விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
சாம்பியன்ஸ் லீக் ஒரே பிரிவில் பேயர்ன்மியூனிச், ஆர்சனல்! இந்த ஆண்டுக்கான (2015-16) சாம்பியன்ஸ் லீக் தொடர் அட்டவணை விபரம் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 'எப்' பிரிவில் ஜெர்மனி ஜாம்பவான் பேயர்மியூனிச் அணியுடன் ஆர்சனல், ஒலிம்பிகாஸ் மற்றும் டைனமோ சக்ரப் அணிகள் இடம் பெற்றுள்ளன. சாம்பியன்ஸ் லீக் இறுதி ஆட்டம் நடைபெறவுள்ள சான்சிரோ மைதானம் நடப்பு சாம்பியன் பார்சிலோனா அணி' ஈ' பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்த பிரிவில் பேயர் வெவர்கியூசன், ரோமா, பாடே போரிசவ் அணிகள் இருக்கின்றன.' ஏ 'பிரிவில் சக்தர் டொனாஸ்க், ரியல்மாட்ரிட், மால்மோ,பாரீஸ் செயின்ட் ஜெர்மயின் அணிகளும் 'பி ' பிரிவில் மான்செஸ்டர் யுனைடெட், பி.எஸ்.வி என்டோவன், சி.எஸ்.கே. மாஸ்கோவா, வுல்ஸ்பர்க் ஆகிய அ…
-
- 0 replies
- 281 views
-
-
துயரம் தரும் கணங்கள்: உலகக் கோப்பை தோல்வியை அசைபோடும் டிவில்லியர்ஸ் ஏ.பி.டிவில்லியர்ஸ். | கோப்புப் படம். 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதியில் கடைசி தருணத்தில் தோல்வியடைய நேரிட்ட தென் ஆப்பிரிக்க அணியின் மனநிலை குறித்து ஏ.பி.டிவில்லியர்ஸ் தற்போது தெரிவித்துள்ளார். ஐசிசி இணையதளத்தில் டிவில்லியர்ஸ் கூறும்போது, “மீண்டும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் குறித்து பேசுவதில் எனக்கு தயக்கம் எதுவுமில்லை. சில துயரம் தரும் கணங்கள் ஏற்பட்டன. ஆனால் எங்களிடம் நல்ல அதிர்வு இருந்தது. நாங்கள் கடைசி நேரத்தில் பலவீனமடைபவர்கள் அல்ல. நாங்கள் சில அபாரமான கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். எங்களுக்கும் அரையிறுதியில் வாய்ப்பு கிடைத்தது, துரதிர்ஷ்டவசமாக நாங்கள் கிடைத்த வாய்…
-
- 0 replies
- 647 views
-
-
”அனுபவ வீரர்கள் இல்லாமல் தடுமாறும் இலங்கை அணி” சங்கக்காரா December 20, 2015 இலங்கை அணித் தெரிவாளர்கள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று சங்கக்காரா தெரிவித்துள்ளார். இலங்கை அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் 122 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை படுதோல்வியடைந்தது. இந்நிலையில் ஹாமில்டனில் நடந்து வரும் 2வது டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணி தடுமாறி வருகிறது. இது பற்றி சங்கக்காரா கூறுகையில், “நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் துரதிர்ஷ்டவசமாக திரிமன்னே போன்ற அனுபவ வீரர்கள் இடம்பெறவில்லை. தற்போது இலங்கை டெஸ்ட்…
-
- 0 replies
- 862 views
-
-
Published By: VISHNU 23 FEB, 2025 | 09:47 PM (நெவில் அன்தனி) பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், பாத்திமா ஜின்னா பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்ற தெற்காசிய நகர்வல ஓட்டப் போட்டியின் சிரேஷ்ட பிரிவில் இலங்கையின் விக்னராஜா வக்சன் தங்கப் பதக்கத்தையும் கனிஷ்ட பிரிவில் சிவாகரன் துதிஹர்ஷிதன் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர். பாகிஸ்தானுக்கான இலங்கையின் பதில் தூதுவர் ரூபன் கிறிஸ்டி நேரடியாக போட்டி நடைபெற்ற இடத்திற்கு விஜயம் செய்து வெற்றிபெற்ற இலங்கை மெய்வல்லுநர்களைப் பாராட்டி கௌரவித்தார். 10 கிலோ மீற்றர் தூரம் கொண்ட சிரேஷ்ட ஆண்களுக்கான நகர்வல ஓட்டப் போட்டியை 31 நிமிடங்கள், 56.38 செக்கன்களில் நிறைவு செய்து தலவாக்கொல்லையைச் சேர்ந்த இராணுவ வீரர் விக்னராஜா வக்சன் முதலாம் இடத்தைப் …
-
- 1 reply
- 513 views
- 1 follower
-
-
2020 ஒலிம்பிக், 2022 பீபா உலகக் கிண்ணம் உள்ளிட்ட அனைத்து சர்வதேச விளையாட்டுக்களிலும் ரஷ்யா பங்குகொள்வதற்கு 4 வருடத் தடையை வாடா (Wada)எனப்படும் உலக ஊக்க மருந்து தடுப்பு நிறுவனம் விதித்துள்ளது. சுவிட்சர்லாந்தின் லொசேன் நகரில் நடத்த வாடாவின் நிர்வாகக் குழுக் கூட்டத்தின் போதே இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த வாடாவின் இந்த முடிவினை நடுவர் மேன் முறையீடு நீதிமன்றம் மூலம் மேல் முறையீடு செய்வதற்கு 21 நாள் அவகாசமும் ராஷ்யாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ரஷ்ய வீரர்களில் ஊக்க மருந்து பாவனை தொடர்பான ஆய்வகத் தரவுகளை ரஷ்யா மறைத்தமைக்காகவும், போலிச் சான்றிதழ்கள் தயாரித்தமையையும் கருத்திற் கொண்டே ரஷ்யாவுக்கு இவ்வாறு நான்கு ஆண்டுகள் அனைத்து சர்வதேச விளையாட…
-
- 0 replies
- 433 views
-
-
தொடரைக் கைப்பற்றியது தென்னாபிரிக்கா அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை தென்னாபிரிக்கா கைப்பற்றியது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் வென்றிருந்த தென்னாபிரிக்கா, புளூம்பொன்டெய்னில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் வென்றமையைத் தொடர்ந்தே இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கையிலேயே தொடரைக் கைப்பற்றியது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா அவுஸ்திரேலியா: 271/10 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: டார்சி ஷோர்ட் 69 (83), ஆரோன் பின்ஞ் 69 (87), மிற்செல் மார்ஷ் 36 (45), டேவிட் வோணர் 35 (23), அலெக்ஸ் காரி 21 (21) ஓட்டங்கள். பந்துவீச்சு: லுங்கி என்கிடி 6/58 [10], அன்றிச் நொர்ட்ஜே 2/59 [10],…
-
- 1 reply
- 444 views
-
-
இந்தியாவிலும் பகலிரவு டெஸ்ட் போட்டிகளுக்கு அனுமதி கோரல் கொல்கத்தாவில் கழக அணிகள் பங்கேற்கும் பகல் – இரவு டெஸ்ட் போட்டிகளை நடத்த இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அனுமதி தர வேண்டும் என பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவரும்இ முன்னாள் இந்திய அணித்தலைவருமான சௌரவ் கங்குலி கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய மண்ணில் முதன் முறையாக பகல் – இரவு டெஸ்ட் போட்டியை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை (பி.சி.சி.ஐ.) ஏற்பாடு செய்கிறது. இதில் நியூசிலாந்து அணி பங்கேற்கவுள்ளது. இதற்கு தயாராகும் வகையில் வரும் துலீப் சுற்றுத் தொடரை பகல் – இரவு போட்டிகளாக நடத்தவுள்ளனர். இதுகுறித்து கங்குலி கருத்து வெளியிடும்…
-
- 0 replies
- 271 views
-
-
சிறிலங்கா கிரிக்கெட்டில் குடும்ப அரசியல் ஆதிக்கம்! சிறிலங்கா கிரிகெட் அணியின் முகாமையாளராக சிறிலங்கா கிரிகெட் கட்டுப்பாட்டு சபைத்தலைவரும்,பாராளுமன்ற உறுபினரும் இனவாதியுமான அர்ச்சுனா ரணதுங்காவின் இளைய சகோதரர் நிசந்த ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.முன்ன
-
- 4 replies
- 2.9k views
-
-
ஒருவர் இயக்கிய சினிமா போல கிரிக்கெட்" போட்டிகள் நியாயமாக விளையாடப்படுவதில்லை-சூதாட்ட தரகர் புதுடெல்லி 2000 ஆம் ஆண்டில் ஹன்சே குரோஞ்ச் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய போது சூதாட்டம் நடந்ததாக புகார் எழுந்தது.இதில் சூதாட்டத் தரகராக செயல்பட்டதாக டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் சஞ்சீவ் சாவ்லா மீது குற்றம் சாட்டப்பட்டது. இதை தொடர்ந்து சஞ்சீவ் சாவ்லா, லண்டன் தப்பிச் சென்றார்.அந்நாட்டு குடிமகன் ஆனார். அவரை நாடு கடத்தும்படி, இங்கிலாந்து அரசுக்கு 2016ம் ஆண்டில் இந்திய அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில் இங்கிலாந்து நீதிமன்றம், சாவ்லாவை 28 நாட்களுக்குள் இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிட்…
-
- 2 replies
- 710 views
-
-
லீமனின் ஒப்பந்தம் நீடிப்பு அவுஸ்திரேலிய அணியின் பயிற்றுநர் டெரன் லீமனின் பயிற்றுநர் பதவிக்கான ஒப்பந்தம், 2019ஆம் ஆண்டுவரை நீடிக்கப்பட்டுள்ளது. அவ்வாண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ணம், ஆஷஸ் தொடர் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டே, இந்த ஒப்பந்தம் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் நீடிக்கப்பட்டுள்ளமை குறித்து மகிழ்ச்சி வெளியிட்ட டெரன் லீமன், 2019ஆம் ஆண்டுடன் தனது பதவியிலிருந்து விலகவுள்ளதாகவும் அறிவித்துள்ளார். 2013ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இடம்பெற்ற ஆஷஸ் தொடருக்குச் சில நாட்கள் முன்பாக, அவுஸ்திரேலியாவின் பயிற்றுநராக அறிவிக்கப்பட்ட டெரன் லீமன், அடுத்ததாக இடம்பெற்ற ஆஷஸ் தொடரை வென்றதோடு, தென்னாபிரிக்கா, இந்தியா, நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கெதிர…
-
- 0 replies
- 360 views
-
-
2-வது ஒருநாள்: மோர்டசா ஆல்ரவுண்ட் ஆட்டம்; வங்கதேசத்திடம் இங்கிலாந்தும் தோல்வி வெற்றிக்களிப்பில் வங்கதேசம். | படம்: ஏ.பி. மிர்பூரில் நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்று சமன் செய்தது வங்கதேசம். முதலில் பேட் செய்த வங்கதேசம் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 238 ரன்கள் எடுக்க தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 204 ரன்களுக்குச் சுருண்டு தோல்வி தழுவியது. ஜோஸ் பட்லர் 57 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து எல்.பி. ஆகிச் செல்லும் போது வங்கதேச வீரர் ஒருவர் ஸ்லெட்ஜ் செய்ய பதற்றம் அதிகரித்தது. இலக்கைத் துரத்திய இங்கிலாந்து அணி முதல் 10 ஒவர்களுக்குள்ளேயே 26/4 என்…
-
- 2 replies
- 662 views
-
-
நெய்மர் 2 ஆண்டு சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்: ஸ்பெயின் கோர்ட் பார்சிலோனா அணியின் முன்னணி வீரரும், பிரேசில் கால்பந்து அணியின் கேப்டனுமான நெய்மர் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று ஸ்பெயின் நாட்டின் கோர்ட் அறிவித்துள்ளது. 24 வயதே ஆகும் பிரேசில் நாட்டின் கால்பந்து வீரரான நெய்மர் உலகளவில் உள்ள தலைசிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். தற்போது மெஸ்சி, கிறிஸ்டியானா ரொனால்டோ ஆகியோருக்கு அடுத்தப்படியாக உள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் நெய்மர் பிரேசிலில் உள்ள சான்டோஸ் கிளப்பிற்காக வ…
-
- 0 replies
- 350 views
-
-
இந்தாண்டின் மிஸ் பண்ணியிருக்கவே கூடாத 10 டெஸ்ட் போட்டிகள்! #Top10Tests டெஸ்ட் கிரிக்கெட் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறதோ என பலரும் கடந்த சில ஆண்டுகளாக கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அது இனி தேவையில்லை. டெஸ்ட் கிரிக்கெட் எப்போதும் பெஸ்ட் கிரிக்கெட் தான், அதை கொண்டாடவும், வரவேற்கவும், ஆராதிக்கவும் கிரிக்கெட் ரசிகர்கள் எப்போதுமே தயாராக இருப்பார்கள் என்பதை இந்தாண்டு நிரூபித்தது. உலகம் முழுவதும் சுமார் 45 டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்திருக்கின்றன. பல தொடர்களில் பல்வேறு ஆச்சர்ய முடிவுகள் கிடைத்திருக்கின்றன. இந்தியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற அணிகள் எதிரணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்தன. அப்படி, இந்த ஆண்டு நடந்த தி…
-
- 0 replies
- 534 views
-
-
வடக்கு, கிழக்கில் கராத்தே வெற்றியாளர்கள் மட்டக்களப்பில் சர்வதேச பயிற்சியாளர்களினால் நடாத்தப்பட்டுவந்த பயிற்சி முகாம் நிறைவு நிகழ்வு மற்றும் திறந்த கராத்தே போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பதக்கங்கள் வழங்கும் நிகழ்வும் நேற்று முன்தினம் நடைபெற்றது. கடந்த 03 ஆம் திகதி தொடக்கம் மட்டக்களப்பு மாவட்ட சோட்டக்கான் கராத்தே சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச கராத்தே வீரர்களினால் பயிற்சி வகுப்புகள் மட்டக்களப்பு சோட்டாக்கான் கராத்தே சங்க பாடசாலையில் நடைபெற்று வந்தது. இந்த பயிற்சி வகுப்பில் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர். இந்த பயிற்சி வகுப்புகளை சர்தேச கராத்தே சாம்பியனும் சர்வதேச கராத்தே சங்கத்…
-
- 0 replies
- 524 views
-
-
டெஸ்ட் போட்டிகளுக்கு குட்பை சொல்கிறாரா அதிரடி வீரர் டிவில்லியர்ஸ்? அதிரடிக்கு இன்னொரு பெயர் டிவில்லியர்ஸ். இவருக்கு 31 பந்தில் சதமடிக்கவும் தெரியும், 200 பந்துகளைச் சந்தித்து 31 ரன் எடுக்கவும் தெரியும். தான் சார்ந்த அணிக்கு, ஆட்டத்தின் போக்கைப் பொறுத்து எவ்வளவு ரன்கள் தேவையோ அதற்கேற்ப கியரை மாற்றி பேட்டிங் செய்யும் வல்லமை இவருக்கு உண்டு. மூன்று ஃபார்மெட்டுகளிலும் மிகச்சிறப்பாக விளையாடக்கூடிய தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் டிவில்லியர்ஸ். தென் ஆப்பிரிக்க அணியைச் சேர்ந்த டிவில்லியர்ஸ் கடந்த ஜூன் மாதத்துக்கு பிறகு சர்வதேச போட்டிகளில் காயம் காரணமாக விளையாடவில்லை. இந்தியா மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்க அணி தோற்றதால் ஹாஷிம் ஆம்லா கே…
-
- 1 reply
- 505 views
-
-
மோசடியால் வாய்ப்புப் பெற்றதா கட்டார்? 2022ஆம் ஆண்டு கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தை நடாத்தும் வாய்ப்பை, மோசடி செய்து கட்டார் பெற்றது என்று கூறப்படுவது தொடர்பான அறிக்கையை, ஜேர்மனியப் பத்திரிகையான பில்ட் பிரசுரித்துள்ளது. சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் நன்னெறிக் கோவை மீறல் முன்னாள் விசாரணையாளரான மைக்கல் கர்சியாவின் 2014ஆம் ஆண்டு அறிக்கையையே தாம் பெற்றதாக, பில்ட் தெரிவித்துள்ளது. பிரசுரிக்கப்பட்ட அறிக்கையில், சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளன அதிகாரி ஒருவரின் 10 வயது மகளுக்கு, இரண்டு மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டன என்று கூறப்பட்ட விவரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கட்டாருக்…
-
- 0 replies
- 281 views
-
-
அறிமுக போட்டியிலேயே அசத்தல்: ஆஷஸ் தொடரை வென்றது அவுஸ்ரேலியா! ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியில், அவுஸ்ரேலியா அணி இன்னிங்ஸ் மற்றும் 14 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ள அவுஸ்ரேலியா அணி, தொடரையும் வென்றுள்ளது. மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று முன் தினம் (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்துக் கிரிக்கெட் அணி, 185 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜோ ரூட் 50 ஓட்டங்களையும் …
-
- 5 replies
- 451 views
- 1 follower
-
-
ஸ்மிருதி மந்தனா: 2021ம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக ஐ.சி.சி. தேர்வு செய்த இவர் யார்? 24 ஜனவரி 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஸ்மிருதி மந்தனா இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் ஓபனரான ஸ்மிருதி மந்தனா 2021ம் ஆண்டுக்கான உலகின் சிறந்த பெண் கிரிக்கெட் வீரராக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் (ஐசிசி) அறிவிக்கப்பட்டுள்ளார். ஆண்டின் சிறந்த பெண் கிரிக்கெட் வீரர் என்ற முறையில் அவர் ரேச்சல் ஹேகோ ஃபிளின்ட் கோப்பையையும் பெறுகிறார் என்று அறிவித்துள்ளது ஐ.சி.சி. இது தொடர்பாக ஐ.சி.சி. வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிரிக்கெட்டின் அனைத்து ஃபார்மெட்டிலும் 2021ம் ஆண்டில் சிறப்ப…
-
- 0 replies
- 379 views
- 1 follower
-
-
800 கி.மீ தூரம், 26 மணி நேர பயணம்... பாகிஸ்தானிலும் கிரிக்கெட் ஒரு மதம்! #CricketBackToPak மார்ச் 3, 2009. இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள். இலங்கை கிரிக்கெட் வீரர்களின் பஸ், லாகூர் கடாஃபி ஸ்டேடியத்தை நோக்கி பயணிக்கிறது. சுற்றிலும் பாதுகாப்பு. பஸ் லிபர்டி செளக் பகுதியில் சென்றபோது அங்கு ஊடுருவியது, துப்பாக்கி ஏந்திய 12 பேர் கொண்ட கும்பல். பாதுகாப்பு வீரர்கள் சுதாரிப்பதற்குள் நடந்து முடிந்துவிட்டது தாக்குதல். இலங்கை வீரர்கள் ஆறு பேர் காயம். ஆறு போலீஸார், பொதுமக்கள் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பலி. அஷன் ரஸா, பாகிஸ்தானைச் சேர்ந்த அம்பயர். லாகூர் டெஸ்ட் போட்டியின் ரிசர்வ…
-
- 0 replies
- 561 views
-
-
இலங்கையின் பாணியிலான கிரிக்கெட் மிக விரைவில் – ஹதுருசிங்க இலங்கையின் பாணியிலான கிரிக்கெட் மிக விரைவில் – ஹதுருசிங்க மேற்கிந்திய தீவுகள் அணி அவர்களது பாணியிலான கிரிக்கெட்டை 1980ஆம் ஆண்டுகளில் அப்போதைய அணித்தலைவர் கிளைவ் லொய்டின் வழிகாட்டலில் விளையாடியிருந்தது. இது நடந்து ஒரு தசாப்த காலத்தின் பின்னர் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை அணி அனைவரையும் கவரும் வகையில் தமது பாணியிலான கிரிக்கெட்டை உலகிற்கு காட்டியிருந்தது. எதிர்பார்ப்புகளைத் தாண்டி அப்போது பல சாதனைகளைப் புரிந்த இலங்கை அணி இன்று மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றது. இந்த ஆண்டில் மூன்று தடவைகள் 5-0 என ஒரு நாள் தொடர்களில் வைட் வொஷ் …
-
- 1 reply
- 522 views
-
-
நியூசிலாந்து கிரிக்கெட்டை விட நாமே பணக்காரர் - இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா By PRIYATHARSHAN 16 SEP, 2022 | 12:11 PM இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தற்போது நியூசிலாந்து கிரிக்கெட்டை விட பணக்காரர்களாக உள்ளது என அதன் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்தார். இலங்கை கிரிக்கெட்டின் நிலையான வைப்புத்தொகை தற்போது 40 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் காணப்படுகின்றது. இது கடந்த 2 - 3 வருடங்களாக தற்போதைய நிர்வாகத்தால் சேகரிக்கப்பட்டுள்ளது எனவும் ஷம்மி சில்வா தெரிவித்தார். இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா மேலும் கூறுகையில், தற…
-
- 6 replies
- 439 views
- 1 follower
-
-
112 ஆவது வடக்கின் போர் மார்ச் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பம்! மத்திய கல்லூரி மற்றும் சென்ஜோன்ஸ் கல்லூரிகள் மோதும் வடக்கின் போர் துடுப்பாட்ட போட்டி 8 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. வடக்கின் போர் என வர்ணிக்கப்படும் யாழ். மத்திய கல்லூரிக்கும், யாழ்.பரியோவான் கல்லூரிக்கும் (சென்.ஜோன்ஸ் கல்லூரி) இடையிலான 112 ஆவது மாபெரும் துடுப்பாட்ட போட்டி எதிர்வரும் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகி 3 தினங்கள் இடம்பெறவுள்ளது. அது விடயந்தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பும், வீரர்கள் ஒன்று கூடலும் இன்று பிற்பகலில் யாழ்.மத்திய கல்லூரியில் இடம்பெற்றது. இதன்போது கருத்துத் தெரிவித்த யாழ்.மத்திய கல்லூரியின் அதிபர் எஸ்.கே.எழில்வேந்தன் ஊடகங்களுக்கு இதனை தெரிவித்துள்ளா…
-
- 60 replies
- 4.1k views
-
-
மஹேலவின் ஒய்வு - மனம் திறக்கிறார் சங்கா டெஸ்ட் உலகில் மஹேலவுடன் இணைந்து அசைக்க முடியாத பல இணைப்பாட்டங்களை வழங்கி, சாதனைகளைப் படைத்து, இலங்கையின் வெற்றிக்குப் பெரும் பங்காற்றியவரும், தனிப்பட்ட வாழ்விலும் மஹேலவின் நெருங்கிய நண்பரான இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், விக்கெட் காப்பாளருமான குமார சங்க்கார மஹேலவின் ஓய்வு குறித்து தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார். மஹேலவின் ஓய்வு இலங்கைக்கு எப்படியானதாக இருக்கும்? ”மஹேல டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடைபெறுவது இலங்கைக்கு பாரிய நட்டமாகும். சரியான முறையில் சித்தித்து இந்தத் தீர்மானத்தை அவர் எடுத்திருக்கிறார் என்று நான் நினைக்கின்றேன். இந்த இடைவெளியை நிரப்ப அதிக காலம் எடுக்கும். இந்த இடைவெளி என்பது இன்னொருவருக்குக் கிடைத்த பெரும்…
-
- 0 replies
- 414 views
-
-
நெதர்லாந்து அணி தோல்வி அக்டோபர் 14, 2014. ரேய்க்ஜாவிக்: யூரோ கோப்பை கால்பந்து தொடரின் தகுதிச்சுற்றில் நெதர்லாந்து அணி 0–2 என ஐஸ்லாந்து அணியிடம் தோல்வியடைந்தது. ‘யூரோ’ கோப்பை தொடர் பிரான்சில் வரும் 2016, ஜூன் 10 முதல் ஜூலை 10 வரை நடக்கவுள்ளது. போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் பிரான்ஸ் மட்டும் தகுதி பெற்றுள்ளது. மீதமுள்ள அணிகளுக்கு தகுதிச் சுற்று போட்டிகள் நடக்கின்றன ரேய்க்ஜாவிக்கில் நடந்த இதன் ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் நெதர்லாந்து, ஐஸ்லாந்து அணிகள் மோதின. போட்டியின் 10வது நிமிடத்தில் கில்பி சிகுர்ட்சன் ஒரு கோல் அடித்தார். இதற்கு பதிலடி தர எதிரணியால் முடியவில்லை. தொடர்ந்து அசத்திய கில்பி (42வது நிமிடம்) மீண்டும் ஒரு கோல் அடித்து ஐஸ்லாந்து அணியை வலுப்பட…
-
- 10 replies
- 1k views
-
-
'சச்சின் ஆன்மா சாந்தியடைய வேண்டும்..' என செய்தி வெளியிட்ட ஆங்கில செய்தித்தாள்! ரசிகர்கள் ஆத்திரம் சென்னை: பவுன்சர் பந்து தாக்கி உயிரிழந்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் பிலிப் ஹியூக்ஸ் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய பிரபலங்கள் குறித்த டிவிட்டுகளை செய்தியாக்கிய தேசிய ஆங்கில நாளிதழ் ஒன்று, பிலிப் ஹியூக்ஸ்சுக்கு பதிலாக சச்சின் டெண்டுல்கர் ஆத்மா சாந்தியடையட்டும் என்று பிரிண்ட் செய்து ரசிகர்களிடம் வாங்கிக்கட்டிக் கொண்டுள்ளது. பவுன்சர் பந்தால் தலையில் படுகாயத்துடன் போராடி வந்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் பிலிப் ஹியூக்ஸ் நேற்று உயிரிழந்தார். இதையடுத்து பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கல்களை டிவிட்டர் மூலம் தெரிவித்திருந்தனர். 'சச்சின் ஆன்மா சாந்தியடைய வேண்டும்..' என செய்தி வெளியிட்ட ஆங்கில…
-
- 1 reply
- 914 views
-