விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
இலங்கை – ஜேர்மனி நட்புறவு கால்பந்தாட்டம் 2016-03-01 10:21:01 (நெவில் அன்தனி) இலங்கைக்கு வருகைதந்த ஜேர்மனியின் ப்ரோமெட்லின்க் விளையாட்டுக் கழக உறுப்பினர்களும் இலங்கைக்கான ஜேர்மன் தூதரக அதிகாரிகளும் இணைந்து இலங்கையின் முன்னாள் வீரர்களைக் கொண்ட அணியினருடன் சிநேகபூர்வ கால்பந்தாட்டப் போட்டியில் விளையாடினர். தேசிய ஒலிம்பிக் குழுவின் செயலாளர் நாயகம் மெக்ஸ்வெல் டி சில்வா இந்தப் போட்டியை ஏற்பாடு செய்திருந்தார். இலங்கைக்கும் ஜேர்மனிக்கும் இடையிலான உறவுகளைப் பலப்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இப் போட்டியில் ஜேர்மன் தூதரகத்தின் பிரதி தூதுவர் மைக்கல் டோர்மனும் பங்குபற்றி சிறப்பித்தார்.…
-
- 0 replies
- 424 views
-
-
இலங்கை – தென்னாபிரிக்க அணிகள் மோதும் இறுதி இருபதுக்கு இருபது போட்டி இன்று! இலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது போட்டி இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. ஜொஹன்னஸ்பேர்கில் இலங்கை நேரப்படி மாலை 6 மணிக்கு இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது. இரண்டு போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் தென்னாபிரிக்க அணி 2 – 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளதுடன், தொடரிலும் முன்னிலை பெற்றுள்ளது. இலங்கைக்கு எதிராக 2 ஆவது போட்டியில் களமிறங்கிய தென்னாபிரிக்க குழாத்தினரே இன்றைய போட்டியிலும் களமிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், இலங்கை அணியின் சதீர சமரவிக்ரம மற்றும் ஹசித பெர்னாண்டோ ஆகியோர் இன்றைய போட்டிக்காக அழைக்கப்பட…
-
- 1 reply
- 891 views
-
-
இலங்கை – பங்களாதேஷ் இடையிலான போட்டி அட்டவணை வெளியீடு இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ள கிரிக்கெட் சுற்றுத் தொடர்களுக்கான போட்டி அட்டவணை நேற்று (14) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன்படி, இவ்விரு அணிகளுக்கிடையிலான டெஸ்ட் மற்றும் T-20 தொடர்கள் ஆரம்பமவாதற்கு முன்னர் இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுடனான முத்தரப்பு ஒரு நாள் போட்டித் தொடரை நடத்துவதற்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. இறுதியாக 2010ஆம் ஆண்டிலேயே பங்களாதேஷில் முத்தரப்பு ஒரு நாள் போட்டித் தொடரொன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 7 போட்டிகளைக் கொண்ட இந்த போட்டித் தொடரின் அனைத்துப் போட்டிகளு…
-
- 1 reply
- 509 views
-
-
இலங்கை – பங்களாதேஷ் இளையோர் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம் – யாழ் வீரருக்கும் வாய்ப்பு! இலங்கை இளையோர் மற்றும் பங்களாதேஷ் இளையோர் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் இன்று(செவ்வாய்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. இரு அணிகளும் 02 டெஸ்ட் மற்றும் 05 சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் மோதவுள்ளன. இந்தநிலையில் குறித்த தொடருக்கான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று கொழும்பு என்.சி.சி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இந்த தொடருக்கான இலங்கை குழாமில் யாழ் மத்தியக்கல்லூரியின் விஜயகாந்த் வியாஷ்காந் பெயரிடப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே இந்திய இளையோர் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாடி தமது திறமையை நிரூபித்திருந்தார். இதனிடையே கொழும்பு சாஹிரா கல்லூரியின் துடுப்பாட…
-
- 0 replies
- 376 views
-
-
இலங்கை – பாகி. டெஸ்ட் தொடரில் சிறப்பு விருந்தினராக வர்ணபுர, ஜாவேட் By Mohamed Azarudeen - பாகிஸ்தான் மண்ணில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையில் இடம்பெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் கிரிக்கெட் வீரர்களான ஜாவேட் மியான்டாட் மற்றும் பந்துல வர்ணபுர ஆகியோரை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அழைக்கவுள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி மீது தீவிரவாத தாக்குதல் நடாத்தப்பட்டிருந்தது. அதன் பின்னர் பாகிஸ்தானில் கடந்த 10 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதுவும் பெரிதாக நடைபெறவில்லை. தற்போது …
-
- 0 replies
- 777 views
-
-
இலங்கை 157 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தில்... February 13, 2016 10:09 am 12வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை 25 தங்கப் பதக்கங்களையும் 53 வெள்ளிப் பதக்கங்களையும், 79 வெண்கலப் பதக்கங்களையும் இலங்கை வென்றுள்ளது. இதன் அடிப்படையில் இலங்கை 157 பதக்கங்களை இதுவரை வென்று, பதக்கப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கின்ற அதேவேளை முதலாவது இடத்தில் இந்தியா இருக்கின்றது. இந்தியா இதுவரை 146 தங்கப் பதக்கங்களையும் 80 வெள்ளிப் பதக்கங்களையும் 23 வெண்கலப் பதக்கங்களையும் பெற்றுள்ளது. பாகிஸ்தான பதக்கப் பட்டியலில் மூன்றாம் இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=76994
-
- 0 replies
- 466 views
-
-
இலங்கை இந்திய அணிகளிடையேயான 1 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இந்தியாவின் நாக்பூர் நகரில் பகல் ஆட்டமாக நடைபெறவுள்ளது. இவ்விரு அணிகளுக்குமிடையில் இம்முறை முதல் தடவையாக 7 ஒருநாள் போட்டிகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் இவ்வருட முற்பகுதியில் இலங்கை இந்திய மேற்கிந்தியத்தீவு அணிகளிடையே நடைபெற்ற முக்கோண ஒருநாள் போட்டியில்இ இலங்கைஇ இந்திய அணிகளிடையே நடைபெற்ற முதல் இரு சுற்று ஆட்டங்களிலும்இ இறுதியில் இவ்விரு அணிகளிடையே நடைபெற்ற சாம்பியன் மோதலிலும் இலங்கை அணியே வெற்றிபெற்றது. தற்போது இந்திய மண்ணில் இவ்விரு அணிகளுக்குமிடையில் 7 போட்டிகள் நடைபெற இருப்பதனால்இ இவ்விரு அணிகளுக்குமிடையில் கடும்போட்டி நிலவக்கூடும். இலங்கையி…
-
- 39 replies
- 7.6k views
-
-
இலங்கை அணி இரண்டாவது சுற்றுக்கு 99% தெரிவாகிவிட்டது. இதானால் இவ் அணி பாரததிற்கு எதிரான போட்டியில் அரசியல் செய்து தோல்வியை தழுவும் என்நம்புகிறேன். வேலைக்கு முழுக்கு போட்டு இவ் விளையாட்டை பார்ப்பவர்கள் சிந்திக்கவும். கிரிக்கெட்டில் முழு பைத்தியம்மாக இருக்கும் பாரத அணிக்கும் இலங்கை அணி கை கொடுக்கும் என நம்புகிறேன். இதனால் இந்தியாவின் செல்லப் பிள்ளையாக இலங்கை இருக்கும்.
-
- 10 replies
- 2.1k views
-
-
இலங்கை அணி 164 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி! இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற 2 வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 164 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணி - 253 மற்றும் 132 ஓட்டங்கள் இலங்கை அணி - 204 மற்றும் 345/9 ஓட்டங்கள் இலங்கை அணி சார்பில் சிறப்பான துடுப்பாட்டத்தை வௌிப்படுத்திய தனஞ்சய டி சில்வா 2 வது இன்னிங்ஸில் ஆட்டம் இழக்காது 155 ஓட்டங்களை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. இலங்கை அணி 164 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி! (adaderana.lk)
-
- 0 replies
- 378 views
-
-
இலங்கை அணி 219 ஓட்டங்களால் அமோக வெற்றி இங்கிலாந்து அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 219 ஓட்டங்களினால் அமோக வெற்றியீட்டியுள்ளது. இந்தப் போட்டிக்கும் மழை குறுக்கிட்டதனால் டக்வர்த் லுவிஸ் முறைமையின்படி இலங்கைக்கு வெற்றியென நடுவர்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 367 ஓட்டங்களுக்காக பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 26.1 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்புக்கு 132 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் மழை குறுக்கிட்டது. http://www.dailyceylon.com/170632
-
- 0 replies
- 342 views
-
-
இலங்கை அணி 231 ஓட்டங்களுக்கு ஆட்டமிழப்பு இலங்கை – தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 47 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 231 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. நாணயச் சுழற்சியில் வென்ற தென் ஆபிரிக்க அணி இலங்கையை முதலில் துடுப்பெடுத்தாடும்படி அழைத்தது. தென் ஆபிரிக்க அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய இம்ரான் தாஹிர் மற்றும் லுங்கி எங்கிடி ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளனர். 232 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு தென் ஆபிரிக்கா அணி பதிலுக்கு துடுப்பெடுத்தாடவுள்ளது. http://www.dailyceylon.com/178699
-
- 1 reply
- 700 views
- 1 follower
-
-
சங்ககாரா 192 ஓட்டங்களைப் பெற்றபோதும் இலங்கை அணி 96 ஓட்டங்களால் தோல்வி [21 - November - 2007] [Font Size - A - A - A] * தொடரைக் கைப்பற்றியது அவுஸ்திரேலியா இலங்கை - அவுஸ்திரேலிய அணிகளிடையே ஹோபேற்றில் நடைபெற்ற 2 ஆவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்றதன் மூலம் 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலியா 2-0 என கைப்பற்றியுள்ளது. பிறிஸ்பேனில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி இனிங்ஸாலும் 40 ஓட்டங்களாலும் வெற்றிபெற்றது. 2 ஆவது டெஸ்டின் 4 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் தனது 2 ஆவது இனிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 247 ஓட்டங்களைப் பெற்றிருந்த இலங்கை அணிக்கு 5 ஆம் நாள் ஆரம்பமே மோசமாக அமைந்தது. 4 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 33 ஓட்டங்களுட…
-
- 1 reply
- 1.3k views
-
-
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் இலங்கை அணி 37 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடியது. இதற்கமைய இலங்கை அணி, இருபது ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 125 ஓட்டங்களை பெற்றது. அணி சார்பில் தனுஸ்க குணதிலக்க அதிகூடுதலாக 30 ஓட்டங்களையும், நிரோசன் திக்வெல்ல 24 ஓட்டங்களையும், லஹிரு மதுசாங்க 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பதிலுக்கு துடுப்பாடிய நியூசிலாந்து அணி 16 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 88 ஓட்டங்கள் மாத்திரமே பெற்றது. போட்டியில் இலங்கை அணியின் இருபதுக்கு 20…
-
- 2 replies
- 519 views
-
-
இலங்கை அணி கர்ஜிக்குமா? பதுங்குமா?- சிக்ஸர் ஃபீவர் #WT20 ( மினிதொடர் - 2) நாள்- ஏப்ரல் 6, 2014 இடம்- வங்கதேச நாட்டின் மிர்பூரில் உள்ள ஷீர் பங்களா நேஷனல் ஸ்டேடியம் சம்பவம் - 2014 உலககோப்பையில் ஒரு போட்டியில் கூட தோற்காமல், செம ஸ்ட்ராங்காக ஃபைனல் வந்த இந்திய அணியை அசால்ட்டாக தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது மலிங்கா தலைமையிலான இலங்கை அணி. அந்த நாள் தான் இலங்கை அணி கடைசியாக சிறந்த பெர்பார்மென்சை வெளிப்படுத்திய நாள். அதன் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இறங்கு முகம் தான். ஜெயவர்த்தனே மற்றும் சங்கக்காரா ஆகிய இருவரும் ஓய்வு பெற்றபிறகு பல் பிடுங்கப்பட்ட பாம்பு போல வளைய வருகிறது இலங்கை அணி. புதிதாக அணிக்குள் வந்துள்ள இளைஞர்கள் நம்பிக்கை தரு…
-
- 0 replies
- 609 views
-
-
இலங்கை அணி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி மஹேலவை வழியனுப்பியது பாகிஸ்தானுக்கு எதிரான 2 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 105 ஓட்டங்களால் வெற்றிபெற்று 2-0 என தொடரை தன் வசமாக்கியது. இதன்மூலம் இலங்கை அணியின் சிரேஷ்ட வீரரும் முன்னாள் அணித் தலைவருமான மஹேல ஜெயவர்தனவுக்கு சிறந்ததொரு பிரியாவிடை வழியனுப்புதலையும் இலங்கை அணி அளித்துள்ளது. இங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் காலியில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை பெற்றிருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி கடந்…
-
- 0 replies
- 795 views
-
-
இலங்கை அணி துடுப்பாட்டத்தில் தடுமாறுகிறது ; அரவிந்த இலங்கை அணியின் துடுப்பாட்டம் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் அரவிந்த டி சில்வா தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்காவுக்கெதிரான டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 போட்டிகளில் இலங்கை அணி துடுப்பாட்டத்தில் தடுமாறி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் டிக்வெல்ல மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோரின் துடுப்பாட்டம் சிறப்பாக அமைந்துள்ளதெனவும், அவர்களுக்கான வாய்ப்புகள் அதிகமாக வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். தென்னாபிரிக்காவுக்கெதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இலங்கை அணி இழந்துள்ள நிலையில், இருபதுக்கு-20 தொடரை மா…
-
- 0 replies
- 258 views
-
-
[size=2] [/size] இலங்கை அணி தோல்வியடைவதற்கு, ரணிலே காரணம்; ஸ்ரீரங்கா. நடந்து முடிந்த இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைவதற்கு ௭திர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே காரணம். வெற்றி பெறும் தறுவாயில் இருந்த போட்டியை ரணில் விக்கிரமசிங்க பார்வையிடச் சென்றமையினாலேயே போட்டி தோல்வியடைந்தது ௭ன்று ஐக்கிய தேசியக் கட்சி ௭ம்.பி. யான ஜே. ஸ்ரீரங்கா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஆட்ட நிர்ணய சதி குறித்து விசாரணை நடத்துவதை விடுத்து 29 தடவை தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடைந்தமை குறித்தே ரணில் விக்கிரமசிங்க மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் ௭ன்றும் அவர் சொன்னார். பாராளுமன்றத்தின் நேற்று செவ்வாய்க்கிழமை அமர…
-
- 6 replies
- 1.1k views
-
-
இலங்கை அணி பாக்கிஸ்தான் சென்றடைந்தது- குண்டு துளைக்காத பேருந்தில் விமானநிலையத்திலிருந்து அழைத்துச்செல்லப்பட்டனர். மீண்டும் பாக்கிஸ்தான் வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கின்றது என இலங்கை இருபதிற்கு இருபது அணியின் தலைவர் திசாரபெரேரா தெரிவித்துள்ளார். மூன்றாவது இருபதிற்கு இருபது போட்டிகளிற்காக இலங்கை அணியினர் கடும் பாதுகாப்பி;ன் மத்தியில் பாக்கிஸ்தானை சென்றடைந்துள்ளனர். விமானநிலையத்திலிருந்து அவர்கள் குண்டுதுளைக்காத பேருந்து மூலம் ஹோட்டலிற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.வீதிகளில் நூற்றுக்கணக்கில் படையினர் குவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் லாகூர் ஹோட்டலை சென்றடைந்துள்ளனர். இதேவேளை பாக்கிஸ்தானிற்கு மீண்டும் வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக…
-
- 1 reply
- 293 views
-
-
இலங்கை அணி பாரிய இழப்பை சந்திக்கும்: ரசல் ஆர்னல்ட் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இலங்கை அணியின் இரட்டையர்கள் என வர்ணிக்கப்படும் குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் ஓய்வு பெற்றதன் பின்னர் இலங்கை அணி பாரிய இழப்பை சந்திக்க நேரிடும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான ரசல் ஆர்னல்ட் தெரிவித்தார். ஒரு நாள் அரங்கில் இலங்கை அணியின் நட்சத்திர வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோரின் ஓய்வு குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இரட்டை சகோதர்களான சங்கக்கார, ஜயவர்தன ஆகியோர் இலங்கை கிரிக்கெட் அணியின் மிகப்பெரிய இரு தூண்கள் ஆவர். ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் ஓய…
-
- 0 replies
- 549 views
-
-
இலங்கை அணி பிரகாசிக்கும் என எதிர்பார்க்க முடியும் - குமார் சங்கக்கார நம்பிக்கை 2016-05-17 14:03:37 இளம் வீரர் குசல் மெண்டிஸ் வளர்ச்சிய அடையும்போது இலங்கை கிரிக்கெட் அணிக்கு பெரும் பங்களிப்பு செய் வார் என குமார் சங்கக்கார நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ''21 வயதே உடைய குசல் மெண்டிஸ் சாதுரியமாகவும் பந்து விழும் இடத்தை சரியாகக் கணித்தும் மிகவும் சிறப்பாக துடுப்பெடுத்தாடி வருகின்றார். அவரைக் கொண்டு கிரிக்கெட் அரங்கில் நிறைய எதிர்பார்க்கலாம். வருடங்கள் செல்ல செல்ல அவர் சிறப்பு வாய்ந்த ஒருவராக உயர்வார்'' என குமார் சங்கக்கார மேலும் தெரிவித்தார். இங்கிலாந்துக்கு எதிராக ஆரம்பமா…
-
- 0 replies
- 548 views
-
-
இலங்கை அணி மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும்: சனத் இந்திய தொடர் மோசமான கனவாக முடிந்து விட்டாலும், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இலங்கை மீண்டும் பழைய நிலைக்கு வரும் என தெரிவு குழுத் தலைவர் சனத் ஜெயசூரியா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்த இலங்கை அணியை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா. இதனால் இலங்கைக்கு இந்த தொடர் மோசமான தோல்வியாக அமைந்து விட்டது. இந்நிலையிலேயே சனத் ஜெயசூரியா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பில் மேலும் கூறுகையில், இந்தியத் தொடர் மோசமான கனவாக முடிந்து விட்டாலும், இம் மாதம் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இலங்கை மீண்டும் பழைய நிலைக்கு வரும். இலங…
-
- 0 replies
- 410 views
-
-
இலங்கை அணி முதலில் துடுப்பாட்டம் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று காலை கொழும்பு பி. சரவணமுத்து மைதானத்தில் ஆரம்பமாகவிருந்த நிலையில் மழை காரணமாக போட்டியின் நாணயச்சுழற்சி தாமதமாகியது. இன்றைய போட்டியில் இலங்கை அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்ஜயவுக்கு பதிலாக அனுபவ சுழற்பந்துவீச்சாளர் டில்ருவன் பெரேரா இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது . http://www.dailyceylon.com/188267/
-
- 0 replies
- 728 views
-
-
இலங்கை அணி ரசிகருக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றிய ரோஹித் சர்மா Image Courtesy - Mohamed Nilam's Facebook page சுதந்திரக் கிண்ண முக்கோண T20 தொடரில் இந்திய அணியின் தலைவராக செயற்பட்டிருந்த ரோஹித் சர்மா, தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இலங்கை அணியின் தீவிர ரசிகரான மொஹமட் நிலாமின் வீட்டுக்குச் சென்று இன்ப அதிர்ச்சி தந்தது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரு விடயமாக மாறியிருக்கின்றது. யார் இந்த மொஹமட் நிலாம்? இலங்கை கிரிக்கெட் அணி எந்த நாட்டிற்கு சென்று எப்படியான தொடர்களில் விளையாடினாலும் குறித்த தொடருக்காக அந்நாட்டுக்கே பயணம் செய்து போட்டி நடக்கும் மைதானத்தில் இலங்கை அணிக்கு ஆதரவு தரும் ரசிகர்கள் சிலர் உள்ளனர். அந்த …
-
- 0 replies
- 495 views
-
-
இலங்கை அணி ரசிகர்களுக்கு சங்கா விடுக்கும் அவசர வேண்டுகோள் இலங்கை அணி தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் தம்புள்ளையில் ரசிகர்கள் இணைந்து ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்ததையடுத்து மேற்கிந்தியத் தீவுகளில் இருக்கும் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் கிரிக்கெட் ஜாம்பவானுமான குமார் சங்கக்கார இலங்கை அணி ரசிகர்களுக்கு காணொளி மூலமான அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரும் ஜாம்பவானுமான குமார் சங்கக்கார தற்போது மேற்கிந்தியத்தீவுகளில் இடம்பெற்றுவரும் கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் ஜமெய்க்கா தளவஹாஸ் அணியின் தலைவராக செயற்பட்டு வருகின்றார். இந்நிலையில், தாய்நாடு தொடர்ச்சியான பல தோல்விகளை ச…
-
- 0 replies
- 318 views
-
-
இலங்கை அணி ரசிகர்களுக்கு மஹேலவின் வேண்டுகோள் ! இலங்கை அணியை சிக்கலில் இருந்து ரசிகர்களாகிய நாம் முன்னோக்கிக்கொண்டு செல்வதற்கு தேவையான தீர்வுகளை ஆராய வேண்டுமென இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர வீரருமான மஹேல ஜெயவர்தன டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இடம்பெற்றுவரும் ஆசியக் கிண்ணத் தொடர்ரில் இலங்கை அணி பங்களாதேஷ் அணியிடமும் ஆப்கானிஸ்தான் அணியிடமும் படு மோசமாக தோல்வியடைந்தது. இந்நிலையில் இலங்கை அணி மீதும் வீரர்கள் மீதும் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் மிக மோசமாக விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திரவீரருமான மஹேல ஜெயவர்தன தனது டுவிட்டர் பக்கத்தில் மேற்க…
-
- 0 replies
- 671 views
-