விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
பேர்லினில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அகில உலக மெய்வல்லுனர் போட்டியில் , ஜமெய்க்காவை சேர்ந்த யுசைன் போல்ட் உலகின் அதி வேக மனிதன் என்னும் பட்டத்தை தனதாக்கி கொண்டார் . 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் , 41 கால் தடங்களை பதித்து ....... 9.58 வினாடிகளில் முதலாவது இடத்தை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. .
-
- 1 reply
- 1.2k views
-
-
பொய்யான தகவலை வழங்கியதை ஒப்புக்கொண்டார் நோவக் ஜோகோவிச்! அவுஸ்ரேலிய நுழைவு அனுமதிக்கான விண்ணப்பப்படிவத்தில், போலி தகவலை உள்ளடக்கியதாக உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் ஒப்புக்கொண்டுள்ளார். அவுஸ்ரேலியாவிற்குள் கடந்த 6ஆம் திகதி நுழைவதற்கு 14 நாட்களுக்கு முன்னர், தாம் எங்கும் பயணிக்கவில்லை என ஜொக்கோவிச், தமது விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட்டிருந்தார். ஆயினும் அவர் இரண்டு வாரக்காலப்பகுதியில் சேர்பியாவிலும் ஸ்பெயினிலும் பயணங்களை மேற்கொண்டிருந்தமை தொடர்பாக சமுக வலைத்தளங்களில் ஆதாரங்கள் வெளியாகின. இந்நிலையில், குறித்த விண்ணப்பப் படிவத்தில், பயண வரலாறு தொடர்பான பிரிவை நிரப்பிய போது தமது முகவர் தவறிழைத்து விட்டதாக நோவக் ஜோகோவிச் தெரிவித்துள்ளார…
-
- 3 replies
- 515 views
-
-
”நேற்று திருமணம், இன்று போட்டி” ; தோற்றது கவலையே அகில தனஞ்சய கண்டி பல்லேகலயில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி வென்றிருந்தாலும் ஆட்ட நாயகன் விருதை வென்றது இலங்கை அணியின் மந்திர சுழற்பந்துவீச்சாளர் அகில தனஞ்சயதான். காரணம் முக்கியமான கட்டத்தில் சீரான இடைவெளியில் ரோஹித் ஷர்மாவில் ஆரம்பித்த விக்கெட், விராட் கோஹ்லி, ராகுல், பாண்டியா, ஜாதேவ், அக்ஸர் பட்டேல் வரை நீண்டது. இலங்கை - இந்திய அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டி கண்டி பல்லேகலயில் நேற்று நடைபெற்றது. இந்தப்போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட…
-
- 2 replies
- 1k views
-
-
துபாயில் சர்வதேச மாரத்தான் போட்டி: எத்தியோப்பிய வீரர் முதலிடம் துபாயில் ஸ்டாண்டர் சார்ட்ர்ட் வங்கியின் ஆதரவில் 21ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற சர்வதேச மாரத்தான் போட்டியில் எத்தியோப்பிய வீர்ர் ஹெய்லி ஜெப்ர்செலஸ்ஸி மூன்றாவது வருடமாக தொடர்ந்து முதலிடம் பெற்றுள்ளார். முப்பத்து ஆறு வயதான இவர் 42.2. கிலோ மீட்டர் தூரத்தை (26 மைல்) இரண்டு மணி, ஆறு நிமிடம், ஒன்பது விநாடிகளில் கடந்து முதல் பரிசை பெற்றார். எத்தியோப்பியாவின் சாலா டிசாஸே இரண்டாவது இடத்தைப் பெற்றார்.உலகெங்கிலும் பொருளாதாரப் பின்னடைவின் காரணமாக பல்வேறு சவால்கள் காத்திருப்பினும், துபாய் மாரத்தானில் அதன் தாக்கம் எதிரொலிக்காது பரிசுத் தொகையானது அதிகமாகவே வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 2011 ஆம் ஆண…
-
- 0 replies
- 468 views
-
-
40 சிக்ஸர்கள், 307 ரன்கள் விளாசிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்: உள்ளூர் போட்டியில் சாதனை ஜோஷ் டன்ஸ்டன் | படம்: ட்விட்டர் பகிர்விலிருந்து ஆஸ்திரேலியாவில் அகஸ்டா துறைமுக கிரிக்கெட் சங்கம் நடத்திய உள்ளூர் போட்டி ஒன்றில் ஜோஷ் டன்ஸ்டன் என்ற கிரிக்கெட் வீரர் 307 ரன்களைக் அதிரடியாக குவித்துள்ளார். இதில் அவர் மட்டுமே 40 சிக்ஸர்கள் விளாசியதுதான் ஆட்டத்தின் முக்கிய அம்சம். வெஸ்ட் அகஸ்டா அணிக்கும், செண்ட்ரல் ஸ்டெர்லிங் அணிக்கும் இடையே சனிக்கிழமை அன்று ஒருநாள் போட்டி நடைபெற்றது. அணிக்கு 35 ஓவர்கள் வீதம் நடந்த இந்தப் போட்டியில் வெஸ்ட் அகஸ்டா அணி முதலில் ஆடியது. அணியின் முதல் விக்க…
-
- 0 replies
- 1.3k views
-
-
வென்றது பரிஸ் ஸா ஜெர்மைன் பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லீக் 1 தொடரில், ட்ரோய் அணியின் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற போட்டியில் ட்ரோய் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் பரிஸ் ஸா ஜெர்மைன் வென்றது. பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாக, அஞ்சல் டி மரியா, கிறிஸ்டோபர் எனக்குங்கு ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். இப்போட்டியில் காயம் காரணமாக நேமர், கிலியான் மப்பே ஆகியோர் பங்கேற்றிருக்கவில்லை. இதேவேளை, நேமருக்கு வெற்றிகரமாக நேற்று சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், நேமர் குணமடைய இரண்டரை தொடக்கம் மூன்று மாதங்கள் வரையில் செல்லும் என பிரேஸில் தேசிய கால்பந்தாட்ட அணியின் வைத்தியர் றொட்றிகோ லஸ்மர் தெரிவித்துள்ளார…
-
- 0 replies
- 312 views
-
-
மலிங்கவிற்கு இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை கடும் எச்சரிக்கை இலங்கை அணியில் மீண்டும் விளையாட விரும்பினால் உடனடியாக உள்ளுர் போட்டிகளிற்கு திரும்புங்கள் என இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை வேகப்பந்து வீச்சாளர் லசித்மலிங்கவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. லசித் மலிங்க உள்ளுர் போட்டிகளில் விளையாடாவிட்டால் தெரிவுக்குழுவினர் அவர் குறித்து தெளிவான முடிவையெடுக்கவேண்டும் என இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். மலிங்கவை உள்ளுர் போட்டிகக்கா தெரிவு செய்துள்ளோம் என்பதை அவரிற்கு அறிவித்துள்ளோம் அவர் உள்ளுர் போட்டிகளில் விளையாடாவிட்டால் தெரிவுக்குழுவினர் தெளிவான முடிவை எடுக்கவேண்டியிர…
-
- 0 replies
- 501 views
-
-
தென் ஆப்ரிக்கா அசத்தல் வெற்றி ஜனவரி 17, 2015. டர்பன்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், ஸ்டைன், பிலாண்டர் உள்ளிட்ட பவுலர்கள் அசத்த, தென் ஆப்ரிக்க அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் ‘டக்வொர்த் லீவிஸ்’ முறையில் வென்றது. தென் ஆப்ரிக்கா சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி டர்பனில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் டிவிலியர்ஸ், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். டிவிலியர்ஸ் அபாரம்: முதலில் பேட் செய்த தென் ஆப்ரிக்க அணிக்கு ரோசவ் (0), டுபிளசி (0) ஏமாற்றினர். பின் இணைந்த ஹசிம் ஆம்லா (66), கேப்டன் டிவிலியர்ஸ் (81) ஜோடி அபாரமாக ஆடியது. அடுத்து வந்த டேவிட் மில்லர் (70) நம்பிக்கை தந்தார். டுமினி (12)…
-
- 5 replies
- 543 views
-
-
நடத்தையில் உதாரணமாகத் திகழ்பவர் தோனி: ஆகாஷ் சோப்ரா புகழாரம் இன்றைய கிரிக்கெட் களத்தில் வீரர்களிடையே மோதல்கள் ஏற்பட்டு வரும் சூழலில் ஒழுக்கம் மற்றும் நடத்தையில் உதாரணமாகத் திகழ்பவர் தோனி என்று இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா புகழாரம் சூட்டியுள்ளார். நியூஸ்24 கிரிக்கெட் சந்திப்பில் சோப்ரா இவ்வாறு கூறியுள்ளார். “களத்தில் தோனி அமைதியாக இருக்கிறார். ஆட்டம் மட்டுமே பேச வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். கிரிக்கெட் ஆடுகளத்தில் அவரது நடத்தை பெரிய பாராட்டுக்குரியது. இன்றைய கிரிக்கெட் ஆடுகளம் வீரர்களிடையே வாக்குவாதங்களும், சண்டை சச்சரவுகளும் நிரம்பியுள்ளது. இதில் ஒரு வார்த்தையைக் கூட பிரயோகிக்காது களத்தில் செயல்படுகிறார் தோனி. ஒழுக்கமான கிரிக்கெட் வீரர் எ…
-
- 0 replies
- 659 views
-
-
இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று October 17, 2018 1 Min Read இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் மூன்றாவது போட்டி கண்டி பல்லேகலயில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இத்தொடரின் முதலாவது போட்டி மழையால் கைவிடப்பட்டதோடு, இரண்டாவது போட்டியில் டக் வேர்த் லூயிஸ் முறையில் இங்கிலாந்து வெற்றியீட்டிருந்தது. இந்தநிலையில் தொடரைக் கைப்பற்ற வேண்டுமாயின் இன்றைய போட்டி உட்பட மீதமுள்ள அனைத்துப் போட்டிகளிலும் இலங்கை வெற்றிபெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது http://globaltamilnews.net/2018/99583/
-
- 0 replies
- 394 views
-
-
நான் வெகு நாட்களாக எதிர்பார்த்திருந்த ஒரு போட்டி இன்று நடைபெற்றது. இந்த எதிர்பார்ப்பிற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதில் குறிப்பிடத்தக்க காரணம் கடந்த இரு மாதங்களாக இலங்கையணியை துவம்சம் செய்து வரும் நியுசிலாந்தணியின் ஆரம்பத் துடுப்பாட்டக் காரரும், அணியின் தளபதியுமான பிரண்டன் மக்கலத்தின் ஆக்ரோஷமான துடுப்பாட்டத்தை யாராவது தடுத்து நிறுத்த மாட்டார்களா என்கிற அங்கலாய்ப்பே முதலாவது. இரண்டாவது காரணம், இந்த முறை உலகக் கிண்ணத்தை எப்படியாவது தூக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் மக்கலத்தின் அணிக்குச் சவாலாக யாராவது வரமாட்டார்களா என்கிற எதிர்பார்ப்பு. மூன்றாவது காரணம், எனது இரண்டாவது அபிமான அணியான அவுஸ்த்திரேலியா (எனது முதலாவது அணி எதுவென்பதை நான் விளையாட்டுத் திடலில் முன்…
-
- 22 replies
- 907 views
-
-
பதிலடி கொடுத்து தொடரை சம நிலையில் முடித்த இந்தியா அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவதும், இறுதியுமான இருபதுக்கு 20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது. சிட்டினியில் ஆரம்பான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களின் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 164 ஓட்டங்களை பெற்றது. 165 என்ற வெற்றியிலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 19.4 ஓவரில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து, அவுஸ்திரேலிய அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்தது. இந்திய அணி சார்பாக அணித் தலைவர் விராட் கோலி 41 பந்துகளை எதிர்கொண்டு 4 நான்கு ஓட்டம், 2 ஆறு ஒட்டம் அடங்களா…
-
- 0 replies
- 582 views
-
-
யாரைச் சொல்கிறேன் என்று புரிகிறதா?? அட நம்ம டோனி கும்பலைத்தான். "Flat Track Bullies"என்று அடிக்கடி ஒரு வார்த்தை சர்வதேச கிரிக்கெட் சமூகத்தில் பாவிக்கப்பட்டு வருகிறது. அது யாரை என்று பார்த்தால் இந்தியாவின் கிரிக்கெட் அணி பற்றித்தான் என்று அறிந்துகொண்டேன். சில காலங்களுக்கு முன்னர் அவுஸ்த்திரேலியா இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தது, அந்தப் போட்டிகளில் இந்தியா மிகவும் சிறப்பாக விளையாடி அவுஸ்த்திரேலியாவைத் தோற்கடித்திருந்தது. குறிப்பாக திராவிட், லக்ஷ்மண் போன்ற வீரர்கள் சாதனை இணைப்பாட்டம் ஒன்றின்மூலம் முண்ணனியிலிருந்த அவுஸ்த்திரேலிய அணியை தோற்கடித்திருந்தனர். இந்தப் போட்டிகள் பற்றி பலவிடங்களிலும் பின்னர் பெரிதாகப் பேசப்பட்டது. அதேவேளை இந்தப் போட்ட…
-
- 7 replies
- 1k views
-
-
-
- 9 replies
- 1.6k views
-
-
ஐ.எஸ்.எல்., கால்பந்து அட்டவணை வெளியீடு புதுடில்லி: இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரின் முதல் போட்டியில், ‘நடப்பு சாம்பியன்’ கோல்கட்டா அணி, சென்னை அணியை எதிர்கொள்கிறது. பிரிமியர் கிரிக்கெட் தொடர் போல கடந்த ஆண்டு முதன்முறையாக இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடர் வெற்றிகரமாக நடந்தது. இதில் சென்னை, மும்பை, கோல்கட்டா, கொச்சி உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றன. இதன் பைனலில், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் சவுரவ் கங்குலியின் கோல்கட்டா அணி, இந்திய ஜாம்பவான் சச்சினின் கொச்சி அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. நடப்பு ஆண்டுக்கான 2வது ஐ.எஸ்.எல்., தொடர் வரும் அக்., 3ல் சென்னையில் துவங்குகிறது. இத்தொடரு…
-
- 52 replies
- 4.2k views
-
-
சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி நேற்றையதினம் நடைபெற்றது. போட்டிகளின் இறுதி போட்டியாக பழைய மாணவர்களின் ஓட்டப் போட்டி நடைபெற்றது. இதில் 76 வயதுடைய மூதாட்டி ஒருவரும், 55 வயதுக்கு மேற்பட்ட பெண்மணிகள் இருவரும் என, மொத்தமாக ஐவர் பங்கேற்று தமது திறமைகளை வெளிப்படுத்தினர். பாடசாலையில் கல்வி கற்ற நினைவுகளை மீட்டிப் பார்ப்பதற்கும், அதில் பங்கெடுக்கவும் வழி சமைக்கும் ஒரு முக்கிய நிகழ்வாக இல்ல மெய்வல்லுனர் போட்டியின் பழைய மாணவர்களுக்கான நிகழ்வு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/295984
-
- 0 replies
- 441 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,VIJAYAKANTH VIYASKANTH படக்குறிப்பு,விஜயகாந்த் வியாஸ்காந்த் 10 மே 2024, 07:38 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஐ.சி.சி இருபதுக்கு இருபது உலகக் கோப்பை போட்டிகளுக்கான இலங்கை குழாம் இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அணியில் மேலதிக வீரர்களில் (மாற்று வீரர்கள் பட்டியல்) ஒருவராக தமிழர் ஒருவர் இடம்பிடித்துள்ளார். ஐ.பி.எல் போட்டிகளில் சன்ரைசஸ் ஐதராபாத் அணிக்காக நேற்றைய தினம் முதல் தடவையாக விளையாடிய விஜயகாந்த் வியாஸ்காந்த் இலங்கை குழாமில் இடம்பிடித்துள்ளார். யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட வீரர்கள் இலங்கை கிரிக்கெட் அணியை இதற்கு முன்னர் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்த போதிலும், யாழ்ப்பாணத்தில் பிறந்து…
-
- 0 replies
- 444 views
- 1 follower
-
-
இந்தியா, தென் ஆபிரிக்க தொடர் முன்னோட்டம் இந்தியா, தென் ஆபிரிக்கா அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் ஆரம்பிக்கவுள்ளது. பலமான இரண்டு அணிகள் மோதும் தொடர் என்பதினால் இந்த தொடர் அதிக முக்கியத்துவம் பெறுகின்றது. 3 டுவென்டி டுவென்டி போட்டிகள், 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், 4 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடர் இரு அணிகளுக்குமிடையில் நடைபெறவுள்ளது. சகலவித கிரிக்கெட் போட்டிகளிலும் ஒரு நல்ல பலப் பரீட்சைக்கான தொடராக இது அமையவுள்ளது. இந்தியா அணி நீண்ட நாட்களுக்கு பின்னர் தனது சொந்த நாட்டில் தொடர் ஒன்றில் விளையாடவுள்ளது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களின் பின்னர் சொந்த நாட்டில் இந்த தொடர் ஆரம்பிக்கவுள்ளது. சொந்த நாட்டில் புலிகளாகவும், வெளிநாடுகளில் எலிகலாகவும் திகழும் இந்திய அணிக்கு க…
-
- 0 replies
- 415 views
-
-
2016 ஐரோப்பிய கிண்ண தகுதிகாண் சுற்று நிறைவு 100 வீத வெற்றியுடன் இறுதிச் சுற்றில் இங்கிலாந்து 2015-10-15 10:54:18 பிரான்ஸில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐரோப்பிய கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் விளையாடுவதற்கு இப்போதைக்கு 19 நாடுகள் தகுதிபெற்றுள்ளன. போட்டிகளை நடத்தும் வரவேற்பு நாடென்ற வகையில் பிரான்ஸ் நேரடித் தகுதியைக் கொண்டுள்ளது. செவ்வாய்க்கிழமை நிறைவுபெற்ற தகுதிகாண் போட்டிகளின் அடிப்படையில் குழு ஏயிலிருந்து ஐஸ்லாந்து, செக் குடியரசு, துருக்கி, குழு பியிலிருந்து பெல்ஜியம், வேல்ஸ், குழு சியிலிருந்து ஸ்பெய்ன், ஸ்லோவாக்கியா, குழு டியிலிருந்து ஜேர்மனி, போலந்து, குழு ஈ யிலிருந்து இங்கிலாந்து, சுவிட்ஸர்லாந்து, குழு எவ்விலிருந்து வட அயர்லாந்து, ருமேனியா, …
-
- 0 replies
- 238 views
-
-
மலிங்கவை முந்த ஆசை: பிரசாத் இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக மாறியிருக்கும் தம்மிக்க பிரசாத், டெஸ்ட் போட்டிகளில் இலங்கை சார்பாக இரண்டாவது அதிகூடிய விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளராக மாறுவதற்கு விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். இலங்கை சார்பாக அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர்களில் சமிந்த வாஸ், 355 விக்கெட்டுகளுடன் முதலாவது இடத்தையும் லசித் மலிங்க 101, டில்ஹார பெர்ணான்டோ 100, பிரமோதய விக்கிரமசிங்க 85, றுமேஷ் ரத்நாயக்க 73 விக்கெட்டுகளுடன் ஏனையோர் அடுத்த இடங்களிலும் காணப்படுகின்றனர். ஆறாவது இடத்தில், 70 விக்கெட்டுகளுடன் தம்மிக்க பிரசாத் காணப்படுகின்றார். தம்மிக்க பிரசாத்தின் ஒட்டுமொத்த சராசரி 37.51ஆகக் காணப்படுகின்ற போதிலும், கட…
-
- 0 replies
- 321 views
-
-
பீபா ஊழல்: 2006 உலகக் கிண்ண ஏலத்தில் தவறு ஏற்பு 2006ஆம் ஆண்டு ஜேர்மனியில் இடம்பெற்ற கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தின் ஏலத்தில் தவறுகள் காணப்பட்டதை ஏற்றுக் கொள்வதாக, அந்த உலகக் கிண்ணத்தின் ஏற்பாட்டுக் குழுத் தலைவரும் ஜேர்மனிக்காக உலகக் கிண்ணத்தைப் பெற்றுக் கொடுத்த தலைவருமான பிரான்ஸ் பெக்கென்பவர் தெரிவித்துள்ளார். எனினும், வாக்குகளை விலைகொடுத்து வாங்கியமை குறித்த குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார். சஞ்சிகையொன்று வெளிப்படுத்திய குற்றச்சாட்டின்படி, 6.7 மில்லியன் யூரோக்களைச் செலுத்தி, ஜேர்மனுக்கான வாக்குகள் விலைகொடுத்து வாங்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும், பிரான்ஸின் கருத்தின்படி, நிதியியல் மானியமொன்றுக்காக, பீபாவுக்குப் பணம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்…
-
- 2 replies
- 254 views
-
-
அவுஸ்திரேலிய ஆடுகளங்களை விமர்சிக்கிறார் ஸ்மித் அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவன் ஸ்மித், அவுஸ்திரேலிய ஆடுகளங்கள் குறித்துத் தன்னுடைய விமர்சனத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவுஸ்திரேலியாவின் இப்பருவகாலத்தில், டெஸ்ட் போட்டிகளும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளும், தட்டையான ஆடுகளங்களைக் கொண்டனவாக அமைந்திருந்தன. குறிப்பாக, அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான தொடரின் 5 போட்டிகளில், மொத்தமாக 3,159 ஓட்டங்கள் குவிக்கப்பட்டன. 5 போட்டிகளில் 3,000க்கும் மேற்பட்ட குவிக்கப்பட்டமையை 'மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று" எனக் குறிப்பிட்ட அவர், 'என்னைப் பொறுத்தவரை, எங்களது ஆடுகளங்களின் பண்பே, ஏமாற்றம் தருவதாக அமைந்தது. பிறிஸ்பேண், பேர்த் ஆடுளங…
-
- 0 replies
- 348 views
-
-
பாகிஸ்தானின் உலக இருபது 20 கிரிக்கெட் போட்டிகள்,இலங்கை அல்லது ஐ.அ.இராச்சியத்தில் நடைபெறும் வாய்ப்பு? தமது அணி பங்குபற்றும் சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ சி. சி.) உலக இருபது கிரிக்கெட் போட்டிகளை நடுநிலையான மைதானங்களில் நடத்துவதற்கான பிரேரணையை பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் ஷஹாரியார் கான் முன்வைத்துள்ளார். தமது அணி இந்தியாவுக்கு பயணம் செய்வதற்கு பாகிஸ் தான் அரசாங்கம் அனுமதிக்காத பட்சத்தில் தமது நாட்டு அணி சம்பந்தப்பட்ட போட்டிகளை நடுநிலையான மைதானங்களில் நடத்துவதற்கான பிரேரணை ஒன்றை சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் சமர்ப்பித்துள்ளதாக ஷஹாரியார் கூறினார். ‘‘இந்தி…
-
- 0 replies
- 318 views
-
-
23 APR, 2025 | 09:08 PM 'உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் என்பது கவர்ந்திழுக்கக்கூடிய விரும்பத்தகாத போலித்தனத்தை மூடி மறைக்கும் ஒன்று' என கிரிக்கெட்டின் விவிலியம் என வருணிக்கப்படும் விஸ்டன் சஞ்சிகை ஆசிரியர் லோரன்ஸ் பூத் விமர்சித்துள்ளார். அதற்கான முறைமை மாற்றப்படவேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார். வருடாந்தம் வெளியிடப்படும் விஸ்டன் சஞ்சிகை நூலின் 162ஆவது பதிப்பில், தனது பார்வையை சர்வதேச கிரிக்கெட் பேரவை மீது பூத் திருப்பியுளளார். ஐசிசி சம்பயின்ஷிப் கிண்ண கிரிக்கெட் போட்டியை முன்னின்று நடத்தும் வரவேற்பு நாடாக சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் பாகிஸ்தானுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், ஐசிசியினால் அனுமதிக்கப்பட் பாகிஸ்தானுக்கு செல்ல இந்தியா மறுத்தது. அந்த சந்தர்ப்பத்தில…
-
- 0 replies
- 211 views
- 1 follower
-
-
ஊக்கமருந்து விவகாரம்: போல்ட்டின் ஒலிம்பிக் பதக்கம் பறிபோகிறது? சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளின்போது, உலகின் வேகமான மனிதரான உசைன் போல்ட் வென்றெடுத்த மூன்று தங்கங்களில், ஒன்று பறிபோகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 4*100மீற்றர் அஞ்சலோட்டத்தில், போல்டின் சக அணி வீரர்களில் ஒருவரான நெஸ்டா காட்டரின் ஏ மாதிரியில், தடை செய்யப்பட்ட மெதயில்ஹெக்ஸானமியன் பயன்படுத்தியதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியமையையடுத்தே பதக்கம் பறிபோகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 2008ஆம் ஆண்டு ஒலிம்பிக்கின் போது பெறப்பட்ட 454 மாதிரிகள் மீளச்சோதனை செய்யப்பட்டதன் பின்பே மேற்படித் தகவல் வெளியாகியுள்ளது. …
-
- 0 replies
- 386 views
-