விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
ஒலிம்பிக் தகுதிகாண் போட்டிகளிலிருந்து விலகினார் போல்ட் 100 மீற்றர் அரையிறுதிப் போட்டிகளைத் தொடர்ந்து, ஜமைக்கா தேசிய ஒலிம்பிக் தகுதிகாண் போட்டிகளிலிருந்து, பின் தொடைத் தசைநார் கிழிவு காரணமாக உசைன் போல்ட் விலகியுள்ளார். கிங்ஸ்டனிலுள்ள தேசிய அரங்கில் இடம்பெற்ற அரையிறுதிப் போட்டியில், மெதுவான ஆரம்பத்தைப் பெற்றிருந்தாலும் 10.04 செக்கன்களில் போட்டித் தூரத்தை நிறைவு செய்து போல்ட் வென்றிருந்தார். முதல் சுற்று முடிவிலும் அரையிறுதிப் போட்டியிலும் பின் தொடைத் தசைநார் காயத்தை உணர்ந்ததாகவும், தேசிய சம்பியன்ஷிப் தலைமை மருத்துவரால் சோதிக்கப்பட்டதாகவும், தரம் ஒன்று வகையான காயத்தை கொண்டிருப்பதாகவும் டுவீட் பதிவொன்றில் போல்ட் தெரிவித்துள்ளார். …
-
- 1 reply
- 434 views
-
-
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா வெற்றியை கொண்டாடும் இந்திய வீரர்கள் | படம்: Cricket World Cup ட்விட்டர் பக்கத்திலிருந்து 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதியில் 203 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்தது இந்திய அணி. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நியூஸிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதன் 2-வது அரை இறுதியில் கிறிஸ்ட்சர்ச் நகரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பிரித்வீ…
-
- 1 reply
- 312 views
-
-
''காலி மைதானத்தை இழக்க முடியாது ; பாதுகாக்க வேண்டிய பொறுப்பு கிரிக்கெட் நிர்வாகத்திற்குண்டு" உலக மரபுரிமை இடத்தை பாதுகாப்பது மட்டுமல்லாது காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை தொடர்ந்தும் பயன்படுத்த சரியான செயற்திட்டத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் கிரிக்கெட் நிர்வாகம் எடுக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவரும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவரும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய பிரச்ச…
-
- 1 reply
- 438 views
-
-
மொனாகோவை வீழ்த்தி தொடர்ந்து 4-வது முறையாக சாம்பியன் ஆனது பி.எஸ்.ஜி. பிரான்ஸ் கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையிலான லீக் கோப்பைக்கான இறுதிப் போட்டியில் மொனாகோவை வீழ்த்தி 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது பி.எஸ்.ஜி. பிரான்ஸ் நாட்டில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் நடைபெறும் தொடர் லீக் 1. இந்த தொடரின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இறுதிப் போட்டிக்கு தொடர்ந்து மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியும், மொனாகோ அணியும் பலப்பரீட்சை நடத்தின. …
-
- 1 reply
- 368 views
-
-
இந்தியாவின் கப்பா வெற்றி முதல் விராட் கோலியின் கேப்டன் பதவி வரை - இந்திய கிரிக்கெட்டின் முக்கிய நிகழ்வுகள் 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிசிசிஐ கொரோனாவின் இரண்டாவது அலை உலகை புரட்டிப் போட்டுக் கொண்டிருந்த 2021ஆம் ஆண்டில், விராட் கோலியை உள்ளடக்கிய இந்திய கிரிக்கெட் அணி பல்வேறு ஏற்ற இறக்கங்களைக் கண்டது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்திய அணியின் டெஸ்ட், ஒருநாள், டி20, என மூன்று ஃபார்மெட்டுக்கும் தலைவராக இருந்த விராட் கோலி தற்போது டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமே தலைவராக உள்ளார். இப்படி இந்த ஆண்டில் நடந்த பல முக்கிய நிகழ்வுகள், வெற்றிகள், தோல்விகள், பதவி விலகல் ஆ…
-
- 1 reply
- 347 views
- 1 follower
-
-
சச்சித்ர சேனநாயக்க பந்துவீசுவதற்கு ஐ.சி.சி. தடை 2014-07-12 19:50:00 இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் சச்சித்ர சேனநாயக்கவின் பந்துவீச்சுப்பாணி விதிகளுக்கு முரணானது என சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது. அதனால் சர்வதேச போட்டிகளில் அவர் பந்துவீசுவதற்கு உடனடியாக அமலுக்கு வரும் வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.சி.சி. அறிவித்துள்ளது. பிரிட்டனின் கர்டிவ் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையைடுத்து அவர் அனுமதிக்கப்பட்ட சச்சித்ரவுக்கு இத்தடை விதிக்கப்பட்டுள்ளது. 29 வயதான சச்சித்ர சேனநாயக்க 37 சர்வதேச போட்டிகளில் 40 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். கடந்த மே மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற இங்கிலாந்துடனான இரண்டாவது போட்டியில் அவர் 13 ஓட்டங்களு…
-
- 1 reply
- 448 views
-
-
ஐசிசி ஒருநாள் தரவரிசை: டாப் 10-ல் கோலி, தவன், தோனி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள புதிய ஒருநாள் பேட்ஸ்மென் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர்கள் விராட் கோலி மற்றும் ஷிகர் தவன் முறையே 4 மற்றும் 6-வது இடங்களைப் பெற்றுள்ளனர். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நிறைவுபெற்றதைத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், புதிய ஒருநாள் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மென்களுக்கான பட்டியலில் விராட் கோலி 4-வது இடத்திலுள்ளார். உலகக் கோப்பைக்கு முன்னாலும் அவர் 4-வது இடத்தில்தான் இருந்தார். மற்றொரு இந்திய வீரர் ஷிகர் தவன், 6-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார். இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி 8-வது இடத்தில் உள்ளார். இவர்களைத் தவிர, உலகக் கோப்பைய…
-
- 1 reply
- 414 views
-
-
கட்டுக்கடங்காத கிறிஸ் கெயில்: 62 பந்துகளில் 151 ரன்கள் டாண்டன் மைதானத்தில் ஞாயிறன்று நடைபெற்ற நாட்வெஸ்ட் டி20 பிளாஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கெண்ட் அணிக்கு எதிராக கிறிஸ் கெயில் 62 பந்துகளில் 151 ரன்கள் விளாசித் தள்ளினார். இதில் வேடிக்கை என்னவெனில் கெண்ட் அணியின் 227 ரன்கள் இலக்கை துரத்திய போது சோமர்செட் அணிக்காக கெயில் இந்த இன்னிங்சை ஆடி கடைசி வரை நாட் அவுட்டாக இருந்தும் 3 ரன்கள் வித்தியாசத்தில் சோமர்செட் அணி தோல்வி தழுவியது. கெயில் 10 பவுண்டரிகள் 15 சிக்சர்களை விளாசினார். இப்படி அடித்தும் கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது. கெயிலிடம் ஸ்ட்ரைக் வரவில்லை. 2 பந்துகள் கழித்தே கெயிலுக்கு ஸ்ட்ரைக் கிடைத்தது. முன்பாக சொஹைல் தன்வீர் ஆட்டமிழந்தார். கெயில் ஸ்ட்ரைக்கு வ…
-
- 1 reply
- 406 views
-
-
http://www.youtube.com/watch?v=Uiuad61vkzk இந்த 'கோல்' ஏற்றுக்கொள்ளப்படவில்லை. காரணம், அன்னை இயற்கை செய்த கோலம்
-
- 1 reply
- 707 views
-
-
அஸ்வினின் வரலாற்று சாதனையை சமன் செய்த பும்ரா இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா, சமீபத்திய ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய பந்து வீச்சாளராக அதிக புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார். இதன்படி இதுவரை ஒரு இந்திய பவுலர் வைத்திருந்த அதிகபட்ச புள்ளிமதிப்பீடான அஸ்வினின் சாதனையை ஜஸ்பிரித் பும்ரா சமன்செய்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்டால் அஸ்வினின் ஆல்டைம் சாதனையை முறியடிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது ஐசிசி தரவரிசை பட்டியலில் செய்யப்பட்ட அப்டேட்டின் படி, இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 904 புள்ளிகளை பெற்று முதலிடம் பிடித்துள்ளார். பிரிஸ்பேனில் நடைபெற்ற டெஸ்ட் …
-
- 1 reply
- 389 views
- 1 follower
-
-
“ 35 ” ஐ எட்டிப்பிடிக்கும் மலிங்க - முற்றுப்புள்ளி வைப்பாரா? தொடர்வாரா? தலை முடியில் ஆங்காங்கே பொன்னிறமும் கறுப்பு நிறம் கலந்த முடியுடன் சிங்கத்தைப் போன்ற பார்வையுடன் இலக்கை நேக்கிப் பார்த்தபடி எதிரணியை திணறடிக்கும் நோக்குடன் ஓடிவரும் யோக்கர் மன்னன் லசித் மலிங்க இலங்கை கிரிக்கெட் அணிக்கு கிடைத்த வரம். வேகப்பந்து வீச்சாளர்களுக்கே உரிய ஆக்ரோஷமான வேகமும், பந்து வீச்சில் வேறெந்த பந்து வீச்சாளர்களும் கையாண்டிராத வித்தியாசமான பாணியும், தனது யோக்கர் பந்து வீச்சின் மூலம் தலைசிறந்த துடுப்பாட்டக்காரர்களுக்கு கிரிக்கெட்டில் அச்சுறுத்தலாக விளங்கிய இலங்கை அணியின் இருபதுக்கு 20 போட்டிகளின் முன்னாள் தலைவரும் இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத்தை இலங்கைக்…
-
- 1 reply
- 709 views
-
-
கோடி ரசிகர்களின் கரவோசம் வான்பிளக்க.. தனது பாரமான துடுப்பினை உயர்தியபடி சச்சின் வருகிறார். அது பிடரி மயிர் சிலிர்க்க சிங்கம் ஒன்று கம்பீரமாக நடந்துவருவது போலிருக்கும். சுருண்ட குட்டை முடி காற்றில் பறக்க, தனது கரகரத்த குரலில் நன்றி சொல்லிக் கொண்டிருப்பார். உறையாத அந்தக் கணத்தினை தொலைக்காட்சிகள் திரும்ப திரும்ப ஒளிபரப்பிக் கொண்டிருக்கும். அப்பாவும் அவர் நண்பர்களும் 16 வயசு சிறுவனின் பழம் பெருமைகள் பேசிக் கொண்டிருப்பார்கள். நாங்களோ சச்சின் உச்சமாக இருந்த தொன்னூறுகளின் இறுதியையும் , இரண்டாயிரத்தின் தொடக்கங்களையும் பெருமை பொங்க உரையாடிக் கொண்டிருப்போம். சித்தியின் பெடியனுக்கோ சச்சின் குறியீடாகி எல்லைகளை கடந்தவராக பாடக் கொப்பியின் முன்னட்டையில் உறைந்திருப்பார். நான் விர…
-
- 1 reply
- 770 views
-
-
இலங்கை அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக நிக் லீ இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தேசிய பயிற்றுவிப்பாளராக நிக் லீ தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அவர் பதவியை பொறுப்பேற்பார் எனவும் இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. http://www.virakesari.lk/article/11758
-
- 1 reply
- 483 views
-
-
மைலோ வெற்றிக்கிண்ண மாவட்டமட்ட உதைபந்தாட்டம் ஆரம்பம்-முதல் போட்டியில் பாசையூர் சென் அன்ரனிஸ் அபார வெற்றி மைலோ வெற்றிக்கிண்ணத்துக்கான யாழ்மாவட்டரீதியான உதைபந்தாட்டபோட்டிகள் இன்று ஆரம்பமா கின. குறித்த போட்டியானது இன்று காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பமானது.தொடரின் முதலாவது போட்டியில் மருதங்கேணி சென் .செபஸ்டியன்,பாசையூர் சென் அன்ர னிஸ் அணிகள் மோதிக்கொண்டன. போட்டியின் ஆரம்பநிமிடத்தில் இருந்து இறுதிவரை சென்.அன்ரனிஸ் அணியினரே ஆதிக்கம் செலுத்தி இருந்தனர். போட்டியின் 16ஆவது நிமிடத்தில் சென். அன்ரனிஸ் அணிசார்பாக கலிஸ்ரஸ் முதலாவது கோலினை போட்டு அணியினை வலுப்படுத்தினார்.தொடர்ந்தும்…
-
- 1 reply
- 299 views
-
-
தோனியிடம் புதுமையும் இல்லை முனைப்பும் இல்லை: ஹோல்டிங் டெஸ்ட் போட்டிகளில் தோனியின் கேப்டன்சியில் புதுமையும் இல்லை, தன்முனைப்பும் இல்லை என்று மே.இ.தீவுகளின் முன்னால் வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் ஹோல்டிங் சாடியுள்ளார். இந்திய ஒருநாள் போட்டி அணியை கேப்டன்சி செய்வது “அவ்வளவு கடினமான வேலையல்ல” என்று தான் உணர்வதாக ஹோல்டிங் தெரிவித்தார். "ஒருநாள் போட்டிகளில் தோனிக்குப் பிரச்சினை இல்லை, கடினமும் இல்லை, ஆனால் டெஸ்ட் போட்டிகளில் அவரிடம் புதுமையும் இல்லை தன்முனைப்பும் இல்லை. ஒருநாள் அணியை கேப்டன்சி செய்வது கடினமல்ல. எனவே இந்த உலகக் கோப்பையில் இந்தியா நன்றாக ஆடும் என்பதில் ஐயமில்லை. நாம் தோனியை மட்டும் ஏன் கூற வேண்டும், நிறைய சமகால இளஜ் வீரர்கள் குறைந்த ஓவர் கிரிக்கெட் போட்…
-
- 1 reply
- 551 views
-
-
பாகிஸ்தான் கிரிக்கெட் நடுவருக்கு சிவசேனா மிரட்டல்! பாகிஸ்தானை சேர்ந்த, கிரிக்கெட் நடுவர் அலிம் தார் உடனடியாக இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டுமென சிவசேனாவினர் மிரட்டல் விடுத்துள்ளனர். மும்பை பி.சி.சி.ஐ தலைமை அலுவலகத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் சேஷாங் மனோகரை சந்தித்து பேச இருந்தார். இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கிடையே கிரிக்கெட் தொடர் நடத்துவது இருவரும் பேச இருந்தனர். இவர்களது பேச்சுவார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவித்த சிவசேனாவினர் பி.சி.சி.ஐ அலுவலகத்துக்குள் புகுந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில்தற்போது நடைபெற்று வரும் இந்திய தென்ஆப்ரிக்க அணிகளுக்கி…
-
- 1 reply
- 358 views
-
-
உலகின் நம்பர் 1 அணி என்று ஆஸி. நிரூபித்து விட்டது: பிரியாவிடை பேச்சில் பிரெண்டன் மெக்கல்லம் கடைசி முறையாக நியூஸிலாந்து அணியை வழிநடத்திச் செல்லும் மெக்கல்லம். | படம்: ஏ.பி. நியூஸிலாந்து கேப்டனும் அதிரடி வீரருமான பிரெண்டன் மெக்கல்லம்மின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை புதன்கிழமையுடன் முடிவுக்கு வந்தது. 101 டெஸ்ட் போட்டிகளில் 6,453 ரன்களை 38.64 என்ற சராசரியின் கீழ் எடுத்துள்ள மெக்கல்லம், அதிகபட்ச ஸ்கோராக 302 ரன்களை இந்தியாவுக்கு எதிராக எடுத்தார். இதில் 12 சதங்கள், 31 அரைசதங்கள் அடங்கும். இந்த ரன்களில் 776 பவுண்டரிகளையும் 107 சிக்சர்களையும் சாதித்துள்ளார் மெக்கல்லம். 198 கேட்ச்களை பிடித்ததோடு 11 ஸ்டம்பிங்குகளையும் செய்துள்ளார். 2004-ம் ஆண…
-
- 1 reply
- 436 views
-
-
'11 முதல் 15 வயதுவரை கால்பந்து பயிற்றுநரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டேன்' - இங்கிலாந்தின் முன்னாள் கால்பந்தாட்ட நட்சத்திரம் போல் ஸ்டுவர்ட் தெரிவிப்பு இங்கிலாந்தின் பிரபல முன்னாள் கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவரான போல் ஸ்டுவர்ட், தனது சிறு பருவத்தில் கால்பந்தாட்டப் பயிற்றுநர் ஒருவரால் 4 வருட காலம் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார். போல் ஸ்டுவர்ட் 1981 முதல் 2000 ஆம் ஆண்டு வரை இங்கிலாந்தின் புகழ்பெற்ற கால்பந்தாட்டக் கழகங்களின் சார்பில் விளையாடியவர் போல் ஸ்டுவர்ட். மன்செஸ்டர் யுனைடெட், லிவர்பூல், டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பு…
-
- 1 reply
- 408 views
-
-
வென்றது பரிஸ் ஸா ஜெர்மைன் பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லீக் 1 கால்பந்தாட்டத் தொடரில், தமது மைதானத்தில் நேற்று இடம்பெற்ற ஸ்ராஸ்பேர்க் அணியுடனான போட்டியில் 5-2 என்ற கோல் கணக்கில் பரிஸ் ஸா ஜெர்மைன் வென்றது. பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாக, எடின்சன் கவானி இரண்டு கோல்களையும் ஜூலியன் ட்ரெக்ஸ்லர், நேமர், அஞ்சல் டி மரியா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர். ஸ்ராஸ்பேர்க் சார்பாக, ஜீன் யூட்ஸ் அஹொலெள, ஸ்டெபனே பஹொகென் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். ஐபாரை வென்றது பார்சிலோனா ஸ்பானிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், நேற்று இடம்பெற்ற போட்டிக…
-
- 1 reply
- 338 views
-
-
... சர்வதேச தடகள போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்தியர் ஹிமா தாஸ்.. 20 வயதுக்கு உட்பட்டோருக்கான தடகள போட்டிகளில் 400 மீட்டர் பிரிவில் தங்கம் வென்றார்
-
- 1 reply
- 649 views
-
-
சிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு இலஞ்சம் வழங்கியதா பாகிஸ்தான்? தங்கள் நாட்டில் வந்து விளையாடியதற்காக சிம்பாப்வே கிரிக்கெட் வீரர்களுக்கு தலா 8 இலட்சம் ரூபாவை ஊக்கத்தொகையாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வழங்கியிருப்பது தெரியவந்துள்ளது. சிம்பாப்வே கிரிக்கெட் அணி கடந்த மாதம் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு 20 ஓவர் போட்டி மற்றும் மூன்று ஒரு நாள் ஆட்டங்களில் விளையாடியது. இரு தொடரையும் பாகிஸ்தான் கைப்பற்றியது. 2009-ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தானுக்கு சென்றிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தீவிரவாதிகள் நேரடி தாக்குதல் நடத்திய சம்பவத்தை தொடர்ந்து, அங்கு முன்னணி அணிகள் செல்வதை தவிர்த்து வருகின்றன. பாதுகாப்பு அச…
-
- 1 reply
- 260 views
-
-
லாகூரில் வேண்டாம்: இலங்கை அணி கோரிக்கை பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவதும் கடைசியுமான இ20 போட்டியை பாகிஸ்தானின் லாகூரில் நடத்த வேண்டாம் என இலங்கையின் நாற்பது வீரர்கள் கடிதம் மூலம் இலங்கை கிரிக்கெட் சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒக்டோபர் 29ஆம் திகதி லாகூர் கடாபி விளையாட்டரங்கில் நடைபெற ஏற்பாடாகியுள்ள இந்தப் போட்டியில் விளையாட, இலங்கை அணியை அனுப்பச் சம்மதிப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்திருந்தது. எனினும், கிரிக்கெட் வீரர்களின் இந்தக் கோரிக்கையால், போட்டியை லாகூரில் நடத்துவது குறித்து இலங்கை கிரிக்கெட் சபை கலந்துரையாடி முடிவெடுக்கவுள்ளது. திங்களன்று இலங்கை கிரிக்கெட் சபை இது குறித்த தனது முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறத…
-
- 1 reply
- 567 views
-
-
பிசிசிஐ ஆலோசனை குழுவில் சச்சின், சவுரவ் கங்குலி, லஷ்மண் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆலோசனைக் குழுவில் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, வி.வி.எஸ்.லஷ்மண் ஆகிய முன்னாள் வீர்ர்கள் சேர்க்கப்பட்டனர். கிரிக்கெட் தொடர்பான அனைத்து முடிவு எடுக்கும் தீர்மானங்களிலும் இனி இந்த மூவர் கூட்டணியின் ஆலோசனையும், வழிகாட்டுதலும் இருக்கும் என்று பிசிசிஐ செயலர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். பிசிசிஐ தலைவர் ஜக்மோகன் டால்மியா, செயலர் அனுராக் தாக்கூர் ஆகியோர் கிரிக்கெட் குறித்த மிக முக்கியமான முடிவுகள் அனைத்திலும் இவர்களை ஆலோசித்தே முடிவு எடுப்பார்கள் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%…
-
- 1 reply
- 335 views
-
-
உலகின் முதல்நிலை வீரராக வில்லியம்ஸன் நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான தொடரைத் தொடர்ந்து, சர்வதேச கிரிக்கெட் சபையால் வெளியிடப்பட்டுள்ள டெஸ்ட் வீரர்களுக்கான தரப்படுத்தலில், துடுப்பாட்டத் தரப்படுத்தலின் முதலிடத்தை, நியூசிலாந்தின் கேன் வில்லியம்ஸன் பெற்றுக் கொண்டுள்ளார். போட்டியின் முடிவில் கருத்துத் தெரிவித்திருந்த நியூசிலாந்துத் தலைவர் பிரென்டன் மக்கலம், 'அரசர்" என வில்லிம்ஸனை வர்ணித்திருந்தார். அதை ஏற்றுக் கொள்வது போல, சிறிதுநேரத்தில் வெளியான தரப்படுத்தலில், உலகின் முதல்நிலை வீரராக வில்லிம்ஸன் அறிவிக்கப்பட்டார். முதலிடத்தில் ஜோ றூட், இரண்டாமிடத்துக்குத் தள்ளப்பட்டார். புதிய தரப்படுத்தலின்படி, கேன் வில்லியம்ஸன், ஜோ றூட், …
-
- 1 reply
- 563 views
-
-
உலக கோப்பை கால்பந்து: டென்மார்க் அணி தகுதி உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் டென்மார்க் அணி, அயர்லாந்தை வீழ்த்தி உலக கோப்பைக்கு தகுதி பெற்றது. உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு ரஷியாவில் நடக்கிறது. டுப்ளின் நகரில் நேற்று நடந்த தகுதி சுற்று ஆட்டத்தில் டென்மார்க் 5-1 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தி உலக கோப்பைக்கு தகுதி பெற்றது. அந்த அணி 5-வது முறையாக தகுதி பெற்றது. இன்னும் 2 அணிகள் மட் டுமே தகுதி பெற வேண்டும். இன்று நடைபெறும் ஆட்டங்களில் ஆஸ்திரேலியா- ஹோண்டுராஸ், பெரு- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. …
-
- 1 reply
- 497 views
-