Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. அன்வர் அலிக்காக ஆமீர் யமின் சிம்பாப்வேயில் இடம்பெறவுள்ள பாகிஸ்தான் ஒருநாள் தொடரின் குழாமிலிருந்து பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சு சகலதுறை வீரர் அன்வர் அலி விலகியுள்ளார். ஏற்பட்டிருந்த சிறிய காயத்திலிருந்து குணமடையும் பொருட்டு, இரண்டு இருபது-20 போட்டிகளுக்கான குழாமில் அன்வர் அலியை சேர்க்காத தேர்வாளார்கள், சர்வதேச ஒருநாள் போட்டிக்கான குழாமில் சேர்த்திருந்தனர். எனினும் அன்வர் அலி, உடற்றகுதி சோதனையில் சித்தியடையாததால், அவருக்கு பதிலாக குழாமில் ஆமிர் யாமின் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். முல்தானை சேர்ந்த 25 வயதான சகலதுறை வீரரான யமின், 25 முதற்தர போட்டிகளில் பங்கேற்றுள்ளதுடன், 39.18 என்ற சராசரியில் மூன்று சதங்கள் உள்ளடங்கலாக 1058 ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன், மூன்று ஐந்து விக்…

  2. இலங்கைத் தமிழனின் மற்றுமொரு உலக சாதனை! In விளையாட்டு December 16, 2018 2:29 pm GMT 0 Comments 1041 by : Benitlas தாய்லாந்தில் நடைபெற்ற உலக உடல்கட்டமைப்பு (ஆணழகர்) போட்டியில் இலங்கையைச் சேர்ந்த லூசியன் புஸ்பராஜ் வெற்றி பெற்று உலக சாம்பியனாக முடி சூடியுள்ளார். 100 கிலோவிற்கு மேற்பட்ட எடையைக் கொண்டவர்களுக்கான போட்டியிலேயே அவர் வெற்றி பெற்றுள்ளார். கடந்த வருடம் டெக்சாஸில் நடைபெற்ற போட்டியில் 4’ம் இடத்தையும், பின்னர் அவுஸ்திரேலியாவில் 2’ம் இடத்தையும் பெற்ற அவர், தற்போது உலக சாம்பியனாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/இலங்கைத்-தமிழனின்-மற்றும/

  3. முத‌ல் இனிங்சில் இந்தியா 212 ர‌ன் அடித்தார்க‌ள்.........213ர‌ன் அடிச்சால் வெற்றி இல‌க்கு ...... அப்கானிஸ்தான் வீர‌ர்க‌ளும் சிற‌ப்பாக‌ விளையாடி 212 ர‌ன் எடுக்க‌ விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடிந்த‌து.........முத‌லாவ‌து சூப்ப‌ர் ஓவ‌ரில் அப்கானிஸ்தான் அணி 16ர‌ன் அடிச்சது 17 ர‌ன் அடிச்சால் வெற்றி.......இந்திய‌ அதே சூப்ப‌ர் ஓவ‌ரில் ச‌ரியாக‌ 16ர‌ன் அடிக்க‌ மீண்டும் இன்னொரு சூப்ப‌ர் ஓவ‌ருக்கு போன‌து விளையாட்டு😁😁😁😁😁😁 இந்தியா அடுத்த‌ சூப்ப‌ர் ஓவ‌ரில் ச‌ரியாக‌ 11 ர‌ன் அடித்தார்க‌ள் 12ர‌ன் அடிச்சால் வெற்றி என்ற‌ இல‌க்குட‌ன் இற‌ங்கிய‌ அப்கானிஸ்தான் வீர‌ர்க‌ள் இந்தியா சார்பாக‌ இள‌ம் சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் ர‌வி விஷ்னு ப‌ந்து போட‌ வ‌ந்தார் முத‌லாவ‌து ப‌ந்தில் அப்கானிஸ்த…

  4. இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்: அர்ஜுன ரணதுங்க இலங்கை கிரிக்கெட் அணிக்கு அரசியல் மற்றும் அதிகார மட்ட அழுத்தங்கள் இருப்பதனால் அணியில் இருக்கும் வீரர்களால் விளையாட்டில் சுதந்திரமாக செயற்பட முடியாத சூழல் இருப்பதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். அர்ஜுன ரணதுங்க இலங்கை கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்ற இருபது வருடங்களை கொண்டாடும் வைகயில், “96ஐ கொண்டாடுவோம்” என்ற தலைப்பில் முன்னெடுக்கப்படவுள்ள நிகழ்வுகள் தொடர்பில் இன்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இந்த செய்தியாளர் சந்திப்பில் 1996ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக்…

  5. ஐ.பி.எல்.போட்டி ஏலத்தில் இலங்கை விரர்கள் விபரம் இந்திய பிறிமியர் லீக் போட்டி ஏலத்தில் இலங்கை வீரர்கள் பலரும் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். இதன்படி அஜந்த மென்டிஸ் 7,25,000 அமெரிக்க டொலர்களுக்கும் திசர பெரேரா 6,75,000 அமெரிக்க டொலர்களுக்கும் சவீந்ர சொய்சா 6,25,000 அமெரிக்க டொலர்களுக்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். இவேளை மென்டீஸ் 50,00 அமெரிக்க டொல்களுக்கும் அகில 20,000 அமெரிக்க டொலர்களுக்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் இந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. 2013 ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகள் ஏப்ரல் 3-ம் திகதி தொடங்க உள்ளது. இவற்றுக்கான வீரர்கள் ஏலம் எடுக்கும் முறை இன்று (03) ஆரம்பமாகியுள்ளது…

  6. பிரித்தானிய இலங்கைக்கு விளையாட்டு பிரயாணம் மேற்கொள்ளவேண்டுமா? - சனல் நாலு ஊழல் நிறைந்த சிங்கள அணியுடன் இங்கிலாந்து துடுப்பாட்ட நிகழ்வுக்கு செல்லவேண்டுமா என சனல் நாலு கேள்வி எழுப்பியுள்ளது. கொலைக்களங்கள் என்ற ஆவணப்படம் மூலம் உலகெல்லாம் தமிழின படுகொலையை உலகறியச்செய்த சனல் நாலு பாகம் இரண்டு வெளியிட உள்ள நிலையில் இந்த கேள்வியை இன்று எழுப்பியுள்ளது. Should England's cricket team tour Sri Lanka?? As England's cricket team sets off for Sri Lanka, Channel 4 News Foreign Editor Ben De Pear asks whether the tour should be going ahead given the country's human rights record? With the upcoming broadcast of "Sri Lanka's Killing Fields; War Crimes Unpunis…

    • 1 reply
    • 679 views
  7. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் இந்தியாவில் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை விடவும் பெரியதாக இந்தியாவில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் அகமதாபாத்தில் நிர்மானிக்கப்பட்டு வருகின்றது. இந்திய ரூபாவில் சுமார் 700 கோடி செலவில் கட்டப்படும் இம் மைதானம் குறித்து கூறியுள்ள குஜராத் மாநில கிரிக்கெட் சங்கத்தின் துணை தலைவர் பரிமள் நாத்வானி, உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இது குஜராத் மாநில கிரிக்கெட் சங்கத்தின் கனவு திட்டம். இந்த மைதானத்தில் ஒரு லட்சம் பேர் அமர்ந்து போட்டி கண்டுகளிக்க வசதி இருக்கும். என்று தெரிவித்துள்ளார். மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை விட பெரிய இந்த மைதானத்தி…

  8. ரியோ ஒலிம்பிக்: ஒரு நுட்பமான அலசல் அதிக மெடல்களை வென்ற மைக்கேல் பெல்ப்ஸ், உசைன் போல்ட் மற்றும் சிமோன் பைல்ஸ் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ஆம் தேதியன்று, ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள மரக்கானா மைதானத்தில் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் 2016 ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு பெற்றன. 16 நாட்கள் குறிப்பிடத்தக்க வகையில் நடந்த விளையாட்டுப் போட்டிகள், இதன் மூலம் முடிவுக்கு வந்தன. 207 நாடுகளை சேர்ந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தடகள வீரர்கள், 31 விளையாட்டுப் பிரிவுகளில் பங்கேற்றனர். ரியோ போட்டிகளின் போது மொத்தம் 306 வகை பதக்கங்கள் வழங்கப்பட்டன. பல சாதனைகள் முறியடிக்கப்பட்டது; வரலாறு நிகழ்த்தப்பட்டது; சாதனையாளர்கள் தங்களை உறுதிப்படுத்திக் கொண்டனர்; புதிய நம்பிக்கை நட்சத்திரங…

  9. போர்முலா-1 கார் பந்தயத்தின் மொனாக்கோ போட்டியில் ஸ்பெயின் வீரர் அலோன்சா வெற்றி பெற்றார். இந்த ஆண்டுக்கான போர்முலா -1 கார்பந்தயம் 17 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதில் இதுவரை 4 போட்டிகள் முடிந்து விட்டன. இந்த நிலையில் 5 ஆவது பந்தயமாக மொனாக்கோ கிராண்ட்பிரீக்ஸ் மாண்டி கார்லோவில் நேற்று முன்தினம் நடந்தது. 78 சுற்றுகள் கொண்ட இதன் பந்தய தூரம் 260.520 கிலோமீற்றர் ஆகும். இதில் மெக்லரன் அணி வீரர்கள் தற்போதைய சாம்பியன் ஸ்பெயினின் அலோன்சா, இங்கிலாந்தின் ஹமில்டன் ஆகியோரிடையே கடுமையான போட்டி நிலவியது. இரண்டு பேரும் முதலிடத்தை பிடிக்க தங்கள் காரை மின்னல் வேகத்தில் செலுத்தினார்கள். முடிவில் அலோன்சா வெற்றி பெற்றார். அவர் பந்தய தூரத்தை 1 மணி 40 நிமிடம் 20.329 விநாடிகளில் கடந்…

    • 0 replies
    • 679 views
  10. முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 183ஓட்டங்களுக்கு சுருண்டது அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணி நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட ஒருநாள் போட்டி தொடரை நியூசிலாந்து 2–1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரு அணிகளும் 2 போட்டிக்கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகின்றன. முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டன் நகரில் இன்று தொடங்கியது. நாணயசுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வை செய்தது. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் நியூசிலாந்து வீரர்கள் திணறினர். ஹாசில்வுட், பீட்டர் சிடில் ஆகியோர் அபார பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்து திணறியது. அந்த அணி 48 ஓவரில் 183 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக…

  11. மகளிர் 20 ஆசிய கிண்ண கிரிக்கெட்: பாகிஸ்­தா­னிடம் இலங்கை தோல்வி 2016-11-28 09:54:59 பாங்கொக், ஆசிய தொழில்­நுட்ப கல்­விய மைதா­னத்தில் நேற்று நடை­பெற்ற மகளிர் ஆசிய கிண்ண (இரு­பது 20) கிரிக்கெட் போட்­டியில் இலங்கை மகளிர் அணியை 8 விக்­கெட்­களால் பாகிஸ்தான் மகளிர் அணி வெற்­றி­கொண்­டது. ஆறு நாடுகள் பங்­கு­பற்றும் மகளிர் ஆசிய கிண்ண கிரிக்­கெட்டில் நான்­கா­வது போட்டி இது­வாகும். இப் போட்­டி­களில் நேற்று முதல் தட­வை­யாக களம் இறங்­கிய இலங்கை மகளிர் அணி முதலில் துடுப்­பெ­டுத்­தாடத் தீர்­மா­னித்து 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்­கெட்­களை இழந்து 112 ஓட்­டங்­களைப் பெற்­றது. இலங்கை மகளிர் அணி சார்­பாக சமரி அத்­தப்­பத்து (3…

  12. டோக்கியோ ஒலிம்பிக் தொடர் ஒரு வருடத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் தகுதி பெறுவதற்கான புதிய காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஜப்பானின் டோக்கியோவில் இந்த வருடம் ஜூலை 24-ந்தேதியில் இருந்து ஆகஸ்ட் 9-ந்தேதி வரை ஒலிம்பிக் போட்டி நடைபெற இருந்தது. உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று மிகக்பெரிய அளவில் அச்சுறுத்தி வருவதால் அடுத்த வருடம் ஜூலை 23-ந்தேதியில் இருந்து ஆகஸ்ட் 8-ந்தேதி வரை நடைபெறும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. இந்த வருடம் ஒலிம்பிக் போட்டி நடைபெறும் வகையில் அதற்கான தகுதிச்சுற்றுகள் நடைபெற்று வந்தன. தற்போது அடுத்த வருடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதால் அதற்கு …

  13. Published By: VISHNU 24 DEC, 2023 | 02:05 PM (நெவில் அன்தனி) மும்பை வான்கடே விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (24) நிறைவுக்கு வந்த ஒற்றை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியாவை 8 விக்கெட்களால் இந்தியா வெற்றிகொண்டு வரலாறு படைத்தது இரண்டு அணிகளுக்கும் இடையிலான 46 வருட மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அவுஸ்திரேலியாவை இந்தியா வெற்றிகொண்டது இதுவே முதல் தடவையாகும். ஸ்ம்ரித்தி மந்தனா, ஜெமிமா ரொட்றிக்ஸ், தீப்தி ஷர்மா ஆகியோர் குவித்த அரைச் சதங்கள், தீப்தி ஷர்மா, பூஜா வஸ்த்ராக்கர் ஆகியோர் 8ஆவது விக்கெட்டில் பகிர்ந்த சாதனைமிகு இணைப்பாட்டம், பூஜா வஸ்த்ராக்கர், ஸ்நேஹ் ரானா ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகள் என்பன இந்தியாவின் …

  14. வடக்கு மாணவி ஆஷிகா பளுதூக்கல் போட்டியில் தேசிய சாதனை Weiterempfehl(நெவில் அன்தனி) விளையாட்டுத்துறை அமைச்சும் விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களமும் ஏற்பாடு செய்துள்ள 44ஆவது தேசிய விளையாட்டு விழாவில் ஓர் அம்சமான பெண்களுக்கான பளுதூக்கலில் வடக்கு மாகாணத்தின் விஜயபாஸ்கர் ஆஷிகா மூன்று புதிய தேசிய சாதனைகளை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். இவ் வருட தேசிய விளையாட்டு விழாவில் வடக்கு மாகாணத்துக்கு கிடைத்த முதலாவது தங்கப் பதக்கம் இதுவாகும். மேலும் பெண்களுக்கான பளுதூக்கலில் வடக்கு மாகாணத்துக்கு இரண்டு வெண்கலப் பதக்கங்களும் கிடைத்துள்ளன. பொலன்னுறுவை விளையாட்டுத் தொகுதி உள்ளக அரங்கில் நடைபெற்றுவரும் பளுதூக்கல் போட்டிகளின் ஆரம…

  15. சர்வதேச ஒலிம்பிக் சங்கத்திலிருந்து இந்திய ஒலிம்பிக் சங்கம் சஸ்பென்ட் Posted by: Mathi Updated: Tuesday, December 4, 2012, 18:47 [iST] லாசன்: சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தில் இருந்து இந்திய ஒலிம்பிக் சங்கம் இடைநீக்கம் செய்யபட்டிருக்கிறது. இதனால் இந்தியாவைச் சேர்ந்த எந்த விளையாட்டு அமைப்பும், சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் கீழ் வராது என்பதால் கிரிக்கெட் மட்டுமே நாம் வெளியில் போய் ஆட முடியும். இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு அண்மையில் தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால் இந்தத் தேர்தல் சர்வதேச விதிகளின்படி நடத்தப்படவில்லை என்பது புகார். இதைத் தொடர்ந்து இன்று சுவிஸின் லாசனின் சர்வதேச ஒலிம்பி…

    • 2 replies
    • 677 views
  16. சச்சின், டிராவிட் அபார சதம்-புதிய உலக சாதனை வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் சச்சின் டெண்டுல்கரும், ராகுல் டிராவிடும் அபாரமாக ஆடி சதம் போட்டனர். அத்துடன் புதிய உலக சாதனையும் படைத்தனர். மிர்பூரில் நடந்து வரும் 2வது டெஸ்ட்டில் இந்தியா வலுவான ஸ்கோரை எட்டியுள்ளது. வங்கதேசத்தை முதல் இன்னிங்ஸில் 233 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா, இன்றைய 2வது நாள் ஆட்ட நேர இறுதியில், தனது முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 459 ரன்களை குவித்துள்ளது. இன்றைய ஆட்டத்தின் சிறப்பம்சம் கம்பீர், ஷேவாக் ஆகியோர் போட்ட அரை சதங்களும், சச்சின், டிராவிட் படைத்த உலக சாதனையுடன் கூடிய அபார சதங்களுமே. கம்பீர் 68 ரன்களும், ஷேவாக் 56 ரன்களும் குவித்தனர். பின்னர் ஆடிய சச்சினும், டிரா…

    • 0 replies
    • 677 views
  17. டெஸ்ட் போட்டிகளில் 15,000 ரன்களைக் கடந்தார் சச்சின் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டிகளில் 15 ஆயிரம் ரன்களை எடுத்த முதல் வீரர் என்ற புதிய சாதனையை புரிந்துள்ளார். மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நடக்கும் முதல் டெஸ்டின் மூன்றாவது நாளில் இந்தியாவின் இரண்டாவது இன்னிங்சில் சச்சின் டெண்டுல்கள் தனது 28 ஆவது ரன்னை எடுத்தபோது அவர் இந்த மைல்கல்லை எட்டினார். அதிக எண்ணிக்கையிலான ஒரு நாள் போட்டிகளிலும், டெஸ்ட் போட்டிகளிலும் பங்கேற்றுள்ள சச்சின் டெண்டுல்கள் பங்கேற்கும் 182 ஆவது டெஸ்ட் போட்டி இதுவாகும். ஒரு நாள் போட்டிகளிலும், டெஸ்ட் போட்டிகளிலும் அதிக அளவு ரன்களையும், அதிக அளவு சதங்களையும் அடித்த வீரர் என்ற சாதனையை ஏற்கனவே அவர் புரிந்துள்ளார். இது…

    • 0 replies
    • 677 views
  18. பிரியாவிடை வாய்ப்பை கொடுக்க முன்வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்: நிராகரித்தார் அப்ரிடி பாகிஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஷாகித் அப்ரிடியின் பியாவிடை போட்டிக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்போது தயாரானது. ஆனால், அப்ரிடி அந்த வாய்ப்பை நிராகரித்துள்ளார். பாகிஸ்தான் அணியின் முன்னணி ஆல்ரவுண்டராக திகழ்ந்தவர் ஷாகித் அப்ரிடி. தனது அதிரடி ஆட்டத்தால் ‘பூம் பூம்’ என்று செல்லமாக அழைக்கப்பட்டார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்ற ஷாகித் அப்ரிடி டி20 கிரிக்கெட் போட்…

  19. 86ஆவது தடவையாக நடைபெறவுள்ள புனிதர்களின் மாபெரும் கிரிக்கெட் சமர் By Mohammed Rishad இலங்கையின் முன்னணி கத்தோலிக்க பாடசாலைகளான கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் கொழும்பு புனித பேதுரு கல்லூரி ஆகிய அணிகளுக்கிடையிலான அருட்தந்தை மொரிஸ் லே கொக் கிண்ணத்துக்கான 86ஆவது புனிதர்களின் சமர் கொழும்பு பி. சரவணமுத்து ஓவல் மைதானத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் 6ஆம் மற்றும் 7ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. ‘Battle of the Saints’ எனும் பெயரில் ஜோசப்பியன் பீட்டரைட் கிரிக்கெட் போட்டியாக அழைக்கப்படுகின்ற இம்மாபெரும் கிரக்கெட் சமரானது முதல் இன்னிங்ஸில் 60 ஓவர்கள…

  20. இலங்கை பகிரங்க கோல்வ் போட்டிகளில் தங்கராஜாவுக்கு முதலாவது சம்பியன் பட்டம் (நெவில் அன்­தனி) றோயல் கலம்போ கோல்வ் கழ­கத்­தினால் நடத்­தப்­பட்ட பெலிஸ் இலங்கை பகி­ரங்க கோல்வ் போட்­டி­களில் நட­ராஜா தங்­க­ராஜா மூன்று நகர்­வுகள் வித்­தி­யா­சத்தில் சம்­பி­ய­னானார். 43 கோல்வ் வீரர்கள் பங்­கு­பற்­றிய இலங்கை பகி­ரங்க கோல்வ் போட்­டிகள் கடந்த வாரம் றோயல் கோல்வ் கழக புல் தரையில் நடை­பெற்­றது. இந்த நான்கு நாள் போட்­டியில் முதல் இரண்டு தினங்­களும் குறைந்த நகர்­வு­க­ளுடன் தங்­க­ராஜா முன்­னி­லையில் இருந்தார். ஆனால், மூன்றாம் நாளன்று 2015 சம்­பியன் கந்­த­சாமி பிர­பா­கரன் முன்­னிலை அடை…

  21. கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு கொரோனா போர்த்துக்கல் நாட்டின் கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) மிகப்பெரிய கால்பந்து வீரர்களில் ஒருவர். ரொனால்டோ ஒரு பல்துறை திறன் கொண்ட தாக்குதல் வீரர், அவரது அதி வேகம், அத்துடன் பலமாக பந்தை உதைக்கும் ஆற்றல் மற்றும் ஆழமான அடிச்சுவடுகள் ஆகியவற்றிற்காக மற்றைய வீரர்களில் இருந்து தனித்து நிற்கிறார். ரொனால்டோ பல நாடுகளில் லீக் பட்டங்களை வென்றுள்ளார். ரொனால்டோ பங்குபற்றிய 292 விளையாட்டுகளில் 311 கோல்களை அடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://tamil.adaderana.lk/news.php?nid=135112

    • 1 reply
    • 676 views
  22.  டெஸ்ட் போட்டிகளில் மேலும் புதிய மாற்றங்கள்? அவுஸ்திரேலிய, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான பகல் இரவு டெஸ்ட் போட்டி நடைபெற்று முடிந்ததையடுத்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் மேற்கொள்ளப்படவேண்டிய மாற்றங்கள் குறித்து பல தரப்பாலும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை மேலும் போட்டித் தன்மை வாய்ந்ததாக மாற்றவும், இரசிகர்களை கவரவும் இத்தகைய மாற்றங்கள் அவசியம் என்று வலியுறுத்தப்பட்டுவருகிறது. அவற்றிலே முக்கியமாக, போட்டிக்கு முன்னதான நாணயச் சுழற்சியை நிறுத்துவதற்கான ஆலோசனை பற்றி கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் தமது கருத்துக்களை வெளியிட்டுவருகின்றனர். டெஸ்ட் போட்டிகளில் பங்குபெற ஒரு நாட…

  23. படுமோசமான பேட்டிங்: ஷான் மார்ஷை கிளென் மெக்ராவுடன் ஒப்பிட்ட இயன் சாப்பல் ஆஸ்திரேலிய பேட்ஸ்மென் ஷான் மார்ஷ். | படம்: ஏ.எஃப்.பி. ஆஸ்திரேலிய இடது கை பேட்ஸ்மேன் ஷான் மார்ஷ் டெஸ்ட் போட்டிகளில் கடுமையாக சொதப்பி வருவதையடுத்து அவரது பேட்டிங்கை கிளென் மெக்ராவுடனும், டேனி மாரிசனுடனும் ஒப்பிட்டார் முன்னாள் கேப்டன் இயன் சாப்பல். நடந்து முடிந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க அடிலெய்ட் பகலிரவு டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஷான் மார்ஷ் ரன் அவுட் ஆனார். ஆனால் இரண்டாவது இன்னிங்சில் கடுமையாகப் போராடி முக்கியப் பங்களிப்பாக 49 ரன்களைச் சேர்த்தார் ஷான் மார்ஷ். ஆனால், இதுவும் கூட இயன் சாப்பலை வசீகரிக்கவில்லை. அவர் அணியில் நீடிப்பது பற…

  24. சம்பியன்ஸ் லீக்: பார்சிலோனா அணிக்கு அதிர்ச்சி கொடுத்து தொடரிலிருந்து வெளியேற்றியது லிவர்பூல் ஐரோப்பாவிலிருக்கும் உயர்தர கால்பந்து கழகங்களுக்காக நடத்தப்படும் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர், தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் தற்போது இத்தொடரில், அரையிறுதி சுற்றின் இரண்டாவது லெக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், நேற்று பலம் பொருந்திய அணிகளான பார்சிலோனா அணியும் லிவர்பூல் அணி அணியும் பலப்பரீட்சை நடத்தின. இரசிகர்களின் உச்சக் கட்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியானது, இங்கிலாந்தில் உள்ள என்பீல்ட் விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்த நிலையில், லிவர்பூல் அணி, நட்சத்திர வீரர்களான முகமது சாலா மற்று…

  25. இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய முகாமையாளர் இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய முகாமையாளராக ஜெரோம் ஜெயரத்னவை இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் நியமித்துள்ளது. அதன்படி பெப்ரவரி மாதம் இலங்கை அணியின் மேற்கிந்தியத்தீவுகள் சுற்றுப்பயணத்தின் போது இலங்கை அணியின் முகாமையாளராக ஜெயரத்ன இருப்பார். தனிப்பட்ட காரணங்களினால் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று முடிந்த இரு டெஸ்ட் போட்டிகளுடன் அசந்த டி மெல், அணியின் முகாமையாளர் பதவியிலிருந்து விலகியதையடுத்து ஜெரோம் ஜெயரத்ன குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவிக்கு மேலதிகமாக ஜெர்மி ஜெயரத்ன இலங்கை கிரிக்கெட்டின் தலைமை இயக்க அதிகாரியாகவும் பணியாற்றுவார். தொழில்முறை பயிற்சியாளரான ஜெயரத்ன முன்னதாக இலங்கை கிரிக்கெட்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.