Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையே 24/02/2019 நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா கடைசி பந்தில் த்ரில் வெற்றிப் பெற்றது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. மே மாதம் இங்கிலாந்தில் தொடங்கவுள்ள உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பாக, இந்தியா விளையாடும் கடைசி சர்வதேச தொடர் இதுவாகும். இதனால், இந்த சீரிஸ் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது. இந்நிலையில், இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான முதல் டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ்.ஆர் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 12…

  2. மெக்கல்லம் விலகல் ஜிம்பாப்வே மற்றும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் தொடர் களில் இருந்து நியூஸிலாந்து அணியின் கேப்டன் பிரென்டன் மெக்கல்லம் விலகியுள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு நியூஸிலாந்து அணி தொடர்ச்சியாக விளையாடி வருவதால் களைப்படைந்துள்ள மெக்கல்லம் மேற்கண்ட தொடர் களில் இருந்து விலகியிருக்கிறார். மெக்கல்லம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறலாம் என தகவல் வெளியாகியிருந்தது. அது தொடர்பாக பல்வேறு ஊகங்கள் கிளம்பின. ஆனால் இப்போது மெக்கல்லம் அடுத்த ஆண்டு மார்ச்-ஏப்ரலில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை வரை நியூஸிலாந்துக்கு அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்துள்ளார். http://tamil.thehindu.com/sports/மெக்கல்லம்-விலகல்/article7360707.ece

  3. பேட்ஸ்மென் அருகில் பீல்ட் செய்ய மறுத்தவர்தான் இந்த மைக்கேல் கிளார்க்: மேத்யூ ஹெய்டன் சாடல் ஆஷஸ் டெஸ்ட் போட்டி ஒன்றில் ஹெய்டன், சைமண்ட்ஸ் இருவரும் சதம் எடுத்தனர். | படம்: ஏ.எஃப்.பி. படுதோல்விகளினால் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு அறிவித்த ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கே கிளார்க் குறித்து முன்னாள் வீரர்கள் மேத்யூ ஹெய்டன் மற்றும் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கடும் விமர்சனங்களை வைத்தனர். ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் இணையதளத்தில் மேத்யூ ஹெய்டன், கிளார்க் அறிமுகமான புதிதில் நடந்து கொண்ட விதம் பற்றி குறிப்பிடும் போது, “என்னால் அந்த தினத்தை மறக்க முடியாது. பேட்ஸ்மெனுக்கு அருகில் ஷார்ட் லெக் திசையில் ஒரு போட்டியின் போது ஜஸ்டின் லாங்கரால் நிற்க முடியவில்லை. காரணம் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டிர…

  4. யாழ். பல்கலை மூன்றாமிடம் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான வலைபந்தாட்டத் தொடரில் யாழ். பல்கலைக் கழகத் துக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற அனைத்து பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பெண்களுக்கான வலைப்பந்தாட்டத் தொடரின் மூன்றாம் இடத்துக்கான ஆட்டத்தில் யாழ்.பல்கலைக் கழக அணியை எதிர்த்து கொழும்புபல்கலைக்கழக அணி மோதிக் கொண்டது. இதில் யாழ். பல் கலைக்கழக அணி 45:41 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றி பெற்று மூன் றாம் இடத்தை தனதாக்கிக் கொண்டது. http://www.onlineuthayan.com/sports/?p=752 சம்பியனானது ஜெயவர்த்தனபுர பல்கலை September 08, 2015 அனைத்து பல்கலைக்கழகங்களுக்கிடையிலான வலைப்பந்தாட்டத் தொடரில் பெரதெனிய பல்கலைக்கழக அணியை …

  5. பிரட்லீயின் பந்துவீச்சை அடித்து நொருக்குவோம் 100 ஆவது டெஸ்டில் விளையாடும் கங்குலி கூறுகிறார் [26 - December - 2007] [Font Size - A - A - A] மெல்போர்ன் டெஸ்டில் பிரட்லீயின் பந்துவீச்சை அடித்து நொருக்குவோம். இன்று தொடங்கும் டெஸ்ட் தொடர் சுவாரஷ்யம் நிறைந்ததாக இருக்கும் என 100 ஆவது டெஸ்டில் விளையாடவிருக்கும் இந்திய வீரர் கங்குலி தெரிவித்துள்ளார். இந்திய அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு டெஸ்ட் போட்டி மற்றும் முக்கோண ஒரு நாள் தொடர்களில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்குகிறது. இது இந்திய வீரர் கங்குலிக்கு 100 ஆவது டெஸ்ட் போட்டியாகும். கடந்த முறை டெஸ்ட் தொடரை `டிரா' செய்த இந்தியா இம்முறை சொந்த மண்ணில் அவுஸ்திர…

  6. ஆசிய எறிபந்தாட்டத் தொடர் இலங்கைக்குத் தங்கப்பதக்கம் ஆசிய நாடுகளுக்கு இடையிலான ஆண்களுக்கான எறிபந்து தொடரில் இலங்கை சார்பில் தமிழ் வீரர்கள் கலந்து கொண்ட அணி தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது. ஆசிய நாடுகளிற்கிடையிலான ஆண்களிற்கான எறிபந்து தொடர் மலேசியாவில் நடைபெற்றது. இதில் இலங்கையைப் பிரதிநிதித்துவம் செய்து கலிலியா கிறசன் கழகம் சென்றது. தெல்லிப்பளை யூனியன் கல்லூரியைச் சேர்ந்த என்.திவ்வியநாத், எஸ்.தரன், எஸ்.அபிநயன், பி.சாருஜன் ஆகியோர் இந்த அணியில் இடம்பிடித்திருந்தனர். நேற்றுமுன்தினம் நடைபெற்ற மலேசியா அணிக்கும் இலங்கை அணிக்கும் (கலிலியா கிறசன் கழகம்) இடையிலான 5 செற்களைக் கொண்ட இறுதியாட்டத்தில் 3:0 என்ற நேர் செற் கணக்கில் இலங்கை அணி வெற்றிபெற…

  7. ஓமான் அணியின் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் இந்தியாவில் எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 20 ஓவர் உலகக்கிண்ண கிரிக்கட் தொடருக்கான ஓமான் அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சுனில் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். ஓமான் கிரிக்கட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் டுலீப் மென்டிஸூடன் இணைந்து சுனில் ஜோஷி செயற்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தி ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த சுனில் ஜோஷி, பெரிய போட்டி ஒன்றுக்காக சர்வதேச அணியுடன் இணைந்து செயற்படுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் ஓமான் அணியின் தமைமைப் பயிற்சியாளர் மென்டிஸூடன் இணைந்து அணியின் வீ…

  8. முதல் தர 20 க்கு 20 கிரிக்கட் போட்டிகளில் இலங்கையர் சாதனை ..! முதல் தர 20 க்கு 20 கிரிக்கட் போட்டிகளில் இலங்கையர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். அதிகளவான பதினாறு 6 ஓட்டங்களை பெற்றதன் மூலம் இந்த சாதனை ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிங்கள விளையாட்டுக் கழகம் சார்பாக துடுப்பெடுத்தாடிய தசுன் ஷானக என்ற வீரர் சராசன்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு எதிராக இந்த சாதனையை புரிந்துள்ளார். இதன்படி. 46 பந்துகளில் 123 ஓட்டங்களை பெற்றார். இதன் மூலம் 20 ஓவர்களில் சிங்கள விளையாட்டுக் கழகம் ஆறு விக்கட் இழப்பிற்கு 251 ஓட்டங்களை பெற்றது. இதேவேளை. தசுன் ஷானகவின் சாதனை உலக நிலையில் முதல் தர 20 க்கு 20 …

  9. ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய கேப்டன் தோனி புதிய சாதனை சனி, 30 ஜனவரி 2016 (17:52 IST) ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒரு நாள் தொடரை 1-4 என்ற கணக்கில் தோற்றது. இதனால் இந்திய கேப்டன் தோனி கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இந்நிலையில் அந்த அணிக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் நடந்து முடிந்த இரண்டு ஆட்டங்களிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வருகிறது தோனி தலைமையிலான அணி. மெல்போர்னில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் வெற்றி பெற்றதின் மூலம் தோனி வசம் இரண்டு சாதனைகள் வந்துள்ளன. ஏற்கனவே தோனி அதிக வெற்றிகள் பெற்ற இந்திய கேப்டன் என்ற கங்குலியின் சாதனையை முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் …

  10. நியுசிலாந்திற்கு எதிராக மெல்பேர்னில் ஆரம்பமாகியுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நடுவரின் தீர்ப்பிற்கு எதிராக அவுஸ்திரேலியஅணியின் முன்னாள் தலைவர்ஸ்டீவ்ஸமித் வாக்குவாதத்தில் ஈடுபட்டமை சர்ச்சையை உருவாக்கியுள்ளது. முதல் டெஸ்டின் 26 வது ஓவரில் நெய்ல் வாக்னரின் சோர்ட் பிச் பந்தினை விளையாட முயலாத ஸ்மித் ஆனால் லெக்பையினை பெறுவதற்காக ஓட முயன்றார். எனினும் அந்த பந்தை டெட்போல் என அறிவித்த நடுவர் நைஜல் லோங் ஸ்மித்தினை அங்கேயே நிற்குமாறு கேட்டுக்கொண்டார். எனினும் மதியநேர இடைவேளைக்காக அணியினர் ஓய்வறைகளிற்கு திரும்பிக்கொண்டிந்தவேளை ஸ்மித் நடுவருடன் கடும்வாக்குவாதத்தில்ஈடுபட்டார். ஸ்டீவ் ஸமித்தின் இந்த நடவடிக்கை சமூக ஊடகங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்த…

    • 0 replies
    • 507 views
  11. மேற்கிந்தியக் கிரிக்கெட் சபையை கலைக்குமாறு முன்னாள் கிரிக்கெட் மேதைகள் கோரிக்கை 2016-04-21 11:06:27 கரி­பியன் சமூ­கத்தின் கிரிக்கெட் ஆய்வுக் குழுவின் சிபா­ரி­சுக்கு அமைய மேற்­கிந்­தியத் தீவுகள் கிரிக்கெட் சபை கலைக்­கப்­ப­ட­வேண்டும் என அந் நாட்டின் கிரிக்கெட் மேதைகள் பலர் கோரிக்கை விடுத்­துள்­ளனர். இக் கோரிக்­கையை விடுத்­துள்ள விற்­பன்­னர்­களில் சேர் கார்பீல்ட் சோபர்ஸ், சேர் விவியன் ரிச்சர்ட்ஸ், வெஸ்லி ஹோல், அண்டி ரொபர்ட்ஸ் ஆகி­யோரும் அடங்­கு­கின்­றனர். எவ்­வித பய­னு­மற்ற கிரிக்கெட் சபையை கலைத்­து­விட்டு கட்­ட­மைப்பில் சீர்­தி­ருத்­தங்­களை ஏற்­ப­டுத்தும் பொருட்டு இடைக்­கால நிரு­வாக சபை …

  12. பிரீமியர் பட்ஸல் லீக் இந்திய இளைஞர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்: ரஹ்மான் புகைப்படங்கள் சென்னை: இந்தியாவில் தொடங்கவுள்ள பிரீமியர் பட்ஸல் லீக் உள்ளக கால்பந்துத் தொடரானது இந்திய இளைஞர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் என பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நம்பிக்கை தெரிவித்தார். பிரீமியர் பட்ஸல் லீக் சார்பில் திங்கள்கிழமை சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: இந்தியாவில் கிரிக்கெட் தவிர வேறு விதமான விளையாட்டுகளில் கவனம் செலுத்த மாட்டோம்.…

  13. கம்பீருடன் சண்டை...அனுஷ்காவுக்காக ட்விட்...விராட் கோலியின் "டிரிவன்” புத்தக ரகசியங்கள்! சமீபத்தில் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல். இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா கையால் பள்ளி கிரிக்கெட்டில் விருது வாங்கும் பால் வடியும் முகம் கொண்ட சிறுவன் 10 வருடத்தில் ஆஷிஷ் நெஹ்ராவை ஆன் சைடில் நிற்காதீர்கள், கொஞ்சம் நகர்ந்து நில்லுங்கள் என்று சொன்னால் எப்படி இருக்கும்?. அந்த சிறுவன் தான் இந்திய அணிக்கான அண்டர் 19 உலகக் கோப்பையை வென்று தந்த கேப்டன். இந்திய அணிக்கு என்ட்ரி கொடுத்த சிறுவனுக்கு 6 வருடங்களில் அடுத்த சச்சின் என்ற பெயர். இந்தியாவின் அக்ரஸிவ் டெஸ்ட் கேப்டனின் இதுவரையிலான பயணம் ''ட்ரிவன் - தி விராட் கோலி ஸ்டோரி'' என்ற பெயரில் புத்தகமா…

  14. ஆஸ்திரேலியன் ஓபனில் நடாலை வீழ்த்தி பட்டத்தை வென்றார் ஃபெடரர்.!! ஆஸ்திரேலிய ஓபன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடாலை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ரோஜர் ஃபெடரர். பரபரப்பான ஆட்டத்தில் 6-4, 3-6, 6-1, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் நடாலை வென்றுள்ளார் ஃபெடரர். இருவரும் 2-2 செட்களை கைப்பற்றவே 5-வது செட்டில் அரங்கமே நுனி சீட்டுக்கு வந்தது. இறுதி செட்டில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபெடரர், நடாலை திக்குமுக்காட வைத்தார். இது ரோஜர் ஃபெடரரின் 18-வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.vikatan.com/news/sports/79088-roger-federer-beats-rafael-nadal-and-wins-australian-open-title.art

  15. பக்ரைன் பார்முலா1 கார்பந்தயம்: செபாஸ்டியன் வெட்டல் முதலிடம் பக்ரைன் கிராண்ட்பிரி சகிர் ஓடுதளத்தில் நேற்றிரவு நடந்த போட்டியில் முன்னாள் சாம்பியன் ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் (பெராரி அணி) 1 மணி 33 நிமிடம் 53.374 வினாடிகளில் இலக்கை கடந்து, முதலிடத்திற்குரிய 25 புள்ளிகளை பெற்றார். சகிர் : இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 3-வது சுற்றான பக்ரைன் கிராண்ட்பிரி சகிர் ஓடுதளத்தில் நேற்றிரவு நடந்தது. பந்தய தூரம் 308.238 கிலோ மீட்டர் ஆகும். வழக்கம் போல் 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் மின்ன…

  16. கிரிக்கெட் பயணத்தை ரத்து செய்த பாகிஸ்தான்: வங்கதேசம் அதிர்ச்சி வங்கதேச அணி. | படம்.| ஏ.எஃப்.பி. பாகிஸ்தான் தனது வங்கதேச கிரிக்கெட் பயணத்தை ரத்து செய்தது குறித்து வங்கதேசம் அதிர்ச்சியடைந்துள்ளது. இது குறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியம் கூறும்போது, “ஒரு மாதம் முன்பு வரை கூட இந்தத் தொடர் நடைபெறும் என்றே பேசி வந்தோம். இப்போது பாகிஸ்தானின் இந்த முடிவு உண்மையில் அதிர்ச்சியளிக்கிறது” என்றார். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் பாகிஸ்தான் அணி வங்கதேசத்தில் பயணம் மேற்கொள்ளைவிருந்தது. இந்நிலையில் வங்கதேச கிரிக்கெட் வாரிய பிரதிநிதி கூறும்போது, “2015-ல் இதற்கான ஒப்பந்தம் போடப்பட்ட போது இரு வாரியங்களுக்கும் இடையே நித…

  17. விம்பிள்டன் 2021 ; பெரெட்டினியை வீழ்த்தி 20 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார் ஜோகோவிச் 2021 விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் நோவக் ஜோகோவிச், மேட்டியோ பெரெட்டினியை வீழ்த்தி 20 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டம் உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும் ஆம் நிலை வீரருமான இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினியும் மோதினர். 3 மணி நேரம் 23 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில், 34 வயதான ஜோகோவிச் 6-7,6-4,6-4 6-3 என்ற செட் கணக்கில் பெரேட்டினியை வ…

  18. தனது குழந்தைகளுடன் நேரம் செலவிட்ட இந்திய வீரர்களுக்கு நன்றி தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இந்திய கிரிக்கெட் வீரர்கள் தோனி, கோலி, யுவராஜ்வுடன் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் அசார் அலியின் குழந்தைகள் | படம் உதவி: அசார் அலியின் ட்விட்டர் பக்கத்திலிருந்து தனது குழந்தைகளுடன் நேரம் செலவழித்த இந்திய வீரர்களுக்கு பாகிஸ்தான் கிரிக்கெர்ட் வீரர் அசார் அலி நன்றி தெரிவித்து தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளர். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றது. பாகிஸ்தானுடனான இந்தத் தோல்வி இந்திய கிரிக்கெட் ரசி…

  19. இலங்கை அணி கடந்த போட்டிகளில் அடைந்த தோல்­விகள் குறித்தும் அப் போட்டிகளில் தலைமையேற்ற தலை­வர்கள் குறித்தும் எந்த சிந்­த­னையும் இல்லை. நடை­பெ­ற­வுள்ள இன்­றைய போட்­டி­கு­றித்தே அனைத்துக் கவ­னமும் இருக்­கி­றது என்று இலங்கை அணியின் புதிய தலைவர் லசித் மாலிங்க தெரி­வித்துள்ளார். இலங்கை – இந்­திய அணி­க­ளுக்­கி­டை­யி­லான ஐந்து போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3–0 என்ற கணக்கில் ஏற்­க­னவே இந்­தியா கைப்­பற்­றி­யுள்ள நிலையில் இன்று நான்­கா­வது ஒருநாள் போட்டி கொழும்பு ஆர்.பிரே­ம­தாச சர்­வ­தேச கிரிக்கெட் அரங்கில் பக­லி­ரவு போட்­டி­யாக நடை­பெ­ற­வுள்­ளது. இந்­திய அணியின் வெற்றி இந்த ஆட்­டத்­திலும் நீடிக்­குமா? அல்லது மாலிங்க தலைமையிலான இளம் இலங்கை அணி வெற்றி பெற்று தமக்கு விருந்தள…

    • 0 replies
    • 549 views
  20. அச்சுறுத்தும் முரளிதரன் பந்துவீச்சு இலங்கையில் வரும் 30ம் தேதி முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது. இந்தியா, இலங்கை, மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கிடையேயான முத்தரப்பு கிரிக்கெட் போட்டி இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கவுள்ளதால் மூன்று அணிகளும் முழுவீச்சில் தங்களை தயார்படுத்தி வருகின்றன. இந்தத் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும் என்று இந்திய ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்கின்றனர். காரணம் மேற்கு இந்திய அணியில் முன்னணி ஆட்டக்காரர்களான லாரா உட்பட பலர் இடம் பெறவில்லை. இலங்கையை பொறுத்த வரையில் அந்த அணி முரளிதரனின் மாயாஜால பந்து வீச்சை தான் நம்பியுள்ளது. இந்த அணிகளுடன் இந்திய அணியை ஒப்பிட்டு பார்க்கும்போது சற்று…

    • 25 replies
    • 5.1k views
  21. உலகக் கோப்பையில் இருந்து இத்தாலி 'அவுட்' - பஃபான் கனவு தகர்ந்தது! உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு இத்தாலி அணி தகுதி பெறவில்லை. ஸ்வீடன் அணியிடம் தோல்வி கண்டதையடுத்து, உலகச் சாம்பியன் அணி ரஷ்யாவுக்குப் பயணிக்கவில்லை. ஐரோப்பிய ப்ளே- ஆஃப் சுற்று 2-வது லெக் ஆட்டம், மிலனில் உள்ள சான்சிரோ மைதானத்தில் 74 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் நடந்தது. பந்தை தக்கவைத்து ஆடினாலும், இத்தாலி வீரர்களால் கோல் அடிக்க இயலவில்லை. ஏராளமான வாய்ப்புகளை வீணடித்தனர். ஸ்வீடன் அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டம் கோல் விழாமல் சமனில் முடிந்ததையடுத்து, ஸ்டாக்ஹோமில் நடந்த முதல் லெக் ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற ஸ்வீடன் அணி, உலகக்…

  22. பொரிசியா டொட்டமுண்டை வென்றது றியல் மட்ரிட் ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக்கின் குழுநிலைப் போட்டிகளில், நேற்று இடம்பெற்ற போட்டிகளில், றியல் மட்ரிட், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், லிவர்பூல் ஆகிய அணிகள் வென்றுள்ளதுடன், மன்செஸ்டர் சிற்றி, நாப்போலி, மொனாக்கோ ஆகிய அணிகள் தோற்றுள்ளன. ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட், 3-2 என்ற கோல் கணக்கில், ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பொரிசியா டொட்டமுண்டை வென்றது. றியல் மட்ரிட் சார்பாக பொர்ஜா மயோரல், கிறிஸ்டியானோ ரொனால்டோ, லூகாஸ் வஸ்கூஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். பொரிசியா டொட்டமுண்ட் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் பியரி எம்ரிக் அபுமெயாங் பெற்றார். இங்கிலாந்து…

  23. லூயிஸ் சுவாரஸ் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின்போது இத்தாலி அணியின் வீரர் ஒருவரை கடித்தார் என்கிற குற்றச்சாட்டில் ஃபிஃபாவால் தண்டனை விதிக்கப்பட்டுள்ள லூயிஸ் சுவாரஸுக்கு ஆதரவாக கடி வாங்கியவர் குரல் கொடுத்துள்ளார். எதிரணி வீரரைக் கடித்தார் என்பதற்காக உருகுவே நாட்டின் சுவாரஸுக்கு நான்கு மாதங்களுக்கு கால்பந்து விளையாட்டுடன் தொடர்பு கொள்ளக் கூடாது என்றும், ஒன்பது சர்வதேசப் போட்டிகளில் விளையாடக் கூடாது என்றும் ஃபிஃபா நேற்று அறிவித்தது. ஆனால் ஃபிஃபாவின் இந்த தண்டனை மிகவும் கூடுதலானது என்று, அவரிடம் கடிவாங்கிய ஜியார்ஜியோ ச்சீலீனி கூறியுள்ளார். சுவாரஸும், ச்சீலீனியும் இது தவிர, தமது நாட்டின் மிகப்பெரும் கால்பந்து நட்சத்திரமான சுவாரஸை உலகக் கோப்பை போட்டிகளிலிருந்து வெ…

    • 2 replies
    • 570 views
  24. தோல்வியை வார்த்தைகளால் மறைப்பவர் அல்ல கோலி: தோனி குறித்து ஆகாஷ் சோப்ரா சூசகம்? கோலி, தோனி - கோப்புப் படம். | விவேக் பெந்த்ரே. தென் ஆப்பிரிக்காவில் இந்திய அணி சந்தித்த தோல்வி வழக்கமானதோ, எதிர்பார்க்கப்பட்டதோ அல்ல என்று முன்னால் இந்திய தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ரா கட்டுரை ஒன்றில் தெரிவித்துள்ளார். ஈ.எஸ்.பி.என் கிரிக் இன்போ இணையதளத்தில் அவர் எழுதிய பத்தி ஒன்றில் இது பற்றி ஆய்ந்து எழுதியுள்ளார், அதில் விராட் கோலி தோல்விகளை வார்த்தைகளால் மறைப்பவர் அல்ல என்று கூறியதோடு முன்னாள் கேப்டன் தோனி அடிக்கடி பயன்படுத்தும் இரண்டு விஷயங்களை அவர் பெயரைக் குறிப்பிடாமல் சூசகமாகக் குறிப்பிட்டு விமர்சித்துள்ளார். …

  25. நாளை டி20 கிரிக்கெட்- இந்தியாவின் ஆதிக்கம் தொடருமா? 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிந்துள்ள நிலையில், நாளை ஜோகன்னஸ்பர்க்கில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்குகிறது. #SAvIND இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்தியா 5-1 என கைப்பற்றியது. இந்நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. முதல் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இந்திய நேரப்படி நாளை மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. ஒருநாள் தொடரைப் போல் டி20 கிரிக்கெட் தொடரிலும் இந்தியா ஆதிக்கம் செ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.