விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7841 topics in this forum
-
ஆப்கான், அயர்லாந்து அணிகளுக்கு டெஸ்ட் தகுதி: ஐசிசி அறிவிப்பு நீண்ட கால கடின உழைப்புக்குப் பிறகு ஆப்கானிஸ்தான், அயர்லாந்து கிரிக்கெட் அணிகளுக்கு டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முழு உறுப்பினர்கள் தகுதியை இருநாடுகளும் பெறுகின்றன. இதன் மூலம் டெஸ்ட் விளையாடும் நாடுகளின் எண்ணிக்கை 10லிருந்து 12-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. வியாழனன்று ஐசிசி வாரியம் அதன் இன்றைய கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் கையெழுத்தை இட்டது. ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் அசோசியேட் அணிகள் என்ற தகுதியை உயர்த்த வேண்டும் என்று ஐசிசியிடம் விண்ணப்பித்திருந்தது. இந்தக் கோரிக்கை வியாழனன்று வாக்களிப்புக்கு விடப்பட்டது, அனைவரும் டெஸ்ட்…
-
- 0 replies
- 229 views
-
-
ஆமாம், அனுஷ்காவை காதலிக்கிறேன்: கோபத்தில் சிலிர்த்த கோலி ஆமாம், நடிகை அனுஷ்கா சர்மாவை காதலிக்கிறேன். ஆனால் இது எங்களுடைய தனிப்பட்ட விஷயம். இந்த விஷயத்தில் மற்றவர்கள் அதிகம் தலையிடாமல் பகுத்தறிவோடு நடந்துகொள்ள வேண்டும் என இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கோபத்தோடு பேசியுள்ளார். கோலியும், அனுஷ்கா சர்மாவும் காதலித்து வருவதாக கடந்த 2 ஆண்டுகளாக செய்திகள் வெளியாகி வந்தன. இவர்கள் இருவரும் இணைந்து பொது இடங்களுக்கு சென்ற படங்களும் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் நேற்று முன்தினம் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட கோலியிடம் அவருடைய காதல் பற்றி கேள்வியெழுப்பப்பட்டபோது கடும் கோபமடைந்த அவர், “ஆமாம் நாங்கள் இருவரும் காதலிக்கிறோம். ஆனால் எங்களின் தனிப்பட…
-
- 0 replies
- 372 views
-
-
ஆமிருக்கு ஏளனம்: அறிவிப்பாளருக்குக் கண்டனம் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3ஆவது இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியில், பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஆமிரை ஏளனம் செய்த மைதான அறிவிப்பாளருக்கு, நியூசிலாந்து கிரிக்கெட் சபை, உத்தியோகபூர்வக் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஸ்பொட் பிக்சிங்கில் ஈடுபட்டு, தனது தண்டனைக் காலத்தைப் பூர்த்தி செய்த பின்னர், நியூசிலாந்துத் தொடரிலேயே ஆமிர், முதன்முறையாகப் பங்குபற்றியிருந்தார். இதில், ஆமிர் பந்துவீசும்போது, பெட்டியில் பணம் வீழ்வது போன்றதான ஒலியை எழுப்பியிருந்தார். இதற்காக, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முகாமைத்துவத்திடம் முதலில் மன்னிப்புக் கோரியிருந்த நியூசிலாந்து கிரிக…
-
- 0 replies
- 413 views
-
-
ஆமிருக்கு நியூசிலாந்து விசா கிடைத்தது நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் , இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் ஆகியவற்றுக்கான பாகிஸ்தான் குழாமில் சேர்க்கப்பட்டுள்ள மொஹமட் ஆமிருக்கான நியூசிலாந்து விசா கிடைத்துள்ளது. அவருக்கான விசா கிடைக்குமா என்பது குறித்துச் சந்தேகங்கள் காணப்பட்டிருந்த நிலையிலேயே, தற்போது அவருக்கான விசா வழங்கப்பட்டுள்ளது. ஸ்பொட் பிக்சிங்கில் ஈடுபட்டு, குற்றவியல் குற்றத்துக்காக 3 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆமிர், அவரது புனர்வாழ்வு, தடைக்காலத்தைப் பூர்த்தி செய்த போதிலும், குற்றவாளிகளாகத் தீர்ப்பு வழங்கப்பட்டோருக்கு விசா வழங்கப்படுவதற்கு விசாக்களை நியூசிலாந்து வழங்குவதில்லை என்ற …
-
- 0 replies
- 492 views
-
-
ஆமை வேகத்தில் அரைசதம்: 108 பந்தில் அடித்து மோசமான சாதனையை பதிவு செய்தார் டோனி டோனி 108 பந்தில் அரைசதம் அடித்ததன் மூலம் அதிக பந்துகளை சந்தித்து அரைசதம் அடித்த 2-வது இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை பெற்றுள்ளார். ஆன்டிகுவா, இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே முடிந்த மூன்று போட்டிகளில் (மழையால் ஒரு ஆட்டம் ரத்து) இந்தியா இரண்டில் வெற்றி பெற்று 2-0 என முன்னிலை வகித்த நிலையில், நேற்று 4-வது போட்டியில் களமிறங்கியது. இதில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றிவிடலாம் என்ற …
-
- 2 replies
- 607 views
-
-
ஆம்புரோஸ் பவுன்சரை ஆன்டிகுவாவுக்கு அனுப்புவேன்: சச்சின் சுயசரிதையில் சுவாரசிய குறிப்புகள் . சச்சின் டெண்டுல்கரின் சுயசரிதை நூலான ‘பிளேயிங் இட் மை வே’ நவம்பர் 6-ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் அந்த நூலில் சச்சின் எழுதியுள்ள சில விவரங்கள் வெளியாகியுள்ளன. தனது கேப்டன்சி காலத்தில் அடைந்த தோல்விகளினால் கிரிக்கெட் ஆட்டத்தை விட்டே போய் விடலாம் என்று நினைத்ததாக சச்சின் தன் சுயசரிதையில் கூறியுள்ளார். "தோல்விகளை கடுமையாக வெறுப்பவன் நான், தொடர்ந்து மோசமாக அணியினர் விளையாடும்போது எனக்கு அதிக பொறுப்பிருப்பதாக உணர்ந்தேன். கவலைக்குரிய விஷயம் என்னவெனில், அணியை வெற்றிப்பாதைக்கு எப்படி அழைத்துச் செல்வது என்பது எனக்குப் புரியவில்லை. என்னால் முடிந்ததை நான் ஏற்கெனவே செய்திருந்தேன்…
-
- 26 replies
- 2.2k views
-
-
ஆயிரம் நாள்களுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் தோனி! - எப்படி இருந்தது அந்த அனுபவம்? #VikatanExclusive மே 10 2015 - சுண்டி விடப்பட்ட டாஸ் காயின் எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தின் வெடிப்புகள் விரிந்த பிட்ச்சில் சத்தமே இல்லாமல் விழுகிறது. வெற்றி தோனிக்கு! அதற்கே ஆர்ப்பரிக்கிறது, மஞ்சளை தங்கள் மதமாக ஏற்றுக்கொண்ட அந்த பெருங்கூட்டம்! பேட்டிங்கை தேர்ந்தெடுக்கிறார் தோனி. 'Live It Abhi' என்ற கவுன்ட் டவுனோடு தொடங்குகிறது அந்தப் போட்டி. 'இந்தப் பொழுதை கொண்டாடித் தீருங்கள்' என்ற அந்த வார்த்தைகளின் மதிப்பை அந்தப் பொழுதில் மஞ்சள் ஜெர்ஸியை நேசிக்கும் எந்த ரசிகனும் உணர்ந்திருக்கமாட்டான். ஏனெனில் அதுதான் கடைசியாக சென்னை சூப்பர் கிங்ஸ் சென்னையில் ஆடிய மேட்ச். இர…
-
- 0 replies
- 655 views
-
-
ஆயுதக் கடத்தல் குற்றச்சாட்டு: சிறைத் தண்டனை பெற்ற அல்பி மோர்கல் ஆயுதக் கடத்தல் குற்றச்சாட்டில் சிறைத் தண்டனை பெற்றதாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரருமான அல்பி மோர்கல் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் அல்பி மோர்கல் கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்காவில் வேட்டை ஆடுவதற்காகச் சென்றபோது ஆயுதக் கடத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி சிறைத் தண்டனை பெற்றதாக அண்மையில் பகிர்ந்திருக்கிறார். இதுகுறித்து அல்பி மோர்கல் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறும்போது, "நான் மொசாம்பிக்காவில் எனது பயணத்தை முடித்துவிட்டுத் திரும்பும்போது காரை சுத்தம் செய்யுமாற…
-
- 0 replies
- 412 views
-
-
ஆரம்ப ஏலம் ரூ.40 கோடி: ஐபிஎல் அணியை வாங்குகிறார் தாேனி? புதுடெல்லி: டிசம்பர் 8ம் தேதி புதியதாக ஏலம் விடப்பட உள்ள ஐபிஎல் அணிகளில் ஒன்றை வாங்க இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிரிக்கெட் சூதாட்ட புகார் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளை, ஐபிஎல் போட்டிகளில் இருந்து 2 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்து நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான மூவர் குழு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இந்த இரு அணிகளுக்கும் பதிலாக புதிய அணிகளை தேர்வு செய்ய ஐபிஎல் நிர்வாகம் ஆர்வம் காட்டி வருகிறது. புதிதாக சேர்க்கப்படும் 2 அணிகள் குறித்த விவரம் டிசம்பர் 8-ம் தேதி தெரிய வரும். ஏனெனில் அன்றைய தினம்தான் ப…
-
- 0 replies
- 304 views
-
-
ஆரம்பப் போட்டியிலேயே நியூஸிலாந்து அதிரடி ; இலங்கைக்கு இமாலய வெற்றியிலக்கு இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 371 ஓட்டங்களை குவித்தது. நியூஸிலாந்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது நியூஸிலாந்துடன் இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் ஒரு இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரை நியூஸிலாந்து அணி கைப்பற்றியுள்ள நிலையில், இவ் விரு அணிகளுக்கிடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று காலை மௌனன்குயினில் ஆரம்பானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடி நி…
-
- 0 replies
- 536 views
-
-
ஆரம்பமானது வடமாகாண விளையாட்டுப் போட்டி வட மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டு திணைக்களத்தின் ஏற்பாட்டில், வட மாகாண பாடசாலைகளின் வீர, வீராங்கனைகளுக்கிடையிலான தடகள மற்றும் மைதான நிகழ்வுகள் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (14) முதல் ஆரம்பமாகியது. இன்றை ஆரம்ப நிகழ்வு வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டு திணைக்களத்தின் செயலாளர் ஆர்.இரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக இந்திய துணைத்தூதர் ஆ.நடராஜன் கலந்துகொண்டார். இந்த விளையாட்டுப் போட்டி எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. ஐந்து நாட்களிலும் 258 மைதான மற்றும் தடகள போட்டிகள் நடத்தப்பட…
-
- 4 replies
- 1.7k views
-
-
ஆரம்பமும் முடிவும் மும்பையில் ! ஏப்ரல் 7 முதல் மே 27 வரை ஐ.பி.எல். கொண்டாட்டம் ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி முதல் மே மாதம் 27 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் ஆரம்ப போட்டியும் இறுதிப் போட்டியும் இடம்பெறவுள்ளமை விசேட அம்சமாகும். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையால் நடத்தப்படும் ஐ.பி.எல். இருபதுக்கு - 20 கிரிக்கெட் தொடர் 10 ஆண்டுகளை சிறப்பாக கடந்துள்ளது. 11 ஆவது சீசன் இந்த வருடத்தில் ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரை நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் பல்வேறு கோரிக்கைகள் வைத்திருந்தன. அதில் வீ…
-
- 1 reply
- 239 views
-
-
வடக்கின் போர் என வர்ணிக்கப்படும் பாடசாலைகளுக்கிடையிலான துடுப்பாட்ட போட்டிகள் ஆரம்பமாக உள்ள நிலையில் கல்லுரி மாணவர்கள் யாழ்.நகர வீதிகளில் இசை வாத்தியங்களோடு நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=542892713707566447#sthash.V9LwSHlP.dpuf
-
- 69 replies
- 4.6k views
-
-
ஆரவாரமற்ற டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழா : இன்றுமுதல் பதக்க வேட்டை ; நம்மவர்களும் களத்தில் டோக்கியோ ஒலிம்பிக் அரங்கிலிருந்து எஸ்.ஜே.பிரசாத் கொரோனா தொற்று வேகமெடுத்த 2020 மார்ச் மாதத்திற்கு பிறகு ஒட்டுமொத்த உலகமும் ஒன்றுகூடியுள்ள மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டியின் 32 ஆவது போட்டி நேற்று ஜப்பானின் டோக்கியோ நகரில் ஆரம்பமானது. ஜப்பான் இதற்கு முன்னம் 1964 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியிருந்தது. உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் வீர வீராங்கனைகள் பங்கேற்கும் ஒரே விளையாட்டுப் போட்டியாக கருதப்படுவது ஒலிம்பிக்தான். இத்தனைக்கும் சொந்த நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து நாடில்லாமல் அகதிகளாக இருக்கும் வீர வீராங்க…
-
- 0 replies
- 417 views
-
-
ஷார்ஜாவில் நடப்பதாக இருந்த தமிழ் தெலுங்கு நடிகர்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது ஆரோக்கியா கோப்பை என பெயரிடப்பட்ட அந்த போட்டி 30 ஓவர்கள் கொண்டதாக நடைபெற்றது 21ஓட்டங்களால் தமிழ் நடிகர் அணி கோப்பையை வென்றது தமிழ் நடிகர்கள் அணிக்கு நடிகர் அப்பாஸ் கப்டனாகவும் தெலுங்கு நடிகர் அணிக்கு நடிகர் தருண் கப்டனாகவும் இருந்தார்கள். நாணயச் சுழற்சியில் தமிழ் நடிகர்கள் அணி வென்று துடுப்பாட்டத்தை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக நடிகர்கள் ஷாமும் ரமணாவும் களம் இறங்கினார்கள். 2 ஓவருக்கு 8 ஓட்டங்கள் என்ற நிலையில் ஷாம் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஆடிய ரமணா 108 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விக்ராந்த் 56 ஓட்டங்களுடனும் ஜீவா 25 ஓட்டங்க…
-
- 3 replies
- 2.3k views
-
-
ஆரோனின் பந்துவீச்சில் சந்தேகம் February 26, 2016 தென் ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆரோன் பாங்கிசோவின் பந்துவீச்சில் சந்தேகம் இருப்பதாக புகார் கிளம்பியுள்ளது. தென் ஆப்பிரிக்கா அணியை சேர்ந்தவர் ஆரோன் பாங்கிசோ. இடக்கை சுழற்பந்து வீச்சாளரான இவர் 20 ஓவர் உலகக் கிண்ணத்திற்கான தென் ஆப்பிரிக்க அணியிலும் இடம் பெற்றுள்ளார். இந்நிலையில் உள்ளூர் ஆட்டம் ஒன்றில் கலந்து விளையாடிய பாங்கிசோவின் பந்துவீச்சில் சந்தேகம் எழுந்தது. அவரது பந்துவீச்சு சர்வதேச கிரிக்கெட் சங்கத்தின் விதிமுறைகளுக்கு எதிராக உள்ளதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு சோதனை நடந்த ஐ.சி.சி. உத்தரவுட்டுள்ளது. மார்ச் 8ம் திகதிக்குள் அவர் பந்துவீச்சை முறையை நிரூபிக்…
-
- 0 replies
- 409 views
-
-
ஆர்சனல், யுனைடட் அணிகளுக்கு வெற்றி: வெளியேற்றப்பட்டார் நெய்மார் By Mohamed Shibly - இங்கிலாந்து ப்ரீமியர் லீக் மற்றும் பிரான்ஸ் லீக் 1 தொடர்களின் முக்கிய சில போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு, மன்செஸ்டர் யுனைடட் எதிர் வட்போர்ட் ப்ரூனோ பெர்னாண்டோ தனது புதிய கழகத்திற்காக முதல் கோலை பெற்ற நிலையில் வட்போர்ட் அணிக்கு எதிரான போட்டியில் மன்செஸ்டர் யுனைடட் 3-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலகு வெற்றியீட்டியது. இதன்மூலம் முதல் நான்கு இடங்களுக்கு சவால் விடுக்கும் வகையில் மன்செஸ்டர் …
-
- 0 replies
- 354 views
-
-
ஆர்ஜென்டீனாவை நடத்துவதை மறுக்கிறார் மெஸ்ஸி ஆர்ஜென்டீனா தேசிய கால்பந்தாட்ட அணியில் பிரதான முடிவுகளை தான் எடுப்பதாகக் கூறுவது தன்னை ஆத்திரமூட்டுவதாக, ஆர்ஜென்டீனா தேசிய கால்பந்தா அணியினதும் ஸ்பானியக் கழகமான பார்சிலோனாவினது முன்கள வீரரான லியனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார். கடந்த மாதம் இடம்பெற்ற கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தின் இறுதிச் சுற்று தகுதிகாண் போட்டியில் மூன்று கோல்களைப் பெற்று, உலக் கிண்ணத்துக்கு ஆர்ஜென்டீனா தகுதிபெறுவதை உறுதிசெய்த மெஸ்ஸி, பயிற்சியாளர்களைத் தெரிவுசெய்வதாகவும் கடந்த காலங்களில், குழாமில் யார் இடம்பெறுவது, இடம்பெறக்கூடாது என்பதில் தாக்கம் செலுத்துவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், கருத்துத் தெரிவி…
-
- 1 reply
- 295 views
-
-
ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா கவுரவ விருதுக்கு மைக்கேல் கிளார்க் தேர்வு ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு துறையிலும் சிறந்த சாதனை படைக்கும் நபர்களுக்கு அந்த நாட்டு அரசு பல்வேறு விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் 2015-ம் ஆண்டில் உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனான மைக்கேல் கிளார்க், ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு அளித்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் ‘ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா’ என்ற கவுரவ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 39 வயதான மைக்கேல் கிளார்க் 115 டெஸ்ட், 245 ஒருநாள் மற்றும் 34 இருபது ஓவர் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி இருக்கிறார். இந்த விருதை ஏற்கனவே முன்னாள் கேப்டன்கள் ரிக்கி பாண்டிங், மார்க் டெய்லர், ஸ…
-
- 0 replies
- 421 views
-
-
ஆறாமிடத்துக்கு முன்னேறிய றபாடா சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் ஆறாமிடத்துக்கு தென்னாபிரிக்காவின் வேகப்பந்துவீச்சாளர் ககிஸோ றபாடா முன்னேறியுள்ளார். இந்தியாவுக்கெதிரான முதலாவது டெஸ்டில் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய றபாடா, ஏழாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஆறாமிடத்தை அடைந்துள்ளார். இதேவேளை, இப்போட்டியில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இந்தியாவின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா, 12ஆம் இடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறி ஒன்பதாமிடத்தை அடைந்துள்ளார். முதல் 10 பந்துவீச்சாளர்களி…
-
- 0 replies
- 284 views
-
-
ஆறாவது தடவையாக ஹமில்டன் வென்றார் கனேடியன் கிரான்ட் பிறிக்ஸில், ஆரம்பம் முதல் இறுதி வரை முழுமையாக ஆதிக்கம் செலுத்திய, மெர்டிசிடிஸ் அணியின் ஐக்கிய இராச்சிய ஓட்டுநரான லூயிஸ் ஹமில்டன், கனேடியன் கிரான்ட் பிறிக்ஸில், தனது ஆறாவது வெற்றியைப் பெற்றுக் கொண்டார். தனது ஆதர்ச நாயகனான அயூட்டன் செனாவின், 65 பந்தயங்களை முதலிடத்தில் ஆரம்பித்ததை, கடந்த சனிக்கிழமை (03) சமப்படுத்தியிருந்த ஹமில்டனுக்கு, இது 10ஆவது பந்தயம் என்ற நிலையிலேயே, அவற்றில் ஆறில் வெற்றிபெற்றுள்ளார். பந்தயத்தை ஐந்தாவதாக ஆரம்பித்த றெட் புல் அணியின் நெதர்லாந்து ஓட்டுநரான மக்ஸ் வெர்ஸ்டப்பன், அபாரமாக காரைச் செலுத்தி, பந்தயத்தை இரண்டாவதாக ஆரம்பித்…
-
- 0 replies
- 699 views
-
-
நியுசிலாந்து வீரர் லியோ காட்டர் உள்ளுர் போட்டியில் ஆறு பந்துகளில் ஆறு சிக்சர்கள் அடித்து சாதனைபுரிந்துள்ளார். நியுசிலாந்தின் சுப்பர்ஸ்மாஸ் போட்டியில் காட்டர் ஆறு பந்துகளில் ஆறு சிக்சர்களை அடித்து இந்த சாதனையை புரிந்த முதல் நியுசிலாந்து வீரர் என்ற சாதனையை ஏற்படுத்தியுள்ளார். நொதேர்ன் டிஸ்ரிக்ட் அணிக்கு எதிரான இருபதிற்கு இருபது போட்டியில் கன்டபெரி கிங்ஸ் அணிக்காக அவர் இந்த சாதனையை புரிந்துள்ளார். இதன் மூலம் ரி20 போட்டிகளில் ஆறு பந்துகளில் ஆறு சிக்சர்களை பெற்ற நான்காவது வீரராக இவர் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இடது கை சுழற்பந்து வீச்சாளர் அன்டன் டேவ்சிச்சின் ஓவரிலேயே கார்ட்டர் 36 ஓட்டங்களை பெற்றுள்ளார். https://www.virakesari.lk/article/72572
-
- 0 replies
- 359 views
-
-
ஆறு பந்துகளுக்கு ஆறு சிக்ஸர்களை விளாசிய பாகிஸ்தான் வீரர் (காணொளி இணைப்பு) ஹொங்கொங்கில் இடம்பெற்றுவரும் டி20 பிலிட்ஸ் போட்டி தொடரில் பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரரான மிஷ்பா ஹுல் ஹக் 6 பந்துகளுக்கு ஆறு சிக்ஸர்களை விளாசி அசத்தியுள்ளார ஹொங்கொங் டி20 பிலிட்ஸ் தொடரில் ஹொங் கொங் ஜகூவார்ஸ் மற்றும் ஹொங்கொங் இஸ்லேன்ட் யுனைட்டன் அணிகளுக்கிடையிலான போட்டியிலேயே மிஷ்பா ஹுல் ஹக் ஆறு சிக்ஸர்களை விளாசியுள்ளார். இவர் 18 ஆவது பந்து ஓவரின் 5 மற்றும் 6 பந்துகளை சிக்ஸருக்கு விளாசியதுடன், 19 ஆவது பந்து ஓவரின் 2,3,4 மற்றும் 5 ஆவது பந்துகளில் ஆறு ஓட்டத்தை விளாசி அசத்தியுள்ளார். மிஷ்பா ஹுல் ஹக் ஆட்டமிழக்காமல் 82 ஓட்டங்களை பெற்று…
-
- 0 replies
- 292 views
-
-
ஆறு மாதங்களில் இலங்கை சிறந்த அணியாக உருவெடுக்கும் – ஹத்துருசிங்க எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் இலங்கை அணி சிறந்த நிலைக்கு வந்துவிடும் என தெரிவித்துள்ள இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க, அடுத்த வருடம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள் வரை பொறுமையுடன் இருக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் தொடரின் பிறகு அங்கு சென்றுள்ள இலங்கை ஊடகவியலாளர்களுக்கு சந்திக்க ஹத்துருசிங்க பிரத்தியேக நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார். அதில் இலங்கை அணி பெற்றுக்கொண்ட வரலாற்று வெற்றி குறித்து அவர் கருத்து வெளியிடுகையில், ”மேற்கிந்திய தீவுகளுக்கு நாங்கள் வந்தபோ…
-
- 0 replies
- 416 views
-
-
ஆறு விக்கெட் எடுத்தாலும் டோணியிடம் திட்டு வாங்கிய சஹல்.. ஏன் தெரியுமா? பெங்களூர்: எப்போதுமே கூலாக காணப்படும் முன்னாள் கேப்டன் டோணி, நேற்று பவுலர் சஹலிடம் தனது கோபத்தை வெளிக்காட்டி ஆச்சரியமூட்டினார். பெங்களூரில் நேற்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா 202 ரன்களை குவித்தது. 203 ரன்கள் வெற்றி இலக்கு என்ற போதிலும், பேட்டிங்கின் சொர்க்கபுரியான பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் அது எட்டக்கூடிய ஒன்று என்பதால் இந்திய வீரர்கள் ஃபீல்டிங்கிலும் அலர்ட்டாகவே இருந்தனர். பவர் பிளே ஓவர் என்றபோதிலும், ஆட்டத்தின் 2வது ஓவரை வீசும் பொறுப்பை இளம் சுழற்பந்து வீச்சாளர் சஹலுக்கு கொடுத்தார் கேப்டன் விராட் கோஹ்லி. ச…
-
- 1 reply
- 439 views
-