விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7834 topics in this forum
-
தந்தை - மகள் பாசத்துக்கு ஒரு கிரிக்கெட் ஸ்கோர்கார்டின் மரியாதை! #MustRead கிரிக்கெட் போட்டிகளில், விளையாடிக்கொண்டிருக்கும்போது ஒரு பேட்ஸ்மேனுக்கு காயம் ஏற்பட்டாலோ, உடல்நலக் குறைவு ஏற்பட்டாலோ, அவர் ஓய்வு பெறுவது வழக்கம். அதை,மேட்ச்சின் ஸ்கோர் கார்டில் Retired Hurt என்று குறிப்பிடுவார்கள். காயம் சரியான உடனேயோ,அல்லது நிலைமை சீரான பிறகோ, அந்த ஆட்டக்காரர் மறுபடியும் வந்து ஆடலாம். அப்படி ஆடவில்லையென்றால், மேட்ச்சின் அதிகாரப்பூர்வ ஸ்கோர் கார்டில், அது Retired Hurt என்றே இருக்கும். 1877ஆம் ஆண்டுமுதல் டெஸ்ட் மேட்ச் போட்டிகள் நடந்து வருகின்றன. பல விந்தையான,வியக்கத்தக்க சம்பவங்கள் இந்த 140 ஆண்டுகளில் நடந்துள்ளன. ஆனால், சில பல ஆச்சரியத்தக்க விஷயங்கள…
-
- 1 reply
- 610 views
-
-
வலைகளின் துளை வழியே இனி எதிர்காலத்தை பார்க்க முடியாது: உருக்கமாக விடை பெற்றார் பிரான்செஸ்கோ டோட்டி பிரான்செஸ்கோ டோட்டி இத்தாலியின் ஏஎஸ் ரோமா கால்பந்து கிளப்புக்காக நீண்ட காலமாக விளையாடி வந்த பிரான்செஸ்கோ டோட்டி கண்ணீர் மல்க ஓய்வு பெற்றார். 24 ஆண்டு காலம் ரோமா அணிக்காக விளையாடி வந்த டோட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இத்தாலி சீரி ஏ போட்டியில் ஜெனோவா அணிக்கு எதிராக விளையாடினார். தலைநகரான ரோமில் நடை பெற்ற இந்த ஆட்டத்தில் ரோமா அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் எடின் ஸேகோ, டேனியல் டி ரோஸ்ஸி, தியாகோ பெரோட்டி ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இந்த ஆட்டத்தின் 54-வது நிம…
-
- 0 replies
- 223 views
-
-
சொந்த மண்ணில் இந்தியாவிற்கெதிராக இலங்கை பெற்ற சாதனை வெற்றிகள் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில், கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகின்றது என்றால் அங்கே விறுவிறுப்பிற்கும், சுவாரஷ்யங்களிற்கும் எந்தவித பஞ்சமும் காணப்படாது. அந்த வகையில், இந்த இரண்டு ஆசிய கிரிக்கெட் ஜாம்பவான்களுக்குமிடையில் மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளும் கொண்ட தொடர், கிட்டத்தட்ட மூன்று வருடங்களின் பின்னர் இம்மாத இறுதியில் ஆரம்பமாகின்றது. விருந்தாளியாக இலங்கைக்கு வந்துள்ள இந்தியா, தமது சுற்றுப்பயணத்தின் முதற்கட்டமாக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணியுடன் பலப்பரீட்சை நடாத்தவுள்ளது. சகல துறையிலும் சிறப்பித்த இந்திய அணி : பயிற்சிப் போட…
-
- 0 replies
- 679 views
-
-
ஒரே இரவில் 3 தங்கப்பதக்கம் வென்று அமெரிக்க நீச்சல் வீரர் உலக சாதனை உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஒரே இரவில் 3 தங்கப்பதக்கம் வென்று அமெரிக்க நீச்சல் வீரர் சாதனை படைத்துள்ளார். புடாபெஸ்ட்: ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நடந்து வந்த உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் அமெரிக்க நீச்சல் வீரர் காலெப் டிரஸ்செல் நேற்று முன்தினம் இரவில் 50 மீட்டர் பிரீஸ்டைல், 100 மீட்டர் பட்டர்பிளை, 4 x 100 மீட்டர் பிரீஸ்டைல் கலப்பு பிரிவு ஆகிய பந்தயங்களில் அடுத்தடுத்து பங்கேற்று மூன்றிலும் தங்கப்பதக்கத்தை அறுவடை செய்தார். இரண்டு மண…
-
- 0 replies
- 294 views
-
-
தீர்க்கமான உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள் நாளை ஆரம்பம் ரஷ்யாவில் நடைபெறவிருக்கும் 2018ஆம் ஆண்டு உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கான தீர்க்கமான தகுதிகாண் போட்டிகள் நாளை (29) தொடக்கம் செப்டம்பர் 05ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. வரும் நவம்பர் 14ஆம் திகதியுடன் உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள் முடிவடையவிருக்கும் நிலையில் இந்தப் போட்டிகள் பெரும்பாலான அணிகளுக்கு முக்கியமானதாக உள்ளன. 2018 உலகக் கிண்ணம் ரஷ்யாவில் வரும் ஜுன் 14 ஆம் திகதி தொடக்கம் ஜூலை 15ஆம் திகதி வரை தொடர்ச்சியாக 32 தினங்கள் நடைபெறவுள்ளன. எனினும், இந்த போட்டிக்கான 32 அணிகளில் 31 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிகாண் போட்டிகள் கடந்த 2015, மார்ச் 12ஆம…
-
- 0 replies
- 227 views
-
-
உருகிய கோஹ்லியின் வைரல் வீடியோ: கண்கலங்கிய ஆப்கானிஸ்தான் வீரர்கள்! ஆசிய கண்டத்தில் இருக்கும் கிரிக்கெட் அணிகளில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் ஆப்கானிஸ்தான் அணி தற்போது ஹாங்ஹாங்கில் நடைபெறும் கண்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது. பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதால் அணி வீரர்கள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டே பகுதிநேர வேலைகளிலும் ஈடுபடுகின்றனர். இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போல ஆப்கானிஸ்தானிலும் ஸ்பகிஸா டி-20 என்று அந்த நாடு திட்டமிட்டிருந்தது. இந்நேரத்தில் போட்டி தொடங்க திட்டமிடப்பட்டிருந்த மைதானத்திற்கு வெளியில் வெடிகுண்டு வெடித்தது. இந்த சம்பவத்தால் கிரிக்கெட் நிர்வாகமே அதிர்ந்…
-
- 0 replies
- 407 views
-
-
ஓய்வு பெறுகிறார் சங்ககரா மார்ச் 16, 2014. கொழும்பு: சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் சங்ககரா. இலங்கை அணியின் ‘சீனியர்’ வீரர் சங்ககரா, 36. கடந்த 2000ல் சர்வதேச கிரிக்கெட்டில் காலடி வைத்த இவர், இதுவரை 122 டெஸ்ட் (11,151 ரன்கள்), 369 ஒருநாள் (12,500), 50 சர்வதேச ‘டுவென்டி–20’ (1311) போட்டிகளில் விளையாடி உள்ளார். இவர், சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதுகுறித்து சங்ககரா கூறியது: வங்கதேசத்தில் நடக்கும் உலக கோப்பை (டுவென்டி–20) தொடருக்கு பின், சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளேன். இது, என் கடைசி ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர். இம்முடிவு வருத்தமானது என்றாலும், உண்மையானது. இதன்ம…
-
- 9 replies
- 1.7k views
-
-
ஒரே போட்டியில் இரண்டு முறை ஹாட்ரிக்: 105 வருட சாதனையுடன் இணைந்தார் ஸ்டார்க் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஒரே போட்டியில் இரண்டு முறை ஹாட்ரிக் விக்கெட்டுக்கள் வீழ்த்தி 105 ஆண்டுகளுக்குப் பிறகு சாதனையை சமன் செய்துள்ளார். இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக ஸ்டார்க் ஓய்வில் இருந்து வந்தார். தற்போது ஆஷஸ் தொடர் வரவுள்ள நிலையில், அதற்கு தயாராகும் வகையில் உள்ளூர் தொடரான ஷெஃப்பீல்டு ஷீல்டு தொடரில் விளையாடி வருகிறார். மிட்செல் ஸ்டார்க், வார்னர், ஸ்மித் போன்றோர் இடம் பிடித்துள்ள ந…
-
- 1 reply
- 571 views
-
-
உலக கோப்பை கால்பந்தில் தோல்வி: கேமரூன் அணி மீது சூதாட்ட விசாரணை உலக கோப்பை கால்பந்து போட்டியில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்த கேமரூன் அணி தனது 3 லீக் ஆட்டத்திலும் தோல்வி கண்டு அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது. குரோஷியாவுக்கு எதிரான ஆட்டத்தில் கேமரூன் அணி 0-4 என்ற கோல் கணக்கில் தோல்வி அடையும் என்று சூதாட்டத்தில் தண்டனை பெற்ற சிங்கப்பூரை சேர்ந்த புரோக்கர் வில்சன் ராஜ் பெருமாள் தெரிவித்ததாக ஜெர்மனி பத்திரிகையில் செய்தி வெளியாகி இருக்கிறது. இதனை தொடர்ந்து கேமரூன் அணி வீரர்கள் சூதாட்டத்தில் ஏதேனும் ஈடுபட்டார்களா? என்பது குறித்து கேமரூன் கால்பந்து சங்கம் விசாரணை நடத்தி வருகிறது. இது குறித்து கேமரூன் கால்பந்து சங்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ‘உலக …
-
- 1 reply
- 477 views
-
-
2022 கத்தார் உலகக் கோப்பையில் கூடுதல் அணிகள்- ஐரோப்பிய லீக்குகள் எதிர்ப்பு கத்தாரில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் 48 அணிகள் என்ற பிஃபா திட்டத்திற்கு ஐரோப்பிய லீக்குகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ரஷியாவில் வருகிற ஜூன் மாதம் 32 அணிகள் பங்கேற்கும் உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெறுகிறது. அதன்பின் 2022-ல் கத்தாரில் உலகக்கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இதற்காக கத்தார் பிரமாண்ட ஸ்டேடியங்களை கட்டி வருகிறது. 2018 உலகக்கோப்பையில் 32 அணிகள் பங்கேற்கின்றன. 2022-ல் 32 அணியை 48 அணியாக உயர்த்த பிஃபா திட்டமிட்டுள்ளது. 16 அணிகள் கூடு…
-
- 0 replies
- 463 views
-
-
உலக செஸ்: ஆனந்த் முதல் வெற்றி * மூன்றாவது சுற்றில் பதிலடி நவம்பர் 11, 2014. சோச்சி: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் மூன்றாவது சுற்றில், ஆனந்த், ‘நடப்பு சாம்பியன்’ கார்ல்சனை வீழ்த்தினார். உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி, ரஷ்யாவின் சோச்சி நகரில் நடக்கிறது. மொத்தம் 12 சுற்றுக்கள் கொண்ட இப்போட்டியில், ஐந்து முறை (2000, 2007, 2008, 2010, 2012) உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், ‘நடப்பு சாம்பியன்’ நார்வேயின் மாக்னஸ் கார்ல்சனை சந்திக்கிறார். முதல் இரு சுற்று முடிவில், ஆனந்த் 0–5–1.5 என்ற புள்ளிக்கணக்கில் ஆனந்த் பின்தங்கி இருந்தார். நேற்று மூன்றாவது சுற்று நடந்தது. துவக்கமே நெருக்கடி: வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய ஆனந்த், முதல் சுற்றில் விளையா…
-
- 14 replies
- 938 views
-
-
பெண்களுக்கான ஐந்தம்ச (பென்டத்லன்) போட்டியில் நஃபிசாடோ தியாம் உலக சாதனை Published By: SETHU 06 MAR, 2023 | 11:38 AM பெண்களுக்கான ஐந்தம்ச போட்டியில் (பென்டத்லன்) பெல்ஜியத்தின் நஃபிசாடோ தியாம் புதிய உலக சாதனை படைத்துள்ளார். துருக்கியில் நடைபெறும் ஐரோப்பிய உள்ளக மெய்வன்மை விளையாட்டு விழாவில், நேற்றுமுன்தினம் தியாம் 5,055 புள்ளிகளுடன் தங்கப்பதக்கம் வென்றார். இது ஐந்தம்ச போட்டிகளில் புதிய உலக சாதனையாகும். 2012 ஆம் ஆண்டு உக்ரேனின் நடாலியா டோபிரின்ஸ்கா 5,013 புள்ளிகளைப் பெற்றிருந்தமையே மகளிர் ஐந்தம்ச போட்டிகளில் முந்தைய உலக சாதனையாக இருந்தது. இவ்வருட ஐரோப்பிய உள்ளக விளையாட்டு …
-
- 0 replies
- 661 views
- 1 follower
-
-
கேட்ச் பிடிக்க முற்படாத தோனி: நெஹ்ராவின் இரு அனுபவம் ஸ்லிப் திசையிலோ அல்லது லெக் திசையிலோ ஓரளவுக்கு தள்ளி கேட்ச் சென்றால் அதனை பிடிக்க விக்கெட் கீப்பர் தோனி சில காலங்களாக முயற்சி எடுப்பதில்லை. இந்தியாவின் தலைசிறந்த விக்கெட் கீப்பரான தோனி சில வேளைகளில் அத்தகைய கேட்ச்களை அருமையாக பிடித்த தருணங்களும் உண்டு. ஆனால் சமீப காலங்களில் அவர் அத்தகைய முயற்சிகளில் ஈடுபடுவதில்லை. இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்களில் முதலில் 8-0 என்று இரு அணிகளுக்கு எதிராக உதை வாங்கிய போதும் சரி, அதன் பிறகு சமீபத்தில் இங்கிலாந்து தொடரில் 3-1 என்று இந்திய அணி டெஸ்ட் தொடரில் தோல்வி தழுவிய போதும் சரி, ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டித் தொடரில் பாதியிலேயே ஓய்வு அறிவித்த தோனி பல கேட்ச்…
-
- 1 reply
- 483 views
-
-
பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் ஞாயிறன்று ஆரம்பம்: ஒற்றையர் சம்பியன்களுக்கான பணப்பரிசு 26 கோடி ரூபா உலக டென்னிஸ் அரங்கில் வருடாந்தம் நடத்தப்படும் நான்கு மாபெரும் டென்னிஸ் (கிராண்ட் ஸ்லாம்) போட்டிகளில் இரண்டாவதான பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டி பாரிஸில் அமைந்துள்ள றோலண்ட் கெரொஸ் டென்னிஸ் அரங்குகளில் நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகின்றது. வருடத்தில் ஜனவரி மாதம் மெல்பேர்னில் நடைபெறும் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டிகளைத் தொடர்ந்து இரண்டாவதாக நடைபெறும் களிமண்தரை டென்னிஸ் போட்டியான பிரெஞ்சு பகிரங்க போட்டி இம்மாதம் 24ஆம் திகதி ஆரம்பமாகி ஜூன் 7ஆம் திகதி நிறைவடையவுள்ளது. இப்போட்டிகள் 1925 முதல் 1967 வரை சாதாரண பிரெஞ்…
-
- 26 replies
- 1.6k views
-
-
விதிமுறைப்படி கிரிக்கெட் விளையாட்டுக்கு விக்கெட் கீப்பர் தேவையில்லை...! இங்கிலாந்தில் நார்தாம்ப்டன்ஷைர் அணிக்கு எதிரான போட்டியின் போது வொர்செஸ்டர்ஷைர் அணி கடைசி நேரத்தில் விக்கெட் கீப்பர் இல்லாமல் ஆடி வியக்க வைத்தது. நாட்வெஸ்ட் டி20 போட்டியில் நடந்த ஆட்டத்தில் நார்தாம்ப்டன்ஷைர்- வொர்செஸ்டர்ஷைர் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த வொர்செஸ்டர்ஷைர் அணி அதிரடியாக விளையாடி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்களை குவித்தது. பின்னர் விளையாடிய நார்தாம்ப்டன்ஷைர் இலக்கினை வேகமாக விரட்டினர். அந்த அணி 15 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 145 ஓட்டங்கள் எடுத்திருந்தது. இதனால் நார்தம்டன்ஷைர் அணி வெற்றி பெறும் சூழல் இருந்தது. இந்த சமயத்தில்தான் வொர்செஸ்டர்ஷைர் அணி …
-
- 0 replies
- 248 views
-
-
திணறும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களுக்கு முரளி விஜய்யை உதாரணம் காட்டும் கவாஸ்கர் ஸ்விங் பவுலிங்கை கையாள்வதில் முரளி விஜய்யை ஆஸி.பேட்ஸ்மென்களுக்கு உதாரணம் காட்டும் சுனில் கவாஸ்கர். | கோப்பு படம். இங்கிலாந்து பிட்ச்களில் ஸ்விங் பந்து வீச்சில் ஆஸ்திரேலியா மண்ணைக் கவ்வியுள்ளது பற்றி சுனில் கவாஸ்கர் கூறும் போது முரளி விஜய்யின் உத்தியை ஆஸ்திரேலிய வீரர்கள் உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார். உலகின் அச்சமூட்டும் வேகப்பந்து வீச்சாளர்களான வெஸ்லி ஹால் தொடங்கி கிரிபித், ராபர்ட்ஸ், கார்னர், கிராப்ட், ஹோல்டிங் மார்ஷல், இங்கிலாந்தின் ஜான் ஸ்னோ, பாப் விலிஸ், கிறிஸ் ஓல்ட், போத்தம், நியூஸிலாந்தின் ரிச்சர்ட் ஹேட்லி, ஆஸ்திரேலியாவில் தாம்சன். லில்லி, லென் பாஸ்கோ, பாகிஸ்தானின் இம்ரான்,…
-
- 0 replies
- 279 views
-
-
கிரிக்கெட்டை தொடர்ந்து ஆகாயத்திலும் தோனி ராஜ்யம் !( வீடியோ) இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி, விமானத்தில் இருந்து பாராசூட்டில் குதிக்க பயிற்சி பெற்று வருகிறார். இதற்காக ஆக்ராவில் உள்ள பாராட்ரூப்பர்ஸ் பயிற்சி மையத்தில் அவர் பிரத்யேக பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில் இன்று அவர் முதல் முறையாக, பறக்கும் விமானத்தில் இருந்து பாராசூட்டில் தரையிறங்கி சாகசம் செய்தார். இதற்காக ஏ.என். 32 ரக ராணுவ விமானத்தில், 10 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து தரையை நோக்கி குதித்தார். தரையில் இருந்து ஆயிரத்து 250 அடி உயரத்தில், அவர் பாராசூட்டை இயக்கி மிக நேர்த்தியாக தரையிறங்கினார். தோனியுடன் சில ராணுவ வீரர்களும் பாராசூட்டில் தரையிறங்கினர். இது போன்று இன்னும் 4 முறை அவர் பாராசூட்டில் …
-
- 1 reply
- 721 views
-
-
வலைப்பயிற்சியில் பெரிய ஷாட்களை ஆடிய தோனி: பேட்டிங்கில் 4-ம் நிலையில் இறங்குகிறார்? பெங்களூரு பயிற்சி முகாமில் வலைப்பயிற்சியில் பெரிய ஷாட்களை ஆடிய தோனி. | படம்: பிடிஐ. ஆக்ரோஷமான ஷாட்டை ஆடும் தோனி. | படம்: பிடிஐ தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான சவாலான நீண்ட தொடரை அடுத்து பெங்களூருவில் தயாரிப்பு முகாம் நடைபெற்று வருகிறது. ஷிகர் தவண், தோனி, மொகமது ஷமி ஆகியோர் வலைப்பயிற்சியில் நீண்ட நேரம் ஈடுபட்டு கடுமையான பயிற்சி மேற்கொண்டனர். புதன் கிழமையன்று வலைப்பயிற்சியில் ஈடுபட்ட இந்திய ஒருநாள் அணி கேப்டன் அடுத்தடுத்து பெரிய பெரிய ஷாட்களை ஆடினார். ரவிசாஸ்திரி அவரது ஆட்டத்தை தீவிரமாக பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு நீண்ட நேரம் தோனியுடன் ரவிசாஸ்திரி உரையாடினார். இத்தனையாண்டுகளாக ஒ…
-
- 70 replies
- 7.5k views
-
-
கிரிக்கெட் விதிகளில் மாற்றம் கிரிக்கெட்டில் களத்தடுப்புச் சம்பந்தமான விதியொன்றில் மாற்றமொன்றை ஏற்படுத்தியுள்ள , கிரிக்கெட் விதிகளுக்குப் பொறுப்பான அமைப்பான மெரில்லிபோன் கிரிக்கெட் கழகம் (எம்.சி.சி) அறிவித்துள்ளது. இதன்படி, துடுப்பாட்ட வீரரொருவர் தான் பந்தை அடிக்கப் போகும் திசை குறித்துத் தெளிவான சமிக்ஞைகளை மேற்கொண்டால், விக்கெட் காப்பாளர் தவிர்ந்த ஏனைய களத்தடுப்பாளர்கள், பந்துசெல்லவுள்ள திசையை நோக்கிக் கணிசமானளவு நகர முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு, பாகிஸ்தானுக்கெதிரான போட்டியில் அவுஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித், பாவட் அலாமின் பிடியொன்றைப் பிடித்த போது, இது தொடர்பான விவாதம் ஏற்பட்டு, சர்வதேச கிரிக்கெட் விளையாடும் நடைமுறைகளில் இம்மாற்றம் ஏற்பட்டது. அதுவே, தற்…
-
- 0 replies
- 296 views
-
-
யூரோ 2016 : பலம் வாய்ந்த நெதர்லாந்து அணி அதிர்ச்சியுடன் வெளியேற்றம்! பிரான்சில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டிக்கு நெதர்லாந்து அணி தகுதி பெறவில்லை. நேற்று செக் குடியரசு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததையடுத்து, நெதர்லாந்தின் யூரோ கனவு முடிவுக்கு வந்தது. தகுதி சுற்றில் ' ஏ ' பிரிவில் இடம் பெற்றிருந்த நெதர்லாந்து அணி செக்குடியரசு அணியை எதிர்கொண்டது. இதே பிரிவில் இடம் பெற்றிருந்த துருக்கி அணி மற்றொரு ஆட்டத்தில் ஐஸ்லாந்து அணியை சந்தித்தது. நெதர்லாந்து அணி 13 புள்ளிகளையும் துருக்கி அணி 15 புள்ளிகளும் பெற்றிருந்தன. 10வது ஆட்டமான நேற்றைய ஆட்டத்தில், நெதர்லாந்து அணி வெற்றி பெற்று துருக்கி அணி தோல்வியடைந்தால் நெதர்லாந்…
-
- 1 reply
- 239 views
-
-
இலங்கை அணியின் வேக பந்து வீச்சாளர் லசித் மாலிங்க அவுஸ்திரேயாவிற்கு குடிபெயரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் ஏற்கனவே அவுஸ்திரேலியாவில் நிரந்தர குடியுரிமையை பெற்றுள்ளதாக சர்வதேச விளையாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய எதிர்வரும் பங்களாதேஸ் அணியுடனான தொடரின் பின்னர் தமது குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவிற்கு குடிபெயரவுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. தற்போது லசித் மாலிங்க அவுஸ்திரேலியாவில் தங்கியுள்ள நிலையில்,பங்களாதேஸ் உடனான தொடரில் பங்கேற்பதற்காக நாளைய தினம் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,அவுஸ்திரேலியாவிற்கு குடிபெயரவுள்ள அவருக்கு அங்கு பயிற்றுவிப்பாளர் பதவியும் வழங்கப்படவுள்ளதாக சர்வதேச விளையாட்டு தகவல்கள் மேலும் தெரிவிக்கின்…
-
- 2 replies
- 623 views
-
-
(நெவில் அன்தனி) அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் கடைசி அம்சமான மெய்வல்லுநர் போட்டிகளில் வடக்கு மற்றும் மத்திய மாகாண பாடசாலைகள் பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளன. கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மெய்வல்லுநர் போட்டிகள் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்றுவருகின்றது. 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் மன்னார், தோட்டவெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வீராங்கனை ஏ. யதுர்ஷிகா 37.39 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழா மெய்வல்லுநர் போட்டியில் மன்னார் மாவட்ட பாடசாலைகள் சார்பாக வீராங்கனை ஒருவர் பதக்கம் வென்றது இதுவே முதல் தடவையாகும். …
-
- 1 reply
- 443 views
- 1 follower
-
-
தமிழீழ தேசிய மாவீரர்கள் நினைவாக பிரான்சில் ஈழத்தமிழர் விளையாட்டுச்சம்மேளனத்தின் அனுசரணையுடன் தமிழர் விளையாட்டுத்துறை கடந்த 11ம் நாள் மார்ச் மாதம் Stade Chemin du Marais du Souci மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்டு நான்காவது வாரமாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. விடுதலையையும், எமது எதிர்கால சந்ததி சந்தோசமாகவும், நிம்மதியாகவும் வாழ தம் இனிய உயிர்களை உவந்தளித்த எம் இதயக்கோயில்களான மாவீரர்கள் நினைவாக நடாத்தப்படும் இவ் உதைபந்தாட்டப்போட்டியில் 2012 ம் ஆண்டு பங்குகொண்ட விளையாட்டுக்கழகங்கள் அ பரிவில் ஈழவர் விளையாட்டுக்கழகம் ,பாரதி வி. ஃ கழகம் ,வட்டுக்கோட்டை வி. கழகம் ஃ பாசையூர் சென் அன்ரனி வி.கழகம், ஃ குருநகர் பாடுமீன்கள் வி.கழகம் ஃ நாவாந்துறை ஐக்கிய வி.கழகம், ஃ ந…
-
- 8 replies
- 1k views
-
-
அம்மாடியோவ்... 50 ஓவரில் 485 ரன்கள்! - இளம் இந்திய அணி அசத்தல் ஆட்டம்! ஆஸ்திரேலிய அணியின் தொடர் வெற்றிகளை தடுத்து நிறுத்தி, அதன் மண்ணிலேயே அந்த அணியை 329 ரன்களை சேஸ் செய்தது, 6 இந்திய வீரர்கள் சென்சுரி அடித்தது உள்ளிட்ட பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது சீனியர் அணி. அதே போல இன்று 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியும் மெகா சாதனை நிகழ்த்தியிருக்கிறது. யுவராஜ் , விராட் கோலி என பல வீரர்கள் இந்திய அணியில் நுழைந்தது 19 வயதுக்குட்பட்டோருக்கான உலககோப்பையில் பிரகாசித்ததன் மூலம்தான். தற்போது 19 வயதுக்குட்பட்ட இந்திய அணிக்கு பயிற்சியாளராக டிராவிட் இருக்கிறார். வருங்காலத்தில் சீனியர் இந்திய அணி, உலக அரங்கில் ஜொலிக்க வேண்டும் என்பதற்காக இப்போதே இளம் வீரர்களை பட்டை தீட…
-
- 0 replies
- 608 views
-
-
இந்தியா - பாகிஸ்தான் போட்டி சந்தேகத்தில் உலக இருபதுக்கு-20 தொடரில், இந்திய அணிக்கும் பாகிஸ்தான் அணிக்குமிடையில், தர்மசாலாவில் இடம்பெறத் திட்டமிடப்பட்டுள்ள போட்டி, அங்கு இடம்பெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்திய மத்திய அரசாங்கத்துக்கு, ஹிமாச்சலப் பிரதேச முதலமைச்சர் எழுதியுள்ளதாகக் கூறப்படும் கடிதத்தாலேயே இச்சந்தேகம் எழுந்துள்ளது. பதன்கொட் விமானத் தரிப்புப் பகுதியில், பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களெனக் கருதப்படும் ஆயுததாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையடுத்து, தர்மசாலாவில் அப்போட்டி இடம்பெறக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார். பதன்கொட் தாக்குதல் போல பல பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், ஹிமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந…
-
- 0 replies
- 372 views
-