விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7848 topics in this forum
-
சோகங்களை கடந்து வாசிம் அக்ரம் முகத்தில் மீண்டும் சிரிப்பு...! கராச்சியில் நடைபெற்ற ஃபேஷன் பேரேடில் வாசிம் அக்ரம் அவரது மனைவி ஷெனிரா ஆகியோர் பங்கேற்றனர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் சொந்த வாழ்க்கையில் பல சோகங்களை சந்தித்தவர். கிரிக்கெட்டில் உச்சத்தில் இருக்கும் போது, அதாவது அக்ரமின் 30வது வயதில் அவருக்கு சர்க்கரை நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் முறையான உடற்பயிற்சி மூலம் சர்க்கரை நோயையும் வென்று கிரிக்கெட்டில் சாதித்தார். இத்தனைக்கும் அவரது குடும்பத்தில் யாருக்கும் சர்க்கரை நோய் இருந்தது கிடையாது. கடந்த 1995ஆம் ஆண்டு ஹீயூமா என்பவரை வாசிம் அக்ரம் திருமணம் செய்தார். இந்த தம்பதிகளுக்கு 2 ஆண் குழந்தைகள் உண்டு. இந்ந…
-
- 0 replies
- 461 views
-
-
யூ டியூப்பில் புதிய சாதனை: 415 அடி உயரத்தில் இருந்து வீசப்பட்டு வலைக்குள் விழுந்த கூடைப்பந்து ( வீடியோ) ஆஸ்திரேலியாவின் கோர்டன் அணைக்கட்டில் இருந்து ஒரு புதிய சாதனை புறப்பட்டு வந்துள்ளது. சுமார் 460 அடி உயரமுள்ள இந்த அணைக்கட்டின் 415வது அடி உயரத்தில் இருந்து போடப்பட்ட கூடைப்பந்து மிகச்சரியாக வலைக்குள் சென்று விழுந்தது. இது ஒரு புதிய கின்னஸ் சாதனையும் கூட. இதற்கு முன் ராட்டர்டாம் நகரில் உள்ள 299 அடி உயரமுள்ள யூரேமாஸ்ட் கோபுரத்தில் இருந்து வீசப்பட்டதுதான் இதுவரை சாதனையாக இருந்தது. இணையங்களில் மிக வேகமாக இந்த வீடியோ பரவி வருகிறது. யூடியூப்பில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டும் பகிரப்பட்டும் இந்த வீடியோ காட்சி புதிய சாதனை படைத்துள்ளது. http://www.vikatan.com/n…
-
- 0 replies
- 331 views
-
-
Dhoni CSK-வில் இப்படி தான் சேர்ந்தார் ! - Former CSK Chief Selector V.B. Chandrasekhar
-
- 0 replies
- 1k views
-
-
பிரிமியர் லீக் கால்பந்து போட்டி: மீண்டெழுந்த சாம்பியன்கள்: சென்ற ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றாலும், இம்முறை தொடர்ந்து சொதப்பி வந்த செல்சி, ஜுவன்டஸ் அணிகள், சென்ற ஆண்டு சொதப்பினாலும் இந்த முறை முன்னணியில் இருக்கும் இன்டர் மிலன்,டார்ட்மண்ட் அணிகள், இரண்டு சிவப்பு அட்டைகள் பெற்று தோல்வியைத் தழுவிய அர்சனல் என இந்த வார பிரிமீயர் லீக் கால்பந்து போட்டிகள் எப்பொழுதும் போல் அமர்க்களமாகவே அமைந்தன அட்டைகளால் ஆட்டம் கண்ட அர்சனல் பிரிமியர் லீக்கின் இருபெரும் அணிகளான அர்சனலும், செல்சியும் ஸ்டாம்ஃபோர்ட் பிரிட்ஜ் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. செல்சி அணி இந்த சீசனில் தொடர்ந்து சொதப்பி வருவதால், அர்சனல் அணியின் கையே ஓங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் …
-
- 0 replies
- 503 views
-
-
பெர்த் டெஸ்ட் மூலம் அவுஸ்திரேலியா பல்வேறு சிறப்புக்களையும் இழந்தது [21 - January - 2008] [Font Size - A - A - A] பெர்த் டெஸ்டின் 3 ஆவது நாளில் அவுஸ்திரேலியா குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. 2 ஓவர்கள் வீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டது. இதையடுத்து அந்த அணிக்கு சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) அபராதம் விதித்துள்ளது. கப்டன் என்ற முறையில் பொண்டிங்குக்கு 20 சதவீதமும் மற்ற வீரர்களுக்கு தலா 10 சதவீதமும் போட்டிக் கட்டணத்தில் இருந்து அபராதமாக விதிக்கப்பட்டிருக்கிறது. பறிபோன சிறப்புகள் பெர்த் டெஸ்டில் தோல்வியடைந்ததன் மூலம் அவுஸ்திரேலியா நீண்ட காலம் தக்க வைத்திருந்த பல அரிய சிறப்புகளை இழந்திருக்கிறது. * பெர்த் மைதானத்தில் 10 ஆண்டுகளுக…
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி நியூஸிலாந்து சென்றது நியூஸிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவை மகளிர் கிரிக்கெட் தரப்படுத்தலுக்கான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் சர்வதேச மகளிர் இருபது 20 கிரிக்கெட் தொடரிலும் விளையாடவுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியினர் நேற்றைய தினம் நியூஸிலாந்து சென்றடைந்தனர். இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஷஷிகலா சிறிவர்தன தலைவியாக நியமிக்கப்பட்டுள்ளதுடன் சமரி அத்தப்பத்து உதவி அணித் தலைவியாக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாமில் இடம்பெற்ற உதேஷிகா பிரபோதினி சுகவீனமுற்றதன் காரணமாக அவருக்குப் பதிலாக அச்சினி குலசூரிய குழாமில் இணைத்துக்கொ…
-
- 0 replies
- 224 views
-
-
உலன்பாடர்: ஆசிய பெண்கள் குத்துச்சண்டை தொடரில் இந்தியாவின் மேரி கோம், சரிதா தேவி ஆகியோர் இறுதிப் போட்டிகளில் வெற்றிப் பெற்று தங்கப்பதக்கங்களை வென்றனர். மங்கோலியா நாட்டின் தலைநகர் உல்டான்பாடர் நகரில் பெண்களுக்கான 6வது ஆசிய குத்துச் சண்டை தொடர் நடைபெற்றது. இதில் இந்தியா, சீனா, மங்கோலியா உட்பட மொத்தம் 19 நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் நேற்று நடைபெற்ற 51 கிலோ எடைப் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம், சீனா வீராங்கனை ரென் கென்கன் ஆகியோர் மோதினர். இறுதிப் போட்டியில் வெற்றிப் பெற உலக சாம்பியனான ரென் கென்கன் கடும் முயற்சி மேற்கொண்டார். ஆனால் போட்டியின் முடிவில் 14-8 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியாவின் மேரி கோம் வெற்றிப் பெற்…
-
- 0 replies
- 578 views
-
-
ரஹானே நொறுக்க... சங்கக்கரா குவிக்க.. மியாஸகி அசத்த... பிளாஷ்பேக் 2015! டெல்லி: வழக்கம் போல 2015ம் ஆண்டிலும் விளையாட்டு உலகம் பல சாதனைகளை, மறக்க முடியாத நிகழ்வுகளைக் கண்டது. பல புதிய சாதனைகள் படைக்கப்ட்டன. பல பழைய சாதனைகள் தகர்க்கப்பட்டன. கிரிக்கெட், டென்னிஸ், கால்பந்து என சகல விளையாட்டிலும் சாதனைகள் படைக்கப்பட்டன. அவற்றிலிருந்து ஒரு சில. கோஹ்லியின் கேப்டன் சாதனை டெஸ்ட் கேப்டனாக இந்தியாவின் விராத் கோஹ்லி சாதனை படைத்த ஆண்டு இது. ஒரு கேப்டனாக அடுத்தடுத்து தொடர்ந்து நான்கு சதங்கள் போட்டு சாதனை படைத்தார் கோஹ்லி. இப்படி அடுத்தடுத்து நான்கு சதங்களை அடித்த முதல் டெஸ்ட் கேப்டன் என்ற சாதனை கோஹ்லிக்குச் சொந்தமானது. பீல்டிங…
-
- 0 replies
- 876 views
-
-
சென்னையில் இது கிரிக்கெட் காலம் ! சென்னையில் எப்போதெல்லாம் கிரிக்கெட் நடக்கிறதோ அப்போதெல்லாம் அதைக் காலி பண்ணுகிற மாதிரி மழை பெய்யும். இப்போதும் மழை பயத்தோடு ஆரம்பித்திருக்கிறது இந்தியாதென்னாப்பிரிக்கா டெஸ்ட் மேட்ச்! * ஆஸ்திரேலிய டூருக்காக இந்திய அணி வீரர்கள் மூன்று மாதம் ஆஸ்திரேலியாவிலேயே தங்கியிருந்தார்கள். எனவே, கடந்த மூன்று மாதங்களாக இவர்கள் தலைமையில் எந்த விழாக்களும் நடக்காததால், இந்த முறை சென்னை முழுக்க விழா மேளாதான் ! தென்னாப்பிரிக்க வீரர்கள் சென்ற இடமெல்லாம், ""உலகின் மிகச் சிறந்த டூரிஸ்ட் ஸ்பாட்டான தென்னாப்பிரிக்காவுக்கு வாருங்கள்' என்று வாயார அழைத்துக் கொண்டே இருந்தார்கள். காரணம்,தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் கிரெய்க் ஸ்மித்தான் இப்போது அந்த நாட்டின் டூர…
-
- 0 replies
- 1.1k views
-
-
அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனரில் ரவிந்து, ஷெலிண்டா சிறந்த வீரர்களாக முடிசூடல் By Mohammed Rishad - எதிர்கால நட்சத்திர வீரர்களை உருவாக்கும் நோக்கில் கல்வி அமைச்சின் பூரண மேற்பார்வையின் கீழ் இவ்வருடமும் நடைபெற்ற 35 ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வான தேசிய ரீதியிலான மெய்வல்லுனர் போட்டிகளில் வருடத்தின் அதி சிறந்த மெய்வல்லுனர் வீரராக சிலாபம், லுனுவிலை வேகட மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ரவிந்து டில்ஷான் பண்டார தெரிவானார். இம்முறை பாடசாலைகள் மெய்வல்லுனர் போட்டிகளில் 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை 47.53 செக்கன்க…
-
- 0 replies
- 476 views
-
-
மூன்றாவது இடத்துக்கு முன்னேறிய குகேஷ்! உலக செஸ் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை (கிளாசிக்கல்) சர்வதேச செஸ் சம்மேளனம் வெளியிட்டுள்ளது. அதன்படி முன்னாள் உலக செம்பியனான நோர்வேயின் மாக்னஸ் கார்ல்சென் 2,833 புள்ளிகளுடன் 1 ஆவது இடத்திலும், ஜப்பானின் ஹிகாரு நகமுரா 2,802 புள்ளிகளுடன் 2 ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். இதேவேளை கடந்த ஆண்டு டிசம்பர் உலக செஸ் செம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய சென்னையைச் சேர்ந்த குகேஷ் 2,787 புள்ளிகளுடன் 3 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அத்துடன் சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா 2,758 புள்ளிகளைப் பெற்று 8ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அவர் கடந்த ஆண்டு ஜூலை மாதத்துக்கு பிறகு டொப்-10 இடங்களுக்குள் வருவது இதுவே முதல்முறையாகும் என்பதும்…
-
- 0 replies
- 329 views
-
-
சச்சின் டெண்டுல்கர் முழங்கைகளில் அணியும் பட்டைகள் பற்றி எனக்கு ஆலோசனை கூறிய சென்னை ஓட்டல் ஊழியரை மீண்டும் சந்திக்க விரும்புகிறேன் என சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார். மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர். தனது பேட்டிங் திறமையால் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்திழுத்தவர். சச்சின் போன்ற பிரபலங்களை டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பின்தொடர்பவர்கள் அதிகம். அவர்கள் பதிவிடும் தகவல்களை, செய்திகளை லைக் பண்ணுவதும் இணையவாசிகளின் வாடிக்கையாக இருந்து வருகிறது. அவ்வகையில் சச்சின் டெண்டுல்கர் அவரது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட…
-
- 0 replies
- 619 views
-
-
ஏப்ரல் 5, 6ம் திகதிகளில் சுற்காட், ஜேர்மனியில் நடந்த கற்டான் உலகக்கிண்ணப் போட்டியில் கோகுலன் நரேந்திரன் என்ற தமிழர் வெற்றி பெற்றுள்ளார். CATANCATAN Worldchampionship 2025 in StuttgartCongratulations to Kohulan Narendran! He is the new CATAN World Champion.
-
- 0 replies
- 325 views
-
-
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிராக உலகம் முழுவதும் போராடி வரும் இந்த நேரத்தில், மேற்கிந்திய தீவுகள் ஆல்-ரவுண்டர் டுவைன் பிராவோ மக்களின் மன உறுதியை உயர்த்துவதற்காக ஒரு புதிய பாடலை வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிராக உலகம் முழுவதும் போராடி வரும் இந்த நேரத்தில், மேற்கிந்திய தீவுகள் ஆல்-ரவுண்டர் டுவைன் பிராவோ மக்களின் மன உறுதியை உயர்த்துவதற்காக ஒரு புதிய பாடலை வெளியிட்டுள்ளார். தன்னுடைய இன்ஸ்டகிராம் பதிவில் பிராவோ, உலக அளவில் 27.000 பேரைக் கொன்ற கோவிட்-19க்கு எதிரான ஒரு புதிய பாடலை வெளியிட்டார். “நாம் விட்டுக் கொடுக்கவில்லை. தொற்றுநோயால் ஏற்பட்ட இந்த பாதிப்பில், உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பிரார்த்தனை! ஒன்றாகப் போராடுவோம். இந்த பாதிப்பில் ஒரு நேர்மறைய…
-
- 0 replies
- 390 views
-
-
குலசேகர ஓய்வு இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் குலசேகர சர்வதேச டெஸ்ட் போட்டித் தொடர்களிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தனது ஓய்வு தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள குலசேகர, உடனடி அமுலுக்கு வரும் வகையில் டெஸ்ட் அரங்கில் இருந்து ஓய்வு பெறுகிறேன். இதுவே சரியான நேரம். டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெறுவதால் ஒருநாள் மற்றும் இருபது-20 தொடர்களில் பிரகாசமாக விளையாட முடியும் என நினைக்கின்றேன். 33 வயதுடை நுவான் குலசேகர இதுவரை 21 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி பந்து வீச்சில் 48 விக்கெட்டுகளையும் துடுப்பாட்டத்தில் ஒரு அரைசதம் அடங்கலாக 391 ஓட்டங்களை பெற்றுள்ளார். http://www.virakesari.lk/article/7024
-
- 0 replies
- 415 views
-
-
வரலாற்றில் இன்று (2007 ஜூன் 10): மஹேலவும் தோனியும் இணைப்பாட்டமாக 218 ஓட்டங்களைக் குவித்தனர் 2016-06-10 16:46:29 ஒருநாள் கிரிக்கெட் போட்டியொன்றில் இலங்கை அணியின் முன்ளாள் தலைவர் மஹேல ஜயவர்தனவும் இந்திய அணியின் தலைவர் மஹேந்திர சிங் தோனியும் இணைந்து இணைப்பாட்டமாக 218 ஓட்டங்களைப் பெற்றமை 9 வருடங்களுக்கு முன்னர் இதே போன்ற ஜூன் 10 ஆம் திகதி பதிவாகியது. 2007 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஆபிக்க XI, ஆசிய XI அணிகளுக்கிடையிலான அவ்ரோ- ஏசியா கிண்ணத் தொடரின் 3 ஆவது போட்டியில் மஹேலவும் தோனியும் இந்த இணைப்பாட்டத்தைப் பெற்றனர். ஆசிய அணியில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளின் வீரர்களும் ஆபிரிக்க அணியில் தென்…
-
- 0 replies
- 391 views
-
-
மர்லன் சாமுவேல்ஸ் மரியாதை தெரியாதவர்: பென் ஸ்டோக்ஸ் சாடல் AP படம். | தி கார்டியன். இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், தனது சுயசரிதை நூலில் மே.இ.தீவுகள் வீரர் மர்லான் சாமுவேல்ஸ் குறித்து காட்டமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மர்லன் சாமுவேல்ஸ் தகராறுக்கு புகழ்பெற்றவர், பிக் பாஷ் லீகில் ஷேன் வார்னுக்கும் இவருக்கும் மோதல் ஏற்பட்டது, பிறகு 2015-ல் கிரெனடா டெஸ்ட் போட்டியில் ஸ்டோக்ஸ் அவுட் ஆன பிறகு அவரை கேலி செய்யும் விதமாக சல்யூட் அடித்து சர்ச்சையில் சிக்கினார் சாமுவேல்ஸ். அதன் பிறகு உலகக்கோப்பை டி20 இறுதிப் போட்டியில் பென்ஸ்டோக்ஸ், மர்லன் சாமுவேல்ஸ் மீண்டும் நேருக்கு நேர் தகராறில் ஈடுபட்டனர். சாமுவேல்ஸ் 85 ரன்கள் எடுத்து …
-
- 0 replies
- 435 views
-
-
விராட் கோலி நடத்தை: சுனில் கவாஸ்கர் அதிருப்தி விராட் கோலி. | படம்: ஏஎப்பி. மொஹாலி டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்ட இறுதியில் விராட் கோலி மைதானத்தில் நடந்து கொண்ட விதம் சுனில் கவாஸ்கரின் அதிருப்திக்கு ஆளாகியுள்ளது. 3-ம் நாள் முடிவில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழந்து செல்லும் போது, விராட் கோலி தனது விரலை வாயில் வைத்து ‘உஷ்’ என்பது போல் செய்கை செய்தார். இந்தச் செய்கை குறித்து சுனில் கவாஸ்கர் கூறும்போது, “என்ன கூறியிருந்தாலும் சரி, இத்தகைய நடவடிக்கைகள் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டியவை. அவுட் ஆகி வெறுப்பில் செல்லும் வீரரின் வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சும் விதமாக செய்வது நாகரிகமல்ல. அவரே அவ…
-
- 0 replies
- 345 views
-
-
இந்திய அணி பயிற்சியாளரா? ஐ.பி.எல். ஆலோசகரா?: தவிப்புக்குள்ளான ராகுல் டிராவிட் உச்சநீதிமன்ற உத்தரவை பி.சி.சி.ஐ. அமல்படுத்த இருப்பதால் பிசிசிஐ அல்லது ஐ.பி.எல். ஆகிய இரண்டில் ஒன்றில் மட்டுமே பணியாற்ற முடியும் என்ற இக்கட்டான நிலையில் உள்ளார் டிராவிட். பிசிசிஐ நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வர லோதா தலைமையிலான கமிட்டி உச்சநீதிமன்றத்தில் தனது பரிந்துரைகளை சமர்பித்தது. இதில் பெரும்பாலானவற்றை நடைமுறைப்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதில் முக்கியமானது இரட…
-
- 0 replies
- 298 views
-
-
Olga Fikotova: காதலால் தேசங்களைக் கடந்த ஒலிம்பிக் வீராங்கனை - கெளரவித்து அழகு பார்த்த அமெரிக்கா 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES 1956. உலகம் அமெரிக்கா மற்றும் ஒருங்கிணைந்த சோவியத் ரஷ்யா என இரு பெரும் நாடுகளுக்குப் பின் வரிசை கட்டி நின்று கொண்டிருந்த கால கட்டமது. இன்று செக் குடியரசாக இருக்கும் நாடு, அன்று செக்கோஸ்லோவாக்கியாவாக இருந்தது. அந்நாட்டைச் சேர்ந்த சுமார் ஆறு அடி உயரம், அஜானுபாகுவான தோற்றம் கொண்ட ஒரு பெண் மருத்துவ கல்லூரி மாணவிக்கு விளையாட்டின் மீது அதீத காதல் இருந்தது. அவர் பெயர் ஓல்கா ஃபிகொடோவா (Olga Fikotova). கல்லூரியில் படித்த கொண்டிருந்த போது வட்டு எறித…
-
- 0 replies
- 395 views
- 1 follower
-
-
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் சனத் ஜயசூரியவின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட வேண்டும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் பரிந்துரைக்காது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் ஆணையத்தின் தலைமை அதிகாரி ஒருவர் கூறியதாவது, சாம்பியன்ஸ் கிண்ணத்திற்கு பின் ஜயசூரிய பதவி விலகுவார். அவர் அவ்வாறு செய்யாவிட்டால், அவருடைய பதவிக்காலத்தை நீட்டிக்க முடியாது. சமீபத்தில் அவரின் ஆபாசபடம் வெளியாகி மக்களிடையே மிகவும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவை அவர் தான் கசிய விட்டார் என கூறப்படுகிறது. எனினும், தற்போது வரை நிரூபிக்கப்படவில்லை. அவர் நாட்டிற்கும், விளையாட்டிற்கும் இழிவு ஏற்படுத்திவிட்டார். அதனால் அவர் இலங்க…
-
- 0 replies
- 761 views
-
-
டெஸ்ட் வாழ்வின் இறுதி நாளில் தோனி என்னிடம் கேப்டன்சியை வழங்கிய போது மறுத்தேன்: கங்குலி பகிர்வு கங்குலியின் கடைசி டெஸ்ட் போட்டியின் போது கேப்டன் தோனியும் கங்குலியும். - கோப்புப் படம். | எஸ்.சுப்பிரமணியம் சவுரவ் கங்குலி தனது கடைசி டெஸ்ட் போட்டியை நாக்பூரில் ஆடிய போது ஆட்டம் முடியும் தருணத்தில் கங்குலியை வழிநடத்துமாறு தோனி கேட்டுக் கொண்டார், அதனை ஏற்றுக் கொண்டார் கங்குலி, ஆனால் முன்னமேயே தன்னை கேப்டன்சி செய்யுமாறு தோனி கேட்டுக் கொண்டதையும் அதனை தான் மறுத்ததையும் தன் சுயசரிதையில் பதிவு செய்துள்ளார் சவுரவ் கங்குலி. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2008-ம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்ட…
-
- 0 replies
- 387 views
-
-
தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம், மூன்றாவது தங்கப்பதக்கத்தை வென்று அசத்தல் காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் விழாழனன்று தொடங்கியது. இன்று நடைபெற்ற ஆடவருக்கான பளுதூக்குதல் 77 கிலோ எடைப்பிரிவில் தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் தங்கம் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். தங்கப்பதக்கம் வென்ற சதீஷ்குமார், வேலுர் மாவட்டம் சத்துவாச்சாரியைச்சேர்ந்தவர். சதீஷ்குமார் ஸ்காட்லாந்தில் நடந்த முந்தைய காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடதக்கது. காமன்வெல்த் போட்டியில் இந்தியா தற்போது வரை 3 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. http://www.news.mowval.in/News/t…
-
- 0 replies
- 465 views
-
-
பாகிஸ்தானில் ஆசிய கிண்ண கிரிக்கெட்; பிரிதொரு நாட்டில் இந்திய போட்டிகள் Published By: VISHNU 24 MAR, 2023 | 01:46 PM (நெவில் அன்தனி) ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி இந்த வருடம் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. அதேவேளை, இந்தியா சம்பந்தப்பட்ட போட்டிகள் பிரிதொரு நாட்டில் நடத்தப்படவுள்ளது. இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையும் ஒரு தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தானில் நடத்துவதில் ஆரம்பித்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் முரண்பாடு நிலவியது. பாகிஸ்தானில் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி நட…
-
- 0 replies
- 282 views
- 1 follower
-
-
ஸ்பெஷலாக எதையாவது செய்யுங்கள் டோணி.. "சி.எஸ்.கே". கோச் பிளம்மிங் வேண்டுகோள்! துபாய்: இந்திய அணியை காப்பாற்ற கேப்டன் டோணி ஸ்பெஷலாக எதையாவது செய்தாக வேண்டும் என்று நியூசிலாந்து முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஐசிசி வெப்சைட்டில் பிளமிங் எழுதியிருப்பதாவது: சென்னை சூப்பர் கிங்ஸ்சில் நானும் ஒரு உறுப்பினர் என்றவகையில், டோணியை எனக்கு நெருக்கமாக நன்கு தெரியும். டோணி இன்னும் சிறப்பாக செய்ய முடியும் என்று நம்புகிறேன். ஸ்பெஷலாக எதையாவது செய்யுங்கள் டோணி.. டோணி இனிமேல்தான் தனது திறமையை காண்பிக்க வேண்டும் என்ற நிலை இல்லை. கடந்த உலக கோப்பை இறுதி போட்டியில், சிக்சர் அடித்து வெற்றி பெற்று பேட்டை தூக்கியபோதே அவரது திறமையை உலகம் பார்த்துவிட்டது. ஆனா…
-
- 0 replies
- 930 views
-