விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
தோனியின் தலை வெட்டப்பட்டது - ரசிகர்களின் பதிலடி! (காணொளி) சமீபத்தில் நடந்த ஆசிய கிண்ண இறுதி போட்டிக்கு முன்பாக இந்திய அணி தலைவர் தோனியின் வெட்டப்பட்ட தலையுடன் பங்காளதேஷ் பந்துவீச்சாளர் தஸ்கின் ஓடிவருவது போன்று ஒரு போட்டோவை மார்பிங் செய்து வெளியிட்டார்கள் பங்காளதேஷ் ரசிகர்கள். இந்த மார்பிங் போட்டோ இந்திய ரசிகர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது நடந்துவரும் டி20 உலக கிண்ண தொடரில் இன்று பங்காளதேஷூம் இந்தியாவும் மோதவுள்ளன. இந்த போட்டிக்கு முன்பாக பங்களதேஷ் ரசிகர்களை கலாய்த்து இந்திய ரசிகள் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவனாது தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் போட்டோஷாப் வைத்திருக்கும் இந்திய …
-
- 0 replies
- 520 views
-
-
சென்றல்- சென்.ஜோன்ஸ் ஒருநாள் ஆட்டம் நாளை யாழ்.பரியோவான் கல்லூரிக்கும், யாழ்.மத்திய கல்லூரிக்கும் இடையிலான 13ஆவது தடவையாக இடம்பெறும் 50 பந்துப் பரிமாற்றங்கள் கொண்ட கிரிக்கெட் சுற்றுப் போட்டி நாளை காலை 9 மணிக்கு யாழ்.பரியோவான் கல்லூரி மைத்தானத்தில் இடம்பெறவுள்ளது. இதுவரை நடைபெற்ற 12 போட்டிகளில் யாழ்.பரியோவான் கல்லூரி அணி 6 தடவைகளும், மத்திய கல்லாரி 5 தடவைகளும் வெற்றி பெற்றுள்ளன. இம்முறை இடம்பெற்ற 109ஆவது வடக்கின் மாபெரும் போர் துடுப்பாட்டத்தில் யாழ்.பரியோவான் கல்லூரி அணி வெற்றி பெற்றது. எனவே நாளை இடம்பெறவுள்ள போட்டியில் மீண்டும் யாழ்.பரியோவான் கல்லூரி வெற்றியை தனதாக்குமா? அல்லது மத்திய கல்லூரி வெற்றி பெறுமா? என்பது நாளை தெரியும். http://yarlsports.com/?p=…
-
- 3 replies
- 520 views
-
-
ரெட் புல் அணியின் 60 இற்கும் அதிகமான கிண்ணங்கள் திருடப்பட்டன போர்மியூலா வன் காரோட்டப் பந்தயங்களின் வெற்றிரகமான அணிகளில் ஒன்றான ரெட் புல் அணி போட்டிகளில் வென்ற பல்வேறு சம்பியன் கிண்ணங்கள், கேடயங்கள் திருடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் டில் புரூக் நகரிலுள்ள ரெட்புல் நிறுவனத்தின் தொழிற்சாலையொன்றில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றுமுன்தினம் அதிகாலை 1.30 மணியளவில் இப்பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தொழிற்சாலையில் வாயிலுக்கூடாக வாகனமொன்றில் வந்த 6 பேர் கொண்ட குழுவினர் இப்பொருட்களை திருடடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 60 இற்கும் அதிகமான கிண்ணங்களும் கேடயங்களும் இவ்வாறு திருடப்பட்டுள்ளன. பல வருட கால…
-
- 0 replies
- 520 views
-
-
சச்சினை கவுரவிக்கும் தருணங்கள் என் தந்தையை மகிழ்விக்கும்: பிராட்மேன் மகன் நெகிழ்ச்சி டான் பிராட்மேன் அறக்கட்டளை சார்பாக சச்சின் டெண்டுல்கர் கவுரவிக்கப்படுவதையொட்டி, சச்சின் தனது தந்தையை சந்தித்து உரையாடிய தருணத்தை ’டான்’ மகன் ஜான் பிராட்மேன் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் வீரரான மறைந்த டான் பிராட்மமேன் அறக்கட்டளை சார்பாக சச்சின் டெண்டுல்கர் கவுரவிக்கப்படுவதையொட்டி சிட்னி சென்றுள்ளார் சச்சின் டெண்டுல்கர். இன்று, சச்சின் மற்றும் ஸ்டீவ் வாஹ் ஆகியோருக்கு இரவு உணவு விருந்து அளிக்கப்படுகிறது. இந்நிலையில் டான் பிராட்மேன் அறக்கட்டளை சார்பாக நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் டான் பிராட்மேனின் வாரிசான ஜான் பிராட்மேன் 1998-ஆம் ஆண்டு…
-
- 0 replies
- 520 views
-
-
தென் கொரியாவுக்கு எதிராக இவ் வார இறுதியில் நடைபெறவுள்ள ஆசிய ஐந்து நாடுகள் (ஏஷியன் ஃபைவ் நேஷன்ஸ்) பிரதான பிரிவு றக்பி போட்டியில் பங்குபற்றும் பொருட்டு இலங்கை றக்பி அணி நேற்றிரவு அங்கு புறப்பட்டுச் சென்றது. ஆசிய றக்பி தரப்படுத்தலில் முதல் ஐந்து இடங்களை வகிக்கும் ஜப்பான், ஹொங் கொங், தென் கொரியா, பிலிப்பைன்ஸ், இலங்கை ஆகிய நாடுகள் இப் போட்டியில் லீக் அடிப்படையில் ஒன்றையொன்று எதிர்த்தாடும். இப் போட்டிகளை முன்னிட்டு இலங்கை றக்பி தெரிவுக் குழுவினரால் 23 வீரர்கள் அடங்கிய இலங்கை றக்பி குழாம் பெயரிடப்பட்டுள்ளது. கொழும்பில் கடந்த வருடம் நடைபெற்ற செரெண்டிப் மும்முனை சர்வதேச றக்பி போட்டிகளில் இரண்டாம் இடத்தைப் பெற்ற இலங்கை அணிக்கு தலைவராக விளையாடிய நாமல் ராஜபக்ஷ, தற்போத…
-
- 0 replies
- 520 views
-
-
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. கிறிஸ் மோரிஸ், ஆலிவர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2-வது டெஸ்ட் இன்று நாட்டிங்காம் ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் தொடங்கியது. முதல் டெஸ்ட்டில் இடம்பெறாத தென்ஆப்பிரிக்க அணி கேப்டன் டு பிளிசிஸ் இந்த டெஸ்ட்டில் இடம்பிடித்தார். ஒழுங்கீனமாக…
-
- 5 replies
- 520 views
-
-
முழு பலத்துடன் களமிறங்கவுள்ளோம் : லசித் மலிங்க இருபதுக்கு 20 உலகக் கிண் ணத்திற்கு நாம் தயாராகிக்கொண்டிருக்கிறோம். எந்தெந்த பயிற்சிகள் தேவையோ அத்தனையை யும் பெற்று முழு பலத்துடன் களமிறங்கவுள்ளோம். நடப்பு சம்பியன் என்ற சூழலில் களமிறங்குவதால் அழுத்தம் இருக்கி றதா என்று கேட்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை. வெற்றி என்பது ஒரு திருப்புமுனைதான். தொடர் வெற்றியே எமது இலக்கு என இலங்கை இருபதுக்கு 20 அணித் தலைவர் லசித் மலிங்க தெரிவித்தார். இலங்கையின் இருபதுக்கு 20 ஆண்கள் கிரிக்கெட் அணிக்கும் பெண்கள் கிரிக்கெட் …
-
- 0 replies
- 520 views
-
-
ஊக்கமருந்து: பாக். கிரிக்கெட் வீரர் யாஸிர் ஷா இடைநீக்கம் யாஸிர் ஷா ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யாஸிர் ஷாவை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தற்காலிகமாக இடைநீக்கம் செய்துள்ளது. பந்துவீச்சாளர் யாஸிர் ஷாவின் உடலில் தடைசெய்யப்பட்ட குளோர்தாலிடோன் (chlorthalidone) எனப்படும் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து இருந்துள்ளது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊடக அறிக்கை கூறுகின்றது. முழுமையான விசாரணைகள் முடியும் வரை வேறு தகவல்கள் எதுவும் வெளியாகாது என்று கூறப்பட்டுள்ளது. யாஸிர் ஷாவிடமிருந்து இது தொடர்பில் விளக்கம் எதுவும் வெளியாகவில்லை. 29 வயதான யாஸிர் ஷா கடந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்…
-
- 0 replies
- 519 views
-
-
‘பிளாஸ்டிக் ஜெர்சி’ அகமதிக்கு கிடைத்த அபூர்வ வாய்ப்பு... வாவ் மெஸ்சி! ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 6 வயது சிறுவன் மொர்டஷா அகமதி. கால்பந்து சூப்பர் ஸ்டார் லியோ மெஸ்சியின் தீவிர ரசிகன். அர்ஜென்டினா மற்றும் பார்சிலோனா அணிக்காக விளையாடி வரும் மெஸ்சி 10ம் எண் ஜெர்சி அணிந்து விளையாடுவது வழக்கம். சிறுவன் அகமதி, லயனல் மெஸ்சி அணிவது போன்ற ஜெர்சி ஒன்றை வாங்கித் தருமாறு தந்தையிடம் அடம் பிடித்து கேட்டுக்கொண்டிருந்தான். அகமதியின் தந்தைக்கோ, லியோ மெஸ்சி அணிவது போன்ற ஜெர்சியை வாங்கிக் கொடுக்க முடியாத நிலை. இதையடுத்து பிளாஸ்டிக் பை ஒன்றை எடுத்து அதில் அர்ஜென்டினா கால்பந்து அணியின் ஜெர்சி போன்று மெல்லிய நீலம் மற்றும் வெள்ளைக் கோடுகளை உருவாக்கி 10ம் எண் பொறித்து 'மெஸ்ச…
-
- 0 replies
- 519 views
-
-
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் இலங்கை அணி 37 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடியது. இதற்கமைய இலங்கை அணி, இருபது ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 125 ஓட்டங்களை பெற்றது. அணி சார்பில் தனுஸ்க குணதிலக்க அதிகூடுதலாக 30 ஓட்டங்களையும், நிரோசன் திக்வெல்ல 24 ஓட்டங்களையும், லஹிரு மதுசாங்க 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பதிலுக்கு துடுப்பாடிய நியூசிலாந்து அணி 16 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 88 ஓட்டங்கள் மாத்திரமே பெற்றது. போட்டியில் இலங்கை அணியின் இருபதுக்கு 20…
-
- 2 replies
- 519 views
-
-
2022ஆம் ஆண்டு பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்: அமெரிக்காவின் இராஜதந்திர புறக்கணிப்புக்கு சீனா கண்டனம்! 2022ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை அமெரிக்காவின் இராஜதந்திர புறக்கணிப்புக்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளதுடன், பதிலடி கொடுப்பதாக அச்சுறுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் இதுகுறித்து கூறுகையில், “இந்த புறக்கணிப்புக்கு சீனா உறுதியான எதிர் நடவடிக்கைகளை எடுக்கும். விளையாட்டில் அரசியல் நடுநிலைமையை அமெரிக்கா மீறுகின்றது. முன்மொழியப்பட்ட புறக்கணிப்பு பொய்கள் மற்றும் வதந்திகளை அடிப்படையாகக் கொண்டது’ என கூறினார். வர்த்தக போர், கொர…
-
- 1 reply
- 519 views
-
-
இந்த ஆண்டுக்கான தேசிய மெய்வல்லுனர் குழாத்தில் 10 தமிழ் பேசும் வீரர்கள் இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் 106 பேர் கொண்ட தேசிய மெய்வல்லுனர் குழாம் நேற்று (18) அறவிக்கப்பட்டது. இதில் வடக்கு, கிழக்கு, மலையகம், தென்னிலங்கை உள்ளிட்ட நாட்டின் அனைத்து பாகங்களையும் சேர்ந்த தமிழ் பேசும் வீரர்களுக்கு தேசிய மெய்வல்லுனர் குழாத்தில் வாய்ப்பு வழங்க இலங்கை மெய்வல்லுனர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, அடுத்த வருடம் நேபாளத்தில் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு விழா மற்றும் கட்டாரில் நடைபெறவுள்ள ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர்களை இலக்காகக் கொண்டு Super Pool, Elite Pool, National Pool என மூன்று தேசிய மெய்வல்லுனர் …
-
- 0 replies
- 519 views
-
-
முதல் பத்து இடங்களுக்குள் ஆப்கானிஸ்தான் சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் முதற்தடவையாக முதற் பத்து இடங்களுக்குள் ஆப்கானிஸ்தான் அணி நுழைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (25), சிம்பாப்வேக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் வெற்றியடைந்ததைத் தொடர்ந்தே, பத்தாவது இடத்திலுள்ள சிம்பாப்வேயை ஆப்கானிஸ்தான் பிரதீயீடு செய்துள்ளது. எனினும் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சிம்பாப்வேக்கு எதிரான ஐந்து ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடரில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆப்கானிஸ்தான் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான தரவரிசையில் பத்தாவது இடத்தில் நீடிக்க முடியும். இந்தத் தொடரில் தோல்வியடையும் சந்தர்ப்பத்தில்…
-
- 0 replies
- 519 views
-
-
நம்பர் -1 மட்டும் போதுமா? மைல்ஸ் டு கோ கோஹ்லி டீம்! டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா மீண்டும் நம்பர் - 1. இது இந்திய டெஸ்ட் வரலாற்றில் உன்னத தருணம். அனில் கும்ப்ளேவிடம் இருந்து கேப்டன்சியை வாங்கிய பின், 2009ல் முதன்முதலாக இந்தியாவை டெஸ்ட் அரங்கில் நம்பர் -1 அணியாக மாற்றி இருந்தார் தோனி. இந்த முறை விராட் கோஹ்லி. கோஹ்லி கேப்டன்சியில் இளம் இந்திய அணி எழுச்சி என நாம் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், ‛நல்லா படிக்கிற பசங்க வராத டைம்ல நடந்த எக்ஸாம்ல, ஃபர்ஸ்ட் பிரைஸ் வாங்குற மாதிரி, இந்தியா நம்பர் - 1 வந்துருச்சு’ என்ற பேச்சும் அடிபடுகிறது. ‛‛சொந்த மண் அல்லாத இடங்களில் நடக்கும் தொடரின் முடிவுகளைப் பொருத்தே, டெஸ்ட் நம்பர் -1 நியமி…
-
- 0 replies
- 519 views
-
-
சக வீரர்களை கிண்டல் செய்த பாண்டியா: பதிலுக்கு ரஸ்க் கொடுத்து கலாய்த்த தோனி சக வீரர்களை ஜாலியாக கிண்டல் செய்த ஹர்திக் பாண்டியை ரஸ்க் கொடுத்து அனுப்பியிருக்கிறார் தோனி அயர்லாந்து, இங்கிலாந்து அணியுடனான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி இங்கிலாந்து புறப்பட்டு சென்றுள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்துக்கு செல்லும் பயண நேரத்தில் இந்திய வேக பந்துவீச்சாளர் ஹர்திக் பாண்டியா சக இந்திய வீரர்களுடன் ஜாலியாக பேட்டி ஒன்றை விமானத்தில் பதிவு செய்திருந்தார். அதை பிசிசிஐ தனது பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டிருக்கிறது. அதில் ஹர்திக் பாண்டியாவும், சாகலும் மைக் பிடித்து கொண்டு இந்திய கிரிக்கெட் அணிய…
-
- 1 reply
- 519 views
-
-
2017 ஐ.பி.எல் சீசனில் களமிறங்கும் வீரர்கள் 2017 ஐ.பி.எல் சீசனில் ஏலத்துக்கு விடப்படும் வீரர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதன்படி, பீட்டர்சன், இஷாந்த் சர்மா போன்ற முக்கிய வீரர்கள் ஏலத்துக்கு விடப்பட்டுள்ளனர். இந்நிலையில் வருகின்ற சீசனில் விளையாடும் வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 44 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 140 வீரர்கள் அந்தந்த அணிகளிலேயே தக்கவைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தோனி, கோலி, அஸ்வின், ரெய்னா, தவான், ரோஹித் சர்மா,ஜாகீர்கான், ஹர்பஜன்சிங், புவனேஷ்வர்குமார், ஜடேஜா, சமி, டிவில்லியர்ஸ், கெய்ல், வார்னர், பொல்லார்டு, மேக்ஸ்வெல், டுமினி, ரஸல், டூப்ளிஸ்ஸி, சுனில்நரைன் போன்றோர் கடந்த அணிகளில் விளையாடிய அதே அணிகளில் தக்கவை…
-
- 1 reply
- 519 views
-
-
நானே முதல்வன் : சச்சின் மூன்றாவது நடுவர் முறை மூலம் கிரிக்கெட் வரலாற்றில் ஆட்டமிழந்த முதல் வீரர் நானே என இந்திய அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார். மும்பையில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கிரிக்கெட்டில் தொழில்நுட்பமானது அதிமுக்கியத்துவம் பெற்றுள்ளது. கிரிக்கெட் வரலாற்றில் மூன்றாவது நடுவர் முறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அதன் மூலம் ஆட்டமிழந்த முதல் நபர் நான்தான் என அவர் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/5677
-
- 0 replies
- 519 views
-
-
8-2 என பார்சிலோனாவை துவம்சம் செய்த பேயர்ன் முனிச்: கால்பந்து வரலாற்றில் மெஸ்சி கண்டிராத தோல்வி யூரோப்பியன் சாம்பியன்ஸ் லீக்கின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின் நாட்டின் தலைசிறந்த அணியான பார்சிலோனாவும், ஜெர்மனியின் பேயர்ன் முனிச் அணிகளும் விளையாடின. இந்திய நேரப்படி இன்று அதிகாலை போட்டி நடைபெற்றது. ஆட்டம் தொடங்கிய 4-வது நிமிடத்தில் பேயர்ன் முனிச் அணியின் தாமஸ் முல்லர் முதல் கோலை பதிவு செய்தார். 7-வது நிமிடத்தில் பார்சிலோனாவுக்கு ஓன் கோல் மூலம் ஒரு கோல் கிடைத்தது. இதனால் இரு அணிகளும் 1-1 என சமநிலைப் பெற்றன 21-வது நிமிடத்தில் பேயர்ன் முனிச் அணியின் இவான் பெரிசிக் ஒரு கோலும், 27-வது நிமிடத்தில் செர்ஜ் காப்ரி ஒரு கோலும், 31-வது நிமிடத்தில் தாமஸ் மு…
-
- 0 replies
- 519 views
-
-
கோலியின் ரன்னிங்... தோனி ஸ்டெம்பிங்... இந்த 19 பேர் இல்லாமல் பார்க்க முடியாது! ஆஸ்திரேலியால மேட்ச் நடந்தா 5 மணிக்கு அலாரம் வைச்சு எழுந்து மேட்ச் பாக்கணும், வெஸ்ட் இண்டீஸ் மேட்ச்சுக்கு நைட்டு 12 மணி வரைக்கும் கண்னு முழிச்சு மேட்ச் பாக்கணுனு லைவ் கிரிக்கெட் பாக்குற வெறித்தனமான கிரிக்கெட் ஃபேனா நீங்க. அந்த லைவ் எப்படி நடக்குதுனு தெரியுமா? எத்தனை கேமரா சுத்தி சுத்தி படமெடுக்குது தெரியுமா? ஒரு லைவ் மேட்சைகூட செய்ய மொத்தமா 29 கேமராக்கள் தேவை. அதில் 19 கேமராக்களை மனிதர்களும் 10 தானியங்கி கேமராக்களும் இயங்கும். ஒவ்வோரு கேமராவும் டைரக்டரின் கட்டளைக்கு ஏற்றவாறு இயங்கும் ஒவ்வோரு கேமராக்கும் ஒரு சிறப்பு பணி உள்ளது. உதாரணமாக சட் ஸ்க்ரீனுக்கு எதிராக உள்ள கேமர…
-
- 0 replies
- 519 views
-
-
20 ஓவர் போட்டியில் இரட்டை சதம் அடித்து அதிரவைத்த ஆஃப்கன் வீரர்! 20 ஓவர் போட்டியில் இரட்டை சதம் அடித்துள்ளார் ஆஃப்கானிஸ்தான் அணியைச் சேர்ந்த சஃபிக்குல்லா சஃபாக். கடந்த 2012-ம் ஆண்டு, தென் ஆப்பிரிக்காவுடன் நடந்த போட்டியில் இந்திய அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் 200 ரன்கள் குவித்தார். ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதமடிப்பது சாத்தியமே இல்லை என்று நினைத்திருந்த வேளையில், அதைத் தொடங்கி வைத்தார் சச்சின். இதற்குப் பிறகு சேவாக், ரோஹித் ஷர்மா, கிறிஸ் கெயில், மார்டின் கப்தில் ஆகியோர் ஒருநாள் போட்டியில் இரட்டை சதமடித்துவிட்டனர். ஆனால், சர்வதேச அளவில் டி-20 போட்டிகளில் இதுவரை யாரும் இரட்டை சதமடிக்கவில்லை. இதனிடையே உள்ளூர் போட்டி ஒன்றி…
-
- 1 reply
- 519 views
-
-
ஹேஹேய்... டோனி இன்னும் ‘தல’தான்! - தோனி அணியில் நீடிக்க வேண்டுமா..!? சர்வே முடிவு Chennai: சீரியஸான போட்டிகளில், திக் திக் நிமிடங்களை ‘ஜஸ்ட் லைக் தட்’ எனக் கடந்த ‘கூல் கேப்டன்’ தோனிமீது இப்போது ஏகப்பட்ட விமர்சனங்கள். ‘தோனி டி-20-யிலிருந்து ஓய்வுபெற வேண்டும்’ என அகார்கரில் இருந்து வி.வி.எஸ்.லட்சுமண் வரை பலரும் கருத்துச்சொல்ல, ‘மற்றவர் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும்’ என ஒதுங்கிக்கொண்டார் தோனி. விமர்சகர்கள் சொல்வதுபோல, நிஜமாகவே தோனியின் ஆட்டம் ஆட்டம் கண்டுவிட்டதா? தோனியின் ஓய்வு குறித்து வாசகர்களிடம் சர்வே நடத்தினோம். ரசிகர்களின் கருத்து என்ன? தோனி இல்லனா டீமே இல்ல... தோனி ஓய்வு பெற வேண்டுமா என்ற க…
-
- 0 replies
- 518 views
-
-
புரட்டி எடுத்த கோல்டுபர்க்... இரண்டே நிமிடங்களில் முடிந்த மல்யுத்தம் - வீடியோ இணைப்பு #Survivorseries மல்யுத்த வீரர் கோல்டுபர்க் கிட்டதட்ட 12 வருடங்களுக்குப் பிறகு நேற்று சண்டையிட்டார். கடந்த சில மாதங்களாக எதிரில் உள்ள வீரர்களைப் போட்டு புரட்டி எடுத்து, டபிள்யு.டபிள்யு.இ அரங்கையே கதிகலங்க வைத்த பிராக் லெஸ்னர்தான் கோல்டுபர்க்கை எதிர்த்து நின்றது. உண்மையில் அவர் எதிர்த்து நிற்க மட்டுமே செய்தார், அடித்தது எல்லாம் கோல்டுபர்க்தான். இந்தப் போட்டி அறிவிக்கபட்டபோதே இரு பெரும் ஜாம்பவான்கள் மோதும் இந்த போட்டி, மிகவும் கடுமையானதாக, சுவாரஸ்யமானதாக இருக்கும் என உலகம் முழுவதும் உள்ள ரெஸ்லிங் ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், கோல்டுபர்க்கோ …
-
- 0 replies
- 518 views
-
-
யாழ்.மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் புதிதாக மூன்று கழகங்கள் இணைப்பு யாழ். மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் மூன்று புதிய கழகங்கள் இணைக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக சங்கத்தின் விதிகளுக்கு அமைவாக குறிப்பிட்ட மூன்று கழகங்களும் யாழ். மாவட்ட கிரிக்கெட் விளையாட்டுக் கழகங்கள் நடத்தும் போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் பாசையூர் விம்ஸ் விளையாட்டுக் கழகம், கந்தர்மடம் ரெயின்போ விளையாட்டுக்கழகம் மற்றும் சாவகச்சேரி றிபேக் விளையாட்டுக்கழகம் என்பனவே யாழ். மாவட்ட கழகப் போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்பட்டுள்ள புதிய மூன்று கழகங்கள் ஆகும். இந்த மூன்று கழகங்களை புதிதாக சேர்த்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று யாழ். …
-
- 5 replies
- 518 views
-
-
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு புதிய தெரிவுக்குழு நியமனம்! இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு புதிய தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்துள்ளது. அஜந்த டி மெல் தலைமையில் குறித்த புதிய கிரிக்கெட் தெரிவுக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களுக்கு இது தொடர்பாக அறிக்கையொன்றினை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. இதன்படி இந்த தெரிவுக்குழுவின் தலைவராக அஜந்த டி மெல் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், சமிந்த மெண்டீஸ், ஹேமந்த விக்ரமரத்ன, சண்டிக ஹத்துரசிங்க ஆகியோரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது. http://athavannews.com/இலங்கை-கிரிக்கெட்-நிறுவ-3/
-
- 0 replies
- 518 views
-
-
பட மூலாதாரம்,BBC/GETTY IMAGES படக்குறிப்பு, உலகின் நம்பர் ஒன் செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சனை இந்திய வீரரான கார்த்திகேயன் முரளி, கத்தார் மாஸ்டர்ஸ் 2023 போட்டியில் தோற்கடித்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் செஸ் உலகத்தின் கதாநாயகனாக கொண்டாடப்படும் நார்வே நாட்டு விளையாட்டு வீரர் மேக்னஸ் கார்ல்சனை இந்திய வீரரான கார்த்திகேயன் முரளி(24), கத்தார் மாஸ்டர்ஸ் 2023 என்ற சர்வதேச ஃபிடே ரேட்டிங் போட்டியில் தோற்கடித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம், அஜர்பைஜானில் நடைபெற்ற செஸ் உலகக்கோப்பை போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் வீரர் பிரக்ஞானந்தா…
-
- 1 reply
- 518 views
- 1 follower
-