விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7861 topics in this forum
-
தான் இன்னும் ஓய்வு பெறவில்லை - கிறிஸ் கெய்ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்த பேச்சுக்களை மறுத்துள்ள கிறிஸ் கெய்ல், மீண்டும் டி-20 உலகக் கிண்ணத்தில் விளையாடுவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். யுனிவர்ஸ் பாஸ் என்று அழைக்கப்படும் 42 வயதான கிறிஸ் கெய்ல் இந்த டி-20 உலக கிண்ண கிரிக்கெட்டில் பிரகாசிக்கவில்லை. நேற்றைய அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 2 சிக்ஸருடன் 15 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். நடப்பு உலக கிண்ணதொடரில் அதிக வயது (42) வீரரான கிறிஸ் கெய்ல் 5 ஆட்டங்களில் விளையாடி வெறும் 45 ஓட்டங்களை மட்டுமே எடுத்துள்ளார். கெய்லின் ஆட்டத்திறன் பாதிப்பும் மேற்கிந்தியத்தீவுகள் அணி அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் வெள…
-
- 0 replies
- 548 views
-
-
தான் பந்து வீசியதிலேயே கடினமான பேட்ஸ்மென் யார்? - ஷோயப் அக்தர் கருத்து கொல்கத்தா, 1999, டெஸ்ட் போட்டியில் அக்தர் பந்தில் பவுல்டு ஆன சச்சின் டெண்டுல்கர். | கோப்புப் படம். வாசிம் அக்ரம் நடத்திய தி ஸ்போர்ட்ஸ்மென் என்ற ஷோ-வில் ஷோயப் அக்தர் தான் வீசியதிலேயே கடினமான பேட்ஸ்மென் யார் என்ற தகவலை வெளியிட்டார். “நிறைய பேட்ஸ்மென்களைக் கூற முடியும். ஆனால் அவர்களை விடவும் வீழ்த்துவதற்கு மிகவும் கடினமான வீரர் இன்சமாம் உல் ஹக்தான். அவரை நான் வலைப்பயிற்சியில் கூட வீழ்த்த முடிந்ததில்லை. அவரை விட என்னை சிறப்பாக ஆடிய வீரர் இல்லை என்றே கூறிவிடலாம். அவரது கால்நகர்த்தல்கள் விரைவாக இருக்கும். அவர் கிரீசில் பந்தை ஆட நிலைப்படுத்திக் கொள்ளும் விதம்…
-
- 0 replies
- 635 views
-
-
தாமதமாக வந்தால் 50 டாலர் அபராதம் - கும்ப்ளே அதிரடி! அணியின் பேருந்தை தவறவிட்டால், வீரர்களுக்கு 50 டாலர் அபராதம் விதிக்கப்படும் என இந்திய அணியின் பயிற்சியாளர் கும்ப்ளே அதிரடி காட்டியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். தற்போது இந்திய அணி, மேற்கிந்திய தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. ஜுலை 14ம் தேதி மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியத் தலைவர் அணியுடன், இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்த தொடருக்கு பிறகு, இந்திய அணி வலுவான இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுடன் மொத்தம் 13 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. தொடர்ச்சியான போட்டிகளுக்கு…
-
- 0 replies
- 299 views
-
-
தாய் மண்ணில் இறுதிக் களம்காணும் சாதனை நாயகர்கள்: இன்று உணர்ச்சிவசப்படலாம் என்கிறார் மஹேல இலங்கைக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச இன்று நடைபெறவுள்ள ஏழாவதும் இறுதியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டியானது இலங்கையின் முன்னாள் தலைவர்களும் சாதனை நடசத்திரங்களுமான மஹேல ஜயவர்த்ன, குமார் சங்கக்கார மற்றும் திலகரட்ன டில்சான் ஆகியோர் தமது சொந்த மண்ணில் பங்கேற்கும் இறுதி சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டியாகும். இரு அணிகளுக்குமிடையிலான ஏழு போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி 4-2 என கைப்பற்றியுள்ள நிலையில் இன்றை தினம் களமிறங்குகின்றது. இந்நிலையில் இலங்கை கிரிக்கெட்டில் புதிய அத்தியாத்தை ஏற்படுத்திய சர்வதேச அரங்கையே திரும்பிப் பார்க்க வைத்த நட்சத்திர வீரர்கள…
-
- 3 replies
- 711 views
-
-
தாய்நாட்டுக்கு ஆட ஐ.பி.எல் தொடரில் பங்கேற்க மறுத்த குசல் பெரேரா பந்தை சேதப்படுத்திய சர்ச்சையால் தடை விதிக்கப்பட்ட அவுஸ்திரேலிய உப அணித் தலைவர் டேவிட் வோர்னருக்கு பதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு அழைக்கப்பட்ட இலங்கையின் முன்னணி வீரர் குசல் பெரேரா அந்த அழைப்பை நிராகரித்துள்ளார். இதனை அடுத்து சன்ரைசர்ஸ் அணிக்கு இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ் ஒப்பந்தமாகியுள்ளார். இலங்கை டெஸ்ட் அணிக்கு திரும்பும் இலக்குடனும் சில காயங்களினைக் கருத்திற் கொண்டதன் காரணமாகவுமே குசல் பெரேரா இந்த ஆண்டு ஐ.பி.எல் அழைப்பை நிராகரித்ததாக அவரது முகாமையாளர் ரவி டி சில்வா உறுதி செய்துள்ளார். இலங்கை அணியின் அடுத்த தொடரான மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப்பயணத்தில் பங்கேற்பது…
-
- 0 replies
- 502 views
-
-
சிங்கப்பூர் ஓ சி பி சி தொகுதி உள்ளக அரங்கில் ஞாயிறன்ற ஆரம்பமான ஒன்பதாவது ஆசிய வலைபந்தாட்ட வல்லவர் போட்டிகளில் குழு பியில் இடம்பெறும் இலங்கை அணி தனது முதலாவது போட்டியில் சைனீஸ் தாய்ப்பேயின் சவாலை முறியடித்து 57 - 36 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்றது. (Photo: Netball Singapore) சைனீஸ் தாய்ப்பே அணியில் இடம்பெற்ற வீராங்கனைகளில் பெரும்பாலானவர்கள் கூடைப்பந்தாட்ட வீராங்கனைகள் என்பதால் அவர்கள் அதி வேகமாக விளையாடி இலங்கை அணிக்கு சவால் விடுத்த வண்ணம் இருந்தனர். எனினும் இவ் வருடப் போட்டிகளில் சம்பியனாகி அடுத்த வருட உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டிகளில் விளையாடுவதற்கான தகுதியைப் பெறவேண்டும் என்ற கங்கணத்துடன் விளையாடிய இலங்கை அணி வெற்றியை தனதாக்கிக்கொண்டது. இப்…
-
- 6 replies
- 1k views
-
-
-
- 0 replies
- 954 views
-
-
தாய்லாந்து பகிரங்க மெய்வல்லுநர் போட்டி இலங்கை வீர, வீராங்கனைகளுக்கு தங்கம் தாய்லாந்தின் பாங்கொக், தமாசாத் பல்கலைக்கழக விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 61ஆவது தாய்லாந்து பகிரங்க மெய்வல்லுநர் வல்லவர் போட்டிகளில் இலங்கையின் நிலானி ரத்நாயக்க தனது இரண்டாவது தங்கப் பதக்கத்தை நேற்று வென்றெடுத்தார். பெண்களுக்கான 3000 மீற்றர் தடைதாண்டி ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய நிலானி ரத்நாயக்க அப்போட்டியில் 10 நிமிடங்கள் 36.35 செக்கன்களில் ஓடிமுடித்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். அத்துடன் ஆண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியில் அரவிந்த சத்துரங்க (52.90 செக்.) தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார். கோலூன்றிப் பாய்த…
-
- 0 replies
- 268 views
-
-
தாவூத் இப்ராஹிமை டிரெஸ்சிங் அறையை விட்டு வெளியேற சொன்ன கபில்தேவ்! கடந்த 1986ஆம் ஆண்டு ஷார்ஜாவில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்தியா - பாகிஸ்தான் மோதல் அது. இறுதி ஆட்டத்திற்கு முன்னதாக மும்பை நிழலுக தாதா தாவூத் இப்ராஹிம் இந்திய வீரர்களின் டிரெஸ்சிங் அறைக்குள் வந்தார். அப்போது இவர்தான் தாவூத் இப்ராஹிம் என்று இந்திய அணியின் கேப்டன் கபில்தேவுக்கு தெரியவில்லை. அந்த சமயத்தில் டிரெஸ்சிங் அறைக்குள் தாவூத்தை பார்த்த கபில்தேவுக்கு கோபம் பொத்துக் கொண்டு வர, உடனடியாக வீரர்கள் அறையை விட்டு வெளியேறுங்கள் என்று கூறியுள்ளார். கபில்தேவை பார்த்து சிரித்துக் கொண்டே தாவூத் வீரர்கள் அறையை விட்டு வெளியேறி விட்டார். இந்த சம்பவம் குறித்து பின்…
-
- 0 replies
- 486 views
-
-
திசர பெரேரா அதிரடி : இங்கிலாந்தை வீழ்த்தியது இலங்கை இலங்கை ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை ஏ அணி டக்வர்த் லூவிஸ் முறைப்படி 48 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து லயன்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ஏ அணி சிறந்த ஆரம்ப துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய குசல் பெரேரா மற்றும் குணதிலக ஆகியோர் அரைச்சதத்தை கடந்து முதல் விக்கட்டுக்காக 123 ஓட்டங்களை பகிர்ந்தனர். இதில் குசல் பெரேரா 59 ஓட்டங்களையும், குணதிலக 64 ஓட்டங்களைய…
-
- 0 replies
- 349 views
-
-
திசரவின் போராட்டம் வீண்- போராடி தோற்றது இலங்கை! நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இலங்கை அணி 21 ஓட்டங்களால் போராடி தோல்வியடைந்துள்ளது. இந்த தோல்வியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்ககை அணி, 2-0 என நியூசிலாந்து அணியிடம் இழந்துள்ளது. மவுண்ட் மௌனன்குய் மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 319 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக ரோஸ் டெய்லர் 90 ஓட்டங்களையும், கொலின் மன்ரோ 87 ஓட்டங்களைய…
-
- 0 replies
- 820 views
-
-
-
- 3 replies
- 760 views
-
-
திட்டமிட்ட வகையில் டோக்கியோ ஒலிம்பிக் நடைபெறும் – மீண்டும் அறிவித்தது ஜப்பான்! by : Benitlas திட்டமிட்ட வகையில் டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என ஜப்பான் மீண்டும் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில் ஜப்பான் இது தொடர்பான அறிவித்தலை மீண்டும் ஒருமுறை அறிவித்துள்ளது. ஜப்பான் அமைச்சரவை செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சர்வதேச ஒலிம்பிக் குழு, டோக்கியோ நகர அரசாங்கம் மற்றும் அமைப்புக்களின் குழுக்களுடன் இது தொடர்பாக ஓன்றிணைந்து செயல்ப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.…
-
- 0 replies
- 364 views
-
-
திணறும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களுக்கு முரளி விஜய்யை உதாரணம் காட்டும் கவாஸ்கர் ஸ்விங் பவுலிங்கை கையாள்வதில் முரளி விஜய்யை ஆஸி.பேட்ஸ்மென்களுக்கு உதாரணம் காட்டும் சுனில் கவாஸ்கர். | கோப்பு படம். இங்கிலாந்து பிட்ச்களில் ஸ்விங் பந்து வீச்சில் ஆஸ்திரேலியா மண்ணைக் கவ்வியுள்ளது பற்றி சுனில் கவாஸ்கர் கூறும் போது முரளி விஜய்யின் உத்தியை ஆஸ்திரேலிய வீரர்கள் உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார். உலகின் அச்சமூட்டும் வேகப்பந்து வீச்சாளர்களான வெஸ்லி ஹால் தொடங்கி கிரிபித், ராபர்ட்ஸ், கார்னர், கிராப்ட், ஹோல்டிங் மார்ஷல், இங்கிலாந்தின் ஜான் ஸ்னோ, பாப் விலிஸ், கிறிஸ் ஓல்ட், போத்தம், நியூஸிலாந்தின் ரிச்சர்ட் ஹேட்லி, ஆஸ்திரேலியாவில் தாம்சன். லில்லி, லென் பாஸ்கோ, பாகிஸ்தானின் இம்ரான்,…
-
- 0 replies
- 286 views
-
-
திண்டுக்கல்லில் அஸ்வின், கோவையில் முரளி விஜய்..! ஏலம் போன கிரிக்கெட் வீரர்கள் தமிழ்நாடு பிரிமீயர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் ஏலம் இன்று நடைபெற்றது. அஸ்வினை திண்டுக்கல் அணியும், முரளி விஜயை கோவை அணியும், தினேஷ் கார்த்திக்கை தூத்துக்குடி அணியும் ஏலம் எடுத்துள்ளன. முதலாவது தமிழ்நாடு பிரிமீயர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளுக்கான வீரர்கள் ஏலம், சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, காரைக்குடி, கோவை ஆகிய 8 அணிகளின் உரிமையாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களது அணிக்கான வீரர்களை தேர்வு செய்தனர். இந்திய கிரிக்கெட்…
-
- 0 replies
- 412 views
-
-
தினம், தினம் நரக வேதனை: ஸ்ரீசாந்த் புலம்பல் டிசம்பர் 07, 2014. ‘‘கிரிக்கெட் சூதாட்ட புகாரின் பேரில் எனது கிரிக்கெட் வாழ்க்கையை ஐந்து நிமிடத்தில் பி.சி.சி.ஐ., முடித்து விட்டது’’ என, புலம்பியுள்ளார் ஸ்ரீசாந்த். ஆறாவது ஐ.பி.எல்., தொடரில் ராஜஸ்தான் அணிக்காக பங்கேற்றார் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த், 31. இவர் ‘பிக்சிங்’ செய்தது அம்பலமாக, டில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமினில் உள்ளார். இவருக்கு இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) வாழ்நாள் தடை விதித்தது. அதேநேரம், சூதாட்டம் குறித்து சுப்ரீம் கோர்ட் தனியாக விசாரிக்கிறது. தோனி, ரெய்னா உள்ளிட்ட 13 பேர் மீது புகார் உள்ளதாக தெரிகிறது. தவிர, சென்னை அணி உரிமையாளர் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தானின் ரா…
-
- 1 reply
- 618 views
-
-
தினேஷ் கார்த்திக் இந்திய கிரிக்கெட் அணிக்கு மீண்டும் தேர்வு: "கடின உழைப்பு தொடர்கிறது" என ட்வீட் 9 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@DINESHKARTHIK தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கே.எல்.ராகுல் தலைமையிலான இந்த அணியில் தமிழ்நாட்டை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். 36 வயதான தினேஷ் கார்த்திக் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 26 டெஸ்ட், 94 ஒருநாள் போட்டி மற்றும் 32 டி20 போட்டிகளில் தினேஷ் கார்த்திக் விளையாடியுள்ளார். கடைசியாக 2019ஆம் ஆண்டில் நியூசிலா…
-
- 2 replies
- 347 views
- 1 follower
-
-
தினேஷ் கார்த்திக் தலைவராக தேர்வு! இங்கிலாந்தில் இந்திய அணி விளையாடும் இரு பயிற்சி டி20 ஆட்டங்களுக்கு தினேஷ் கார்த்திக் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. கடந்த வருடம் ரத்தான 5 வது டெஸ்ட், இன்று தொடங்கியுள்ளது. டி20 தொடருக்கு முன்பு இந்திய அணி - டெர்பிஷைர், நார்தாம்ப்டன்ஷைர் ஆகிய அணிகளுக்கு எதிராக இரு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் பயிற்சி ஆட்டம் இன்றும் கடைசிப் பயிற்சி ஆட்டம் ஞாயிறன்றும் நடைபெறவுள்ளன. இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 ஆட்டம் வியாழன்று செளதாம்ப்டனில்…
-
- 1 reply
- 544 views
-
-
தினேஷ் கார்த்திக்கின் சாகச துடுப்பாட்டம் (காணொளி)
-
- 8 replies
- 1.6k views
-
-
தினேஷ் கார்த்திக்கை தவிர அனைத்து கிரிக்கெட் வீரர்களையும் வெறுக்கிறேன்: தீபிகா பல்லிகல் ) புதுடெல்லி: தினேஷ் கார்த்திக்கை தவிர அனைத்து கிரிக்கெட் வீரர்களையும் தாம் வெறுப்பதாக ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகல் கூறியுள்ள நிலையில், 12 நாடுகளில் மட்டுமே விளையாடப்படக் கூடிய கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்கும் முறையை பார்த்து, மற்ற விளையாட்டு சங்கங்கள் பிசிசிஐ-யிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என இந்திய பேட்மிட்டன் வீராங்கனையான ஜவாலா கட்டா அறிவுறுத்தி உள்ளார். ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த தீபிகா – ஜோஷ்னா ஜோடி, இங்கிலாந்தின் ஜெனி டுன்காஃப், லாரா மஸரோ ஜோடியை வீழ்த்தி தங்கம் வென்றது. இது காமன…
-
- 1 reply
- 903 views
-
-
தினேஷ் சந்திமால், திசார பெரேரா இராணுவ அதிகாரிகளாக நியமனம்.! இலங்கை கிரிக்கட் அணியின் வீரர்களான தினேஷ் சந்திமால் மற்றும் திசார பெரேரா ஆகியோர் இராணுவ அதிகாரிகளாக இன்று (வெள்ளிக்கிழமை) நியமிக்கப்பட்டனர். இலங்கை கிரிக்கட் அணியின் முன்னணி வீரர்களான தினேஷ் சந்திமால் மற்றும் திசார பெரேரா ஆகியோர் இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனெரல் சவேந்திர சில்வாவினால் இன்றைய தினம் இவ்வாறு நியமிக்கப்பட்டனர். மேலும் குறித்த இருவரும் தன்னார்வ இராணுவத் தளபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். குறித்த நியமனம் இன்று வழங்கப்பட்டுள்ள நிலையில், நியமனத்தில் பின்னர் குறித்த இரு வீரர்களும் இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனெரல் சவேந்திர சில்வாவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே, இ…
-
- 0 replies
- 711 views
-
-
தினேஸ் சந்திமலுக்கு சில நாட்கள் ஓய்வு தேவை ; தரங்க தினேஸ் சந்திமல் மீண்டும் தனது சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்துவதற்கு சில தினங்கள் அவருக்கு ஓய்வு தேவைப்படுகிறது என இலங்கை அணியின் தற்போதைய தலைவர் உபுல் தரங்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தினேஸ் சந்திமல் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் என்பது அனவரும் அறிந்த விடயம். அவருக்கு நேற்று இடம்பெற்ற நான்காவது போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டமையானது மிகவும் கடினமான தீர்மானமாகும். ஏனெனில் அணியில் இடம்பிடித்துள்ள அனுபவம் வாய்ந்த வீரர் அவர் மட்டும்தான். எனினும் அவரது துடுப்பாட்டம் கடந்த சில போட்டிகளில் சிறப்பானதாக அமையவில்லை. இதனால் அவருக்கு சில நாட்களுக்கு ஓய்வளிப்பது சிறந்த விடயம்.…
-
- 0 replies
- 324 views
-
-
தினேஸ் சந்திமால் வைத்தியசாலையில்..! (படங்கள் இணைப்பு) இலங்கை கிரிக்கெட் அணியின் உபதலைவர் தினேஸ் சந்திமால் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. நேற்று முன்னதினம் இடம்பெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றின் போது வலது கையில் ஏற்பட்ட உபாதை காரணமாகவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உபாதைக்குள்ளான சந்திமாலுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு மேலும் பல மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவிக்கின்றது. மருத்துவ பரிசோதனைகளுக்கு பின்னரே இவருடைய உடல் நலம் தொடர்பில் கருத்து தெரிவிக்க முடியும் எனவும் கிரிக்…
-
- 0 replies
- 575 views
-
-
திமுத் கருணாரத்ன கைது இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன பொரல்லை கிங்ஸி ஹோர்டன் ஒழுங்கையில் இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவம் ஒன்றின் பேரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 5.15 மணிக்கு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொரல்லை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள திமுத் கருணாரத்னவை இன்று பொலிஸில் தடுத்து வைத்திருந்து நாளை (01) திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. இவர் செலுத்திய மோட்டார் கார் முச்சக்கரவண்டியொன்றுடன் மோதியதனால் முச்சக்கர வண்டியின் சாரதி சிறுகாயங்களுக்கு இலக்காகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்…
-
- 0 replies
- 451 views
-
-
திமுத் கருணாரத்னவிற்கு 7500 அமெரிக்க டொலர்கள் அபராதம் மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்னவிற்கு இலங்கை கிரிக்கெட் சபை 7500 அமெரிக்க டொலர்களை அபராதமாக விதித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இதனை குறிப்பிட்டுள்ளது. மதுபோதையில் வாகனத்தினை செலுத்தி பொரளை கின்சி வீதியில் விபத்தினை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். மேலும் இந்த விபத்தில் சிறு காயங்களுக்கு உள்ளான முச்சக்கரண்டிச் சாரதி, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பாக, தி…
-
- 0 replies
- 576 views
-