விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7843 topics in this forum
-
இலங்கை கிரிக்கெட் அணிக்கு 1982-ம் ஆண்டு டெஸ்ட் அந்தஸ்து கிடைத்தது. 90-களில் வெற்றிப் பாதையில் பயணித்த இலங்கை கிரிக்கெட் அணி 1996-ம் ஆண்டு உலகக் கோப்பையை முதன்முறையாக வென்றது. அந்த சமயத்தில் கிரிக்கெட் அணியை இலங்கையின் மேற்கு, தெற்குப் பிரதேசங்களைச் சேர்ந்த வீரர்களே பிரதிநிதித்துவப்படுத்தினர். இந்த நிலையில், சுமார் 40 வருடங்களுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வீரர் ஒருவர் 19 வயதிற்குட்பட்ட இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. கிரிக்கெட்டில் விஜயகாந்த் 17 வயதான விஜயகாந்த் வியஸ்காந்த் என்ற இளைஞரே தேசிய அணியில் இடம்பிடித்துள்ளார். கிரிக்கெட் வாரியம் தற்போதுதான் அறிவிப்பாக வெளியிட்டிர…
-
- 0 replies
- 452 views
-
-
தன்மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு பிரபல கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மறுப்பு தெரிவித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த 34 வயதான கத்ரின் மயோர்கா (Kathryn Mayorga ) என்ற பெண் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் கடந்த 2009-ம் ஆண்டு ரொனால்டோ தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அது குறித்த தகவல்களை வெளியிடாமல் இருப்பதற்கு பணம் தருவதாக வாக்குறுதி அளித்ததாகவும் தெரிவித்திருந்தார். அத்துடன் ரொனால்டோவுடன் எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார் எனினும் இந்த முறைப்பாட்டினை மறுத்த ரொனால்டோ , கத்ரின் மயோர்கா தனது பெயரை பயன்படுத்தி புகழ்தேட முயற்சி மேற்கொள்கிறார் எனத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக முதன் முறையாக பதிலளித்துள்ள ரொனால்டோ, இது வெறும் …
-
- 0 replies
- 431 views
-
-
ஆசிய கிண்ணப்போட்டிகளில் மலிங்க இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க இம்மாதம் இடம்பெறவுள்ள ஆசிய கிண்ணப்போட்டிகளில் விளையாடவுள்ள இலங்கை அணியில் இடம்பெறுவார் என தெரிவுக்குழுவின் தலைவர் கிரஹாம் லபரோய் தெரிவித்துள்ளார். மலிங்க ஒரு கட்டத்தில் 50 ஓவர் போட்டிகளில் விளையாட தயாராகயிருக்கவில்லை,இதன் காரணமாக நாங்கள் வேறு சில வேகப்பந்து வீச்சாளர்களில் கவனம் செலுத்தினோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். உலககிண்ணப்போட்டிகளில் விளையாடக்கூடிய வேகப்பந்து வீச்சாளர்களில் நாங்கள் அதிக கவனம் செலுத்துகின்றோம் இதன் காரணமாக நாங்கள் மலிங்கவிற்கு ஓய்வளித்தோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது இடம்பெறுகின்ற உள்ளுர் போட்டிகளில் அவரது உடல்தகுதி நல்…
-
- 111 replies
- 11.6k views
-
-
இலங்கை உலக கிண்ணத்தை வெல்வது கடினம் ; ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார் அர்ஜுன 2019 ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை நாம் வெல்வது கடினமே. காரணம் கிரிக்கெட் அந்தளவு தூரம் இன்று கீழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு புக்கி கரர்களளே பிரதான காரணம் என அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், கடந்த அரசாங்கத்தில் விளையாட்டுத்துறை அமைச்சரிடம் சில குறைபாடுகள் காணப்பட்டாலும் அவர் சட்டத்தை சரியான முறையில் நடைமுறைபடுத்தி புக்கிகரர்களையும் சூதாட்டக்காரர்களையும் கிரிக்கெட் நிர்வாகத்தில் சேர்க்கவில்லை. ஆனால் தயாசிறி விளையாட்டுத்துறை அமைச்சரானதும் என்ன நடந்தது? அவர் ஒரு சட்டத்தரணி எனினும் கிரிக்…
-
- 5 replies
- 1k views
-
-
யூரோ 2024!...ஜேர்மனியில் ஐரோப்பிய கால்பந்து சம்மேளனத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான யூரோகிண்ணச்சுற்றுப்போட்டிகளை நடத்தும் நாடாக ஜேர்மனி தெரிவாகியுள்ளது. இந்த சுற்றுப்போட்டியை நடத்தும் வாய்ப்புக்காக துருக்கியும் ஜேர்மனியும்போட்டிபோட்ட நிலையில் இன்று சுவிற்சலாந்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் ஜேர்மனி வெற்றிபெற்றது. 2006 இல் ஜேர்மனி உலக கிண்ண கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பைப்பெற்றபின்னர்அதற்கு இந்த வாய்ப்புக்கிட்டியுள்ளது. ஆயினும் துருக்கிக்கு இன்னமும் அனைத்துல கால்பந்துசுற்றுப்போட்டிகள் எதனையும் நடத்தும் வாய்ப்புக்கள்கிட்டவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. https://www.ibctamil.com/europe/80/106766
-
- 0 replies
- 621 views
-
-
மெத்தியூஸ் இல்லாத ஒருநாள் அணியை அறிவித்தது இலங்கை கிரிக்கெட் இங்கிலாந்துக்கு எதிராக இடம்பெறவுள்ள ஒருநாள், இருபதுக்கு 20, டெஸ்ட் தொடர்களுக்கான இலங்கை அணியினை கிரிக்கெட் தெரிவுக்குழு இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ள நிலையில், அஞ்சலோ மெத்தியூஸ் ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணி, இலங்கை அணியுடன் ஐந்து ஒருநாள் போட்டிகள், ஒரு இருபதுக்கு 20 போட்டி மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்குமிடையேயான இப் போட்டித் தொடரானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி நவம்பர் மாதம் 27 ஆம் திகதி…
-
- 1 reply
- 702 views
-
-
‘தல’ தோனி கேப்டன்சியில் முதலும் கடைசியும்: ஒரு தற்செயல் சுவாரசியம் முதல் உலகக்கோப்பை வெற்றியைக் கொண்டாடும் தோனி. | கெட்டி இமேஜஸ். ஆசியக் கோப்பை 2018-ன் சூப்பர் 4 போட்டியில் ஆப்கான் அணிக்கு எதிராக இந்திய அணியின் கேப்டனாக மீண்டும் மகேந்திர சிங் ‘தல’ தோனி களமிறங்கியது, இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் நீண்ட நாளைய ஏக்கத்தைப் பூர்த்தி செய்வதாக அமைந்ததோடு அந்தப் போட்டி ‘டை’ ஆனதும் பரபரப்பானது. 696 நாட்களுக்குப் பிறகு தோனி மீண்டும் கேப்டன் ஆகி ஒரு போட்டியை இளம் வீரர்களைக் கொண்டு வழிநடத்தினார், அனைத்திலும் வெற்றி கண்ட கேப்டன் தோனி தன் 200வது கேப்டன்சி போட்டியில் டை கண்டது கொஞ்சம் துரதிர்ஷ்டமே. ஆனால் தோற்காதது அதிர்ஷ்டமே. …
-
- 0 replies
- 555 views
-
-
இளையோர் ஆசியக் கிண்ணத்திற்கான இலங்கை அணியில் இரண்டு யாழ் வீரர்கள் பங்களாதேஷில் செப்டம்பர் மாதம் 29 ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள 19 வயதுக்கு கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணிகளுக்கான இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரில், பங்குபெறவிருக்கும் 15 வீரர்கள் அடங்கிய 19 வயதின் கீழான இலங்கை கிரிக்கெட் குழாம் இன்று (18) அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டிருக்கும் இலங்கை வீரர்கள் குழாமில் யாழ்ப்பாண மத்திய கல்லூரியைச் சேர்ந்த செல்வராசா மதுஷன் இடம்பிடித்துள்ளார். இதேவேளை, ஆசியக் கிண்ணத் தொடருக்கான மேலதிக இலங்கை வீரர்கள் பட்டியலில் யாழ்ப்பாண மத்திய கல்லூரியைச் சேர்ந்த மற்றுமொரு வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்த்திற…
-
- 1 reply
- 1k views
-
-
மெத்தியூஸை விலகுமாறு வேண்டுகோள் : சந்திமாலை தலைவராக்க தீர்மானம் இலங்கை அணியின் தலைவராக தினேஸ் சந்திமாலை நியமிக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை கிரிகெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள ஒரு நாள் போட்டித் தொடரில் இலங்கையை தலைமை தாங்குவதற்காகவே சந்திமல் நியமிக்கப்படவுள்ளார். இந்நிலையில் அணித்தலைவராக செயற்பட்டுவரும் அஞ்சலோ மெத்தியூஸை ஒருநாள் மற்றும் இருபதுக்கு - 20 போட்டிகளின் தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/41042
-
- 5 replies
- 1.3k views
-
-
ஜோர்ன் டாபர்ட் மெய்வல்லுனரில் வட மாகாண வீரர்ளுக்கு ஐந்து பதக்கங்கள் கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சங்கம் ஆகியன இணைந்து 88 ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்துள்ள சேர் ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டிகள் இன்று (19) கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது. சிலோன் பிஸ்கெட் நிறுவனத்தின் ரிட்ஸ்பறி சொக்கலட்ஸ் தொடர்ச்சியாக 8 ஆவது தடவையாகவும் அனுசரணை வழங்குகின்ற இம்முறை போட்டிகளில் நாடளாவிய ரீதியிலிருந்து சுமார் 1500 மாணவர்கள் கலந்துகொண்டுள்ளனர். 16, 18 மற்றும் 20 ஆகிய வயதுப் பிரிவுகளுக்காக நடைபெறுகின்ற இம்முறை ஜோன் டாபர்ட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரின் முதல் நாளில் 15 வயதுக்கு உட்பட்ட பெ…
-
- 5 replies
- 1.8k views
-
-
ரொனால்டோவின் விசித்திர அசிஸ்ட், எம்பாப்பேவின் ஆதிக்கம்! ஐரோப்பிய கால்பந்து அப்டேட் கிறிஸ்டியானா ரொனால்டோ வெளியேறியிருந்தாலும், ரியல் மாட்ரிட் வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ரொனால்டோ இருந்தவரை அவரது நிழலில் மறைந்து கிடந்த கேரத் பேல், இப்போது வேற லெவல் ஆட்டம் காட்டுகிறார். ஐரோப்பிய கால்பந்தின் டாப் 5 தொடர்கள் அனைத்தும் இப்போது பரபரப்பாகிவிட்டன. பிரீமியர் லீக், லா லிகா தொடர்கள் பழையபடி சூடுபிடிக்க, புண்டஸ்லிகா தொடரும் இந்த வாரம் தொடங்கிவிட்டது. பார்சிலோனா, யுவன்டஸ், பி.எஸ்.ஜி, பேயர்ன் மூனிச் என 4 சாம்பியன்களும் இந்த வாரம் வெற்றி பெற, பிரீமியர் லீக் சாம்பியன் மான்செஸ்டர் சிட்டி அதிர்ச்சி டிரா கண்டது. பிரீமி…
-
- 9 replies
- 2.2k views
-
-
விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி மற்றும் பளுதூக்குதல் வீராங்கணை மீராபாய் சானு ஆகிய இருவருக்கும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று வழங்கினார். விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு இந்திய மத்திய அரசு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது. இதன்படி இந்த ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது கிரிக்கெட் வீரர் விராட் கோலி, பளுதூக்குதல் வீராங்கணை மீராபாய் சானு ஆகிய இருவருக்கும் அறிவிக்கக்கப்பட்டது. இதே போல, தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் ஸ்மிருதி மந்…
-
- 0 replies
- 505 views
-
-
2018 ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை தட்டிச்சென்றார் லூகா மோட்ரிச் பிபாவின் சிறந்த வீரருக்கான விருதை தட்டிச்செல்ல ரொனால்டோ, முகமது சலா, லூகா மோட்ரிச் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில் 2018 ஆம் ஆண்டின் சிறந்த வீரராக லூகா மோட்ரிச் தேர்வு செய்யப்பட்டுள்ளார். #FIFA #LukaModric லண்டன் : 2018 ஆம் ஆண்டின் சிறந்த வீரருக்கான பிபா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், பிபா சிறந்த வீரர் விருதுக்கு, குரோசியா அணியின் கேப்டன் லூகா மோட்ரிச் தேர்வ…
-
- 1 reply
- 625 views
-
-
என்னை ஒசாமா என்று அழைத்த ஆஸி. வீரர்: மொயீன் அலி வெளிப்படுத்தும் ‘இனப்பாகுபாடு’ சம்பவங்கள்! இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலி தன்னுடைய சுயசரிதையை எழுதி வருகிறார். அதன் சில பாகங்கள் தி டைம்ஸ் பத்திரிகையில் வெளிவருகின்றன. அதில் மொயீன் அலி, ஆஸ்திரேலிய வீரர்களின் நடத்தை குறித்து கூறியதாவது: 2015 ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் என்னிடம் மோசமாக நடந்துகொண்டார்கள். ஒரு சம்பவம் என்னை பாதித்தது. மைதானத்தில் ஒரு ஆஸ்திரேலிய வீரர் என்னைப் பார்த்து ஒசாமா (பின்லேடன்) என அழைத்தார். அவர் என்னிடம் அப்படிக் கூறியதை என்னால் நம்பமுடியவில்லை. எனக்கு மிகவும் கோபம் வந்தது. மைதானத்தில் ஒருபோத…
-
- 4 replies
- 1.5k views
-
-
ராகுல் டிராவிட்டை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடம் பிடித்த மகேந்திர சிங் தோனி - முதல் இடத்தில் சச்சின் மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளையும் சேர்த்து அதிக போட்டிகளில் விளையாடிய இரண்டாவது இந்தியர் எனும் பெருமையை பெற்றுள்ளார் முன்னாள் கேப்டன் தோனி. #MSDhoni #RahulDravid துபாய் : 14வது ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில், நேற்று நடந்த போட்டியில் …
-
- 0 replies
- 354 views
-
-
ஸ்டீவ் ஸ்மித் அதிரடி வருகை: 85 ரன்கள் விளாசினார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ஆஸி. அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தனது கிளப் அணி சார்பில் பங்கேற்ற ஆட்டத்தில் 85 ரன்களை விளாசி தனது திறமையை பறை சாற்றியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் போது, பந்தை சேதப்படுத்த முயன்றதாக எழுந்த புகாரின் பேரில் கேப்டன் ஸ்மித், டேவிட் வார்னர், வீரர் பேங்க்கிராப்ட் ஆகியோரை கிரிக்கெட் ஆஸ்திரேலியா சஸ்பெண்ட் செய்தது. ஸ்மித், வார்னருக்கு தலா ஓராண்டு தடை விதிக்கப்பட்டது.சர்வதேச கிரிக்கெட் போட்டி தவிர உள்ளூர் ஆட்டங்களில் பங்கேற்று ஆடலாம் என சிஏ அறிவித்தது. கனடா கிரிக்கெட் லீ…
-
- 0 replies
- 460 views
-
-
2019 ஆண்டின் உலகக் கிண்ணம் இலங்கையில் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடருக்கான வெற்றிக் கிண்ணம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு வெற்றிக் கிண்ணம் உலகம் முழுக்க எடுத்துச்செல்லப்படுகின்றது. அதன் ஒரு கட்டமாக உலகக் கிண்ணம் மேற்கிந்தியத் தீவுகளிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது. இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள உலகக் கிண்ணத்தை வரவேற்கும் நிகழ்வு நேற்று சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது. இதன்போது விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா, இலங்கைக்கு உலகக் கிண்ணத்தை வென்றுகொடுத்த முன்னாள் அண…
-
- 1 reply
- 721 views
-
-
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு: புவனேஷ்வர் குமார் நீக்கம் இங்கிலாந்துக்கு எதிராக ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்க உள்ள டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணி வீரர்கள் முதல் 3 டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும்தான் விளையாடுவார்கள். மீதமுள்ள 2 போட்டிகளுக்குப் பின்னர் அணி வீரர்கள் அறிவிக்கப்படுவார்கள். இங்கிலாந்து பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆனால், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்திடம் இழந்தது. இந்நிலையில் ஆகஸ்ட் 1-ம் தேதி டெஸ்ட் போட்டித் தொடர் தொடங்குகிறது. நாட்டிங்ஹாமில் ம…
-
- 195 replies
- 22.5k views
-
-
இது சிக்ஸர்களின் காலம் இந்தியாவில் கிரிக்கெட் என்பது ஒரு மதமாகவே பாவிக்கப்படுகிறது. ஒவ்வொரு இந்தியச் சிறுவனும் வெகு இயல்பாக கிரிக்கெட் விளையாட துவங்கிவிடுகிறான். ஊருக்கு நான்கைந்து கிரிக்கெட் அணியை நம்மவர்கள் நடந்திக்கொண்டிருக்கிறார்கள். கூட்டு விளையாட்டான கிரிக்கெட் பல மனிதர்களையும் உணர்வுபூர்வமாக பிணைக்கிறது. எவ்வித சுய அடையாளமுமற்று கிரிக்கெட் என்ற சங்கிலியால் இந்தியர்கள் இணைகிறார்கள். கிரிக்கெட் இந்திய மக்களிடம் உணர்வுகளுடன் நேரடியாக தொடர்புடையது. கிரிக்கெட் வீரர்கள் நட்சத்திரங்களாக ஒளிர்கிறார்கள். முன்பெல்லாம் ஐம்பது ஓவருக்கு 250 ரன்கள்…
-
- 19 replies
- 4.2k views
-
-
மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் களமிறங்கத் தயாராகும் டில்ஷான் இலங்கை அணி தற்போது சந்தித்துள்ள பின்னடைவை பார்க்கும் போது மீண்டும் சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவதற்கு ஆவலுடன் இருப்பதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர ஆரம்பத் துடுப்பாட்ட வீரருமான திலகரத்ன டில்ஷான் தெரிவித்துள்ளார். அத்துடன், தன்னை நாட்டுக்கும், அணிக்கும் தேவை என்று நினைத்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மீண்டும் அழைப்பு விடுத்தால் இலங்கை அணியுடன் மீண்டும் இணைந்து கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஐந்து தடவைகள் ஆசிய கிண்ணத்தை சுவீகரித்த இலங்கை அணிக்கு, இவ்வருட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் முதல் சுற்றுடன் வெளியேறவேண்டிய துர்…
-
- 0 replies
- 402 views
-
-
10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 8 விக்கெட் வீழ்த்தி ஜார்கண்ட் வீரர் ஷபாஸ் நதீம் உலக சாதனை அ-அ+ விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டியில் ஜார்கண்ட் வீரர் ஷாபாஸ் நதீம் 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை கைப்பற்றி புதிய உலக சாதனை நிகழ்த்தி உள்ளார். #VijayHazareTrophy #ShahbazNadeem சென்னை : விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை முருகப்பா மைதானத்தில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் ராஜஸ்தான்- ஜார்கண்ட் அணிகள் மோதின. …
-
- 0 replies
- 438 views
-
-
இந்த ஆண்டுக்கான தேசிய மெய்வல்லுனர் குழாத்தில் 10 தமிழ் பேசும் வீரர்கள் இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் 106 பேர் கொண்ட தேசிய மெய்வல்லுனர் குழாம் நேற்று (18) அறவிக்கப்பட்டது. இதில் வடக்கு, கிழக்கு, மலையகம், தென்னிலங்கை உள்ளிட்ட நாட்டின் அனைத்து பாகங்களையும் சேர்ந்த தமிழ் பேசும் வீரர்களுக்கு தேசிய மெய்வல்லுனர் குழாத்தில் வாய்ப்பு வழங்க இலங்கை மெய்வல்லுனர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, அடுத்த வருடம் நேபாளத்தில் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு விழா மற்றும் கட்டாரில் நடைபெறவுள்ள ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர்களை இலக்காகக் கொண்டு Super Pool, Elite Pool, National Pool என மூன்று தேசிய மெய்வல்லுனர் …
-
- 0 replies
- 516 views
-
-
மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர்... சாம்பியன்ஸ் லீக் கோப்பை யாருக்கு?! #UCL 2017 ல் ரியல் மாட்ரிட்டிடம் நூலிழையில் சாம்பியன் பட்டத்தைத் தவறவிட்ட யுவென்டஸ் இந்த முறை ரொனால்டோவையே தனது பிரத்யேக ஆயுதமாக மாற்றி கோப்பைக்குக் குறிவைத்திருக்கிறது. இந்தியாவில் இனி நள்ளிரவு, அதிகாலை நேரங்களிலும் கூட தொலைக்காட்சிகள் அலறப் போகின்றன; இந்திய இளசுகள் எல்லாம், `ஃபுட்பால் ஹேங் ஓவரில்’ இரவு முழுவதும் விழித்துக்கிடக்கப் போகின்றனர். 2018-19 சீஸனுக்கான `சாம்பியன்ஸ்லீக் ஃபுட்பால் இஸ் பேக்’. ஆம், ஐரோப்பாவின் டாப் கிளப்கள் கலந்துகொள்ளும் மாபெரும் கால்பந்துத் திருவிழாவான, சாம்பியன்ஸ்லீக் கால்பந்து தொடர் நாளை தொடங்கவுள்ளது. இந்தமுறை கோப்பையைக் கைப்…
-
- 2 replies
- 803 views
-
-
இலங்கை அணி ரசிகர்களுக்கு மஹேலவின் வேண்டுகோள் ! இலங்கை அணியை சிக்கலில் இருந்து ரசிகர்களாகிய நாம் முன்னோக்கிக்கொண்டு செல்வதற்கு தேவையான தீர்வுகளை ஆராய வேண்டுமென இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர வீரருமான மஹேல ஜெயவர்தன டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இடம்பெற்றுவரும் ஆசியக் கிண்ணத் தொடர்ரில் இலங்கை அணி பங்களாதேஷ் அணியிடமும் ஆப்கானிஸ்தான் அணியிடமும் படு மோசமாக தோல்வியடைந்தது. இந்நிலையில் இலங்கை அணி மீதும் வீரர்கள் மீதும் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் மிக மோசமாக விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திரவீரருமான மஹேல ஜெயவர்தன தனது டுவிட்டர் பக்கத்தில் மேற்க…
-
- 0 replies
- 665 views
-
-
வடமாகாண விளையாட்டு செய்திகள் 2018 யாழ்ப்பாண மத்திய கல்லூரி இன்னிங்ஸால் வெற்றி யாழ்ப்பாண மத்திய கல்லூரி இன்னிங்ஸால் வெற்றி இலங்கை பாடசாலைகள் துடுப்பாட்டச்சங்கம் நடத்தும் 19 வயதுப்பிரிவு அணிகளுக்கு இடையில் அண்மையில் இடம்பெற்ற ஆட்டத்தில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி இன்னிங்ஸால் வெற்றிபெற்றது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் மைதானத்தில் இந்த ஆட்டம் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியை எதிர்த்து அக்கு…
-
- 30 replies
- 4.7k views
-