விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
கிரிக்கெட்டில் தொடரும் படுகாயங்களும், மரணங்களும்! ஜென்டில்மேன் விளையாட்டின் சோகம் சென்னை: பிலிப் ஹியூக்ஸ் தலையில் காயம் பட்டு மரணமடைந்துள்ள நிலையில் கிரிக்கெட்டில் இதுபோன்ற மோசமான சம்பவங்கள் அவ்வப்போது நடந்துள்ளதையும் மறுக்க முடியாது. பல நேரங்களில் படுகாயங்களும், சில நேரங்களில் வீரர்களின் உயிரையும் இதுபோன்ற விபத்துகள் பறித்துள்ளன. 1932-33ல் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பெர்ட் ஓல்ட்பீல்ட் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஹரோல்ட் லார்வூட் பவுன்சரால் ஏற்பட்ட காயத்தால் மண்டை ஓடு விரிசலடைந்தது. அந்த காலகட்டத்தில் பாடிலைன் எனப்படும் உடலை நோக்கி ஆக்ரோஷமாக பந்து வீசி தாக்கிக்கொள்ளும் நிலை இருந்தது. நாரி கான்ட்ராக்டர் தப்பினார் 1960ல் மேற்கிந்திய தீவுகளின் வேகப்பந்து வீச…
-
- 2 replies
- 1.5k views
-
-
கிரிக்கெட்டில் நடந்த அபூர்வ நிகழ்வு: பழிக்குப்பழி தீர்த்த ஜிம்பாப்வே ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி, கடந்த போட்டியில் தோல்வியடைந்ததை போல, வெற்றி பெற்ற அபூர்வ சம்பவம் நடந்துள்ளது. ஷார்ஜாவில், ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி, கடந்த 9ஆம் திகதி நடைபெற்றது. இதில் முதலில் துடுப்பாட்டம் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 333 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் ஆடிய ஜிம்பாப்வே அணி, 34.4 ஓவர்களில் 179 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம், ஆப்கானிஸ்தான் அணி 154 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற…
-
- 2 replies
- 490 views
-
-
கிரிக்கெட்டில் புதிய நோ போல் சமிக்ஞை அறிமுகம் (வீடியோ இணைப்பு) சர்வதேச கிரிக்கெட் வாரியம் மூன்றாவது நடுவர் மூலமாக நோ போல் சமிக்ஞை வழங்குவதனை பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டியில் அறிமுகப்படுத்தியுள்ளது. சர்வதேச கிரிக்கெட் வாரியம் மூன்றாவது நடுவர் மூலமாக நோ போல் சமிக்ஞை வழங்குவது தொடர்பில் தீர்மானித்த நிலையில், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/10778
-
- 0 replies
- 360 views
-
-
கிரிக்கெட்டில் ரன்னர் முறை நீக்கம்: புதிய விதிகள் இன்றுமுதல் அமுல் சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பல புதிய விதிகள் இன்று சனிக்கிழமை முதல் அமுலுக்கு வருகின்றன. துடுப்பாட்ட வீரர் காயமடைந்தால் ரன்னர் ஒருவரை பயன்படுத்தும் முறையும் இதன்மூலம் நீக்கப்படுகிறது. கடந்த மே மாதம் லண்டனில் நடைபெற்ற ஐ.சி.சி. கிரிக்கெட் குழுவின் மாநாட்டின் பின்னர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் இருபது20 போட்டிகளின் சில விதிகளை மாற்றங்களை செய்ய வேண்டுமென சிபாரிசு செய்யப்பட்டிருந்தது. அவ்விதிகள் இன்று முதல் அமுலுக்கு வருகின்றன. இவ்விதிகளின் கீழ் நடைபெறும் முதலாது போட்டியாக எதிர்வரும் 11 ஆம் திகதி மேற்கிந்தியத் தீவுகளுக்கும் பங்களாதேஷுக்கும் இ…
-
- 1 reply
- 907 views
-
-
கிரிக்கெட்டுக்கு 100 கோடி ரசிகர்கள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று, கிரிக்கெட் குறித்த ஒரு பிரமாண்ட ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது. பல சுவாரஸ்ய தகவல்களை உள்ளடக்கியதாக குறித்த ஆய்வு அமைந்துள்ளது. உலக அளவில் கிரிக்கெட் விளையாட்டை பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை 100 கோடிக்கும் மேற்பட்டோர் என இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 16 முதல் 69 வயதிற்குட்பட்டவர்களிடையே இந்த, ஆய்வு நடத்தப்பட்டது. ஒரு கிரிக்கெட் ரசிகனின் சராசரி வயது 34 என ஐசிசி தலைமை அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் தெரிவித்தார். பெண் ரசிகர்கள் கிரிக்கெட் ரசிகர்களில் 39% ரசிகர்கள் பெண்கள் எனவும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 30 கோடி பேரிடம் ஒன்லைன் மூலம் இந்த ஆய்வு நடத்தப…
-
- 1 reply
- 778 views
-
-
கிரிக்கெட்டுக்கு அழிவு காலம்! இயான் சேப்பல் Written by Tamil // February 2, 2014 // டுவென்டி- 20 போட்டிகளால் கிரிக்கெட்டுக்கு பேரழிவு என அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் அணித்தலைவர் இயான் சேப்பல் தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் டெஸ்ட்(5 நாள்), ஒருநாள் போட்டி(50 ஓவர்) மற்றும் டுவென்டி- 20 ஓவர் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 3 மணிநேரத்திற்குள் முடியும் 20 ஓவர் போட்டியை தான் ரசிகர்கள் அதிகளவில் விரும்புகிறார்கள். துடுப்பாட்ட வீரர்கள் பந்தை சிக்சர், பவுண்டரிகளாய் அடிப்பதை தான் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள், இதனால் 20 ஓவர் போட்டிக்கு அதிக அளவில் ஆதரவு காணப்படுகிறது. இது கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய பேரழிவு என அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் அணித்தலைவர் இயான் சேப்பல…
-
- 0 replies
- 605 views
-
-
கிரிக்கெட்டுக்கு ஏன் இன்னும் இவ்வளவு ரசிகர்கள்? ஆதாரத்தை காட்டும் வோர்னர், இம்ரான் தாஹிர் ; இரசிக்க வைக்கும் காணொளி தென்னாபிரிக்கா மற்றும் ஆஸி அணிகளுக்கான 5 ஆவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் வோர்னர் மற்றும் தாஹீர் ஆகியோருக்கு இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதமானது போட்டியின் ஆரம்பத்திலிருந்தே தொடர்ந்து கொண்டே இருந்தது. இவர்களின் தொடர் வாக்குவாதத்தினை நடுவர்கள் இணைந்து சமாதானப்படுத்தி வைத்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில் இந்த போட்டியில் வோர்னர் 173 ஓட்டங்களை விளாசிய நிலையில், தாஹீர் ரன் அவுட் மூலம் ஆட்டமிழக்கச் செய்தார். இந்நிலையில் போட்டியின் போது பல வாக்குவாதங்க…
-
- 0 replies
- 175 views
-
-
கிரிக்கெட்டுக்கு பை-பை... அடுத்து லாயர்... 25 வயதில் ஓய்வு பெற்ற இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்! இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜபர் அன்சாரி, கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தனது இடது கை சுழற்பந்து வீச்சுக்காக அறியப்பட்ட இவருக்கு 25 வயதேயாகும். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கடந்த 2015-ம் ஆண்டுதான் அவர் முதன்முறையாக விளையாடத் தொடங்கினார். பின்னர், கடந்த ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் அறிமுகமானார். குறிப்பாக, கடந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து விளையாடிய டெஸ்ட் போட்டிகளிலும் இவர் அணியில் இருந்தார். இப்படி தன் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கி விளையாடி வந…
-
- 0 replies
- 288 views
-
-
கிரிக்கெட்டுக்கு மீண்டும் வரும் அதிரடி பாக். ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக்: மறக்க முடியாத சாதனைகளில் சில... அப்துல் ரசாக். - கோப்புப் படம். | ஏ.பி. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக் 38 வயதில் மீண்டும் கிரிக்கெட்டுக்குத் திரும்புவதாக அறிவித்துள்ளார். குவைத்-இ-ஆஸம் ட்ராபிக்கான கிரிக்கெட் தொடரில் ரசாக் ஆடவிருக்கிறார், இதன் மூலம் பாகிஸ்தான் சூப்பர் லீகிற்கு திரும்ப உத்தேசித்துள்ளார் ரசாக். இவர் ஓய்வு பெறவில்லை, வாய்ப்புகள் இல்லாமல் கிரிக்கெட்டிலிருந்து மறைந்து போனார். 2013-ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கடைசியாக டி20யில் ஆடினார். உள்நாட்டு கிரிக்கெட்டில் 20…
-
- 0 replies
- 554 views
-
-
கிரிக்கெட்டுக்கு வருவதற்கு முன் இவங்க என்ன செஞ்சிக்கிட்டு இருந்தாங்க? சாதாரண குடும்பத்தில் பிறந்து உலகையே வென்ற கிரிக்கெட் வீரர்களாக பலர் உருவெடுத்துள்ளனர். சிறந்த கிரிக்கெட் வீரர்கள் இதற்கு முன் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று பார்ப்போம்... இந்திய அணியின் கேப்டன் தோனி, ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றினார். மேற்கு வங்கத்தில் கராக்பூர் ரயில் நிலையத்தில்தான் தோனிக்கு பணி. கடந்த 2001 முதல் 2003 ஆம் ஆண்டு வரை அங்கேயே பணியாற்றிய தோனி, அதற்கு பின் கிரிக்கெட்டுக்குள் நுழைந்தார். தென்ஆப்ரிக்க கேப்டன் டி வில்லியர்ஸ் கால் வைக்காத விளையாட்டே கிடையாது. கால்பந்து, பேட்மிண்டன், டென்னிஸ், ரக்பி என அனைத்து விளையாட்டுகளையும் ஒரு கை பார்த்து விட்டு கடைசியில் கிரிக்கெட்டில…
-
- 0 replies
- 304 views
-
-
கிரிக்கெட்டுக்கோ, மைதானத்திற்கோ பாதிப்பேற்படுத்த இடமளியேன் : திலங்க சுமதிபால எமக்கு மேல் விளையாட்டும், விளையாட்டு மைதனங்களும் உள்ளன. அதற்கு கீழ் தான் நாம் உள்ளோம். கிரிக்கெட்டுக்கோ அல்லது மைதானங்களுக்கோ எவரேனும் பாதிப்பேற்படுத்த முனைந்தால் நான் ஒரு போது இடமளிக்கமாட்டேனென இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்தார். இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மைதானப் பணியாளர்களின் போராட்டம் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எந்தப் பிரச்சினையா இருந்தாலும் பேசித் தீர்த்துக்கொள்…
-
- 0 replies
- 353 views
-
-
கிரிக்கெட்டும் பெண்களும் கிறிஸ் கெயிலும் அவதூறுகளும் Comments ஆரம்பகாலத்திலிருந்தே, ஆண்களின் விளையாட்டாகக் கருதப்பட்டுவந்த கிரிக்கெட் போட்டிகள், பெண்களைத் தம்பக்கம் இழுப்பதற்குத் தடுமாறியே வந்திருக்கிறது. கிரிக்கெட்டின் விவரிப்பே, 'கனவான்களின் விளையாட்டு" என, ஆண்களை மையப்படுத்தியதாகவே இருந்தது. எனினும், அண்மைக்காலத்தில் பெண்களின் கிரிக்கெட் போட்டிகள் அதிகரித்திருக்கின்றன. பெண் பார்வையாளர்களும் அதிகரித்திருக்கிறார்கள். இதன் விளைவாக, பெண்கள் உலகக் கிண்ணப் போட்டிகள் இடம்பெறுவதோடு, பெண்களுக்கான பிக் பாஷ் லீக் தொடரொன்று ஆரம்பிக்குமளவுக்கு, முன்னேற்றம் காணப்பட்டிருக்கிறது. ஆனால்,…
-
- 0 replies
- 671 views
-
-
கிரிக்கெட்டை அழிக்க வந்த வைரஸ்தான் டுவென்டி 20: மியான்தத் கராச்சி: கிரிக்கெட்டை அழிக்கும் வைரஸாக மாறியுள்ளது டுவென்டி 20. இதை நான் அன்றே சொன்னேன். இன்று அது நிரூபணமாகி வருகிறது என்று கூறியுள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜாவேத் மியான்தத். இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், டுவென்டி 20 கிரிக்கெட் போட்டிகள் அறிமுகமானபோதே இது கிரிக்கெட்டை அழித்து விடும் என்று நான் எச்சரித்தேன். இன்று அது நிரூபணமாகி வருகிறது. உலகம் முழுவதும் டுவென்டி 20 கிரிக்கெட் போட்டிகள் வேகமாக பரவி வருகின்றன. பெருமளவில் பணம் புழங்க ஆரம்பித்துள்ளது. இதனால் நீண்ட நேர போட்டிகளான டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கு மவுசு குறையத் தொடங்கி விட்டது. வீரர்களும் அத…
-
- 0 replies
- 486 views
-
-
கிரிக்கெட்டை கிராமத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் கிரிக்கெட்டை நாம் கிராமத்திற்கு எடுத்துச் செல்லவேண்டும். கிரிக்கெட்டை மட்டுமல்ல, நமது விளையாட்டையே கிராமத்திலிருந்து ஆரம்பித்தால் சிறந்ததொரு பெறுபேற்றை நாம் பெற்றுக்கொள்ளமுடியும் என தெரிவித்தார். இலங்கைக் கிரிக்கெட் இடைக்கால சபையின் தலைவர் சிதத் வெத்தமுனி. இலங்கைக் கிரிக்கெட் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்படி தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், கிராமத்திலிருந்துதான் சிறந்த வீரர்கள் வருகிறார்கள். ஆனால் நாங்களோ தலைநகரத்தில்தான் விளையாட்டுக்கான அனைத்து வளங்களையும் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இது மாறவேண்டும். …
-
- 0 replies
- 288 views
-
-
கிரிக்கெட்டை கேலிக்கூத்தாக்கும் எல்.பி.டபிள்யூ. தீர்ப்புகள் அடுத்த ஆண்டு தென் ஆப்ரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை போட்டிகளில் எல்.பி.டபிள்யூ., கேட்ச் ஆகியவற்றை துல்லியமாக அறிய தொலைக்காட்சி தொழில்நுட்பத்தை பயன்படுத்தப்போவதில்லை என்று சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி.) அறிவித்துள்ளது! கிரிக்கெட் ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தும் அறிவிப்பு இது. சமீப காலங்களில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் நடுவர்கள் வழங்கிய நேரடித் தீர்ப்புகள் பல சர்ச்சைக்குள்ளாகியுள்ளன. நடுவர்கள் மனிதர்களுக்கே உரித்தான "தவறும் தன்மையினால்" கிரிக்கெட் ஆட்டம் மிகவும் தடுமாறியது. பல சிறந்த ஆட்டக்காரர்கள் நடுவர்களின் தவறான முடிவுகளால் வெறுத்துப்போய் மட்டையை மைதானத்தில் ஓங்கி அடித்து த…
-
- 1 reply
- 1.1k views
-
-
கிரிக்கெட்டை தொடர்ந்து ஆகாயத்திலும் தோனி ராஜ்யம் !( வீடியோ) இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி, விமானத்தில் இருந்து பாராசூட்டில் குதிக்க பயிற்சி பெற்று வருகிறார். இதற்காக ஆக்ராவில் உள்ள பாராட்ரூப்பர்ஸ் பயிற்சி மையத்தில் அவர் பிரத்யேக பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில் இன்று அவர் முதல் முறையாக, பறக்கும் விமானத்தில் இருந்து பாராசூட்டில் தரையிறங்கி சாகசம் செய்தார். இதற்காக ஏ.என். 32 ரக ராணுவ விமானத்தில், 10 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து தரையை நோக்கி குதித்தார். தரையில் இருந்து ஆயிரத்து 250 அடி உயரத்தில், அவர் பாராசூட்டை இயக்கி மிக நேர்த்தியாக தரையிறங்கினார். தோனியுடன் சில ராணுவ வீரர்களும் பாராசூட்டில் தரையிறங்கினர். இது போன்று இன்னும் 4 முறை அவர் பாராசூட்டில் …
-
- 1 reply
- 727 views
-
-
கிரிக்கெட்டை மீண்டும் கொண்டுவர பாகிஸ்தான் சென்றுள்ள MCC By Mohamed Azarudeen சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் கொண்டு வரும் நோக்குடன், மெர்லிபோன் கிரிக்கெட் கழகமானது (MCC) பாகிஸ்தான் சென்று அங்கே ஒரு ஒருநாள் போட்டி மற்றும் மூன்று T20 போட்டிகளில் விளையாடவிருக்கின்றது. MCC என அழைக்கப்படும் இந்த மெர்லிபோன் கிரிக்கெட் கழகமானது கிரிக்கெட்டின் சட்டதிட்டங்களை உருவாக்கும் தாய்க்கழமாகும். இந்த கழகத்தின் நிர்வாக தலைவராக இருக்கும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்காரவே, பாகிஸ்தான் சென்றுள்ள MCC அணியின் தலைவராகவும் செயற்படு…
-
- 0 replies
- 371 views
-
-
கிரிக்கெட்டை விடுத்து டென்னிசை பிடிக்கும் கேரள அரசு... ஏன்? திருவனந்தபுரம்: கேரள சுற்றுலா மற்றும் ஆயுர்வேத சிகிச்சைக்கான விளம்பர தூதராக புகழ்பெற்ற முன்னாள் டென்னிஸ் வீராங்கனை ஸ்டெஃபி கிராஃப் நியமிக்கப்பட்டுள்ளார். ஜெர்மனியை சேர்ந்த ஸ்டெஃபி கிராஃப் 22 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான முடிவு திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல்வர் உம்மன் சாண்டி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது. ஆனால் ஸ்டெஃபி கிராஃபுக்கு அளிக்கப்படும் சம்பளம், சலுகைகள் என்னவென்று அறிவிக்கப்படவில்லை. இது தொடர்பான அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.பாலிவுட் நடிகர் ஷாருக்கான் போன்ற சில பிரபலங்களையும் கேரள மாநில சுற்றுலாத் துறையை மேம்படுத்த அம்மாநில அ…
-
- 0 replies
- 350 views
-
-
கிரிஸ் கெயில் சாதனையை தகர்த்தார் யூனுஸ் கான். கிரிஸ் கெயில் சாதனையை தகர்த்தார் யூனுஸ் கான். சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் சரித்திரத்தில் பாகிஸ்தான் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான யூனுஸ் கான் ஓர் அரிய சாதனை படைத்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணியுடனான 3 வதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியிலேயே யூனுஸ் கான் இந்த சாதனையை படைத்து, மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரர் கிரிஸ் கெயிலை பின்தள்ளியுள்ளார். சர்வதேச ஆட்டங்களில் குறைந்தது 1000 ஓட்டங்களை பூர்த்தி செய்தவர்களில் அதிகமான பூச்சியத்துடன்( டக் அவுட் ) ஆட்டமிழந்த வீரர்கள் பட்டியலில் இப்போது யூனுஸ் கான், கெயிலை பின்தள்ளியுள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணியுடனான 3 வது …
-
- 0 replies
- 346 views
-
-
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் துவக்க ஆட்டக்காரரான கிரிஸ் கேல் 333 ரன்களை அடித்து சாதனைப் பட்டியலில் தனது பெயரையும் பதிவு செய்துள்ளார். இலங்கைக்கு எதிராக காலியில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தை மேற்கு இந்தியத் தீவுகள் அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 362 ரன்கள் என்ற வலுவான நிலையில் ஆரம்பித்தது. முதல் நாள் ஆட்டத்தில் 219 ரன்களை அடித்திருந்த கிரிஸ் கேல் தொடர்ந்து ஆடி மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு 300 ஓட்டங்களைத் தாண்டினார். இதன் மூலம் வெளிநாடு ஒன்றில் நடந்த போட்டியில் 300 ஓட்டங்களுக்கு மேல் எடுத்த முதல் மேற்கிந்திய அணி வீரர் என்ற சாதனையை கிரிஸ் கேல் புரிந்துள்ளார். காலி கிரிக்கெட் மைதானத்தில்…
-
- 1 reply
- 761 views
-
-
கிரிஸ்மான் சிறப்பான ஆட்டத்தால் ஐரோப்பா லீக் கோப்பையை வென்றது அட்லெடிகோ மாட்ரிட் மார்சைல் அணிக்கெதிரான ஐரோப்பா லீக் இறுதிப் போட்டியில் அட்லெடிகோ மாட்ரிட் 3-0 என வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. #AtleticoMadrid ஐரோப்பா லீக் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் ஒலிம்பிக்யூ டி மார்சைல் - அட்லெடிகோ டி மாட்ரிட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அட்லெடிகோ மாட்ரிட் அணியின் முன்னணி வீரரான கிரிஸ்மான் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆட்டத்தின் 21-வது நிமிடத்தில் கிரிஸ்மான் முதல் கோலை பதிவு செய்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் அட்லெடிகோ மா…
-
- 0 replies
- 364 views
-
-
ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 27ம் தேதியன்று லண்டனில் துவங்க உள்ளதை அடுத்து கிரீசின் ஒலிம்பியா நகரில் ஒலிம்பிக் ஜோதி இன்று ஏற்றப்பட்டது. நவீன ஒலிம்பிக் போட்டிகள் துவங்கப்பட்டதன் நினைவாக ஒலிம்பிக் விழா நடத்தப்பட்டு வருகிறது. ஒலிம்பியாவில் இருந்து எடுத்துச் செல்லப்படும் ஒலிம்பிக் ஜோதி பல நாடுகள் வழியாக 78 நாட்களில் லண்டனை வந்தடையும். http://www.seithy.co...&language=tamil
-
- 0 replies
- 671 views
-
-
கிரெக் சாப்பலை விட அனில் கும்ப்ளே சிறப்பாக செயல்பட முடியும்: இயன் சாப்பல் இயன் சாப்பல் சகோதரரர் கிரெக் சாப்பலுடன் அனில் கும்ப்ளே. | கோப்புப் படம். இந்திய வீரர்களின் மனநிலையை நன்கு அறிந்தவர் என்பதால் அனில் கும்ப்ளே பயிற்சியாளர் பொறுப்பில் கிரெக் சாப்பலை விட சிறப்பாக செயல்பட முடியும் என்று இயன் சாப்பல் கூறியுள்ளார். இது குறித்து அவர் ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்போவில் எழுதிய பத்தியில் கூறியிருப்பதாவது: ஒரு முன்னாள் சிறந்த வீரர் சர்வதேச கிரிக்கெட் பயிற்சியாளராக ஆவது வழக்கத்துக்கு மாறானது, அவ்வகையில் ஒரு அரிதான குழுவில் இணைந்துள்ளர் அனில் கும்ப்ளே. எப்போதும் நட்சத்திர வீரர்கள் தங்களது கடினமான விளையாட்டுக்காலத்திற்குப் பிறகு ஓய்வு காலங்களில்…
-
- 0 replies
- 305 views
-
-
Top 25 catches of all time ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 1 reply
- 1.3k views
-
-
கிறிக்கெற் எனும் போதை கிரிக்கெட்: தலைகுனிவு யாருக்கு-இரா. குறிஞ்சிவேந்தன் (கட்டுரையாளர் திரு. இரா. குறிஞ்சிவேந்தன், புதுச்சேரி பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரியின் தமிழ் விரிவுரையாளர் ஆவார்) உலகக் கிரிக்கெட் கோப்பைப் போட்டித் திருவிழா ஏறக்குறைய முடிவடையும் நிலைக்கு எட்டிவிட்டது. நோஞ்சான் அணி எனக் குறைவாக மதிப்பிட்ட அணிகள் எல்லாம் விளாசித் தள்ளி தப்புக் கணக்குப் போட்டவர்களை எல்லாம் அதிர்ச்சி வைத்தியத்துக்குள்ளாக்கியது இந்த உலகக் கோப்பையின் ஒரு விசேஷம். அதோடு பெரிய ஜாம்பவான்களாக கணிக்கப்பட்டவர்கள் எல்லாம் போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடு என்கிற கதையாக சந்தடியில்லாமல் திரும்பி வந்துள்ளனர். மற்றவர்கள் எல்லாம் இந்தியாவின் தோல்வியை மறந்து விட…
-
- 1 reply
- 1.3k views
-