Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. பைடன் வந்துவிட்டார்; இனி உலகில் சமாதானம் மலருமா? -எம்.எஸ்.எம். ஐயூப் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரே, பெரும்பாலானோர் எதிர்பார்த்ததைப் போல், குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியடைந்து, ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன், அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்ற தேர்தலில், ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் ‘தேர்வுச் சபை’க்கு, ஜனநாயகக் கட்சிக்காரர்கள் அதிகமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதால் பைடனின் வெற்றி உறுதியாகி உள்ளது. ஆனால், எதிர்வரும் டிசெம்பர் மாதமே சட்டபூர்வமாக, பைடன் தெரிவு செய்யப்படுவார். இதன் மூலம், 233 வருட அமெரிக்க வரலாற்றில் பதவி வகித்த 45 ஜனாதிபதிகளில், டொனால்ட் ட…

  2. அடம்பிடிக்கும் TRUMP.. அடுத்தது என்ன..?

    • 2 replies
    • 1.1k views
  3. யானைப் பலம் கொண்டது ராஜபக்சாக்களின் ஆட்சி -- அடி சறுக்கினால் எதிர்காலம் மிக மோசம் அ.வரதராஜா பெருமாள் அதிமேன்மைக்குரிய கோத்தபாயா அவர்கள் இலங்கைக் குடியரசின் ஜனாதிபதியாகி ஒரு வருடம் நிறைவடைகிறது. இலங்கை மக்கள் குறிப்பாக சிங்கள பௌத்தர்கள் அவரின் ஆட்சி மீது பெரும் நம்பிக்கை வைத்து மிகப் பெருமளவில் அவருக்கு வாக்குகளை அளித்ததால் ஜனாதிபதியானார். 2015ம் ஆண்டு ஆட்சிக் கட்டிலேறிய மைத்திரி – ரணில் கூட்டாட்சி 2016ம் ஆண்டே குழப்பமான ஆட்சியாக ஆட்டம் காணத் தொடங்கிவிட்டது. இலங்கையின் ஆட்சியை மாறி மாறிப் பிடி…

  4. இந்தோ-பசுபிக் பாதுகாப்பு மாநாட்டில் இலங்கையும் பங்குபற்றியது ஏன்?மிலேனியம் ஒப்பந்தம் கைச்சாத்தாகும்! சீன உறவு என்னாகும்? தோ- பசுபிக் பிராந்தியத்தில் பதற்றத்தைத் தணிப்பது குறித்த ஏற்பாடுகளிலேயே அமெரிக்க ஜனாதிபதியாகப் புதிதாகப் பதவியேற்கவுள்ள ஜோ பைடன் கவனம் செலுத்துவாரென எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனாவுடன் அளவுக்கதிகமான குழப்பங்களையும் முரண்பாடுகளையும் உருவாக்கிவிட்டாரென்ற உணர்வு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு சமீபகாலமாக வெளிப்பட ஆரம்பித்துள்ளதை ஜோ பைடன் தெரிவிக்கும் கருத்துகள் கட்டியம் கூறுகின்றன. இந்த இடத்திலேதான் இலங்கையுடனான அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத் தாப…

  5. உலகின் மிகவும் பலம்பொருந்திய பதவி – பைடனுக்கு காத்திருக்கும் இடர்ப்பாடுகள் Bharati November 11, 2020 உலகின் மிகவும் பலம்பொருந்திய பதவி – பைடனுக்கு காத்திருக்கும் இடர்ப்பாடுகள்2020-11-11T17:21:44+05:30Breaking news, அரசியல் களம் FacebookTwitterMore உலகின் மிகவும் பலம்பொருந்திய மனிதர் என்ற பதவி அந்தப் பதவிக்கு வந்திருக்கக்கூடியவர்களில் அரசியல் ரீதியில் மிகவும் பலவீனமானவர் என்று கருதக்கூடிய ஒருவரின் தோள்களில் தொங்கிக்கொண்டிருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் ஜோ பைடன் பதவிப் பிரமாணம் செய்துகொள்வதற்கு இன்னமும் ஒரு சில மாதங்கள் இருக்கின்றன. அந்த இடைப்பட்ட கால கட்டம் கூட இடர்மிக்கதாகவே இருக்கப்போகிறது. …

  6. தனது இனவெறுப்பு பிரச்சாரத்தால் ஜேர்மனியை நாசிஜேர்மனியாக கருக்கொள்ள வைத்த வரலாற்றை மருதன் எழுதிய இரண்டாம் உலகப்போர் என்ற நூல் பதிவு செய்துள்ளது. அந்த புத்தகதில் இருந்து சில பக்கங்களை இங்கு இணைத்துள்ளேன். அன்றைய உலக மக்கள் தொகையில் 3 வீத‍த்தை பலிகொண்ட அதாவது ஏறத்தாள 85 மில்லியன் மக்களை பலிகொண்ட இரண்டாம் உலக யுத்த‍த்தின் ஆரம்பப்புள்ளியின் ஒரு சில பக்கங்களை இப்பதிவு கூறுகிறது. முதல் உலகப்போர் முற்றுப்பெற்ற 1918 ம் ஆண்டு தொடங்கி 1921 வரையான காலகட்டத்தை உடன்படிக்கைக் காலகட்டம் என்று அழைக்க முடியும். ஜேர்மனி மட்டுமல்ல தோற்றுப்போன அத்தனை தேசங்களுடனும் தனித்தனியே ஒப்பந்தங்கள் போட்டுக்கொள்ளபட்டன. · செப்ரெம்பர் 10, 1919 ல் Treaty of Trianon – ஹங்கேரிய…

  7. அமெரிக்காவுக்கு அடிபணிய மறுக்கும் இலங்கை! - நா.யோகேந்திரநாதன்.! இரண்டாவது உலகயுத்தம் முடிவுக்கு வந்த பின்பு அமெரிக்கா உலக மேலாதிக்கத்தைத் தனது இராணுவ, பொருளாதாரக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகளை லாவகமாகவும் வெற்றிகரமாகவும் மேற்கொண்டு வருகிறது. இவற்றில் படை நடவடிக்கை, இராணுவ சதிப் புரட்சி, நாடுகளின் நிலவும் உள்நாட்டு அரசியல், இன, மத முரண்பாடுகளைக் கையாளுதல், இராஜதந்திர நகர்த்தல்கள் எனப் பல்வேறு வழிமுறைகள் உள்ளடங்கும். தமது கட்டுப்பாட்டுக்குள் அடங்க மறுக்கும் அரசுத் தலைவர்களின் ஆட்சிகளைக் கவிழ்ப்பதற்கும் அரசுத் தலைவர்களைக் கொல்வதற்கும் தயங்குவதில்லை. கொங்கோவின் லுமும்மா, சிலி நாட்டின் அலண்டே, சிம்பாவின ரொபேட் முகாபே, ஈராக்கின் சதாம் ஹூசைன், லிபிய…

  8. தமிழ்த் தேசிய அரசியலில் அடுத்தது என்ன? -என்.கே. அஷோக்பரன் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை இலங்கையை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது. சமூகப் பரவல் என்ற வார்த்தையைப் பயன்படுத்தாவிட்டாலும், தினந்தோறும் நாடெங்கிலும் ஆங்காங்கே, புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட வண்ணமே இருக்கின்றார்கள். கொரோனா வைரஸ், முழு உலகத்துக்குமே சவாலாக மாறியிருக்கிறது. கொரோனா வைரஸின் சுகாதாரத் தாக்கம் ஒரு புறமென்றால், அதன் பொருளாதாரத் தாக்கம் அதைவிடப் பயங்கரமானதாக இருக்கிறது. தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவர, நீண்ட கால முடக்கல் நிலை அமல்படுத்தப்பட்டால், தொற்றுப் பரவல் குறையும். ஆனால், அதனால் விழும் பொருளாதார அடி, நீண்ட காலத்துக்கு மீண்டெழ முடியாத பாதாளத்தில் நாட்டைத் தள்ளிவிடும். ஆகவே, நோய…

  9. அரசாங்கத்தின் விலக முடியாத பொறுப்பு மொஹமட் பாதுஷா இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் மூன்றாம் கட்டத்தை எட்டியிருக்கின்றது என, சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ள நிலையில், நான்காவது கட்டத்தை அடையமாட்டாது என்று உறுதிபடச் சொல்ல முடியாதுள்ளது. ஆனால், இன்னுமோர் அலையை நாடு தாங்காது என்பதையும் அதே சுகாதார அமைச்சே கூறியுள்ளது. இலங்கையில், கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் அலை, இந்தளவுக்குப் பரவியதற்கு, மக்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளே காரணம் என்ற தொனியிலான குற்றச்சாட்டுகள், அரசாங்க அதிகாரிகள் தொடக்கம் ஆட்சியாளர்கள் வரை பலராலும், கடந்த சில நாள்களாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. எனவே, அரசாங்கம், தனது பொறுப்பிலிருந்தும் பொறுப்புக்கூறலில் இருந்தும், வெளியேறுவதற்கான கதவுகளைத…

  10. பைடனின் வெற்றியும் பூகோள அரசியல் திருப்பங்களும்- உறுதியாகவுள்ள கோட்டாபய 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பதவிக்கு வந்த கோட்டாபய ராஜபக்ச இலங்கையில் சீன உதவித் திட்டங்களுக்குத் தொடர்ந்து இடமளித்திருந்தார். ஆனாலும் இரண்டாவது பதவிக் காலத்தை டொனால்ட் ட்ரம் இழப்பார் என்றொரு எதிர்ப்பார்ப்பிலேயே, அமெரிக்க அரச கட்டமைப்பு, இலங்கையை ஆரத்தழுவுவதற்கான நகர்வுகளில் அவா் ஈடுபட்டிருந்தார் – அ.நிக்ஸன் அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாகப் பதவியேற்கவுள்ள பரம்பரை அமெரிக்க வெள்ளையரான கத்தோலிக்க சமயத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் பைடன், சர்வதேச அரசியல், பொருளாதார மாற்ற…

  11. புலிகளின் மீதான தடைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்காட தமிழ் அரசியல் சட்டத்தரணிகள் தயாரா? மனோ கேள்வி 78 Views தமிழர் தாயகப் பிரதேசத்தில் இலங்கை அரசால் முன்னெடுக்கப்பட்டு வந்த நில ஆக்கிரமிப்புப் போர், 2009 ஆண்டு பெரும் தமிழின அழிப்புடன் முடிவுக்கு வந்தது. பயங்கரவாதிகளை அழித்துவிட்டோம், தமிழ் மக்களை பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்டுவிட்டோம் என அறிவித்த இலங்கை அரசாங்கம், அதன் பின் இன்று வரையிலும் அதே பயங்கரவாத பூச்சாண்டி காட்டி தமிழர் நிலங்களை ஆக்கிரமிப்பதுடன் இன சுத்திகரிப்பு வேலைகளிலும் சத்தங்களின்றி செயற்பட்டு வருகின்றது. அதே நேரம் தமிழர்களுக்கு உரிமைகளை வழங்குவதற்குப் பதிலாக குறுகிய கால சலுகைகளை வழங்கி, தான் ஒரு நல்லரசா…

  12. கொரோனா நெருக்கடியும் கைநழுவிய போக்கும் -பி.மாணிக்கவாசகம் 31 Views கோவிட்-19 கொள்ளை நோய் தீவிரமடைந்துள்ளது. அதன் தொற்றுப் பரவலைத் தகுந்த முறையில் தடுத்து நிறுத்த முடியாமல் இலங்கை தடுமாறிக் கொண்டிருக்கின்றது. இராணுவத்தை முதன்மை நிலையில் பயன்படுத்தி கடந்த மார்ச் மாதம் ஏற்பட்டிருந்த நோய்த்தொற்றின் முதலாவது அலையை அரசு வெற்றிகரமாகக் கையாண்டிருந்தது. அது ஏனைய நாடுகளுக்கு முன்மாதிரியானது என்று உலக சுகாதார நிறுவனம் பாராட்டி இருந்தது. இதனால் சினிமா கதாநாயகனைப் போன்று, ஜனாதிபதி கோத்தாபாய அரசு இறுமாப்புடன் கொலரைத் தூக்கிவிட்டுக் கொண்டது. ஆனால் ஒரு சில மாதங்களிலேயே நிலைமைகள் தலைகீழாக மாறிவிட்டன. குறிப்பாக ஒக்டோபர் மாதத்தில் கொரோனா …

  13. ஜனாஸா எரிப்பு விவகாரம்; வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுதல் மொஹமட் பாதுஷா இலங்கையில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாகவும், வீரியமாகவும் பரவிக் கொண்டிருக்கின்றது. முதலாவது அலைக்கும் இரண்டாவது அலைக்கும் இடைப்பட்ட காலத்தில் அரசியல் காய்நகர்த்தல்களில் முழுக் கவனத்தையும் செலுத்தியிருந்த அரசாங்கம், இப்போது துணுக்குற்று எழுந்து, மீண்டும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இது சமூகப் பரவல் இல்லை என்று சொல்லி, முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. இதுவரை கொவிட்-19 தொற்றுக்குள்ளான 21 மரணங்கள் பதிவாகியுள்ளளன. தற்கொலை செய்து இறந்த இளைஞனின் மரணத்தையும் கொவிட் கணக்கில் இருந்து அரசாங்கம் பதிவளிப்பு செய்திருக்கின்றது. இ…

  14. இலங்கையில் சீனா? - யதீந்திரா அண்மையில் கொழும்பிற்கு வியஜம் செய்திருந்த அமெரிக்க ராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ – சீனாவின் கம்யூனிஸ் கட்சியை வேட்டையாடும் தன்மைகொண்டது – அதாவது வேடையாடி புசிக்கும் மிருகம் என்று தெரிவித்திருந்தார். பொம்பியோ இவ்வாறு குறிப்பிட்டு சில தினங்களே ஆகின்ற நிலையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து கட்சிக் கட்டமைப்புக்கள் சார்ந்த அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் வகையில் இணைய வழி கலந்துரையாடலொன்றை நடத்தியிருக்கின்றனர். மகிந்தவின் அரசியல் வாரிசான நாமல் ராஜபக்சவின் தலைமையில் இந்த நிகழ்வு நடந்திருக்கின்றது. இதற்கான ஏற்பாடுகளை இலங்கைக்கான சீனத் தூதரகம் ஒழுங்கு செய்திருக்கின்றது. பொம்பியோ கொழும்பில் வைத்து தெரிவித்த கருத்துக்…

  15. இலங்கையில் சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்த அமெரிக்காவினால் முடியுமா? -தேவநேசன் நேசையா Bharati November 8, 2020 இலங்கையில் சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்த அமெரிக்காவினால் முடியுமா? -தேவநேசன் நேசையா2020-11-08T22:42:04+05:30Breaking news, அரசியல் களம் FacebookTwitterMore தேவநேசன் நேசையா தெற்காசிய மற்றும் தென்கிழக்காசியாவிற்கான (இலங்கை, இந்தியா, மாலைதீவு, இந்தோனேசியா, வியட்நாம்) அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோவின் விஜயத்தின் பிரதான குறிக்கோள் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சிக்கான ஆதரவை அதிகரிப்பதற்காகவேயாகும். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்கள் உச்சகட்டத்தில் இருந்த நேரத்தில் அவரது…

  16. அரசாங்கத்தின் அலட்சியமும் கொரோனாவின் மீள்பரவலும் புருஜோத்தமன் தங்கமயில் இலங்கை எப்போதுமே ஆச்சரியங்களால் நிறைந்த நாடு. கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு உலகம் பூராவும் சுகாதாரத்துறையினர் தலைமை தாங்கிக் கொண்டிருக்கையில், இலங்கையில் இராணுவம் தலைமையேற்றிருக்கின்றது. சுகாதார அமைச்சரோ, மத அனுஷ்டானங்களை நடத்தி, பானையில் அடைக்கப்பட்ட புனித நீரை ஆற்றில் கொட்டுவதில் கவனமாக இருக்கிறார். பிரதமரோ, மத - மார்க்க நிறுவனங்களிடம் கொரோனா வைரஸுக்கு எதிரான பிரார்த்தனைகளை முன்னெடுக்குமாறு கோருகிறார். ஜனாதிபதியோ, கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பொதுமக்களைக் குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கிறார். கொரோனா வைரஸ்ஸுக்கு எதிரான நடவடிக்கைகளில், முதல் தரப்பாக இருக்க வேண்டிய வைத்திய…

  17. விபரீதங்களோடு விளையாடும் விந்தை தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ அறிவியலுக்கும் அபத்தத்துக்கும் இடையிலான பிரிகோடு, மிகவும் சிறியது. அறிவியலை விட, அபத்தத்துக்கு முக்கியத்துவம் அதிகமாகிப் போன உலகத்தில் நாம் வாழ்கிறோம். பயன் யாதெனில், கொரோனா வைரஸின் இரண்டாவது அலை, இப்போது ஆட்கொண்டுள்ளது. இது எதிர்பாராதது அல்ல; ஆனால், ‘முன்னே ஓடவிட்டுப் பின்னே துரத்தும்’ வித்தையை, இந்தப் பெருந்தொற்றை வைத்து, அரசியல்வாதிகள் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த ஆபத்தான விளையாட்டைப் பெரும்பாலான நாடுகள் விளையாடுகின்றன. அந்த நாடுகள், தமது சொந்த மக்களின் உயிரைப் பணயம் வைத்து, இந்த வித்தையை ஆடுகின்றன. இங்கே எழுகின்ற கேள்வி யாதெனில், இவ்வாறானதோர் ஆபத்துப் பற்றி, அறிவியலாளர்கள் தொடர்ச்சியாகச் சொல்லி…

  18. ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே குடும்பம்? நிலாந்தன்… November 8, 2020 பசில் ராஜபக்ச கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்துக்கு தேசியப் பட்டியல் மூலம் தெரிவு செய்யப்படுவார் என்று முன்பு அறிவிக்கப்பட்டது. இல்லையென்றால் அடுத்த நாடாளுமன்ற அமர்வுக்கு முன் அவர் நாடாளுமன்றத்திற்குள் வந்து விடுவார் என்று தெரிய வருகிறது. அவருடைய பெயர் கட்சியின் தேசியப் பட்டியலில் இல்லாதபடியால் சட்டச் சிக்கல்கள் உண்டு என்று கூறப்படுகிறது.ஆனால் ராஜபக்சக்கள் இது விடயத்தில் தடைகளை உடைக்கும் சக்தி மிக்கவர்கள். பசிலை எப்படியாவது உள்ளே கொண்டுவரப் பார்ப்பார்கள்.இதன்மூலம் அவர்கள் எந்த இறுதி இலக்குகளை முன்வைத்து 20ஆவது திருத்தத்தை கொண்டு வந்தார்களோ அந்த இலக்குகளில் ஒன்றை அடைந்து விடுவார்கள். …

  19. எனது மகனை கொலை செய்துவிடுவோம் என எனது வீட்டிற்கு சென்று மிரட்டினார்கள் – மனம் திறந்தார் மகிந்த தேசப்பிரிய Rajeevan Arasaratnam November 7, 2020 எனது மகனை கொலை செய்துவிடுவோம் என எனது வீட்டிற்கு சென்று மிரட்டினார்கள் – மனம் திறந்தார் மகிந்த தேசப்பிரிய2020-11-07T11:48:24+05:30அரசியல் களம் FacebookTwitterMore 1988 தேர்தலின் போது வேட்புமனுக்களை பெற்றுக்கொண்டால் என்னை சுட்டுக்கொல்லப்போவதாக அச்சுறுத்தினார்கள் என தேர்தல் ஆணையாளர் பதவியிலிருந்து ஓய்வுபெறவுள்ள மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நான் அவர்களின் உத்தரவினை ஏற்றுக்கொள்ளாவிட்டால் எனது இரண்டு வயது மகனை கொலை செய்துவிடுவோம் என எனது வீட்டிற்கு சென்று மிரட்டினார்கள், …

  20. முஸ்லிம்களின் ஜனாஸாக்களைப் புதைக்க மறுக்கும் ஒரு நாட்டில் வைரசுக்குக் கழிப்புக் கழித்த அமைச்சர் – நிலாந்தன் கடந்த பௌர்ணமி தினத்தன்று யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு ஓர் ஆசிரியர் தனது மகளோடு பயணம் செய்து கொண்டிருந்தார். தென்மராட்சியில் ராணுவ தளங்களுக்கு முன்னே பௌத்த மதக் கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தன. அதைப் பார்த்துவிட்டு மகள் தகப்பனிடம் கேட்டாள் “இந்த ராணுவத்தில் வேறு மதத்தவர்கள் இல்லையா?” என்று. “இருக்கிறார்கள் இப்போது உள்ள தளபதி ஒரு கத்தோலிக்கர் தான்” என்று அவர் கூறினார். “அப்படி என்றால் ஏனைய மதத்தவர்களின் புனித நாட்களின் போது அவர்களுடைய கொடிகளையும் சின்னங்களையும் முகாம்களின் முன் கட்டுவார்களா?” என்று மகள் கேட்டாள் “ இல்லை அப்படி நான் பார்த்ததில்லை” என்று தகப்…

    • 14 replies
    • 1.1k views
  21. இலங்கையில் சீனாவின் செல்வாக்கு; கட்டுப்படுத்த முடியாத நிலையில் அமெரிக்கா Maatram Translation on November 6, 2020 பட மூலம், South China Morning Post தெற்காசியா மற்றும் தென்கிழக்காசியாவிற்கான (இலங்கை, இந்தியா, மாலைத்தீவு, இந்தோனேசியா, வியட்னாம்) அமெரிக்க இராஜாங்க அமைச்சர் மைக் பொம்பியோவின் விஜயத்தின் பிரதான குறிக்கோள் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சிக்கான ஆதரவை அதிகரிப்பதற்காகவே ஆகும். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்கள் உச்சகட்டத்தில் இருந்த நேரத்தில் அவரது இந்த விஜயம் இடம்பெற்றமை – இதைத் தெளிவாகக் காட்டுகின்றமை, சீனாவிற்கு எதிரான கடுமையான தெற்கு/ தென்கிழக்காசிய பிரதிபலிப்பொன்று அமெரிக்க வாக்காளர்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.