விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7834 topics in this forum
-
கிரிக்கெட் ஆட்டக்களமும் அறிவுரைகளும் முன்பை விட தற்போது, கிரிக்கெட்டில் ஆட்டகளம் பற்றிய பிரச்சனைகள் அதிகம் அலசப்படுகின்றன. தெ.ஆ. துவக்க ஆட்டக்காரரும், தற்போதைய வர்ணனையாளருமான பேரி ரிச்சர்ட்ஸ், இந்தியாவின் நாயகனான சச்சின் டெண்டுல்கரை, துணைக் கண்ட செத்தகள ஆட்டக்காரர் என வர்ணித்தது நினைவிருக்கலாம். ஆனால் டெண்டுல்கர் அடித்த சதங்களில் சரிபாதி சதங்கள் அவர் வர்ணிக்கும் மேலெழும்பும் ஆட்டக்களத்தில் அடித்ததே என்பது அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எப்பொழுதும் இல்லாமல் இந்த செத்தகளம், நல்லகளம் என்ற பேச்சும், அறிவுரைகளும் அதிகமாக இப்பொழுது வழங்கப்படுகிறது. ஏன்? 1960-களில் இங்கிலாந்தில் உள்ள ஆட்டகளம் எல்லாமே மிக மோசமான மண் கலவையால் மிருதுவாகவும், பந்துகள் மிகத…
-
- 0 replies
- 1.3k views
-
-
சர்வதேச கால்பந்து தரவரிசை பிரேசில் அணி மீண்டும் முதலிடத்தில் [20 - Jஉல்ய் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] சர்வதேச கால்பந்து தரவரிசை பட்டியலில் பிரேசில் அணி முதலிடத்திலுள்ளது. கோபா- அமெரிக்க வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றிய பிரேசில் அணி 6 மாதத்துக்குப் பின் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. ஆர்ஜன்ரீனா 2 ஆம் இடத்திலும் இத்தாலி 3 ஆம் இடத்திலுமுள்ளன. தெற்காசியாவை பொறுத்தவரை மாலைதீவு அணி முதலிடத்திலுள்ளது. இதற்கடுத்ததாக இலங்கை அணி உள்ளது. இந்த உலகத் தரவரிசையில் ஓரிடம் பின்னடைவு பெற்று 162 ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது இந்தியா. கடந்த மாதம் வெளியிடப்பட்ட பட்டியலில் இந்தியா 3 இடங்கள் முன்னிலை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆசிய…
-
- 0 replies
- 928 views
-
-
கோபா- அமெரிக்க கால்பந்து இறுதியாட்டம் சாம்பியன் கிண்ணத்தை பிரேசில் கைப்பற்றியது [17 - July - 2007] கோபா அமெரிக்க கால்பந்தாட்ட இறுதியாட்டத்தில் பிரேசில் அணி ஆர்ஜென்ரீனாவை தோற்கடித்து சாம்பியன் கிண்ணத்தைக் கைப்பற்றியது. கோபா- அமெரிக்கக் கிண்ண கால்பந்துப் போட்டி வெனிசுலாவில் நடந்தது. இதன் இறுதிப்போட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு நடைபெற்றது. இதில் தற்போது சாம்பியனான பிரேசில் - ஆர்ஜென்ரீனா ஆணிகள் மோதின. பிரேசில் வீரர்களின் அபாரமான ஆட்டத்திற்கு ஈடுகொடுத்து விளையாட முடியாமல் ஆர்ஜென்ரீனா வீரர்கள் திணறினார்கள். ஆட்டம் தொடங்கிய 4 ஆவது நிமிடத்தில் பிரேஸில் முதல் கோலைப் போட்டது. கனிஷ்ட வீரர் பாப்டிஸ்டா இந்தக் கோலை அடித்தார். 40 ஆவது நிமிடத்தில் ஆர்ஜென்ரீனா …
-
- 0 replies
- 968 views
-
-
பிரேசில் கால்பந்து வீரர் ககா ரூ. 635 கோடிக்கு ஒப்பந்தம்? [24 - Jஉனெ - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] பிரேசில் கால்பந்து அணியின் முன்னணி வீரர்களில் ஒருவர் ககா. இவர் இத்தாலியில் உள்ள ஏ.சி.மிலன் கழகத்துக்காக விளையாடி வருகிறார். 2011 ஆம் ஆண்டு வரை அவரது ஒப்பந்தம் அந்தக் கழகத்தில் இருக்கிறது. இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டில் உள்ள ரியல் மாட்ரிட் கழகம் ககாவை தங்கள் கழகத்தில் ஒப்பந்தம் செய்ய விரும்புகிறது. இதற்காக ரூ.635 கோடி தர இருப்பதாக அந்த கழகம் அறிவித்துள்ளது. மிலன்கழகத்தில் இருந்து ரியல் மாட்ரிட் கழகத்துக்கு மாறுவது குறித்து ககா இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. ரியல் மாட்ரிட் கழகத்தின் ஒப்பந்தத்தில் ககா கையெழுத்திட்டால் கால்பந்து வரலாற்றில் அதிகமான பணம் பெ…
-
- 0 replies
- 1.1k views
-
-
பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் பாப் உல்மர் கொலை செய்யப்படவில்லை என்றும், அவரது மரணம் இயற்கையாக நிகழ்ந்தது என்றும் ஜமைக்கா நாட்டின் பொலிஸார் செவ்வாய்கிழமை மாலை அறிவித்தனர். கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் அணி உலகக் கோப்பை போட்டியிலிருந்து வெளியேற்றபட்ட பிறகு பாப் உல்மர் தமது ஹோட்டல் அறையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது மரணம் குறித்து முதலில் ஒரு மருத்துவர் நடத்திய மருத்துவ ஆய்வில், பாப் உல்மர் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் மூன்று பேர் கொண்ட மருத்துவ குழுவினர் நடத்திய ஆய்வு முன்னைய ஆய்வை நிராகரித்தது. உல்மரின் மரணம் தொடர்பான ஒவ்வொரு விடயமும் தொழில் ரீதியாக புலனாய்வு …
-
- 0 replies
- 1k views
-
-
கிரிக்கெட் பயிற்சியாளர் பதவியை நிராகரித்தார் போர்டு-எம்புரேவும் எஸ்கேப் ஜூன் 12, 2007 லண்டன்: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியை ஏற்க இயலாது என தென் ஆப்பிரிக்காவின் கிரகாம் போர்டு கூறி விட்டார். அதேபோல, இங்கிலாந்தின் ஜான் எம்புரேவும் பயிற்சியாளர் பதவியை ஏற்க முடியாது என்று கூறி விட்டார். இதனால் இந்திய கிரிக்கெட் வாரியம் அதிர்ச்சி அடைந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளரைத் தேர்வு செய்ய வாரியத் தலைவர் சரத்பவார் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு டேவ் வாட்மோர், அர்ஜூன ரணதுங்கா உள்ளிட்ட பலருடைய பெயர்களைப் பரிசீலித்தது. இறுதியில் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கிரகாம் போர்டு, இங்கிலாந்தின் ஜான் எம்புரே ஆக…
-
- 0 replies
- 1k views
-
-
ஈ.எஸ்.பி.என். நிறுவனம் கிரிக்இன்போ இணையத்தளத்தை தங்களது வியாபார நோக்கத்திற்காக வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளனர் -verakesary- ESPN buys Cricinfo Web site from Wisden Group MUMBAI (Reuters) - Walt Disney Co.'s (DIS.N: Quote, Profile, Research) ESPN has bought cricket Web site Cricinfo from the Wisden group, ESPN and Cricinfo said in a statement on Monday. Financial details of the deal were not disclosed. "Growing our business in the online world is vital," said Russell Wolff, managing director of ESPN International. "Cricinfo will be a strong addition to ESPN," he said in the statement. Founded in 1993, Cricinfo reaches more than 7 mil…
-
- 0 replies
- 2.3k views
-
-
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கடந்த சனிக்கிழமையன்று நியமிக்கப்பட்ட தென்னாப்ரிக்காவை சேர்ந்த கிரஹாம் ஃபோர்டு அந்த பொறுப்பை ஏற்க மறுத்துள்ளார். இங்கிலாந்தில் கெண்ட் கிரிக்கெட் அணிக்கு பயிற்சியளிப்பதையே தான் தொடர்ந்து விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்க தாம் அழைக்கப்பட்டால், அந்த பணியை தாம் ஏற்றுக்கொள்ள விரும்புவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சையத் கிர்மானி தமிழோசையிடம் தெரிவித்தார்.
-
- 2 replies
- 1.3k views
-
-
இங்கிலாந்தில் ஒரு கிரிக்கெட் அணி இடைவிடாமல் தொடர்ச்சியாக 34 மணிநேரம் கிரிக்கெட் விளையாடி கின்னஸ் சாதனை படைத்திருக்கிறது. இங்கிலாந்தில் உள்ள நோர்தம்பர்லேண்டில் ரெட்ரோ ஸ்போர்ட்ஸ் கிளப் உள்ளது. இங்குள்ள கிரிக்கெட் வீரர் டேவிட் கிரிப்பித்ஸ் என்பவர் கடந்த டிசம்பர் மாதம் ஆஸ்மா நோயால் பாதிக்கப்பட்டு இறந்துபோனார். அவரது நினைவாகவும், கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கிலும் ரெட்ரோ கிளப் கிரிக்கெட் போட்டியை நடத்தியது. பகல்- இரவு என்று தொடர்ந்து 34 மணிநேரம் கிளப் வீரர்கள் கிரிக்கெட் ஆடினார்கள். இரவில் மழை பெய்தது. குளிர்ந்த காற்று வீசியது. ஆனால், அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் விளையாடினார்கள். இதற்கு முன் அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் உள்ள கிரிப்பித்ஸ் பல்கலைக்…
-
- 1 reply
- 1.2k views
-
-
இங்கிலாந்து - பிரேசில் அணிகள் மோதிய பரபரப்பான சிநேகபூர்வ கால்பந்தாட்டம் டிராவில் முடிந்தது. இங்கிலாந்து - பிரேசில் அணிகளிடையே சிநேகபூர்வ சர்வதேச கால்பந்து போட்டி லண்டன் வெம்லே புதிய ஸ்ரேடியத்தில் நடந்தது. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கான முன்னாள் கப்டன் டேவிட் பெக்காம் களமிறங்கினார். கடந்த ஆண்டு நடந்த உலகக்கிண்ணப் போட்டியில் காலிறுதி ஆட்டத்தில் தங்களது அணி தோல்வி அடைந்ததால் கப்டன் பதவியிலிருந்து விலகிய பெக்காம், 11 மாதங்களுக்குப்பின் முதல் முறையாக தனது சொந்த அணிக்காக ஆடினார். அவரது வருகை உள்ளூர் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. ஸ்ரேடியத்தில் 88 ஆயிரத்து 745 ரசிகர்கள் குவிந்திருந்தனர். பிரேசில் அணியும் நட்சத்திர வீரர்களுடன் களமிறங்கியது. தொடக்கம் முதல…
-
- 3 replies
- 1.2k views
-
-
புதிய ஒப்பந்தம் குறித்து இந்திய சிரேஷ்ட வீரர்களுடன் கிரிக்கெட் சபையின் 2 பேர் கொண்ட குழு 11 ஆம் திகதி ஆலோசிக்கவுள்ளது. உலகக் கிண்ண தோல்வியின் எதிரொலியாக இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு இருந்த பழைய ஒப்பந்த முறை அடியோடு ரத்து செய்யப்பட்டது. அந்த முறையில் ஏ, பி, சி என்று மூன்று பிரிவாக வீரர்கள் தரம் பிரிக்கப்பட்டு முறையே 50 இலட்சம், 35 இலட்சம், 20 இலட்சம் ரூபா ஆண்டுக்கு ஊதியமாக வழங்கப்பட்டது. இதற்குப் பதிலாக தற்போது புதிய ஒப்பந்தத்தை இந்திய கிரிக்கெட் சபை வகுத்துள்ளது. இதன்படி பாகுபாடின்றி அனைத்து வீரர்களுக்கும் சமமாக 5 இலட்சம் ரூபா ஊதியம் வழங்கப்படும் என்று கிரிக்கெட் சபை அறிவித்தது. மேலும், ஒவ்வொரு போட்டி மற்றும் தொடர்களில் கிடைக்கும் வெற்றி அடிப்…
-
- 0 replies
- 842 views
-
-
பிரெஞ் ஓப்பன் டெனிஸ் தொடரில் ரஷ்ய வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஷரபோவா, கஸ்னெட்சோபா, சபினா என ரஷ்ய வீராங்கனைகள் நான்காவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். பிரான்ஸின் அமெலி மவுரி ஸ்மோ அதிர்ச்சித் தோல்வியடைந்தார். ஆண்டின் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் தொடரான பிரெஞ் ஓப்பன் டெனிஸ் தொடர் பாரிஸில் நடக்கிறது. நேற்று முன்தினம் நடந்த பெண்கள் ஒற்றையர் மூன்றாவது சுற்றுப் போட்டியில் `நம்பர் -2' வீராங்கனை ரஷ்யாவின் மரியா ஷரபோவா, சகநாட்டு வீராங்கனை அலா குட்ரியாவ்சேவாவை எதிர்கொண்டார். முதல் செட்டை 6-1 என எளிதாக தன்வசப்படுத்திய ஷரபோவா இரண்டாவது செட்டிலும் அசத்தினார். இதை 6-4 என கைப்பற்றினார். இறுதியில் 6-1, 6-4 என்ற செட்களில் வெற்றி பெற்று, நான்காவது சுற்றுக்குள் நுழைந்தார்…
-
- 0 replies
- 844 views
-
-
கடல் மட்டத்திலிருந்து குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் போட்டியை நடத்தக்கூடாது எனும் அறிவிப்பை சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) கைவிடாவிட்டால், 2010 உலகக் கிண்ண தகுதிப் போட்டிகளில் பங்கேற்கமாட்டோம் என கொலம்பியா எச்சரிக்கை விடுத்துள்ளது. 2500 மீற்றர் (8200 அடி) உயரத்துக்கு மேலான பகுதிகளில் சர்வதேசப் போட்டிகளை நடத்துவதால் வீரர்கள் மருத்துவ ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். இதனால், அம்மாதிரியான இடங்களில் போட்டிகளை நடத்த தடை விதிக்கப்படுவதாக பிபா சமீபத்தில் அறிவித்தது. இதனால், அம்மாதிரி மலைப் பிரதேசங்களில் போட்டிகளை நடத்திவந்த நாடுகள் அதிர்ச்சியடைந்தன. அந்த அறிவிப்பை கைவிடக்கோரும் போராட்டத்தில் கொலம்பியாவும் குதித்துள்ளது. பெரு, ஈக்குவடோர் நாடுகளும் இந்த அறிவிப்பால் ம…
-
- 0 replies
- 822 views
-
-
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொப் வூல்மர் மரணம் தொடர்பாக நிலவி வந்த சர்ச்சை முடிவுக்கு வருகிறது. அவரது மரணம் இயற்கையானது தான் என்று ஜமேக்கா பொலிஸார் அறிவிக்கவிருக்கிறார்கள். மேற்கிந்தியாவில் நடந்த உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தான் பயிற்சியாளர் பொப் வூல்மர் இறந்தார். ஜமேக்காவில் அவர் தங்கியிருந்த ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். இது ெதாடர்பாக பாகிஸ்தான் வீரர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. முதல் கட்ட சோதனையில், வூல்மர் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக ஜமேக்கா பொலிஸார் கூறினார்கள். இதனால், இந்த வழக்கு சூடுபிடித்தது. இருப்பினும், கொலையாளிகள் யாரும் சிக்கவில்லை. இதைத் தொடர்ந்து ஸ்கொட்லாந்து யார்ட் துப்பறியும் ந…
-
- 0 replies
- 714 views
-
-
பங்களாதேஷ் தொடரில் வெற்றி வாகை சூடிய இந்திய வீரர்கள் ஒவ்வொருவரும் தலா 34 இலட்சம் ரூபா அள்ளிச் செல்கின்றனர். சமீபத்தில் பங்களாதேஷ் சென்ற இந்திய அணி டெஸ்ட், ஒருநாள் போட்டித் தொடரை கைப்பற்றியது. உலகக் கிண்ணத் தோல்விக்குப் பின் வீரர்களுக்கான சம்பள முறையை இந்திய கிரிக்கெட் சபை மாற்றியமைத்தது. வெற்றி அடிப்படையில் ஊக்கத் தொகை, போனஸ் அளிக்கப்படும் என தெரிவித்திருந்தது. இதன்படி பங்களாதேஷுக்கு எதிரான இரண்டு ஒருநாள் போட்டிகளில் வென்றதற்கு சம்பளமாக ஒவ்வொரு வீரருக்கும் 3 இலட்சம் ரூபா (ஒரு போட்டிக்கு 1.5 இலட்சம் ரூபா வீதம்) வழங்கப்படும். * ஊக்கத் தொகையாக 5 இலட்சம் ரூபா (வெற்றி பெற்ற இரண்டு போட்டிக்கு ரூபா 2.5 இலட்சம் வீதம்) வழங்கப்படும். விளையாடாத வீரர்கள் இதில் பா…
-
- 3 replies
- 1.3k views
-
-
சர்வதேச கால்பந்து சங்கத்தின் தலைவராக (பிபா) சுவிற்சர்லாந்தின் செப் பிளாட்டர் (வயது 71) 3 ஆவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுவிற்சர்லாந்தில் நடந்த சர்வதேச கால்பந்து சம்மேளனக் கூட்டத்தில் பிளாட்டரை எதிர்த்து எவரும் போட்டியிடவில்லை. அவர் 2011 ஆம் ஆண்டு வரை இந்த பதவியிலிருப்பார். இந்தக் கூட்டத்தில் `பிபா'வின் 208 உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட பிளாட்டர், தன் மீது தொடர்ந்து வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்தார். ஊக்க மருந்து, ஊழல், மோசடி, நிறவெறி ஆகிய நான்கும் கால்பந்து ஆட்டத்துக்கு மிகப்பெரிய சவால்களாக உள்ளன. இவற்றை தடுப்பதில் பிபா முழுக் கவனம் செலுத்தும் என்றார். --thinakkural--
-
- 0 replies
- 743 views
-
-
இங்கிலாந்து கப்டன் வோகன் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கு உடனடியாக முழுக்குப் போட வேண்டும் என்று முன்னாள் வீரர் தோர்ப் வலியுறுத்தியிருக்கிறார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கப்டன் மைக்கேல் வோகன் டெஸ்ட் போட்டியில் ஓரளவு ஜொலித்தாலும், ஒரு நாள் போட்டியில் சோபிப்பதில்லை. தவிர அடிக்கடி காயமும் அடைகிறார். இதுவரை 86 ஒரு நாள் போட்டிகளில் ஆடியுள்ள அவர் ஒரு சதம் கூட அடித்தது கிடையாது. உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அவரது ஆட்டம் மோசமாக இருந்தது. 9 போட்டியில் 209 ரன்கள் ( சராசரி 20. 90 ) மட்டுமே எடுத்திருந்தார். இதனால் வோகன் ஒரு நாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறலாம் என்று கூறப்பட்டது. ஆனால் ஓய்வு பெறவில்லை. இந்த நிலையில் ஒரு நாள் போட்டியில் இருந்து வோகன் ஓய்வு …
-
- 0 replies
- 842 views
-
-
பிரெஞ்ச் ஓப்பன் டெனிஸ் தொடரின் இரண்டாவது சுற்றுப் போட்டியில் ரபெல் நாடல் அதிரடியாக வெற்றிபெற்றார். ஸ்பெயின் வீரர் மோயா, அவுஸ்திரேலியாவின் ஹெவிட் ஆகியோரும் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினர். பெண்கள் பிரிவில் செரீனா, ஷரபோவா அபாரமாக விளையாடி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தனர். இந்தியாவின் சானியா மிர்ஷா தோல்வியடைந்தார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கிராண்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ் ஓப்பன் டெனிஸ் தொடர் நடக்கிறது. நேற்று முன்தினம் நடந்த இரண்டாவது சுற்றுப் போட்டியில் உலகின் நம்பர் - 2 வீரரான ஸ்பெயினின் ரபெல் நாடல், 117 ஆவது இடத்திலிருக்கும் இத்தாலியின் பிளாவியோ சிபோலாவை சந்தித்தார். இதில் அதிரடியாக விளையாடிய நாடல் முதல் செட்டை 6-2 எனக் கைப்பற்றினார். இரண்டாவது செட்டையும் 6-…
-
- 0 replies
- 1k views
-
-
சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக அவுஸ்திரேலியாவின் அடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் கில்கிறிஸ்ட். தொடக்க வீரரான இவர் பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார். சமீபத்தில் நடந்த உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தில் இவர் அனல் பறக்கும் வகையில் விளையாடினார். இந்த நிலையில் ஒருநாள் போட்டியிலிருந்து கில்கிறிஸ்ட் ஓய்வுபெற முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது; தனிப்பட்ட முறையில் ஒரு நாள் போட்டியிலிருந்து ஓய்வுபெறுவது தொடர்பாக ஆலோசித்து வருகிறேன். டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாட கவனம் செலுத்துவேன் என்றார். 36 வயதான கில்கிறிஸ்ட் 268 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 9038 ஓட்டங்கள் எடுத்துள்ள…
-
- 0 replies
- 712 views
-
-
நாடே ஒழுங்கீனமாக இருக்கும் போது என்னை ஒழுக்கமற்றவன் என்று சொல்வதா? என்று பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சொயிப் அக்தர் கண்டனம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் கடிவாளம் இல்லாத குதிரை போல் செயற்படக்கூடியவர் வேகப்பந்து வீச்சாளர் சொயிப் அக்தர். இதனால், அவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்வதுண்டு. ஊக்க மருந்து விவகாரம் இரவு விடுதி நடனம் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்கு ஆளான அவர் சில மாதங்களாக போட்டிகளில் பங்கேற்கவில்லை. பாகிஸ்தான் வீரர்கள் ஒழுங்கீனமாக நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபை சமீபத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சொயிப் அக்தர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித…
-
- 0 replies
- 862 views
-
-
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து மேற்கிந்தியக் கப்டன் சர்வான், காயம் காரணமாக விலகியுள்ளார். இவருக்குப் பதிலாக டேரன் கங்கா புதிய கப்டனாக நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய அணி 4 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் 2 ` ருவென்ரி-20' போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஹெடிங்லியில் நடந்த இரண்டாவது டெஸ்டில் களத்தடுப்பு செய்துகொண்டிருந்த போது சர்வானுக்கு வலது தோள் மூட்டில் காயம் ஏற்பட்டது. இதனால், அவர் அப்போட்டியின் இரண்டு இனிங்சிலும் துடுப்பெடுத்தாடவில்லை. இதனால் அணி இனிங்ஸ் மற்றும் 283 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இந்நிலையில், இவரது காயம் குணமடைய இன்னும் 6 வாரங்களுக்கு மேலாகும் என்பதால், தொடரிலி…
-
- 1 reply
- 963 views
-
-
தங்கள் அணிப் பயிற்சியாளர்களை இந்திய -பாகிஸ்தான் வீரர்கள் மதிப்பதில்லையென்று தென்னாபிரிக்க முன்னாள் வீரர் அலன் டொனால்ட் தெரிவித்துள்ளார். அலன் டொனால்ட் தற்போது இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.இது குறித்து ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் இந்திய வீரர்கள் மீது புகார் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது; இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த சப்பலுக்கும் வீரர்களுக்கும் இடையே பல விடயங்களில் சுமுகநிலை இருந்தது. சில விடயங்களில் பிரிவு ஏற்பட்டது. சர்வதேச போட்டியில் விளையாடும் வீரர்கள் பயிற்சியாளர் சொல்வதைக் கேட்க வேண்டும். இந்திய வீரர்கள் பயிற்சியாளர் கருத்தை மதிப்பதில்லை. இதனாலேயே சப்பல் விலகினார். மூத்த வீரர்கள் ப…
-
- 0 replies
- 834 views
-
-
நடுவரைத் திட்டிய ஷேன்வோர்னுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அவுஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வோர்ன். இவர் தற்போது கவுன்டி போட்டிகளில் ஹாம்ப்ஷையருக்காக விளையாடி வருகிறார். சமீபத்தில் கென்டர்பரியில், கென்ற் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் இவருக்கு நடுவர் எல்.பி.டபிள்யூ. முறையில் அவுட் கொடுத்தார். இந்தத் தீர்ப்பை ஏற்க மறுத்த வோர்ன் களத்திலேயே சிறிது நேரம் இருந்தார். பின்னர் `பெவிலியன்' திரும்பும்போது தகாத வார்த்தைகளால் நடுவரை வசை பாடினார். இச்சம்பவம் குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் சபையிடம் நடுவர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, இவருக்கு 6 அபராத புள்ளிகளை கிரிக்கெட் சபை விதித்தது. இப்புள்ளிகள் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு இவரது கணக்கிலிருக்க…
-
- 0 replies
- 971 views
-
-
பிரெஞ் ஓப்பன் டெனிஸ் தொடரின் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, ரஷ்யாவின் மரியா ஷரபோவா அசத்தல் வெற்றி பெற்றனர். ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் ரஷ்யாவின் மாரட் சபினும் முதல் சுற்றில் அமெரிக்காவின் ஆன்டி ரோடிக்கும் அதிர்ச்சித் தோல்வியடைந்தனர். நான்கு கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான பிரெஞ் ஓப்பன் டெனிஸ் தொடர் பாரிஸில் நடக்கிறது. நேற்று முன்தினம் நடந்த பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் தரவரிசையில் மூன்றாவது இடம்பிடித்துள்ள ரஷ்யாவின் மரியா ஷரபோவா 41 ஆவது இடத்தில் இருக்கும் பிரான்ஸின் எமிலிலோயிடை எதிர்கொண்டார். அசத்தலாக விளையாடிய ஷரபோவா முதல் செட்டை 6-3 என வென்றார். தொடர்ந்து அபாரமாக ஆடிய இவர் இரண்டாவது செட்டை கடும் போராட்டத்துக்குப் பின் 7…
-
- 0 replies
- 861 views
-
-
மிர்பூர் டெஸ்டில் பங்களாதேஷ் அணியை இனிங்ஸாலும் 239 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் வென்று இந்திய அணி டெஸ்ட் போட்டியில் தனது அதிகூடிய வெற்றி வித்தியாசத்தை நேற்று முன்தினம் பதிவு செய்தது. இதற்கு முன் 1997 - 98 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இனிங்ஸாலும் 219 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றிருந்தது. சிட்டகாங் மற்றும் மிர்பூரில் நடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சதம் அடித்து அசத்திய `மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், தொடர் நாயகன் விருதைக் கைப்பற்றினார். 254 ஓட்டங்கள் தவிர, 3 விக்கெட் மற்றும் 4 கட்சுகளும் சச்சினுக்கு தொடர் நாயகன் விருதை பெற்றுத்தந்தன. இது, டெஸ்ட் போட்டிகளில் சச்சின் கைப்பற்றும் நான்காவது தொடர் நாயகன் விருது. மிர்பூர் டெஸ்டின் இரண்டு இனிங்ஸிலும் ச…
-
- 6 replies
- 1.4k views
-