விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
மேற்கிந்திய முன்னாள் வீரர்களுக்கு உலகக் கிண்ண போட்டியில் கௌரவம் மேற்கிந்திய அணி இரண்டு முறை உலக கிண்ணத்தை வென்றதற்காக அந்த அணியில் இடம்பெற்றிருந்த வீரர்கள் இந்த உலகக் கிண்ணத்தின் போது கௌரவப்படுத்தப்படுகிறார்கள். 1975 மற்றும் 1979 ஆம் ஆண்டு நடந்த முதல் இரண்டு உலகக் கிண்ணத்தை கிளைவ் லொயிட் தலைமையிலான மேற்கிந்திய அணி வென்று மகத்தான சாதனை படைத்தது. அந்த அணியில் இடம்பெற்றிருந்த வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்த மேற்கிந்திய கிரிக்கெட் சபையும் ஐ.சி.சி.யும் இணைந்து முடிவு செய்துள்ளன. 9 ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி முதன் முறையாக மேற்கிந்தியாவில் நடைபெறுகிறது. மார்ச் 13 ஆம் திகதி முதல் போட்டி நடக்கிறது. தொடக்கப் போட்டிக்கு முன்பாக, முன்னாள் மேற்கிந்திய வீரர்…
-
- 0 replies
- 826 views
-
-
மிகச் சிறந்த இடது கை சுழற் பந்துவீச்சாளரின் ஓய்வு இலங்கை அணியின் மிகச் சிறந்த இடது கை சுழற் பந்துவீச்சாளரான ரங்கன ஹேரத் தனது இறுதி டெஸ்ட் போட்டியை தற்போழுது காலி மைதானத்தில் விளையாடிவருகிறார். காலி கிரிகெட் மைதானத்தில் தனது முதலாவது டெஸ்ட் போட்டிகளை ஆரம்பித்த அவர். அதே மைதானத்தில் தனது இறுதி டெஸ்ட் போட்டியையும் விளையாடுவது குறிப்பிடத்தக்கது. முத்தையா முரளிதரனின் ஓய்வுக்குப் பின்னர் ஹேரத்தின் வருகை இலங்கை அணிக்கு பெரும் பக்கபலமாக இருந்தது. என்றாலும் தற்போது 40 வயதைக் கடந்துள்ள ஹேரத் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தனக்கு ஏற்பட்ட காயங்கள் காரணமாக இடம்பெற்ற 3 டெஸ்ட் தொடர்களினும் முழுமையாக விளையாடவில்லை. இன்று தனது இறு…
-
- 0 replies
- 540 views
-
-
ஷாய் ஹோப் அதிரடி – 2 ஆவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி! பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2 ஆவது ஒருநாள் போட்டியில் ஷாய் ஹோப்பின் அதிரடியால் மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. பங்களாதேஷுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு சென்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 T20 போட்டிகளில் விளையாடி வருகின்றது. அதில் டெஸ்ட் போட்டியை இழந்த மேற்கிந்திய தீவுகள் அணி முதலாவது ஒருநாள் போட்டியையும் இழந்திருந்தது. இந்நிலையில் 2 ஆவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கில் இன்று பங்களாதேஷ் அணியுண்ட பலப்பரிட்சை நடத்தியது. டாக்காவில் ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய த…
-
- 0 replies
- 696 views
-
-
ஆஷஸ் தொடரைக் குறிவைக்கும் கெவின் பீட்டர்சன் 170 ரன்கள் விளாசல் மீண்டும் இங்கிலாந்து அணியில் நுழைய அவருக்குப் பிடித்தமான ஐபிஎல் கிரிக்கெட் ஒப்பந்தத்தையே கைவிட்ட கெவின் பீட்டர்சன் கவுன்ட்டி கிரிக்கெட்டில் அதிரடி 170 ரன்கள் விளாசினார். சர்ரே அணிக்காக அவர் நேற்று 170 ரன்களை விளாசினார். ஆஸ்திரேலியாவிடம் இங்கிலாந்து 5-0 என்று உதை வாங்கிய பிறகு கெவின் பீட்டர்சன் பலிகடாவாக்கப்பட்டார். இவரை நீக்கியதில் ஸ்டூவர்ட் பிராட், மேட் பிரையர் பயிற்சியாளர் மூர்ஸ், கேப்டன் குக் உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்க பங்காற்றினர். உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தோல்வி அடைந்த பிறகு இங்கிலாந்து அணிக்கு பீட்டர்சன் மீண்டும் திரும்புவது பற்றிய பேச்சுக்கள் எழுந்தன. இந்நிலையில் இங்கிலாந்துக்காக ம…
-
- 0 replies
- 568 views
-
-
விராட் கோலி தலைமையில் இந்தியா உலகக் கோப்பை வெல்லும்: சவுரவ் கங்குலி நம்பிக்கை விராட் கோலி ரன்கள் குவிக்கும் வரையில் அவரது சொந்த நடத்தையைப் பற்றி பெரிதாகக் கவலைப்படத் தேவையில்லை என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். சமீபத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் டால்மியா, விராட் கோலியின் நடத்தை நெருக்கமாக கண்காணிக்கப்படும் என்றும், மீறல் தொடர்ந்தால் வாரியம் தலையிடும் என்ற ரீதியில் தெரிவித்திருந்தது பற்றி சவுரவ் கங்குலியிடம் கேட்ட போது, “விராட் கோலி பற்றி அவர் என்ன கூறினார் என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் விராட் ஒரு அபாரமான கிரிக்கெட் வீரர். நான் அப்படித்தான் பார்க்கிறேன். அவர் இளம் வீரர். 26 வயதுதான் …
-
- 0 replies
- 288 views
-
-
07 JAN, 2024 | 07:48 PM (நெவில் அன்தனி) சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் வழங்கப்படவுள்ள ஐசிசி கிரிக்கெட் விருதுகள் 2023க்கான பிரதான விருதுகளுக்கு அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் வீரர்களுக்கு இடையில் கடும் போட்டி நிலவுகிறது. வருடத்தின் அதிசிறந்த கிரிக்கெட் வீரருக்கான சேர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள குறும்பட்டியலில் அவுஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகளின் வீரர்கள் மாத்திரமே இடம்பெறுகின்றனர். வருடத்தின் அதிசிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்கான ரஷேல் ஹேஹோ விருதுக்கு அவுஸ்திரேலியா உட்பட 3 நாடுகளின் வீராங்கனைகள் இடம்பெறுகின்றனர். சேர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் விருதுக்குரிய வருடத்த…
-
- 1 reply
- 454 views
- 1 follower
-
-
அல்ஜாரி ஜோசப் : 22 வயதில் அறிமுக ஐபிஎல் போட்டியில் அசத்தல் சாதனை - யார் இந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்? 18 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைSWAPAN MAHAPATRA ஐபிஎல் போட்டியொன்றில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய அல்ஜாரி ஜோசப் வெறும் 12 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து எதிரணியின் ஆறு விக்கெட்டுகளை கைப்பற்…
-
- 0 replies
- 1.1k views
- 1 follower
-
-
கனேரியாவிடம் 5 கோடி ரூபா அபராதம் கோருகிறது இங்கிலாந்து கிரிக்கெட் சபை கிரிக்கெட் தடைக்குட்பட்டுள்ள பாகிஸ்தான் வீரர் டனிஷ் கனேரியாவுக்கு விதிக்கப்பட்ட தண்டப்பணம் மற்றும் செலவினத் தொகையான 249,000 ஸ்டேர்லிங் பவுண்ட்களை (சுமார் 5 கோடியே 6 இலட்சம் ரூபா) பெற்றுத்தர உதவுமாறு பாகிஸ்தான் நீதிமன்றம் ஒன்றிடம் ஆங்கிலேய கிரிக்கெட் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இசெக்ஸ் பிராந்திய அணிக்காக 2009இல் விளையாடிய மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டியின்போது கனேரியா ஊழல் மோசடியில் ஈடுபட்டமை நிரூபிக்கப்பட்டதை அடுத்து 2012இல் அவரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தடை செய்திருந்தது. அத்துடன் 100,000 ஸ்டேர்லிங் பவுண்ட்கள் அபராதத்தையும் சபை விதித்திருந்தது. …
-
- 0 replies
- 336 views
-
-
சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸிலேயே நாம் சரிவடைந்து விட்டோம். அதில் நமது பேட்டிங் மிக மோசமாக இருந்ததே தோல்விக்கு காரணம் என்று கேப்டன் டோணி தெரிவித்துள்ளார். சிட்னியில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ், 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி அடைந்தது. இதுகுறித்து கருத்துத் தெரிவித்த டோணி கூறுகையில், முதல் இன்னிங்ஸிலேயே இந்தியாவின் பேட்டிங் மோசமாக இருந்தது. ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் வீசிய சிறந்த பந்துகளில் இந்திய வீரர்கள் விரைவாக விக்கெட்களை பறிகொடுத்து விட்டனர். மேலும் ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸில் கிளார்க், பாண்டிங் உள்ளிட்டோர் சிறப்பாக பேட்டிங் செய்து, ஸ்கோரை உயர்த்தினர். …
-
- 1 reply
- 1.4k views
-
-
பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் மெத்தியூஸ்- மலிங்க பாகிஸ்தான் சுப்பர் லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு இலங்கை டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தலைவரான அஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் இருபதுக்கு 20 ஓவர் போட்டி அணித் தலைவர் லசித் மலிங்கவும் ஒப்பந்தமாகியுள்ளதாக பாகிஸ்தான் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்திய கிரிக்கெட் சபையினால் நடத்தப்படும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரைத் தொடர்ந்து எல்லா நாட்டு கிரிக்கெட் சபைகளும் 20 ஓவர் லீக் தொடரை நடத்த முன்வந்துள்ளன. அதிக அளவு வருமானம் ஈட்டப்படுவதால் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்தியாஇ மேற்கிந்தியத் தீவுகள், அவுஸ்திரேலிய கிரிக் கெட் சபைகளையடுத்து பாகிஸ்தானும் இதில் குதித்துள்ள…
-
- 0 replies
- 326 views
-
-
சகிப்பின் சதம் வீணானது ; 106 ஓட்டத்தால் இங்கிலாந்து வெற்றி! இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் அணி 280 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 106 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியுள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 12 ஆவது போட்டி இயன் மோர்கன் தலைமையிலான தலைமையிலான இங்கிலாந்து மற்றும் மோத்ரசா தலைமையிலான பங்களாதேஷ் அணிகளுக்கிடையே கார்டீப்பில் இன்று மாலை 3.00 மணிக்கு ஆரம்பமானது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி களடுத்தடுப்பை தேர்வுசெய்ய இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 386 ஓட்டங்களை குவித்தது. 387 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்…
-
- 0 replies
- 642 views
-
-
ரெனிஸ் விளையாட்டின் மூத்த அரங்கம் இங்கிலாந்தின் விம்பில்டன் போட்டிகள். 1877இல் முதல் களம் கண்ட போட்டி அரங்கம், இவ்வருடம் 133ஆவது போட்டிகளின் முடிவை எட்டியிருக்கிறது. இம்முறை இறுதிப் போட்டிகள் மேலும் புதிய சாதனைகளுக்கு வழிவகுக்குமா? என்பதிற்கான பதிலை சனி, ஞாயிறு பெண்கள் மற்றும் ஆண்கள் இறுதிப் போட்டிகள் வழங்கும். சனி காலை நடைபெறும் பெண்கள் இறுதிப் போட்டியில், 10ஆவது தரவரிசையில் உள்ள அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், 7ஆவது தரவரிசையில் உள்ள ரூமேனியாவின் சிமோனா கெலப்புடன் மோதுகிறார். அவுஸ்திரேலியன் ஓப்பின், பிரென்ஜ் ஓப்பன், விம்புல்டன், அமெரிக்கன் ஓப்பின் எனப்படும் ரெனிசின் முதல தரப் போட்டிகளான கிராண்ட சிலாம்களில், இது செரீனாவின் 32ஆவது தடவையாக போட்டியிடும் இறுதிப்போட்டி.…
-
- 2 replies
- 801 views
-
-
துலிப் சமரவீரவுக்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் 20 ஆண்டுகள் தடை! நடத்தை விதிகளை மீறிய காரணத்திற்காக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் துலிப் சமரவீரவுக்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் 20 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. 52 வயதான சமரவீர, கிரிக்கெட் விக்டோரியா ஊழியராக இருந்த காலத்தில் அவுஸ்திரேலிய கிரிக்கெட்டின் நடத்தை விதிகளை கடுமையாக மீறியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்த விசாரணைகளை முன்னெடுத்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் அவருக்கு 20 ஆண்டுகள் தடை உத்தரவை வழங்கியது. 1993 மற்றும் 1995 க்கு இடையில் இலங்கைக்காக ஏழு டெஸ்ட் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் விக்டோரியா பெண்கள…
-
- 0 replies
- 257 views
-
-
முழு பலத்துடன் களமிறங்கவுள்ளோம் : லசித் மலிங்க இருபதுக்கு 20 உலகக் கிண் ணத்திற்கு நாம் தயாராகிக்கொண்டிருக்கிறோம். எந்தெந்த பயிற்சிகள் தேவையோ அத்தனையை யும் பெற்று முழு பலத்துடன் களமிறங்கவுள்ளோம். நடப்பு சம்பியன் என்ற சூழலில் களமிறங்குவதால் அழுத்தம் இருக்கி றதா என்று கேட்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை. வெற்றி என்பது ஒரு திருப்புமுனைதான். தொடர் வெற்றியே எமது இலக்கு என இலங்கை இருபதுக்கு 20 அணித் தலைவர் லசித் மலிங்க தெரிவித்தார். இலங்கையின் இருபதுக்கு 20 ஆண்கள் கிரிக்கெட் அணிக்கும் பெண்கள் கிரிக்கெட் …
-
- 0 replies
- 517 views
-
-
'சுழல் தமிழன்' அஸ்வினின் ஐம்பெரும் சாதனைகள்! அஸ்வின் | படம்: ஏ.எஃப்.பி. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நாக்பூரில் நடைபெற்ற 3வது டெஸ்டில் இந்திய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-0 என தன்வசமாக்கியது. வெளிநாட்டு தொடர்களை கடந்த 9 ஆண்டுகளாக இழக்காமல் இருந்த வந்த தென் ஆப்பிரிக்க அணியின் சாதனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆட்ட நாயகனாக 12 விக்கெட்டுகள் வீழ்த்திய அஸ்வின் தேர்வானார். 2006-க்குப் பின்னர் தென் ஆப்பிரிக்க அணி தொடர்ச்சியாக 15 தொடர்களை வென்றது. தற்போது முதன்முறையாக தோல்வியை சந்தித்துள்ளது. இதற்கு அஸ்வினின் பந்துவீச்சு முதன்மைக் காரணம். இத்துடன்…
-
- 0 replies
- 696 views
-
-
சிக்ஸர் சிங்கம்! ஆபிரகாம் பெஞ்சமின் டி வில்லியர்ஸ்... உலகம் முழுக்க கிரிக்கெட் மைதானங்களில் சிக்ஸர், பௌண்டரிகளால் அதிர்வேட்டுகள் நிகழ்த்தும் அதிரடி நாயகன். ஒருநாள் கிரிக்கெட்டின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன். சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து உலகம் முழுக்க ரசிகர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள் என எல்லோரது லைக்ஸையும் அள்ளியிருக்கிறார் டி வில்லியர்ஸ். 16 பந்து களில் 50 ரன், 31 பந்துகளில் சதம், 64 பந்துகளில் 150 ரன் என அனைத்து வேகமான சாதனைச் சதங்களும் இவர் வசம். 2004-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 21 வயது இளைஞனாக தென்ஆப்பிரிக்க அணிக்குள் நுழைந்தார் ஏ.பி.டி வில்லியர்ஸ். எல்லா சாதனை மன்னர்களையும்போல இவரும் தோல்வியுடன் தொடங…
-
- 1 reply
- 852 views
-
-
சர்வதேச தடகள சம்மேளனத்தின் மூன்று உயரதிகாரிகளுக்கு வாழ்நாள் தடை சர்வதேச தடகள சம்மேளனத்தின் தலைமை அலுவலகம் ரஷ்ய தடகள விளையாட்டு வீரர்களின் ஊக்கமருந்து மோசடிகளை மூடிமறைக்க முயன்ற குற்றச்சாட்டில் தடகள விளையாட்டு உலகின் மூன்று மூத்த அதிகாரிகளுக்கு ஆயுள்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் விளையாட்டுத் துறைக்கு எதிர்பார்த்திராத பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச தடகள சம்மேளனத்தின் ஒழுக்கநெறி ஆணையம் கூறியுள்ளது. ரஷ்ய தடகள சங்கத்தின் தலைவர், உலக தடகள சம்மேளனத்தின் முன்னாள் தலைவரான Lamine Diack-இன் மகன் ஆகியோரும் தடைவிதிக்கப்பட்டவர்களில் அடங்குகின்றனர். ரஷ்ய மராத்தன் ஓட்ட வீராங்கனை ஒருவர் ஊக்கமருந்தை பயன்படுத்தியதை மறைப்பதற்கு இவர்கள் லஞ்சம் கோரியதாக ஒழ…
-
- 0 replies
- 330 views
-
-
ஆஸ்திரேலியாவை வீழ்த்துமா இந்தியாவின் இந்த 5 அஸ்திரங்கள்? இந்திய கிரிக்கெட் அணி, போன வருடம் ஜிம்பாப்வே தொடர் தவிர வேறெந்த ஒருநாள் போட்டித் தொடரையும் கைபற்றவில்லை. உலகக் கோப்பையில் அரையிறுதி, வங்கதேச மற்றும் தென்னாப்பிரிக்க தொடரை இழந்தது என தோனி அண்ட் கோ சறுக்கிக் கொண்டேதான் இருந்தது. இப்போது ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்துக்கு, சில புதுமுகங்கள் மற்றும் அனுபவசாலிகள் என முழு பலத்தோடு சென்றிருக்கிறது இந்திய அணி. இது பலம் என்றாலும், சொந்த மண்ணில் ஆஸியை வீழ்த்துவது கடினம் என்பதையும் மறக்கக் கூடாது. ஆனாலும், ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணில் வீழ்த்த இந்தியாவுக்கு 5 விஷயங்கள் சாதகமாக இருக்கிறது. தெறி பேட்டிங் பேட்டிங்கை பொறுத்தமட்டில் இந்தியா எப்போதுமே கில்…
-
- 0 replies
- 470 views
-
-
3 தமிழ் வீரர்களுடன் மலேஷியா பயணமாகியது இலங்கை அணி ( படங்கள் இணைப்பு ) வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று தமிழ் வீரர்கள் உட்பட அனைத்து மாவட்ட வீரர்களையும் உள்ளடக்கிய இளையோர் இலங்கை அணி மலேஷியாவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளது. இவர்களுக்கான வழியனுப்புதல் நிகழ்வு இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் திலங்க சுமதிபால தலைமையில் இலங்கை கிரிக்கெட் சபையில் இடம்பெற்றது. இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள தமிழ் வீரர்களுக்கு எமது ஆதரவினையும் உந்துசக்தியையும் வழங்கி அவர்களை தேசிய அணியில் இடம்பெறச் செய்வேண்டும். இந்நிலையில் ஏனைய வீரர்களும் குறிப்பாக தமிழ் வீரர்களும் பல சாதனைகள் புரிந்து எமது தாய்நாட்டை உய…
-
- 0 replies
- 645 views
-
-
உலகப் புகழ்பெற்ற கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் தனது மகளுடன் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பட்டணத்தில் பூதம் திரைப்படத்தில் வரும் நகைச்சுவைக் காட்சி தான் இது... கோப் பிரயண்ட் என்ற அந்த இளம் வீரர் விளையாடும் போட்டிகளைக் கண்ட ரசிகர்களும் இதேபோன்ற ஒரு உணர்வு ஏற்பட்டிருக்கும் என்றால் அது மிகையல்ல... அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தில் பிறந்த கோப் பிரயண்ட் மிகக் சிறிய வயதிலேயே கூடைப்பந்து விளையாட்டில் ஆர்வம் காட்டி வந்தார். அவரது தந்தை ஜோ பிரயண்ட் பிரபலமான என்.பி.ஏ. கூடைப்பந்துப் போட்டி வீரர் என்பதால் மகனை ஊக்கப்படுத்தினார். குடும்பத்துடன் இத்தாலியில் குடிபெயர்ந்த ஜோ பிரய…
-
- 5 replies
- 1.1k views
- 1 follower
-
-
கடைசி ஓவரில் நான்கு சிக்சர்களை விளாசிய கார்லோஸ் பிராத்வெய்ட் யார்? சாமுவேல்ஸ், பிராத்வெய்ட். | படம்: பிடிஐ. உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் இறுதிப் போட்டியில் கடைசி ஓவரில் சற்றும் எதிர்பாராத விதமாக 4 மிகப்பெரிய சிக்சர்களை அடித்த அந்த நெடிய, வலுவான வீரர் பிராத்வெய்ட் பார்படாஸைச் சேர்ந்தவர். இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசி ஓவர் வரை இங்கிலாந்தே வெற்றி பெறும் என்று எதிர்பார்த்தனர், பிராத்வெய்ட் இப்படியொரு ராட்சத ஹிட்டராக இருப்பார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். முதல் பந்தே ஸ்டோக்ஸ் லெக்ஸ்டம்பில் ஹாஃப்-வாலி லெந்தில் வீச டீப் பேக்வர்ட் ஸ்கொயர் லெக் திசைக்குப் பறந்தது. ஆனால் அடுத்த பந்து ஃபுல் லெந்த் என்று கூற மு…
-
- 0 replies
- 556 views
-
-
இங்கிலாந்து எதிர் மேற்கிந்தியத்தீவுகள்: டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பிக்கிறது 2020 ஜூலை 07 , பி.ப. 10:40 இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது, செளதாம்டனில் இலங்கை நேரப்படி நாளை பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியுடன் ஆரம்பிக்கிறது. அந்தவகையில் கொவிட்-19 பரவலுக்குப் பின்னர் ஏறத்தாழ நான்கு மாதங்களுக்குப் பின்னர் இப்போட்டியுடன் கிரிக்கெட் மீளத் திரும்புகின்ற நிலையில், போட்டி முடிவுக்கப்பால் போட்டி எவ்வாறு நடைபெறுகின்றது என்பது உற்று நோக்க…
-
- 1 reply
- 1.1k views
-
-
அவுஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் எட்டு விக்கெட்டுக்களினால் இலங்கை வெற்றி பெற்றுள்ளது. கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அவுஸ்திரேலிய சென்றுள்ள இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அடிலெய்ட் ஓவலில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி இலங்கை வீரர்களின் சிறப்பான பந்துவீச்சை முகங்கொடுக்க முடியாமல் 46.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 170 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. முதலாவது விக…
-
- 0 replies
- 606 views
-
-
பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதனை படைத்தார் மாரியப்பன் தங்கவேலு ரியோ2016 : பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் மாரியப்பன் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். இதே பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் இந்தியா தட்டிச் சென்றது. இந்திய வீர் வருண் சிங் பாடி வெண்கலம் வென்றார். மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் பிரேசில் நாட்டிலுள்ள ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்து வருகிறது. இதில் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் மாரியப்பன் தங்கவேலு 1.89மீ., உயரம் தாண்டி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இது ரியோ பாராலிம்பிக்கில் இந்தியா பெறும் முதல் பதக்கம். இவர் தமிழகத்திலுள்ள சேலத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்துக்கு…
-
- 16 replies
- 3k views
- 1 follower
-
-
கோலூன்றிப் பாய்தலில் யாழ் மாணவி புதிய சாதனை யாழ்ப்பாணம் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மாணவி, கோலூன்றிப் பாய்தலில் புதிய சாதனையை படைத்துள்ளார். தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி கல்விபயிலும் ஜே. அனித்தா என்ற மாணவியே இலங்கை கோலூன்றிப் பாய்தலுக்கான சாதனையை புதுப்பித்துள்ளார். இவர் 3.35 மீற்றர் உயரத்திற்கு கோலூன்றிப் பாய்ந்து ஏற்கனவே இருந்த சாதனை புதுப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சேர்.ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகள் தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. இப் போட்டியிலேயே குறித்த சாதனை புதுப்பிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/11357
-
- 5 replies
- 2.9k views
-