விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7841 topics in this forum
-
ஐ.சி. சியின் இரண்டு பிரதான கிரிக்கெட் விருதுகளுக்கு குமார் சங்கக்கார, ஏஞ்சலோ மெத்யூஸ், ஜோன்சன் 2014-11-07 சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐ.சி.சி.) வருடத்தின் அதி சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் அதிசிறந்த டெஸ்ட் வீரர் ஆகிய விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட வீரர்களின் குறும்பட்டியல்களில் இலங்கை அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ், முன்னாள் அணித் தலைவர் குமார் சங்கக்கார, அவுஸ்திரேலியாவின் மிச்செல் ஜோன்சன் ஆகியோர் இடம்பெறுகின்றனர். இவர்களுடன் தென் ஆபிரிக்காவின் ஏ. பி. டி வில்லியர்ஸ் (அதி சிறந்த கிரிக்கெட் வீரர்), அவுஸ்திரேலியாவின் டேவிட் வோர்னர் (அதி சிறந்த டெஸ்ட் வீரர்) ஆகியோரும் குறும்பட்டியல்களில் அடங்குகின்றனர். சர்வதேச…
-
- 1 reply
- 500 views
-
-
செரீனாவின் ‘பிளாக் பாந்தர்’ ஆடைக்குத் தடை: பிரெஞ்ச் ஓபன் நிர்வாகம் உத்தரவு பிரெஞ்சு ஓபனில் பங்கேற்றபோது செரீனா அணிந்திருந்த பிளாக் பாந்தர் ஆடை - படம்: ராய்டர்ஸ் 2019-ம் ஆண்டு நடக்கும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் கவர்ச்சிகரமான பிளாக் பாந்தர் ஆடை அணியக்கூடாது என்று ‘பிரெஞ்சு ஓபன்’ டென்னிஸ் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மிகவும் புகழ்பெற்றது பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியாகும். பாரீஸ் நகரில் களிமண் தரையில் நடக்கும் இந்தப் போட்டியில் விளையாடி பட்டம் வெல்வது மிகக் கடினம்.தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர்கள் கூட களிமண் தரையில் விளையாடு…
-
- 1 reply
- 592 views
- 1 follower
-
-
வர்த்தக கிரிக்கெட் வித்தகர்: டால்மியா ஒரு சகாப்தம் கோல்கட்டா: இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தலைவர் ஜக்மோகன் டால்மியா மாரடைப்பால் மரணமடைந்தார். இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தலைவராக இருந்தவர் கோல்கட்டாவின் ஜக்மோகன் டால்மியா, 75. வயது முதிர்வின் காரணமாக, இவரது உடல்நிலையில் ஞாபக மறதி உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. வாரத்துக்கு இரு முறை கோல்கட்டா கிரிக்கெட் சங்கத்துக்கு வருகை தந்த இவர், சமீப காலமாக முக்கிய கூட்டங்களில் மட்டுமே பங்கேற்று வந்தார். இதனிடையே கடந்த 17ம் தேதி இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. கோல்கட்டா பி.எம்.பிர்லா இருதய ஆராய்ச்சி மைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு, ‘ஆஞ்சியோகிராபி’ முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இவரத…
-
- 1 reply
- 409 views
-
-
குக் பதவி விலகுகிறாரா? இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைமைப் பொறுப்பிலிருந்து அலஸ்டர் குக் விலகுவதற்கான நேரம் வந்துவிட்டதாக, இங்கிலாந்தின் முன்னாள் அணித் தலைவர் மைக்கல் வோகன் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளிலும் தோல்வியடைந்ததால் இங்கிலாந்து அணி மீது விமர்சனங்கள் எழுகின்றன. இதுகுறித்து அலஸ்டயர் குக் கூறியதாவது, தோல்விக்கு எந்தவித சாக்குபோக்கு காரணமும் சொல்ல முடியாது. இந்திய அணி எங்களை விட சிறப்பாக விளையாடியது. வெற்றிக்கு இந்தியா தகுதியான அணி தான். இந்த டெஸ்டில் கடைசி நாள் கடினமாக இருக…
-
- 1 reply
- 549 views
-
-
இந்தியா-பாகிஸ்தான்: கிரிக்கெட்டை காயப்படுத்தும் போர்களும் அரசியலும் சௌதிக் பிஸ்வாஸ் பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அண்மையில் தெரிவித்த ஒரு கருத்தால் பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கோப்பை போட்டிகளில் இந்தியா பங்கேற்பது குறித்து சந்தேகம் எழுந்திருக்கிறது. இந்தத் தொடரை இந்தியா புறக்கணித்தால் அது சர்வதேச கிரிக்கெட்டை பிரித்துவிடும் என்றும், இந்தியாவில் நடைபெறும் 2023ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் பங்கேற்பதைப் பாதிக்கும் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கவலை தெரிவித்துள்ளது. நா…
-
- 1 reply
- 375 views
- 1 follower
-
-
நான்காவது Ashes Test போட்டியிலும் இங்கிலாந்தை வீழ்த்தியது அவுஸ்ரேலியா! 26 ஆம் திகதி அவுஸ்ரேலியாவின் மெல்போன் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகிய நான்காவது Ashes Test போட்டியில் அவுஸ்ரேலியா அணி இங்கிலாந்து அணியை ஒரு இனிங்ஸ் மற்றும் 99 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணித்தலைவர் தமது அணி முதலில் துடுப்பெடுத்து ஆடுவதாக தீர்மானித்தார் அதன் படி களம் இறங்கிய இங்கிலாந்து அணியினர் Shane Warne இன் சுழல் பந்து வீச்சுக்கு முகம் கொடுக்க முடியாமல் 74.2 ஓவர்களில் 159 ஓட்டங்களுக்கு சகல விக்கெற்றுக்களையும் இழந்தனர் இங்கிலாந்து அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் Strauss - 50 ஓட்டங்களை பெற்றார் அவுஸ்ரேலியா அணி சார்பில் Shane Warne -…
-
- 1 reply
- 1.1k views
-
-
நிஷாந்த ரணதுங்க, மஹிந்தானந்த எனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்தனர்: சங்கா குற்றச்சாட்டு இலங்கை கிரிக்கட் சபையின் செயலாளர் நிஷாந்த ரணதுங்க மற்றும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் மறைமுகமாக செயற்பட்டதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான குமார் சங்கக்கார காரசாரமாக குற்றம் சுமத்தியுள்ளார். இது குறித்து இலங்கை கிரிக்கெட் சபையின் கிரிக்கட் செயற்பாட்டுப் பணிப்பாளர் கார்ல்டன் பேர்னாட்ஸ{க்கு கடுமையான வார்த்தைப் பிரயோகங்கள் கொண்டு குமார் சங்கக்கார அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, சாம்பியன்ஸ் லீக் தொடரில் விளையாடுவதற்காக தெரிவுக் குழுவினரால்…
-
- 1 reply
- 330 views
-
-
ஆஸ்திரேலியாவை பின்னுக்குத்தள்ளி தென் ஆப்ரிக்கா தரவரிசையில் முதலிடம்! ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை அப்டேட் செய்து வெளியிட்டிருக்கிறது. இதில் தென் ஆப்ரிக்க அணி, ஆஸ்திரேலியாவை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்திருக்கிறது.தென் ஆப்ரிக்க அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நேற்று கடைசி போட்டி நடந்தது. இதில் நியூசிலாந்தை எளிதில் வீழ்த்தியது தென் ஆப்ரிக்கா. இதையடுத்து 3-2 என தொடரையும் ஜெயித்தது தெ.ஆப்ரிக்கா. "இலங்கை தொடரை வென்றாலும், இந்த தொடர் கடுமையான சவால் அளிக்கக் கூடியதாக இருக்கும். இதை வென்றால் மட்டுமே சாம்பியன்ஸ் டிராஃபிக்கு நாம் தயார் என அறிவிக்க முடியும் என நினை…
-
- 1 reply
- 267 views
-
-
உலகக்கோப்பையை வென்றால் நெதர்லாந்துக்கு விநோத வெகுமதி :விண்வெளிப் பயணம் உலகக் கோப்பையை நெதர்லாந்து வென்றால் அந்த அணியில் இடம்பெற்றிருக்கும் 23 வீரர்கள் மற்றும் பயிற்சியாளரை விண்வெளிக்கு அழைத்துச் செல்வோம் என அந்நாட்டைச் சேர்ந்த விண்வெளிப் பயண ஏற்பாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது. 3 முறை இறுதிப் போட்டி வரை முன்னேறியபோதும் இன்னும் நெதர்லாந்து கோப்பையை வெல்லவில்லை. அதன் கோப்பை கனவு தொடர்ந்து நழுவிக் கொண்டேயிருக்கிறது. உலகக் கோப்பையை வெல்வதற்கு வீரர் களை ஊக்கப்படுத்தினால் மட்டும்போதாது, அவர் களுக்கு மிகப்பெரிய வெகுமதியை அளிக்க வேண்டும் என நெதர்லாந்தைச் சேர்ந்த விண் வெளிப் பயண ஏற்பாட்டு நிறுவனமான ரியூம்டீவார் பெட்ரிப் எஸ்எக்ஸி நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஸ்பெயினுக்கு எத…
-
- 1 reply
- 442 views
-
-
இது ஓர் அணி, இதில் தனி நபர்கள் இல்லை: ரவி சாஸ்திரி இந்த இந்திய அணி உலகத் தரமானது, சிறந்த அணிகளுக்கு எதிராக சிறப்பாக விளையாடக்கூடிய திறமை பெற்றது என்கிறார் ரவி சாஸ்திரி. | படம்: பிடிஐ. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர், இந்திய அணிச் சேர்க்கை, ஸ்பின் பந்து வீச்சு, அணியின் மனோநிலை ஆகியவை பற்றி ரவிசாஸ்திரி தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அளித்த பேட்டி. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணி பற்றி கருத்து கூறிய இயக்குநர் ரவி சாஸ்திரி, 'இது ஓர் அணி, இதில் தனிநபர்கள் இல்லை' என்றார். மேலும், 'இந்த அணி நேர்மையான வீர்ர்களைக் கொண்டது. வெற்றிகளைக் கொண்டாடுகிறார்கள், தோல்வியை கவுரவத்துடன் எதிர்கொள்கின்றனர்' என்றார் அவர். …
-
- 1 reply
- 490 views
-
-
ஹமில்டனில் இன்று நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் நியூசிலாந்து வென்றது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: நியூசிலாந்து இந்தியா: 347/4 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷ்ரேயாஸ் ஐயர் 103 (107), லோகேஷ் ராகுல் ஆ.இ 88 (64), விராட் கோலி 51 (63), மாயங்க் அகர்வால் 32 (31), கேதார் யாதவ் ஆ.இ 26 (15), பிறித்திவி ஷா 20 (21) ஓட்டங்கள். பந்துவீச்சு: டிம் செளதி 2/85 [10], கொலின் டி கிரான்ட்ஹொம் 1/41 [8], இஷ் சோதி 1/27 [4]) நியூசிலாந்து: 348/6 (48.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: றொஸ் டெய்லர் ஆ.இ 109 (84), ஹென்றி நிக்கொல்ஸ் 78 (82), டொம் லேதம் 69 (48), மார்டின் கப்தில் 32 (41), மிற்செல் சான்ட்னெர் ஆ.இ 12 (09) ஓட்டங்கள். பந்துவீச்சுள் குல்தீப் யாதவ் 2/8…
-
- 1 reply
- 927 views
-
-
பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல் மீது விதிக்கப்பட்ட தடை 18 மாதங்களாக குறைப்பு! by : Anojkiyan பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளரான உமர் அக்மல் மீது விதிக்கப்பட்ட தடை குறைக்கப்பட்டுள்ளது. அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் மூன்று ஆண்டுகள் விளையாடுவதற்கு விதிக்கப்பட்ட தடை தற்போது 18 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. தடையை எதிர்த்து உமர் அக்மல் மேன்முறையீடு செய்து இருந்த மனுவை விசாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி பாகிர் முகமது கோக்ஹர், உமர் அக்மலுக்கு விதிக்கப்பட்டு இருந்த 3 ஆண்டு கால தடையை 18 மாதங்களாக குறைத்து உத்தரவிட்டார். கருணையின் அடிப்படையில் இந்த தண்டனை குறைப்பு செய்யப்…
-
- 1 reply
- 863 views
-
-
இந்திய அணியில் இந்த முறையும் இவருக்கு இடமில்லை! #INDvsNZ செப்டம்பர் 22ம் தேதி தொடங்கும் நியூஸிலாந்துக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்த அணியில் அஜின்க்யா ரஹானே துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணி விவரம் பின் வருமாறு! விராட் கோலி (கேப்டன்), அஜின்க்யா ரஹானே (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், புஜாரா, முரளி விஜய்ரோ, ஹித் ஷர்மா, அஸ்வின், சஹா(விக்கெட் கீப்பர்) , ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, புவனேஷவர் குமார், ஷிகர் தவான், அமித் மிஸ்ரா, உமேஷ் யாதவ். மும்பையில் நடந்த தேர்வுக்குழு கூட்டத்தில் கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் கும்…
-
- 1 reply
- 574 views
-
-
தென்னாபிரிக்காவின் தொடர் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்ட நியுஸிலாந்து : திரில் வெற்றி தென்னாபிரிக்கா மற்றும் நியுஸிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியுஸிலாந்து அணி 6 ஓட்டங்களால் திரில் வெற்றிபெற்றது. தொடர் வெற்றிகளை குவித்துவந்த தென்னாபிரிக்க அணி, இந்த போட்டியில் போராடி தோற்றது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியுஸிலாந்து அணி 4 விக்கட்டுகளை இழந்து 289 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. நியுஸிலாந்து அணி சார்பில் டெய்லர் ஆட்டமிழக்கால் 102 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். 290 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுகளை இழந்து 283 ஓட்டங…
-
- 1 reply
- 316 views
-
-
கடந்த வாரம் இலங்கை கிரிக்கெட்டில் இடம்பெற்ற மகத்தான சில சம்பவங்கள், ஏனைய உள்ளூர் போட்டிகளின் முடிவுகள் மற்றும் இலங்கை கிரிக்கெட்டில் அடுத்த முக்கிய விடயங்கள் குறித்த ஒரு ஆழமான பார்வை விளையாட்டு கண்ணோட்டம் – பாகம் 01
-
- 1 reply
- 293 views
-
-
விடைபெற்றார் கால்பந்து நட்சத்திரம் ககா பிபாவின் 2002ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற பிரேசில் அணியில் இடம்பிடித்தவரும் AC மிலான் மற்றும் ரியல் மெட்ரிட் ஆகிய பிரபல அணிகளின் முன்னாள் மத்தியகள வீரருமான ரிகார்டோ ககா கால்பந்து போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார். தற்பொழுது 35 வயதுடைய ககா பிரேசிலின் சாவோ போலோ அணிக்காக தனது கால்பந்து வாழ்வை ஆரம்பித்தார். மிக அண்மை வரை ஓர்லான்டோ சிட்டி MLS கழகத்திற்காக அவர் ஆடினார். கடந்த ஒக்டோபரில் முடிவடைந்த ஓர்லான்டோ பருவகால போட்டிகளிலேயே ககா கடைசியாக கால்பந்து போட்டிகளில் ஆடியிருந்தார். அது போன்றே AC மிலான் கழக இயக்குனர் பதவி ஒன்றுக்கு தான் அழைக்கப்பட்டதை கடந்த நவம்பரில் க…
-
- 1 reply
- 743 views
-
-
சாம்பியன்ஸ் லீக்- மெஸ்சியின் அபார ஆட்டத்தால் செல்சியை வீழ்த்தியது பார்சிலோனா சாம்பியன்ஸ் லீக் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மெஸ்சியின் அபார ஆட்டத்தால் செல்சியை வீழ்த்தி பார்சிலோனா காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. #UCL #Barcelona #Chelsea சாம்பியன்ஸ் லீக்கில் காலிறுதிக்கு முந்தைய சுற்றின் ஒரு போட்டியில் பார்சிலோனா - செல்சியா அணிகள் மோதின. இரண்டு லெக்காக நடைபெறும் இந்த சுற்றின் முதல் ஆட்டம் கடந்த மாதம் 21-ந்தேதி செல்சிக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்றது. இதில் இரு அணிகளும் தலா 1 கோல்கள் அடித்தனர். இதனால் ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது. 2-வது லீக் நேற்று நள்ளிர…
-
- 1 reply
- 547 views
-
-
பெண்களின் உலக இருபதுக்கு – 20: அரையிறுதியில் அவுஸ்திரேலியா மேற்கிந்தியத் தீவுகளில் இடம்பெற்றுவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் பெண்களின் உலக இருபதுக்கு – 20 தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு அவுஸ்திரேலியா தகுதிபெற்றுள்ளது. இத்தொடரில் குழு பியில் இடம்பெற்றுள்ள அவுஸ்திரேலியா, தமது முதலாவது போட்டியில் பாகிஸ்தானையும் இரண்டாவது போட்டியில் அயர்லாந்தையும் வென்றிருந்த நிலையில், கயானாவில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற நியூசிலாந்துடனான போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுக் கொண்டது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா அவுஸ்திரேலியா: 153/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: அலைஸா ஹீலி 53 (3…
-
- 1 reply
- 553 views
-
-
எதிர் அமைப்பில் கபில்தேவ், சந்தீப் பட்டேல் இருப்பதால் பெரும் குழப்பத்தில் உலகக் கிண்ண வெள்ளி விழா! [20 - March - 2008] இந்திய முன்னாள் அணி உலகக் கிண்ண வெள்ளி விழாவை கொண்டாடுவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.கபில்தேவ், சந்தீப் பட்டேல் உள்ளிட்ட ஜாம்பவான்கள் எதிர் அமைப்பான ஐ.சி.எல். பக்கம் உள்ளனர். இதையடுத்து இவர்களை கௌரவிப்பதா.... வேண்டாமா என்ற குழப்பத்தில் இந்திய கிரிக்கெட் உள்ளது. 1983 இல் இங்கிலாந்தில் உலகக் கிண்ணப் போட்டி நடந்தது. இதில் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. `கபில் டெவில்ஸ்' என வர்ணிக்கப்படும் அளவுக்கு எதிரணிகளை போட்டுத் தாக்கியது. உதாரணமாக லீக் சுற்றில் சிம்பாப்வேக்கு எதிராக இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 78 ஓட்டங்கள…
-
- 1 reply
- 1.3k views
-
-
இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், இன்டர் மிலனின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் நடப்புச் சம்பியன்களான ஜுவென்டஸ் வென்றது. இப்போட்டியின் நான்காவது நிமிடத்திலேயே தமது முன்களவீரர் போலோ டிபாலா பெற்ற கோலின் மூலம் ஆரம்பத்திலேயே ஜுவென்டஸ் முன்னிலை பெற்றது. எவ்வாறெனினும், இன்டர் மிலனின் மத்தியகளவீரர் நிக்கொலோ பரெல்லாவின் உதையானது ஜுவென்டஸின் பின்களவீரர் மத்தியாஸ் டி லிஜிட்டின் கையில் பட்டு பெனால்டி வழங்கப்பட்ட நிலையில் அதை இன்டர் மிலனின் முன்களவீரரான லொட்டரோ மார்ட்டின்ஸ் கோலாக்க கோலெண்ணிக்கையை இன்டர் மிலன் சமநிலைப்படுத்தியது. இவ்வாறாக 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முதற்பாதி முடிவடைந்திருந்த நிலையில், இரண்டா…
-
- 1 reply
- 700 views
-
-
ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தைச் சேர்ந்தவரான ஷீதல் ஒரு பாரா மகளிர் வில்வித்தை வீராங்கனை. இவருக்கு இரண்டு கைகளும் இல்லை, ஆனால் கால்களைக் கொண்டு அம்பு எய்து சாதிக்கிறார். சிறுவயதிலிருந்தே அவருக்கு இரண்டு கைகளும் இல்லை. அவருடைய தந்தை ஒரு விவசாயி, தாய் இல்லத்தரசி. ஷீதல் 16 வயதிற்குள்ளாகவே பல பட்டங்களை வென்றுள்ளார். ஷீதலின் வெற்றிக்கு அவருடைய விடாமுயற்சியும், கடின உழைப்பும்தான் காரணம் என்று அவருடைய பயிற்சியாளர் கூறுகிறார். பாரா ஒலிம்பிக்கிலும் ஷீதல் பதக்கம் வெல்வார் என்று அவர் நம்புகிறார். https://www.bbc.com/ws/av-embeds/articles/cn015erel0vo/p0fqz9sj/ta https://www.bbc.com/tamil/articles/cn015erel0vo
-
- 1 reply
- 301 views
- 1 follower
-
-
பிசிசிஐ கூட்டத்தில் சீனிவாசன் பங்கேற்பு: உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற்ற பிசிசிஐ கூட்டத்தில் சீனிவாசன் கலந்து கொண்டது பற்றி உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. சீனிவாசன் இதனைச் செய்திருக்கக் கூடாது. அவரது நடவடிக்கைகளில் முரண்பட்ட லாப நோக்குடைய இரட்டை நலன் இருக்கிறது என்பதை நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். இப்படியிருக்கையில் அவர் பிசிசிஐ கூட்டத்தில் கலந்து கொள்வது எங்ஙணம்? சீனிவாசனின் இந்த நடவடிக்கை பற்றிய நிலைப்பாட்டை வழக்கறிஞர் கபில் சிபல் வெள்ளிக்கிழமையன்று நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜனவரி 22ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் சீனிவாசனுக்கு இரட்டை லாப நோக்க முர…
-
- 1 reply
- 385 views
-
-
எம்.சி.சி.யின் தலைமைப் பதவியை பொறுப்பேற்ற சங்கா லண்டனில் அமைந்துள்ள மேரிலெபோன் கிரிக்கட் கழகத்தின் ( MARYLEBONE CRICKET CLUB) தலைவர் பதவியை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் கிரிக்கெட் ஜாம்பவானுமான குமார் சங்கக்கார இன்றைய தினம் பொறுப்பேற்றுள்ளார். குமார் சங்கக்கார, மேரில்போன் கிரிக்கெட் கழகத்தின் தலைவராக மாறும் முதல் பிரித்தானியர் அல்லாத நபர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2012 ஆம் ஆண்டில் சங்கக்காரவிற்கு மேரில்போன் கிரிக்கெட் கழகம் ஆயுட்கால உறுப்பினர் பதவியினை வழங்கியிருந்தது. அத்தோடு, சங்கக்கார இந்த கழகத்தினுடைய உலக கிரிக்கெட் ஆலோசனைக்குழுவின் அங்கத்துவராகவும் இருந்தும் உள்ளார். இன்று தனது பதவியை பொறு…
-
- 1 reply
- 508 views
-
-
இளைஞர்கள் ஐ.பி.எல்.லை விட டெஸ்ட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்-சந்தீப் பட்டீல் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் தலைமை தேர்வாளராக இருப்பவர் சந்தீப் பட்டீல். இவர் மும்பையில் நடந்த ஒரு விழாவில் கலந்துகொண்டார். அப்போது அவர் கூறியதாவது:- இந்தியாவின் இளம் வயது கிரிக்கெட் வீரர்கள் பணம் கொழிக்கும் ஐ.பி.எல். கிரிக்கெட்டை விட டெஸ்ட் போட்டியில் விளையாடுவதை யோசிக்க வேண்டும். தயது செய்து இளைஞர்கள் உண்மையான கிரிக்கெட் விளையாட வேண்டுமென்றால், அது டெஸ்ட் போட்டிதான். ஐ.பி.எல். போட்டியல்ல. ஐ.பி.எல். போட்டி வந்து பணம் கொடுத்தும் வாங்கிய துரித உணவு வீட்டிற்கு போகும் முன் சாப்பிடுவதற்குச் சமம். உங்களுக்கு, உங்கள் அணிக்கு, நாட்டுக்கு, பெற்றோர்களுக்கு பெயர் வாங்கி கொடுக்க நீங…
-
- 1 reply
- 493 views
-
-
பாகிஸ்தான் சென்று விளையாட மறுக்கும் இலங்கை வீரர்களுக்கு டி20 தொடரில் இடமில்லை பாகிஸ்தான் சென்று டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட மறுக்கும் இலங்கை வீரர்களுக்கு டி20 தொடரில் இடமில்லை என கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் 26-ந்தேதி (வியாழக்கிழமை) அபுதாபியில் தொடங்குகிறது. 2-வது போட்டி 27-ந்தேதி அதே மைதானத்தில் நடக்கிறது. 3-வது போட்டி லாகூரில் நடக்க இ…
-
- 1 reply
- 379 views
-