விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7840 topics in this forum
-
அசாருதீன் மீதான ஆயுட்கால தடையை நீக்க நீதிமன்றம் உத்தரவு! ஹைதராபாத்: இந்திய கிரிக்கெட் வீரர் மொஹம்மது அசாருதீன் மீதான ஆயுட் கால தடையை நீக்க வேண்டும் என்று பிசிசிஐக்கு ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2000 ஆம் ஆண்டு கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்பட்ட அசாருதீனுக்கு, கிரிக்கெட் விளையாட பிசிசிஐ ஆயுள் தடை விதித்தது. இதனை எதிர்த்து அசாருதீன், ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம்,அசாருதீன் மீதான ஆயுள் கால தடையை நீக்குமாறு இன்று பிசிசிஐக்…
-
- 0 replies
- 452 views
-
-
அசார் அலியின் நண்பர்கள் பாக். ஓய்வறையில் உள்ளனர்: ஸ்மித்தை எச்சரித்த மைக்கேல் கிளார்க் சமீபத்தில் நடந்து முடிந்த பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் போது ஸ்டீவ் ஸ்மித்தை கேப்டன் மைக்கேல் கிளார்க் எச்சரித்துள்ளார். பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் ஆடி வந்த போது, பேட்ஸ்மென் அசார் அலியுடன் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஏதோ உரையாடியுள்ளார். அதனைத் தவறாகப் புரிந்து கொண்ட ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க், ஸ்மித்தை அழைத்து, ‘அசார் அலியின் நண்பர்கள் பாக். ஓய்வறையில் உள்ளனர். களத்தில் நட்பு தேவையில்லை’ என்று எச்சரித்ததாக ஆஸ்திரேலிய ஊடகச் செய்தி ஒன்று கூறியுள்ளது. கேப்டன் மைக்கேல் கிளார்க் தனது செய்கையை தவறாகப் புரிந்து கொண்டார் என்று ஸ்மித் பெர்த் நகரில் செ…
-
- 0 replies
- 450 views
-
-
அசோசியேட் அணிகளுக்கு தோனி முழு ஆதரவு நடப்பு உலகக்கோப்பையில் அசோசியேட் அணிகளின் ஆட்டம் குறித்து தோனி புகழ்ந்து பேசியதோடு அந்த அணிகளை மேம்படுத்துவது அவசியம் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: கிரிக்கெட் ஆட்டம் உலகளாவிய தன்மையை எட்ட வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். வணிக நோக்கத்தை விடவும் முக்கியமானது கிரிக்கெட் ஆட்டம் எங்கு வளர்கிறது என்பதை அறுதியிடுவது. அங்கெல்லாம் கிரிக்கெட் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த நாடுகளில் கிரிக்கெட் ஆடுவதற்கான வாய்ப்புகள் கூடிவருகிறது என்பதையும் நாம் பார்க்கவேண்டும். எங்கேனும் சிறு தீப்பொறி இருந்தால் கூட அதனை பெருந்தீயாக மாற்ற வேண்டும், அதாவது அதன் தீவிரத்தை. ஆப்கானிஸ்தான் அல்லது வேறு சில அணிகளை …
-
- 0 replies
- 540 views
-
-
அச்சுறுத்தும் முரளிதரன் பந்துவீச்சு இலங்கையில் வரும் 30ம் தேதி முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது. இந்தியா, இலங்கை, மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கிடையேயான முத்தரப்பு கிரிக்கெட் போட்டி இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கவுள்ளதால் மூன்று அணிகளும் முழுவீச்சில் தங்களை தயார்படுத்தி வருகின்றன. இந்தத் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும் என்று இந்திய ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்கின்றனர். காரணம் மேற்கு இந்திய அணியில் முன்னணி ஆட்டக்காரர்களான லாரா உட்பட பலர் இடம் பெறவில்லை. இலங்கையை பொறுத்த வரையில் அந்த அணி முரளிதரனின் மாயாஜால பந்து வீச்சை தான் நம்பியுள்ளது. இந்த அணிகளுடன் இந்திய அணியை ஒப்பிட்டு பார்க்கும்போது சற்று…
-
- 25 replies
- 5.1k views
-
-
அஜர்பைஜான் கிராண்ட் பிரிக்ஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் டேனியல் ரிக்கார்டியோ பாரமுலா ஒன் கார்பந்தயத்தின் இறுதி போட்டியில் 10-வது இடத்தில் துவங்கிய டேனியல் ரிக்கார்டியோ முதல் இடத்தை பிடித்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். பார்முலா ஒன் கார்பந்தயம் பல்வேறு கிராண்ட் பிரிக்ஸாக நடைபெற்றது. இதற்கான தகுதிச்சுற்றில் மெர்சிடெஸ் அணியின் லெவிஸ் ஹாமில்டன் முதல் இடம் பிடித்து ‘போல்’ நிலையை அடைந்தார். போல் நிலையை அடைந்த ஹாமில்டன் பந்தயத்தில் முதல் நபராக புறப்பட்டார். இந்த பந்தயத்தில்…
-
- 0 replies
- 350 views
-
-
அஜாஸ் பட்டேல்: இந்தியாவுக்கு எதிராக 10 விக்கெட்களையும் கைப்பற்றிய நியூசிலாந்து பந்துவீச்சாளர் 28 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வரும் 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணியை வெறும் 62 ரன்களுக்கு சுருட்டியுள்ளது இந்திய அணி. இந்திய அணிக்காக அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் எட்டு ரன்கள் மட்டுமே கொடுத்து நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். முகமது சிராஜ் மூன்று விக்கெட்டுகளையும் அக்சர் பட்டேல் இரண்டு விக்கெட்டுகளையும், ஜெயந்த் யாதவ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். …
-
- 0 replies
- 373 views
- 1 follower
-
-
அஜ்மல் மீது ஐ.சி.சி. நடவடிக்கை November 06, 2015 பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீரர் சயித் அஜ்மல், சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையை விரும்பத்தகாத வகையில் விமர்சித்தமையை அடுத்து, குறித்த விமர்சனத்துக்கு விளக்கம் தருமாறு ஐ.சி.சி. அஜ்மலை கேட்டுள்ளது. அஜ்மல் விளக்கம் கொடுத்த பின்னர் -அடுத்த 24 மணி நேரத்துக்குள் அவர்மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிகிறது. கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் முறைகேடான பந்துவீச்சால் இவரது பந்துவீச்சுக்கு தடை விதிக்கப்பட்டது. ஐ.சி.சி. விதிமுறைப்படி 15 டிகிரி வரை முழங்கையை மடக்கலாம். ஆனால் அஜ்மல் வீசும் அனைத்துப் பந்துகளும் விதிமுறைகளை மீறும் வகையில் இருந்தன. 5 மாதங்களுக்கு பிறகு அவரது பந்துவீச்சுக்கு ஐ.சி.சி. அனுமதி அளித்தது. பந்துவீச்சு ம…
-
- 0 replies
- 331 views
-
-
அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான இலங்கை குழாம் தென்னாபிரிக்கா நோக்கிப் பயணம் நான்கு வருடங்களுக்கு பின்னர் கிரிக்கெட் தொடரொன்றுக்காக அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான 15 பேர் கொண்ட இலங்கை குழாம் இன்று தென்னாபிரிக்கா நோக்கிப் பயணமானது. தென்னாபிரிக்காவில் 03 டெஸ்ட் 05 ஒரு நாள் மற்றும் 03 இருபதுக்கு இருபது போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ள இலங்கை அணியை வழியனுப்பும் நிகழ்வு இலங்கை கிரிக்கெட் சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த 12 பேர் கொண்ட இலங்கை குழாமில் பி.ஆர்.சீ விளையாட்டுக்கழகத்தின் வேகப்பந்து வீச்சாளர் விகும் சஞ்சய பண்டாரவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும், இலங்கை அணியில் சிரேஷ்ட வீரர்களான ரங்கன ஹேரத், உபுல் தரங்க ஆகியோர் இடம்பெற்றுள்ளதோட…
-
- 0 replies
- 220 views
-
-
அட மிஸ்டர். கூல் கூட சண்டைக்கு போயிருக்காருப்பா...! ( வீடியோ) இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டன் தோனிக்கு 'கூல் கேப்ட' என்ற செல்லப் பெயர் உண்டு.ஆனால் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் உண்மையிலேயே மிக கூலான மனிதர். தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஜென்டிலாக பல விஷயங்களில் நடந்து கொண்ட நிஜ கிரிக்கெட்டர். ஆனால் இவர் கூட ஒரு முறை உணர்ச்சிவசப்பட்டு எதிரணி வீரரருடன் சண்டைக்கு போன வரலாறும் உண்டு. கடந்த 2004ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தின் போது பாகிஸ்தான் பந்துவீச்சாளர் சோகைப் அக்தருடன் ராகுல் டிராவிட் கோபத்தில் சண்டைக்கு போன வீடியோ காட்சி இது. இருவருக்கும் வாக்குவாதம் நடந…
-
- 0 replies
- 322 views
-
-
அட.. நம்ம விராட் கோலியா இப்படி..!? - 7 அசத்தல் மாற்றங்கள் விராட் கோலியை கோவக்காரனாக, சண்டைக் கோழியாக, அனுஷ்கா ஷர்மாவுடன் ஊர்சுற்றுபவராக, சேஸிங்கில் கில்லியாக மட்டுமே இன்னமும் நினைத்து கொண்டிருக்காதீர்கள். அவர் தன்னை அதுக்கும் மேல, அதுக்கும் மேல என நாளுக்கு நாள் செதுக்கி கொண்டே இருக்கிறார். உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன், போர்ஃப்ஸ் பத்திரிகையின் பட்டியலில் சச்சினை முந்திவிட்டார் என்றெல்லாம் செய்திகள் டிரெண்ட் அடிக்கிறது. இதற்கிடையே ஆச்சரியமளிக்கும் விதமாக ஆக்ரோஷத்தையே தனது அடையாளமாகக் கொண்டிருக்கும் கோலியிடம் இப்போது பெரு மாற்றம். எந்த விஷயத்தையும் மிகப் பக்குவமாக, விவேகமாகக் கையாள்கிறார். வார்த்தை முதல் களச் செயல்பாடு வரை அது பிரதிபலிக்கிறது. அவரது …
-
- 0 replies
- 690 views
-
-
அடங்காத மலிங்கா! மருத்துவர் காரசார குற்றச்சாட்டு! இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான மலிங்கா தனது ஆலோசனைகளை மதிக்கவே இல்லை என்று இலங்கை அணியின் மருத்துவர் சிறி கண்ணன்கார குற்றஞ்சாட்டியுள்ளார். தற்போது அவுஸ்திரேலிய அணிக்கு மருத்துவராக இருக்கும் அவர், மலிங்கா தனது ஆலோசனைகளுக்கு எதிராகவே செயல்பட்டதாகவும், அதனாலே அவர் தற்போது அவதிப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், நான் இந்த ஆண்டு ஜனவரி மாதம் மலிங்காவின் உடற்தகுதியை சோதனை செய்தேன். அவருக்கு கண்டிப்பாக 6 மாதம் ஓய்வு வேண்டும் என்று அறிவுறுத்தினேன். அப்படி இருந்து அவர் ஏன் ஆசியக்கிண்ண தொடரில் ஆடினார் எ…
-
- 0 replies
- 388 views
-
-
-
அடிக்க பாய்ந்தார் காம்பிர்: அபராதத்துடன் தப்பினார் புதுடில்லி: கிரிக்கெட் ஒரு ‘ஜென்டில்மேன்’ ஆட்டம் என்பர். இதற்கு, காம்பிரின் நடவடிக்கை கொஞ்சம் கூட பொருத்தம் இல்லாமல் உள்ளது. களத்தில் இவரது அடாவடி தொடர்கிறது. ரஞ்சிக் கோப்பை போட்டியில் பெங்கால் அணி கேப்டன் மனோஜ் திவாரியை தாக்க முயன்றார். இதை தடுக்க வந்த அம்பயரையும் இடித்து தள்ளினார். ரஞ்சிக் கோப்பை தொடரின் நான்காவது சுற்று லீக் போட்டிகள் தற்போது நடக்கின்றன. டில்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடக்கும் போட்டியில் டில்லி, பெங்கால் அணிகள் மோதுகின்றன. இதன் 3வது நாளான நேற்று பெங்கால் அணி முதல் இன்னிங்சை தொடர்ந்தது. சாட்டர்ஜி அவுட்டானதும், பெங்கால் அணி கேப்டன் மனோஜ் திவாரி தொப்பியுடன் களமிறங்கினார். அப்போது வேகப்பந்துவ…
-
- 1 reply
- 570 views
-
-
அடிபட்ட நபருக்காக மாற்று வீரரை களமிறக்கும் புதிய விதிமுறை: நியூசிலாந்தில் அறிமுகம் போட்டியின்போது காயமடையும் வீரருக்குப் பதிலாக பேட்டிங், பவுலிங் மற்றும் விக்கெட் கீப்பர் போன்ற பணிகளை செய்யும் வகையில் புதிய வீரரை களமிறக்கும் விதியை நியூசிலாந்து அறிமுகம் செய்கிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற நாடுகளில் கிரிக்கெட் போட்டி முக்கிய விளையாட்டாக கருதப்பட்டு வருகிறது. இப்போட்டியைக் காண ரசிகர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் ரசிகர்களின் ஆர்வத்தை எந்த வகையிலும் குறைக்காத வகையில் ஐ.சி.சி. புதுப்புது முறையை அறிமுகப்பட…
-
- 0 replies
- 331 views
-
-
-
- 9 replies
- 1.6k views
-
-
அடிலெய்ட் மைதானத்தில் முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டி கிரிக்கெட் வரலாற்றில் முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டி, அடிலெய்டில் நவம்பர் 27-ம் தேதி ஆஸி.-நியூஸி. அணிகள் மோதுகின்றன. | படம்: ராய்ட்டர்ஸ். கிரிக்கெட் ஆட்டத்தில் டெஸ்ட் கிரிக்கெட் மீது ரசிகர்களின் ஆர்வத்தை ஈர்க்கும் விதமாக பகல்-இரவு டெஸ்ட் போட்டிகளை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்ட பரிசோதனை முயற்சியாக, இந்த ஆண்டு நவம்பர் 27-ம் தேதி, ஆஸ்திரேலியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே முதன் முதலாக பகல்-இரவு டெஸ்ட் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்காகவென்றே ‘பிங்க்’ நிறப் பந்துகள் தயாரிக்கப்பட்டுள்ளன. நியூஸிலாந்து அணி ஆஸ்திரேலியா பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இதில் 3-வது…
-
- 0 replies
- 566 views
-
-
21 JUL, 2025 | 03:15 PM (நெவில் அன்தனி) சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் நடத்தப்படும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் அடுத்த மூன்று அத்தியாயங்களினது இறுதிப் போட்டிகளையும் இங்கிலாந்திலேயே நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த பொதுச் சபைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்க அமைய 2027, 2029, 2031 ஆகிய வருடங்களில் நடைபெறவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் அத்தியாயங்களினதும் இறுதிப் போட்டிகள் இங்கிலாந்தில் அரங்கேற்றப்படும். 2021, 2023, 2025 ஆகிய மூன்று வருடங்களில் நடைபெற்ற இறுதிப் போட்டிகளை இங்கிலாந்து மற்றம் வேல்ஸ் கிரிக்கெட் சபை வெற்றிகரமாக நடத்தியதை கருத்தில் கொண்டே அடுத்த மூன்று அத்தியாயங்களுக்கான இறுத…
-
- 0 replies
- 102 views
- 1 follower
-
-
அடுத்த SAGஇல் இந்தியாவை வீழ்த்துவோம் – கபடி வீரர் SINOTHARAN By Admin - நேபாளத்தில் நடைபெற்ற 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழா (SAG) ஆண்களுக்கான கபடியில் முதல்தடவையாக வெள்ளிப் பதக்கத்தை வென்று இலங்கைக்கு பெருமையை தேடிக் கொடுத்த இலங்கை கபடி அணியின் நட்சத்திர வீரர் கணேசராஜா சினோரதனுக்கு விமான நிலையத்தில் வைத்து உற்சாக வரவேற்பளிக்கப்பட்டதுடன், தனது வெற்றி குறித்து The Papare.com இற்கு தெரிவித்த கருத்தை இந்த காணொளியில் பார்க்கலாம். http://www.thepapare.com/video-eastern-kabaddi-star-sinotharans-arrival-the-sag-2019-tamil/
-
- 1 reply
- 547 views
-
-
அடுத்த இலக்கு, ஒலிம்பிக்கில் தங்கம்: அசத்தும் அபூர்வி சண்டேலா இந்தியாவின் ஒலிம்பிக் எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்கும் போட்டிகள் பளு தூக்குதல், குத்துச்சண்டை மற்றும் அம்பு எய்தல். தற்போது தோன்றியிருக்கும் நம்பிக்கை நட்சத்திரம்தான் அபூர்வி சண்டேலா, 10 மீட்டர் ஏர் ரைஃபல் என்ற போட்டியில் 2012 முதல் பங்கேற்று வருகிறார். தான் பங்கேற்ற முதல் தேசிய அளவிலான சீனியர் போட்டியிலேயே தங்கம் வென்றார். பின்னர் 2014-ல் ஹேக் இன்டெர்ஷூட் போட்டிகளில் தனி நபர், குழு என பல போட்டிகளில் பங்கேற்று 4 மெடல்கள் குவித்தார். அதே வருடம் கிளாஸ்கௌவில் நடைபெற்ற காமன் வெல்த் போட்டியில் 206.7 புள்ளிகள் எடுத்து தங்கம் வென்றது மட்டும் அல்லாமல் புது ரெக்கார்டும் உருவாக்கினார். …
-
- 0 replies
- 609 views
-
-
அடுத்த உலகக் கிண்ணப் போட்டியையும் குறைந்த நாட்களில் நடத்தும் வாய்ப்பில்லை * ஐ.சி.சி. கூறுகிறது அடுத்த உலகக் கிண்ணப் போட்டியையும் குறைந்த நாட்களில் நடத்த வாய்ப்பில்லை என்பதை ஐ.சி.சி. தலைமை நிர்வாகி விளக்கியுள்ளார். மேற்கிந்தியாவில் தற்போது நடந்து வரும் உலகக் கிண்ணப் போட்டி நீண்ட நாட்களாக இழுபட்டுக் கொண்டு போவதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர். இதில் அவுஸ்திரேலிய தொடக்க வீரர் ஹைடனும் உண்டு. அடுத்த உலகக் கிண்ணப் போட்டியையாவது குறைந்த காலத்தில் நடத்த வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி.) தலைமை நிர்வாகி மால்கம் ஸ்பீட் கூறியதாவது; அடுத்த உலகக் கிண்ணப் போட்டியை (2011 ஆம் ஆண்…
-
- 0 replies
- 833 views
-
-
அடுத்த உலகக் கோப்பை வரை தோனி கேப்டன் பொறுப்பில் நீடிக்க வேண்டும்: சேவாக் விருப்பம் தோனி நல்ல இதயம் படைத்தவர். மூத்த வீரர்களான நாங்கள் அவரை மதித்தோம் என்கிறார் சேவாக். | படம்: ஏ.பி. அடுத்த உலகக் கோப்பை கிரிக்கெட் வரை கேப்டன் பொறுப்பில் தோனியே நீடிக்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற அதிரடி வீரர் விரேந்திர சேவாக் கூறியுள்ளார். தோனி பற்றிய கேள்விகளுக்கு பதில் அளித்த சேவாக் கூறியதாவது: "தோனி அடுத்த உலகக் கோப்பை வரை கேப்டன் பொறுப்பில் நீடிக்க வேண்டும். அவர் அவ்வாறு செய்தால் நல்ல உலகக்கோப்பை அணியை அவர் ஏற்படுத்துவார். அவர் ஓய்வு பெற்றால் 5,6 அல்லத் 7-வது நிலையில் யாரைக் களமிறக்குவது என்பது சிந்திக்கப் பட வேண்டிய ஒன்றாகிவிடும், தோனி இருக்கும் போதே அந்த நிலைகளுக்கு யாரை இறக்குவத…
-
- 0 replies
- 290 views
-
-
அடுத்த உலகக்கிண்ணத்தின் துருப்புச்சீட்டு மெத்திவ்ஸ் – சங்கா இங்கிலாந்தில் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணியில், அஞ்செலோ மெத்திவ்ஸ் விளையாடுவதன் முக்கியத்துவம் குறித்து, இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கார கருத்து வெளியிட்டுள்ளார். உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக நான்கு சதங்களை விளாசிய சாதனையை, தன்னகத்தே கொண்டுள்ள குமார் சங்கக்கார, அஞ்செலோ மெத்திவ்சின் சகலதுறை திறமையானது 2019 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் விளையாடும் இலங்கை அணிக்கு அதீத நம்பிக்கை அளிக்கக்கூடும் என சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் எவ்வி…
-
- 0 replies
- 383 views
-
-
Jul 17, 2010 / பகுதி: விளையாட்டு / சேரா அடுத்த உலகக்கிண்ணத்தையும் ஸ்பெயின் கைப்பற்றும் பயிற்சியாளர் நம்பிக்கை உலகக்கிண்ணத்தை ஸ்பெயின் வென்றதற்கு வீரர்கள் மட்டு மல்ல அந்த அணியின் பயிற்சியாளர் விசன்டேடெல்பாஸ்கிக்கும் முக்கிய பங்குண்டு. விரர்களுக்கு அவர் கற்றுக் கொடுத்த நுணுக்கங்கள் எந்த நெருக்கடியிலும் மனதளவில் பாதிக்காமல் இருத்தல் போன்றவை நல்ல பலனை கொடுத்ததே கிண்ணத்தை வெல்வதற்கு காரணமாக இருந்தன. பாஸ்கி முன்னணி கால்பந்து கிளப்பான ரியல்மாட்ரிட் அணியில் 4முறை பயிற்சியாளராக இருந்தவர். அவர் திறமையை அறிந்தே ஸ்பெயின் பயிற்சியாளராக நியமிக்கப் பட்டார் கிண்ணத்தை வென்றது குறித்து பாஸ்கி கூறியதாவது. எனக்கு முன்பு ஸ்பெயின் பயிற்சியாளராக இருந்த லூயிஸ் அரசான்ஸ் அணிய…
-
- 0 replies
- 479 views
-
-
அடுத்த ஐ.பி.எல்., எப்போது நவம்பர் 04, 2014. புதுடில்லி: எட்டாவது ஐ.பி.எல்., தொடர் வரும் 2015, ஏப். 8ம் தேதி துவங்குகிறது. கடந்த 2008 முதல் இந்திய கிரிக்கெட் (பி.சி.சி.ஐ.,) போர்டால், இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) ‘டுவென்டி–20’ தொடர் நடத்தப்படுகிறது. அடுத்த ஆண்டு நடக்க உள்ள எட்டாவது தொடருக்கான தேதியை ஐ.பி.எல்., ஆட்சிமன்றக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, ஏப்.8 முதல் மே 24 வரை தொடர் நடக்கவுள்ளது. தவிர, வீரர்களை மாற்றிக் கொள்வதற்கான கெடு வரும் டிச. 12ல் முடிகிறது. இதன்படி, மும்பை வீரர்களான மைக்கேல் ஹசி, பிரவீண் குமாரை அணி நிர்வாகம் விடுவித்தது. இவர்கள் எட்டாவது ஐ.பி.எல்., தொடருக்கான ஏலத்தில் இடம் பெறுவர். உன்முக்த் சந்த் (ராஜஸ்தான்), வினய் குமார் (கோல்கட்டா) மும…
-
- 5 replies
- 909 views
-
-
பெஷாவர் : "சச்சின் சொந்த சாதனைக்காகத் தான் விளையாடுகிறார். இந்திய அணியின் வெற்றிக்கு கைகொடுப்பதில்லை,'' என்ற பழைய விமர்சனங்கள் தற்போது உண்மையாகி வருகின்றன. கராச்சியில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியைத் தழுவியது. ஸ்கோர் எடுக்க அணி தள்ளாடிக் கொண்டிருந்த போது, பொறுப்பில்லாமலும், அணியின் வெற்றி பற்றி சுத்தமாக கவலை இல்லாமலும் அவுட் ஆகி சென்ற சச்சின், இனியும் ரசிகர்களின் ஆவலை நிறைவேற்ற முடியுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. டெஸ்ட் தொடரில் படுமோசமாக ஆடிய இவர், இன்னும் ஏன் அணியில் ஒட்டிக் கொண்டு இருக்க வேண்டும்? இளைஞர்களுக்கு வழிவிட்டு ஓய்வு பெறுவது தானே நல்லது. தாமாக முன்வந்து இதை செய்வாரா? வயது 32. "டென்னிஸ் எல்போ' காயம் வேறு சாக்க…
-
- 3 replies
- 1.8k views
-