ சிவம். இவர் குரல் வளம் கொண்ட அறிவிப்பாளர், வானொலித்துறை சார்ந்தவர் மட்டுமல்ல; நடிகர், கலைஞர் எனப்பல்வேறு முகங்கள் இவருடையது. இவர் இறுதியாக நடித்த காதல் கடிதம் திரைப்படம் தற்போது ஒளித்தட்டாக வந்திருக்கிறது. அதில் இவரது பண்பட்ட நடிப்பைக் காணலாம். 40 வருடங்களுக்கும் மேற்பட்ட வானொலி அனுபவங்களைக் கொண்டிருக்கும் இவர்தான் சூரியனின் உதயத்துக்கும் அது உச்சிக்கு போவதற்கும் பின்புலமாக நின்றவர். அது அஸ்தமிக்கலாம் என்றி…

    • 3 replies
    • 1.3k views
  12. அளவெட்டி பாரதி கலாமன்றத்தின் வடக்கும் தெற்கும்.... ஈழத்தின் நாடக வரலாற்றை படித்துப் பார்க்கும் எதிர்கால தலை முறையினர்க்கு அங்குள்ள நாடக வரலாற்று ஆய்வு நூல்களில் இருந்து அறிய முடியாத பல சிறந்த நாடகங்கள் இருக்கின்றன. அவற்றை படிப்படியாக வெளிக் கொண்டுவர வேண்டும். அந்த முயற்சியின் ஓரங்கம் போல இக்கட்டுரை முதலில் இரண்டு நாடகங்களைப் பற்றிப் பேசுகிறது. ஒன்று அளவெட்டி பாரதி கலாமன்றத்தின் வடக்கும் தெற்கும், இன்னொன்று வல்வை nஉறலியன்ஸ் நண்பர்களின் சாணாக்கிய சபதம். இரண்டு நாடகங்களும் திரைப்படம் போல இடைவேளைகள் கொண்ட சுமார் 3 மணி நேர நாடகங்கள். பொதுவாக நாடகம் வேறு சினிமா வேறு என்று கூறுவார்கள். சினிமாவின் நடிப்புச் சாயல்களை நாடக நடிகர்கள் பின்பற்றினால் அந்த நாடகத்தை பல்கலைக்கழக ஆய…

  13. ஷேக்ஸ்பியர் மனைவியின் வீடு தோட்டத்தில் தாகூர் ஷேக்ஸ்பியர் வீட்டின் உட்புறம் பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த ஒரு கவிஞனால் 21-ம் நூற்றாண்டில் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்திவிட முடியும்? அந்தக் கவிஞன் ஷேக்ஸ்பியராக இருந்தால், தான் பிறந்து, வாழ்ந்த சிறு நகரத்தை வர்த்தகமும் வரலாறும் சந்திக்கும் புள்ளியாக மாற்ற முடியும். ஏவான் நதிக்கரையின் மீது அமைந்துள்ள ஸ்ட்ராட்ஃபோர்ட் அப்பான் ஏவான் என்ற சிறுநகரத்தின் பொருளாதாரத்திற்குப் பெருமளவில் பங்களித்துக்கொண்டிருப்பது ஷேக்ஸ்பியர்தான். இலக்கிய ஆர்வலர்களின் மெக்கா என்று அழைக்கப்படும் ஸ்ட்ராட்ஃபோர்ட் அப்பான் ஏவானில் ஷேக்ஸ்பியர் பிறந்த வீடு, திருமணத்திற்கு முன்பு அவரது மனைவி ஆன் ஹாத்வே வாழ்ந்த வீடு, ஷேக்ஸ்பியரின் ம…

    • 0 replies
    • 1k views
  14. தோப்பில் முஹம்மது மீரான், தமிழ் இஸ்லாமியப் படைப்பாளிகளுள் முக்கியமானவர். ‘சாய்வு நாற்காலி’ நாவலுக்காக 1997-ல் சாகித்திய அகாடமி விருதுபெற்றவர். கன்னியாகுமரி மாவட்டத்தின் கேரள - தமிழக எல்லைப் பகுதியில் வாழும் தனித்துவம் மிக்க இஸ்லாமியர்களின் வாழ்க்கையைத் தன் எழுத்துகள் மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தவர். தற்போது திருநெல்வேலியில் வசிக்கும் தோப்பில், போர்த்துக்கீசியப் படையெடுப்பைப் பின்னணியாகக் கொண்டு புதிய நாவலை எழுதிவருகிறார். உங்கள் பின்னணி பற்றிச் சொல்லுங்கள்... சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேங்காய்ப்பட்டணம். அது மலையாளம், தமிழ் என இரு மொழிகளும் பேசப்படும் ஊர். 1940-ல் நான் பிறந்தேன். பள்ளிப் படிப்பெல் லாம் அங்கு அருகிலேயே படித்தேன். நாகர்கோவிலில் உள்ள தெ…

    • 0 replies
    • 594 views
  15. ‘ஜானி’ படப்பிடிப்பில் ரஜினியுடன் மகேந்திரன். “இன்றைய நமது சினிமா, காட்சிகளையும், ஒலியையும் உயிரோட்டமாகக் கொண்ட ஒரு மீடியா என்பதே சரியாகப் புரிந்துகொள்ளப்படாமல் இருக்கிறது என்று கருதுகிறேன். வசனமே இல்லாமல்கூட ஒரு படத்தை ரசனைக்கு உரியதாகப் படைக்க முடியும். ஆனால், அத்தகைய முயற்சியில் ஈடுபடும் ஒரு கலைஞனுக்குக் கற்பனைத் திறன் அதிகமாகத் தேவைப்படுகிறது” - மகேந்திரன். தமிழ் சினிமாவில் சாதனை படைத்த படைப்பாளிகளில் மகேந்திரன் குறிப்பிடத் தகுந்தவர். தமிழ் சினிமாவில் யதார்த்தமான படங்கள் எப்போதாவது ஒருமுறை வருவதுண்டு. அவற்றில் 1970-கள் வரை குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை: ஏழை படும் பாடு (1950), அவன் அமரன் (1958), பாதை தெரியுது பார் (1960), கலைக்கோவில் (1964), உன்னைப் போல் ஒருவன…

    • 0 replies
    • 846 views
  16. “நீங்கள் என்மீது காட்டுகின்ற அன்புக்கு எனக்கு கிடைக்கும் இந்த விருதை உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்”. என்றார் டொமினிக் ஜீவா. -மல்லியப்புசந்தி திலகர்- ஈழத்து தமிழ் சிற்றிதழ் வரலாற்றில் 401 இதழ்களை தொடர்ச்சியாக வெளியிட்டு சாதனை படைத்த மல்லிகை டொமினிக் ஜீவா அவர்களுக்கு கனேடிய தமிழ் இலக்கிய தோட்டம் வழங்கிய சிறப்பு இயல்விருது வழங்கும் விழா கடந்த வியாழன் 17-07-2014 அன்று கொழும்புத் தமிழச்சங்கத்தில் இடம்பெற்றது. பேராசிரியர் எஸ்தில்லைநாதன் தலைமையில் நடைபெற்ற விழாவில் பெருந்திரளான இலக்கிய ஆர்வலர்களும் ஜீவாவின் அபிமானிகளும் கலந்து சிறப்பித்தனர். விளிம்பு நிலை சமூகத்தில் இருந்து எழுந்த ஜீவாவின் இலக்கிய பிரவேசம் அதுவரை இருந்து வந்த ஈழத்து தமிழ் இலக்கிய பாரம்பரியத்து…

  17. எவராலும் கற்பனை செய்ய முடியாத நான் கிழக்கு இலங்கையின் சிற்றூர் ஒன்றில் 1982-ல் பிறந்த ஸர்மிளா ஸெய்யித் ‘சிறகு முளைந்த பெண்’ என்ற கவிதைத் தொகுப்பு ஊடாக நவீன தமிழ் இலக்கியப் பரப்பில் தனது தடத்தைப் பதித்தவர். தொடர்சியாக, புனைவுப் பிரதிகளை மட்டுமல்லாமல் அ-புனைவுப் பிரதிகளையும் அவர் முனைப்புடன் எழுதிக்கொண்டிருக்கிறார். முப்பதாண்டு கால ஈழப் போருக்குப் பின்னான காலத்தில், போரின் காயங்களோடும் வடுக்களோடு அலைந்துறும் மாந்தர்களையும் இலங்கையின் இனத்துவப் பிரச்சினைப்பாடுகளையும் மையமாக வைத்து ஸர்மிளா ஸெய்யித் எழுதிய நாவலான ‘உம்மத்’ இந்த வருடத்தின் தொடக்கத்தில் ‘காலச்சுவடு’ பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. சமகால அரசியற் பிரச்சினைகளிற்குள் சிக்கிக்கொள்ளாமல் லாவகமாக நழுவப் பார்க்…

  18. நன்றி: விகடன் தமிழ்மகன், டி.அருள் எழிலன் படங்கள்: கே.ராஜசேகரன் ஜெயகாந்தன் அகவை 80-ஐ எட்டும் வேளையில், 'ஜெயகாந்தன் கதைகள்’ விகடன் பிரசுர வெளியீடாக வருகிறது. ஆனந்த விகடனில் வெளிவந்த அதே வடிவத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளின் தொகுப்பாக வரவிருக்கும் இந்த நூலைத் தொகுத்திருப்பவர்கள் இங்கிலாந்தில் வசிக்கும் டாக்டர் என்.ராம், வனிதா ராம் தம்பதி. ஓய்வாக இருக்கிறார் ஜெயகாந்தன். முதுமை உருவாக்கிய கனிவுக் கண்களால்... 'அப்படி என்ன கேட்டுவிடப்போகிறீர்கள்?’ என்கிறது வலது கண். 'இன்னும் சொல்ல என்ன இருக்கிறது?’ என்கிறது இடது கண். அறைக்குள் நுழையும் பேத்தி ஷைலுவைக் கொஞ்சும்போது, குழந்தை ஆகிறார். ''அய்யா... உடல் நிலை எப்படி இருக்கிறது?'' ''ம்ம்ம்... வயதுக்கு ஏற்ப உடல் நிலை…

    • 3 replies
    • 2.9k views
  19. ஈழநிலத்தின் நித்திய வடுவாயிருக்கும் ஆனையிறவுப் படைத்தளத்திலிருந்து அய்ந்து நிமிடப் பயணத்தூரத்திலிருக்கும் ‘இயக்கச்சி’ கிராமத்தில் 1963-ல் பிறந்தவர் கவிஞர் கருணாகரன். ஈழப்போராட்டம் முனைப்புற்ற எண்பதுகளின் ஆரம்பத்தில் காங்கேசன்துறை சீமெந்து ஆலையில் தொழிலாளியாகயிருந்தபோது மார்க்ஸியத்தால் ஈர்க்கப்பட்டு, இடதுசாரிச் சிந்தனையுள்ளதாக அறியப்பட்ட ஈழப் புரட்சி அமைப்பில் (ஈரோஸ்) தன்னை இணைத்துக்கொண்டவர். 1990-ல் அந்த அமைப்பு கலைக்கப்பட்டதன் பின்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சு மற்றும் காட்சி ஊடகப்பிரிவுகளில் பணியாற்றியவர். 2009-ல் முள்ளிவாய்க்காலில் இலங்கை அரசபடைகளும் புலிகளும் தமிழ் மக்களுக்கு இழைத்த பெருங் கொடுமைகளை, தடுப்பு முகாமிற்குள் இருந்தவாறே தனது எழுத்துகளால் உலகம் அறியச்…

  20. அம்மா என்றழைத்தாலும்... பெண் இனத்தின் ஒரு பிம்பம் பீடத்தில்- இன்னொன்று மரக்கிளையில். இரண்டுக்கும் சம்பந்தம் உண்டா? ஏன் இந்த முரண்பாடு? சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் அளிக்கப்படும் 'மைல்ஸ் ஃப்ராங்க்ளின் விருது' என்ற மிகச் சிறந்த இலக்கிய விருது, ஆங்கிலேய தந்தைக்கும் ஆஸ்திரேலிய தாய்க்கும் பிறந்த பெண் எழுத்தாளர் ஈவி வைல்டுக்கு அளிக்கப்பட்டது. விருது கிடைத்ததால் ஏற்பட்ட சந்தோஷத்தைவிட இலக்கிய உலகத்தில் இருக்கும் யதார்த்தத்தால் எழுந்த சோகம் தான் அவருக்கு அதிகம். “என்னுடைய வாழ்நாளில், ஒரு ஆண் எழுத்தாளரின் எழுத்து தீவிரமாக எடுத்துக்கொள்ளப் படுவதுபோல எனது எழுத்து நினைக்கப்படும் என்பதை என்னால் கற்பனைகூட செய்ய முடியாது.” என்கிறார். “நான் கர்ப்பமாக இருக்கிறேன். எல்லோரும் என்ன …

    • 0 replies
    • 669 views
  21. லதா தீதி (அக்கா) என்று பலராலும் செல்லமாக அழைக்கப்படும் லதா மங்கேஷ்கர், உலகிலேயே மிக அதிக எண்ணிக்கையில் பாடல்களைப் பாடியிருக்கிறார். அதற்காக கின்னஸ் புத்தகத்திலும் இடம்பிடித்திருக்கிறார். லதா மங்கேஷ்கர் என்னும் இந்த இசைக்குயில், 1942-ல் தன் கானத்தை இசைக்கத் தொடங்கியது. கிட்டத்தட்ட எழுபது வருடங்களுக்கும் மேலாகத் தெவிட்டாத தன் தேன் குரலால் ரசிகர்களைத் தன் இசையின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பெருமையும் லதா மங்கேஷ்கருக்கு உண்டு. எப்போதும் நிற்காத நதியாக, உட்காராத காற்றாகப் பாடலையே தன் சுவாசமாகக் கொண்டு இயங்கிவருகிறார். சுமார் 980க்கும் அதிகமான இந்திப் படங்களில் பாடி மாபெரும் சாதனை நிகழ்த்தியுள்ளார். இந்த வயதிலும் இன்னிசை வழங்கிவருகிறார். இவர், ஆஷா போஸ்லே, ஹ்ருதயநாத் மங்கேஷ…

    • 0 replies
    • 1k views
  22. என்னவளே அடி என்னவளே' பாடலுக்கு புல்லாங்குழல் வாசித்த கலைஞர் காதலியின் வருகைக்காக காதலன் காத்திருக்கின்றான். நேரம் போனதே தவிர அவள் வரவில்லை. வேதனையிலும் விரக்தியிலும் பாடுகிறான். அவ்வேளையில் தனது மதம் குடும்பம் சுற்றார் எல்லாவற்றையும் விட தனது காதல்தான் முக்கியம் என முடிவெடுத்த காதலி ஒருவாறாக காதலன் குறிப்பிட்ட இடத்துக்கு ஓடிவருகிறாள். அதுவரை ஹீரோ பாடுவதையே காட்டிவந்த கெமரா அப்போதுதான் முதன் முதலாக ஓடிவரும் காதலியைக் காட்டுகிறது. அதற்கு பின்னணியாக ஒற்றைப் புல்லாங்குழல் 1;34 நிமிடத்தில் இருந்து 2:00 நிமிடம் வரை ஓங்கி ஒலிக்கிறது. அந்த ஒலியில் காதலின் தவிப்பு, காதலனின் வேதனை எல்லாவற்ரையும் மொழிதெரியாதவரால் கூட சொல்லமுடியும் அதைத் தந்தவர் நவீன் குமார். பாடல்: உயிரே.. வந்து…

    • 0 replies
    • 2k views
  23. ஐஸ்வர்யா அசுர வாத்தியமான நாகஸ்வரத்துக்கு இணையான லய வாத்தியம் தவில். எந்த ஒலிபெருக்கியின் துணையும் இல்லாமல் இடியைப் போல் ஒலிக்கக் கூடிய வாத்தியம். ஆண்கள் மட்டுமே கையாளத் தகுந்த இந்த வாத்தியத்தை அரிதாகக் கையில் எடுத்து, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புஷ்பராணி திருச்செல்வம் புகழ்பெற்ற பெண் தவில் கலைஞராக மிளிர்ந்திருக்கிறார். இவருக்கு அடுத்துத் தவில் வாசிப்பில் சுடர்விட்டுக் கொண்டிருப்பவர், பெங்களூரில் வசிக்கும் ஐஸ்வர்யா நந்தகோபாலா. தந்தை ராஜகோபாலிடம்தான் ஐஸ்வர்யா தவில் கற்றுக்கொண்டிருக்கிறார். ஏறக்குறைய 250 பேருக்குத் தவில் வாசிக்கக் கற்றுக் கொடுத்த ராஜகோபால், தன் மகள் ஐஸ்வர்யாவுக்கு முதலில் தவில் வாசிக்கக் கற்றுக் கொடுக்கவில்லை. தவிலையே தொடக்கூடாது என்று கண்டிப்பாகச் சொல்லியிர…

    • 0 replies
    • 1k views
  24. எனது வேசித் தொழிலில் ஒரு ஆணுடைய பணத்தை ஏற்றுக்கொண்ட பிறகு இரண்டாவது ஆணினுடையதை ஏற்றுக்கொள்ளலாகாது ஐயா. மீறினால் என்னை நிர்வாணமாக நிறுத்தி கொல்வார்கள் ஐயா. மேலும் கேடு கெட்டவர்களோடு நான் உடனுறைந்தால் சிவந்த, சூடேறிய கத்தி கொண்டு எனது மூக்கையும் காதையும் அறுப்பார்கள் ஐயா. மாட்டேன், முடியாது. உங்களை அறிந்த பிறகு அதைச் செய்ய மாட்டேன். கட்டுகளற்ற சிவனே, என் சொல் உண்டு. கவிதையை எழுதியவர் கன்னடப் பெண் கவிஞர் சூலே சங்கவா. 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கன்னடக் கவிஞரான சூலே சங்கவா எழுதியதில் மிச்சமிருப்பது இந்த ஒரு கவிதை மட்டுமே. பெரும்பாலான காலகட்டங்களில் அடக்குமுறைகளுக்கும் ஒடுக்குதல்களுக்கும் ஆளாக வேண்டியிருந்த பெண்களுக்கு பக்தியும், பக்தியின்பாற்பட்ட காதலுமே சுதந்…

    • 0 replies
    • 702 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.