விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7840 topics in this forum
-
* முதலிடத்தை இழந்துவிடும் அபாயம் அவுஸ்திரேலிய - நியூஸிலாந்து அணிகளிடையே நியூஸிலாந்தின் வெலிங்டனின் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி பத்து விக்கெட்டுகளால் அதிர்ச்சித் தோல்வியடைந்துள்ளது. அண்மையில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்று முடிவடைந்த முக்கோண கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் கடைசி இரு போட்டிகளிலும் தோல்வியடைந்து இங்கிலாந்திடம் வெற்றிக் கிண்ணத்தை பறிகொடுத்த அவுஸ்திரேலிய அணி நேற்று நியூஸிலாந்துடன் தோல்வியுற்றதன் மூலம் தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. சர்வதேச ஒருநாள் போட்டித் தரவரிசையில் 2002 ஆம் ஆண்டிலிருந்து அவுஸ்திரேலிய அணி தொடர்ந்தும் முதலிடத்திலிருந்து வரும் நிலையில் நேற்றைய தோல்வியின் மூலம் அவு…
-
- 3 replies
- 1.2k views
-
-
இலங்கை, பங்களாதேஷ் நாடுகளின் 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு இடையில் இம்மாதம் நடைபெறவுள்ள இரண்டு நாள் கிரிக்கெட் தொடர்கள் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களை முன்னிட்டு 31 வீரர்கள் கொண்ட இலங்கையின் முன்னோடி கிரிக்கெட் குழாம் பெயரிடப்பட்டுள்ளது. கனிஷ்ட தேசிய தெரிவாளர்களினால் பெயரிடப்பட்டுள்ள இக் குழாமில் வட பகுதியைச் சேர்ந்த இரண்டு கிரிக்கெட் வீரர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். யாழ். செய்ன்ற் ஜோன்ஸ் கல்லூரியைச் சேர்ந்த பரமானந்தம் துவாரகசீலன், செபமாலைப்பிள்ளை ப்ளெமின் ஆகிய இருவருரே வட பகுதியிலிருந்து 19 வயதுக்குட்பட்ட இலங்கை குழாமில் இடம்பிடித்துள்ளவர்களாவர். வட பகுதியிலிருந்து கிரிக்கெட் வீரர்களை தேசிய அணியில் விளையாட வைப்பதற்கான முயற்சிகளை இலங்கை கிரிக்கெட் நிறு…
-
- 0 replies
- 431 views
-
-
மாலிங்க இறுதிப்போட்டியில் விளையாடலாம்: மைக்கேல் டி சொய்சா நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் லசித் மாலிங்க விளையாட கூடிய சாத்திய கூறுகள் இருப்பதாகவும் எனினும் அதனை உறுதியாக கூறமுடியாது எனவும் அணியின் மேலாளர் மைக்கேல் டி சொய்சா தெரிவித்தார். இதுதொடர்பில் கருத்து தெரிவித்த அவர், லசித் மாலிங்க வலைப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார். உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னர் பயிற்சி போட்டிகளில் விளையாடுவார். இதேவேளை 29 ஆம் திகதி வெலிங்கடனில் நடைபெறவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் விளையாட கூடிய சாத்தியகூறுகள் உள்ளன. எனினும் அவரை நாங்கள் தொந்தரவு செய்யமாட்டோம். மேலும் அவர் விரைவாக சுகம் பெறுவதற்க…
-
- 1 reply
- 359 views
-
-
ஆசிய கிண்ண உதைபந்தாட்டம் இறுதியாட்டத்தில் ஈராக் - சவூதி அணிகள் இன்று மோதுகின்றன ஆசிய நாடுகளின் உதைபந்தாட்ட அணிகளிடையே நடத்தப்பட்டு வரும் உதைபந்தாட்டப் போட்டியின் இறுதிப்போட்டி இன்று 29 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஈராக் சவூதி அரேபிய அணிகளிடையே நடைபெறவுள்ளது. ஈராக்- தென்கொரியா அணிகளிடையே நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ஈராக் அணி வெற்றிபெற்றது. இப்போட்டியின் ஆரம்பத்தில் கொரிய அணியே வெற்றிபெறுமென்று அவதானிகள் கருத்துத் தெரிவித்திருந்தனர். போட்டி ஆரம்பமாகி இடைவேளை வரை இரு அணிகளும் கோல்கள் எதனையும் போடவில்லை. இடைவேளையின் பின்னர் போட்டி ஆரம்பமானதும் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றபோதிலும், இரு அணிகளும் பல கோல்கள் போடும் கட்டங்களை அடுத்தடுத்து தவறவ…
-
- 0 replies
- 783 views
-
-
மிட்செல் ஜான்சன் வேகத்தில் நிலைகுலைந்த ஸ்டீவ் ஸ்மித், அடிபட்ட ஷான் மார்ஷ் மிட்செல் ஜான்சன். | கோப்புப் படம். ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் தொடருக்காக முழு மூச்சில் பயிற்சி பெற்று வருகிறது. இந்நிலையில் வலைப்பயிற்சியின் போது ஜான்சனின் ஆக்ரோஷத்துக்கு ஸ்டீவ் ஸ்மித் நிலைகுலைய, ஷான் மார்ஷ் விரலைப் பெயர்த்தது மற்றொரு பந்து. எஸ்ஸெக்ஸ் அணிக்கு எதிரான 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித், ஷான் மார்ஷ், ஜான்சன் ஆகியோர் விளையாடவில்லை. இந்நிலையில் கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடுபிட்சில் மார்ஷ், ஸ்மித், ஜான்சன் பயிற்சியில் ஈடுபட்டனர். இங்கிலாந்து அணி தன்னிடமிருந்து ஆஷஸ் தொடரில் என்ன எதிர்பார்க்கலாம் என்பதை காட்டும் விதமாக ஜான்சன் கடும் வேகமும் ஆக்ரோஷமும் காட்டினார். அதில்தான் உலகின…
-
- 0 replies
- 483 views
-
-
யாழ்ப்பாணம் மாவட்ட பிரதேச இளைஞர் கழகங்களுக்கு இடையிலான பெண்களுக்கான வலைப்பந்தாட்டத் தொடரில் தெல்லிப்பழை பிரதேச இளைஞர் அணி சம்பியன் பெற்றது. இதன் இறுதியாட்டம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இறுதியாட்டத்தில் தெல்லிப்பழைபிரதேச இளைஞர் அணியை எதிர்த்து உடுவில் பிரதேச இளைஞர் அணி மோதியது.https://newuthayan.com/story/11/வலைப்பந்தாட்டத்-தொடரில-2.html
-
- 1 reply
- 628 views
-
-
பீபா அதிகாரிகள் கைது மில்லியன் கணக்கான அமெரிக்க டொலர்களை கையூட்டாக பெற்றதாக சந்தேகிக்கப்படும் இரண்டு உயர்மட்ட பீபா அதிகாரிகள் சுவிஸ் ஹொட்டலொன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மே மாதம் சில பீபா அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருந்த சொகுசு போர் உ லக் ஹொட்டலிலேயே பொலிஸார், திடீரெனப் புகுந்து கைது செய்திருந்தனர். பீபாவில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் தொடர்பாக வாக்கெடுப்புக்கு செல்வதற்கான பீபாவினது நிறைவேற்றுச் சபையின் கூட்டம் கடந்த இரண்டு நாட்களாக சூரிச்சில் இடம்பெற்ற நிலையிலேயே மேற்படிக் கைதுகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், ஐக்கிய அமெரிக்க நீதித் திணைக்களத்தினால் நேற்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கவனமெடுப்பதாக தெரிவி…
-
- 0 replies
- 1k views
-
-
பார்சிலோனாவுக்காக 500 போட்டிகளில் பங்கேற்று லயனல் மெஸ்சி சாதனை! பார்சிலோனா அணிக்காக நேற்று தனது 500வது போட்டியில் களமிறங்கினார் லயனல் மெஸ்சி. ஸ்பானீஷ் லீக்கில், ரியல் பெடிஸ் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் பார்சிலோனா அணிக்காக 425 கோல் அடித்தும் அவர் சாதனை புரிந்தார். பார்சிலோனாவின் கேம்ப்நியூ மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தின் 29வது நிமிடத்தில், ரியல் பெடிஸ் அணி ஒரு சேம்சைட் கோல் அடித்தது. தொடர்ந்து 33-வது நிமிடத்தில் லயனல் மெஸ்சி அட்டகாசமாக ஒரு கோல் அடித்தார். பார்சிலோனா அணிக்காக மெஸ்சி அடிக்கும் 425 -வது கோல் இதுவாகும். தொடர்ந்து சவுரஸ் 46 மற்றும் 83- வது நிமிடத்தில் இரு கோல்கள் அடித்தார். இறுதியில் பார்சிலோனா அணி, 4-0 என்ற கோல் கணக்கில…
-
- 0 replies
- 549 views
-
-
மெஸ்ஸிக்கு சிறுநீரக சோதனை பார்சிலோனா அணியின் வீரர் லியனல் மெஸ்ஸிக்கு, சிறுநீரகக் கல் தொடர்பான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருந்த போதிலும், நாளை இடம்பெறவுள்ள கிங்ஸ் கிண்ண அரையிறுதிப் போட்டியில், வலென்சியா அணிக்கெதிராக அவர் விளையாடுவார் என, பார்சிலோனா தெரிவித்துள்ளது. கடந்தாண்டு டிசெம்பரில் அவருக்கு ஏற்பட்ட சிறுநீரகம் தொடர்பாக பிரச்சினைகளை ஆராய்வதற்கான சோதனைகள், நேற்றும் இடம்பெற்றதோடு, நேற்று இடம்பெற்ற பயிற்சிகளிலும், மெஸ்ஸி பங்கேற்றிருக்கவில்லை. எனினும் கருத்துத் தெரிவித்த பார்சிலோனா, 'முதலணிக்கான வழக்கமான பணிகளுக்கு, புதன்கிழமையன்று மெஸ்ஸி திரும்புவார்" எனத் தெரிவித்தது. ஆர்ஜென்டின அணியின் தலைவரான மெஸ்ஸி, கடந்தாண்டு இடம்பெற்ற …
-
- 0 replies
- 549 views
-
-
சிறந்த விளையாட்டு நட்டசத்திரமாக ஞானரூபன் தெரிவு மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தால், இலங்கையிலுள்ள பல்கலைக்கழங்களில் சிறந்த விளையாட்டு வீரருக்கான தெரிவுக்கான இடம்பெறும் இணைய வாக்கெடுப்பில் யாழ்ப்;பாணப் பல்கலைக்கழக கால்ப்பந்தாட்ட வீரனும் தேசிய கால்ப்பந்தாட்ட அணியில் இடம்பிடித்துள்ளவருமான செபமாலைநாயகம் ஞானரூபன் முதலிடம் பெற்றுள்ளார். ஞானரூபனுக்காக 5481 பேர் வாக்களித்தனர். மொத்தம் 16 வீரர்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களில் சிறந்த விளையாட்டு வீரனைத் தெரிவு செய்வதற்காக hவவி:ஃஃளிழசவள.அழசயளிசைவை.உழஅஃஎழவந.pரி?சநகஸ்ரீ2சூ_ஸ்ரீ_என்னும் இணையத்தளத்தில் இந்த வாக்கெடுப்பு நடைபெற்றது. இணைய வாக்கெடுப்பின் கடைசி திகதி 10 திகதி …
-
- 1 reply
- 466 views
-
-
இந்துக்களின் சமர் இன்று ஆரம்பம் இந்துக்களின் சமர் என்றழைக்கப்படும் யாழ்.இந்துக்கல்லூரிக்கும், கொழும்பு இந்துக்கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்டத் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் நேற்று பயிற்சியில் ஈடுபட்ட யாழ். இந்துவின் வீரர்கள். http://www.onlineuthayan.com/sports/?p=9532&cat=3
-
- 12 replies
- 1.4k views
-
-
டெஸ்ட் அரங்கில் புதிய சாதனை படைத்த ரொஸ் டெய்லர் By Mohammed Rishad - ©AFP டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களைக் குவித்துள்ள நியூஸிலாந்து வீரர் என்ற சாதனையை, அவ்வணியின் சிரேஷ்ட வீரர் ரொஸ் டெய்லர் படைத்துள்ளார். அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று (06) சிட்னியில் நிறைவுக்கு வந்தது. இந்தப் போட்டியின் 2ஆவது இன்னிங்ஸில் நியூஸிலாந்து வீரர் ரொஸ் டெய்லர் 22 ஓட்டங்களை எடுத்தார். இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களைக் குவித்த நியூஸிலாந்து வீரர் என்ற ஸ்டீபன் பிளெமிங்கின் சாதனையை டெய்லர் முறியடித்துள…
-
- 0 replies
- 721 views
-
-
’’ஸ்டெம்பை வைத்து வீட்டை சுற்றி வேலி அமைத்துக் கொள்வேன்’’ டோனி March 12, 2016 இந்திய அணி வெற்றி பெறும் போட்டியில் ஸ்டம்பை கையோடு எடுத்துச் செல்வது பற்றி அணித்தலைவர் டோனி மனம் திறந்து பேசியுள்ளார். பலப் போட்டிகளில் இந்தியா வெற்றி பெறும் போது அந்த அணியின் தலைவரான டோனி ஓடி வந்து முதலில் ஸ்டெம்பை பிடுங்கி கையோடு எடுத்துச் செல்வதை பார்த்திருக்கலாம். அது எதற்கு என்று நமக்கு தெரியாது. தற்போது அதற்கான காரணத்தை அவரே கூறியுள்ளார். இது குறித்து டோனி கூறுகையில், ”அது ஒரு சிறந்த விடயத்திற்காக தான் செய்கிறேன். அந்த ஸ்டம்பில் நான் ஏதும் எழுதி வைக்கவில்லை. நான் ஓய்வு பெற்ற பிறகு வீடியோவில் பார்த்து இது எந்தப் போட்டியின் ஸ்டம்ப் என கண்டுபிடிப்பேன். இதற…
-
- 0 replies
- 337 views
-
-
பரபரப்பான சுப்பர் ஓவரில் இந்தியா வெற்றி: சொந்த மண்ணில் தொடரை இழந்தது நியூஸிலாந்து! by : Anojkiyan நியூஸிலாந்து கிரிக்கெட் அணிக்கெதிரான மூன்றாவது ரி-20 போட்டியில், இந்தியா அணி பரபரப்பான சுப்பர் ஓவரில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை இந்தியா அணி 3-0 என்ற கணக்கில் கைபற்றியுள்ளது. ஹெமில்டன் மைதானத்தில் இன்று நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்தியா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. …
-
- 2 replies
- 709 views
-
-
எனது வெற்றியை என்னுடைய மக்களுடன் பகிர்கிறேன்: ரியோவில் சாக்ஷி மகிழ்ச்சி பதக்கத்துடன் சாக்ஷி மாலிக் | படம்: ஏஎஃப்பி '12 ஆண்டு உழைப்பின் பலன்' ரியோவில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த சாக்ஷி மாலிக் மகிழ்ச்சி "ஒலிம்பிக் மல்யுத்த போட்டிகளில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை நான் வென்றெடுப்பேன் என சற்றும் எதிர்பார்க்கவில்லை!" ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்த விளையாட்டில் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக், தனது 12 ஆண்டு கடின உழைப்பின் பலனாக வெற்றி கிட்டியுள்ளதாகக் கூறியுள்ளார். ரியோ ஒலிம்பிக் 2016-ல் இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்று கணக்கைத் தொடங்கியுள்ளது. மகளிர் 58 கிலோ ஃப்ரீஸ்டைல் எடைப் பிரிவு மல்யுத்தப் போட்டியில் சாக்ஷி மாலிக் வெண்…
-
- 1 reply
- 341 views
-
-
கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு கொரோனா போர்த்துக்கல் நாட்டின் கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) மிகப்பெரிய கால்பந்து வீரர்களில் ஒருவர். ரொனால்டோ ஒரு பல்துறை திறன் கொண்ட தாக்குதல் வீரர், அவரது அதி வேகம், அத்துடன் பலமாக பந்தை உதைக்கும் ஆற்றல் மற்றும் ஆழமான அடிச்சுவடுகள் ஆகியவற்றிற்காக மற்றைய வீரர்களில் இருந்து தனித்து நிற்கிறார். ரொனால்டோ பல நாடுகளில் லீக் பட்டங்களை வென்றுள்ளார். ரொனால்டோ பங்குபற்றிய 292 விளையாட்டுகளில் 311 கோல்களை அடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://tamil.adaderana.lk/news.php?nid=135112
-
- 1 reply
- 671 views
-
-
ஆசிய கிண்ண மகளிர் இ 20 கிரிக்கெட்: 75 ஓட்டங்களால் இலங்கை வெற்றி 2016-12-01 10:25:30 தாய்லாந்தில் நடைபெற்றுவரும் ஆசிய கிண்ண மகளிர் இருபது 20 கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டி ஒன்றில் தாய்லாந்து மகளிர் அணியை 75 ஓட்டங்களால் இலங்கை மகளிர் அணி வெற்றிகொண்டது. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 120 ஓட்டங்களைப் பெற்றது. ஆரம்பத் துடுப்பாட்ட வீராங்கனைகளான ஹசினி பெரேரா (அணித் தலைவி) 55 ஓட்டங்களையும் சமரி அத்தப்பத்து (முன்னாள் இலங்கை அணித் தலைவி) ஆகிய இருவரும் முதலாவது விக்கெட்டில் 77 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு ச…
-
- 0 replies
- 223 views
-
-
‛சாஹலிடம் முடியாது என்ற வார்த்தையே வராது!’ - கோஹ்லி புகழாரம் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய கடைசி டி-20 போட்டி பெங்களுரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இரு அணிகளும் 1-1 என சமநிலையில் வெற்றிபெற்றிருந்ததால், இந்த ஆட்டம் முக்கியமானதாக கருதப்பட்டது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்ந்தெடுத்தது. முதலில் பேட் செய்தது இந்திய அணி. ஓபனிங் பேட்ஸ்மேன் விராத் கோஹ்லி ரன் அவுட்டானது ஏமாற்றத்தை அளித்தாலும், அடுத்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 45 பந்துகளில் 63 ரன்கள் விளாசினார். இந்தமுறை தோனி விஸ்வரூபம் எடுத்திருந்தார். அவர் சந்தித்த 36 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 56 ரன்கள் சேர்த்தார். இது சர்வதேச டி-20…
-
- 1 reply
- 460 views
-
-
தோனி தங்கியிருந்த ஓட்டலில் தீ விபத்து, விஜய் ஹசாரே அரை இறுதி போட்டி ஒத்திவைப்பு!! விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் தோனி உள்ளிட்ட ஜார்கண்ட் அணி வீரர்கள் டெல்லியில் துவாரகா என்னும் ஹோட்டலில் தங்கி இருந்தனர். இன்று காலை அவர்கள் தங்கி இருந்த ஹோட்டலில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. தோனி மற்றும் கிரிக்கெட் அணியினர் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவத்தால் இன்று நடைபெறவிருந்த விஜய் ஹசாரே இரண்டாவது அரை இறுதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. Delhi: Fire had broken out in store in Dwarka's Welcome hotel complex. MS Dhoni and Jharkhand team who were staying there evacuated safely pic.twitter.com/8OIbd7x3Cl — ANI (@ANI…
-
- 0 replies
- 319 views
-
-
தோனி, தோனி, தோனி... சேப்பாக்கம் மைதானத்தில் செம்ம்ம்ம்ம அனுபவம்! #VikatanExclusive ‘கிளம்பு, கிளம்பு... இங்க எல்லாம் நிக்கக் கூடாது...’ ‘சார்... ஃப்ரெண்டு டிக்கெட் எடுத்துட்டு வர்றான். அவன் வந்ததும் கிளம்பிருவேன்’ ‘பாஸ்... எக்ஸ்ட்ரா டிக்கெட் இருக்கா? இருந்தா ஒன்னு உஷார் பண்ணுங்களேன். அதுவும் எனக்கில்லை...!’ குரலில் அதிகாரமில்லை. காக்கிச்சட்டையில் மிடுக்கில்லை. இடம்: பட்டாபிராமன் கேட், சேப்பாக்கம் மைதானம். நேரம்: ஞாயிறு மதியம் 12.30. வழக்கத்தை விட வாலாஜா ரோட்டில் ஹெவி டிராபிக். பெல்ஸ் ரோடு, விக்டோரியா ஹாஸ்டல் ரோடு என சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தைச் சுற்றியுள்ள அத்தனை சாலைகளிலும் ஹாரன் சவுண்ட். அங்கிரு…
-
- 0 replies
- 725 views
-
-
யார் இந்தப் பொடியன்... இந்திய கிரிக்கெட்டின் புது சென்சேஷன்! #ShubhangHegde கடந்த சனிக்கிழமை இரவு ப்ரோ கபடி பார்த்துவிட்டு சேனல்களை மாற்றியபோது, ஸ்டார் ஸ்போர்ட்ஸில் ஏதோ ஒரு கிரிக்கெட் போட்டியின் Presentation Ceremony நடந்துகொண்டிருந்தது. கர்நாடகா பிரீமியர் லீக் தொடரின் பரிசளிப்பு விழா. பெரும்பாலும் பார்த்துப் பழகிடாத முகங்கள். அப்போதுதான் ஒரு விருதை வாங்கிக்கொண்டு போன ஒரு வீரன், மீண்டும் இன்னொரு விருதினை வாங்கிச் சென்றான். பிஞ்சு முகம். 18-19 வயது இருக்கும் என்று நினைத்தேன். சிறிது நேரம் கழித்து, "The young promising player of the Tournament award goes to...Shubhang Hegde" - என்று வர்ணனையாளர் சாரு அறிவித்ததும், அதே இளம் வீரன் மூன்றாவது …
-
- 0 replies
- 686 views
-
-
அவுஸ்திரேலியாவின் அடுத்த பயிற்சியாளர் யார்? அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் டரன் லீமன், தென்னாபிரிக்காவுக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்திருந்ததிலிருந்து அடுத்த பயிற்சியாளருக்கான தேடல்கள் ஆரம்பித்து நடந்து கொண்டிருக்கின்றன. குறித்த போட்டியைத் தொடர்ந்து, அவுஸ்திரேலிய அணி அடுத்து பங்கேற்கவுள்ள தொடர் இவ்வாண்டு ஜூன் மாதமே இடம்பெறவிருக்கின்ற நிலையில் உடனடியாக பயிற்சியாளரை அறிவிக்க வேண்டிய அவசியமில்லாததால், இதற்கான காலத்தை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை எடுத்துக் கொண்டு, அணியின் பெறுபேறு, அணியின் கலாசாரம் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு அடுத்த பயிற்சியாளரை …
-
- 0 replies
- 460 views
-
-
கனடா T20 லீக்கில் முன்னணி வீரராக மாலிங்க இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராகத் திகழ்ந்த லசித் மாலிங்க, இலங்கை அணியில் இருந்து தொடர்ச்சியாக புரக்கணிக்கப்பட்டு வருகின்ற நிலையில், இவ்வருடம் க்ளோபல் T20 கனடா லீக் தொடரில் முன்னணி வீரர்களில் ஒருவராக பங்கேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதேபோன்று, அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையால் தடை விதிக்கப்பட்டுள்ள ஸ்டீவ் ஸ்மித்தும் எதிர்வரும் ஜுன் 28 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள க்ளோபல் T20 கனடா லீக் தொடரில் பங்கேற்கவுள்ளதன்மூலம் அவர் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளுக்கு திரும்பவுள்ளார். கேப்டவுனில் நடந்த பந்தை சேதப்படுத்திய சம்பவத்தை அடுத்து 12 மாதங்கள் போட்டித் தட…
-
- 1 reply
- 554 views
-
-
தென் ஆப்பிரிக்க கால்பந்து அணியின் கோல்கீப்பர் சென்ஸோ மெயீவா மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஜொகான்னஸ்பர்க் அருகே உள்ள வாஸ்லூரஸ் என்ற ஊரில் அவரது வீட்டில் நேற்று காலை துப்பாக்கியுடன் நுழைந்த 2 மர்ம நபர்களால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு பேர் துப்பாக்கியுடன் நுழைய ஒருவர் வீட்டு வாசலில் காவலுக்கு நின்றார். துப்பாக்கியால் மெயீவாவை சுட்டுக் கொன்ற பிறகு 3 பேரும் தப்பிச் சென்றனர். கொலையாளிகள் பற்றிய தகவல்களைத் தெரிவித்தால் 14,000 டாலர்கள் அளிக்கப்படும் என்று தென் ஆப்பிரிக்கக் காவல்துறை அறிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்க கேப்டனும், கோல் கீப்பருமான சென்ஸோ மெயீவா வீட்டில் கொலையாளிகள் 7 பேர் இருந்ததாக போலீஸ் தரப்பினர் த…
-
- 0 replies
- 509 views
-
-
யாழ். மாவட்ட செயலக விளையாட்டு பிரிவின் ஏற்பாட்டில் யாழ். மாவட்ட கால்பந்தாட்ட கழக அணிகளுக்கிடையில் நடத்திய மைலோ கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் நாவாந்துறை சென்.மேரிஷ் அணி சம்பியனாகியது. மைலோ கிண்ண சுற்றுப்போட்டிகள் கடந்த இரண்டு வார காலமாக யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்று வந்தன. சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி, ஞாயிற்றுக்கிழமை (23) அதே மைதானத்தில் இடம்பெற்றது. இறுதிப்போட்டியில் நாவாந்துறை சென்.மேரிஷ் அணியை எதிர்த்து வடமராட்சி நவிண்டில் கலைமதி அணி மோதியது. ஆட்டம் ஆரம்பித்த சில நிமிடங்களில் சென்.மேரிஷ் அணியினர் முதல் கோலை போட்டனர். அணியின் அருள்ராசா யூட் முதலாவது கோலை பெற்றுக்கொடுத்தார். முதல் பாதியாட்டம் அந்த ஒரு கோலுடன் முடிவுற்றது. இரண்டாவது…
-
- 0 replies
- 360 views
-