அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
எம்.சி.சி உடன்படிக்கை விடயத்தில் அரசாங்கமும் மௌனம் காப்பது பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது: எல்லே குணவங்ஸ தேரர் எங்களுடைய நாடு சர்வதேச குறிப்பாக அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்குள் சிக்குண்டுள்ளது. எம்.சி.சி உடன்படிக்கை போன்றன ஆபத்தானதென்ற போதிலும், இந்த விடயத்தில் இந்த அரசாங்கமும் மௌனம் காப்பது எங்களுக்கு பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது” என தெரிவித்துள்ளார் எல்லே குணவங்ஸ தேரர். தினக்குரலுக்கு வழங்கிய நேர்காணலிலேயே ஆவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவரது நேர்காணலின் விபரம் வருமாறு; கேள்வி – புதிய அரசாங்கம் பயணிக்கும் பாதை உங்களுக்கு திருப்தி அளிக்கின்றதா? பதில் – கொவிட் – 19 தொற்று காரணமாக அரசாங்கம் தங்களுடைய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நாங்கள் சிறிய சந்தர்ப்…
-
- 3 replies
- 627 views
-
-
கிழக்கு மைய அரசியல் வாதமும் அதன் பின்னணிகளும்? - யதீந்திரா அண்மையில் கிழக்கு-மைய அரசியல் என்பது தெற்கை நோக்கிப் போவதல்ல என்னும் தலைப்பின் ஒரு கட்டுரை வெளிவந்திருந்தது. அதனைத் தொடர்ந்து, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆலோசகராக அடையாளம் காணப்படும் ஒருவர் அதற்கு எதிர்வினையாற்றிருந்தார். மீண்டும் அதற்கொரு பதில் எதிர்வினையாற்றும் கட்டுரையும் வெளியாகியிருந்தது. உண்மையில் இப்படியொரு கட்டுரை எழுதுவதற்கான தூண்டுதலை மேற்படி உரையாடல்கள்தான் ஏற்படுத்தியிருந்தன. அண்மையில் என்னுடன் சமகால அரசியல் விடயங்கள் தொடர்பில் பேசிக் கொண்டிருந்த ஒரு மட்டக்களப்பு நண்பர் – இவ்வாறு தெரிவித்தார். அதாவது, மட்டக்களப்பிலிருந்து வெளிவரும் சில முகநூல் பதிவுகளை பார்க்கும் போது, மிகவும் அர…
-
- 0 replies
- 458 views
-
-
ராஜபக்ஷர்களின் அரசியலை எதிர்கொள்ளுதல் ஓர் அரசியல்வாதிக்கும் (politician) ஓர் அரசியலாளுமைக்கும் (statesman) உள்ள வித்தியாசம் என்னவென்றால், ஒர் அரசியல்வாதி அடுத்த தேர்தலைப் பற்றிச் சிந்திக்கும்போது, அரசியலாளுமை அடுத்த தலைமுறையைப் பற்றிச் சிந்திக்கிறார்” என்கிறார் ஜேம்ஸ் க்ளார்க். சமகால இலங்கையின் தன்னிகரில்லா ‘அரசியல்வாதிகள்’, ராஜபக்ஷர்கள்தான் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அதேவேளை, ஒருவகையில் பார்த்தால் அவர்கள், மிகச்சிறந்த அரசியலாளுமையும் கூட! ஏனென்றால், அவர்கள் அடுத்த தலைமுறையைப் பற்றியும் மிகத் தௌிவாகச் சிந்திக்கிறார்கள். ஆனாலென்ன, அது ராஜபக்ஷர்களினுடைய அடுத்த தலைமுறையாகவே இருக்கிறது; அவ்வளவுதான் வித்தியாசம். இதற்காகவே அவர்கள், தமக்கானதொரு கட்ச…
-
- 0 replies
- 608 views
-
-
திலீபனுக்காக இணைந்த தமிழ்க் கட்சிகள்- ஐக்கியம் தொடரும் வாய்ப்பு உள்ளதா? திலீபனின் நினைவேந்தல் நிகழ்ச்சிகளுக்கு கோத்தபாய ராஜபக்ஷ அரசாங்கம் விதித்த தடையை தமிழ் கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்தி இருக்கின்றது. அனைத்துக் கட்சிகளும் இணைந்து திலீபனின் நினைவேந்தலில் அதுவும் – அரசாங்கத்தின் தடைகளை தகர்த்துக் கொண்டு வந்து பங்கு கொண்டது தமிழ் மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கின்றது. தமிழ் அரசியல் பரப்பில் அண்மைக் காலத்தில் ஏற்பட்ட முக்கியமான ஒரு திருப்பமாக இதனை கருத முடியும். தமிழ் தேசிய அரசியலை முன்னெடுக்கும் இந்த கட்சிகள் அனைத்தும் ஏற்கனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து செயற்பட்ட கட்சிகள் என்பதும் கவனிக்கத்தக்கது. பின்னர் கூட்டமைப்புக்குள் ஏற்பட்ட மு…
-
- 0 replies
- 515 views
-
-
ஒற்றையாட்சியின் சட்டங்களை நியாயப்படுத்தி அரசியல் நடத்தும் தமிழ்க் கட்சிகள் 2009ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் தமிழ்க் கட்சிகள் அல்லது தமிழ் அரசியல் பிரதிநிதிகள் அச்சாப்பிள்ளை அரசியலில் ஈடுபட்டு வருவதையே காண முடிகின்றது. அதாவது இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்கு அமைவாகச் செயற்பட்டுச் சிங்கள ஆட்சியாளர்களின் மனங்களையும் நோகடிக்காமல், அதேவேளை தமிழ்த் தேசிய அரசியலையும் தீவிரமாகப் பேசிக் கொண்டு சொத்துச் சுகங்களையும் அனுபவித்துக் கொண்டு தம்மைத் தியாகிகளாகவும் வெளிப்படுத்த முற்படுகின்றனர். ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்காக உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த தியாகி திலீபன் நினைவேந்தல் நிகழ்வுக்கு இலங்கை ஒற்றையாட்சி அரசின் யாழ் நீதவான் நீதிமன்றம் மேலும் 14 நாட்கள…
-
- 0 replies
- 414 views
-
-
-
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 45 ஆவது கூட்டத் தொடரில் நடைபெறுவது என்ன? விளக்குகின்றார் கிருபாகரன் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 45 ஆவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது. இலங்கை விவகாரமும் இந்தக் கூட்டத் தொடரில் பிரஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றது. இது குறித்தும் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டு வருடகால அவகாசம் அடுத்த மார்ச் மாதத்துடன் முடிவுக்கு வரும் போது என்ன நடைபெறும் என்பதையிட்டும் பிரான்ஸிலிருந்து செயற்படும் தமிழ் மனித உரிமைகள் இயக்கத்தின் தலைவர் சா.வி.கிருபாகரன் தினக்குரல் இணையத்துக்கு விளக்குகின்றார். கடந்த சுமார் மூன்று தசாப்த காலமாக ஜெனீவாவிலிருந்து கிருபாகரன் செயற்பட்டுவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. http://thina…
-
- 0 replies
- 324 views
-
-
யார் கண் பட்டதோ? அம்மா..! நீங்கள் சாப்பிடுங்கள் நான் உறங்கப் போகிறேன்” என, தனது ஹோட்டலில் இருந்து கொண்டுவந்த உணவை, மனைவியைப் பெற்றவளிடம் கொடுத்துவிட்டு, தனது மனைவியுடனும் குழந்தையுடனும் நித்திரைக்குச் சென்ற ஷமிலவுக்கும் அவரது அன்பான குடும்பத்துக்கும் மாத்திரம், மறுநாள் பொழுது புலராமலே சென்றுவிட்டது. இம்மாதம் 20ஆம் திகதி, கண்டியில் இடம்பெற்ற இந்தத் துயரச் சம்பவம், மனிதம் நிறைந்த அனைத்து உள்ளங்களையும் ஒரு கணம் உலுக்கியது. தனது மகளைப் பறிகொடுத்த 59 வயதுடைய ஜயந்தி குமாரி, இவ்வாறு தெரிவிக்கின்றார். “ வெலிமடை பிரதேசத்தைச் சேர்ந்த நாங்கள், விவசாயிகள். இரண்டு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் மூத்தவளாக அச்சலா பிறந்தாள். அவள், படிப்பு உள்ளிட்ட அனைத்து விடயங்க…
-
- 2 replies
- 1.1k views
-
-
திலீபனை முன்னிறுத்தி சில கேள்விகள் – நிலாந்தன் திலீபனின் ஏன் உண்ணாவிரதம் இருந்தார்? யாருக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தார்? அவர் இலங்கை இந்திய அரசுகளுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தார். இரண்டு அரசுகளிடமும் நீதிகேட்டு உண்ணாவிரதம் இருந்தார். அதாவது திலீபனின் உண்ணாவிரதம் எனப்படுவது நாட்டுக்கு உட்பட்டது அல்ல. அதற்கு ஒரு பிராந்திய பரிமாணம் உண்டு. ஈழத் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் பிராந்திய பரிமாணத்தை அடைந்ததன் விளைவாக எழுதப்பட்டதே இந்திய – இலங்கை உடன்படிக்கை. அந்த உடன்படிக்கையின் போதாமைகளையும் இயலாமைகளையும் உணர்த்துவதற்காகவே திலீபனும் பூபதியும் உண்ணாவிரதம் இருந்தார்கள். அதாவது மறு வளமாகச் சொன்னால் இந்தியத் தலையீட்டின் விளைவாக ஏற்பட்ட இனப்பிரச்சினைக்கான தீர்வை புலி…
-
- 1 reply
- 558 views
-
-
அதிகார பலத்தால் அடக்க முயலும் பெரும்பான்மை சமூகம்.
-
- 0 replies
- 470 views
-
-
இலங்கை ஒற்றையாட்சி அரசை திருப்திப்படுத்த அச்சாப்பிள்ளை அரசியல் நடத்தும் தமிழ்க் கட்சிகள் நாடாளுமன்ற சபா மண்டபத்தில் மாவீர்களுக்குத் தீபம் ஏற்றியதை மறந்துவிட்ட முன்னணியின் அரசியல் 2009ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் தமிழ்க் கட்சிகள் அல்லது தமிழ் அரசியல் பிரதிநிதிகள் அச்சாப்பிள்ளை அரசியலில் ஈடுபட்டு வருவதையே காண முடிகின்றது. அதாவது இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்கு அமைவாகச் செயற்பட்டுச் சிங்கள ஆட்சியாளர்களின் மனங்களையும் நோகடிக்காமல், அதேவேளை தமிழ்த் தேசிய அரசியலையும் தீவிரமாகப் பேசிக் கொண்டு சொத்துச் சுகங்களையும் அனுபவித்துக் கொண்டு தம்மைத்…
-
- 0 replies
- 1k views
-
-
நல்லிணக்கம், பொறுப்பு கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிப்பதாக சர்வதேச சமூகத்திற்கு உறுதியளித்த இலங்கை அரசாங்கம் அதனை அப்பட்டமாக மீறி வருகிறது. மனித உரிமை விடயங்களுக்கும், சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும் சாவு மணி அடிக்கும் 20வது திருத்த சட்டத்தை கொண்டு வருவதன் மூலம் இலங்கையின் எதிர்காலம் அச்சம் நிறைந்ததாக இருக்க போகிறது என்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நாயகம் மிச்செல் பச்லெட் அவர்களின் எச்சரிக்கையுடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 45வது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகியிருக்கிறது. கொரோனா வைரஸ் தாக்கத்தினால் கடுமையான பிரயாண கட்டுப்பாடுகளை சுவிட்சர்லாந்து அரசு விடுத்திருக்கும் நிலையில் மனித உரிமை பேரவையின் தலைவர் எலிசபெத் டிசி தலைமைய…
-
- 0 replies
- 794 views
-
-
தமிழ் மக்களுக்கு இன்று தேவைப்படுவது ‘புதிய கூட்டு’ என்ற பெயரிலான இணைப்பு அல்ல… திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்குப் பொலிஸார் விதித்துள்ள தடை உத்தரவை அடுத்து, தேர்தல் களத்தில் முகம்மாறி, திசைமாறி நின்ற தலைலைமைகள் மீண்டும் ஒன்று கூடி, ஒரு முடிவை எடுத்திருப்பது, புதிய தமிழ் கூட்டுக்கான நல்ல சமிக்ஞை என்று பலராலும் கூறப்படும் நிலையில் ……. தேவை “புதிய கூட்டு” என்ற பெயரிலான ஒட்டுப் போடுவதைப்போன்ற இணைப்பு அல்ல…. தற்போதைய கட்சிகள் அனைத்தையும் கலைத்துவிட்டு, ஒரு புதிய –ஒரேயொரு – தமிழ் அமைப்புஉருவாக வேண்டும் என்ற விடயம், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பே முன்வைக்கப்பட்டது.. அது தொடர்பாகக் கடந்த பெப்ரவரி 2020 அன்று தினக்குரல் வார இதழில் , “பேசிப்பார்த்தோம்” என்ற தொடரில் 11வது …
-
- 0 replies
- 347 views
-
-
திலீபனுக்கான நினைவேந்தல் தடையை எதிர்கொள்ளுதல்... புருஜோத்தமன் தங்கமயில் / 2020 செப்டெம்பர் 24 தியாகி திலீபனின் நினைவேந்தல் காலம் இது. 33 ஆண்டுகளுக்கு முன்னால், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை நெஞ்சில் ஏற்றி, தன்னை ஆகுதியாக்கிய தற்கொடைப் போராளி அவர்! ஆயுதப் போராட்ட வீரனாக எழுந்து, அஹிம்சை தேசத்துக்கே அஹிம்சை போதித்தவர். அவருக்கான நினைவேந்தலை முன்னெடுக்க முடியாதவாறு நீதிமன்றங்களின் ஊடாக, பொலிஸார் தடை உத்தரவுகளைப் பெற்று வருகிறார்கள். வடக்கு, கிழக்கு மாகாணங்களில், அம்பாறை மாவட்டம் தவிர்ந்து, ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் இந்தத் தடை உத்தரவு இதுவரை பெறப்பட்டிருக்கிறது. மரணித்தவர்களை நினைவு கூருதலும் அவர்களுக்கான சமயக் கிரியைகளைச் செய்வதும் தனி உரிமை. ஒ…
-
- 0 replies
- 461 views
-
-
இலங்கையின் வெளியுறவில் இந்தியா முதலிடம் என்பது இராஜதந்திரமா.? இலங்கை இந்திய உறவு பற்றிய உரையாடல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறதை காணமுடிகிறது. அதிலும் இலங்கையின் வெளியுறவுச் செயலாளர் ஜனநத் கொலம்பகே இந்தியா தொடர்பில் அதிக கரிசனையுடன் பொது வெளியில் உரையாடிவருகிறார். குறிப்பாக உள்ளார்ந்த ரீதியில் உரையாடி முடிபுகளை மேற்கொண்டு அமுல்படுத்த வேண்டிய வெளியுறவு தொடர்பிலான நகர்வுகளை வெளிப்படையாக அவர் உரையாடிவருகிறார். வெளியுறவின் மையமே இராஜதந்திரமேயாகும். அத்தகைய இராஜதந்திரம் அமைதியாக நகர்வுகளை மேற்கொள்வதனைக் குறிப்பதாகும். அதிலும் சீனாவின் நட்புக்குள்ளும் இந்தியாவின் அயலுக்குள்ளும் இருக்கும் இலங்கை வெளிப்பமைடயாக இல்லாத போக்கினை அல்லவா கடைப்பிடிக்க வேண்டும். ஆன…
-
- 0 replies
- 455 views
-
-
தமிழர் தாயகத்தின் கரையோரப் பகுதிகளை கைப்பற்றும் சிங்கள அரசின் திட்டம் ஈழத்தமிழினம் இன்று சிங்கள பௌத்த இனவாதத்தின் அடக்குமுறைக்குள் இலங்கைத் தீவிலும், புலம்பெயர்ந்து உலகெங்கும் பரந்து வாழும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். அன்று தமிழர் தாயகத்தின் எல்லைப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை ஆரம்பித்து, அதன் பின்னர் தமிழர் தாயகப் பகுதியினுள் தமிழர் தாயகத்தை துண்டாடும் நோக்கத்திலும், செயற்படுத்தப்பட்டன. அந்த வகையில் இன்று தமிழர் தாயகத்தின் கரையோரப் பகுதிகளையும் சிங்களமயப்படுத்தி தமிழர் தாயக எண்ணக்கருவை அழிக்கும் செயற்திட்டங்கள் திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்பட்டும் வருகின்றன. இச் செயற்திட்டங்கள் நிறைவேறும் போது, தமிழர்களின் வாழ்வு நிலை, வாழ்வு இயக்கங்கள் யாவும் கட்டுப்படுத்தப…
-
- 0 replies
- 399 views
-
-
விக்கியும் அவருக்கான அரசியல் நாகரிகமும் புருஜோத்தமன் தங்கமயில் / 2020 செப்டெம்பர் 22 நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றில், நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தண்டிக்கப்பட்டுவிடலாம் என்ற பதற்றம் கடந்த சில வாரங்களாக தமிழ் அரசியல் பரப்பில் தொற்றிக் கொண்டிருக்கின்றது. விக்னேஸ்வரனுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடுத்த பா.டெனீஸ்வரனிடம், வழக்கை மீளப்பெறுமாறு, அரசியல்வாதிகள், புத்திஜீவிகள் உள்ளிட்ட தரப்புகளினால் தொடர்ந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில், அவரும் அதற்கு இணங்கியிருக்கிறார். இந்தப் பத்தி எழுதப்படும் வரையில், வழக்கை மீளப்பெறுவது தொடர்பிலான இறுதித் தீர்மானம், நடைமுறையில் வந்திருக்கவில்லை. விக்னேஸ்வரனுக்கும் டெனீஸ்வரனுக்கும் இடையில் வழக்கை நீதிமன்றத்…
-
- 0 replies
- 427 views
-
-
மாகாண சபைகள் தப்பிப் பிழைக்குமா? மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர, “மாகாண சபைகளை இரத்துச் செய்வதாக, நான் ஒருபோதும் கூறவில்லை” எனக் கூறியிருக்கிறார். இது, பிரதான அச்சு ஊடகங்களிலும் பல இணையத்தளங்களிலும் வெளியாகியுள்ளன. சரத் வீரசேகர, இவ்வாறு கூறுவதாலேயே இது முக்கிய செய்தியாகிறது. ஏனெனில், அவர் மாகாண சபைகளுக்கு எதிரானவர். “மாகாண சபைகளை ஒழிப்போம்” என அவர் கூறினாலும், அது செய்திதான். ஆனால், “நான் மாகாண சபைகளை ஒழிப்பதாகக் கூறவில்லை” என்று அவர் கூறுவது, அதைவிட முக்கியமான செய்தியாகும். உண்மையிலேயே, மாகாண சபைகளை இரத்துச் செய்வதாக சரத் வீரசேகர எங்கும் கூறவில்லையா? நேரடியாக இல்லாவிட்டாலும், அந்தக் கருத்துப்பட பலமுறை, அவர் கருத்து…
-
- 0 replies
- 360 views
-
-
அரசியல் பேய்க்காட்டல் பெரும்பாலான அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் தம்மை அதீத புத்திசாலிகள் என்று நினைத்துக் கொண்டிருப்பது மட்டுமன்றி, தாங்கள் முற்றுமுழுதாக, மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் என்று காட்டிக் கொள்ளவும் முனைகின்றனர். இந்த அதிமேதாவித்தனம், அநேக சந்தர்ப்பங்களில் வேண்டாத விளைவுகளுக்கு இட்டுச் சென்று விடுகின்றன. தமது பிழையான நகர்வுகளையும் முட்டாள்தனமான முடிவுகளையும் எவ்வாறு நியாயப்படுத்தலாம்? மக்களை எவ்வாறு பேய்க்காட்ட முடியும்? எனத் தெரிந்து வைத்திருப்பதுதான், இன்றைய நிலையில் உயர்ந்தபட்ச அரசியல் சாணக்கியமாக ஆக்கப்பட்டிருக்கின்றது. முஸ்லிம், தமிழ் அரசியலில் மட்டுமன்றி, பெருந்தேசிய அரசியலிலும் இதுதான் நிதர்சனமாக இருக்கின்றது. தேர்தல் காலத்தில், …
-
- 0 replies
- 335 views
-
-
யாப்புத் திருத்தங்களும் குடும்ப ஆட்சியும் – கலாநிதி அமீரலி அரசியற்சட்ட யாப்பில் 19 ஆவது திருத்தத்தை நீக்கிவிட்டு 20 ஆவது திருத்தத்தைப் புகுத்தி இறுதியில் ஒரு புதிய யாப்பையே உருவாக்கும் முயற்சி நாடாளுமன்றத்துக்குள்ளேயும் வெளியேயும் மிகத்துரிதமாக நடைபெறுகின்றது. இந்தத் திருத்தங்களின் இன்னோர் அங்கமாக, சிறுபான்மை இனங்களின் நலன்கருதி இந்தியா கொடுத்த அழுத்தங்களினால் நுழைக்கப்பட்ட 13ஆவது திருத்தமும் ஒரு சாறற்ற சக்கையாக மாற்றப்படுவது உறுதி. ஆனாலும், 20 ஆவது திருத்தம் சட்டமாதவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளுடன் அது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அதிலே சில சிக்கல்கள் எழுந்துள்ள நிலையில் எதிரணியில் அமர்ந்திருக்கும் முஸ்லிம் கட்சிகளின் அங்கத்தவர்கள் இம்மாற்…
-
- 0 replies
- 243 views
-
-
உள்நாட்டு விவகாரங்களில் ஐ.நா. தலையிடாதிருத்தல் முக்கியமானது; ஐ.நா. பொதுச் சபையில் காணொளி மூலம் ஜனாதிபதி உரை “நாடுகளின் இறையாண்மையைப் பாதுகாத்தல், ஆள்புல ஒருமைப்பாடு மற்றும் அவர்களின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதிருத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஐ.நா. சாசனத்தின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருக்கின்றார். ஐக்கிய நாடுகள் சபையின் எழுபத்தைந்தாவது பொதுச் சபைக் கூட்டத் தொடரில் காணொளி மூலமாக ஆற்றிய உரையிலேயே இதனை அவர் வலியுறுத்தினார். அவரது உயைில் முழுமையான வடிவம் வருமாறு: ஆரம்பத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் 75 வது கூட்டத்தொடரின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மேன்மைதங்கிய வோல்கன் போஸ்கிர் அவர்களுக்கு …
-
- 2 replies
- 381 views
-
-
தமிழர் இனப்படுகொலையும் இனச்சுத்திகரிப்பும்.! உலகமக்கள் தொகை என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் புவியில் வாழும் மனிதர்களின் மொத்த எண்ணிக்கையைக் குறிப்பதாகும். 2009 ஆம் ஆண்டில் உலகமக்கள் தொகையானது 7,024,000,000 அதாவது ஏழு பில்லியன் பேர் என்று ஐக்கியநாடுகள் அமைப்பு ஒரு அறிக்கையை வெளியிட்டது. 11.07.2019 அன்று மாலை 4.00 மணிக்கு உலகமக்கள் தொகை 7,716,834,712. கடந்த பத்து ஆண்டுகளில் 700 மில்லியன் கூடி இருக்கிறது. 2050ஆம் ஆண்டில் 8 முதல் 10.5 பில்லியன்வரை கூடிச்செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1990ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் உலகின் பிறப்புக்கள் வருடத்திற்கு 173 மில்லியனாக இருந்தது. 2010ஆம் ஆண்டுகளில் 140 மில்லியன் என்ற அளவில் குறைந்து இருக்கிறது. மக்கள் தொ…
-
- 0 replies
- 520 views
-
-
தமிழர்களும் ‘மலசலகூட’ அரசியலும் தனது டுவிட்டர் ஊடகக் கணக்கினூடாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், யாழ்ப்பாணம் மாநகரசபைக்குட்பட்ட வசந்தபுரம் கிராமத்தில் மலசலகூடங்களை அமைப்பதற்கான நிதியுதவி கோரி காணொளியொன்றை அண்மையில் வௌியிட்டிருந்தார். அந்த கிராமத்துக்கே வெறும் இரண்டே இரண்டு மலசலகூடங்களே இருப்பதால் அம்மக்கள் பெரும் அவதிக்கும், சுகாதார சீர்கேட்டுக்கும் முகங்கொடுப்பதாக கோடிகாட்டிய அவர், குறைந்தது 10 புதிய மலசலகூடங்கள் கட்டுவதற்காக ஒரு மில்லியன் ரூபாய் நிதியுதவியைக் கோரியிருந்தார். இந்தக் கோரிக்கையை அவர் வைத்ததன் பின்னர், இதற்கான எதிர்வினைகள் பல்வேறுபட்டனவாக இருந்தன. சிலர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கடந்த ஐந்து வருடங்களாக “நல்லாட்சி அரசாங்கத்துக்…
-
- 1 reply
- 737 views
-
-
-
அரசின் வாக்குறுதியை நம்பத் தயாரில்லை : விரக்தியின் விளிம்பில் சர்வதேசம்! -கார்வண்ணன் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்துக்கு பிரதான அனுசரணை வழங்கிய நாடுகள், அரசாங்கத்தின் உள்நாட்டுப் பொறிமுறைகளின் மீது நம்பிக்கையில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டன. கடந்தவாரம் தொடங்கிய ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 45 ஆவது கூட்டத்தொடரில், நாடுகளின் மனித உரிமைகள் நிலை குறித்த தமது அறிக்கையில், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பசெலெட் அம்மையாரும் அதே கருத்தை தான் வெளியிட்டிருந்தார். இலங்கை தொடர்பாக, புதிய கவனத்தை செலுத்த வேண்டும் என்று அவர் பேரவையின் உறுப்பு நாடுகளிடம் கோரியிருந்தார். அதற்குப் பின்னரே, இணை அனுசரணை நாடுகளின் சார்பில் உரையாற்றிய…
-
- 0 replies
- 434 views
-