அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
எதிராக மாறும் அகப்புறச் சூழல் ! மதபீடங்கள், அரசியல் தலைமைகள், தேரர்கள், இராணுவத் தரப்பினர், பொதுமக்கள், இனவாதிகள், அடிப்படைவாதிகள், ஆட்சி எதிராளர்கள் என்று எல்லாத் தரப்பினரையும் கொண்டுவரப்படவுள்ள அரசியல் அமைப்புக்கு எதிராக கூர்மைப்படுத்தும் நடவடிக்கைகளை மிகக் கச்சிதமாகவும் மதிநுட்பத்துடனும் மேற்கொண்டுவரும் ஒரு சூழ்நிலை விளைந்து வருகின்ற நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் அண்மையில் ஒரு செய்தியைக் கூறியது கவனத்தின்பாற்பட்டது. பௌத்த மதத்தின் முதன்மை க்கு அல்லது சிங்கள பெரும்பான்மை ஆட்சிக்கு ஊறு விளைவிக்கும் எந்தவொரு அரசியல் யோசனைக்கும் யான் கையொப்பம…
-
- 0 replies
- 369 views
-
-
எதிர் முனைப்பட்ட அணி திரட்டல்களும் புதிய கட்சிகளின் தோற்றத்துக்கான வாய்ப்புகளும் இலங்கையில் தெற்கிலும் வடக்கிலும் மக்களை அணி திரட்டும் இரு வெவ்வேறு அரசியல் செயற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இரு அணித்திரட்டல்களுமே முற்றிலும் முரண்பட்ட நோக்கங்களைத் கொண்டிருக்கின்ற அதேவேளை, ஒன்றை மற்றையது பரஸ்பரம் வசதிப்படுத்துவதாகவும் அமைந்திருக்கிறது. அத்துடன் இந்த எதிர்முனைப்பட்ட இரு செயற்பாடுகளுமே இறுதியில் புதிய அரசியல் கட்சிகளை அல்லது புதிய அரசியல் அணிகளைத் தோற்றுவிக்கக்கூடிய வாய்ப்புக்களைக் கொண்டிருக்கின்றன என்றும் கூறலாம். தென்னிலங்கையில்…
-
- 0 replies
- 305 views
-
-
எதிர்காலத்தில் இலங்கையில் பெரும்பான்மையினராக முஸ்லிம்கள் - பௌத்த அச்சம் எம். ரிஷான் ஷெரீப் இலங்கையில் இன்னுமொரு இனக் கலவரத்தைத் தூண்டக்கூடிய பிரிவினைவாதச் சக்திகளின் சூழ்ச்சிகள் சிறிது சிறிதாக முன்னெடுக்கப்படுகின்றன. இந்த இனக் கலவரம், இஸ்லாமியர்களையும் அவர்களது வளர்ச்சியையும் குறிவைத்திருக்கிறது. இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துவருகிறது. இந்நிலை தொடருமானால், இன்னும் சில தசாப்தங்களுக்குள் முஸ்லிம்கள் இலங்கையில் பெரும்பான்மையினராக ஆகிவிடுவார்கள் என்னும் அச்சம் இனவாதச் சக்தி களைப் பெருமளவில் அச்சுறுத்தி யிருக்கிறது. இந்நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் முஸ்லிம்களை அடக்…
-
- 1 reply
- 739 views
-
-
எதிர்காலத்தில் இலங்கையில் பெரும்பான்மையினராக முஸ்லிம்கள் ! : எம். ரிஷான் ஷெரீப் இலங்கையில் இன்னுமொரு இனக் கலவரத்தைத் தூண்டக் கூடிய, பிரிவினை வாத சக்திகளின் சூழ்ச்சிகள் சிறிது சிறிதாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன. இந்த இனக் கலவரம், இஸ்லாமியர்களையும் அவர்களது வளர்ச்சியையும் குறி வைத்திருக்கிறது. இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந் நிலை தொடருமானால், இன்னும் சில தசாப்த காலங்களுக்குள் இலங்கையில் பெரும்பான்மையானோராக முஸ்லிம்கள் ஆகிவிடுவார்கள் என்ற அச்சம் இனவாத சக்திகளை பெருமளவில் அச்சுருத்தியிருக்கிறது. இந் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும், முஸ்லிம்களை அடக்கி வைக்கவும் பல்வேறு விதமான செயற்பாடுகள் முன்…
-
- 3 replies
- 1.1k views
-
-
எதிர்காலத்துக்கு வாக்களித்தல்? – நிலாந்தன் August 2, 2020 கூட்டமைப்பு அதன் தேர்தல் அறிக்கையில் பரிகார நீதியைக் கோரவில்லை. இனப்படுகொலை என்பதனை ஏற்றுக் கொண்டால்தான் பரிகார நீதியைக் கேட்கலாம். பரிகார நீதி என்றால் என்ன? இனப்படுகொலைக்கு எதிரான நீதியேது. இனப் பிரச்சினைக்கான பரிகாரம் அல்லது தீர்வு எனப்படுவது இனப் படுகொலைக்கு எதிரான நீதிதான் என்ற பொருளில் அது பரிகார நீதி என்று அழைக்கப்படுகிறது. கூட்டமைப்பின் பேச்சாளர் இனப்படுகொலை என்பதனை சட்டரீதியாக நிரூபிக்க வேண்டும் என்று சட்டத்தரணித் தனமாகப் பேசுகிறார். பரிகார நீதி மட்டுமல்ல நிலைமாறு கால நீதியும் தூய நீதி அல்ல. அவை அரசியல் நீதிகள்தான். அரசுகளின் நீதிகள்தான். அரசுகளால் தீர்மானிக்கப்படும் நீதிகள்தான். …
-
- 0 replies
- 549 views
-
-
எதிர்காலத்தை உள்ளூராட்சி தேர்தல்களுக்கு பணயம் வைத்திருக்கும் தமிழ் அரசியல் கட்சிகள் April 20, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — இலங்கை அரசியல் வரலாற்றில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சகல தமிழ் அரசியல் கட்சிகளும் முன்னென்றும் இல்லாத வகையில் அவற்றின் எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக சிங்கள தலைமைத்துவத்தைக் கொண்ட தேசிய கட்சி ஒன்றுக்கு எதிராக மிகவும் உக்கிரமான பிரச்சாரங்களை முன்னெடுக்கின்ற ஒரு தேர்தலாக எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல்கள் அமைந்திருக்கின்றன. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சில வாரங்களுக்கு முன்னர் ‘தி இந்து’ பத்திரிகையின் கொழும்பு செய்தியாளர் மீரா ஸ்ரீனிவாசனுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்த கருத்துக்களின…
-
- 0 replies
- 261 views
-
-
எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனின் நியாயமான வலியுறுத்தல் தேசிய அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தேசிய பிரச்சினை தீர மக்கள் வழங்கிய ஆணையை எவ்வகையிலும் பாதித்து விடக்கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும் வலியுறுத்தியிருக்கின்றார். வெள்ளிக்கிழமை இரவு ஜனாதிபதியை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து விரிவாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இருவரும் தனித்து இந்த சந்திப்…
-
- 1 reply
- 433 views
-
-
எதிர்க்கட்சி அரசியல் பண்பாடு sudumanalNovember 13, 2023 கீழைத்தேய பண்பாட்டு கட்டமைவுள் உணர்வுசார் அல்லது உணர்ச்சி சார் வெளிப்பாடுகள் தூக்கலாகவே தெரிவதுண்டு. அது மனிதப் பெறுமதி கொண்ட பண்பாற்றலாகும். அதேநேரம் இது அரசியல் தளத்தில் உணர்ச்சிவாத அரசியலுக்கு (emotional politic) சாதகமானதாக அமைந்து, அறிவை பின்னுக்குத் தள்ளுகிற செயற்பாட்டை நிகழ்த்துகிறது. இலங்கையைப் பொறுத்தவரை தமிழ் மக்களும் 70 களிலிருந்து இதற்குள் அகப்பட்டு சுழன்றிருக்கிறார்கள். அது இப்போதும் தொடர்கிறது. எமது அறிவை மீறி இன்றைய என்பிபி அலையினுள் எமது உணர்ச்சிவாத அரசியல் மூழ்கிப் போயிருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது. இலங்கை பல்லின மக்கள் வாழும் நாடு. பருண்மையாக இங்கு சிங்கள மக்கள், வடக்க கிழக்க…
-
- 0 replies
- 350 views
-
-
எதிர்க்கட்சிகளின் ஒன்றிணையும் முயற்சி அரசாங்கத்துக்கு சவாலாக அமையுமா? Veeragathy Thanabalasingham on November 4, 2025 Photo, GETTY IMAGES மிகப் பெரிய வாக்கு வங்கியைக் கொண்ட தனியொரு அரசியல் கட்சி என்ற வகையில் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக மற்றைய கட்சிகள் குறிப்பாக, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் கூட்டணி அமைத்து தேர்தல்களில் போட்டியிட்ட காலம் ஒன்று இருந்தது. எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க தொடக்கம் அவரது மனைவி சிறிமாவோ பண்டாரநாயக்க, மகள் சந்திரிகா குமாரதுங்க மற்றும் மகிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் சுதந்திர கட்சி இருந்த வரை ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரான இந்தக் கூட்டணி அரசியல் தொடர்ந்தது. கடந்த நூற்றாண்டில் சுதந்திர கட்சி தலைமையிலான கூட்டணிகள் வெற்றி …
-
- 0 replies
- 151 views
-
-
எதிர்க்கட்சிகளின் பலவீனமும் அரசாங்கத்தின் அணுகுமுறையும்! *தமிழ்த்தேசியக் கட்சிகளை தவிர்த்து, தமிழர் தரப்பில் வேறு பிரதிநிதிகளுடன் பேசும் திட்டம் வகுக்கப்படுகிறதா? *எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு போராட்டம் பிசுபிசுத்தால், அநுரவின் நகர்வு மேலோங்கும் *ரணில் – மகிந்த ஊழல் - மக்கள் போராட்ட முன்னணியின் கருத்து நியாயமானது... ------ ----- அநுர அரசாங்கத்துக்கு எதிராக கருத்திட்டு வரும் பிரதான எதிர்க்கட்சிகள் பலவீனம் அடைந்துள்ளன. எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி கொழும்பு நுகேகொடை நகரில் நடைபெறவுள்ளது. இந்த எதிர்ப்பு போராட்டத்தில் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி பங்கெடுக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா அறிவித்திருந்தார். அதேபோன்று -- மக்கள் போராட்ட முன்னணியும் …
-
- 0 replies
- 143 views
- 1 follower
-
-
எதிர்க்கட்சிகள் பதவிக்கு வந்தால் பிரச்சினைகள் தீருமா? எம்.எஸ்.எம். ஐயூப் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, புதன்கிழமை (16) நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது, “தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு நாம் பொறுப்பல்ல” எனக் கூறினார். அதேவேளை, “இந்த நெருக்கடிகளைத் தோற்றுவித்த காரணிகளில் சில, எமது கட்டுப்பாடுக்கு அப்பாலானவை” என்றும் கூறினார். ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு, கடந்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களின் போது வாக்களித்த மக்களின், அரசாங்கத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கை சின்னாபின்னமாகி இருக்கும் நிலையில், அந்த நம்பிக்கையை மீண்டும் கட்டி எழுப்புவதே ஜனாதிபதியின் உரை…
-
- 0 replies
- 455 views
-
-
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சம்பந்தன் பறிகொடுப்பாரா? எதிர்க்கட்சித் தலைவர் பதவியை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடமிருந்து பறிப்பதற்காக, மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியினர் மீண்டும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதற்காகச் சம்பந்தனுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை சமர்ப்பிப்பது தொடர்பாக, அவர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர். இதற்கு முன்னரும் அவர்கள் அடிக்கடி இந்தக் கோரிக்கையை முன்வைத்து கோஷம் எழுப்பியிருக்கிறார்கள். ஆனால் இம்முறை, அவர்களின் கோரிக்கை அழுத்தமாக முன்வைக்கப்படுவதாகத் தெரிகிறது. பிரதமர் ரணில…
-
- 1 reply
- 547 views
-
-
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பறிக்க முடியுமா? பா.கிருபாகரன் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டு அந்தப் பிரேரணை வெற்றிபெற்றாலும் அதன் மூலம் எதிர்க்கட்சித் தலைவரை பதவி நீக்க முடியாது. ஏனெனில் நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் எதிர்க்கட்சித் தலைவரை பதவி நீக்குவதற்கான வழிமுறைகள் அரசியலமைப்பு சட்டத்தில் இல்லை. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவந்து நாட்டையும் அரசியலையும் மக்களையும் குழப்பி பிரேரணையிலும் மண்கவ்விய மகிந்த ஆதரவு பொது எதிரணியினர், அடுத்தகட்டமாக எதிர்க்கட்சித…
-
- 0 replies
- 358 views
-
-
எதிர்பாராத சாட்டையடி மொஹமட் பாதுஷா / 2019 ஜூன் 07 வெள்ளிக்கிழமை, மு.ப. 08:22 Comments - 0 கௌதம புத்தரின் போதனைகள் எல்லாவற்றையும் மறந்து செயற்பட்ட ஒரு சில துறவிகளுக்கும் கடும்போக்குச் சக்திகளுக்கும் முஸ்லிம் சமூகம், சிலவற்றைப் போதித்திருக்கின்றது. சிறுபான்மை இனமான முஸ்லிம்கள் மீது, சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து, வன்முறையைப் பிரயோகித்து, அடக்கி ஒடுக்க நினைக்கும் நிகழ்ச்சி நிரல்களில் ஒருவித தடுமாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. முஸ்லிம் அமைச்சர்களின் இராஜினாமாவும் அதன்பின்னரான மகாசங்கத்தினரின் அறிக்கையும் அரசியல் அதிர்வுகளும் அதனை ஓரளவுக்கு வெளிக்காட்டுகின்றன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல், எந்த வகையிலும் நியாயப்படுத்தக் கூடியதல்ல. அதனுடன் தொடர்…
-
- 0 replies
- 941 views
-
-
எதிர்பாராத மாற்றம் - செல்வரட்னம் சிறிதரன் 24 ஜனவரி 2015 எதிர்பாராத விடயங்கள் நடைபெறுகின்ற ஆண்டாக இந்த ஆண்டு - 2015 ஆம் ஆண்டு தோற்றமளிக்கின்றது. ஜனவரி 8 ஆம் திகதி நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் வன்முறைகள் மிகுந்ததாகவே இருக்கும் என்று எதிர்பார்த்ததற்கு மாறாக கத்தியின்றி சத்தமின்றி மாற்றம் நிகழ்ந்தது என்பதை நிதர்சனமாக்கும் வகையில் அமைதியாக நடந்து முடிந்தது. தேர்தல் முடிவுகள் வெளியாகிய உடன் - முன்னாள் ஜனாதிபதி மகிந்த வெற்றிபெற்றிருந்தாலும்சரி, தோல்வியுற்றிருந்தாலும்சரி, தேர்தலின் பின்னர் வன்முறைகள் நாட்டின் பல இடங்களில், குறிப்பாகத் தலைநகர் கொழும்பில் மோசமான முறையில் வெடிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை. தேர்தலில் தோல்வியு…
-
- 1 reply
- 462 views
-
-
எதிர்பார்க்கப்படும் புதிய தமிழ் தலைமை நிறுவனமயப்படுத்தப்பட்ட செயற்பாடுகளை முன்னெடுக்குமா? லோ. விஜயநாதன் தமிழ்மக்களின் 70 வருடகால விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் தவிர வேறு எந்த இடத்திலாவது எமது போராட்டம் நிறுவனப்படுத்தப்பட்ட செயற்பாடுகளினூடாக நகர்த்தப்பட்டிருக்கிறதா ? அப்படி முன்னெடுக்கப்பட்டிருந்தால் நாம் எமது இலக்கை நோக்கிய பயணத்தில் பாதியளவு தூரமாவது கடந்திருந்திருப்போம். ஆனால் நாம் அப்படி செய்யத்தவறியதன் விளைவே இருந்ததையும் இழந்து நிற்கவேண்டிய நிலைக்கு இட்டுச்சென்றுள்ளது. தந்தை செல்வா சமஷ்டி கோரிக்கையை முன்வைத்திருந்தாலும் அதனை நோக்கி கட்சி அரசியலைத் தாண்டிய ஒரு நிறுவனப்படுத்தப்பட்ட செயற்பாட்டை அவர்முன்னெ…
-
- 0 replies
- 394 views
-
-
எதிர்பார்த்தது போலவே நடந்தது; அடுத்த வேலையைப் பார்க்கலாம் எதிர்பார்த்ததே நடந்துள்ளது; எதிர்பாராதது நடந்ததுபோல, காட்டப்படும் பாவனை, கோமாளிக்கூத்தன்றி வேறல்ல. தமிழரசுக் கட்சி, தேர்தலைப் புறக்கணித்திருந்தாலோ, கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தாலோ, எதிர்பாராதது நடந்தது என்று சொல்லலாம். ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ளவர்களை விட, அதிக விசுவாசமானவர்களைக் கொண்டதொரு கட்சி, வேறொரு தெரிவை எடுக்க நியாயமில்லை. அப்பாவிகளுக்கும் அதிலும் குறிப்பாக, அப்பாவி போல் காட்டிக் கொள்ளும் அயோக்கியர்களுக்கும் இம்முடிவு, எதிர்பாராத முடிவாக இருக்கலாம். தமிழ்த் தேசிய அரசியலின் வங்குரோத்தைக் குறிப்பாகப் போர் முடிந்த கடந்த பத்தாண்டுகளில், அதன் இயலாமையை அறிந்தவர்…
-
- 0 replies
- 719 views
-
-
எதிர்பார்த்துக் காத்திருத்தல் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 ஜனவரி 03 வியாழக்கிழமை, மு.ப. 12:52 இன்னோர் ஆண்டு எம்முன்னே விரிகிறது. எதிர்பார்ப்புகளும் நம்பிக்கைகளும் நிறைந்ததாக அது இருக்கிறது. நடக்கும் என்பார் நடக்காது; நடக்காது என்பார் நடந்துவிடும். எதிர்காலத்தை எதிர்வுகூற விளையும் ஒவ்வொரு தடவையும் இந்தச் சொற்றொடரை நினைத்துக் கொள்வது உண்டு. எதிர்காலத்தைக் கணிப்பது கடினம். அதிலும், அரசியலில் எதிர்காலத்தைக் கணிப்பது இன்னமும் சிரமம். நிச்சயமின்மைகளால் நிரம்பி வழியும் ஒன்றன் திசைவழிகள் குறித்து, நிச்சயமாகச் சொல்வது சவால் மிக்கது. ஆனால், அது முடியாத காரியமுமல்ல. சாத்தியங்களையும் சாத்தியமின்மைகளையும் கணிக்கவியலும்; ஆய்வறிவாளனின் கலையும் திற…
-
- 0 replies
- 1.1k views
-
-
எதிர்பார்ப்பு நிறைவேறுமா ? இலங்கை தேசியத் தலைமைகள் ஒரு நிரந்தரமான முடிவைக் காணவேண்டிய பல்வேறு பிரச்சினைகள் அவர்கள் முன்னே கொண்டு வரப்பட்டிருக்கிறது தேசியப் பிரச்சினைக்கான தீர்வை வழங்கும் பொறிமுறை எவ்வாறு அமையப் போகின்றது என்பதை வெளிப்படுத்த வேண்டிய கால நெருக்கடியொன்று உருவாகியுள்ளது என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு ஏற்றமுறையில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். நாம் ஒன்று நினைக்க அரசாங்கம் ஒன்றை சொல்லிக் கொண்டிருக்கிறதே என்ற சொற் போரிலேயே இன்று அரசாங்கத்துக்கும் கூட்டமைப்புக்குமிடையிலான பேச்சுவார்த்தைகளின் நகர்வுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அரசியல் சாசனம் தமிழ் மக்களு…
-
- 0 replies
- 317 views
-
-
எதிர்பார்ப்புகளையும் மீறிய தாமதிக்கும் நீதி லக்ஸ்மன் இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற சம அந்தஸ்தான வாழ்க்கை என்பது, எட்டாக்கனி என்பது நிரந்தரமானதன் பின்னும், ஏன் தமிழ் மக்கள் கிடைக்காத ஒன்றுக்காகப் பிரயத்தனப்படுகிறார்கள் என்றே, நம் போராட்ட வரலாறு தெரிந்தோர் கேள்வி எழுப்புவர். ஐக்கிய நாடுகளின் அமர்வுகள் வருகையில், காலங்காலமாக இலங்கையின் வடக்கு- கிழக்கு தமிழர்கள் அனுபவித்து வருகின்ற இன்னல்கள் முடிவுக்கு வந்தவிடும் என்றே ஒவ்வொரு வருடத்திலும் தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், யுத்தம் நடைபெற்ற காலங்களைவிடவும் அதிக கைதுகள், அதிக நெருக்குதல்கள் அதிகரிக்கின்றதே தவிர வேறு எந்தப் பிரயோசனமும் இல்லை. ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்…
-
- 0 replies
- 603 views
-
-
எதிர்பார்ப்புக்களின் தோல்வி மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் இலக்குடனும் அந்த இலக்கை அடைந்து கொள்ளும் எதிர்பார்ப்புடனுமே காலத்தை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறு சமூக வாழ்வோடு இணைந்த ஒவ்வொரு விடயத்திலும் ஓர் இலக்கும் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் சமூகங்களின் மத்தியில் இருப்பது இன்றியமையாதது. அத்தகைய எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் நாட்டை ஆளும் அரசாங்கத்திலும் ஒவ்வொரு சமூகம் சார்ந்த அரசியல் தலைமைகளிலும் மக்கள் பிரதிநிதிகளிலும் அவர்கள் அளிக்கும் வாக்குறுதிகளிலும் காணப்படுகின்றன. சமூகக் கட்டமைப்பின் விருத்தியில் அரசியல் அதிகாரம் முக்கியமானது. ஒரு சமூகத்தின் அடிப்படைத் தேவைகள் நிறை…
-
- 0 replies
- 221 views
-
-
http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2016-12-31#page-1 எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் 2016 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியிருந்தார்கள். ஆனால் அந்தப் போராட்டங்களுக்கு வெற்றியளிக்கத்தக்க வகையில் காரியங்கள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவில்லை. புதிய அரசாங்கத்தில் தங்களுக்கு நன்மைகள் ஏற்படும். பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்ற அவர்களுடைய எதிர்பார்ப்பு பெருமளவில் ஏமாற்றத்திலேயே முடிவடைந்திருக்கின்றது. அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியதன் மூலம் பல காரியங்களை வெற்றிகரமாகத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நிறைவேற்றும் என்ற எதிர்பார்ப்பும் கானல் நீராகியிருக்கின்றது என்றே கூற வேண…
-
- 0 replies
- 495 views
-
-
எதிர்பார்ப்பை நசுக்கியதா நல்லாட்சி? இலங்கை வரலாற்றில், சிறுபான்மை மக்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் மறக்க முடியாத, கறை படிந்த வரலாற்றைக் கொண்டவையாகும். ‘வரலாறு திரும்புகிறது’ என்ற சொற்றொடரைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், வரலாற்றின் பொற்காலங்கள் ஒரு போதும் திரும்புவதில்லை. என்றாலும், மோசமான நிகழ்வுகள் அவ்வப்போது திரும்பத்தான் செய்கின்றன. அந்த வகையில், இலங்கையின் சிறுபான்மையினர் மீது மேற்கொள்ளப்படும் பாகுபாடுகளும் தாக்குதல்களும், மீள இடம்பெறுவதில்லை என்று கூறப்படுகின்ற போதிலும், அண்மைக் காலமாக, முஸ்லிம்களை குறிவைக்கும் வன்முறைகள், வேறு கதை சொல்கின்றன. முஸ்லிம் ம…
-
- 1 reply
- 436 views
-
-
அகிம்சைப்போர் அடக்கப்பட்டதன் பின் ஆயுதப்போர் ஒன்று வெடித்தது அது முடிவாக்கப்பட்ட தாக பேசப்படும் நிலையில் இராஜ தந்திரப்போர் ஒன்றுக்குள் நம்பிக்கை கொண்டி ருக்கும் தமிழ் மக்களின் நம்பிக்கைக் குறியீடாக பிள்ளையவர்களின் வருகை அமைந்திருக்கின்றது. நவநீதம்பிள்ளையவர்களின் இலங்கை விஜயமானது தமிழ் மக்கள் மத்தியிலும் அதேவேளை சிங்கள மக்கள் மத்தியிலும் வெவ்வேறு அதிர்வலைகளை உண்டாக்கியிருக்கின்ற நிலையில் இந்த விஜயத்தின் பிரதிபலிப்பாக சர்வதேச அளவில் அது எத்தகைய தாக்கத்தைக் கொண்டு வரப்போகின்றது என்பது பற்றியே இன்றைய நிலையில் எல்லோருடைய முணுமுணுப்பாக இருக்கின்றது. பிள்ளையவர்களுடைய வரவு காரணமாக தமிழ் மக்களுடைய எதிர்பார்ப்புக்கள் ஒரு திசைப்பட்டதாகவும் அதேேவளை சிங்கள மக்கள் மற்றும் அவர்களின் …
-
- 1 reply
- 750 views
-
-
13 வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து, இந்தியாவின் கருத்தினை செவிமடுக்க வேண்டிய அவசியமில்லை என்றும், அதனை இந்தியா புரிந்து கொள்ளுமென்று, இலங்கையின் பாதுகாப்புச் செயலாளரும், சனாதிபதியின் தம்பியுமான கோத்தபாய ராஜபக்ச தெளிவாகக் கூறுவதை இந்தியா கவனத்தில் கொள்ளாவிட்டாலும், அவர் என்ன சொல்ல வருகிறார் என்று, தமிழர் தரப்போடு அடிக்கடி உரையாடும் அமைச்சர் சுதர்சன நாச்சியப்பனுக்கு புரியும். உள்நாட்டில் உருவாக்கப்படும் தீர்வு குறித்தே தாம் அக்கறை கொள்வதாக, கோத்தபாயா முதல் நிமால் சிறிபால டி.சில்வா வரை ஒருமித்தகுரலில் பாடுவதை, விரைவில் இலங்கை வரும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் கவனத்தில் கொள்வாரென்று சிலர் நம்பலாம். கடந்த நான்கு ஆண்டுகளாக வட-கிழக்கில…
-
- 6 replies
- 724 views
-