விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7834 topics in this forum
-
Published By: VISHNU 18 APR, 2023 | 04:59 PM (நெவில் அன்தனி) மசாசூசெட்ஸில் திங்கட்கிழமை (17) நடைபெற்ற பொஸ்டன் மரதன் ஓட்டப் போட்டியில் ஆண்கள் பிரிவில் இவான்ஸ் செபெட்டும் பெண்கள் பிரிவில் ஹெலன் ஒபிரியும் வெற்றிபெற்றனர். பொஸ்டன் மரதன் போட்டியில் கென்யர்கள் இருவர் முதலிடங்களைப் பெற்றது இது மூன்றாவது தொடர்ச்சியான தடவையாகும். 127ஆவது தடவையாக நடைபெற்ற ஆண்களுக்கான பொஸ்டன் மரதன் ஓட்டப் போட்டியை 2 மணித்தியாலங்கள் 05 நிமிடங்கள், 54 செக்கன்களில் நிறைவு செய்து இவான்ஸ் செபெட் வெற்றிபெற்றார். பொஸ்டன் மரதன் ஓட்டப் போட்டி வரலாற்றில் 2006 - 2008க்குப் பின்னர் சம்பியன் பட்டத்தை …
-
- 0 replies
- 360 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 5 13 APR, 2023 | 09:06 AM யாழ்ப்பாணம் பிரதேச செயலக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் மூன்றாவது தடவையாக நடாத்தப்பட்ட யாழ் பாடி சதுரங்க சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் புதன்கிழமை (12) இடம்பெற்றது. சதுரங்க விளையாட்டில் ஆர்வமுடைய யாழ். மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் நோக்கில் நடாத்தப்படுகின்ற குறித்த சுற்றுப்போட்டி இரண்டு தினங்கள் யாழ்ப்பாணம் வைத்தீஸ்வராக் கல்லூரி மற்றும் யாழ். வண்ணை நாவலர் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் நடைபெற்றது. ஆண், பெண் இருபாலருக்கும் 6,8,10,12,14,16,16 வயதுப் …
-
- 0 replies
- 553 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத் பதவி,பிபிசி தமிழுக்காக 13 ஏப்ரல் 2023, 15:03 GMT புதுப்பிக்கப்பட்டது 20 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கை கால்பந்தாட்ட ஆண்கள் அணி, முக்கிய இரண்டு தகுதிகாண் போட்டிகளில் பங்கு பெறும் சந்தர்ப்பத்தை இழந்துள்ளது. சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம், இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு இதனை அறிவித்துள்ளது. 2024ம் ஆண்டு பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் கால்பந்தாட்ட போட்டிக்கான ஆசிய தகுதிகாண் போட்டி மற்றும் ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் 23 வயதிக்குட்பட்ட கத்தார் ஆசியக் கிண்ணத் தகுதிகாண் போட்டி ஆகியவற்றுக்கு பங்குபெறுவ…
-
- 0 replies
- 775 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 5 11 APR, 2023 | 02:42 PM (நெவில் அன்தனி) தென் ஆபிரிக்காவில் நடைபெறவுள்ள 2023 வலைபந்தாட்ட உலகக் கிண்ணப் போட்டியை முன்னிட்டு 12 வீராங்கனைகளைக் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 12 வீராங்கனைகளின் பெயர்களும் 4 தயார்நிலை வீராங்கனைகளின் பெயர்களும் விளையாட்டுத்துறை அமைச்சரின் அங்கீகாரத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வலைபந்தாட்ட சம்மேளனம் தெரிவித்தது. வலைபந்தாட்ட இறுதிக் குழாத்தில் தர்ஜினி சிவலிங்கம் இடம்பெறுகிறார். அவுஸ்திரேலியாவில் விக்டோரியா வலைபந்தாட்ட லீக் போட்டியில் பெல்கன்ஸ் அணி சார்பாக விளையாடிவரும் தர்ஜினி சிவலிங்கம், இலங்கை வலைபந்தாட்ட அணியில் இணை…
-
- 0 replies
- 466 views
- 1 follower
-
-
நியூஸிலாந்துடனான முதல் டெஸ்டில் சிறப்பான நிலையில் இலங்கை; திமுத், குசல் அரைச் சதங்கள் குவிப்பு Published By: NANTHINI 09 MAR, 2023 | 01:42 PM (நெவில் அன்தனி) நியூஸிலாந்துக்கு எதிராக கிறைஸ்ட் சேர்ச், ஹெக்லி ஓவல் விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (9) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை சிறப்பான நிலையில் இருக்கிறது. முதலாம் நாள் ஆட்டம் போதிய வெளிச்சம் இன்மை காரணமாக நிறுத்தப்பட்டபோது இலங்கை அதன் முதலாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்களை இழந்து, 305 ஓட்டங்களை பெற்றிருந்தது. மதிய போசன இடைவேளைக்குப் பின்னர் மழை காரணமாக இரண்டு தடவைகள் தடைப்பட்ட ஆட்டத்தில் 75 ஓவர்கள் மாத்திரமே வீசப்பட்டது…
-
- 34 replies
- 1.5k views
- 1 follower
-
-
பீலே, மரடோனா சிலைகளுக்கு பக்கத்தில் மெஸ்ஸிக்கு சிலை! கடந்த ஆண்டு டிசம்பரில் மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டினா அணி கால்பந்து உலகக் கோப்பையை வென்றது. அது முதல் மெஸ்ஸி செல்லும் இடமெல்லாம் பாராட்டு மழை பொழிந்து வருகிறது. இந்த நிலையில், அவருக்கு இம்மாதம் 27ஆம் திகதி சிலை ஒன்றை வழங்கி உள்ளது தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு. இந்த சிலை CONMEBOL-ன் அருங்காட்சியகத்தில் கால்பந்து உலகின் ஜாம்பவான்களான பீலே மற்றும் மரடோனாவுக்கு பக்கத்தில் வைத்து சிறப்பிக்க உள்ளதாகவும் தெரிகிறது. சுமார் 36 ஆண்டுகளுக்கு பின்னர் ஆர்ஜென்டினா அணி உலகக் கோப்பையை வென்றிருந்தது. இந்த நிலையில், மெஸ்ஸியின் முழு உருவச் சிலை திறக்கப்பட்டுள்ளது. ஆர்ஜென்டினா அணி ஜெர்சி அணிந…
-
- 0 replies
- 368 views
- 1 follower
-
-
சர்வதேச போட்டிகளில் 100 ஆவது கோல் புகுத்தினார் மெஸி Published By: SETHU 29 MAR, 2023 | 11:35 AM ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணியின் தலைவர் லயனல் மெஸி, தனது 100 ஆவது சர்வதேச கோலைப் புகுத்தியுள்ளார். கியூராசாவ் - ஆர்ஜென்டீன அணிகளுக்கிடையிலான சிநேகபூர்வ போட்டியில் தனது 100 கோலை மெஜி புகுத்தினார். ஆர்ஜென்டீனாவின் சான்டியாகோ டெல் எஸ்டேரோ நகரில் செவ்வாய்க்கிழமை (இலங்கை, இந்திய நேரப்படி இன்று காலை) நடைபெற்ற இப்போட்டியில் 7-0 கோல்களால் ஆர்ஜென்டீனா வென்றது. இப்போட்டியில் லயனல் மெஸி ஹெட்ரிக் கோல்களைப் புகுத்தினார். போட்டியின் 20, 33, 37 ஆவது நிமிடங்களில் அவர் புகுத்தினார் இதன் மூலம் சர்வதேச போட்டிகளில் …
-
- 0 replies
- 347 views
- 1 follower
-
-
வீடியோ கேமா? சர்வதேச ஆட்டமா? கிரிக்கெட்டில் 17 ஆண்டுக்கு பின் தென் ஆப்ரிக்கா மீண்டும் அசாத்திய சாதனை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சதம் அடித்த தென் ஆப்ரிக்க வீரர் குயின்டன் டி காக் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வீடியோ கேமா? சர்வதேசப் போட்டியா? என்று ரசிகர்கள் ஆச்சர்யப்படும் வகையில் வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்ரிக்கா இடையிலான டி20 போட்டி நடந்து முடிந்துள்ளது. இந்த ஆட்டத்தின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு தென் ஆப்ரிக்க அணி அசாத்திய சாதனை புரிந்துள்ளது. தென் ஆப்ரிக்காவின் செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆடடத்தில் ரன் மழை பொழி…
-
- 1 reply
- 315 views
- 1 follower
-
-
சர்வதேச கால்பந்தில் மீண்டும் முத்திரை பதிக்கும் ரொனால்டோ - யூரோ தகுதிச்சுற்றில் சாதனைமேல் சாதனை பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் யூரோ 2024 தகுதிச் சுற்றில் லக்சம்பர்க் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 கோல்களை அடித்து நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அசத்தியுள்ளார். இதன் மூலம் சர்வதேச கால்பந்து உலகிற்கு தனது மீள் வருகையை அவர் மீண்டும் அழுத்தமாக உரைத்துள்ளார். கத்தாரில் அண்மையில் நடந்து முடிந்த உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரொனால்டோவுக்கு மிகுந்த ஏமாற்றம் தருவதாக அமைந்துவிட்டது. ரொனால்டோ தலைமை தாங்கிச் சென்ற போர்ச்சுகல் அணி காலிறுதியுடன் வெளியேறியதுடன், அந்த அணி விளையாடிய கடைசி …
-
- 1 reply
- 733 views
- 1 follower
-
-
உலக பெண்கள் குத்துச்சண்டை: இந்தியாவின் ஸ்வீட்டி பூரா, நீத்து கங்காஸ் ஆகியோருக்கு தங்கப் பதக்கம் பட மூலாதாரம்,BFI 25 மார்ச் 2023, 15:41 GMT புதுப்பிக்கப்பட்டது 41 நிமிடங்களுக்கு முன்னர் உலக பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஸ்வீட்டி பூரா, நீத்து கங்கா ஆகியோருக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. 81 கிலோ பிரிவில் தங்கம் வென்ற ஸ்வீட்டி பூராவுக்கு இது இரண்டாவது உலக சாம்பியன்ஷிப் பதக்கம். சீனாவின் வாங் லினாவை அவர் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். அரையிறுதியில் அவர் ஆஸ்திரேலியாவின் எம்மா கிரீன்ட்ரீயை 4-3 என்ற கணக்கில் வீழ்த்தினார். …
-
- 2 replies
- 775 views
- 1 follower
-
-
ரூ.3.4 கோடிக்கு ஏலம் போன கிரிக்கெட் வீராங்கனை மந்தனா! இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் பெண் வீராங்கனைகள் ஏலம் இன்று நடைபெற்றது. அங்கு ஏலம் போன முதல் வீராங்கனை இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் சிறந்த வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா ஆவார். ரூ.3.4 கோடிக்கு மந்தனாவை றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வாங்கியது. இந்த ஆண்டு உலகக் கிண்ண மகளிர் அணியில் இருக்கும் ஸ்மிருதி மந்தனா, அந்த மகிழ்ச்சியை நேரலையில் பார்த்துக் கொண்டாடினார். https://thinakkural.lk/article/239430
-
- 34 replies
- 1.9k views
- 1 follower
-
-
பாகிஸ்தானில் ஆசிய கிண்ண கிரிக்கெட்; பிரிதொரு நாட்டில் இந்திய போட்டிகள் Published By: VISHNU 24 MAR, 2023 | 01:46 PM (நெவில் அன்தனி) ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி இந்த வருடம் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. அதேவேளை, இந்தியா சம்பந்தப்பட்ட போட்டிகள் பிரிதொரு நாட்டில் நடத்தப்படவுள்ளது. இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையும் ஒரு தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தானில் நடத்துவதில் ஆரம்பித்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் முரண்பாடு நிலவியது. பாகிஸ்தானில் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி நட…
-
- 0 replies
- 277 views
- 1 follower
-
-
இந்தியா Vs ஆஸ்திரேலியா: இந்தியாவின் டெஸ்ட் தொடர் வரலாற்றை மாற்றி எழுதுமா ஆஸ்திரேலியா? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்வது என்பது, ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தை வெல்வதைக் காட்டிலும் பெரிய விஷயமாக இருக்கும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது. ஐசிசியின் பட்டியலில் ஆஸ்திரேலியா முதல் இடத்தில் உள்ளது ஆனால் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியா 2012ஆம் ஆண…
-
- 93 replies
- 4.2k views
- 1 follower
-
-
காலில் ரத்தம் சொட்டச் சொட்ட சாதனை படைத்த மெஸ்ஸி - ஆர்ப்பரித்த அர்ஜென்டினா ரசிகர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES 24 மார்ச் 2023, 05:04 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் அர்ஜென்டினாவின் தலைநகரமான பியூனஸ் ஐரிஸ் நகரத்தின் 'எல் மானுமெண்டல்' மைதானம் முழுவதும் நேற்று இரவு ஒரே ஒரு பெயரை மட்டுமே உச்சரித்துக் கொண்டிருந்தது. மைதானத்தில் கூடியிருந்த 80 ஆயிரம் பேரின் வாயிலிருந்தும் வந்த அந்த ஒற்றைச் சொல் 'மெஸ்ஸி'. கால்பந்து உலகக்கோப்பை அர்ஜெண்டினாவுக்கு பெற்றுத் தந்த அந்த அணியின் கேப்டன் மெஸ்ஸி, கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதி போட்டிக்குஜ பிறகு மீண்டும் ஒருமுறை அந்த அணி…
-
- 1 reply
- 329 views
- 1 follower
-
-
பிரான்ஸ் கால்பந்தாட்ட அணியின் புதிய தலைவராக கிலியன் எம்பாப்வே நியமனம் Published By: SETHU 21 MAR, 2023 | 02:58 PM பிரான்ஸின் தேசிய கால்பந்தாட்ட அணியின் புதிய தலைவராக கிலியன் எம்பாப்வே நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் ஆர்ஜென்டீனாவிடம் பிரான்ஸ் தோல்வியுற்றதையடுத்து, அவ்வணியின் தலைவர் ஹியூகோ லோறிஸ் சர்வதேச கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார், இந்நிலையில், புதிய தலைவராக கிலியன் எம்பாப்வே நியமிக்கப்பட்டுள்ளார் என பிரெஞ்சு கால்பந்தாட்டச் சம்மேளனம் அறிவித்துள்ளது. பயிற்றுநர் டெஸ்சாம்ப்ஸுடனான கலந்துரையாடலையடுத்து, அணித்தலைவர் பதவியை கிலியன் எம்பாப்பே ஏற…
-
- 0 replies
- 388 views
- 1 follower
-
-
ரொனால்டோவின் ஹாட்ரிக் கோலால் சௌதி லீக் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் அல் நாசர் அணி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அல் நாசர் அணிக்காக இந்த சீசனில் 8 கோல்களை அடித்து அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் ரொனால்டோ இருக்கிறார். 26 பிப்ரவரி 2023, 05:41 GMT புதுப்பிக்கப்பட்டது 26 பிப்ரவரி 2023, 06:27 GMT ரொனால்டோ, கிளப் போட்டிகளில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக நடப்பு சீசனில் 16 ஆட்டங்களில் ஆடி 3 கோல்களை மட்டுமே அவர் அடித்திருந்தார், அதிலும் ஒன்று பெனால்டி மூலம் கிடைத்தது. இப்போது அல் நாசர் அணிக்காக கடந்த 6 ஆட்டங்களில் 8 கோல்களை…
-
- 14 replies
- 509 views
- 1 follower
-
-
டெஸ்ட் போட்டிகளைப் போல மாறுமா ஒருநாள் ஆட்டம்? சுவாரஸ்யம் கூட்ட சச்சின் புதுமையான யோசனை பட மூலாதாரம்,GETTY IMAGES 18 மார்ச் 2023 மாற்றம் ஒன்று மட்டுமே எப்போதும் மாறாதது என்ற வார்த்தைகள் கிரிக்கெட்டுக்கும் பொருந்தும். ஒருநாள் போட்டிகளின் வருகைக்குப் பின்னர் டெஸ்ட் போட்டிகள் நெருக்கடியைச் சந்தித்தன. தற்போது டி20 அறிமுகத்திற்குப் பிறகு ஒருநாள் போட்டிகள் சுவாரசியம் அற்றவையாக மாறியுள்ளன. ஒரு நாள் போட்டிகள் இனியும் பிழைத்திருக்குமா? கிரிக்கெட்டின் 3 வடிவங்களையும் தொடர்ந்து தக்க வைக்க என்ன செய்ய வேண்டும்? அதற்கு ஜாம்பவான் சச்சின் என்ன சொல்கிறார்? கிரிக்கெட்டின் நூறாண்டுகளுக்கும் மேல…
-
- 0 replies
- 753 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான நூற்றாண்டு கால கிரிக்கெட் போட்டி Published By: DIGITAL DESK 5 08 MAR, 2023 | 10:02 AM "வடக்கின் போர்" என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான நூற்றாண்டு கால கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 09 ஆம் திகதி, வியாழக்கிழமை ஆரம்பமாகி 03 நாள்கள் நடைபெறவுள்ளது. 116 ஆவது முறையாக இடம்பெறும் இப்போட்டி, இம்முறையும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது. ஆரம்ப நாள் நிகழ்வு வியாழக்கிழமை (09) முற்பகல் 8.30 மணிக்கு இடம்பெற்று போட்டி முற்பகல் 10 மணிக்கு போட்டி ஆரம்பமாகும் எ…
-
- 19 replies
- 1.5k views
- 1 follower
-
-
"ஒரு கையோ காலோ இல்லை என்றாலும் எங்களால் கிரிக்கெட் விளையாட முடியும்" - சாதிக்கும் மாற்றுத்திறனாளி பெண்கள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் கிரிக்கெட் மைதானத்தில் தேர்ட் மேன் பகுதியில் ஊன்றுகோல் உதவியுடன் ஃபீல்டிங் செய்ய முடியுமா? ஒரு கால் இல்லாமல் ஊன்றுகோல் உதவியுடன் பேக் ஃபுட்டில் கட்ஷாட் அடிக்க முடியுமா? சாத்தியமே இல்லை என்கிறீர்களா? ஆனால், இந்த சூப்பர் பெண்களுக்கு இது எல்லாமே சாத்தியம்தான். பெண்கள் கிரிக்கெட் விளையாடுவதெல்லாம் கிடக்கட்டும், அவர்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதே ஆபத்தானது எனக் கருதப்படும் ஜார்கண்ட் மாநிலம் வாசிப்பூரி…
-
- 1 reply
- 587 views
- 1 follower
-
-
உலக சம்பியன் இங்கிலாந்தை பந்தாடியது பங்களாதேஷ் Published By: VISHNU 15 MAR, 2023 | 06:37 PM (என்.வீ.ஏ.) மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரில் இருபது 20 உலக சம்பியன் இங்கிலாந்தை 3 - 0 என்ற ஆட்டக் கணக்கில் வீழ்த்தி வரலாற்று தொடர் வெற்றியை பங்களாதேஷ் ஈட்டியது. முதல் இரண்டு போட்டிகளில் ஈட்டிய வெற்றிகளுடன் தொடரை தனதாக்கிக்கொண்டிருந்த பங்களாதேஷ், மிர்பூர் ஷியரே பங்ளா விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்ற கடைசிப் போட்டியில் 16 ஓட்டங்களால் வெற்றியீட்டி தொடரை முழுமையாகக் கைப்பற்றியது. பங்களாதேஷினால் நிர்ணயிக்கப்பட்ட 159 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்க…
-
- 1 reply
- 667 views
- 1 follower
-
-
ஜெய் ஸ்ரீராம் முழக்கம்: ஷமி, சிராஜூக்கு இதற்கு முன்பு என்ன நடந்தது? கோலி, ரஹானே என்ன செய்தார்கள்? பட மூலாதாரம்,GETTY IMAGES 9 மணி நேரங்களுக்கு முன்னர் "ஒருவர் சார்ந்த மதத்தின் அடிப்படையில் அவரை விமர்சிப்பது ஒரு மனிதன் செய்யக் கூடிய மிகவும் பரிதாபமான செயல். அவர்கள் முதுகெலும்பில்லாதவர்கள். அவர்கள் மீது கவனம் செலுத்தி வாழ்க்கையில் ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்க விரும்பவில்லை" - இவை 2021-ம் ஆண்டு இருபது ஓவர் உலகக்கோப்பைப் போட்டி ஒன்றில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியுற்ற போது, அணியில் இடம் பெற்றிருந்த முகமது ஷமியை சமூக ஊடகங்களில் ரசிகர்கள் விமர்சித்த போது அப்போதைய கேப்டன் விராட் கோலி உதிர்த்த வார்த்தை…
-
- 0 replies
- 700 views
- 1 follower
-
-
இலங்கை வலைப்பந்தாட்டத்தின் சொத்து தர்ஜினி என்கிறார் அவுஸ்திரேலிய உதவி பயிற்றுநர் Published By: DIGITAL DESK 5 15 MAR, 2023 | 03:36 PM (நெவில் அன்தனி) இலங்கை வலைபந்தாட்டத் தின் சொத்து தர்ஜினி சிவலிங்கம் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும். எனவும் தென் ஆபிரிக்காவில் இந்த வருடம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் இலங்கை அணி சாதிப்பதற்கு அவரது பிரசன்னம் மிகவும் அவசியம் எனவும் 'வீரகேசரி'க்கு அவுஸ்திரேலிய வலைபந்தாட்ட உதவிப் பயிற்றுநர் நிக்கோல் றிச்சர்ட்ஸ்சன் தெரிவித்தார். அவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு தர்ஜினியின் வலைபந்தாட்டத் திறன் குறித்து கேட்டபோதே அவர் இந்தப் பதிலைக் கூறினார். …
-
- 0 replies
- 739 views
- 1 follower
-
-
பாகிஸ்தானில் பிறந்த உஸ்மான் கவாஜா, ஆஸ்திரேலியாவின் சிறந்த பேட்ஸ்மேனாக ஆனது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 'இதற்கு முன்பு நான் இந்தியாவில் இரண்டு சுற்றுப்பயணங்களைச் செய்தேன். அந்த எட்டு டெஸ்ட் போட்டிகளிலும் நான் மைதானத்திற்கு ட்ரிங்ஸ் மட்டுமே எடுத்துச் சென்றேன். எனக்கு இந்தப்பயணம் மிக நீண்டதாக இருந்தது.’ வியாழனன்று மாலை உஸ்மான் கவாஜா இதைச் சொல்லிக் கொண்டிருக்கும் போது அவரது முகத்தில் நிம்மதி உணர்வு தெளிவாகத் தெரிந்தது. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் (நரேந்திர மோதி ஸ்டேடியம்) அபாரமாக விளையாடி 180 ரன்கள் குவித்த உஸ்மான் கவாஜாவின் கிரிக்கெட் பயணத்த…
-
- 2 replies
- 486 views
- 1 follower
-
-
200 மீற்றர் பின்னோக்கிய நீச்சலில் அவுஸ்திரேலியாவின் கெய்லீ மெக்கோவ்ன் உலக சாதனை Published By: SETHU 10 MAR, 2023 | 04:50 PM பெண்களுக்கான 200 மீற்றர் பின்னோக்கிய (backstroke) நீச்சல் போட்டியில் அவுஸ்திரேலியாவின் கெய்லீ மெக்கோவ்ன் புதிய உலக சாதனை படைத்துள்ளார். சிட்னியில் இன்று ஆரம்பமான நியூ சௌத் வேல்ஸ் மாநில பகிரங்க நீச்சல் சம்பியன்ஷிப் போட்டிகளில் 2 நிமிடங்கள், 03.14 விநாடிகளில் நீந்திய புதிய உலக சாதனையை கெய்லி மெக்கோவ்ன் நிலைநாட்டினார். அமெரிக்காவின் ரேகான் ஸ்மித் 2019 ஆம் ஆண்டு உலக நீச்சல் சம்பியன்ஷிப் போட்டிகளில் 2 நிமிடம் 03.35 விநாடிகளில் நீந்தியமையே இதுவரை உலக சாதனையாக இருந்தது. 21 வயதா…
-
- 0 replies
- 209 views
- 1 follower
-
-
புனித பத்திரிசியார் கல்லூரி அபாரம்! பொன் அணிகளின் போரில் கிண்ணத்தை வென்றது 26 FEB, 2023 | 11:07 AM வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணக் கல்லூரிக்கு எதிராக இடம்பெற்ற 106 ஆவது பொன் அணிகளின் போரில் அபார ஆட்ட்டத்தை வெளிப்படுத்திய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அணி கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது. இரு அணிகளுக்குமிடையிலான 106 ஆவது கிரிக்கெட் போட்டி யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் இடம்பெற்றது. இப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 272 என்ற சிறந்த ஓட்ட எண்ணிக்கையை பெற்றுக்கொண்ட புனித பத்திரிசியார் கல்லூரி அணி இன்னிங்ஸ் மற்றும் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் யாழ்ப்பாணக் கல்லூரியை வீழ்த்தியது. …
-
- 2 replies
- 311 views
- 1 follower
-