Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. பெண் நிருபரால் தாக்கப்பட்ட சிரிய அகதி ஸ்பெயினில் கால்பந்து பயிற்சியாளர் ஆனார்! கடந்த சில நாட்களுக்கு முன் சிரியாவில் இருந்து ஹங்கேரிக்கு சென்ற அகதிகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது பெண் வீடியோகிராபரான பெட்ரோ லஸ்லா என்பவரால் ஒசமாக அகமது என்ற அகதி காலை இடறி கீழே விழ வைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்படியே தொலைகாட்சிகளில் ஒளிபரப்பாகியது. இந்த சம்பவத்தை தொலைகாட்சிகளில் பார்த்த மக்கள், அந்த பெண் நிருபரின் செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து நிருபர் பெட்ரோ லஸ்லாவை அவர் வேலை பார்த்து வந்த நிறுவனமும் பணியை விட்டு நீக்கியது. பெண் நிருபரால் தாக்கப்பட்ட சிரிய அகதி ஒசமா அப்துல் சிரிய நாட்டை சேர்ந்த புகழ்பெற்ற கால்பந்து அணிகளுக்கு…

  2. கிளென் மேக்ஸ்வெலுக்கு அபராதம்: ஆதரவும் எதிர்ப்பும் மேக்ஸ்வெல். | கோப்புப் படம்: கே.ஆர்.தீபக். மேத்யூ வேட் குறித்து பொதுவெளியில் வெளிப்படையாக விமர்சனம் செய்த அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெலுக்கு ஆஸ்திரேலிய லீடர்ஷிப் குழு அபராதம் விதித்துள்ளது. அபராதம் என்பதற்கும் மேலாக கிளென் மேக்ஸ்வெலின் கிரிக்கெட் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளதாகவே ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விக்டோரிய அணியின் கேப்டன் மேத்யூ வேட் யார் எந்த நிலையில் களமிறங்க வேண்டும் என்பதை தீர்மானிக்கிறார், நான் அவருக்குப் பின்னால் களமிறங்குவது வேதனை அளிக்கிறது, இது எனது டெஸ்ட் கிரிக்கெட் வாய்ப்பை பறித்துள்ளது என்று ஊடகங்களில் கிளென் மேக்ஸ்வெல்…

  3. இங்கிலாந்துக்கான டெஸ்ட் குழாமில் தசுன் ஷானக, தனஞ்சய டி சில்வா இங்கிலாந்து செல்லவுள்ள இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள குழாமில், புதுமுக வீரர்களான தசுன் ஷானக, தனஞ்சய டி சில்வா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அஞ்சலோ மத்தியூஸ் தலைமையில் 17 பேர் கொண்ட குழாமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தக் குழாம், அனுபவம் குறைவான ஓர் அணியாக இங்கிலாந்துக்குச் செல்லவுள்ளது. தனஞ்சய டி சில்வா, உள்ளூர்ப் போட்டிகளில் தமிழ் யூனியன் கழகம் சார்பாகச் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். தசுன் ஷானக, இப்பருவகாலத்தில் 3 போட்டிகளில் மாத்திரமே பங்குபற்றியிருந்தார். எனவே, அவரது உள்ளடக்கம், சிறிது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தவிர, விக்க…

  4. பயிற்சியாளராகின்றார் முரளிதரன்..! ஐ.பி.எல். 2015 தொடரில் ஐதராபாத் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார். முத்தையா முரளிதரன், டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 534 விக்கெட்டுகளையும் கைப்பற்றி, சர்வதேச அரங்கில் இருந்து விடைபெற்றார். அதன் பிறகு ஐ.பி.எல். போட்டிகளில் விளையாட ஆரம்பித்த முரளிதரன், 66 போட்டிகளில் 63 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் சென்னை, கேரளா மற்றும் பெங்களூர் அணிகளில் விளையாடியுள்ளார். 2010, 2011ம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். போட்டிகளில் வெற்றி பெற்ற சென்னை அணியிலும், 2010 ஆண்டு நடந்த சம்பியன்ஸ் லீக் போட்டியிலும் கிண்ணம் வென்ற சென்னை அணியிலும் இணைந்…

  5. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: இந்திய வீரர்கள் முதலிடம் – இலங்கை வீரர்கள்? சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி தலைவர் விராட் கோஹ்லி, வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளனர். அதேபோல, தென்னாபிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளரான றபாடா 3 இடங்கள் முன்னேறி 6 ஆவது இடத்தையும், தென்னாபிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் 3 இடங்கள் ஏற்றம் கண்டு 7ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர். தென்னாபிரிக்கா – சிம்பாப்வே கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் முடிவின் அடிப்படையில் அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது. இதன்படி, …

  6. துபாயை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று ஐசிசி மற்றும் பிசிசிஐ ஆதரவுடன் 7 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரை நடத்த முடிவு செய்துள்ளது. இந்த தொடருக்கு 7பிஎல் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 7 அணிகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர். 7 அணிகளுக்கும் அபுதாபி, அஜ்மான், துபை, புஜைரா, சார்ஜா, ரசல்-ஹைமா, உம் அல்-கைவாய்ன் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த போட்டியில் ஒவ்வொரு அணியிலும் 7 வீரர்கள் மட்டும் தான் இடம் பெறுவார்கள். போட்டியும் 7 ஓவர்களை கொண்டதாக இருக்கும். இந்த கிரிக்கெட் போட்டி அறிமுக விழா இந்த வார இறுதியில் துபாயில் நடக்கிறது. இதற்கான விழாவில் இந்திய அணியின் கேப்டன் டோன…

  7. பாகிஸ்தான் சூப்பர் லீக் T 20 மைதானத்தில் மோதிய வீரர் February 15, 2016 பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் வஹாப் ரியாஸ்- அகமது ஷேஷாட் மைதானத்தில் மோதிக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் நேற்று நடந்தப் போட்டியில் குயூட்ட கிளாடியட்டர்ஸ்- பெஷ்வர் ஷல்மி அணிகள் மோதின. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய குயூட்ட கிளாடியட்டர்ஸ் அணி விக்கெட்டுகளை இழந்து திணறிக் கொண்டிருந்தது. இந்நிலையில் தொடக்க வீரரான அகமது ஷேஷாட் 21 ஓட்டங்களில், வஹாப் ரியாஸின் பந்தில் ஸ்டெம்பை பறிகொடுத்தார். அப்போது வஹாப் ரியாஸ், ஷேஷாட்டை நோக்கி ஏதோ பேசிக் கொண்டே வந்தார். இதனால் ஷேஷாட் கோபமடைந்த நிலையில், வஹாப் ரியாஸ் அவரை தள்ளிவிட்டார். இதனையடுத…

  8. சுரேஷ் ரெய்னாவை ஒருநாள் அணியிலிருந்து நீக்கியிருக்கக் கூடாது: லஷ்மண் கருத்து சுரேஷ் ரெய்னா. | கோப்புப் படம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து சுரேஷ் ரெய்னாவை நீக்கியதால் இந்தியாவுக்கு ஒரு பேட்ஸ்மென் குறைவாக உள்ளது என்று கருதுகிறார் விவிஎஸ்.லஷ்மண். டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு லஷ்மண் இது குறித்து கூறியதாவது: ஒரு பேட்ஸ்மென் குறைவாக உள்ளது என்றே கருதுகிறேன். ரெய்னா நீக்கப்பட்டது தவறு. உலகக் கோப்பையில் அவர் நன்றாகவே ஆடினார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கடினமான தொடரை எதிர்கொண்டார் ரெய்னா. 6-ம் நிலையில் களமிறங்கி, புதிய களவியூக விதிமுறைகளின் கீழ் வெற்றிக்குத் தேவைப்படும் 8 அல்லது 10 ரன்களை எடுக்க நேரடியாக பெ…

  9. பிரபல கார்ப்பந்தய வீரர் மைக்கல் ஸுமார்க்கரால் நடக்க முடியாது-BBC செய்தி. பிரபல கார்ப்பந்தய வீரர் மைக்கல் ஸுமார்க்கரால் நடக்க முடியாது-BBC செய்தி. பிரபல கார்ப்பந்தைய வீரர் 47 வயதான மைக்கல் ஸுமார்க்கரால் நடக்க முடியாது என்று அவரது சட்டத்தரணி ஜெர்மனிய சஞ்சிகை ஒன்றுக்கு குறிப்பிட்டுள்ளதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது. 7 முறை போர்முலா 1 கார்பந்தய போட்டிகளில் சாம்பியன் பட்டம் வெற்றிகொண்ட மைக்கல் ஸுமார்க்கர், 2013 ம் ஆண்டு டிசம்பர் மாதம் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது விபத்தை சந்தித்தார். அவருடைய தலைப்பகுதியில் ஏற்பட்ட பலமான அடிக்குப் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் மைக்கல் ஸுமார்க்கர் ஆறு மாதங்…

  10. ‘பெர்லின் மாரத்தான்’- உலக சாதனை படைத்த கென்யா வீரர் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் ஒலிம்பிக் சாம்பியனான கென்யா வீரர் எலியாட் கிப்சோஜ் புதிய உலகசாதனை படைத்துள்ளார். ‘பெர்லின் மாரத்தான்’ போட்டி ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நேற்று நடைபெற்றது. இதில் ஒலிம்பிக் சாம்பியனான கென்ய வீரர் எலியாட் கிப்சோஜ் (33) பங்கேற்றார். இந்தப் போட்டியில் 42 கிலோ மீட்டர் பந்தய இலக்கை அவர் 2 மணி ஒரு நிமிடம் 39 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றார். இது உலக சாதனையாகவும் அமைந்தது. 2014-ம் ஆண்டில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் கென்ய வீரரான டென்னிஸ் கிமெட்டொ 2 மணி 2 நிமிடம் 57 விநாடிகளில் இலக்கை அடைந்ததே முந்தைய சாதனையாக இருந்தது. இதை 1 நிமிடம் 18 விநாடிகள் வித்தியாசத்தில் …

  11. நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்தை கைவிட்டது சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் (நெவில் அந்தனி ) கத்தார் - 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றும் நாடுகளின் எண்ணிக்கையை 48 ஆக அதிகரிக்கும் எண்ணத்தை கால்பந்தாட்ட சங்கங்களின் சர்வதேச சம்மேளனம் (பீபா) கைவிட்டுள்ளது. உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்குபற்றும் நாடுகளின் எண்ணிக்கையை 2026 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின்போது 32 இலிருந்து 48 ஆக அதிகரிக்கவுள்ளதாக பீபா தலைவர் ஜியான்னி இன்பென்டீனோ கடந்த தெரிவித்திருந்தார். இந்நிலையில், அந்தத் திட்டத்தை மாற்றி 2022 இல் நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். 2022 உலகக் கிண்ணப் போட்டிகளில் நாடுகளின் எண்ணிக்கை 48 ஆக அதிகரிக்கப்பட…

  12. உலகின் அதிவேக யுவதி 17 வயதுடைய கண்டேஸ் 2016-02-18 11:22:08 அமெ­ரிக்கப் பாட­சாலை ஒன்றில் கடந்த வருடம் நடை­பெற்ற மெய்­வல்­லுநர் போட்­டியில் அப்­போது 16 வய­தாக இருந்த கண்டேஸ் ஹில் என்ற யுவதி 100 ஓட்டப் போட்­டியை 10.98 செக்­கன்­களில் ஓடி கனிஷ்ட மட்ட சாத­னையை நிலை­நாட்­டினார். 16 வயது யுவதி ஒருவர் 100 மீற்றர் ஓட்டப் போட்­டியை 11 செக்­கன்­க­ளுக்குள் ஓடி முடிப்­ப­தென்­பது பெரிய விட­ய­மாகும். அத்­துடன் உலகின் அப்­போ­தைய அதி­வேக யுவதி (கனிஷ்ட பிரிவு) என்ற உத்­தி­யோ­க­பூர்வ பெரு­மை­யையும் கண்டேஸ் பெற்­றுக்­கொண்டார். இதனையடுத்து இவ்வருடம் தொழில்சார் மெய்­வல்­லுநர் என்ற அந்­தஸ்­துக்கு உயர்ந்­துள…

    • 1 reply
    • 448 views
  13. டிஎன்பிஎல் 2018- வலது கையாலும், இடது கையாலும் பந்து வீசி அசத்திய சுழற்பந்து வீச்சாளர் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் காஞ்சி வீரன்ஸ் அணியைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் இரண்டு கைகளாலும் பந்து வீசி அசத்தினார். #TNPL2018 #KV தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 3-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த 22-ந்தேதி நடைபெற்ற ஆட்டத்தில் விபி காஞ்சி வீரன்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கா…

  14. ஈடன் கார்டன் மைதானத்துக்கு ஸ்டீவ் வாஹ் புகழாரம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானம் இந்திய துணைக் கண்டத்தின் லார்ட்ஸ் என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாஹ் புகழாரம் சூட்டி யுள்ளார். இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானம் கிரிக்கெட் டின் மெக்காவாகத் திகழ்கிறது. இந்த நிலையில் அந்த மைதானத்தோடு ஈடன் கார்டனை ஒப்பிட்டுள்ள ஸ்டீவ் வாஹ், “இந்தியாவில் நான் கடைசியாக சுற்றுப்பயணம் மேற் கொண்ட தொடரில் ஈடன் கார்டனில் விளையாடியபோது 5 நாட்களுமே 90 ஆயிரம் இருக்கைகள் கொண்ட அந்த மைதானம் நிரம்பி வழிந்தது. அந்த மைதானம் இந்திய துணைக் கண்டத்தின் லார்ட்ஸ் என்பதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கு அது மிகவும் வியப்பான மைதானம் ஆகும். அங்கு சதமடித்த நான் அதிர்ஷ்…

  15. 'கங்குலி என்னிடம் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை!'- குமுறும் ரவி சாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி கிடைக்காததால், தான் மிகுந்த ஏமாற்றத்திற்குள்ளாகியிருப்பதாக ரவி சாஸ்திரி வேதனை தெரிவித்துள்ளார். அத்துடன் கங்குலி, நேர்காணலின்போது ஸ்கைப்பில் வந்து கூட தன்னிடம் கேள்வி கேட்வில்லையென்று குற்றஞ்சாட்டியுள்ளார். இந்திய அணியின் பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணியில் கங்குலி, சச்சின், வி.வி.எஸ். லக்ஷ்மண் ஆகியோருடன், பிசிசிஐ ஒருங்கிணைப்பாளர் சஞ்சய் ஜக்தாலேவும் இடம் பெற்றிருதார் பயிற்சியாளருக்கான நேர்காணல், கொல்கத்தா தாஜ் பெங்கால் ஹோட்டலில் நடந்துள்ளது. மாலை 5 மணி முதல் 6 மணி வரை நடந்த பயிற்சியாளருக்கான நேர்காணலில், ரவி சாஸ்திரி பங்கேற்றார். ஆனால…

  16. 2018 உலக கிண்ணத்துடன் ஓய்வு பெறுகிறார் வெய்ன் ரூனி. 2018 உலக கிண்ணத்துடன் ஓய்வு பெறுகிறார் வெய்ன் ரூனி. இங்கிலாந்து கால்பந்து அணியின் தலைவரும் நட்சத்திர வீரருமான வெய்ன் ரூனி, 2018 இல் ரஸ்யாவில் இடம்பெறவுள்ள கால்பந்து உலக கிண்ணப் போட்டிகளுடன் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். 30 வயதாகும் வெய்ன் ரூனி, இப்போது உலக கிண்ண தகுதிகாண் போட்டிகளில் இங்கிலாந்து சார்பில் பங்கேற்று வருகின்றார்.2014 ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்து அணியின் தலைவராக வெய்ன் ரூனி நியமனம் பெற்றார். அணித்தலைவராக நியமனம் பெற்றதன் பின்னர் இங்கிலாந்து அணி முக்கிய 6 தொடர்களில் பங்கெடுத்தது, ஆயினும் ஒன்றிலும் இங்கிலாந்து காலிறுதியை தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில்தான் தனத…

  17. கொரோனா வைரஸ் வகையைச் சேர்ந்த கொவிட் 19 நோய்த் தொற்று காரணமாக ஐரோப்பிய லீக் போட்டிகள் உட்பட அனைத்து சம்பியன்ஸ் லீக் போட்டிகளும் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய காற்பந்து சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் யூரோ 2020 க்கான பிளேஒப் போட்டிகள் ஏற்கனவே 2021 ஆம் ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் 2021 ஆண்டு இடம்பெறவிருந்த மகளிர் யூரோ கிண்ணத்தற்கான தகுதிப் போட்டிகள் உட்பட ஜூன் மாதத்தில் நடைபெறவிருந்த அனைத்து போட்டிகளும் மறு அறிவித்தல் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. புதன்கிழமை இடம்பெற்ற ஐரோப்பிய கற்பந்து சங்கங்களின் நிர்வாக குழு உறுப்பினர்களுக்கிடையிலான கலந்…

    • 0 replies
    • 447 views
  18. இங்கிலாந்து மண்ணை கௌவ்வும் இங்­கி­லாந்து - அவுஸ்­தி­ரே­லியா அணிகள் மோதப் போகும் ஆஷஸ் தொடரில் இங்­கி­லாந்து 5-–0 என வெள்ளையடிப்பு செய்யப்படும் என ஆஸியின் முன்னாள் பந்­து­வீச்­சாளர் கிளென் மெக்ராத் கூறி­யுள்ளார். கடந்த ஆஷஸ் தொடரில் இங்­கி­லாந்து 5–-0 என்ற கணக்கில் அவுஸ்­தி­ரே­லி­யா­விடம் தொடரை பறி­கொ­டுத்­தது. இதைத் தொடர்ந்து நடை­பெ­ற­வுள்ள தொட­ரிலும் இங்­கி­லாந்து அதே மாதிரி தோல்­வியைத் தழுவும் என மெக்ராத் எச்­ச­ரிக்கை விடுத்­துள்ளார். அவுஸ்­தி­ரே­லியா -– இங்­கி­லாந்து இடையே நடக்கும் இந்த டெஸ்ட் தொடர் ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் நடை­பெ­ற­வுள்­ளது. இது தொடர்­பாக அவுஸ்­தி­ரே­லிய வேகப்­பந்து வீச்­சாளர் கிளன் மெக்ராத் கூறு­கையில்இ அவுஸ்­தி­ரே­லி­யா­வுடன் மோத விரும…

  19. 2019ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்திற்கு தெரிவாவதில் பாகிஸ்தானுக்கு சிக்கலாம் ஒருநாள் கிரிக் கெட் தர­வ­ரி­சையில் பாகிஸ்தான் இது­வரை இல்­லாத அளவில் பின்­ன­டைவை சந்­தித்­துள்­ளது. இதனால் பாகிஸ்தான் தன்­னிச்­சை­யாக 2019 உலகக் கிண்­ணத்­திற்கு தகுதி பெறு­வதில் சிக்கல் ஏற்­பட்­டுள்­ளது. இங்­கி­லாந்து– - பாகிஸ்தான் அணி­க­ளுக்கு இடை­யி­லான ஐந்து போட்­டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்­கெட்­தொடர் முடி­வுக்கு வந்­தது. தொடர்ந்து 4 போட்­டி­களை வென்று 4–-0 என இங்­கி­லாந்து முன்­னி­லையில் இருந்­தது. கடைசிப் போட்­டியில் பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி பெற்று வைட் வொஷ்ஷை தவிர்த்­தது. இந்த தொடர் த…

  20. இந்த வருடத்தில் 1700 கோடிகள் சம்பாதித்த பெக்காம் December 27, 2015 இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் தலைவரான டேவிட் பெக்காமும் அவரது மனைவியும் இணைந்து இந்த வருடத்தில் மட்டும் கிட்டத்தட்ட 1700 கோடிகளை சம்பாதித்துள்ளனர் என கணக்கிடப்பட்டுள்ளது. பெக்காம் இங்கிலாந்து அணிக்காக விளையாடும் போது உலக அளவில் புகழ் பெற்றவர். குறிப்பாக தனது சிகை அலங்காரத்தின் மூலம் உலகின் கால்பந்து ரசிகர்களை கவர்ந்தவர். ஓய்வுபெற்ற பின்னரும் பெக்காமுக்கு ரசிகர்கள் மத்தியில் உள்ள ஆதரவு நீங்கவில்லை. கால்பந்தாட்டத்தில் சம்பாதித்த பணத்தின் மூலம் பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். அத்துடன் விளம்பரம் மூலமும் சம்பாதித்து வருகிறார். அவரது மனைவி விக்டோரியா பெஷன் டிசைனராக உள்ளார்…

  21. ஓய்வுபெற்றார் ஆர்சன் இங்கிலாந்தின் கால்பந்து கழக அணியான ஆர்சனல் கழக அணியின் பயிற்றுவிப்பாளர் பணியில் இருந்து ஆர்சன் வெங்கர் தன் பணியில் இருந்து ஓய்வுபெற்றார். கடந்த 22 ஆண்டுகளாக ஆர்சனல் அணிக்கு பயிற்சியாளராக கடமையாற்றிய ஆர்சன் வெங்கர் கடந்த 1996 ஆம் ஆண்டில் இருந்து ஆர்சனல் அணியின் பயிற்சியாளராக பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது. லண்டன் எமிரேட்ஸ் மைதானத்தில் ஆர்சனல் அணிக்கும், பர்ன்லி அணிக்கும் இடையே கால்பந்து போட்டி இடம்பெற்றது. இதில் ஆர்சனல் அணி 5-0 என்ற கோல் கணக்கில் பர்ன்லி அணியை வீழ்த்தியது. இப்போட்டியைக் காண 60 ஆயிரம் ரசிகர்கள் குழுமியிருந்தனர். இப் போட்டியினை அடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஆர்சனல் அண…

  22. இலங்கை பாராலிம்பிக் வீரர் அனீக் அஹமட் காலமானார் யூ.எல். மப்றூக், இலங்கை BBCCopyright: BBC அனீக் அஹமட்Image caption: அனீக் அஹமட் புற்று நோய் காரணமாக தனது காலொன்றை இழந்த பின்னரும், விளையாட்டில் தேசிய ரீதியாக தங்கப் பதக்கங்களை வென்று சாதனைகள் படைத்த இலங்கை - கிழக்கு மாகாணம் காத்தான்குடியைச் சேர்ந்த அனீக் அஹமட் இன்று திங்கட்கிழமை காலமானார்.2019ஆம் ஆண்டு கொழும்பு சுகததாஸ மைதானத்தில் நடைபெற்ற தேசிய பராமெய் வல்லுனர்போட்டியில் கலந்து கொண்ட அனீக் அஹமட், அதில் 3 தங்க பதக்கங்களை வென்றிருந்தார். அவரின் அந்தச் சாதனை குறித்து அப்போது பிபிசி தமிழ் - கட்டுரையொன்றை வெளியிட்டிருந்தது.உதைப்பந்து விளையாடும் போது - காலில் ஏற்பட்ட…

  23. Laureus விருது சச்சின் டென்டுல்கருக்கு 26 Views விளையாட்டு உலகின் உயரிய விருதான Laureus விருது இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டென்டுல்கருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் இந்த விருது விழா இடம்பெற்றுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக்கிண்ண இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற போது, சக வீரர்கள் சச்சின் டென்டுல்கரை தோளில் சுமந்து மரியாதை செலுத்திய நிகழ்வினை விளையாட்டு உலகின் சிறந்த தருணமாக கருதி அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அத…

  24. இந்தியா 35 ஓட்டங்களால் தோல்வி – சொந்த மண்ணில் ஒருநாள் தொடரையும் இழந்தது! இந்தியா – அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான 5 ஆவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 35 ஓட்டங்களால் தோல்வியடைந்து, ஒருநாள் தொடரையும் இழந்துள்ளது. இந்தியா – அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரரில் முதல் நான்கு போட்டிகளில் இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகளைப் பெற்றுள்ள நிலையில், 5-வதும் இறுதியுமான போட்டி டெல்லியில் நடைபெற்றது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய அவுஸ்ரேலியா அணி 9 விக்கெட்களை இழந்து 272 ஓட்டங்களை பெற்றது. அவ்வணி சார்பாக உஷ்மான் கவாஜா 100 …

  25. தென்ஆப்பிரிக்கா தொடரில் அஸ்வின், ஜடேஜா இடத்தை உறுதி செய்ய முடியாது: விராட் கோலி தென்ஆப்பிரிக்கா தொடரின்போது அஸ்வின் மற்றும் ஜடேஜாவிற்கு இந்தியாவின் ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்கும் என உத்தரவாதம் அளிக்க முடியாது என கோலி கூறியுள்ளார். இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று வகை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் டிசம்பர் மாதம் இறுதியில் இந்திய அணி தென்ஆப்பிரிக்கா செல்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 5-ந்தேதி தொடங்குகிறது. தென்ஆப்பிரிக்காவில் உள்ள ஆடுகளங்கள் வேகப்பந்து வ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.