விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7841 topics in this forum
-
டெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மேட்ச் பிக்சிங் செய்ய இலங்கை வீரர் ஒருவருக்கு ரூ 10 கோடி வழங்கப்பட்டதாகவும், இந்திய வீரர்கள் சிலருக்கும் இதில் பங்கிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பு கிளம்பியுள்ளது. மும்பை குற்றப்பிரிவு போலீசாரிடம் கிரிக்கெட் புக்கிகளில் ஒருவரான சோனு யோகேந்திர ஜலன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக கடந்த வியாழக்கிழமையன்று இவரையும் பையாஜி என்பவரையும் மும்பை போலீஸ் கைது செய்தது. உலகில் நடக்கும் மிகப் பெரிய கிரிக்கெட்ட சூதாட்டம் தொடர்புடைய புக்கிகள் இருவருமே. இவர்கள்தான் கிரிக்கெட் வீரர்களை அணுகி பல கோடி பேரம் பேசி, ஒரு அணியை ஜெயிக்க அல்லது தோற்க வைக்கும் கருவிகள். இவர்களிடமிருந்து 25 மொபைல…
-
- 0 replies
- 687 views
-
-
ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி: பிசிசிஐ விருதுக்கு தேர்வு சிறந்த கிரிக்கெட் வீரராக விராட் கோலி தேர்வு: படம்: ஏ.பி. மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் 5,000 ரன்கள் எடுத்த முதல் இந்திய வீராங்கனை மிதாலி ராஜ், சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனையாக தேர்வு. | படம்: வி.வி.சுப்பிரமணியம். டெஸ்ட் கேப்டன்சியில் புதிய சாதனைகளை நோக்கி முன்னேறி வரும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக பிசிசிஐ தேர்வு செய்துள்ளது. மகளிர் கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதால…
-
- 0 replies
- 690 views
-
-
எப்போ, எப்படி செய்யனும் என்று அவருக்கு மட்டும்தான் தெரியும்.. டோணி பற்றி சங்ககாரா சென்னை: கேப்டன் பொறுப்பை எப்போது விட்டுக்கொடுக்க வேண்டும் என்பது டோணிக்கு நன்கு தெரியும் என்று இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்ககாரா தெரிவித்தார். நிருபர்கள் கேள்விக்கு சங்ககாரா அளித்த பதில்களின் தொகுப்பை பாருங்கள்: இலங்கையில் ஒன்டே-டெஸ்ட் போட்டிகளுக்கு மேத்யூசும், டி20 போட்டிகளுக்காக சண்டிமாலும் இலங்கை அணி கேப்டன்களாக செயல்படுகிறார்கள். அதே வியூகத்தை இந்திய அணியில் புகுத்தலாமா என்பது பற்றி நான் பதில் சொல்ல முடியாது. அதேநேரம் டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடுவது ஒரு கலை. டெஸ்ட் ஆடும் வீரர்களில் அதிகம்பேர் டி20 போட்டிகளில் ஆடுவது பொருத்தமாகாது. டோணிக்கு தெர…
-
- 0 replies
- 333 views
-
-
கடைசி ஓவர் வரை திக் திக்! மும்பை இந்தியன்ஸ் 2-வது முறையாக சாம்பியன் - மதுரை வீராங்கனை கமலினி சாதித்தது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் 2025 சீசனுக்கான மகளிர் ஐபிஎல் டி20 போட்டித் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. மும்பை அணி வெல்லும் 2வது சாம்பியன் பட்டம் இதுவாகும். ஏற்கெனவே 2023ம் ஆண்டில் அறிமுக ஐபிஎல் தொடரில் மும்பை அணி பட்டம் வென்றுள்ளது. மும்பையில் பிராபோர்ன் மைதானத்தில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது மும்பை அணி. முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் சேர்த…
-
- 0 replies
- 273 views
- 1 follower
-
-
இந்திய தொடருக்கான இலங்கை T20I குழாம் வெளியானது! By A.Pradhap - இந்திய அணிக்கு எதிராக எதிர்வரும் 5ம் திகதி ஆரம்பமாகவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடருக்கான இலங்கை குழாத்தின் வீரர்கள் விபரம் வெளியாகியுள்ளது. வெளியிடப்பட்டுள்ள இந்த குழாத்தின் படி, இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ், சுமார் 18 மாதங்களுக்கு பின்னர், இலங்கை T20I குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார். இறுதியாக, இலங்கை அணியானது அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு T20I தொடரில் விளையாடியிருந்ததுடன், தொடரை முழுமையாக இழந்திருந்தது. இவ்வாறான நிலையில், குறித்த தொடருக்கான குழாத்திலிருந்து…
-
- 1 reply
- 738 views
-
-
அப்ரிடியின் தலைவர் பதவிக்கு ஆப்பு இருபதுக்கு 20 உலகக்கிண்ண போட்டிகளின் பின்னர் அணியின் தலைவர் பதவியில் இருந்து ஷஹித் அப்ரிடி விலக வேண்டும் என்றும் அவ்வாறில்லாவிட்டால் அவர் நீக்கப்ப்டுவார் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஷகாரியார் கான் கூறியுள்ளார். இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷகாரியார் கான் கூறுகையில், டி20 உலகக்கிண்ணத்தோடு தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்பதை அப்ரிடி புரிந்துக்கொண்டுள்ளார். அவர் பதவி விலகாத பட்சத்தில் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுவார். மேலும், அவர் ஒரு வீரராக மட்டும் அணியில் நீடிக்க விரும்பினால், அவரை தேர்வு செய்வதா வேண்டாமா என்பது பற்றி பிறகு முடிவு செய்யப்படும். அதேபோல் பயிற்சியாள…
-
- 0 replies
- 454 views
-
-
வடமாகான பாடசாலைகளுக்கு இடையிலான 19வயதின் கீழ் கூடைப்பந்தாட்ட போட்டியில் யாழ் மத்திய கல்லூரி சம்பியனானது யாழ்இந்துக்கல்லூரியை இறுதி போட்டியில் சந்தித்த யாழ்மத்தி 51-60 புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றது. முகநூல் யாழ் மத்திய கல்லூரி
-
- 0 replies
- 423 views
-
-
கிரிக்கெட் மைதானத்தில் சேட்டை காட்டிய நாய்க்கு டிவிட்டரில் அக்கவுன்ட்! புஜாராவும், கோஹ்லியும் சதத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் மைதானத்துக்குள் நுழைந்த நாய் ஒன்று இடத்தை கலகலப்பாக்கியது. கிரிக்கெட் கிரவுண்ட் மட்டுமின்றி இணைய கிரவுண்டில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இப்போது அந்த நாய் குறித்து தான் பேச்சு. டிவிட்டர் வாசிகள் இன்னும் ஒரு படி மேலே போய் அந்த நாய்க்கு டிவிட்டரில் அக்கவுண்ட் ஆரம்பித்து அதகளம் செய்திருக்கிறார்கள். இது #vizagdog என்ற ஹாஷ்டாகில் டிரெண்டாகி வருகிறது. இந்தியா - இங்கிலாந்து இடையேயான இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது.கான்பூரை போல புட்கள் இருக்கும் பிட்ச் இல்லாமல், பந…
-
- 1 reply
- 779 views
-
-
இவனிடம் எதோ இருக்கிறது - ஆர்.வி. லோஷன் எல்பிஎல் போட்டியில் வியாஸ்காந்தின் பங்களிப்பு பற்றி, இலங்கையின் சிரேஷ்ட வானொலிக் கலைஞர் ஆர்.வி.லோஷன் முகநூலில் எழுதிய குறிப்பை வாசகர்களுக்காக தருகிறது வணக்கம் லண்டன்.. உண்மையில் இவரிடம் ஏதோ இருக்கிறது… “எம்மில் அநேகருக்கு எமக்கு பிடித்த விடயங்களை மட்டுமே வாசிக்க, கேட்கப் பிடிக்கும் கற்பனை உலகத்தில் எமக்குப் பிடித்தவை பிறகு பொய்யாகிவிடும் எனத் தெரிந்தும் அவற்றுள் வாழ்வதில் இப்போதைக்கு சுகம் காணலாம், பிறகு நடப்பதை பிறகு பார்க்கலாம் என்றிருந்துவிடுவோம். விஜயகாந்த் வியாஸ்காந்த் – ஒரு போட்டியாவது வாய்ப்புக் கிடைக்குமா என்று காத்திருந்து மூன்று போட்டிகளில் விளையாடிவிட்டான் இந்த இளம் சுழல். கிடைத்த வாய்ப்புக்களி…
-
- 0 replies
- 787 views
-
-
மீண்டும் இருபது-20 போட்டிகளில் டில்சான் ஹொங்கொங்கில் இடம்பெறவுள்ள ஹொங்கொங் இருபது-20 பிலிட்ஸ் தொடரில் இலங்கை அணியின் முன்னணி வீரரான திலகரட்ன டில்சான் விளையாடவுள்ளார். இந்த தொடரில் சிட்டி கைட்ஸ் அணிக்காக டில்சான் விளையாடவுள்ளார். இதேவேளை ஹொங்கொங் இருபது 20 பிலிட்ஸ் தொடரில் முன்னணி வீரர்களான குமார் சங்கக்கார டெரன் சமி மற்றும் அப்ரிடி ஆகியோர் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து டில்சான் ஓய்வு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/
-
- 0 replies
- 449 views
-
-
ஆஸிக்கெதிரான இன்றைய போட்டியில் வெற்றி பெறும் நோக்கில் களமிறங்குகிறது இலங்கை இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகின்றது. அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி அந்நாட்டு அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி இன்று மெல்போர்ன் கிரிக்கெட் அரங்கில் நடைபெறுகின்றது. தென்னாபிரிக்க அணியுடனான தொடரை முடித்துக் கொண்டு இலங்கைக்கு திரும்பாமல் அங்கிருந்து அவுஸ்திரேலியா சென்றடைந்தது இலங்கை அணி. பெரும் நம்பிக்கையுடன் இருக்கும் இளம் இலங்கை அணி,…
-
- 14 replies
- 1.1k views
-
-
ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே 54 ரன்னுக்கு ஆல் அவுட்! ஆஃப்கானிஸ்தான் அணி, ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 2-2 என இரண்டு அணிகளும் சமமாக இருந்த நிலையில், கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 253 ரன்கள் குவித்தது. ஜிம்பாப்வே பேட்டிங் செய்ய வந்தபோது மழை பெய்யவே, போட்டி தடைப்பட்டது. இதையடுத்து, டக் வொர்த் லூயிஸ் முறைப்படி 22 ஓவர்களில் 161 ரன்கள் இலக்காக ஜிம்பாப்வேக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், வெறும் 13.5 ஓவர்களில் 54 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது ஜிம்பாப்வே. 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 3-2 எனத் தொடரை வென்றது ஆஃப்…
-
- 0 replies
- 307 views
-
-
பெண் செய்தியாளருக்கு முத்தம் கொடுத்த டென்னிஸ் வீரர்; ப்ரெஞ்சு ஓப்பன் தொடரிலிருந்து அதிரடி நீக்கம் பெண் செய்தியாளருக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த ஃப்ரான்ஸ் டென்னிஸ் வீரர் மேக்ஸிம் ஹாமு, ப்ரெஞ்சு ஓபன் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். பாரிஸில் நடைபெற்று வரும் ப்ரெஞ்சு ஓபன் தொடரின் முதல் ஆட்டத்தில் பாப்லா ஸ்வாசிடம், மேக்ஸிம் ஹாமு தோல்வி அடைந்திருந்தார். அப்போது யூரோஸ்போர்ட் தொலைகாட்சி சார்பில் மாலி தாமஸ் என்ற பெண் நிருபர் ஒருவர் மேக்ஸிம் ஹாமுவிடம் நேரலையில் கேள்வி எழுப்பினார். அப்போது மேக்ஸிம் ஹாமு, அந்த பெண் நிருபரின் தோளில் கையைப் போட்டு இழுத்து அவருக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்தார். செய்தியாளர் அதனை தவிர்த்து விட்டு மீண்டும் கேள்…
-
- 2 replies
- 380 views
-
-
2022 ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மகேஷ் தீக்ஷனவை வாங்கிய பின்னர், இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்ஷனவுக்கு எதிராக சமூக ஊடக பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தீக்ஷன ஐபிஎல் ஏலத்தின் 2ம் நாளில் 70 லட்சம் இந்திய ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார். இதற்கு ரசிகர்கள் சமூக ஊடகங்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். அத்துடன், சென்னை அணியை புறக்கணிக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளனர். வைரலாகும் ஜெயலலிதாவின் கோரிக்கை கடிதம் கடந்த 2013ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா தமிழகத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் விளையாட தடை விதிக்க வேண்டும் என அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்க்கு கடிதம் எழுதி இருந்தா…
-
- 0 replies
- 382 views
-
-
சங்காவின் அதிரடி வீண் : CPL தொடரிலிருந்து ஜமெய்க்க அணி வெளியேற்றம் Image Courtesy - Getty image மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் திருவிழாக்களில் ஒன்றான கரீபியன் பிரீமியர் லீக் தொடரின், பிளே ஒப் சுற்று தற்போது நடைபெற்று வருகின்றது. இச்சுற்றில் நடைபெற்று முடிந்திருக்கும் வெளியேறல் (Eliminator) நொக்அவுட் போட்டியில் கயானா அமேசான் வோரியர்ஸ் அணியினால் 5 விக்கெட்டுக்களால் வீழ்த்தப்பட்டிருக்கும் நடப்புச் சம்பியன் ஜமெய்க்கா தல்லாவாஸ் அணி தொடரில் இருந்து வெளியேறுகின்றது. கடந்த மாத ஆரம்பத்திலிருந்து மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் ஐ.பி.எல் போட்டிகளை ஒத்த கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் பிளே ஒப் போட்…
-
- 1 reply
- 283 views
-
-
டெல்லி டி20 போட்டியின்போது வாக்கி டாக்கியை பயன்படுத்திய கோலி: ஐ.சி.சி. விதியை மீறினாரா? டெல்லியில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியின்போது இந்திய கேப்டன் விராட் கோலி வாக்கி டாக்கி பயன்படுத்தினார். இது ஐ.சி.சி. விதிமுறை மீறலா? என்ற விவாதத்தை எழுப்பியது. இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நேற்றிரவு டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து கொண்டிருந்தது. அப்போது வெளியில் இருந்த கேப்டன் விராட் கோலி வாக்கி டாக்கியில் பேசிக்கொண்டிருந்தார். இதை பல செய்தி நிறுவனங்கள் படம் எடுத்தனர்.…
-
- 1 reply
- 479 views
-
-
2018 FIFA உலகக் கிண்ணத்திலிருந்து ஸ்பெயின் நீக்கப்படும் அபாயம் Image Courtesy - EPA ஸ்பெயின் கால்பந்து சம்மேளனத்தில் இடம்பெறும் அரசியல் தலையீடு குறித்து சர்வதேச கால்பந்து சம்மேளனம் எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில் ஸ்பெயின் அணி 2018 FIFA உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் பங்கேற்பது அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. ஸ்பெயின் கால்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவரை தேர்வு செய்யும் வாக்கெடுப்பில் அந்நாட்டு அரசு தொடர்ந்து தலையிட்டால் அடுத்த உலகக் கிண்ண போட்டியில் ஸ்பெயினுக்கு தடை விதிக்கப்படும் என்று சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) அறிவித்துள்ளது. ஸ்பெயின் கால்பந்து சம்மேளனத்தின் தலைவராக இருந்த ஏஞ்சல் மரியா வி…
-
- 0 replies
- 617 views
-
-
இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத்திற்கு எவ்வாறு அணிகள் தகுதி பெற்றன ? By VISHNU 06 OCT, 2022 | 11:48 AM (என்.வீ.ஏ.) அவுஸ்திரேலியாவில் முதல் சுற்றுடன் இம் மாதம் 16ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 8ஆவது ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் வெற்றிக் கிண்ணத்தை ஸ்பரிசிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் 16 நாடுகள் பங்குபற்றவுள்ளன. இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி முதல் சுற்று, சுப்பர் 12 சுற்று என இரண்டு கட்டங்களாக நடத்தப்படுவதுடன் முதல் சுற்றில் 8 நாடுகள் இரண்டு குழுக்களில் தலா 4 நாடுகள் வீதம் லீக் அடிப்படையில் மோதவுள்ளன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் 4 அணிகள் சுப்…
-
- 0 replies
- 361 views
- 1 follower
-
-
யுவராஜ் சிங் பிறந்தநாள்: மறக்க முடியாத 4 போட்டிகள் கட்டுரை தகவல் எழுதியவர்,விவேக் ஆனந்த் பதவி,பிபிசி தமிழ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் பேட்டிங்கில் நடுவரிசையில் களமிறங்க வேண்டும்; தேவைப்பட்டால் ஆட்டத்தில் பந்துவீசவேண்டும்; அற்புதமாக ஃபீல்டிங் செய்ய வேண்டும்; ஃபினிஷராகவும் இருக்க வேண்டும்; அது மட்டுமல்ல இடதுகை பேட்ஸ்மேனாகவும் இருக்க வேண்டும். இந்த எல்லாத் துறையிலும் அந்த நபர் கலக்கல் ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். இப்படி ஒரு 'ஆல்ரவுண்டரை' இந்தியா தேடி…
-
- 0 replies
- 725 views
- 1 follower
-
-
அவுஸ்ரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதும் முத்தரப்பு கிரிக்கெற் போட்டிகள். அவுஸ்ரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளிடையேயான முத்தரப்பு ஒரு நாள் சர்வதேச கிரிக்கெற் சுற்றுப் போட்டிகள் இன்று ஆரம்பமாகவுள்ளன. அவுஸ்ரேலியா மெல்போன் கிரிக்கெற் மைதானத்தில் மதியம் 2-15 க்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது போட்டியில் அவுஸ்ரேலியா அணியும் இங்கிலாந்து அணியும் மோதவுள்ளன. உடலில் ஏற்பட்ட காயம் காரணமாக Ashes Test போட்டிகளில் பங்குபற்றாத இங்கிலாந்து அணித்தலைவர் Michael Vaughan இந்த முத்தரப்பு போட்டிகளில் இங்கிலாந்து அணிக்கு தலைமை தாங்குகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. Australia v England - Melbourne - 12 Jan Australia v New Zealand - Hobart - 14 Jan En…
-
- 13 replies
- 2.2k views
-
-
August Friday, August 31st - Monday, September 3rd 2007 Toronto Twenty20 International Cup - Canada, Pakistan, Sri Lanka & West Indies
-
- 6 replies
- 2.2k views
-
-
மிட்செல் ஸ்டார்க்கை விமர்சனம் செய்வது ஆச்சர்யம் அளிக்கிறது: விராட் கோலி இந்தியாவிற்கு எதிரான தொடரில் குறிப்பிடத் தகுந்த வகையில் பந்து வீசாத மிட்செல் ஸ்டார்க்கை விமர்சனம் செய்வது ஆச்சர்யம் அளிக்கிறது என விராட் கோலி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 எனக் கைப்பற்றியது. இத்தொடர் தொடங்குவதற்கு முன் வார்னர் மற்றும் ஸ்மித் இல்லாத ஆஸ்திரேலியா பேட்டிங்கில் திணறும். ஆனால், பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹசில்வுட், நாதன் லயன் ஆகிய உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்கள் இந்திய பேட்டிங்கை சீர்குலைப்பார்கள். இதனால் ஆஸ்திரேலியா…
-
- 0 replies
- 584 views
-
-
ஆஸ்திரேலியாவை வீழ்த்த நல்ல வாய்ப்பு: முஷ்பிகுர் ரஹிம் நம்பிக்கை வங்கதேச அணியின் டெஸ்ட் கேப்டன் முஷ்பிகுர் ரஹிம். | படம்: ஏ.எஃப்.பி. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வரவிருக்கும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் அந்த அணியை வீழ்த்த ஒரு சிறந்த வாய்ப்பாகும் என்று வங்கதேச டெஸ்ட் கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் தெரிவித்துள்ளார். "ஆஸ்திரேலியாவை வீழ்த்த இதுவே சிறந்த வாய்ப்பு, எனவே நாங்கள் 100%-க்கும் மேல் பங்களிப்பு செய்து வெற்றிக்கான வாய்ப்புகளை சாத்தியமாக்குவோம்” என்றார். ஒருநாள் போட்டிகளில் வளர்ந்து வரும் வங்கதேசம், தொடர்ச்சியாக ஜிம்பாப்வே, பாகிஸ்தான், இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரன இருதரப்பு ஒருநாள் தொடர்களை வென்றது. டெஸ்ட் போட்டிகளில் ஜிம்பாப்வேயை 3-0 என்று வீழ்த்தியது வங்கத…
-
- 0 replies
- 270 views
-
-
யாரென்று தெரிகிறதா இவர் ‘தீ’ என்று புரிகிறதா...! இந்தியாவுக்கு இரண்டு உலக கோப்பை வென்று தந்த தோனி சமீப காலமாக தடுமாறினார். உடனே ‘டுவென்டி–20’, ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து இவரை துாக்க வேண்டும் என்று விமர்சனங்கள் எழுந்தன. இதை கேட்டு ‘கூலா’க இருந்த தோனி, நேற்று ‘பேட்’ மூலம் பதிலடி தந்தார். 126 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்த இந்திய அணியை, தனது அசத்தலான பேட்டிங்கினால் மீட்டு எடுத்தார். எதிரணிக்கு ‘நெருப்பாக’ மாறிய இவர், 86 பந்தில் 4 சிக்சர், 7 பவுண்டரி சேர்த்து 92 ரன்கள் குவித்தார். அதிகமான விமர்சனங்கள் காரணமாக வழக்கத்துக்கு மாறாக உணர்ச்சியை வெளிப்படுத்தினார். தனது ‘கேட்ச்’ மூலம் தென் ஆப்ரிக்க வீரர்கள் அவுட்டான போதெல்லாம் உற்சாக மிகுதியில் துள்ளிக் குதித்த…
-
- 0 replies
- 367 views
-
-
உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வளரிவான் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பிரேசிலின் ரியோ டி ஜெனேரியோவில் ஐ.எஸ்.எஸ்.எஃப் உலகக் கோப்பை சுடுதல் போட்டி நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் இளவேனில் வளரிவான் . 10 மீட்டர் ஏர் ரைஃபில் பிரிவில் இளவேனில் 251.7 புள்ளிகள் எடுத்து முதலிடத்தை பிடித்திருக்கிறார். படத்தின் காப்புரிமைELAVENIL VALARIVAN இவருக்கு அடுத்தபடியாக பிரிட்டனைச் சேர்ந்த மெக்கின்டோஷ் சியோனைட் 250.6 புள்ளிகள் எடுத்து இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். தைவானைச் சேர்ந்த லின் யிங்-ஷின் 229.9 புள்ளிகள் எடுத்து மூன்றாமிடம் பிடித்தார் . …
-
- 2 replies
- 1.2k views
-