விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7840 topics in this forum
-
பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் (என்.வீ.ஏ.) பாரிஸ், ரோலண்ட் கெரொஸ் அரங்கில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் கோக்கோவை 2 நேர் செட்களில் இலகுவாக வெற்றிகொண்ட போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார். இந்த வெற்றியுடன் 21ஆம் நூற்றாண்டில் மகளிர் டென்னிஸ் சங்க தொடரில் வீனஸ் வில்லியம்ஸ் ஈட்டிய தொடர்ச்சியான 35 வெற்றிகளை இகா ஸ்வியாடெக் சமப்படுத்தியுள்ளார். மேலும் பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டியில் இகா ஸ்வியாடெக் வென்றெடுத்த 2ஆவது சம்பியன் பட்டம் இதுவாகும். இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரெஞ்சு பகிரங்க டென்னிஸில் …
-
- 0 replies
- 165 views
-
-
இந்தியாவின் சவாலை முறியடித்து 7 விக்கெட்களால் தென்னாபிரிக்கா வெற்றி (என்.வீ.ஏ.) டெல்லி, அருண் ஜெய்ட்லி விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (09) இரவு கணிசமான ஓட்டங்கள் குவிக்கப்பட்ட முதலாவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் சவாலை முறியடித்து 7 விக்கெட்களால் தென் ஆபிரிக்கா வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன் 5 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரில் 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் தென் ஆபிரிக்கா முன்னிலை அடைந்துள்ளது. இந்தியாவின் அதிரடி வீரர் இஷான் கிஷான் குவித்த அதிரடி அரைச் சதம், ரசி வென் டேர் டுசென், டேவிட் மில்லர் ஆகியோரின் அதிரடி அரைச் சதங்களால் வீண் போனது. இந்திய அணியில் வழமையான அணித் தலைவர் ரோஹித் ஷர்மா, விராத் க…
-
- 1 reply
- 221 views
-
-
விளையாட்டு மருத்துவம் ஏன் முக்கியத்துவமாகின்றது? விஞ்ஞானம் உலகுக்கு தந்த கொடைகளில் ஒன்றே மருத்துவமாகும். மனிதனின் உடல் ஆரோக்கியத்தை பேண உதவுகின்ற இத்துறையின் ஒரு கிளையாக “விளையாட்டு மருத்துவம்“ அமைகின்றது. அந்த வகையில் நவீன விளையாட்டு வீரர்கள் அவர்களது ஆரோக்கியத்தை சரியான முறையில் முகாமைத்துவம் செய்து கொள்ள பிரதானமாக உதவுகின்ற இந்த விளையாட்டு மருத்துவம் பற்றி கிழக்கு மாகாணத்தை சேர்ந்த வைத்திய அதிகாரி புஹைம் அவர்கள் பிரத்தியேக நேர்காணல் ஒன்றினை ThePapare.com இற்கு வழங்கியிருந்தார். அதனை உங்களுடன் எழுத்து வடிவில் பகிர்கின்றோம். கே: விளையாட்டு மருத்துவம் (Sports Medicine) என்றால் என்ன? உலகில் பல்லாயிரக்கணக்கான மக்…
-
- 0 replies
- 638 views
-
-
கிரிக்கெட்டில் இந்தியப் பள்ளி மாணவர்கள் உலக சாதனை கிரிகெட்டில் உலக சாதனைப் படைத்த இந்திய மாணவர்கள் இந்தியப் பள்ளி மாணவர்கள் இருவர் கிரிக்கெட் விளையாட்டில் உலக சாதனைப் படைத்துள்ளார்கள். முஹமது ஷைபாஸ் தும்பி மற்றும் மனோஜ் குமார் ஜோடி செகந்தராபாதில் 13 வயதிற்கு உட்பட்டவர்களுக்கானப் போட்டியில் நாற்பது ஓவர்களில் 721 ஓட்டங்களை எடுத்து இந்தச் சாதனையை படைத்துள்ளனர். உலக அளவில், ஒரு நாள் போட்டிகளில் ஜோடியாக எடுத்த ஓட்டங்களிலும் சரி, மிகப்பெரிய அளிவில் ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றதிலும் சரி, இது தான் மிக அதிகமானது என கிரிக்கெட் விளையாட்டின் புள்ளி விபர நிபுணர்கள் கூறியுள்ளார்கள். இவர்கள் இவ்வாறு எடுத்த ஓட்டங்களை கண்ட எதிர் அணியினர் 21 ஓட்டங்கள…
-
- 4 replies
- 1.6k views
-
-
ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: டாப்-10-ல் இந்திய வீரர்கள் இல்லை ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் இந்திய வீரர்கள் ஒருவர் கூட முதல் 10 சிறந்த வீரர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை. டேவிட் வார்னர், யூனிஸ் கான் ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர். இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் கண்ட முதல் பாகிஸ்தான் வீரர் யூனிஸ் கான் 4 இடங்கள் முன்னேறி 7-வது இடம் பிடித்துள்ளார். தோல்வி கண்ட ஆஸ்திரேலிய அணியின் ஒரே சிறந்த பேட்ஸ்மென் டேவிட் வார்னர் 4-ஆம் இடத்திற்கு முதல் முறையாக முன்னேறியுள்ளார். டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் இலங்கை வீரர் சங்கக்காரா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். டிவிலியர்ஸ், சந்தர்பால், வார்னர், அஞ்சேலோ மேத்யூஸ், ஹசிம் ஆம்லா, யூனிஸ் கான், ராஸ் டெய்லர், ஜோ ரூட், …
-
- 1 reply
- 654 views
-
-
86 வருடங்களுக்குப் பின் ஐந்து Ashes Test போட்டிகளிலும் வெற்றி பெற்று (5:0) சாதனை படைத்தது அவுஸ்ரேலியா. Sydney துடுப்பாட்ட மைதானத்தில் 2 ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்ற ஐந்தாவதும் கடைசியுமான Ashes Test போட்டியில் அவுஸ்ரேலியா அணி இங்கிலாந்து அணியை 10 விக்கெற்றுக்களால் வெற்றி பெற்றது. இதன் மூலம் நடைபெற்ற ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று அவுஸ்ரேலியா அணி Ashes வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றியது. ஆட்டத்தின் நாயகனாக Stuart Clark தெரிவு செய்யப்பட்டார் தொடர் ஆட்ட நாயகனாக அவுஸ்ரேலியா அணித்தலைவர் Ponting தெரிவு செய்யப்பட்டார். Ashes Test போட்டி வரலாற்றில் 86 வருடங்களுக்கு பின் "நடைபெற்ற ஐந்து போட்டிகளிலும் அவுஸ்ரேலியா அணி வெற்றி பெற்று (5:0) சாதனை படைத்துள்ளது என்பது கு…
-
- 2 replies
- 1.2k views
-
-
ஐபிஎல் 4வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் சிறப்பாக விளையாடும் என்று அந்த அணியின் கப்டன் தோனி தெரிவித்துள்ளார். உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் கப்டன் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் ஆடை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது புதிய அணி பற்றியும் அறிவிப்பு வெளியானது. அதன் பிறகு டோணி கூறியதாவது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரும் சீசனில் சிறப்பாக விளையாடும். அணியில் ஏற்கனவே இருந்த வீரர்கள் பலர் உள்ளனர். முரளிதரன் இல்லாதது வருத்தம் தான். எங்கள் அணி சிறப்பாக அமைந்துள்ளது. பேப்பரில் பார்ப்பதற்கு அணி எவ்வளவு நன்றாக இருக்கிறது என்பது முக்கியமில்லை. மைதானத்தில் எப்படி விளையாடுகிறது என்பது தான் முக்கியம். இதைத் தான் நான் முன்பும் கூறினேன். வீரர்களின் உடல் நலம் வெற்…
-
- 0 replies
- 1.2k views
-
-
ரோ‘ஹிட்’ மேன் என்ற செல்லப்பெயர் பிடித்திருக்கிறது: தினேஷ் கார்த்திக்கிடம் ரோஹித் சர்மா ரோஹித் சர்மா, தினேஷ் கார்த்திக். | படம்: விவேக் பெந்த்ரே. ஞாயிறன்று நடைபெற்ற 3வது டி20 போட்டியில் சதம் எடுத்து வெற்றிக்கு வித்திட்ட நாயகன் ரோஹித் சர்மா பிசிசிஐ.டிவிக்காக தினேஷ் கார்த்திக் கேள்விகளுக்குப் பதில் அளித்தார். அணியில் இடம்பெற்று ஆட வேண்டிய தினேஷ் கார்த்திக் இண்டெர்வியூ மேனாக மாற்றப்பட ரோஹித் ‘ஹிட்’ மேன் செல்லப்பெயர் குறித்து பதில் அளித்துள்ளார்! பிசிசிஐயின் கிளிஷேயான கேள்விகளுக்கு ரோஹித் சர்மா அளித்த பதில்கள் இதோ: கொலின் மன்ரோவுக்கு இணையாக 3 டி20 சர்வதேச சதங்களை எப்படி உணர்கிறீர்கள்? …
-
- 0 replies
- 369 views
-
-
ஸிம்பாப்வேயை 5 - 0 என்ற கணக்கில் துவம்சம் செய்த பங்களாதேஷ் தனது சொந்த நாட்டில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஸிம்பாப்வேயை 5 - 0 என பங்களாதேஷ் வெள்ளையடிப்பு செய்தது. மிர்பூரில் நேற்று நடைபெற்ற கடைசிப் போட்டியில் 5 விக்கெட்களால் வெற்றிபெற்றதன் மூலம் தொடரில் முழுமையான வெற்றியை பங்களாதேஷ் பதிவு செய்துகொண்டது. குறைந்த மொத்த எண்ணிக்கைகளைக் கொண்ட இப்போட்டியில் சிரமத்திற்கு மத்தியிலேயே பங்களாதேஷ் வெற்றிபெற்றது. பங்களாதேஷ் பந்துவீச்சாளர் தைஜுல் இஸ்லாம் தனது கன்னி முயற்சியில் ஹட் - ட்ரிக் முறையில் விக்கெட்களைக் கைப்பற்றியமை இப்போட்டியில் விசேட அம்சமாகும். 27ஆவது ஓவரின் கடைச…
-
- 0 replies
- 386 views
-
-
1,000 போட்டிகளில் வென்று ரோஜர் பெடரர் சாதனை டென்னிஸ் விளையாட்டில் ஆயிரம் போட்டிகளில் வென்ற மூன்றாவது நபர் என்ற சாதனையை ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் பெற்றுள்ளார். உலக ஒற்றையர் தரவரிசையில் 2-வது இடத்திலுள்ள பெடரர், நேற்று நடைபெற்ற பிரிஸ்பென் சர்வதேச டென்னிஸ் இறுதிப்போட்டியில், உலகின் 8-ம் நிலை வீரரான கனடாவின் மிலோஸ் ரயோனிக்கை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். பெடரர் பெறும் 1,000வது வெற்றி இதுவாகும். ரயோனிக்கை அவர், 6-4, 6-7(2), 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். டென்னிஸ் வரலாற்றில் 1,000 போட்டிகளில் வெற்றி பெறும் மூன்றாவது நபர் பெடரர் ஆவார். முன்னதாக, அமெரிக்காவின் ஜிம்மி கானர்ஸ் (1253), இவான் லெண்டில் (1071) ஆகியோர் 1,000 போட்டிகளில் வென்றுள்ளனர். பெடரர்…
-
- 1 reply
- 404 views
-
-
ஐபிஎல் சூதாட்ட வழக்கில் குருநாத் மெய்யப்பன் குற்றவாளி, சீனிவாசன் குற்றமற்றவர்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்ட நிலையில் ராஜ் குந்த்ரா மற்றும் குருநாத் மெய்யப்பனுக்கான தண்டனை குறித்து தீர்மானிக்க முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் 3 நபர் குழு அமைக்கப்படும். சூதாட்டத்தில் ஈடுபட்டு தவறிழைத்தவர்கள் மீதான நடவடிக்கை தனிநபர் சார்ந்ததல்ல அவர்கள் சார்ந்த அணியையும் கட்டுப்படுத்தும் என்று உச்ச நீதிமன்றம் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மீதான நடவடிக்கை பற்றி சூசகமாகத் தெரிவித்துள்ளது. ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் குருநாத் மெய்யப்பன் குற்றவாளி என்றும், சீனிவாசன் குற்றமற்றவர் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து…
-
- 2 replies
- 473 views
-
-
சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் சாதனையை மேத்யூஸ் முறியடிப்பார்: இலங்கை அணி முன்னாள் மேலாளர் சச்சின் டெண்டுல்கரின் டெஸ்ட் சாதனையை அஞ்சேலோ மேத்யூஸ் முறியடிப்பார் என்று இலங்கை அணியின் முன்னாள் மேலாளர் டி ஸோய்சா கூறியுள்ளார். 46 டெஸ்ட் போட்டிகளில் இதுவரை விளையாடியுள்ள மேத்யூஸ் 3,193 ரன்களை 51.50 என்ற சராசரியின் கீழ் எடுத்துள்ளார். இதில் 4 சதங்கள், 20 அரைசதங்கள் அடங்கும். 156 ஒருநாள் போட்டிகளில் 3,783 ரன்களை 1 சதம் மற்றும் 26 அரைசதங்களுடன் எடுத்துள்ளார். டி ஸோய்சா கூறியதாவது, “வங்கதேசத்துக்கு எதிரான தொடர் முதல் 2015 உலகக் கோப்பை போட்டிகள் வரை, அஞ்சேலோ மேத்யூஸின் வளர்ச்சி பிரமாதமானது. அவர் என்ன இடத்தை நிரப்ப வேண்டுமோ அதனை நிரப்பியுள்ளார். ஜெயவர்தனே, சங்கக்காரா ஆகி…
-
- 0 replies
- 447 views
-
-
`ருவென்ரி - 20' உலகக் கிண்ணப் போட்டிக்குப் பின்னர் தென் ஆபிரிக்காவில் இனத்துவேஷ பிரசாரம் [04 - October - 2007] [Font Size - A - A - A] *புதிய சர்ச்சை கிளம்புகிறது `ருவென்ரி-20' தொடரில் சாம்பியன் கிண்ணம் வென்ற இந்திய அணிக்கு ஆதரவு தெரிவித்த இந்திய வம்சாவளியினர் குறித்து தென் ஆபிரிக்க பத்திரிகையில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. இவர்களது நாட்டுப் பற்று குறித்து கேள்வி எழுப்பியுள்ளதால், பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. சமீபத்தில் தென் ஆபிரிக்காவில் முதலாவது `ருவென்ரி-20' உலகக் கிண்ணத் தொடர் நடந்தது. இதில் அபாரமாக ஆடிய இந்திய வீரர்கள், முன்னணி அணிகளான தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா, பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் கிண்ணத்தை வென்றனர். `ருவென்ரி - 20' கிண்ணத்த…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஐ.பி.எல். தொடரில் வெளிநாட்டு அணிகள் பங்கேற்க எதிர்ப்பு சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு பதிலாக வெளிநாட்டு அணிகளை ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஐ.பி.எல். தொடரில் பங்கேற்று வந்த சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளின் உரிமையாளர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து அந்த அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து ஐ.பி.எல் போட்டியில் மேலும் இரு அணிகளை உருவாக்கும் நிலைக்கு பி.சி.சி.ஐ தள்ளப்பட்டுள்ளது. வரும் ஐ.பி.எல். போட்டியில் 8 அணிகள் பங்கேற்க வைப்பதற்கான நடவடிக்கைகளில் ஐ.பி.எல் நிர்வாகக் குழு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. ஆஸ்திரேலியாவின் பிக் பேஷ் உள்ளிட்ட டி20 தொடர்களில் விளையாடும் இரு அணிகளை ஐ.பி.எல். தொடரில் பங்கேற்க வைக்கலாம் என்ற ஆலோசன…
-
- 0 replies
- 195 views
-
-
கைது செய்யப்படுவாரா வங்கதேச கிரிக்கெட் வீரர் தாகா: தனது வீட்டில் வேலை செய்த சிறுமியை துன்புறுத்திய பிரச்னையில் சிக்கிய வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகாதத் ஹுசைன் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளது. வங்கதேச அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஷகாதத் ஹுசைன், 29. இதுவரை 38 டெஸ்ட் (72 விக்.,), 51 ஒரு நாள் (47), 6 ‘டுவென்டி–20’ (4) போட்டிகளில் விளையாடி உள்ளார். இவரது வீட்டில் வேலை செய்ததாக கூறப்படும் 11 வயதான சிறுமி ஒருவர் போலீசில் புகார் அளித்தார். இதில், ஷகாதத் மற்றும் அவரது மனைவி சேர்ந்து தன்னை அடித்து காயப்படுத்தியதாக குற்றம்சாட்டினார். இதையடுத்து இருவர் மீதும் வழக்கு பதியப்பட்டது. இது குறித்து அப்பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்வர் ஹுசைன் கூறுகையில்,‘‘ சிறுமியை மீட்கும்போது அழுது கொண்ட…
-
- 0 replies
- 199 views
-
-
பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,"இந்தியாவின் சுவர்" என்று அனைவராலும் அழைக்கப்பட்டார் ஸ்ரீஜேஷ் 34 நிமிடங்களுக்கு முன்னர் பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா ஹாக்கியில் வெண்கலப் பதக்கம் வென்ற அந்த தருணம், வீரர்கள் பெருமகிழ்ச்சியில் துள்ளி குதித்து கொண்டாடினர். ஆனால் பிஆர் ஸ்ரீஜேஷ் மட்டும் அமைதியாக அந்த இடத்தை விட்டு நடந்து சென்று, மைதானத்தின் ஒரு முனையில் இருந்த கோல் போஸ்ட்டின் முன் தலைகுனிந்து நின்றார். அந்த காட்சி அவருக்கும் கோல் போஸ்டுக்குமான நீண்ட நெடிய ஆழ்ந்த உறவை பிரதிபலித்தது. ஆம். கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக கோல்போஸ்ட் தான் அவரின் உறைவிடமாக இருந்தது. ஆனால் அந்த வீட்டில் இனி இருக்க முடியாது. கோல் போஸ்டை அவர் எந்த அளவுக்கு `மிஸ்…
-
- 1 reply
- 550 views
- 1 follower
-
-
மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான இன்றைய போட்டியில் சதம் விளாசியதன் மூலம் குறைந்த வயதில் சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் அரங்கில் விரைவாக சதத்தை பூர்த்தி செய்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை அவிஷ்க பெர்னாண்டோ பெற்றுள்ளார். அத்துடன் இந்த சதம் இவரது கன்னி சதமாகும். சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் அரங்கில் குறைந்த வயதில் விரைவாக சதம் பெற்ற வீரர்கள் தரவரிசைப் பட்டியலில் அயர்லாந்து அணியின் போல் ஸ்டெர்லிங் முதல் இடத்திலும் (20 வயது, 196 நாள்), ரிக்கி பொண்டிங் இரண்டாவது இடத்திலும் (21 வயது, 76 நாள்), அவிஷ்க பெர்னாண்டோ மூன்றாவது இடத்திலும் (21 வயது, 87 நாள்), விராட் கோலி நான்காவது இடத்திலும், (22 வயது, 106 நாள்), சச்சின் டெண்டுல்கர் ஐந்தாவது இடத்த…
-
- 0 replies
- 524 views
-
-
ஐசிசி தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் நீக்கம் சீனிவாசன் | கோப்புப் படம்: ஜோதி ராமலிங்கம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவர் பதவியிலிருந்து சீனிவாசன் நீக்கப்பட்டார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அவரைத் திருப்பி அழைத்தது. சீனிவாசனுக்குப் பதிலாக தற்போதைய பிசிசிஐ தலைவர் ஷஷாங் மனோகர் ஐசிசி தலைவர் ஆகிறார். மும்பையில் நடைபெற்ற 86-வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் இதற்கான முடிவு எட்டப்பட்டது. இதன் மூலம் இந்திய கிரிக்கெட் மீதான சீனிவாசனின் பிடி முடிவுக்கு வந்தது. கடந்த ஜூன் மாதம் ஐசிசி தலைவராக சீனிவாசன் பொறுப்பேற்றார். அடுத்த ஆண்டு ஜூன் மாதம் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. எனவே, மீதமுள்ள பதவிக்காலத்…
-
- 1 reply
- 619 views
-
-
இலங்கைத் தொடருக்கான மேற்கிந்திய அணிக் கப்டனாக கிறிஸ்கெய்ல் நியமனம் [08 - March - 2008] மேற்கிந்திய தீவுகள் அணியின் கப்டனாக கிறிஸ் கெய்ல் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கைக்கு எதிரான போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் கிறிஸ்கெயில் நியமனம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அணியின் தொடக்க வீரராக உள்ள கிறிஸ்கெய்ல், டெஸ்ட், ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டிகளில் சதமடித்த ஒரே வீரர் என்று பெருமையைப் பெற்றுள்ளார். இவரது நியமனத்துக்கு மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபையும் அனுமதியளித்துள்ளது. 70 டெஸ்ட் போட்டிகள் (4658 ஓட்டங்கள்), 50 விக்கெட்டுகள், 176 ஒரு நாள் போட்டிகள் (6244 ஓட்டங்கள்), 142 விக்கெட்டுகள் வீழ்த்தியதென சகலதுறை வீரராக இருந்துவருகிறார் கெய்ல…
-
- 0 replies
- 910 views
-
-
செய்தித் துளிகள் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடருக்கு மத்திய அரசு அனுமதி அளிக்குமா என்பதை கணித்து கூறுவதற்கு தான் ஒன்றும் ஜோதிடர் இல்லையென பிசிசிஐ தலைவர் ஷசாங் மனோகர் தெரிவித்துள்ளார். ------------------------------------------------------ உலக பாட்மிண்டன் இறுதி சுற்று போட்டி துபையில் இன்று தொடங்குகிறது. இதில் இந்தியாவின் சாய்னா நெவால், காந்த் கலந்துகொள்கின்றனர். சாய்னா முதல் சுற்றில் ஜப்பானின் ஓகூராவையும் காந்த், ஜப்பானின் ஹென்டோவையும் எதிர்கொள்கின்றனர். ------------------------------------------------------ லண்டன்லண்டனில் நடைபெற்று வரும் கிளாசிக் செஸ் போட்டியின் 4வது சுற்றில் இந்…
-
- 0 replies
- 785 views
-
-
வேகப்பந்து வீச்சாளர்கள் காயமடைவதற்கு நவீன பயிற்சியாளர்களே காரணம்: ஆன்டி ராபர்ட்ஸ் சாடல் ஆன்டி ராபர்ட்ஸ். | படம்: விஜய் பேட். வலைப்பயிற்சியில் 30 பந்துகளுக்கு மேல் வேகப்பந்து வீச்சாளர்களை வீச அனுமதிக்காத நவீன பயிற்சியாளர்களே பவுலர்கள் காயமடைவதற்குக் காரணம் என்று மே.இ.தீவுகள் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ராபர்ட்ஸ் சாடியுள்ளார். மும்பையில் சச்சின் பஜாஜின் குளோபல் கிரிக்கெட் ஸ்கூல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராபர்ட்ஸ் அங்கு வேகப்பந்து வீச்சாளர்கள் காயம் உட்பட பல்வேறு கிரிக்கெட் தொடர்பான ருசிகரங்களை பகிர்ந்து கொண்டார். "நவீன கிரிக்கெட் பயிற்சியாளர்கள் முதலில் கிரிக்கெட் ஆடியுள்ளனரா? அல்லது இவர்கள் வேகமாகத்தான் பந்து வீசியதுண்டா? ஏன…
-
- 0 replies
- 547 views
-
-
ஆரோனின் பந்துவீச்சில் சந்தேகம் February 26, 2016 தென் ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆரோன் பாங்கிசோவின் பந்துவீச்சில் சந்தேகம் இருப்பதாக புகார் கிளம்பியுள்ளது. தென் ஆப்பிரிக்கா அணியை சேர்ந்தவர் ஆரோன் பாங்கிசோ. இடக்கை சுழற்பந்து வீச்சாளரான இவர் 20 ஓவர் உலகக் கிண்ணத்திற்கான தென் ஆப்பிரிக்க அணியிலும் இடம் பெற்றுள்ளார். இந்நிலையில் உள்ளூர் ஆட்டம் ஒன்றில் கலந்து விளையாடிய பாங்கிசோவின் பந்துவீச்சில் சந்தேகம் எழுந்தது. அவரது பந்துவீச்சு சர்வதேச கிரிக்கெட் சங்கத்தின் விதிமுறைகளுக்கு எதிராக உள்ளதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு சோதனை நடந்த ஐ.சி.சி. உத்தரவுட்டுள்ளது. மார்ச் 8ம் திகதிக்குள் அவர் பந்துவீச்சை முறையை நிரூபிக்…
-
- 0 replies
- 408 views
-
-
மேற்கிந்தியத்தீவுகள் அணியுடனான பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகை தந்துள்ள கிரான் பொல்லார்ட் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் அணியாது இலங்கையுடன் ஒரு ஒருநாள் பயிற்சிப் போட்டி, 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 இருபதுக்கு :20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இந் நிலையில் இன்று கொழும்பு சரவணமுத்து கிரக்கெட் மைதானத்தில் ஆரம்பமான பயிற்சிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் அணியானது 49.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 282 ஓட்டங்களை குவித்தது. மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் டரன் பிராவோ 88 பந்துகளில் 14 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடங்கலாக 100 ஓ…
-
- 0 replies
- 442 views
-
-
சூதாட்ட வீரர்கள் 10 பேரின் பெயரை வெளியிடும் கிரிக்கெட் வாரியம். ஐ.பி.எல். ஸ்பாட்பிக்சிங் சூதாட்டம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் ஓய்வு பெற்ற நீதிபதி முகுல் முத்கல் கமிட்டி விசாரணை நடத்தியது. இந்த விசாரணை குழு தனது அறிக்கையை ஏற்கனவே சுப்ரீம்கோர்ட்டில் சமர்பித்து இருந்தது. இதில் நிர்வாகிகள், வீரர்கள் என மொத்தம் 13 பேரது பெயர்கள் இடம் பெற்று இருந்தன. இதில் 3 பேரது பெயர் மட்டுமே வெளியிடப்பட்டன. முத்கல் கமிட்டியின் அறிக்கையில் உள்ள 10 வீரர்களின் பெயர் விவரத்தை சுப்ரீம் கோர்ட்டு இதுவரை வெளியிடாமல் இருந்தது. இந்த 10 வீரர்களின் பெயர் விவரத்தை வெளியிட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) தற்போது விருப்பம் தெரிவித்துள்ளது. லோதா…
-
- 0 replies
- 372 views
-
-
மேற்கிந்தியத் தீவுகளுடன் முழு அளவிலான தொடரில் ஆப்கானிஸ்தான் முதல் தடவையாக விளையாடவுள்ளது மேற்கிந்தியத் தீவுகளில் முழு அளவிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் தொடர்களில் ஆப்கானிஸ்தான் விளையாடவுள்ளது. ஸிம்பாப்வேயை விட சர்வதேச கிரிக்கெட் பேரவையில் பூரண டெஸ்ட் அந்தஸ்துடைய நாடு ஒன்றுடன் ஆப்கானிஸ்தான் முழு அளவிலான தொடர் ஒன்றில் விளையாடவிருப்பது இதுவே முதல் தடவையாகும். 5 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் போட்டிகள், 3 சர்வதேச இருபது 20 போட்டிகள் அடங்கிய இந்த இரண்டு வகை கிரிக்கெட் தொடர்கள் அடுத்த வருடம் ஜூன் மாதம் நடைபெறவுள்ளதாக ஆப்கானிஸ்தா…
-
- 0 replies
- 239 views
-