விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7841 topics in this forum
-
ஹிமிதுராவ ஈகிள்ஸ் அணியிடம் வீழ்ந்த சிவானந்த By Mohamed Azarudeen கிழக்கு மாகாண அணிகள் இடையே நடைபெற்றுவரும் டிவிஷன் – II ஒருநாள் கிரிக்கெட் தொடரில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (9) இடம்பெற்று முடிந்த போட்டியொன்றில் மட்டக்களப்பு சிவானந்த விளையாட்டுக் கழகத்தினை, அம்பாறையின் ஹிமிதுராவ ஈகிள்ஸ் கழகம் 93 ஓட்டங்களால் வீழ்த்தியுள்ளது. சிவானந்த கிரிக்கெட் கழகத்தின் சொந்த மைதானத்தில் ஆரம்பமாகிய இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சிவானந்த கழக அணியினர் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை விருந்தினர்களான ஹிமிதுராவ கிரிக்கெட் கழகத்திற்கு வழங்கியிருந்த…
-
- 0 replies
- 340 views
-
-
இங்கிலாந்து சென்றது இலங்கை இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான முழுமையான கிரிக்கெட் தொடரொன்றுக்காக, இங்கிலாந்து நோக்கி இலங்கை அணி, இன்று புறப்பட்டுச் சென்றது. இங்கிலாந்து அணிக்கெதிரான 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், ஒற்றை இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டி ஆகியனவற்றிலும், அயர்லாந்துக்கெதிரான இரண்டு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் இலங்கை அணி விளையாடவுள்ளது. இந்தத் தொடருக்காக விளையாடுவதற்கு முன்னர், இலங்கை அணியின் வீரர்கள், சுற்றுலா ஒப்பந்தமொன்றில் இலங்கை கிரிக்கெட் சபையுடன் கைச்சாத்திட்டனர். இலங்கை வீரர்களின் வருடாந்த ஒப்பந்தம், இவ்வாண்டு பெப்ரவரியிலேயே நிறைவடைந்த போதிலும், ஏப்ரல் வரை அது நீடிக்கப்பட்டிருந்தது. இந்நிலையி…
-
- 1 reply
- 636 views
-
-
பாகிஸ்தானுக்கு ஆடுவதை விட இங்கிலாந்துக்கு ஆடலாம்: வெறுப்பில் ஜுனைத் கான் பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் கான். | கோப்புப் படம்: ஏ.எஃப்.பி. பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் கான் இங்கிலாந்தில் நிரந்தரமாகக் குடியேறி இங்கிலாந்து அணிக்கு ஆட பரிசீலித்து வருகிறார். தொடர்ந்து தன்னை பாகிஸ்தான் கிரிக்கெட் தேர்வு நிர்வாகம் ஒதுக்கி வருவதால் இந்த முடிவுக்கு வரவேண்டியுள்ளதாக ஜுனைத் கான் தெரிவித்தார். 71 டெஸ்ட் விக்கெட்டுகளுடன் தற்போதைய பாகிஸ்தான் வேகப்பந்து வரிசையில் இவர் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியவராக இருந்தாலும் தான் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக அவர் வெறுப்படைந்துள்ளார். கடந்த ஆண்டு ஜுனைத் கானுக்கு ஏற…
-
- 0 replies
- 344 views
-
-
அமெரிக்காவில் இந்திய, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் T20 போட்டி. அமெரிக்காவில் இந்திய, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் T20 போட்டி. T20 உலக கிண்ண சாம்பியன்களான மேற்கிந்திய தீவுகள் , மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 2 T20 போட்டிகள் கொண்ட தொடர் அமெரிக்காவின் புளோரிடாவில் இடம்பெறவுள்ளன. இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான குறித்த T20 தொடரை அமெரிக்காவில் நடத்த இரு நாட்டு கிரிக்கெட் சபைகளும் இணங்கியுள்ளதாக இந்தியக் கிரிக்கெட் சபை இன்று அறிவித்துள்ளது. அமெரிக்காவின், பூளோரிடாவில் உள்ள சென்ட்ரல் புரோவார்ட் பூங்கா மைதானத்தில் இந்தியா – மேற்கு இந்திய தீவுகள் இடையிலான T20 தொடர் நடைபெறவுள்ளது. தற்போது இதே மைதானத்தில்தா…
-
- 0 replies
- 390 views
-
-
நின்ற இருதயம் மீண்டும் இயங்கியது: பாக். முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹனீப் முகமது உயிர் பிழைத்த அதிசயம் பாகிஸ்தான் லெஜண்ட் ஹனீப் முகமது. | படம்: தி இந்து ஆர்கைவ்ஸ். 6 நிமிடங்கள் நின்று போன இருதயம் மீண்டும் மருத்துவர்கள் முயற்சியால் உயிர் பெற்றது, இறந்து பிழைத்த பாக். முன்னாள் கிரிக்கெட் லெஜண்ட் ஹனீப் முகமது. பாகிஸ்தான் கிரிக்கெட் ‘லெஜண்ட்’ ஹனீப் முகமது இறந்து விட்டார் என்று மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டது, ஆனால் சரியாக 6 நிமிட மருத்துவ முயற்சிக்குப் பிறகு இருதயம் செயல்படத் தொடங்கிய அதிசயம் நிகழ்ந்துள்ளது. இவருக்கு வயது 81. கராச்சியில் உள்ள அகாகான் மருத்துவமனையில் இறந்து விட்டார் என்று மருத்துவர்களால் அறிவிக்கப்பட்ட பிறகு 6 …
-
- 1 reply
- 620 views
-
-
சச்சின், சேவக் சாதனையை முறியடித்தார் அஸ்வின்! மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று முன்னிலை வகித்தது.நான்காம் போட்டி வியாழன் அன்று தொடங்கியது. மேற்கு இந்தியத் தீவுகள் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாட ஆரம்பித்தார்கள். முதல் நாள் அரை மணி நேரம் தாமதமாக ஆரம்பிக்கப்பட்ட போட்டியில் மழை குறுக்கிட 22 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. அடுத்த நான்கு நாட்கள் மழை பெய்யாத போதும் ஆட்டம் நடைபெறவில்லை. மழையால் சேதமடைந்த மைதானத்தை, மீட்டெடுக்க முடியாமல் தொடர்ந்து நான்கு நாட்களும் வெறுமனே கழிந்தது. இறுதியாக , போட்டி டிராவில் முடித்துக்கொள்வதாக அறிவிக்க…
-
- 1 reply
- 578 views
-
-
சிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் தொடரின் தலைவராக உபுல் தரங்க சிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடருக்கான இலங்கைக்குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒருநாள் அணியின் தலைவராக உபுல் தரங்க தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இதேவேளை அணியின் உபத் தலைவராக குசால் ஜனித் பெரேரா தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஒருநாள் தொடருக்கான இலங்கைக்குழாம் இதோ... 1. தனஞ்சய டி சில்வா 2. குசல் ஜனித் பெரேரா (உபத் தலைவர்) 3. நிரோஷன் டிக்வெல்ல 4. உபுல் தரங்க (தலைவர்) 5.குசால் மெண்டிஸ் 6. செஹான் ஜயசூரிய 7. அசேல குணவர்தன 8. சசித்ர பத்திரன 9. நுவான் குலசேகர …
-
- 0 replies
- 319 views
-
-
ஊடகங்களை உதைந்தார் மெஸ்ஸி உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளுக்கான தகுதிகாண் போட்டிகள் இடம்பெற்றுவரும் நிலையில், மோசமான பெறுபேறுகள் காரணமாக விமர்சனங்களைச் சந்தித்திருந்த ஆர்ஜென்டீன அணி, கொலம்பிய அணிக்கெதிரான வெற்றியைப் பெற்றுவிட்டு, ஊடகங்களைப் புறக்கணித்துப் போராட்டம் நடத்தியது. உலகக் கிண்ணத் தகுதிகாண் போட்டிகளில் முதற்போட்டியில் வென்ற ஆர்ஜென்டீன அணி, அதன் பின்னர் இடம்பெற்ற 4 போட்டிகளில், வெற்றியைப் பெறத் தவறியிருந்தது. அதில் இறுதி 2 போட்டிகளிலும் தோல்வியடைந்திருந்தது. முன்னதாக, ஜூன் மாதம் இடம்பெற்ற கோப்பா அமெரிக்கத் தொடரின் இறுதிப் போட்டியிலும், ஆர்ஜென்டீன அணி தோல்வியடைந்திருந்தது. இதையடுத்து, ஆர்ஜென்டீன அணி மீது, கடுமையான விம…
-
- 1 reply
- 368 views
-
-
இலங்கை வாழ்வியலுக்குள்ளே விளையாட்டையும் விதைத்து விளைவிக்கும் தேசம். இங்கு 'பார்க்கும் இடத்தில் எல்லாம் உன்னைப்போல் பாவை தெரியுதடி' என்று பாரதி பாடியது போல எம்மவர்களுக்குப் பார்ப்பதெல்லாம் பந்தாகவே தெரிவதுண்டு. படிக்கும் புத்தகங்களும் பேப்பர்களும் கூட துடுப்பு மட்டையாகவும் பந்தாகவும் மாறிவிடும் மாயாஜாலங்கள் அடிக்கடி காணக்கிடைப்பதுண்டு. வடக்கின் கரையோரப்பகுதிகளில் சீரான தூரத்தில் இருக்கும் பனைகளை பழைய மீன்வலைகொண்டு இணைத்து உருவாக்கப்பட்ட கரப்பந்தாட்டக்கூடங்கள் ஏராளம் உள்ளன. இன்றளவில் இலங்கை முழுவதும் கிரிக்கெட் பேசப்படுகிறது. ஒரு யாழ் வீரனின் அறிமுகம் சர்வதேசத்தால் பெரிதும் கொண்டாடப்படுகிறது. ஆனால் தேசிய விளையாட்டு என்று மார்தட்டப்படும் கரப்பந்தாட்டத்திற்கு…
-
- 0 replies
- 541 views
-
-
இனவெறிக் கோஷங்களால் சிட்னி மைதானத்தில் குழப்பம் இந்திய - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தின்போதும் இனவெறி கோஷம் எழுந்த நிலையில் போட்டி இடைநிறுத்தப்பட்டது. இந்திய-அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில் மூன்றாவது நாளான நேற்றைய ஆட்டத்தில், இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, மொஹமட் சிராஜ் ஆகிய இருவரையும் சிட்னி மைதானத்தில் அவுஸ்திரேலிய ரசிகர்கள் இனரீதியாக இழிவுப்படுத்தியுள்ளனர். எல்லைக்கோடு அருகே பீல்டிங் செய்த போது, அவர்களை சீண்டியுள்ளனர். மூன்றாவது நாள் ஆட்டம் முடிந்ததும் இந்திய அணித் தலைவர் ரஹானே கள நடுவர்கள் பால் ரீபெல், பால் வில…
-
- 3 replies
- 1.2k views
-
-
சுப்ரீம் கோர்ட் அதிரடி: பி.சி.சி.ஐ. தலைவர் பதவியில் இருந்து அனுராக் தாக்கூர் நீக்கம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் அனுராக் தாக்கூர், செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோரை அப்பதவிகளில் இருந்து நீக்கி சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முக்கிய செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை இருக்கும் வகையில் புதிய நிர்வாகிகள் நடந்துகொள்ள வேண்டும் என கடந்த ஜூலை மாதம் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த உத்தரவுக்கு மதிப்பளிக்கா…
-
- 2 replies
- 503 views
-
-
ஆண்கள் ஒற்றையர் விம்பில்டன் ரெனிஸ் சம்பியன்சிப் 77 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் பிரிட்டனிடம் வந்துள்ளது. கடைசியாக 1936 இல் Fred Perry என்பவரால் இந்த தலைப்பு வெல்லப்பட்டிருந்தது. இன்று வெம்பில்டனில் நடந்த இறுதிப் போட்டியில் உலகின் முதல் தர வீரரான Novak Djokovic ஐ 6-4 7-5 6-4 என்ற செற்களில் தோற்கடித்து ஆன்டி மொரே (Andy Murray) (இவர் ஒரு ஸ்கொட்லாண்ட் வீரர் ஆவார். ஸ்கொட்லாண்ட் 2014 இல் பிரிட்டனில் இருந்து தனி நாடாக பிரிந்து செல்வதற்கான வாக்களிப்பை நடத்த உள்ளது) 77 ஆண்டுகள் நீண்ட காத்திருப்பினை முடிவுக்குக் கொண்டு வந்து இந்த வெற்றியை.. பெற்றுக் கொடுத்துள்ளார். வாழ்த்துக்கள் ஆன்டி மொரே. http://www.bbc.co.uk/sport/0/tennis/23217393 https://www.youtube.com/watch?v=…
-
- 1 reply
- 853 views
-
-
தோனி போன்ற சாம்பியன்களைப் பற்றி தவறாக முடிவெடுக்காதீர்கள்: ரிக்கி பாண்டிங் எச்சரிக்கை பாண்டிங்கை ஸ்டம்ப்டு செய்யும் தோனி. | 2011 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் நடந்தது. | கோப்புப் படம்.| கே.பாக்யபிரகாஷ் சர்வதேச கிரிக்கெட்டில் தோனி இனி ஒன்றும் செய்யப்போவதில்லை என்று விமர்சிப்பவர்களுக்கு முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். தோனி போன்ற சாம்பியன்களைப் பற்றி அதற்குள் தவறாக முடிவெடுக்க வேண்டாம், சாம்பியன்ஸ் டிராபியில் அவர் ஒரு குறிப்பிடத்தகுந்த பங்காற்றும் திறமை கொண்டவர் எனவே அவரை விமர்சிக்க வேண்டாம் என்கிறார் பாண்டிங். இதுகுறித்து ஆஸ்திரேலிய இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டிய…
-
- 0 replies
- 518 views
-
-
44 வருடகால பிரிட்டனின் காத்திருப்பு முடிவுக்கு வந்தது அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டியில் லெய்லா பெர்னாண்டஸை வீழ்த்தி எம்மா ரடுகானு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர்க்கான ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் சனிக்கிழமை நியோர்க்கில் ஆர்தர் ஆஷே அரங்கில் பிரிட்டன் வீராங்கனை எம்மா ரடுகானு மற்றும் கனேடிய வீராங்கனை லெய்லா பெர்னாண்டஸ் ஆகியோருக்கு இடையில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் 18 வயதான எம்மா ரடுகானு 6-4 6-3 என்ற கணக்கில் 19 வயது கனேடிய வீராங்கனையை தோற்கடித்து சம்பியன் பட்டம் வென்றுள்ளார். இதன் மூலம் எம்மா ரடுகானு பிரிட்டனின் மகளிரிக்கான ஒரு பெரிய கிண்ணத்தின் 44 வருட காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். …
-
- 3 replies
- 694 views
- 1 follower
-
-
இந்தியாவில் கால்பந்து மிருகம் விழித்துவிட்டது! #BackTheBlue #FIFAU17WC 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்துத் தொடர், அக்டோபர் 6-ம் தேதி தொடங்கவிருக்கிறது. 87 வருட உலகக் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக இந்திய அணி கலந்துகொள்ள இருக்கிறது. இதில், 24 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் இந்தியா நேரடியாக உலகக் கோப்பைக்குத் தகுதிபெற்றது. ஆனால், இந்தத் தொடர் நமக்கு அவ்வளவு எளிதாக இருக்கப்போவதில்லை. ஏனென்றால், இந்திய அணியைத் தவிர மீதமிருக்கும் 23 நாடுகளும் கண்டங்கள் வாரியாக நடத்தப்பட்ட தகுதிச்சுற்றுப் போட்டிகளில் பலத்தை நிரூபித்தே இங்கு வந்துள்ளன. நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் இந்த 17 வயதுக்…
-
- 44 replies
- 4.7k views
-
-
கிரிக்கெட் வீரர்களை காவிமயமாக்கிய உத்திரபிரதேச யோகி அரசு இந்திய வந்துள்ள நியூசிலாந்து அணி கிரிக்கெட் வீரர்களுக்கு காவி துண்டு அணிவித்து, யோகி ஆதித்யநாத் அரசு வரவேற்பு கொடுத்துள்ளது. நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் மற்றும் 3 டீ20 தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முன்னதாக நடந்து முடிந்த இரண்டு ஒருநாள் போட்டிகளில் இரண்டு அணிகளும் ஆளுக்கொரு முறை வெற்றி பெற்றதால் தொடர் சம நிலையில் உள்ளது. இதனால் 3 வது போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 2 ஒரு நாள் தொடர் முடிந்து 3-வது ஒரு நாள் போட்டியில் விளையாடுவதற்காக இரு அணிகளும் கான்பூர் மைதானத்துக்கு வந்தடைந்தது. அங்கு வந்த வீரர்கள் தீபாவளி முடிந்து வந்ததால், அவர்க…
-
- 0 replies
- 434 views
-
-
4ஆவது தடவையாகவும் ஐரோப்பாவின் சிறந்த கால்பந்து வீரராக மெஸ்ஸி தெரிவு Image courtesy - AFP ஸ்பெய்னின் பிரபல பார்சிலோனா கழகத்துக்காக விளையாடி வருகின்ற அர்ஜென்டீனாவின் நட்சத்திர கால்பந்து வீரர் லியொனல் மெஸ்ஸி, ஐரோப்பாவின் சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படுகின்ற தங்க சப்பாத்து (Golden Shoe) விருதை 4ஆவது தடவையாகப் பெற்றுக்கொண்டார். ஐரோப்பாவின் விளையாட்டு ஊடக சங்கம் மற்றும் ஐரோப்பிய விளையாட்டு பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகள் சங்கங்களினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படுகின்ற இவ்விருது வழங்கும் விழா நேற்று (24) பார்சிலோனாவில் நடைபெற்றது. 2016ஆம் மற்றும் 2017ஆம் பருவகாலத்தில் லாலிகா உள்ளிட்ட அனைத்து ஐரோப்பிய கால்பந்து போட…
-
- 0 replies
- 301 views
-
-
டெல்லியில் இனிமேல் போட்டி நடத்துகையில் காற்று மாசு கருத்தில் கொள்ளப்படும்: பி.சி.சி.ஐ இனி வரும் காலங்களில் டெல்லியில் கிரிக்கெட் போட்டி நடத்துகையில் காற்று மாசு குறித்து கருத்தில் கொள்ளப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. புதுடெல்லி: இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. டெல்லியில் காற்று மாசு நிலவுவதால் நேற்று முன்தினம் ஆட்டம் 3 முறை நிறுத்தப்பட்டு தொடர்ந்தது. மாசு பிரச்சினையால் இலங்கை அணி வீரர்கள் வாந்தி எடுத்ததாக இலங்கை அணி நிர்வாகம் போட்டி நடுவரிடம் புகார் தெரிவித…
-
- 1 reply
- 321 views
-
-
2017இல் இலங்கை கிரிக்கெட் அணியின் பதிவுகள் 2017இல் இலங்கை கிரிக்கெட் அணியின் பதிவுகள் இலங்கை கிரிக்கெட் அணிக்கு 2017ஆம் ஆண்டு மிகவும் ஏமாற்றம் மிக்க ஆண்டாக இருந்தது. இந்த ஆண்டில் இலங்கை அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் என பங்குபற்றிய 57 சர்வதேசப் போட்டிகளில் ஒரு டெஸ்ட் தொடரையும், 2 டி20 தொடர்களையும் மாத்திரமே வெற்றிபெற்று வருடமொன்றில் மோசமான தோல்விகளை சந்தித்த உலகின் 2ஆவது அணியாகவும் இடம்பிடித்தது. அதேபோன்று, டெஸ்ட் தரப்படுத்தலில் 6ஆவது இடத்தையும், ஒருநாள் மற்றும் டி20 தரவரிசையில் 8ஆவது இடத்தையும் இலங்கை அணி பெற்றுக்கொண்டது. இதன்படி, 2017இல் 13 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றி 7 போட்…
-
- 0 replies
- 382 views
-
-
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று நாளை தொடக்கம் அ-அ+ வெஸ்ட் இண்டீஸ் உள்பட 10 அணிகள் பங்கேற்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று ஜிம்பாப்வேயில் நாளை தொடங்குகிறது. ஹராரே: வெஸ்ட் இண்டீஸ் உள்பட 10 அணிகள் பங்கேற்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று ஜிம்பாப்வேயில் நாளை தொடங்குகிறது. 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2019) மே 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது…
-
- 11 replies
- 1.2k views
-
-
தலைகுனிவுதான் அதற்காக ஓடி ஒளியவா முடியும்?- இங்கிலாந்து சரிவு குறித்து கிரஹாம் தோர்ப் கிரஹாம் தோர்ப். - படம். | கெட்டி இமேஜஸ். ஒரு அணி ஓரளவுக்கு நல்ல நிலையில் இருந்து கொண்டிருக்கும் போதே திடீரென ஒரு அருமையான பந்து வீச்சு அல்லது பொறுப்பற்ற பேட்டிங் ஆகியவற்றினால் சிறுமை ஏற்படும் என்பது கிரிக்கெட் அல்ல எந்த ஒரு விளையாட்டிலும் தவிர்க்க முடியாததே என்பதாக சூசகமாகத் தெரிவிக்கும் இங்கிலாந்து முன்னாள் வீரர் கிரஹாம் தோர்ப், 58 ரன்களுக்குச் சுருண்ட இங்கிலாந்து அணிக்காக வாதாடுகிறார். ஆக்லாந்து டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்டமும் 17 பந்துகள் வீசிய பிறகு மழை காரணமாக தொடர முடியாமல் கைவிடப்பட்டு…
-
- 0 replies
- 134 views
-
-
பாகிஸ்தானிற்கு உலக அணிகள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவேண்டும் - சப்ராஸ் அகமத் பாகிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் செய்வது குறித்த தங்கள் எண்ணத்தை உலக கிரிக்கெட் அணிகள் மாற்ற வேண்டும் பாக்கிஸ்தானிற்கு அந்த அணிகள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் சப்ராஸ் அகமத் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாகிஸ்தானில் இடம்பெற்ற மேற்கிந்திய அணிக்கு எதிரான இருபதுக்கு - 20 தொடரை பாக்கிஸ்தான் அணி 3-0 என்ற அடிப்படையில் கைப்பற்றியதை தொடர்ந்தே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். பாகிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளாமல் இருப்பதற்கு அணிகள் இனிமேல் காரணங்களை முன்வைக்க முடியாது என குறிப்பிட்டுள்ள அவர், இன்றைய போட்டியை பார்ப்பதற…
-
- 0 replies
- 326 views
-
-
ஆசிய தகுதிகாண் மெய்வல்லுனரில் தமிழ் பேசும் வீரர்கள் அபாரம் இந்தோனேஷியாவின் பாலம்பேங் நகரில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள 18 ஆவது ஆசிய விளையாட்டு விழாவுக்கு இலங்கை மெய்வல்லுனர் வீரர்களைத் தெரிவு செய்யும் தகுதிகாண் போட்டிகளின் இரண்டாவதும், இறுதியுமான கட்டம் நேற்று (12) கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்தப் போட்டிகளில் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாணத்தைச் சேர்ந்த ஏ. புவிதரன், ஆண்களுக்கான தட்டெறிதலில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இஸட்.ரி.எம். ஆஷிக் மற்றும் ஆண்களுக்கான 10, 000 மீற்றர் ஓட்டப் போட்டியில் மலையகத்தைச் சேர்ந்த கே. சண்முகேஸ்வரன் ஆகியோர் வெற்றிகளைப் பதிவு செய்தனர். இதில், ஆண்களுக்கான கோல…
-
- 0 replies
- 599 views
-
-
பரபரப்பான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் பார்சிலோனாவை வீழ்த்தியது ரியல் மெட்ரிட் லா லிகா உதைப்பந்தாட்ட போட்டியின் லீக் ஆட்டத்தில் ரியல் மெட்ரிட் 3-1 என்ற கோல் கணக்கில் பார்சிலோனாவை வீழ்த்தியது. ஸ்பானிஷ் லீக் தொடரில், "கிளஸ்சிக்' மோதல் என்று அழைக்கப்படும் ரியல் மெட்ரிட், பார்சிலோனா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. ஆட்டம் தொடங்கிய மூன்றாவது நிமிடத்திலேயே, பிரேசிலைச் சேர்ந்த நம்பிக்கை நட்சத்திரம் நெய்மர், ரியல் மெட்ரிட் பின்கள வீரர்களை ஏமாற்றி அழகாக கோல் அடித்தார். ஆனால், ஜெரார்டு பீக்கே எதிரணி வீரர்களுடன் மோதலில் ஈடுபட ரியல் மெட்ரிட் அணிக்கு பெனால்டி கிக் கிடைத்தது. இதை எந்தத் தவறும் செய்யாமல் கோலாக மாற்றினார் ரியல் மெட்ரிட்டின் கிறிஸ்டிய…
-
- 0 replies
- 412 views
-
-
முரளி நல்லிணக்க கிண்ண கிரிக்கெட் ஆரம்ப விழாவில் 2014-10-31 12:26:55 முரளி நல்லிணக்க கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் மூன்றாவது அத்தியாயத்தை இரக்கத்திற்கான சிந்தனை மன்றத்தின் ஸ்தாபகரும் உலக பந்து வீச்சு சாதனையாளருமான முத்தையா முரளிதரன் நேற்றுமுன்தினம் வைபவரீதியாக ஆரம்பித்துவைத்தார். யாழ். மத்திய கல்லூரியில் நடைபெற்ற றிச்மண்ட் கல்லூரி அணிக்கும் திருகோணமலை - மட்டக்களப்பு பாடசாலைகள் கூட்டு அணிக்கும் இடையிலான போட்டிக்கான நாணயத்தை சுழற்சியை முத்தையா முரளிதரன் நடத்தி ஆரம்பித்துவைத்தார். முரளி நல்லிணக்க கிண்ண கிரிக்கெட் போட்டிகள் யாழ்ப்பாணம் (2 மைதானங்கள்), கிளிநொச்சி, ஒட்டுசுட்டான் ஆகிய மைதானங்களில் 19 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான போட்டிகள் நடைபெறுவதுடன் மா…
-
- 8 replies
- 2.1k views
-