விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
சொன்னதைச் செய்துகாட்டிய மக்ஸ்வெல் அவுஸ்திரேலியாவின் கிளென் மக்ஸ்வெல், அதிரடியான - பல நேரங்களில் பொறுப்பற்றுவிளையாடும் - துடுப்பாட்ட வீரராக இருந்தாலும், சமூக ஊடக வலையமைப்புகளிலும் ஊடகங்களுடனான சந்திப்புகளிலும், நகைச்சுவையாகவும் எளிமையாகவும் பேசக்கூடிய ஒருவராவார். இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் நான்காவது போட்டியில், அவுஸ்திரேலியாவின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஆரொன் பின்ச், 18 பந்துகளில் அரைச்சதத்தைப் பெற்று, அவுஸ்திரேலியா சார்பாக பெறப்பட்ட வேகமான அரைச்சதம் என்ற சாதனையைச் சமப்படுத்தினார். அச்சாதனைக்கு சைமன் ஓ டொனல், கிளென் மக்ஸ்வெல் ஆகியோர் இதற்கு முன்னர் சொந்தக்காரர்க…
-
- 0 replies
- 588 views
-
-
எதிர்காலம் குறித்து அச்சம்: வான் கால் மன்செஸ்டர் யுனைட்டட் அணிக்கும் நோர்விச் சிற்றி அணிக்குமிடையிலான போட்டியில், யுனைட்டட் அணி 1-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சித் தோல்வியடைந்தமையைடுத்து, தனது எதிர்காலம் குறித்து அச்சத்தைக் கொண்டுள்ளதை, அவ்வணியின் முகாமையாளரான லூயிஸ் வான் கால் ஏற்றுக் கொண்டுள்ளார். அவரது பதவி குறித்து அச்சப்படுகிறாரா எனக் கேட்கப்பட்டபோது, 'ஆம், நிச்சயமாக, ஏனென்றால், முகாமையாளர் பதவியில் நம்பிக்கையென்பது முக்கியமானது" எனத் தெரிவித்தார். அவருக்கான மேலதிக சந்தர்ப்பம் வழங்கப்படுமா எனக் கேட்கப்பட்டபோது, 'வழங்கப்படுமென நினைக்கிறேன், ஆனால் சொல்ல முடியாது. இந்த உலகத்தில், சொல்ல முடியாது. அந்த முடிவு, என்னிடம் இல்லை, பொறுத்திருந்து பார்ப்போ…
-
- 0 replies
- 588 views
-
-
உலகமே இலங்கை கிரிக்கெட்டை போற்றிக் கொண்டிருந்த காலங்களிலும் சங்கா, மஹேலவின் ஓய்வின் பின் இலங்கை கிரிக்கெட் இல்லாமலேயே போய்விடும் என்று எழுந்த விமர்சனங்களின் போதும் ஐபிஎல் போட்டிகளில் ஒவ்வொரு தமிழ் வீரருக்கு வாய்ப்புக் கிடைக்கும் போதும் இலங்கை அணியின் ஒவ்வொரு தமிழ் ரசிகனும் ஏங்கியது, எப்போது இலங்கை அணியில் ஒரு தமிழ் வீரன் விளையாடப் போகிறான் என்பதாகத்தான் இருக்கும். 110 வருடங்களுக்கும் மேலாக யாழ் மண்ணில் வடக்கின் பெருஞ்சமர் நடைபெற்று வந்தாலும் அங்கிருந்து ஒரு வீரன் இலங்கைக்காக விளையாடுவது வெறும் கனவாகிப்போவதே வழக்கமாயிருந்தது. ஒருபுறம் நாட்டின் அசாதாரண சூழல், மூன்று தசாப்தகாலப்போர் என சில காரணங்களால் ஏ9 வீதியோடு சேர்த்து யாழ் மண்ணின் கிரிக்கெட் வீரர்களின் கனவுகளும் இ…
-
- 0 replies
- 588 views
-
-
யூரோ 2016 : போட்டி அட்டவணை வெளியீடு பிரான்சில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டிக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் போட்டியை நடத்தும் பிரான்ஸ் அணி ருமேனியாவை எதிர்கொள்கிறது. அட்டவணைக்கு க்ளிக் செய்க... இது வரையில் 16 அணிகள் மட்டுமே பங்கு பெற்று வந்த இந்த தொடரில் முதல் முறையாக 24 அணிகள் பங்கேற்கவுள்ளன. போட்டியில் இடம் பெற்றுள்ள 24 அணிகளும் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒரு பிரிவுக்கு 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. ஜுலை 6 மற்றும் 7ஆம் தேதிகளில் அரையிறுதி போட்டிகளும் ஜுலை 10ஆம் தேதி இறுதிபோட்டியும் நடைபெறுகிறது. இந்த தொடரில் ஏ பிரிவில் பிரான்ஸ், ருமேனியா, அல்பேனியா, சுவிட்சர்லாந்து அ…
-
- 2 replies
- 588 views
-
-
13 வருட உழைப்பிற்கு பலன் கிடைத்துள்ளது – கார்லி லாய்டு! உலக கால்பந்து அமைப்பான FIFA, ஒவ்வொரு வருடமும் உலகின் மிகச்சிறந்த கால்பந்து வீரர் வீராங்கனையை அறிவிக்கும். இந்த முறை இந்த நிகழ்ச்சி கோலாகலமாக, சுவிட்சர்லாந்து நாட்டின் சூரிச் நகரில் நடைபெற்றது. இதில் 2௦15-ம் ஆண்டிற்கான மிகச்சிறந்த வீரராக மெஸ்ஸியும் மிகச்சிறந்த வீராங்கனையாக கார்லி லாய்டும் அறிவிக்கப்பட்டனர். மெஸ்ஸியை அனைவருக்குமே தெரியும். யார் இந்த கார்லி லாய்டு? அமெரிக்க மகளிர் கால்பந்து அணியின் கேப்டன் இந்த 33 வயது வீராங்கனை. அணிக்காக கிட்டத்தட்ட 2௦௦ போட்டிகளில் பங்கேற்று, 70 கோல்களை அடித்துள்ளார் இவர். இதில் உலகக்கோப்பை மகளிர் கால்பந்து போட்டி, ஒலிம்பிக் போட்டி ஆகியவையும் அடங்கும். 2008, 20…
-
- 0 replies
- 587 views
-
-
மிக்கி ஆர்தர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர், தான் தற்கொலை செய்து கொள்ள விரும்பியதாக அதிர்ச்சி அளிக்கும் விதமாக பேசியுள்ளார். உலக கிண்ண கிரிக்கெட் கடந்த 30ம் திகதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் கடந்த ஜூன் 16ம் திகதி இந்திய அணி, பாகிஸ்தானுடன் மோதி அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து பாகிஸ்தான் அணி வீரர்கள் விளையாடிய விதம் ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. குறிப்பாக போட்டியின் நடுவே பாகிஸ்தான் தலைவர் சர்பிராஸ் அகமது கொட்டாவி விட்டது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர்களும், முன்னாள் வீரர்களும் கடுமையாக சர்பிராசை வி…
-
- 0 replies
- 587 views
-
-
U19 உலகக் கோப்பை: இந்திய சீனியர் அணிக்கு துருப்புசீட்டுகளா இவர்கள்? 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பை போட்டிக்கான தேர்வுதான் நேற்று முடிந்த U19 உலகக் கோப்பை என்று கூறலாம். பந்துகளை சிக்சருக்கு விரட்டும் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஒரு பேட்ஸ்மேன், புயல் வேகத்தில் ஒரு வேகப்பந்துவீச்சாளர், தெறிக்க விடும் ஒரு சுழற்பந்துவீச்சாளர் என துருப்புசீட்டுகளை கண்டுபிடித்து தந்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், U19 பயிற்சியாளருமான ராகுல் ட்ராவிட். பெரிய பேட்டிங் வரிசை...விளம்பரத்தில் வரும் வீரர்கள்... இப்படியெல்லாம் இல்லாமல், வழி நடத்தும் பயிற்சியாளர் மட்டுமே பிரபலமானவர் என்ற தகுதியுடன் களமிறங்கி…
-
- 0 replies
- 587 views
-
-
இங்கிலாந்து விஜயம் இலங்கை அணிக்கு அதிக பாடங்களையே தந்துள்ளது பாகிஸ்தான் அணியுடனான தோல்வியின் பின்னர் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறிய இலங்கை அணி, இன்று (புதன்கிழமை) நாடு திரும்பியது. நாட்டை வந்தடைந்தவுடனேயே, இலங்கை கிரிக்கெட் வாரிய தலைமையகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது. குறித்த ஊடவியலாளர் மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் திலங்க சுமதிபால, “இந்த சம்பியன்ஸ் கிண்ணத் தொடரானது, எமக்கு சிறு கவலையைத் தருகின்றது. ஏனெனில், எமது அணி அரையிறுதி வாய்ப்பினை தவறவிட…
-
- 2 replies
- 587 views
-
-
தேசிய சீனியர் கைப்பந்து - தமிழக அணி அரையிறுதிக்கு தகுதி சென்னையில் நடைபெற்ற 67-வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. தமிழ்நாடு-சர்வீசஸ் அணிகள் மோதிய ஆட்டத்தில் விறுவிறுப்பான ஒரு காட்சி. சென்னை: 67-வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. இதில் நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்த ஆண்கள் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் கேரளா அணி 25-14, 25-17, 25-23 என்ற நேர்செட்டில் ஆந்திரா அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. இன்னொரு காலிறுதியில் தமிழக அணி 2…
-
- 0 replies
- 586 views
-
-
-
பதிலடி கொடுத்து தொடரை சம நிலையில் முடித்த இந்தியா அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவதும், இறுதியுமான இருபதுக்கு 20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது. சிட்டினியில் ஆரம்பான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களின் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 164 ஓட்டங்களை பெற்றது. 165 என்ற வெற்றியிலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 19.4 ஓவரில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து, அவுஸ்திரேலிய அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்தது. இந்திய அணி சார்பாக அணித் தலைவர் விராட் கோலி 41 பந்துகளை எதிர்கொண்டு 4 நான்கு ஓட்டம், 2 ஆறு ஒட்டம் அடங்களா…
-
- 0 replies
- 586 views
-
-
பிலியந்தலை மத்திய கல்லூரி அணிக்கு எதிரான சிங்கர் U19 பாடசாலைகளுக்கு இடையிலான இரண்டு நாட்கள் கொண்ட போட்டியில் அபார பந்துவீச்சின் மூலமாக முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய அண்டன் அபிஷேக் எமது இணையத்தளத்துக்கு வழங்கிய நேர்காணல். http://www.thepapare.com/video-jaffna-st-johns-college-fast-bowler-anton-abishek-interview-tamil/
-
- 0 replies
- 586 views
-
-
ஆசிய ஆணழகனாக முடிசூடிய லூசன் புஷ்பராஜ் சுமார் 50 வருட வரலாற்றைக் கொண்ட ஆசிய ஆணகழகன் போட்டித் தொடரில் இலங்கைக்கு முதலாவது சம்பியன் பட்டத்தை வென்று கொடுத்து 2017ஆம் ஆண்டின் ஆசியாவின் சிறந்த ஆணழகனாக இலங்கையைச் சேர்ந்த லூசன் புஷ்பராஜ் இன்று மகுடம் சூடினார். ஆசிய ஆணழகன் மற்றும் உடற்தகுதி விளையாட்டு சம்மேளனத்தினால் நடாத்தப்படுகின்ற 51ஆவது ஆசிய ஆணழகன் போட்டிகள் (Asian Bodybuilding & physique Sports Championship-2017) கடந்த 20ஆம் திகதி தென்கொரியாவின் தலைநகர் சோலில் ஆரம்பமானது. இதில் இலங்கையைப் பிரிதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான 100 கிலோ கிராமிற்கு அதிகமான எடைப்பிரிவில் கலந்துகொண்ட லூசன், முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார். …
-
- 0 replies
- 586 views
-
-
வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான தடகளப் போட்டியில் 18 வயதுப் பெண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் அருணோதயாக் கல்லூரியை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கு பற்றிய தனுசங்கவி தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினர். யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்ரங்கில் இடம் பெற்ற போட்டியில் தனுசங்கவி 1.45 மீற்றர் தூரம் பாய்ந்து தங்கப்பதக்கத்தையும், புத்தகலட்டி சிறி விஸ்ணு வித்தியலய மாணவி நதீக்கா 1.45 மீற்றர் தூரம பாய்ந்து வெள்ளிப்பதக்கத்தையும், தேரங்கண்டல் அ.த.க பாடசாலை மாணவி டிசாந்தினி 1.40 மீற்றர் தூரம் பாய்ந்து வெண்கலப்பதக்கதினையும் கைப்பற்றினர். https://newuthayan.com/story/16/உயரம்-பாய்தலில்-தனுசங்கவ.html
-
- 1 reply
- 586 views
-
-
சாது மிரண்டால் காடு தாங்காது... எதிரணி வீரரின் கழுத்தை பிடித்து நெறிக்கும் மெஸ்சி! கால்பந்து களத்தில் பார்சிலோனா அணியின் துணை கேப்டன் லயனல் மெஸ்சி அமைதி போக்கையை கடைபிடிப்பவர். பெரும்பாலும் அவரது முகத்தில் கோபத்தை பார்க்க முடியாது. எதிரணி வீரர்கள் முன்கள வீரரான இவரிடம்தான் தங்களது முரட்டு ஆட்டத்தை காட்டுவார்கள். தடுப்பாட்ட வீரர்களுக்கு தண்ணி காட்டுவதில் மெஸ்சி சளைக்காதவர் என்றாலும் சில நேரங்களில் மெஸ்சிக்கே கோபத்தை வரவழைக்கும் வகையில் எதிரணி வீரர்களின் ஆட்டம் அமைந்து விடுகிறது. தற்போது பிரிசீசன் நட்புரீதியிலான ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று பார்சிலோனா அணியுடன் ஏ.எஸ். ரோமா அணி மோதியது. ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த ஆட்டத…
-
- 0 replies
- 586 views
-
-
24 NOV, 2023 | 05:48 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) பம்பலப்பிட்டி இந்து கல்லூரி மாணவனான செல்வசேகரன் ரிஷியுதன் 9.4 ஓவர்கள் பந்து வீசி ஓட்டம் எதனையும் விட்டுக்கொடுக்காமல் 8 விக்கெட்டுக்களை சாய்த்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துக்கொடுத்துள்ளார். 13 வயதுக்குட்பட்ட (ஏ) டிவிஷன் -2 கிரிக்கெட் தொடர் - 2023இன் கொழும்பு - 04 பம்பலப்பிட்டி இந்து கல்லூரி அணிக்கும், பத்தரமுல்லை ஜயவர்தன மகா வித்தியாலய அணிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டி முல்லேரியா எதிரிவீர சரத்சந்திரா விளையாட்டு மைதானத்தில் நேற்று வியாழக்கிழமை (23) நடைபெற்றது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பம்பலப்பிட்டி அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 126 ஓட்டங்களை ப…
-
- 4 replies
- 586 views
- 1 follower
-
-
கேப்டனாக கடைசி போட்டி: அதிரடி காட்டிய தோனி இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் கேப்டனாக தோனி இருக்கிறார். கேப்டனாக கடைசியாக களமிறங்கியுள்ளார் தோனி. மும்பையில் நடந்து வரும் போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய ஏ அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 304 ரன்கள் எடுத்தன. அதிகபட்சமாக ராயுடு 100 ரன்கள் எடுத்தார். தோனி 40 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். குறிப்பாக எட்டு பவுண்டரிகளும், 2 சிக்சர்களையும் பறக்க விட்டார். யுவராஜ் 48 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். யுவராஜ் ஆறு பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடித்தார். இதையடுத்து 305 ரன் என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்க உள்ளது. http://www.vikatan.com/news/sports/77…
-
- 4 replies
- 585 views
-
-
மனைவியின் உடையால் சமூக ஊடகங்களில் சர்ச்சை: கிரிக்கெட் வீரர் முகமது ஷமி ஆவேசம் 22 போட்டிகளில் ஆடியுள்ளார் முகமது ஷமி சமூக ஊடகங்களில், தனது மனைவியின் உடை குறித்து விமர்சனம் செய்தவர்களுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி ஆவேசமாகப் பதிலளித்துள்ளார். ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் தனது மனைவியின் புகைப்படத்தை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டிருந்த ஷமி, `அழகான நேரங்கள்' என வர்ணித்திருந்தார். இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் சிலர் கருத்து வெளியிட்டனர். அதில், இஸ்லாத்தைப் பின்பற்றுமாறும், அவரது மனைவி ஹிஜாப் மற்றும் நாகரீகமான உடை உடுத்துவதை உறுதிப்படுத்துமாறும் குறிப்பிட்டிருந்தனர். இதுகுறித்து, திங்கள்கிழமை கருத்து வெளியிட்டுள்ள முகமத…
-
- 0 replies
- 585 views
-
-
சென்ற வாரம் நடைபெற்ற ஜரோப்பிய தடகளப் போட்டியில் சுவிஸ் நாட்டிற்காக ஒரு தமிழர் அஞ்சல் ஓட்டத்தில் பங்குபெற்றுள்ளார். இறுதிச் சுற்றில் சில விநாடிகளால் 3ஆம் இடத்தை நழுவிட்டுள்ளார்கள். http://www.youtube.com/watch?v=RMqSS0ZlPFQ
-
- 2 replies
- 585 views
-
-
59ஆவது இராணுவ மெய்வல்லுநர் போட்டி : கோலூன்றிப் பாய்தலில் புவிதரன் புதிய தேசிய சாதனை Published By: DIGITAL DESK 7 01 APR, 2024 | 04:16 PM (நெவில் அன்தனி) கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 31) நிறைவுக்கு வந்த 59ஆவது இராணுவ மெய்வல்லுநர் போட்டியில் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் அருந்தவராசா புவிதரன் புதிய தேசிய சாதனை நிலைநாட்டி வரலாறு படைத்தார். கோலூன்றிப் பாய்தலில் 5.17 மீற்றர் உயரத்தைத் தாவியே அவர் புதிய தேசிய சாதனையை நிலைநாட்டினார். தியகம விளையாட்டரங்கில் கடந்த வருடம் சச்சின் எரங்க சனித்தினால் கோலூன்றிப் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 5.16 மீற்றர் உயரம் என்ற தேசிய சாதனையை புவிதரன் இம்முறை முற…
-
- 0 replies
- 585 views
- 1 follower
-
-
ஒலிம்பிக் ஹாக்கி காலிறுதி: ஆஸ்திரேலிய அரணை சிதறடித்த இந்திய வீராங்கனைகள் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஒலிம்பிக்கில் இந்திய பெண்கள் ஹாக்கி முதல் முறையாக அரையிறுதிக்குத் தகுதி பெற்று வரலாறு படைத்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கின் காலிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 22 - ஆவது நிமிடத்தில் இந்திய அணியின் குர்ஜித் கவுர் ஆஸ்திரேலிய கோல் கீப்பர் ரேச்சலை ஏமாற்றி கோல் அடித்தார். அதன் பிறகு ஆஸ்திரேலிய அணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இதன் மூலம் அரையிறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றது. …
-
- 1 reply
- 585 views
- 1 follower
-
-
காத்திருக்கும் சாதனைகள்: விராட் கோலிக்கு 17 ரன்; தோனிக்கு 33 இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, எம்எஸ் தோனி :கோப்புப்படம் இங்கிலாந்துத் தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, எம்எஸ் தோனி, ரோகித் சர்மா, ஆகியோர் பல்வேறு சாதனைகளைச் செய்ய வாய்ப்பு இருக்கிறது. அயர்லாந்து அணியுடன் டி20 போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கு இந்தப் போட்டி 100-வது டி20 போட்டியாகும். பல்வேறு மைல்கல்லை இந்த 100 போட்டிகளில் இந்திய அணி தோனி தலைமையிலும், கோலி தலைமையிலும் கடந்து வந்துள்ளது. இதில் டி20 உலகக்கோப்பையை தோனி தலைமையில் வென்றது இந்திய அணி என்பது முத்தாய்ப்பாகும். இங்கிலாந்து சென…
-
- 0 replies
- 585 views
-
-
அஷ்வின் vs டி வில்லியர்ஸ் - இதுவரை ஜெயிச்சது யாரு? கிரிக்கெட் உலகில், கடந்த சில ஆண்டுகளாக உலகின் அனைத்து பந்து வீச்சாளர்களுக்கும் மரண பயத்தைக் கொடுத்து வருகிறார் தென்னாப்பிரிக்க வீரர் டி வில்லியர்ஸ். ஒரு காலத்தில் சச்சின் விக்கெட்டை வீழ்த்தும் பவுலரை உலகம் எப்படி கொண்டாடியதோ, அதுபோல தற்போது டி வில்லியர்ஸின் விக்கெட்டை வீழ்த்தும் நபருக்கு பாராட்டுகள் குவிகிறது. இந்நிலையில், தென்னாப்பிரிக்கா தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டி20 மற்றும் ஒருநாள் தொடர் ஆகியவற்றை தென்னாப்பிரிக்கா கைப்பற்ற, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இத்தொடரில் இதுவரை இரண்டு டி20, ஐந்து ஒருநாள் போட்டி, மூன்று டெஸ்ட் இன்னிங்ஸ…
-
- 0 replies
- 585 views
-
-
இந்தக் காரியத்தை செய்த ஜடேஜாவை முகத்தில் குத்த வேண்டும் போல் தோன்றியது: ரோகித் சர்மா வெளியிட்ட ரகசியம் ரவிந்திர ஜடேஜா, ரோகித் சர்மா : கோப்புப்படம் குடும்பத்துடன் வெளியே சென்றிருந்த போது, ஜடேஜா செய்த காரியத்தைப் பார்த்து அவரை அடிக்க வேண்டும், முகத்தில் குத்த வேண்டும் போல் தோன்றியது என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இந்திய பேட்ஸ்மேன்களில் மிகவும் மென்மையானவர், களத்தில் அமைதியானவர், வெற்றியோ, தோல்வியோ அதையும் முகத்தில் காட்டிக்கொள்ளாதவர் என்ற பெயர் எடுத்தவர் ரோகித் சர்மா. அவரின் பேட்டிங்கில் ஆக்ரோஷமும், ஆவேசமும் இருக்…
-
- 0 replies
- 585 views
-
-
பாகிஸ்தானை வெள்ளையடித்தது அவுஸ்திரேலியா FacebookTwitter Editorial / 2019 ஏப்ரல் 01 திங்கட்கிழமை, மு.ப. 04:06Comments - 0Views - 10 பாகிஸ்தான், அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், 5-0 என பாகிஸ்தானை அவுஸ்திரேலியா வெள்ளையடித்துள்ளது. இத்தொடரின் முதல் நான்கு போட்டிகளிலும் ஏற்கெனவே வென்றிருந்த அவுஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் நேற்று இடம்பெற்ற ஐந்தாவது போட்டியிலும் வென்றமையைத் தொடர்ந்தே, 5-0 என பாகிஸ்தானை வெள்ளையடித்தது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: பாகிஸ்தான் அவுஸ்திரேலியா: 327/7 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: உஸ்மான் கவாஜா 98 (111), …
-
- 0 replies
- 584 views
- 1 follower
-