விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7834 topics in this forum
-
மெஸ்சி சாதனை: பார்சிலோனா வெற்றி நவம்பர் 06, 2014. பாரிஸ்: சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் அசத்திய பார்சிலோனா அணியின் மெஸ்சி அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையை சமன் செய்தார். ஐரோப்பாவில் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் நடக்கிறது. பாரிசில் நடந்த லீக் போட்டியில் பார்சிலோனா, அஜக்ஸ் அணிகள் மோதின. இதன் முதல் பாதியில் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்சி 36வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இரண்டாவது பாதியிலும் அசத்திய மெஸ்சி (76வது நிமிடம்) மீண்டும் ஒரு கோல் அடித்து அணியை வலுப்படுத்தினார். எதிரணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. முடிவில், பார்சிலோனா அணி 2–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று ‘ரவுண்ட்–16’ சுற்றுக்கு முன்னேறியது. இதன் மூலம், சாம்பியன்ஸ் லீ…
-
- 0 replies
- 473 views
-
-
இலங்கையில் மேட்ச் பிக்ஸிங்: ஹசான் திலகரத்ன குற்றச்சாட்டு இலங்கை கிரிக்கெட்டில் 1992-ம் ஆண்டில் இருந்து மேட்ச் பிக்ஸிங் எனப்படும் சூதாட்டம் நடப்பது சாதாரணமானதுதான் என அந்நாட்டின் முன்னாள் கேப்டன் ஹசான் திலகரத்ன கூறியுள்ளார். சூதாட்டங்களில் ஈடுபட்டவர்களின் பெயர்களை விரைவில் வெளியிடுவேன் என்று அவர் உறுதிபடக் கூறினார். மேட்ச் பிக்ஸிங் இன்று, நேற்று தொடங்கியதல்ல. எனக்குத் தெரிந்தவரை, 1992-ம் ஆண்டில் இருந்து அது நடைபெறுகிறது. பொறுப்புணர்ச்சியுடன் இதைக் கூறுகிறேன் என திலகரத்ன குறிப்பிட்டார். ஏப்ரல் 2003 மற்றும் மார்ச் 2004-க்கு இடைப்பட்ட காலத்தில் திலகரத்ன இலங்கை அணியின் கேப்டனாக இருந்தார். சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பணபலத்தால் இந்த விவகாரத்தை வெற்…
-
- 2 replies
- 1.4k views
-
-
வீரர்களின் ரகசியங்களை வெளியிட்ட ஐ.பி.எல். நடன அழகி நீக்கம். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ரசிகர்களையும், வீரர்களையும் உற்சாகப்படுத்துவதற்காக ஒவ்வொரு அணிகளும் `சியர்ஸ் லீடர்ஸ்' என்ற அழகிகளின் நடனத்துக்கு ஏற்பாடு செய்துள்ளன. இதற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் தென்ஆப்பிரிக்காவில் இருந்து 40 நடன அழகிகள் பணிக்கு அமர்த்தப்பட்டனர். இவர்களில் ஒருவரான கேப்ரியலா (வயது 22) திடீரென சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். அவர் வீரர்களின் அந்தரங்க விஷயங்களை கசியவிட்டதால் நீக்கப்பட்டது இப்போது தெரியவந்துள்ளது. போட்டிக்கு பிறகு நடக்கும் விருந்துகளில் வீரர்கள் அடிக்கும் கும்மாளங்களையும், தன்னை போன்ற நடன அழகிகளுடன் வீரர்கள் நெருங…
-
- 25 replies
- 3.1k views
- 1 follower
-
-
தன்னம்பிக்கை மிகுந்த ஆக்ரோஷமான கேப்டன் தேவை: தோனி மீது கங்குலி விமர்சனம் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் நல்ல நிலையிலிருந்து மோசமான நிலைக்கு இந்திய அணி செல்வதற்கு தோனியின் கேப்டன்சி அணுகுமுறையே காரணம் என்று பலதரப்பிலும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. பொதுவாக தோனியை பாராட்டும் இயன் சாப்பல், ஆஸ்திரேலியாவை 216/5 என்ற நிலையிலிருந்து 530 ரன்கள் எடுக்க விட்டதற்கு காரணம் தோனியே என்று கூறியுள்ளார். கடந்த டெஸ்ட் போட்டியில் மிட்செல் ஜான்சனுக்கு ஷாட் பிட்ச் பந்துகளை வீசி பல்பு வாங்கிய இந்திய அணி இன்று பிராட் ஹேடின், ரயான் ஹேரிஸ் ஆகியோரிடம் மீண்டும் பல்பு வாங்கியது. களத்தில் தோனியின் எந்த வித நோக்கமுமற்ற தோனியின் கேப்டன்சியினால் இந்திய அணி காயப்பட்டுள்ளது என்று கூறிய இயன் சாப்பல…
-
- 0 replies
- 558 views
-
-
இலங்கை உலக கிண்ணத்தை வெல்வது கடினம் ; ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார் அர்ஜுன 2019 ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை நாம் வெல்வது கடினமே. காரணம் கிரிக்கெட் அந்தளவு தூரம் இன்று கீழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு புக்கி கரர்களளே பிரதான காரணம் என அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், கடந்த அரசாங்கத்தில் விளையாட்டுத்துறை அமைச்சரிடம் சில குறைபாடுகள் காணப்பட்டாலும் அவர் சட்டத்தை சரியான முறையில் நடைமுறைபடுத்தி புக்கிகரர்களையும் சூதாட்டக்காரர்களையும் கிரிக்கெட் நிர்வாகத்தில் சேர்க்கவில்லை. ஆனால் தயாசிறி விளையாட்டுத்துறை அமைச்சரானதும் என்ன நடந்தது? அவர் ஒரு சட்டத்தரணி எனினும் கிரிக்…
-
- 5 replies
- 1k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 1983இல் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா பலம் வாய்ந்த மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொண்டது. கட்டுரை தகவல் எழுதியவர், ரெஹான் ஃபசல் பதவி, பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கான, ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 1983இல் இங்கிலாந்தில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில், அப்போது வலிமையான அணியாகத் திகழ்ந்த மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது இந்திய அணி. கபில்தேவ் தலைமையிலான இந…
-
- 0 replies
- 296 views
- 1 follower
-
-
தலைமை பயிற்சியாளர் தேவையா: ரவி சாஸ்திரி விளக்கம் கோல்கட்டா: ‘‘இந்திய அணியில் 3 பயிற்சியாளர்கள் உள்ளனர். இதனால் தற்போது தலைமைப்பயிற்சியாளராக வேறு யாரும் வேண்டாம்,’’என, இந்திய அணியின் ரவி சாஸ்திரி கூறினார். வங்கதேசம் செல்லும் இந்திய அணி ஒரு டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. பதுல்லாவில் வரும் 10ம் தேதி டெஸ்ட் துவங்குகிறது. இதற்கான இடைக்கால பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார். தவிர, அணி இயக்குனர் பதவியிலும் இவர் தொடர்வார். இதில் பங்கேற்கும் கோஹ்லி தலைமையிலான இந்திய வீரர்கள், கோல்கட்டாவில் இரண்டு நாள் பயிற்சியில் ஈடுபடுகின்றனர். நாளை வங்கதேசம் புறப்படுகின்றனர். இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் அணி இயக்குனர் ரவி சாஸ்திரி கூறு…
-
- 0 replies
- 234 views
-
-
ஒரு தொடரை இழந்தால் தோனிக்குள்ள மரியாதை போய் விடுமா? - சுரேஷ் ரெய்னா கேள்வி! ஒரு தொடரை இழந்தவுடன் தோனிக்குள்ள மரியாதை போய் விடுமா? என்று இந்திய அணி வீரர் சுரேஷ் ரெய்னா கேள்வி எழுப்பியுள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரை, இந்திய அணி 2-1 என்று இழந்தாலும், கடைசி போட்டியில் 77 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றதால், வொயிட் வாஷில் இருந்து தப்பியது. கடைசி ஒருநாள் போட்டியில் 21 பந்துகளில் 38 ரன்கள் விளாசிய சுரேஷ் ரெய்னா, கேப்டன் தோனிக்கு களத்திலும் வெளியேயும் எப்போதும் பக்கபலமாக இருப்பவர். வங்கதேசத்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்ததும் தோனி கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இது குறித்து சுரேஷ் ரெய்னா கூறுகையில், ''தோனி எப்போதும் பாசிட்டிவான போக…
-
- 0 replies
- 293 views
-
-
இங்கிலாந்தில் கலக்கும் சங்கக்காரா: ‘திரில்’ வெற்றி பெற்ற சர்ரே அணி இங்கிலாந்தில் நடக்கும் நாட்வெஸ்ட் டி20 போட்டியில் சங்கக்காரா விளையாடி வரும் சர்ரே அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது.ஒருநாள், டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட சங்கக்காரா, இந்தியாவுடனான 2வது டெஸ்ட் போட்டியோடு டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறவுள்ளார். இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய சங்கக்காரா, நாட்வெஸ்ட் டி20 தொடரில் விளையாடி வருகிறார். இந்நிலையில் சர்ரே- குளோசஸ்சியர் அணிகள் மோதிய போட்டியில் சர்ரே அணி 4 விக்கெட் விக்கெட்டுகளால் 'திரில்' வெற்றியை பெற்றது. முதலில் விளையாடிய குளோசஸ்சியர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்…
-
- 0 replies
- 353 views
-
-
சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர் ரத்து! சாம்பியன்ஸ் லீக் டி 20 தொடரை ரத்து செய்வதாக பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இல்லாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல்., ஆஸ்திரேலியாவின் பிக்பேஷ், தென்ஆப்ரிக்காவின் ராம்ஸ்லாம் டி20 தொடர்களில் சாம்பியன் பட்டம் வெல்லும் மற்றும் இரண்டாவது இடம் பிடிக்கும் அணிகளை கொண்டு சாம்பியன்ஸ் லீக் டி 20 போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த ஆண்டுக்கான தொடர் செடப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் சாம்பியன்ஸ் லீக் தொடர் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பி.சி.சி.ஐ, கிரிக்கெட் ஆஸ்திரேலியா, தென்ஆப்ரிக்க கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் மற்றும் ஸ்பான்சர்களின் கூ…
-
- 0 replies
- 298 views
-
-
ஐபிஎல் சூதாட்ட வழக்கில் விடுவிக்கப்பட்ட வீரர்களுக்கு எதிராக மேல்முறையீடு! புதுடெல்லி: ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் விடுவிக்கப்பட்ட 36 வீரர்களுக்கு எதிராக டெல்லி காவல்துறை மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து வழக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடந்தது. இதில் குற்றஞ்சாட்டப்பட்ட ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கித் சவான் உள்ளிட்ட 36 விளையாட்டு வீரர்கள், குற்றம் செய்ததற்கான போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி, அவர்களை நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்நிலையில், பாட்டியாலா நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட 36 விளையாட்டு வீரர்களுக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில், டெல்லி காவல்துறை மேல்முறை…
-
- 0 replies
- 176 views
-
-
பாகிஸ்தான் செல்லும் பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணிக்கு அதியுயர் பாதுகாப்பு பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யவுள்ள பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணிக்கு அதியுயர் பாதுகாப்பு வழங்கப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உறுதியளித்துள்ளது. பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணியினர் இம் மாதம் 28ஆம் திகதி பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் விஜயம் செய்யவுள்ளனர். இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது 2009இல் இடம்பெற்ற பயங்கரவாத துப்பாக்கிப் பிரயோகத்திற்குப் பின்னர் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி ஒன்று பாகிஸ்தானுக்கு செல்வது இதுவே முதல் தடவையாகும். பங்களாதேஷ், பாகிஸ்தான் மகளிர் அணிகள் இரண்டு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் இரண்டு இருபத…
-
- 1 reply
- 205 views
-
-
ஃபீஃபா தேர்தல் பெப்ரவரி 26 இல் சர்வதேச கால்பந்தாட்ட சங்கங்களின் சம்மேளனத் தலைவர் பதவிக்கான தேர்தல் 2016 பெப்ரவரி 26ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதனை சம்மேளனம் நேற்று உறுதி செய்தது. 1998முதல் சம்மேளனத்தின் தலைவராக பதவி வகித்துவந்து செப் ப்ளட்டர், மோசடி குற்றச்சாட்டில் சிக்கி விசாரணையை எதிர்கொண்டுள்ளதால் அப் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். அவரது இடத்திற்கு புதிய தலைவர் யார் என்பதை இத் தேர்தல் தீர்மானிக்கும். - See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=12838#sthash.bsEbvurW.dpuf
-
- 0 replies
- 274 views
-
-
இப்படி இனி விளையாட மாட்டேன்: ஸ்டோக்ஸ் தென்னாபிரிக்க, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டியில் அதிரடி இரட்டைச் சதத்தைப் பெற்ற இங்கிலாந்தின் சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ், தனது வாழ்நாளில், இப்படி இனிமேல் அனேகமாகத் துடுப்பெடுத்தாட முடியாது எனத் தெரிவித்துள்ளார். 24 வயதான பென் ஸ்டோக்ஸ், 30 நான்கு ஓட்டங்களையும் 11 ஆறு ஓட்டங்களையும் விளாசி, 258 ஓட்டங்களைப் பெற்றார். இவ்வோட்டங்களைப் பெற, வெறுமனே 198 பந்துகளை மாத்திரமே அவர் எடுத்துக் கொண்டார். தனது இரட்டைச் சதத்தை 163 பந்துகளில் அடைந்த ஸ்டோக்ஸ், டெஸ்ட் போட்டிகளில் பெறப்பட்ட இரண்டாவது வேகமான இரட்டைச் சதம் என்ற சாதனையும் இங்கிலாந்து சார்பாகப் பெறப்ப…
-
- 0 replies
- 471 views
-
-
இங்கிலாந்து கிரிக்கெட் சபைக்குக் கிடுக்குப்பிடி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபைக்கு, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கடுமையான அழுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. சர்வதேச கிரிக்கெட் சபையில், 2014ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் தொடர்பாகவே இவ்வழுத்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலிய ஆகியன இணைந்து, சர்வதேச கிரிக்கெட் சபையில் அதிக அதிகாரத்தைக் கைப்பற்றிய நிலையில், அதில், அப்போதை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபைத் தலைவர் கைல்ஸ் கிளார்க்கின் பங்கு தொடர்பாகவே ஆராயப்படுகிறது. இது தொடர்பில் விளக்கமளிப்பதற்கு, இவ்வாண்டு இறுதியில் நாடாளுமன்றத்துக்கு கிளார்க் அழைக்கப்பட்டுள்ள நிலையில்,…
-
- 0 replies
- 303 views
-
-
மகாஜனவிடமிருந்து கிண்ணத்தை மீட்குமா ஸ்கந்தவரோதயா? By Ravivarman - வடமாகாணத்தின் முக்கிய கிரிக்கெட் விளையாடும் கல்லூரிகளான சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரி, தெல்லிப்பளை மகாஜன கல்லூரி அணிகளுக்கு இடையிலான “வீரர்களின் போர்” (Battle of the Heroes) என வர்ணிக்கப்படும் இரண்டு நாட்கள் கொண்ட மாபெரும் கிரிக்கெட் சமரானது 20 ஆவது முறையாக, இம்மாதம் 28 ஆம் மற்றும் 29 ஆம் திகதிகளில் தெல்லிப்பளை மகாஜன கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது. 2000 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இவ்விரு கல்லூரிகளுக்கும் இடையிலான பெரும் சமரில் இதுவரையில் 19 போட்டிகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில்…
-
- 0 replies
- 721 views
-
-
புதிய தோற்றம் – பொழிவிழக்காத துடுப்பாட்டம்: ஐ.பி.எல். தொடருக்கான பயிற்சியில் தல டோனி! by : Anojkiyan இந்தியாவில் நடைபெறும் ரி-20 கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல். தொடரின், 13ஆவது அத்தியாயத்திற்கான தயார்படுத்தல்கள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெறும் இத்தொடர், எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பமாகி மே மாதம் 24ஆம் திகதி நிறைவடைகின்றது. முதல் போட்டியில் சம்பியன் அணிகளான, சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில் இத்தொடர் ஆரம்பமாவதற்கு இன்னமும் சொற்ப நாட்களே உள்ள நிலையில், முன்னாள் சம்பியனான சென்னை சுப்பர் கிங்ஸ் அணி தங்களத…
-
- 0 replies
- 348 views
-
-
கொரானா அச்சுறுத்தலால் ஒலிம்பிக் ஜோதி ஏற்றும் நிகழ்வு, முதல் முறையாக பார்வையாளர்களின்றி நடைபெற்றது. 2020 டோக்யோ ஒலிம்பிக்கிற்கான ஜோதி ஏற்றும் நிகழ்வு பாரம்பரிய முறைப்படி கிரீஸ் நாட்டில் உள்ள ஒலிம்பியாவில் நடைபெற்றது. ரியோ ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற கீரீஸ் வீராங்கனை அன்னா கோராகாக்கிமுதல் நபராக ஒலிம்பிக் ஜோதியை கையிலேந்தினார். இதன் மூலம் முதலாவதாக ஒலிம்பிக் ஜோதியை ஏந்தும் முதல் பெண் என்ற பெருமையை அவர் பெற்றார். https://www.polimernews.com/dnews/103498/முதல்-முறையாகபார்வையாளர்களின்றிஏற்றப்பட்ட-ஒலிம்பிக்-ஜோதி
-
- 1 reply
- 526 views
-
-
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்துடன் இணைந்து இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சங்கம் நடத்திய 11ஆவது அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான சமபோஷ கிண்ண (14 வயதின் கீழ்) கால்பந்தாட்டப் போட்டிகளில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியும் கிண்ணியா மத்திய கல்லூரியும் சம்பியன் பட்டங்களை சுவீகரித்தன. கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற பெண்களுக்கான இறுதிப் போட்டியில் பொலன்னறுவை பெந்திவௌ மகா வித்தியாலய அணியை 4 - 3 என்ற பெனல்டி அடிப்படையில் மகாஜனா அணி வெற்றிகொண்டு சம்பினானது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான இறுதிப் போட்டி 1 - 1 என்ற கோல் அடிப்படையில் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்ததை அடுத்து சம்பியன் அணி பெனல்டி முறையில் தீர்மானிக்கப்பட்டது. …
-
- 2 replies
- 802 views
- 1 follower
-
-
ஐ.பி.எல்., அணி நிர்வாகத்தில் மீண்டும் ஒரு பாலிவுட் ஸ்டார் நுழைந்து இருக்கிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையில் 12 சதவீத பங்கினை வாங்கி இருக்கிறார் ஷில்பா ஷெட்டி. ஷாருக்கான் (கோல் கட்டா நைட் ரைடர்ஸ்), பிரீத்தி ஜிந்தா (கிங்ஸ் லெவன் பஞ்சாப்) என இருவரை அடுத்து ஐ.பி.எல்., தொடரில் மூன்றாவது பாலிவுட் நட்சத்திரமாக ஷில்பா ஷெட்டி நுழைந்து இருக்கிறார். இந்தியன் பிரிமியர் லீக் சார்பில் (ஐ.பி.எல்.) “ரூவென்டி-20′ தொடரின் இரண்டாவது கட்ட போட்டிகள் வரும் ஏப்ரல் மாதம் நடக்க இருக்கிறது. இந்நிலையில் வீரர்கள்பரிமாற்றம் தற்போது நடந்து வருகிறது.ஆஸ்திரேலிய சுழல் ஜாம்பவான் வார்ன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தென் ஆப்ரிக்க அணியின் கேப்டன் ஸ்மித், ஆல்ரவுண்டர் வாட்சன் உட்பட பல…
-
- 0 replies
- 1.2k views
-
-
டெஸ்ட் போட்டிகளில் அதிவேக 100 விக்கெட்டுகள்: பாக். பவுலர் யாசிர் ஷா சாதனை யாசிர் ஷா பந்து வீசும் காட்சி. | படம்: ஏ.எஃப்.பி. மே.இ.தீவுகளுக்கு எதிராக துபாயில் நடைபெற்று வரும் பிங்க் நிறப்பந்தில் ஆடப்படும் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் லெக் ஸ்பின்னர் யாசிர் ஷா சாதனை படைத்துள்ளார். இவர் தனது 17-வது டெஸ்ட் போட்டியில் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றி டெஸ்ட் போட்டிகளில் அதிவேக 100 விக்கெட்டுகளுக்கான 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். மேலும் 17 டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஆசிய பந்து வீச்சாளராகவும் யாசிர் ஷா திகழ்கிறார். இதற்காக ரவிச்சந்திரன் அஸ்வின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். முதலிடத்தில் ஜி.ஏ.லோமான் என…
-
- 0 replies
- 293 views
-
-
நடராஜன் மிகப்பெரிய சொத்து - கோலி! டி20 உலகக் கிண்ண போட்டி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணிக்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து வேகப்பந்து வீச்சாளா் நடராஜன் என்று கேப்டன் கோலி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளாா். கடைசி ஒருநாள் ஆட்டத்தின் மூலம் சா்வதேச கிரிக்கெட்டில் தடம் பதித்த நடராஜன், மொத்தம் 4 ஆட்டங்களில் 8 விக்கெட்டுகளை சாய்த்துள்ளாா். அதிலும் டி20 தொடரைக் கைப்பற்றிய 2 ஆவது ஆட்டத்தில் அவா் 3 விக்கெட்டுகளை சாய்த்தது முக்கியமானதாக அமைந்தது. இந்நிலையில், கடைசி டி20 ஆட்டத்துக்குப் பிறகு கோலி கூறியதாவது: ஷமி, பும்ரா இல்லாத நிலையில் மிகுந்த நெருக்கடியான சூழலில் நடராஜன் சிறப்பாகப் பந்துவீசியதை குறிப்பிட்டே ஆக வேண்டும். சா்வதேச கிரிக்கெட்டில் தடம் பதித்…
-
- 2 replies
- 705 views
-
-
இந்திய அணி வெற்றி பெற்றதும் சென்னை ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பாராட்டிய விராட் கோலி – காரணம் இதுதான் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. முதல் போட்டியில் இந்திய அணி பெற்ற தோல்விக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து இத்தொடரை இந்திய அணி 1 க்கு 1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. மேலும் முதல் போட்டியில் ரசிகர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் தற்போது 2-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் 50 சதவீத ரசிகர்கள் மைதானத்தில் அனுமதிக்கப்பட்டார்கள். இந்த சிறப்பான வெற்றிக்குப…
-
- 0 replies
- 591 views
-
-
இங்கிலாந்து ரசிகர்கள் விரும்பும் வகையில் செயற்படவேண்டும்-பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து ரசிகர்கள் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை விரும்பும் வகையில் நாம் செய ற்பட வேண்டும் என்று இங்கிலாந்து அணியின் துணைத் தலைவர் தெரிவித்து ள்ளார். இங்கிலாந்து அணியின் தலைவராக இருந்தவர் அலஸ்டைர் குக். கடந்த வாரம் குக் தனது பத வியை ராஜினாமா செய்தார். இதனால் ஜோ ரூட் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பென் ஸ்டோ க்ஸ் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். துணை தலைவராக பதவி ஏற்றுக் கொண்ட பென் ஸ்டோக்ஸ் முதன்முறையாக பத்திரிகையா ளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ‘‘மீண்டும் ரசிகர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை விரு ம்பும் வகையில் நாம் செயற்படுவது அவசியம். …
-
- 0 replies
- 222 views
-
-
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத் தேர்தல் – வவுனியாவிற்கு உதவிபொருளாளர் பதவி! இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உதவிப்பொருளாளரிற்கான தேர்தலில் வவுனியாவை சேர்ந்த அருணகிரிநாதன் நாகராஜன் வெற்றி பெற்றுள்ளார். இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் புதிய நிர்வாகசபை தேர்தல் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்றது. குறித்த தேர்தலில் வவுனியா மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி உதவிப்பொருளாளர் பதவிக்கு அ. நாகராஜன் போட்டியிட்டிருந்தார். இந்நிலையில் தேர்தலில் வெற்றிபெற்று குறித்த பதவிக்கு அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் நான்கு வருடங்கள் வவுனியா மாவட்ட உதைப்பந்தாட்ட சங்கத்தின் பொதுச்செயலாளராகவும், இரண்டு வருடங்கள் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன…
-
- 2 replies
- 453 views
-