Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. இலங்கை – பங்களாதேஷ் இளையோர் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம் – யாழ் வீரருக்கும் வாய்ப்பு! இலங்கை இளையோர் மற்றும் பங்களாதேஷ் இளையோர் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் இன்று(செவ்வாய்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. இரு அணிகளும் 02 டெஸ்ட் மற்றும் 05 சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் மோதவுள்ளன. இந்தநிலையில் குறித்த தொடருக்கான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று கொழும்பு என்.சி.சி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இந்த தொடருக்கான இலங்கை குழாமில் யாழ் மத்தியக்கல்லூரியின் விஜயகாந்த் வியாஷ்காந் பெயரிடப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே இந்திய இளையோர் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாடி தமது திறமையை நிரூபித்திருந்தார். இதனிடையே கொழும்பு சாஹிரா கல்லூரியின் துடுப்பாட…

  2. இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூரியா மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஊழலுக்கு எதிரான நடத்தைவிதிகளை மீறிவிட்டதாக குற்றம் சுமத்தியுள்ளது. 49 வயது முன்னாள் ஆல் ரவுண்டரான ஜெயசூரியா இதுகுறித்த விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டார். ஆதாரங்களை மறைப்பதாகவும் அல்லது அழிப்பதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கை அணியின் தேர்வு குழு உறுப்பினராக இருந்த ஜெயசூரியா புகழ்பெற்ற கிரிக்கெட் வீரராக பாராட்டப்பட்டவர். இந்த கு…

  3. உலக கிண்ணப்போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை – மலிங்க 2019ஆம் ஆண்டுக்கான உலக கிண்ணப்போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை என இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கெதிராக நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் ஐந்து விக்கெட்களை வீழ்த்தியதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “2019 உலககிண்ணப்போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தால் நான் விளையாடுவேன். அதுவே எனது இறுதி உலக கிண்ணமாகயிருக்கும். எனின…

  4. மேற்கிந்திய தீவுகள் அணிகெதிரான டெஸ்ட் : இந்தியா 308 ஓட்டங்கள் குவிப்பு! இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 4 விக்கெட்களை இழந்து 308 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது. இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 95 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 295 ஓட்டங்களை சேர்த்திருந்தது. ரோஸ்டன் சேஸ் 98, பிஷூ 2 களத்தில் இருந்தனர். உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ரோஸ்டன் சேஸ் சதம் அடித்தார். உமேஷ் யா…

  5. இரண்டாவது போட்டியில் முதலில் களமிறங்குகிறது இங்கிலாந்து Share இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடுமாறு இங்கிலாந்தை பணித்தது. அதன்படி இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி இலங்கை அணியுடன் 5 ஒருநாள் போட்டி, ஒரு இருபதுக்கு 20 போட்டி, 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் கடந்த 10 ஆம் திகதி தம்புள்ளை, ரங்கிரி சரிவதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமான போட்டியில் இங்கிலாந்து அணி, 15 ஓவரில் இரண்டு விக்கெட்களை இழந்து 92 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை மழை குற…

  6. மே.இ.தீவை மோசமான நிலையிலிருந்து மீட்டார் சேஸ் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுக்களை இழந்து 295 ஓட்டங்களை குவித்துள்ளது. இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவு அணி இந்தியாவுடன் இரண்டு டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக ராஜ்கோட்டில் நடைபெற்று முடிந்த போட்டியில் இந்திய அணி மேற்கிந்திய அணியை மண்ணை கெளவ வைத்து, இன்னிங்ஸ் மற்றும் 272 ஓட்டத்தினால் அபாரமாக வெற்றியீட்டியது. இந் நிலையில் இன்று இவ்விரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று காலை 9.30 மணிக்கு ஹைதராபாதிலுள்ள ராஜுவ் காந்தி சர்வதேச கிர…

  7. பணம் முதலிடம் பெற்றமையே இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு காரணம் October 12, 2018 இலங்கை கிரிக்கெட் விளையாட்டு தற்போது அடைந்துள்ள வீழ்ச்சிக்கு காரணம் பணம் முதலிடம் பெற்றமையாலேயே என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சரும் முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணித் தலைவருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். நேற்றையதினம் கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியில் இடம்பெற்ற கண்காட்சி வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாம் பாடசாலை கிரிக்கெட் அணி மற்றும் தேசிய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் போது எமக்கு ஒரு கௌரவம் இருந்தது. குறிப்பாக தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் போது பெரிய அளவிலான கௌரவம் எமக்கு இருந்தது. நாங்கள் தான்…

  8. பாகிஸ்தானுக்கு ஏமாற்றம் : முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவு! பாகிஸ்தான் மற்றும் அவுஸ்ரேலிய அணிகள் மோதிய முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்துள்ளது. கடந்த 7 ஆம் திகதி டுபாயில் ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அந்தவகையில் முதல் இன்னிங்ஸில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 10 விக்கெட்களை இழந்து 482 ஓட்டங்களை பெற்றது. இதில், மொஹமட் ஹபீஸ் 126 ஓட்டங்களையும், ஹரிஸ் சோஹைல், 110 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பின்னர் பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸில் விளையாடிய அவுஸ்திரேலிய அணி, 202 ஓட்டங்களுக்குள் சுருண்டது. அணி சார்பில் உஷ்மான் கவாயா 85, ஆரோன் பின்ச் 62…

  9. மழையால் பாதிப்பு- முதலாவது ஒரு நாள் போட்டி கைவிடப்பட்டது இலங்கை இங்கிலாந்து அணிகளிற்கு இடையில் இன்று தம்புள்ளையில் இடம்பெற்ற முதலாவது ஒரு நாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி இங்கிலாந்தை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது. கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக முதலில் பந்து வீசுபவர்களிற்கு வாய்ப்புகள் அதிகம் என கருதியே பந்துவீச தீர்மானித்தாக இலங்கை அணியின் தலைவர் தினேஸ் சந்திமல் தெரிவித்தார். எனினும் இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் எவ்வித சிரமமும் இன்றி இலங்கை வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டனர் இங்கிலாந்து அணி 49 ஓட்டங்களை ப…

  10. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: இந்திய வீரர்கள் முதலிடம் – இலங்கை வீரர்கள்? சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி தலைவர் விராட் கோஹ்லி, வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளனர். அதேபோல, தென்னாபிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளரான றபாடா 3 இடங்கள் முன்னேறி 6 ஆவது இடத்தையும், தென்னாபிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் 3 இடங்கள் ஏற்றம் கண்டு 7ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர். தென்னாபிரிக்கா – சிம்பாப்வே கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் முடிவின் அடிப்படையில் அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது. இதன்படி, …

  11. பங்களாதேசில் நடைபெற்ற மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஸ் அணி பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது. நேற்று நடைபெற்ற ஒரே ஒருநாள் போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்த நிலையில்; 34.5 ஓவரில் 94 ஓட்டங்களை பெற்ற நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இதையடுத்து, 95 என்ற இலக்குடன் களமிறங்கிய இ பங்களாதேஸ் அணி 29 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 95 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.. கதிஜா துல் குப்ரா ஆட்ட நாயகி விருதினை பெற்றார். http://globaltamilnews.com/

  12. ஆடுகளம்: டெஸ்ட் போட்டி வடிவத்தைப் பாதுகாப்பது எப்படி? ஆர். அபிலாஷ் இந்த கேள்வியைக் கேட்டுப் புலம்புவதே முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கும், விமர்சகர்களுக்கும் வழக்கமாகிவிட்டது. இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் டெஸ்ட் போட்டிகளுக்குப் பார்வையாளர்கள் இன்றும் குவிகிறார்கள். ஆனால், மற்ற நாடுகளில் ஈயடிக்கிறது. ஆனால் இந்த மூன்று நாடுகளிலும்கூட டெஸ்ட் ஆட்டம் நிலைக்குமா என்பது ஐயமே. டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான வரவேற்பு டெஸ்டுக்கு இருப்பதில்லை. காரணங்கள் இவை: டெஸ்ட் ஆட்டம் நம் காலத்துக்கு ஒவ்வாதது. வேகம், பரபரப்பு குறைவு. “இக்குறையை” சரி செய்ய இயலாது, ஆமையை குதிரை ஆக்க இயலாது என்றாலும் இது எனது தீர்வு: போனஸ் புள்ளிகள் …

  13. 364 என்ற வலுவான ஓட்டத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது Share மேற்கிந்தயத் தீவுகளுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் தொடரின் முதல் நாள் ஆட்ட நேர முடிவின்போது இந்திய அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 364 ஓட்டங்களை பெற்று வலுவான நிலையில் உள்ளது. இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவு அணி இந்தியாவுடன் இரண்டு டெஸ்ட், ஐந்து ஒருநாள், மூன்று இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக ராஜ்கோட்டில் ஆரம்பமாகியுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித் தலைவர் விராட் கோலி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். அத…

  14. இலங்கை கிரிக்கெட்டில் இடம்பெற்ற மோசடி குறித்து ஐசிசி விசாரணை October 4, 2018 இலங்கையில் கிரிக்கெட்டில் பாரதூர மோசடி இடம்பெற்றதாக கூறப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை தற்போது சர்வதேச கிரிக்கெட் சபையின் மோசடிக்கெதிரான பிரிவு இலங்கையில் நடத்தி வருகின்றது. இதன்போது ஜனாதிபதி, பிரதமர், விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோரின் வேண்டுகோளின் அடிப்படையில் அவர்களுக்கு விரிவான விளக்கம் வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபையின் மோசடிக்கெதிரான பிரிவின் பொது முகாமையாளர் அலெக்ஸ் மார்ஷல் தெரிவித்துள்ளார். குறித்த விசாரணைகள் சில காலமாக நடைபெறுவதாகத் தெரிவித்துள்ள அவர் இம்மாதம் ஆரம்பமாகவுள்ள இலங்கை, இங்கிலாந்து தொடருக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்ற போதிலும் எதிர்வரும் …

  15. இலங்கை கிரிக்கெட் அணிக்கு 1982-ம் ஆண்டு டெஸ்ட் அந்தஸ்து கிடைத்தது. 90-களில் வெற்றிப் பாதையில் பயணித்த இலங்கை கிரிக்கெட் அணி 1996-ம் ஆண்டு உலகக் கோப்பையை முதன்முறையாக வென்றது. அந்த சமயத்தில் கிரிக்கெட் அணியை இலங்கையின் மேற்கு, தெற்குப் பிரதேசங்களைச் சேர்ந்த வீரர்களே பிரதிநிதித்துவப்படுத்தினர். இந்த நிலையில், சுமார் 40 வருடங்களுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வீரர் ஒருவர் 19 வயதிற்குட்பட்ட இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. கிரிக்கெட்டில் விஜயகாந்த் 17 வயதான விஜயகாந்த் வியஸ்காந்த் என்ற இளைஞரே தேசிய அணியில் இடம்பிடித்துள்ளார். கிரிக்கெட் வாரியம் தற்போதுதான் அறிவிப்பாக வெளியிட்டிர…

  16. தன்மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு பிரபல கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மறுப்பு தெரிவித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த 34 வயதான கத்ரின் மயோர்கா (Kathryn Mayorga ) என்ற பெண் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் கடந்த 2009-ம் ஆண்டு ரொனால்டோ தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அது குறித்த தகவல்களை வெளியிடாமல் இருப்பதற்கு பணம் தருவதாக வாக்குறுதி அளித்ததாகவும் தெரிவித்திருந்தார். அத்துடன் ரொனால்டோவுடன் எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார் எனினும் இந்த முறைப்பாட்டினை மறுத்த ரொனால்டோ , கத்ரின் மயோர்கா தனது பெயரை பயன்படுத்தி புகழ்தேட முயற்சி மேற்கொள்கிறார் எனத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக முதன் முறையாக பதிலளித்துள்ள ரொனால்டோ, இது வெறும் …

  17. இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் 5 சர்வதேச ஒருநாள் போட்டிகள் , ஒரு இருபதுக்கு 20 போட்டி மற்றும் 03 டெஸ்ட் போட்டிகள் இடம்பெறவுள்ளன. இந்தப் போட்டிகள் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி நவம்பர் 27 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இந்தநிலையில் போட்டிகளில் பங்கேற்கவுள்ள இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி இன்று அதிகாலை கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2018/97898/

  18. யூரோ 2024!...ஜேர்மனியில் ஐரோப்பிய கால்பந்து சம்மேளனத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான யூரோகிண்ணச்சுற்றுப்போட்டிகளை நடத்தும் நாடாக ஜேர்மனி தெரிவாகியுள்ளது. இந்த சுற்றுப்போட்டியை நடத்தும் வாய்ப்புக்காக துருக்கியும் ஜேர்மனியும்போட்டிபோட்ட நிலையில் இன்று சுவிற்சலாந்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் ஜேர்மனி வெற்றிபெற்றது. 2006 இல் ஜேர்மனி உலக கிண்ண கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பைப்பெற்றபின்னர்அதற்கு இந்த வாய்ப்புக்கிட்டியுள்ளது. ஆயினும் துருக்கிக்கு இன்னமும் அனைத்துல கால்பந்துசுற்றுப்போட்டிகள் எதனையும் நடத்தும் வாய்ப்புக்கள்கிட்டவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. https://www.ibctamil.com/europe/80/106766

  19. ‘தல’ தோனி கேப்டன்சியில் முதலும் கடைசியும்: ஒரு தற்செயல் சுவாரசியம் முதல் உலகக்கோப்பை வெற்றியைக் கொண்டாடும் தோனி. | கெட்டி இமேஜஸ். ஆசியக் கோப்பை 2018-ன் சூப்பர் 4 போட்டியில் ஆப்கான் அணிக்கு எதிராக இந்திய அணியின் கேப்டனாக மீண்டும் மகேந்திர சிங் ‘தல’ தோனி களமிறங்கியது, இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் நீண்ட நாளைய ஏக்கத்தைப் பூர்த்தி செய்வதாக அமைந்ததோடு அந்தப் போட்டி ‘டை’ ஆனதும் பரபரப்பானது. 696 நாட்களுக்குப் பிறகு தோனி மீண்டும் கேப்டன் ஆகி ஒரு போட்டியை இளம் வீரர்களைக் கொண்டு வழிநடத்தினார், அனைத்திலும் வெற்றி கண்ட கேப்டன் தோனி தன் 200வது கேப்டன்சி போட்டியில் டை கண்டது கொஞ்சம் துரதிர்ஷ்டமே. ஆனால் தோற்காதது அதிர்ஷ்டமே. …

  20. மெத்தியூஸ் இல்லாத ஒருநாள் அணியை அறிவித்தது இலங்கை கிரிக்கெட் இங்கிலாந்துக்கு எதிராக இடம்பெறவுள்ள ஒருநாள், இருபதுக்கு 20, டெஸ்ட் தொடர்களுக்கான இலங்கை அணியினை கிரிக்கெட் தெரிவுக்குழு இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ள நிலையில், அஞ்சலோ மெத்தியூஸ் ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணி, இலங்கை அணியுடன் ஐந்து ஒருநாள் போட்டிகள், ஒரு இருபதுக்கு 20 போட்டி மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்குமிடையேயான இப் போட்டித் தொடரானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி நவம்பர் மாதம் 27 ஆம் திகதி…

  21. விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி மற்றும் பளுதூக்குதல் வீராங்கணை மீராபாய் சானு ஆகிய இருவருக்கும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று வழங்கினார். விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு இந்திய மத்திய அரசு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது. இதன்படி இந்த ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது கிரிக்கெட் வீரர் விராட் கோலி, பளுதூக்குதல் வீராங்கணை மீராபாய் சானு ஆகிய இருவருக்கும் அறிவிக்கக்கப்பட்டது. இதே போல, தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் ஸ்மிருதி மந்…

  22. 2018 ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை தட்டிச்சென்றார் லூகா மோட்ரிச் பிபாவின் சிறந்த வீரருக்கான விருதை தட்டிச்செல்ல ரொனால்டோ, முகமது சலா, லூகா மோட்ரிச் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில் 2018 ஆம் ஆண்டின் சிறந்த வீரராக லூகா மோட்ரிச் தேர்வு செய்யப்பட்டுள்ளார். #FIFA #LukaModric லண்டன் : 2018 ஆம் ஆண்டின் சிறந்த வீரருக்கான பிபா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், பிபா சிறந்த வீரர் விருதுக்கு, குரோசியா அணியின் கேப்டன் லூகா மோட்ரிச் தேர்வ…

  23. இலங்கை உலக கிண்ணத்தை வெல்வது கடினம் ; ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார் அர்ஜுன 2019 ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை நாம் வெல்வது கடினமே. காரணம் கிரிக்கெட் அந்தளவு தூரம் இன்று கீழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு புக்கி கரர்களளே பிரதான காரணம் என அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், கடந்த அரசாங்கத்தில் விளையாட்டுத்துறை அமைச்சரிடம் சில குறைபாடுகள் காணப்பட்டாலும் அவர் சட்டத்தை சரியான முறையில் நடைமுறைபடுத்தி புக்கிகரர்களையும் சூதாட்டக்காரர்களையும் கிரிக்கெட் நிர்வாகத்தில் சேர்க்கவில்லை. ஆனால் தயாசிறி விளையாட்டுத்துறை அமைச்சரானதும் என்ன நடந்தது? அவர் ஒரு சட்டத்தரணி எனினும் கிரிக்…

  24. ராகுல் டிராவிட்டை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடம் பிடித்த மகேந்திர சிங் தோனி - முதல் இடத்தில் சச்சின் மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளையும் சேர்த்து அதிக போட்டிகளில் விளையாடிய இரண்டாவது இந்தியர் எனும் பெருமையை பெற்றுள்ளார் முன்னாள் கேப்டன் தோனி. #MSDhoni #RahulDravid துபாய் : 14வது ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில், நேற்று நடந்த போட்டியில் …

  25. மெத்தியூஸை விலகுமாறு வேண்டுகோள் : சந்திமாலை தலைவராக்க தீர்மானம் இலங்கை அணியின் தலைவராக தினேஸ் சந்திமாலை நியமிக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை கிரிகெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள ஒரு நாள் போட்டித் தொடரில் இலங்கையை தலைமை தாங்குவதற்காகவே சந்திமல் நியமிக்கப்படவுள்ளார். இந்நிலையில் அணித்தலைவராக செயற்பட்டுவரும் அஞ்சலோ மெத்தியூஸை ஒருநாள் மற்றும் இருபதுக்கு - 20 போட்டிகளின் தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/41042

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.