விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
கிறைஸ்ட்சர்ச் : பந்தை எறிவது தொடர்பான சர்ச்சையில் மீண்டும் சிக்கியுள்ளார் முரளிதரன். இவர், அளவுக்கு அதிகமாக கையை வளைத்து பந்து வீசுவதாக நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் மார்க் ரிச்சர்ட்சன் குற்றம்சாட்டியுள்ளார். இலங்கை அணியின் "சுழல் மன்னன்' முரளிதரன். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்(777) வீழ்த்தியவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவரது பந்துவீச்சு தொடர்பாக 1995 முதல் சர்ச்சை நீடிக்கிறது. ஐ.சி.சி., மீது தவறு: தனக்கு எதிரான சர்ச்சைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காத முரளிதரன் வழக்கம் போல விக்கெட் வேட்டை நடத்தி வருகிறார். சமீபத்திய நியூசிலாந் துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கூட அபாரமாக பந்து வீசினார். இந்தச் சூழலில் இவர் மீது மீண்டும் பந்தை எறிவதா…
-
- 6 replies
- 1.9k views
-
-
பந்தை எறிகிறார் ஹர்பஜன்: அஜ்மலின் குற்றச்சாட்டும் பின்னணிகளும் - கனகலிங்கம் கோபிகிருஷ்ணா பந்தை எறிவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, சர்வதேச கிரிக்கெட் சபையால் தடை விதிக்கப்பட்ட பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர் சயீட் அஜ்மல், பந்துவீச்சு முறையில் மாற்றங்களைக் கொண்டுவந்து, மீண்டும் அணியில் இடம்பிடிக்க முயற்சித்துவரும் நிலையில், திங்கட்கிழமை மாலை தெரிவித்த கருத்துக்கள், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், பந்தை வீசியெறிவதாகவும், அவர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுவதில்லை எனக் குறிப்பிட்ட அஜ்மல், தான் இலக்கு வைக்கப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார். அத்தோடு, அனுமதிக்கப்பட்ட 15 பாகை அளவை விட அதிகமாக ஹர்பஜன் சிங் அவரது முழங்கை ‘…
-
- 0 replies
- 231 views
-
-
பந்தை நேரா தலைக்கு வீசினா போய் சேந்துருவேன்லா... இஷாந்த் சர்மா செய்கையால் பரபரப்பு! இந்திய பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவை இலங்கை பந்துவீச்சாளர் தம்மிகா பிரசாத் விரட்டி சென்றதால் கொழும்பு மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கொழும்பு நகரில் 3வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்திய பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா தொடர்ந்து இலங்கை வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார். இலங்கை அணி பேட்டிங் செய்த போது ஹெராத்துடன் வாய் தகராறில் ஈடுபட்ட இஷாந்த், நேற்றும் இலங்கை வீரர்களுடன் மோதல் போக்கை கடைபிடித்தார். நேற்றைய ஆட்டத்தில் தம்மிகா பிரசாத் 76வது ஓவரை வீசிய போது, தொடர்ச்சியாக 3 பவுன்சர்கள் வீசினார். இதனைத் தொடர்ந்து கோபமடைந்த இஷாந்த், பந்தை 'எனது ஹெல்மெட்டுக்கு போடு' என்ற…
-
- 1 reply
- 356 views
-
-
பந்தை மைதானத்துக்கு வெளியே அடிக்க 2 மில்லியன் டாலர்கள் என்றால்... : ஸ்டெய்ன் கவலை டேல் ஸ்டெய்ன். | படம்: ஏ.பி. கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சு அழியும் போக்கில் சென்று கொண்டிருக்கிறது என்று கவலை தெரிவித்துள்ள டேல் ஸ்டெய்ன் ஐபிஎல் ரக கிரிக்கெட்டில் பேட்டிங் பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வளர்க்கப்படுவது பற்றி அச்சம் வெளியிட்டுள்ளார். கிரிக்கெட் மன்த்லி பத்திரிகைக்கு அவர் அளித்து நாளை முழுதாக வெளியாகும் பேட்டியில் அவர் இது பற்றி கூறியதாவது: “160கிமீ வேகத்தில் வீசக்கூடிய பவுலர்கள் தேவை. 5 விக்கெட்டுகளை வீழ்த்தும் வேகப்பந்து வீச்சாளர்கள் தேவை. டெஸ்ட் போட்டியின் 5-ம் நாள் பிட்சில் 150கிமீ வேகம் வீசி விக்கெட்டுகளைக் கைப்பற…
-
- 0 replies
- 384 views
-
-
பந்தை ஷைனிங் செய்வதற்காக குறுக்கு வழியை கையாண்ட டு பிளிசிஸ் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2-வது டெஸ்டில் பந்தை ஷைனிங் செய்வதற்காக தென்ஆப்பிரிக்க கேப்டன் டு பிளிசிஸ் ஒருவகை இனிப்பை பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள இரண்டு போட்டிகளிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரை 2-0 எனக் கைப்பற்றியுள்ளது. 2-வது போட்டி ஹோபர்ட்டில் நடைபெற்றது. இந்த போட்டியில் தென்ஆப்பிரிக்காவின் அபார பந்து வீச்சை …
-
- 4 replies
- 592 views
-
-
பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தால் கருச்சிதைவு ஏற்பட்டது: டேவிட் வார்னர் மனைவி உருக்கமான பேட்டி ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரரான பான்கிராஃப்ட், தன்னிடம் இருந்த சொரசொரப்பு தன்மை கொண்ட பொருளை வைத்து பந்தைச் சேதப்படுத்த முயன்றது கேமராக்களின் கண்களில் பதிவாகியது. இதையடுத்து, அந்தப் பொருளை அவர் தனது ஆடைக்குள் மறைத்து வைத்தார். ஆட்டம் முடிவடைந்ததும் அந்தக் குற்றச்சாட்டை ஸ்மித், டேவிட் வார்னர், பான்கிராஃப்ட் ஆகியோர் ஒப்புக் கொண்டனர். அத்துடன், ஸ்மித்தும், டேவிட் வார்னரும் அணிய…
-
- 0 replies
- 336 views
-
-
http://www.youtube.com/watch?v=q9UUgrgSJKo
-
- 9 replies
- 1k views
-
-
பந்த், கோலி முயற்சி வீண் - தென்னாப்பிரிக்காவிடம் தொடரை பறிகொடுத்தது இந்தியா 14 ஜனவரி 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விராட் கோலி இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான 3 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் ஒன்றில் தென்னாப்பிரிக்காவும், மற்றொன்றில் இந்தியாவும் வென்று சமநிலையில் இருந்த நிலையில், மூன்றாவது போட்டியில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி 2-1 என டெஸ்ட் தொடரை வென்றது. தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளை விளையாடின. தென்னாப்பிரிக்காவின் செஞ்சுரியன் …
-
- 1 reply
- 284 views
- 1 follower
-
-
பனாமாவை வீழ்த்தி மெக்சிகோ அணி 2018 உலகக்கோப்பை கால்பந்துக்கு தகுதி வெற்றியைக் கொண்டாடும் மெக்சிகோ வீரர்கள். - படம். | ஏ.எஃப்.பி. உலகக்கோப்பைக் கால்பந்து தகுதிச் சுற்று போட்டியில் பனாமா அணியை 1-0 என்று வீழ்த்தி மெக்சிகோ அணி ரஷ்யாவில் நடைபெறும் 2018 உலகக்கோப்பைக்குத் தகுதி பெற்றுள்ளது. இதன் மூலம் பிரேசில், ஜப்பான், இரான், போட்டியை நடத்தும் ரஷ்யா ஆகிய நாடுகளுடன் 2018 உலகக்கோப்பைக் கால்பந்துக்குத் தகுதி பெற்ற 5-வது அணியானது மெக்சிகோ. மெக்சிகோ சிட்டியில் உள்ள ஆஸ்டெக்கா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் ஹிர்விங் லோசானோ 53-வது நிமிடத்தில் தலையால் முட்டி கோல…
-
- 0 replies
- 318 views
-
-
பன்னாட்டு ஆட்டங்களில் விரைவில் லசித் மலிங்க பன்னாட்டு கிரிக்கெட் அரங்குக்கு விரைவில் மலிங்க வருவார் என்று நம்பிக்கை தெரிவித்தார் இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹத்துரு சிங்க. அண்மைக்காலமாக இலங்கை அணியில் இருந்து புறக்க ணிக்கப்பட்டு வரும் மலிங்க, தென்னாபிரிக்காவுக்கு எதிரான ரி-20 ஆட்டத்துக்கான இலங்கை அணியிலும் இடம்பெறவில்லை. இதனால் மலிங்கவின் சகாப்தம் முடிவுக்கு வருகிறதா என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இவ்வாறு தெரிவித்தார் ஹத்துருசிங்க. ‘‘மலிங்க எங்களுடைய திட்டத்தை முழுமையான நிறைவேற்ற வேண்டும் என்று தேர்வுக் குழு விரும்புகிறது. அவர் உள்ளூர் ஆட்டங்களில…
-
- 0 replies
- 345 views
-
-
பம்பலப்பிட்டி - யாழ். இந்துக் கல்லூரிகள் மோதும் கிரிக்கெட் சமர் இன்று ஆரம்பமாகியது கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரிக்கும் - யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் இடையில் வருடாந்தம் நடைபெறும் இந்துக்களுக்கிடையேயான சமர் என வர்ணிக்கப்படும் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகியது. இன்று காலை ஆரம்பமாகிய இப் போட்டி இரண்டு நாட்கள் நடைபெறும். இப் போட்டி கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெறுகின்றது. பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி கிரிக்கெட் அணியின் தலைவராக கணபதி தினேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணியின் தலைவராக கஜானந்த் செயற்படுகின்றார். இவ் வருடம் 2 ஆவது முறையாக நடைப…
-
- 1 reply
- 347 views
-
-
இடது கை வீரர் பிலிப் ஹியூஸ், பவுன்சரில் அடிபட்டு மயக்கமடைந்தார். | படம்: ஏ.எஃப்.பி. மயங்கிய நிலையில் மைதானத்திலிருந்து ஸ்ட்ரெச்சரில் எடுத்துச் செல்லபப்டும் பிலிப் ஹியூஸ். சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆஸி. உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் ஆடிய பில் ஹியூஸ், பவுன்சர் ஒன்று தாக்கியதில் தலையில் அடிபட்டு மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். அவர் அபாய கட்டத்தை தாண்டவில்லை என்று ஆஸ்திரேலிய செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இவர் பின்னால் இடம்பெறலாம் என்ற நிலை இருந்தது. இந்த நிலையில் தெற்கு ஆஸ்திரேலியா அணிக்காக 63 ரன்களில் ஆடி வந்த பில் ஹியூஸ், நியூசவுத் வேல்ஸ் பவுலர் ஷான் அபோட் வீசிய பயங்கர பவுன்சர், இடது காதையொட்டி…
-
- 33 replies
- 2.5k views
-
-
பதவி நீக்கப்படும் கழக பயிற்சியாளர் ஐரோப்பிய சாம்பியன் லீக் கிண்ணத்துக்கான மோதலில் , ஜேர்மனிய கழகமான பயர்ன் மூனிச் , பாரிஸ் கழகத்திடம் படு தோல்வியைச் சந்தித்த நிகழ்வினை அடுத்து , பயர்ன் மூனிச் கழக பயிற்சியாளர் கார்லோ அன்செலோட்டியை பதவி நீக்கம் செய்துள்ளதாக கழகம் அறிவித்துள்ளது . ஏற்கனவே இந்த ஜெர்மன் கழகம் நேற்று வியாழனன்று , ஒர் அவசர கூட்டத்தை ஒழுங்குபடுத்தி , கார்லோவுக்கும் அழைப்பு விடுத்திருந்தது . இந்த லீக் கிண்ணத்துக்கான போட்டிகள் இறுதிக் கட்டத்துக்குள் நுழையும் தறுவாயாக இருந்தும் , கழகம் இவரைப் பதவி நீக்கி இருக்கின்றது . 3-0 என்ற கணக்கில் இந்தக் கழகம் பாரிஸ் கழகத்திடம் தோற்றுள்ளது , கடந்த21வருட காலத்தில் சந்தித்த படுமோ…
-
- 3 replies
- 568 views
-
-
பயிற்சி போட்டி; இந்தியா 338 ரன்கள் இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட், 22ம் தேதி சென்னையில் துவங்குகிறது. இதற்கு தயாராகும் வகையில் ஆஸ்திரேலிய அணி இரண்டு பயிற்சி போட்டிகளில் பங்கேற்கிறது. முதல் போட்டி “டிரா’ ஆனது. சென்னையில் துவங்கிய (3 நாட்கள்)இரண்டாவது பயிற்சி போட்டியில் இந்தியா “ஏ’, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. “டாஸ்’ வென்ற இந்தியா “ஏ’ அணி கேப்டன் காம்பிர் “பேட்டிங்’ தேர்வு செய்தார். ஆஸ்திரேலியா அணிக்கு ஷேன் வாட்சன் கேப்டன் பொறுப்பை ஏற்றார். இந்திய “ஏ’ அணிக்கு கேப்டன் காம்பிர், ஜிவன்ஜோத் சிங் ஜோடி துவக்கம் கொடுத்தது. ஜிவன்ஜோத் சிங் 24 ரன்களில் வெளியேறினார். மறுமுனையில் காம்பிர், தனது சிறப்…
-
- 0 replies
- 337 views
-
-
பயிற்சியாளராகின்றார் முரளிதரன்..! ஐ.பி.எல். 2015 தொடரில் ஐதராபாத் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார். முத்தையா முரளிதரன், டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 534 விக்கெட்டுகளையும் கைப்பற்றி, சர்வதேச அரங்கில் இருந்து விடைபெற்றார். அதன் பிறகு ஐ.பி.எல். போட்டிகளில் விளையாட ஆரம்பித்த முரளிதரன், 66 போட்டிகளில் 63 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் சென்னை, கேரளா மற்றும் பெங்களூர் அணிகளில் விளையாடியுள்ளார். 2010, 2011ம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். போட்டிகளில் வெற்றி பெற்ற சென்னை அணியிலும், 2010 ஆண்டு நடந்த சம்பியன்ஸ் லீக் போட்டியிலும் கிண்ணம் வென்ற சென்னை அணியிலும் இணைந்…
-
- 0 replies
- 449 views
-
-
பயிற்சியாளரை தேர்வு செய்ய கோஹ்லிக்கு அதிகாரம் ? ஜனவரி 14, 2015. மெல்போர்ன்: விராத் கோஹ்லிக்கு இந்த பொங்கல் மிகவும் சிறப்பானது. டெஸ்ட் அணியின் கேப்டன் அந்தஸ்துக்கு உயர்ந்த இவரை சுற்றித் தான் இந்திய அணியின் எதிர்காலம் உள்ளது. இவர் கை காட்டும் நபரை தான் புதிய பயிற்சியாளராக நியமிக்க வேண்டுமென ஆஸ்திரேலிய ஜாம்பவான் டீன் ஜோன்ஸ் வலியுறுத்தியுள்ளார். இந்திய அணியின் இளம் நட்சத்திரம் விராத் கோஹ்லி, 26. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அடிலெய்டு, சிட்னி போட்டியில் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டார். களத்தில் இவரது ஆக்ரோஷ செயல்பாடு அனைவரையும் கவர்ந்தது. 4 டெஸ்டில் 692 ரன்கள் குவித்த இவர், கேப்டன் பதவி தனது பேட்டிங்கை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை என்பதை நிரூபித்தார். …
-
- 0 replies
- 513 views
-
-
பயிற்சியாளர் நம் கிரிக்கெட் கலாச்சாரத்தை புரிந்துகொள்பவராக இருக்க வேண்டும்: தோனி தோனி. | படம்: பிடிஐ. இந்திய கிரிக்கெட் அணிகான பயிற்சியாளர் தேடுதல் வேட்டை தொடங்கியுள்ள நிலையில் பல பயிற்சியாளர்களுடன் பணியாற்றிய அனுபவம் பெற்ற தோனி தன் கருத்தை இது குறித்து கூறியுள்ளார். லால்சந்த் ராஜ்புத், கிரெக் சாப்பல், கேரி கர்ஸ்டன், டன்கன் பிளெட்சர், ஸ்டீபன் பிளெமிங், ரவிசாஸ்திரி என்று ஏகப்பட்ட பயிற்சியாளர்களுடன் சுமுகமாக பணியாற்றியுள்ள இந்திய கேப்டன் தோனி, புதிய பயிற்சியாளர் இந்திய கிரிக்கெட் கலாச்சாரத்தைப் புரிந்து கொள்பவராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து ஜிம்பாப்வே தொடருக்கு முந்தைய சந்திப்பில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “…
-
- 1 reply
- 416 views
-
-
பயிற்சியாளர் பதவியிலிருந்து மாரடோனா அதிரடி நீக்கம் புதன்கிழமை, ஜூலை 28, 2010, 14:07[iST] பியூனஸ் அயர்ஸ்: அர்ஜென்டினா கால்பந்து அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து டியகோ மாரடோனா திடீரென நீக்கப்பட்டுள்ளார். பிரேசிலில் 2014ம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கால்பந்துப் போட்டி வரை மாரடோனாவே பயிற்சியாளராக நீடிப்பார் என செய்தி வெளியான சில நாட்களுக்குள் அவரை தடாலடியாக தூக்கியுள்ளது அர்ஜென்டினா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு வீரராக அர்ஜென்டினா அணிக்கு பெரும் பலமாக இருந்தவர் மாரடோனா. அந்த அணிக்கு உலகக் கோப்பையையும் பெற்றுத் தந்தவர் அவர். ஆனால் பயிற்சியாளராக அவர் சோடை போகவில்லை. கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்…
-
- 0 replies
- 558 views
-
-
பயிற்சியைப் புறக்கணித்த உமர் அக்மல்: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிர்ச்சி சிக்கலில் உமர் அக்மல். | படம்: ஏ.எப்.பி. இலங்கைக்கு எதிராக வரவிருக்கும் ஒருநாள் தொடருக்கு பாகிஸ்தான் பேட்ஸ்மென் உமர் அக்மல் தேர்வுக்கு பரிசீலிக்கப்படவில்லை. காரணம், அவர் பயிற்சிக்கு அழைப்பு விடுத்திருந்தும் புறக்கணித்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணித் தேர்வாளர் ஹரூன் ரஷீத் பிடிஐ-யிடம் தெரிவிக்கும் போது, “இலங்கைக்கு எதிரான ஒருநாள் அணிக்கு தேர்வு செய்யப்படவிருந்த வீரர்களுக்கு தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஆஜராகுமாறு கூறியிருந்தோம். ஆனால் உமர் அக்மல் வரவில்லை. தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைமை பயிற்சியாளர் முகமது அக்ரமிடம் உமர் அக்மல் …
-
- 0 replies
- 323 views
-
-
பயிற்றுநர் பதவியிலிருந்து வக்காரை நீக்குமாறு மியண்டாட், சர்வ்ராஸ் வலியுறுத்தல் பாகிஸ்தான் கிரிக்கெட் பயிற்றுநர் வக்கார் யூனிசை நீக்கி புதிய ஒருவரை பயிற்றுநராக நியமிக்கவேண்டும் என முன்னாள் வீரர்களான ஜாவேட் மியண்டாடும் சர்வ்ராஸ் நவாஸும் வலியுறுத்தியுள்ளனர். இங்கிலாந்துக்கு எதிராக ஷார்ஜாவில் நடைபெற்ற மூன்றாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் தோல்வியடைந்தமை ஏமாற்றத்தைத் தருவதாக இருவரும் குறிப்பிட்டுள்ளனர். தலைமைப் பயிற்றுநர் வக்கார் யூனிஸின் விருப்பு, வெறுப்புகளுக்கு அமையவே விளையாடும் பதினொருவர் தெரிவு செய்யப்பட்டதாகக் குறிப்பிட்ட மியண்டாட், எனவ…
-
- 0 replies
- 290 views
-
-
பயிற்றுவிப்பாள்ராக முரளி பரிணாமம்! இலங்கை கிறிக்கெற் அணியின் நட்சத்திர சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் ஆஸ்திரேலிய அணியின் சுழல் பந்து பயிற்சியாளராக வரும் ஜுன் மாதத்திலிருந்து செயற்படஉள்ளார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. எதிர்வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுடன் அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் முரளி ஓய்வு பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. http://tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=18064:2011-02-08-04-27-55&catid=59:2009-12-04-18-59-33&Itemid=387
-
- 2 replies
- 1.1k views
-
-
பயேர்ன் மியூனிச்சுடன் மேலும் 5 வருடங்களுக்கு ஜேர்மன் கோல்காப்பாளர் நோயர் ஒப்பந்தம் 2016-04-21 17:49:55 ஜேர்மனியின் பிரபல கால்பந்தாட்டக் கழகங்களில் ஒன்றான பயேர்ன் மியூனிச் கழகத்துடன் மேலும் ஐந்து வருடங்களுக்கான புதிய ஒப்பந்தம் ஒன்றில் மெனுவல் நோயர் கைச்சாத்திட்டுள்ளார். பிரேஸிலில் 2014இல் நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் சம்பியனான ஜேர்மன் அணியின் கோல் காப்பாளராக மெனுவல் நோயர் விளையாடியிருந்தார். இந்தப் புதிய ஒப்பந்தப்படி 2021ஆம் ஆண்டுவரை பயேர்ன் மியூனிச் அணிக்காக 30 வயதுடைய நோயர் விளையாடவுள்ளார். …
-
- 0 replies
- 319 views
-
-
ஸ்வீடனில் நடைபெற்ற உலகளவிலான பவர்லிஃப்ட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில், அமெரிக்காவை சேர்ந்த தமிழ்ப் பெண் ஆர்த்தி நிதி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். ஒருவித பளுதூக்குதல் விளையாட்டான பவர்லிஃப்ட்டிங் மேற்கத்திய நாடுகளில் மிகவும் பிரபலமானது. ஸ்குவாட், பெஞ்ச், டெட்லிப்ட் (Squat, Bench, Deadlift) ஆகிய மூன்று கட்டங்களை கொண்ட இந்த விளையாட்டில் ஒட்டுமொத்தமாக அதிக எடையை தூக்குபவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுகிறார். ஐபிஎஃப் எனப்படும் சர்வதேச பவர் லிஃப்ட்டிங் கழகம், 'வேர்ல்ட் கிளாசிக் பவர் லிஃப்ட்டிங் சாம்பியன்ஷிப்' என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் போட்டிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், இந்தாண்டு ஸ்வீடனில் நடைபெற்று வரும் தொடரில், 20-22 வயத்துக்குட்பட்ட, 63 எடைய…
-
- 0 replies
- 502 views
-
-
பரபரப்பான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் பார்சிலோனாவை வீழ்த்தியது ரியல் மெட்ரிட் லா லிகா உதைப்பந்தாட்ட போட்டியின் லீக் ஆட்டத்தில் ரியல் மெட்ரிட் 3-1 என்ற கோல் கணக்கில் பார்சிலோனாவை வீழ்த்தியது. ஸ்பானிஷ் லீக் தொடரில், "கிளஸ்சிக்' மோதல் என்று அழைக்கப்படும் ரியல் மெட்ரிட், பார்சிலோனா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. ஆட்டம் தொடங்கிய மூன்றாவது நிமிடத்திலேயே, பிரேசிலைச் சேர்ந்த நம்பிக்கை நட்சத்திரம் நெய்மர், ரியல் மெட்ரிட் பின்கள வீரர்களை ஏமாற்றி அழகாக கோல் அடித்தார். ஆனால், ஜெரார்டு பீக்கே எதிரணி வீரர்களுடன் மோதலில் ஈடுபட ரியல் மெட்ரிட் அணிக்கு பெனால்டி கிக் கிடைத்தது. இதை எந்தத் தவறும் செய்யாமல் கோலாக மாற்றினார் ரியல் மெட்ரிட்டின் கிறிஸ்டிய…
-
- 0 replies
- 418 views
-
-
பரபரப்பான போட்டியில் அயர்லாந்தை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள் அணி By Mohammed Rishad - அயர்லாந்து அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி, ஷெல்டன் கொட்ரல் கடைசி பந்தில் அடித்த சிக்ஸரின் உதவியால் ஒரு விக்கெட்டினால் த்ரில் வெற்றிபெற்றது. இதன்மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகின்றது. கடந்த செவ்வாய்க்…
-
- 0 replies
- 415 views
-