விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
சென்னையில் நடைபெற்று வரும் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. முதலில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணியின் கேப்டன் பொலார்ட், பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் ஷர்மாவுடன் கே எல் ராகுல் களமிறங்கினார். 6 ரன் எடுத்திருந்தபோது, கே.எல். ராகுல் மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர் காட்ரல் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களம்புகுந்த கேப்டன் விராட் கோலியும் 4 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில், காட்ரல் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.பின்னர் 3ஆவது விக்கெட்டுக்கு ரோஹித் ஷர்மாவுடன், சிரேயாஸ் ஐயர் கரம் கோர்த்தார். இருவரும் நித…
-
- 5 replies
- 1.3k views
- 1 follower
-
-
இந்தியாவுடன் புதிய வீரரை களமிறக்கவுள்ள நியூசிலாந்து அணி By Mohamed Azarudeen - ©GETTY IMAGES தற்போது அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி குறித்த தொடருக்குப் பின்னர் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கே மூவகைப் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடவுள்ளது. ஐந்து T20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்டதாக அமைந்த இந்த சுற்றுப்பயணத்தில், முதற்கட்டமாக ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடர் இடம்பெறவுள்ளது. இந்த T20 தொடரில்…
-
- 0 replies
- 407 views
-
-
வெஸ்ட் ஹாமை வென்று கிண்ணத்தை நெருங்கும் லிவர்பூல் By Mohamed Shibly நீண்ட காலத்திற்குப் பின் ப்ரீமியர் லீக் பட்டத்தை வெல்ல காத்திருக்கும் லிவர்பூல் அணி வெஸ்ட் ஹாம் யுனைடட் அணிக்கு எதிரான போட்டியை 3-2 என்ற கோல் வித்தியாசத்தில் வென்று அந்த இலக்கை மேலும் நெருங்கியுள்ளது. தனது சொந்த மைதானமான அன்பீல்டில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற இந்தப் போட்டியில் வெற்றியீட்டியதன் மூலம் முதலிடத்தில் இருக்கும் லவர்பூல் இரண்டாவது இடத்தில் உள்ள நடப்புச் சம்பியன் மன்செஸ்டர் சிட்டியை விடவும் 22 புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளது. ல…
-
- 0 replies
- 804 views
-
-
முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் வெற்றி By Mohamed Azarudeen இன்று (9) யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று முடிந்திருக்கும் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி மற்றும் யாழ்ப்பாண கல்லூரி அணிகள் இடையிலான மாபெரும் டி20 கிரிக்கெட் போட்டியில் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி அணியினர் 46 ஓட்டங்களால் வெற்றி பெற்றனர். முதல் முறையாக ஒழுங்கு செய்யப்பட்ட இந்த டி20 போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற புனித பத்திரிசியார் கல்லூரி அணியினர், முதலில் துட…
-
- 0 replies
- 533 views
-
-
கோலியிடம் தனக்கு பிடித்த விடயம் எது என்பது பற்றி மனம் திறந்தார் சச்சின் விராட் கோலி, மனதளவில் மிகவும் பலமானவர் என்பதுடன் நெருக்கடியான சமயங்களில் சிறப்பாக ஆடக் கூடியவரென இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மன் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். விராட் கோஹ்லியின் ஆட்டம் குறித்து சச்சின் டெண்டுல்கர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளதுடன் அவரிடம் தனக்கு பிடித்த விடயம் எது என்பது பற்றியும் மனம் திறந்துள்ளார் . கோலி குறித்து ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே சச்சின் டெண்டுல்கர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். கோலியின் ஆட்டத்திறமை குறித்து சச்சின் மேலும் தெரிவிக்கையில், கோலி ஸ்ட்ரெயிட் பேட் முற…
-
- 0 replies
- 368 views
-
-
வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடிய ஆக்ரோஷமான இந்திய பந்துவீச்சாளர்களை உருவாக்குவேன்: அக்தர் by : Anojkiyan இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்குப் பயிற்சியளிக்க தான் எப்போதும் தயாராக இருப்பதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிவேக பந்துவீச்சாளர் சொயிப் அக்தர் தெரிவித்துள்ளார். மேலும், வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடிய ஆக்ரோஷமான பந்துவீச்சாளர்களை உருவாக்குவேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘என்னிடம் உள்ள அறிவைப் பரப்ப வேண்டும் என்பதே எனது விருப்பம். நான் கற்றுக்கொண்டது பந்துவீச்சுப் பயிற்சி பற்றி தான். அதனை அடுத்தவர்களுக்குக் கற்றுத் தர ஆர்வமாக உள்ளேன். இப்போதுள…
-
- 1 reply
- 966 views
- 1 follower
-
-
ஒலிம்பிக் போட்டிகளில் தங்களுக்கு கிடைத்த பதக்கங்களை வாயில் வைத்து கடிப்பது போன்று புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதை நம்மில் பலரும் அவதானித்துள்ளோம். தற்போது இடம்பெற்றுவரும் ரியோ ஒலிம்பிக்கில் மட்டுமல்ல ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பித்த காலத்தில் இருந்தே இந்த வழக்கம் இருக்கத்தான் செய்கின்றது. பதக்கங்களை கடிப்பதற்கான பதிலை பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில், இதற்கான பதில் தற்போது வெளிவந்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில், சர்வதேச ஒலிம்பிக் குழுமத்தின் தலைவராக இருந்த டேவிட் வெலனஷ்கி கூறுகையில், ஒலிம்பிக் போட்டிகளில் இவ்வாறு பதக்கங்களை கடிப்பது வழக்கமாக மேற்கொள்ளபடுகின்றது. இதற்காக ஒலிம்பிக் கட்டுபாடோ, சட்டமோ விதிக்கவில்லை. ஒருவகையில் புகைப்படவியலாளர்கள் …
-
- 3 replies
- 540 views
-
-
பரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றது இலங்கை (காணொளி இணைப்பு) ரியோ பரா ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை வீரர் பதக்கம் வென்றுள்ளார். ஈட்டி எறிதல் போட்டியில் எப் 46 பிரிவின் போட்டியில் தினேஷ் பிரியந்த ஹேரத் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இவர் இறுதி சுற்றில் 58.23 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/11300
-
- 0 replies
- 302 views
-
-
உலக சாம்பியன்ஷிப் தொடரில் நடால் வெற்றி! முபாதலா உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் துபாயில் நடந்து வந்தது. அபுதாபியில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், ஸ்பெயின் நாட்டின் ரஃபேல் நடால் - பெல்ஜியம் நாட்டின் டேவிட் கோஃபின் மோதினர். இதில் 6-4, 7-6 என்ற செட் கணக்கில், டேவிட்டை வீழ்த்தி நடால் வெற்றி பெற்றார். இதன் மூலம் சாம்பின்ஷிப் பட்டத்தை நடால் தக்க வைத்துள்ளார். நடால் முபாதலா உலக டென்னிஸ் சாம்பியன் ஷிப்பை கைப்பற்றுவது இது நான்காவது முறை. http://www.vikatan.com/news/sports/76487-rafael-nadal-wins-mubadala-tennis-championship.art
-
- 0 replies
- 265 views
-
-
இந்திய தொடர் மிகவும் கடினமாக இருக்கும்: ஆஸி. வீரர்களுக்கு ஸ்மித் எச்சரிக்கை இந்திய தொடர் மிகவும் கடினமாக இருக்கும் என்று ஆஸ்திரேலிய அணியின் வீரர்களுக்கு கேப்டன் ஸ்மித் எச்சரித்துள்ளார். ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கான இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 3-0 எனக் கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றிக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் வீர்ரகளுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில் இனி வரப்போகும் இந்திய தொடர் மிகவும் கடினமாக இருக்கப்போகிறது என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஸ்ம…
-
- 0 replies
- 332 views
-
-
உலக தடகள போட்டி: 1,500 மீட்டர் ஓட்டத்தில் கென்யா வீராங்கனைக்கு தங்கம் லண்டனில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன் ஷிப் தொடரில் பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் கென்யாவை சேர்ந்த வீராங்கணை தங்கம் வென்றார். லண்டன்: உலக தடகள சாம்பியன் ஷிப் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் கென்யா வீராங்கனை பெய்த் கிபிஜியான் தங்கம் வென்றார். அவர் பந்தய தூரத்தை 4 நிமிடம் 02.59 வினாடிகளில் கடந்தார். அமெரிக்காவை சேர்ந்த ஜெனீபர் சிம்சன் 4 நிமிடம் 02.76 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கமும், தென்னாப்பிரிக்க வீராங்கனை காஸ்டர் செமன…
-
- 0 replies
- 333 views
-
-
ஆசிய கோப்பை : இந்தியா.பாக்., மோதல் பிப்ரவரி 19, 2014. மிர்புர்: ஆசிய கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. இதில் ‘பரம எதிரி’களான இந்தியா, பாகிஸ்தான் அணிகள் வரும் மார்ச் 2ம் தேதி மோதுகின்றன. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏ.சி.சி.,) சார்பில், 12வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் வரும் பிப்., 25ம் தேதி முதல் மார்ச் 8ம் தேதி வரை நடக்கிறது. இதில் ‘நடப்பு சாம்பியன்’ பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, வங்கதேசம் அணிகளுடன், முதன்முறையாக ஆப்கானிஸ்தான் அணி பங்கேற்கிறது. இத்தொடருக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி ஒவ்வொரு அணிகளும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை ‘ரவுண்டு ராபின்’ முறையில் லீக் சுற்றில் மோதும். லீக் சுற்றின் முடிவில், புள்ளிப்பட்டியலில் முதலிரண்…
-
- 57 replies
- 3.9k views
-
-
பெயர்: விராட் கோலி... வேலை: செஞ்சுரி அடிப்பது... ஹாபி: ரெக்கார்ட் பிரேக்கிங்! Chennai: ஜூலை 21, 2016 - ஆன்டிகுவா. இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ். 28-வது ஓவர், புஜாரா அவுட். களமிறங்குகிறார் கேப்டன் விராட் கோலி. டெஸ்ட் கிரிக்கெட்டில் கால் பதித்து ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்திருந்தன. 41 போட்டிகளில் 12 அரை சதங்களும், 11 சதங்களும் அடித்திருந்தார். 169 ரன்தான் அவரது அதிகபட்சம். ஆனால், ‘டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்' என்ற அந்தஸ்து அவருக்கு இல்லை. சில நல்ல இன்னிங்ஸ்கள் ஆடியிருந்தாலும், ஒரு நாள் போட்டிகளில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்ததுபோல், டெஸ்ட் அரங்கில் தாக்கம் ஏற்படுத்த முடியவில்லை. காரணம், 200 என…
-
- 0 replies
- 518 views
-
-
பார்த்திவ் படேலை உங்களுக்கு நினைவிருக்கிறதா? பதினாறே வயதில் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உலகக் கோப்பை வரை போனாரே... அவர்தான். அணியில் இருந்து சில நாட்களில் நீக்கப்பட்டாலும் குறுகிய காலத்திலேயே நிறைய பணம் சேர்த்து கவலையில்லாமல் வசதியாக இருக்கிறார் பார்த்திவ். ஆனால், இதற்கு நேர்மாறான நிலையில், தமிழக விளையாட்டு வீரர் ஒருவர் இருக்கிறார். வியாசர்பாடியை அடுத்த கல்யாணபுரத்தைச் சேர்ந்த இந்த வீரரின் பெயர் அகஸ்டின். 17 வயதுக்கு உட்பட்ட இந்தியக் கால்பந்து அணியின் கோல்கீப்பர், பல போட்டிகளில், எதிரணியின் பந்துகளைத் தடுத்து இந்தியாவை வெற்றிபெறச் செய்யும் இந்த வீரர், வாழ்க்கையை நடத்த என்ன செய்கிறார் தெரியுமா? வியாசர்பாடியில் ரயில்களில் வரும் சர…
-
- 0 replies
- 1.3k views
-
-
வியாஸ்காந்திற்கு பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் விளையாட வாய்ப்பு ! 29 DEC, 2022 | 09:43 PM இடம்பெற்று முடிந்த லங்கா பிறீமியர் லீக் தொடரில் ஜெப்னா கிங்ஸ் (Jaffna Kings ) அணிக்காக விளையாடிய யாழ். வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்திற்கு பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. ஜெப்னா கிங்ஸ் அணியில் இளம் வீரரான வியாஸ்காந்த் சுழல்பந்து வீச்சில் 8 இன்னிங்ஸ்களில் 13 விக்கெட்டுகளை அசத்தினார். அத்துடன் சிறந்த வளர்ந்துவரும் வீரருக்கான விருதையும் வென்றிருந்தார். வியாஸ்காந்த் பங்களாதேஷ் பிரீமியர் லீக் அணியான Chattogram Challengers இனால் 2023 BPL க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். …
-
- 1 reply
- 275 views
- 1 follower
-
-
ஆஸ்திரேலியா ஓபன் : முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற பெலாரஸ் வீராங்கனை christopherJan 28, 2023 18:23PM மெல்போர்னில் இன்று (ஜனவரி 28) நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் வென்று பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். மெல்போர்னில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான இதில் சாம்பியன் பட்டத்தை தட்டிச்செல்வதற்காக டென்னிஸ் உலகின் முன்னணி வீரர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி மெல்போர்ன் ரோட் லேவர் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் கஜகஸ்தான் நாட்டைச் சே…
-
- 2 replies
- 710 views
- 1 follower
-
-
இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் கேலிக்கூத்தானது - அண்டர்சன் இந்தியாவிற்கு எதிராக 42 நாட்களில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள போட்டி அட்டவணை கேலிக் கூத்தானதென இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சன் தெரிவித்துள்ளார். இந்திய அணி இங்கிலாந்திற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அவ் அணியுடன் மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடவுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையில் முதலில் இருபதுக்கு - 20 போட்டித் தொடரும், அதன்பின் ஒருநாள் போட்டித் தொடரும், இறுதியில் டெஸ்ட் போட்டித் தொடரும் இடம்பெறவுள்ளது. இருபதுக்கு - 20 போட்டித் தொடர் அடுத்த மாதம் 3 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. ஒருநாள் தொடர் ஜூ…
-
- 0 replies
- 725 views
-
-
ஹங்கேரி கிராண்ட் பிரிக்ஸ் – லுயிஸ் ஹமில்டன் சம்பியன் போர்மியுலா வன் கார்ப்பந்தயப் போட்டியின்; ஹங்கேரி கிராண்ட் பிரிக்ஸில் மெர்சிடிஸ் அணிக்காக விளையாடும் இங்கிலாந்தின் லுயிஸ் ஹமில்டன் ( Lewis Hamilton ) சம்பியன் பட்டத்தினை கைப்பற்றியுள்ளார். ஓவ்வாரு வருடமும் போர்மியுலா வன் கார்ப்பந்தயப் போட்டி 21 சுற்றுக்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்றையதினம் 12-வது சுற்று ஹங்கேரியில் நடைபெற்றது. இதில் ஹமில்டன் முதலிடத்தினை பெற்று சம்பியன் கிணத்தினை கைப்பற்றியுள்ள அதேவேளை பெர்ராரி வீரர் செபாஸ்டியன் விட்டல் 2-வது இடமும், மற்றொரு பெர்ராரி வீரர் கிமி 3-வது இடமும் பெற்றுள்ளனர். இந்த வெற்றியின் மூ…
-
- 0 replies
- 331 views
-
-
பயிற்சியாளரை தேர்வு செய்ய கோஹ்லிக்கு அதிகாரம் ? ஜனவரி 14, 2015. மெல்போர்ன்: விராத் கோஹ்லிக்கு இந்த பொங்கல் மிகவும் சிறப்பானது. டெஸ்ட் அணியின் கேப்டன் அந்தஸ்துக்கு உயர்ந்த இவரை சுற்றித் தான் இந்திய அணியின் எதிர்காலம் உள்ளது. இவர் கை காட்டும் நபரை தான் புதிய பயிற்சியாளராக நியமிக்க வேண்டுமென ஆஸ்திரேலிய ஜாம்பவான் டீன் ஜோன்ஸ் வலியுறுத்தியுள்ளார். இந்திய அணியின் இளம் நட்சத்திரம் விராத் கோஹ்லி, 26. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அடிலெய்டு, சிட்னி போட்டியில் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டார். களத்தில் இவரது ஆக்ரோஷ செயல்பாடு அனைவரையும் கவர்ந்தது. 4 டெஸ்டில் 692 ரன்கள் குவித்த இவர், கேப்டன் பதவி தனது பேட்டிங்கை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை என்பதை நிரூபித்தார். …
-
- 0 replies
- 513 views
-
-
கடல் மட்டத்திலிருந்து குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் போட்டியை நடத்தக்கூடாது எனும் அறிவிப்பை சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) கைவிடாவிட்டால், 2010 உலகக் கிண்ண தகுதிப் போட்டிகளில் பங்கேற்கமாட்டோம் என கொலம்பியா எச்சரிக்கை விடுத்துள்ளது. 2500 மீற்றர் (8200 அடி) உயரத்துக்கு மேலான பகுதிகளில் சர்வதேசப் போட்டிகளை நடத்துவதால் வீரர்கள் மருத்துவ ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். இதனால், அம்மாதிரியான இடங்களில் போட்டிகளை நடத்த தடை விதிக்கப்படுவதாக பிபா சமீபத்தில் அறிவித்தது. இதனால், அம்மாதிரி மலைப் பிரதேசங்களில் போட்டிகளை நடத்திவந்த நாடுகள் அதிர்ச்சியடைந்தன. அந்த அறிவிப்பை கைவிடக்கோரும் போராட்டத்தில் கொலம்பியாவும் குதித்துள்ளது. பெரு, ஈக்குவடோர் நாடுகளும் இந்த அறிவிப்பால் ம…
-
- 0 replies
- 832 views
-
-
மைதானத்தில் மயங்கி விழுந்த கால்பந்து வீரர் மரணம் கால்பந்து போட்டியின்போது மாரடைப்பு ஏற்பட்டதால் மைதானத்தில் மயங்கி விழுந்த பெல்ஜியம் நாட்டின் இளம் கால்பந்து வீரர் கிரிகோரி மெர்டன்ஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 21 வயதுக்குட்பட்டோருக்கான பெல்ஜியம் தேசிய அணியில் இடம்பெற்றிருந்த துடிப்பான வீரர் கிரிகோரி மெர்டன்ஸ். தேசிய அணியில் சில போட்டிகளிலே விளையாடியிருந்தாலும், செர்கிள் புரூகஸ், லோகிரன் ஆகிய கழகங்களுக்காக சுமார் 100 போட்டிகளில் விளையாடிய அனுபவம் பெற்றவர். இவர் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற ரிசர்வ் அணி போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தபோதுஇ திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் நிலைகுலைந்த அவர் மைதானத்தில…
-
- 1 reply
- 372 views
-
-
என்ன நடந்ததென்று தெரியும் முன்பே இந்திய அணியை ஊதியது வங்கதேசம்: பிஷன் பேடி தோனி முன்பு போல் கேப்டன் கூல் இல்லை. அவர் அமைதியிழக்கிறார் என்று பிஷன் பேடி கூறியுள்ளார். | படம்: ஏ.பி. என்ன நடந்தது என்று தெரியும் முன்பே வங்கதேசம் இந்திய அணியை ஒருநாள் தொடரில் ஊதித் தள்ளியது என்று பிஷன் சிங் பேடி கூறியுள்ளார். மேலும் பேடி கூறும்போது, கேப்டன் தோனி முதன்முறையாக அமைதி இழந்து காணப்படுவதாகக் கூறினார். “முதல் முறையாக அவரது பேச்சில் அர்த்தமின்மை தெரிகிறது. அவர் இனி ‘கேப்டன் கூல்’ இல்லை என்பது தெரியவருகிறது. அவர் அமைதி குலைந்துள்ளார். இதைக் கூறும்போதே, இன்னொன்றையும் கூறிவிடுகிறேன், நான் எந்த ஒரு தனிப்பட்ட வீரரையும் குறைகூற விரும்பவில்லை. பவுலர் (முஸ்தபிசுர் ரஹ்மான்) இடித்துத் த…
-
- 0 replies
- 225 views
-
-
2014 உலகக் கோப்பை கால்பந்து பிரேசிலில் புதன், 31 அக்டோபர் 2007( 12:40 IST ) Webdunia 2014ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை பிரேசிலில் நடத்த உலக கால்பந்து கூட்டமைப்பு ஃபீபா வாக்களித்துள்ளது. 2014ம் ஆண்டு உலகக் கோப்பையை நடத்த பிரேசில் மட்டுமே ஒப்பந்த புள்ளிகளை அனுப்பியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பரிசீலனை செய்த உலகக் கால்பந்து கூட்டமைப்பின் செயற்குழு வாக்கெடுப்பின் மூலம் பிரேசிலை தேர்ந்தெடுத்துள்ளது. 5 முறை உலகக் கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ள பிரேசில், 1950 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்திய பிறகு இப்போது அடுத்த வாய்ப்பை பெற்றுள்ளது. 2010ம் ஆண்டு உலகக…
-
- 1 reply
- 1.6k views
-
-
சிஎஸ்கே- வுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு 'தடை' விதிக்க நீதிமன்றம் மறுப்பு! ஐபிஎல் தொடரில் 2 வருடங்கள் விளையாட விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்த வழக்கில், தடையை நீக்கி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சூதாட்ட விவகாரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்க தலா 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை அணியின் குருநாத் மெய்யப்பன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ராஜ்குந்த்ரா ஆகியோர் கிரிக்கெட் நடவடிக்கைகளில் ஈடுபட ஆயுட்கால தடையும் விதித்து லோதா கமிட்டி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் , சென்னை சூப்பர் கிங்ஸ் லிமிடெட் வழக்கு தொ…
-
- 0 replies
- 270 views
-
-
நல்ல பேட்ஸ்மேனை 3-ம் நிலைக்கு தியாகம் செய்தோம்: ரஹானே சார்பாக சுனில் கவாஸ்கர் இலங்கைக்கு எதிராக சதம் எடுத்த போது ரஹானே. | படம்: ஏ.எஃப்.பி. முன்னாள் இந்திய தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ராவின் 'இன்சைடர்' என்ற கிரிக்கெட் புத்தக அறிமுக விழாவில் ராகுல் திராவிட் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாடும் போது விவாதத்தின் மையம் அஜிங்கிய ரஹானேயை 5-ம் நிலையிலிருந்து 3-ம் நிலைக்கு மாற்றியது பற்றியதாகவே இருந்தது. ரோஹித் சர்மா அந்த டவுனில் திணறுகிறார் என்பதற்காக ரஹானேயை களமிறக்கியது இந்திய அணி நிர்வாகம், கொழும்பு பி.சரா ஓவல் மைதானத்தில் 2-வது இன்னிங்ஸில் அடித்த மேட்ச் வின்னிங் சதம் தவிர அவர் 3-ம் நிலையில் சோபிக்கவில்லை. இந்நிலையில், புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் ராகுல் திராவிட் அருகே ரஹான…
-
- 0 replies
- 308 views
-