விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7859 topics in this forum
-
மெதிவ்சின் தலைமைப் பதவியின் நீடிப்பில் சந்தேகம் இலங்கை அணியை கடந்த சில வருடங்களாக தலைமை தாங்கி வரும் அஞ்சலோ மெதிவ்ஸ், சனிக்கிழமை (8) நடைபெற்று முடிந்திருக்கும் ஜிம்பாப்வே அணியுடனான போட்டியில் கிடைத்த ஏமாற்றமான தோல்வியின் காரணமாக, மீண்டும் விமர்சனங்களுக்கும் அழுத்தங்களுக்கும் உள்ளாகியிருக்கின்றார். சாதரண வீரராக இருந்த காலத்தில் ஒரு நாள் போட்டிகளில் பெற்றிருந்த 40.83 ஓட்டங்கள் என்னும் துடுப்பாட்ட சராசரியை விட அணித்தலைவராக மாறிய போது மெதிவ்ஸ் 45.70 ஓட்டங்கள் என்னும் சிறப்பான துடுப்பாட்ட சராசரியை வெளிக்காட்டியிருக்கின்றார். எனினும், இலங்கையின் மிகப் பிரபல்யமான விளையாட்டான கிரிக்கெட்டில் அவரது தலைமைத்துவ திறன்கள், தீர்மானம் எடுக்கும் …
-
- 0 replies
- 436 views
-
-
மெதிவ்ஸ், சந்திமாலின் சேவையை எதிர்பார்க்கும் இலங்கையின் முன்னாள் வீரர் 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் இலங்கை அணியின் அனுபவமிக்க வீரர்களான அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோர் விளையாட வேண்டும் எனவும், அவர்களது பங்குபற்றலானது இளம் இலங்கை அணிக்கு மிகவும் அத்தியவசியமானது என்றும் இலங்கையின் முன்னாள் அணித் தலைவரும், நட்சத்திர வீரருமான அரவிந்த டி சில்வா தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக குறித்த வீரர்கள் இருவரும் அணிக்குத் தேவையான தருணங்களில் திறமையை வெளிப்படுத்த தவறி வருவதாகவும், அதிலும் மெதிவ்ஸ் அடிக்கடி உபாதைக்குள்ளாகி வருவதையும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார். AFP செய்திச் சேவைக்கு அ…
-
- 0 replies
- 424 views
-
-
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் குறிப்பிட்ட நேரத்தில் பந்து வீசவில்லை. குறிப்பிட்ட நேரத்தில் 3 ஓவர்கள் குறைவாக வீசி இருந்தனர். இதனால் கேப்டன் டோனி தடை பெறும் அபாயத்தில் உள்ளார். மெதுவாக பந்து வீசியதாக இந்திய அணி மீது இந்த ஆண்டில் கூறப்பட்ட 2-வது குற்றச்சாட்டு ஆகும். இதற்கு முன்பு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்த ஆண்டு தொடக்கத்தில் கேப்டவுன் டெஸ்டில் இந்திய அணி மெதுவாக பந்து வீசி இருந்தது. டொமினிக்காவில் வருகிற 6-ந்தேதி தொடங்கும் கடைசி டெஸ்டில் இந்திய அணி மீது மெதுவாக பந்து வீசிய குற்றச்சாட்டு எழுந்தால் டோனிக்கு தடை விதிக்கப்படும். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆட முடியாத நிலை ஏற்படும். 12 மாதத்தில் ஒரு அ…
-
- 0 replies
- 954 views
-
-
மெத்தியுஸ் மற்றும் சந்திமல் தென்னாபிரிக்க தொடருக்கு தயார் இலங்கை அணியின் தலைவர் எஞ்சலோ மெத்தியுஸ் மற்றும் உபத் தலைவர் சந்திமல் ஆகியோர் உபாதையிலிருந்து நீங்கியுள்ளதுடன், தென்னாபிரிக்க தொடருக்கு தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மெத்தியுஸ் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், சந்திமல் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் துஸ்மந்த சமீர ஆகியோர் உபாதைகளிலிருந்து குணமாகியுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை தானும் தற்போது பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றேன். இதேவேளை தம்மிக்க பிரசாத் உபாதைகளில் இருந்து நீங்குவதற்கு சற்று காலம் எடுக்கும் என வைத்திய…
-
- 0 replies
- 368 views
-
-
மெத்தியூஸிடம் 5 மணிநேர விசாரணை இலங்கை கிரிக்கெட் அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ், நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் இன்று, சுமார் 5 மணித்தியாலங்களாக வாக்குமூலமளித்தார். பணத்துக்காக ஆட்டநிர்ணயத்தில் ஈடுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக குசால் ஜனித் பெரேரா மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோர், சர்வதேச கிரிகெட் சபையிடம் முறைப்பாடு செய்திருந்தனர். இது தொடர்பிலேயே வாக்குமூலம் பெறப்பட்டதாக, மெத்தியூஸ் தெரிவித்தார். - See more at: http://www.tamilmirror.lk/164146/%E0%AE%AE-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%B8-%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%A8-%E0%AE%B0-%E0%AE%B5-%E0%AE%9…
-
- 1 reply
- 438 views
-
-
மெத்தியூஸுக்கு 5 ஆவது இடம் எதற்குத் தெரியுமா ? அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணித்தலைவரான ஸ்டீவன் ஸ்மித் உலகில் அதிக வருமானத்தை ஈட்டும் கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இதில் இலங்கை கிரிக்கெட் அணியின் எஞ்சலோ மெத்தியூஸ் ஐந்தாவது இடத்தில் உள்ளமை சிறப்பம்சமாகும். உலகில் அதிக வருமானத்தை ஈட்டும் கிரிக்கெட் வீரர்கள் நாடுகள் ரீதியாக கணிப்பிடப்பட்டது. இதன்படி அவுஸ்திரேலியாவிலிருந்து ஸ்டீவன் ஸ்மித்தும் இங்கிலாந்திலிருந்து ஜோய் ரூட்டும் இந்தியாவிலிருந்து விராட் கோஹ்லியும் தத்தம் நாடுகளில் அதிக வருமானத்தை ஈட்டும் வீரர்களாக காணப்படுகின்றனர். இதன்படி, தென்னாபிரிக்கவிலிருந்து டுப்பிளெஸிஸும் இலங்கையிலிருந்து அஞ்சலே…
-
- 1 reply
- 481 views
-
-
மெத்தியூஸை துரத்தும் உபாதை பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் விளையாடமாட்டாரென இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அவரது காலில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாகவே பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கலந்துகொள்ளமாட்டரென இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 28 ஆம் திகதி அபுதாபியில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/24694
-
- 0 replies
- 301 views
-
-
மெத்தியூஸை விலகுமாறு வேண்டுகோள் : சந்திமாலை தலைவராக்க தீர்மானம் இலங்கை அணியின் தலைவராக தினேஸ் சந்திமாலை நியமிக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை கிரிகெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள ஒரு நாள் போட்டித் தொடரில் இலங்கையை தலைமை தாங்குவதற்காகவே சந்திமல் நியமிக்கப்படவுள்ளார். இந்நிலையில் அணித்தலைவராக செயற்பட்டுவரும் அஞ்சலோ மெத்தியூஸை ஒருநாள் மற்றும் இருபதுக்கு - 20 போட்டிகளின் தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/41042
-
- 5 replies
- 1.3k views
-
-
மெத்தியூஸ் இல்லாத ஒருநாள் அணியை அறிவித்தது இலங்கை கிரிக்கெட் இங்கிலாந்துக்கு எதிராக இடம்பெறவுள்ள ஒருநாள், இருபதுக்கு 20, டெஸ்ட் தொடர்களுக்கான இலங்கை அணியினை கிரிக்கெட் தெரிவுக்குழு இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ள நிலையில், அஞ்சலோ மெத்தியூஸ் ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணி, இலங்கை அணியுடன் ஐந்து ஒருநாள் போட்டிகள், ஒரு இருபதுக்கு 20 போட்டி மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்குமிடையேயான இப் போட்டித் தொடரானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி நவம்பர் மாதம் 27 ஆம் திகதி…
-
- 1 reply
- 706 views
-
-
மெத்தியூஸ் தலைமையிலான இலங்கை அணி அறிவிப்பு இலங்கை கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 போட்டிகளுக்கான தலைவராக எஞ்சலோ மெத்தியூஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று உத்தியோகபூர்வமாக இதனை அறிவித்துள்ளது. இலங்கை அணியின் ஒட்டுமொத்த போட்டிகளுக்கான தலைவராக செயற்பட்டுவந்த மெத்தியூஸ் கடந்த வருடம் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரையடுத்து தனது இராஜினாமாவை அறிவித்தார். பின்னர் இலங்கை அணியின் டெஸ்ட் தலைவராக தினேஸ் சந்திமால் தெரிவுசெய்யப்பட்டதுடன், ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 போட்டிகளின் தலைவராக உபுல் தரங்க தெரிவுசெய்யப்பட்டார். …
-
- 0 replies
- 517 views
-
-
மெத்தியூஸ், சந்திமால், ஹேரத் உட்பட 17 பேர் ஒப்பந்தத்தில் கைச்சாத்து இலங்கை கிரிக்கெட் சபையுடனான ஒப்பந்தத்தில் ஏஞ்சலோ மெத்தியூஸ், சந்திமால், ஹேரத் உட்பட 17 வீரர்கள் கைச்சாத்திட்டுள்ளனர். அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ், ரங்கன ஹேரத், தினேஸ் சந்திமால், திமுது கருணாரத்ன, குசேல் ஜனித் பெரேரா, சுரங்க லக்மால், லஹிரு திரிமான, தில்ருவன் பெரேரா, குசேல் மெண்டிஸ், மிலிந்த சிறிவர்தன, நுவான் பிரதீப், கௌசல் சில்வா, தனஞ்சய டி சில்வா, துஷ்மந்த சமிர, தனுஸ்க குணதிலக, ஜெப்ரி வெண்டர்சே, லக்ஷான் சந்தகன் ஆகியோரே ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர். http://www.virakesari.lk/article/12590
-
- 0 replies
- 239 views
-
-
அஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் பிரமோதைய விக்ரமசிங்க ஆகிய இருவரும் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கிரிக்கெட் சபை தலைவர் திலங்க சுமதிபால எம்.பி கூறிய விடயங்கள் முழுப்பொய் என தெரிவித்த முன்னாள் தலைவரும் தற்போதைய அமைச்சருமான அர்ஜூன ரணதுங்க, நான் ஒருபோதும் அவர்களுக்கு எதிராக முறையிடவில்லை என்றும் கூறினார். சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்கள் குறித்து குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை நடத்த முடியாது. அதற்கு சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் விசாரணை பிரிவே விசாரணைகளை நடத்த வேண்டும். இலங்கையில் இந்த பிரிவை உருவாக்க சர்வதேச கிரிக்கெட் சபை வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் இந்த மூன்று ஆண்டுகளில் தான் இவ்வாறான நிலைமைகள் உருவாகியுள்ளது. அதுவும் சிம்பாவே இலங்கை போட்டியில் தான் இவ்வா…
-
- 0 replies
- 609 views
-
-
மெத்யூ 7 தங்கங்களை வென்று சாதனை (குவாஹாட்டியிலிருந்து எஸ். ஜே. பிரசாத்) தெற்காசிய விளையாட்டு விழா அத்தியாயமொன்றில் 7 தங்கப் பதக்கங்களை வென்ற நீச்சல் வீரர் மெத்யு அபேசிங்க இலங்கைக்கான புதிய சாதனையை நிலைநாட்டினார். இந்தியாவின் அசாம் மாநிலத்தின் குவாஹாட்டி மற்றும் மேகாலயா மாநிலத்தின் ஷில்லொங்கில் நடைபெற்று வரும் 12ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவின் ஆறாம் நாளான நேற்று துப்பாக்கிசுடுதல், ஸ்கொஷ், மேசைப்பந்தாட்டம், டென்னிஸ், பூப்பந்தாட்டம் (பட்மின்டன்) ஆகிய போட்டிகளும் நடைபெற்றன. நீச்சல் போட்டி சருசாஜாய், டாக்டர் ஸக்கிர் ஹுசெய்ன் ந…
-
- 1 reply
- 434 views
-
-
மெத்யூஸ், மலிங்கவிடம் மீண்டும் தலைமைப் பொறுப்புகள் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அணிகளின் தலைவராக ஏஞ்சலோ மெத்யூஸ் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் இலங்கைக்கான கிரிக்கெட் விஜயம் முதல் அடுத்த வருடம் இங்கிலாந்துக்கான இலங்கை கிரிக்கெட் விஜயம் வரை ஏஞ்சலோ மெத்யூஸ் அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்தது. இதேவேளை, இலங்கையின் சர்வதேச இருபது 20 கிரிக் கெட் அணித் தலைவர் பதவி மீண்டும் லசித் மாலிங்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் பங்களாதேஷில் நடை பெற்ற உலக இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் இலங்கையை சம்பியனாக்கிய …
-
- 0 replies
- 397 views
-
-
மென்செஸ்டர் யுனைடெட்டிலிருந்து நான் விலக நிர்ப்பந்திப்பதற்கு சிரேஷ்ட அதிகாரிகள் முயற்சி: ரொனால்டோ By DIGITAL DESK 3 15 NOV, 2022 | 10:16 AM மென்செஸ்டர் யுனைடெட் கழகத்திலிருந்து விலகுவதற்கு அக்கழகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் தன்னை நிர்ப்பநதிப்பதாக பிரபல வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கூறியுள்ளார். அக்கழகத்தின் பயிற்றுநர் எரிக் டென் ஹக் மீது தனக்கு மதிப்பு எதுவும் இல்லை எனவும் ரொனால்டோ கூறியுள்ளார். பிரிட்டனின் டோக் ரீவி அலைவரிசையில், பியர்ஸ் மோர்கன் அன்சென்ஸர்ட் நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை (13) அளித்த செவ்வியொன்றிலேயே ரொனால்டோ இப்பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 37 வயதான கிறிஸ்டியானா ரொனால்டோ 5 தடவைகள் பெலன…
-
- 0 replies
- 196 views
- 1 follower
-
-
மென்செஸ்டர் யுனைட்டட் கழக பஸ்ஸை தாக்கியவர்களுக்கு தடை விதிக்க நடவடிக்கை மென்செஸ்டர் யுனைட்டட் அணியின் பயிற்றுநர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரசிகர்களுக்கு வாழ் நாள் தடை விதிக்கப்படும் என வெஸ்ட் ஹாம் கழகம் எச்சரித்துள்ளது. மென்செஸ்டர் யுனைட்டட் அணியினர் பயணம் செய்த பஸ் வண்டியின் யன்னல் ஒன்றும் தாக்கி நொறுக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவம் காரணமாக மென்செஸ்டர் யூனைட்டட் அணிக்கும் வெஸ்ட் ஹாம் அணிக்கும் இடையிலான போட்டி 45 நிமிடங்கள் தாமதித்தே ஆரம்பமானது. ‘‘பொலியென் மைதானத்திற்கு வெளியில் சில ஆதரவாளர்கள் அடாவடித்தனத்தில் ஈடுபட…
-
- 0 replies
- 273 views
-
-
மென்டிஸை விட அபாயமானவர் முரளி அவரே இந்திய அணிக்கு சவாலாயிருப்பார் [19 - July - 2008] *ஹர்பஜன் கூறுகிறார் அஜந்த மென்டிஸை விட முரளிதரன் தான் மிகவும் அபாயகரமானவரென ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ஐ.பி.எல். தொடரில் ஸ்ரீசாந்த் கன்னத்தில் அறைந்ததற்காக 5 போட்டி தடை விதிக்கப்பட்டு, பின் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ள இந்திய வீரர் ஹர்பஜன், மென்டிஸை விட முரளிதரனே ஆபத்தானவர் என்கிறார். இது குறித்து ஹர்பஜன் அளித்த பேட்டியில்; மென்டிஸின் பந்துவீச்சு அற்புதமாக இருக்கிறது. இதுபோன்ற மந்திர பந்துவீச்சை டெனிஸ் பந்துகளில் செய்தவர்களை பார்த்திருக்கிறேன். ஆனால், கிரிக்கெட் பந்திலும் இதை சாதிக்க முடியுமென அவர் நிரூபித்துள்ளார். அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்ட…
-
- 6 replies
- 2.2k views
-
-
மெய்வன்மை பயிற்றுவிப்பாளர் சங்கத்தின் உபதலைவர்களில் ஒருவராக தமிழர் November 09, 2015 இலங்கை தேசிய மெய்வன்மை பயிற்றுவிப்பாளர் சங்கத்தின் 2016-2017ஆம் ஆண்டுக்கான நிர்வாக சபையில் உப தலைவர்களில் ஒருவராக தெரிவாகியுள்ளார் கே. விஜிதரன். நேற்றுச சனிக்கிழமை கொழும்பு விளையாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த நிர்வாகத் தெரிவில் யாழ். இந்துக் கல்லூரியின் பழைய மாணவனான கே. விஜிதரன் உபதலைவர்களில் ஒருவராக தெரிவாகியுள்ளார். இவர் சர்வதேச மெய்வன்மை பயிற்றுவிப்பாளர் தரம்1, தரம்2 பரீட்சைகளில் சித்தியடைந்துள்ளார். மற்றும் இலங்கை தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனத்தில் டிப்ளோமா, உயர் டிப்ளோமா பயின்றுள்ளார். வவுனியா மாவட்ட மெய்வன்மை பயி…
-
- 0 replies
- 244 views
-
-
மெய்வல்லுனர், டென்னிஸ், பெட்மிண்டன் உலகில் 2019ஐ கலக்கியவர்கள் By Mohammed Rishad - 21ஆம் நூற்றாண்டின் முதாலவது தசாப்தமானது முடிவடைந்து அதன் இரண்டாவது தசாப்தத்துக்கு காலடி வைத்துள்ள நிலையில், கடந்த வருடம் விளையாட்டு உலகில் பிரகாசித்த ஒருசில முக்கிய வீரர்களை இந்தக் கட்டுரை ஆராயவுள்ளது. இதன்படி, மெய்வல்லுனர், டென்னிஸ், பெட்மின்டன், போர்முயூலா ஒன் போன்ற முக்கிய விளையாட்டுக்களில் சாதித்த வீரர்கள் பற்றிய விபரங்களை இங்கு பார்ப்போம். ஜனவரி வருடத்தின் முதலாவது கிரான்ட்ஸ்லாம் தொடரான அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் 6-3, 6-2, 6-3…
-
- 0 replies
- 423 views
-
-
மெல்பர்னில் பார்வையாளர்களை சுண்டி இழுத்த தோனியின் பாகிஸ்தான் ரசிகர் 2016-12-30 16:58:54 மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவரும் அவுஸ்திரேலியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் அணிந்திருந்த ஜேர்சி (சீருடை) பார்வையாளர்கள் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணித் தலைவர் தோனியின் பெயரையும் இலக்கத்தையும் (7) தாங்கிய அந்த ஜேர்சி பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் ஜேர்சியை ஒத்ததாக இருந்தது. இந்த ஜேர்சியுடன் பாகிஸ்தான் அணியை அந்த ரசிகர் ஊக்குவித்தபோது அரங்கிலிருந…
-
- 0 replies
- 251 views
-
-
மெல்போர்ன் சென்றடைந்த ஜோகோவிச்சுக்கு ஆஸி.க்குள் நுழைவதற்கான விசா இரத்து உலகின் நம்பர் 1 வீரரான நோவக் ஜோகோவிச் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைவதற்காக வழங்கப்பட்டிருந்த விசா வியாழன் அன்று இரத்து செய்யப்பட்டது. இதனால் அவர் மெல்போர்னில் நடக்கும் அவுஸ்திரேலிய ஓபன் தொடரில் பங்கேற்பதற்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான, அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கும், போட்டியை காணவரும் ரசிகர்களுக்கும் கொவிட்-19 தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து வீரர்-வீராங்கனைகளும் தடுப்பூசி செலுத்தப்பட்டதை உறுதி செய்துள்ளனர். ஆனால் நம்பர்-1 வீரரும், 9 முறை அவுஸ்திரேலிய ஓபனை வென்றவருமா…
-
- 11 replies
- 1k views
-
-
மெல்போர்ன் ப்ளாஷ்பேக்: 1981 சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்தார் கவாஸ்கர் 1981-ல் மெல்போர்னில் நடந்த டெஸ்டில் ஆஸி. வீரர்களின் வாய்ப் பேச்சுக்குப் பதிலடியாக மறுமுனையில் இருந்த பேட்ஸ் மேனையும் அழைத்துக்கொண்டு ஆடுகளத்தை விட்டு வெளியேறிய சம்பவத்துக்கு முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் வருத்தம் தெரிவித்துள்ளார். 1981-ல், இந்திய- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே மெல்போர்னில் நடந்த டெஸ்ட் போட்டியில் எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்தது. அப்போது இரண்டாவது இன்னிங்ஸில் 70 ரன்களுடன் ஆடிக்கொண்டிருந்த கவாஸ்கர், டென்னிஸ் லில்லி பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார். பந்து முதலில் பேட்டில் பட்டு பிறகு கால்காப்பில் பட்டதாக கவாஸ்கர் நினைத்தார். ஆனால் நடுவர் ரெக்ஸ் ஒயிட்ஹெட…
-
- 1 reply
- 1.1k views
-
-
மெஸி, ரொனால்டோ, எம்பாப்பே கோல் புகுத்தினர்: றியாத் அணியை 5:4 விகிதத்தில் பிஎஸ்ஜி வென்றது By SETHU 20 JAN, 2023 | 12:14 PM சவூதி அரேபியாவில் நடைபெற்ற, பரீஸ் செயின்ற் ஜேர்மைன் அணிக்கும் (பிஎஸ்ஜி), அல் நாசர் - அல் ஹிலால் கழகங்களின் வீரர்கள் இணைந்த றியாத் ஆல் ஸ்டார்ஸ் கூட்டு அணிக்கும் இடையிலான கால்பந்தாட்டப் போட்டியில் நட்சத்திர வீரர்களான லயனல் மெஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ கிலியன் எம்பாப்பே ஆகியோர் கோல் புகுத்தினர். இப்போட்டியில் பிஎஸ்ஜி அணி 5:4 கோல்களால் வென்றது. ரொனால்டோ, எம்பாப்பே ஆகியோர் தலா 2 கோல்களைப் புகுத்தியமை குறிப்பிடத்தக்கது. றியாத் நகரிலுள்ள மன்னர் பஹத் அரங்கில் நேற்றிரவு இப்போட்டி நடைபெற்றது. …
-
- 0 replies
- 433 views
- 1 follower
-
-
மெஸியின் கடவுச்சீட்டு படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட துபாய் பொலிஸ் உத்தியோகத்தருக்கு சிறை; ஆப்கான் சிறுவனை சந்திக்க மெஸி ஆர்வம் 2016-02-02 10:33:11 ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணித்தலைவரான லயனல் மெஸியின் கடவுச்சீட்டு புகைப்படத்தை இணையத்தளத்தில் வெளியிட்ட துபாய் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு ஒரு மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஸ்பெய்னின் பார்ஸிலோனா கழகத்துக்காகவும் விளையாடும் லயனல் மெஸி கடந்த வருடம் குளோபல் சொக்கர் அவார்ட்ஸ் விருதை வென்றார். ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் கடந்த டிசெம்பர் 27 ஆம் திகதி இவ்விருது வழங்கல் விழா நடைபெற்றது. …
-
- 0 replies
- 536 views
-
-
மெஸ்சி 250: பார்சிலோனா வெற்றி அக்டோபர் 19, 2014. பார்சிலோனா: எல்பார் அணிக்கு எதிரான லா லிகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணி 5–0 என வெற்றி பெற்றது. பார்சிலோனா வீரர் மெஸ்சி லா லிகா தொடரில் 250வது கோல் அடித்து அசத்தினார். ஸ்பெயினில் லா லிகா கால்பந்து தொடர் நடக்கிறது. பார்சிலோனாவில் நடந்த இதன் லீக் போட்டியில் எல்பார், பார்சிலோனா அணிகள் மோதின. முதல் பாதியில் கோல் எதுடும் அடிக்கப்படவில்லை. விறுவிறுப்பான இரண்டாவது பாதியில் சேவி(60வது நிமிடம்), நெய்மர் (72), மெஸ்சி (74) தலா ஒரு கோல் அடிக்க, பார்சிலோனா அணி 3–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. சாதனையை நோக்கி: இந்தப்போட்டியில் ஒரு கோல் அடித்ததன் மூலம், லா லிகா வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரர்கள…
-
- 0 replies
- 395 views
-