Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. கூத்தாடிகளுக்குக் கொண்டாட்டம் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் மத்தியில் உள்ள பிளவுகளும் முரண்பாடுகளும் கூட, ‘ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்’ என்பதாகத்தான் உள்ளது. வடக்கு, கிழக்கில் இதுவரை காலமும் கோலோச்சி வந்த தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் வலுவான நிலைக்கு, இந்தப் பொதுத் தேர்தல், ‘சாவுமணி’ அடித்து விடுமோ என்ற கலக்கம், தமிழ் மக்கள் பலரிடம் ஏற்பட்டிருக்கிறது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகிய கட்சிகளுடன், சுயேட்சையாகப் போட்டியிடும் தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் போன்றனவே, இப்போது தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுப்பதில், கவனம் செலுத்தக் கூடியனவாக உள்ளன. இத்தகைய கட்சிகள் மத்திய…

  2. அசுர பலத்துடன் மீண்டும் ராஜபக்சே இலங்கையில் தேர்தல்கள் நடைபெற சில தினங்களே உள்ளன. இம்முறை ஐதேக இரண்டாக உடைந்து போயுள்ளது. அதன் முன்னாள் எதிராளி, சுதந்திர கட்சியோ தனது இறுதி மூச்சினை இழுத்துக் கொண்டு இருக்கிறது. சிங்கள மக்களின் வாக்குகளை விரும்பும் பிரதான கட்சிகள் அரசியல் நிலைபாடினால் முஸ்லீம் கட்சிகள், யாருமே சீண்டாத, அதாவது வழமைபோல கூட்டு சேர முடியாதவாறு, தனித்து போட்டி இடுகின்றன. மறுபுறம் தமிழர் பகுதியில், என்றும் இல்லாதவாறு குழப்பம் நிலவுகிறது. விளைவாக ததேகூ இம்முறை 10 சீட்டுகளுக்கு மேலே எடுப்பதே கடினம் என்கிறார்கள். ஆகவே, இன்றய நிலையில், வாலை கிளப்பியபடி, மைதானத்தினை சுத்தி வரும் முரட்டுக்காளையாக, கெத்தாக சுத்தி வருபவர் சந்தேகமில்லாமல் மகிந்தா…

    • 6 replies
    • 1.2k views
  3. சமூக நீதியைப் புறந்தள்ளும் தமிழ்த் தேசியம் இப்போது எல்லோரும் தமிழ்த் தேசியம் குறித்துப் பேசுகிறார்கள். பழைய தமிழ்க் கட்சிகள் எல்லாமே, தமிழ்த் தேசியத்தைக் காப்பதற்காகவே, தேர்தலில் போட்டியிடுவதாகச் சொல்கின்றன. ஆனால், அவை ஒவ்வொன்றும் தமிழ்த் தேசியம் குறித்தான தமது கற்பிதங்களை வைத்திருக்கின்றன. ஆய்ந்து நோக்கில், இவர்கள் சொல்கின்றதும் வரையறுக்கின்றதுமான தமிழ்த் தேசியம் என்பது, மக்கள் நலன் சார்ந்ததல்ல என்பது விளங்கும். தமிழ்த் தேசியம், தமிழ் மக்களை எத்தகையதொரு முட்டுச் சந்திக்குக் கொண்டு வந்திருக்கின்றது என்பது பற்றி, ஆழமாகச் சிந்திப்பதற்கான வாய்ப்புகளை, வரலாறு தொடர்ச்சியாக வழங்கி வந்திருக்கிறது. ஆனால், நாம் அதற்குத் தயாராக இருந்ததில்லை. அதற்கான விலையை, நாம் தொ…

  4. கொரோனாவின் பின்னான புதிய சர்வதேச உறவுகள் ? அதில் ஈழத் தமிழரின் எதிர்காலம் ? July 23, 2020 – மு . திருநாவுக்கரசு உலகளாவிய அரசியல் போக்கிலும் ( process) , சர்வதேச உறவுகளிலும் காலத்திற்குக் காலம் மாற்றங்கள் ஏற்பட்டுசெல்வது இயல்பு. உலக அரசியல் போக்கு என்பது பெருவெட்டானது. அது நீண்ட காலத்துக்குரியது. சர்வதேச உறவுகள் என்பது குறுங்காலத்துக்கு உரியது. அது அவ்வப்போது மாறவல்லது. உலகளாவிய நீண்ட நெடிய மனிதகுல வரலாற்றுப் பெரும் போக்கின் ஒரு முக்கிய போக்காய் இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னான உலகளாவிய அரசியல் போக்கு உதயமானது. இந்த முக்கிய அரசியல் போக்கானது காலத்திற்குக் காலம் பெரும் திருப்பங்களை பெற்றுச் செல்கின்றது. இத்தகைய அரசியல் பெரும் போ…

  5. ஈ.சரவணபவனின் செவ்வி

  6. முஸ்லிம் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம்: இலக்கை அடைய முடியுமா? முகம்மது தம்பி மரைக்கார் / 2020 ஜூலை 21 , பி.ப. 05:56 கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் முஸ்லிம் உறுப்பினர்கள் 21 பேர் இருந்தனர். அவர்களில் ஹிஸ்புல்லாஹ் இராஜினாமா செய்து விட்டு, கிழக்கு மாகாண ஆளுநர் பதவியைப் பெற்ற பின்னர், அந்தத் தொகை 20 ஆனது. இலங்கையில் சுமார் 10 சதவீதம் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். எனவே, விகிதாசாரப்படி 22 முஸ்லிம்கள் நாடாளுமன்றில் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். கடந்த முறை கிட்டத்தட்ட இந்தத் தொகையினர் இருந்தனர். ஆனால், வருகின்ற நாடாளுமன்றில் ம…

    • 0 replies
    • 561 views
  7. தமிழ் அரசியலும் தெரிவுச் சுமையும்: யாரைத்தான் தெரிவு செய்வது? என்.கே. அஷோக்பரன் / 2020 ஜூலை 20 வாக்களிப்பு என்பது, நமது முழு ஜனநாயகக் கட்டமைப்புக்கான அடித்தளமாக விளங்குகின்றது. வாக்களிப்பது என்பது, நமது ஜனநாயகத்தின் மிகமிக அடிப்படையான உரிமை என்று நாங்கள் நினைக்கிறோம். ஒரு குடிமக்கள் குழு, அதன் பிரதிநிதிகளைத் தமது வாக்குகளினூடாகக் கூட்டாகத் தேர்ந்தெடுக்கும்போது, சுதந்திரமான தேர்வின் மூலம், நாம் நம்மை ஆளுகிறோம் என்ற கருத்தை அது உறுதிப்படுத்துகிறது. ஒரு நபரின் வாக்களிக்கும் உரிமையானது, அந்த நபர், அந்த உரிமையைப் பயன்படுத்த வேண்டாம் என்ற தெரிவை மேற்கொண்டாலும், அந்த நபரை, நமது ஜனநாயக சமூக ஒழுங்கு, தன்னோடு இணைக்கிறது. வாக்களிப்புத்தான் நமது ஜனநாயகத்தின் ஆர…

    • 1 reply
    • 861 views
  8. கஜனிடம் சில கேள்விகள் புருஜோத்தமன் தங்கமயில் / 2020 ஜூலை 22 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்கிற இயக்கத்தின் தலைவரும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் என்கிற கட்சியின் செயலாளர் நாயகமுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் காலத்தின் தேவை கருதி, சில கேள்விகளை எழுப்ப முயல்கிறேன். இங்கு எழுப்பப்படும் கேள்விகளில் சில, கஜேந்திரகுமாரையும் காங்கிரஸையும் நோக்கி, இந்தப் பத்தியாளரால் ஏற்கெனவே எழுப்பப்பட்டிருக்கின்றன. ஆனால், மீண்டும் அவரை நோக்கி, கேள்விகளை எழுப்ப வேண்டிய தேவை, திங்கட்கிழமை (20) யாழ். நகரப் பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளியிட்ட “...எங்கோ இருக்கும் முழங்காவிலில் ஒளிந்து கொண்டு...” என்கிற வார்த்தைப் ப…

  9. அஸ்தமித்துப்போன ஆர்வம் .. வடக்கு, கிழக்கு வாழ் மக்கள் தேர்தலில் அக்கறையற்று இருப்பதாகத் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய அண்மையில் கருத்து வெளியிட்டு இருந்தார். இது போன்றதொரு பொதுத் தேர்தல், 21.07.1977ஆம் ஆண்டு நடைபெற்றபோது, மொத்தமாக நாடாளுமன்றத்தில் உள்ள 168 ஆசனங்களில், 140 ஆசனங்கள் ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி வசமாகியது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, வெறும் எட்டு ஆசனங்களுடன் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது. அ. அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, 18 ஆசனங்களைக் கைப்பற்றி, எதிர்க்கட்சியாகியது. எதிர்க்கட்சித் தலைவராக அ. அமிர்தலிங்கம் பதவியேற்றார். ஐக்கிய தேசிய கட்சி, தெற்கில் சிங்கள மக்களது அமோ…

  10. வடக்கு களத்தில் அதிகரிக்கும் குழப்பம் -கபில் கொரோனா பீதிக்கு மத்தியில் தமிழ் அரசியல் கட்சிகள் பொதுத் தேர்தலுக்கான பிரசாரத்தை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. இந்த முறை நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நேரமோ- தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட நேரமோ- அல்லது எல்லா வேட்பாளர்களும் வேட்புமனுத் தாக்கல் செய்த நேரமோ- தேர்தல் நடக்குமா நடக்காதா என்ற குழப்பத்திலேயே பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டிய நிலையில் வேட்பாளர்கள் இருக்கிறார்கள். கொரோனா தொற்று பீதி மீண்டும் ஏற்பட்டுள்ளதால், தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்படுமா - இல்லையா என்று தெரியாமல் வேட்பாளர்கள் திணறுகிறார்கள். பெருமளவு காசைக் கொட்டி பிரசாரம் செய்யும் அவர்கள், இந்த தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால் மீண்டும் ஒருமுறை…

  11. சம்பந்தனின் கனவு பலிக்குமா? -கார்வண்ணன் திருகோணமலையில் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் உரையாற்றி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தேர்தலுக்குப் பிறகு புதிய அரசியலமைப்பு கொண்டு வரப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். அதேவேளை, மகிந்த ராஜபக்ச தலைமையிலான, சிறிலங்கா பொதுஜன பெரமுனவும் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கான ஆணையை கோரி வருகிறது. வடக்கினதும், தெற்கினதும் இன்றைய பிரதான அரசியல் கோசமாக, புதிய அரசியலமைப்பு மாறியிருக்கிறது. ஆனால் இரா.சம்பந்தன் கூறுகின்ற அரசியலமைப்பு மாற்றமும், மகிந்த ராஜபக்ச கூறுகின்ற அரசியலமைப்பு மாற்றமும் ஒரே மாதிரியானவை அல்ல. அனைத்து மக்களுக்கும் சம உரிமைகளை வழங்கக் கூடிய, தமிழ் மக்களுக்கு …

  12. அழகிய தீவை அகழ்வாய்விற்குரியதாக்கும் காலமொன்றை உருவாக்கத்தான் போகின்றோமா?! July 21, 2020 தொல்பொருட்களும் அவற்றின் பாதுகாப்பும் : ஒரு நாட்டின் கடந்த கால வரலாற்றைப் பற்றி கற்றறிந்து கொள்வதற்கு உதவும் சான்றாதாரங்களுள் ஒன்றாக கடந்த காலத்தின் வாழ்வியலில் பயன்படுத்தப்பட்டு தட்ப வெப்ப நிலைமைகளுக்கு அழிவடையாது தாக்குப்பிடித்து, பூமியில் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப புதையுண்டுகாணப்படும் பண்டைய பொருட்களும், அவை செறிந்துள்ள இடங்களும் கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தகைய புராதன பொருட்கள் செறிவாகக் காணப்படக்கூடிய இடங்கள் பாதுகாப்பிற்குரிய பிரதேசங்களாகவும், எதிர்காலத்தில் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய வரலாற்று முக்கியத்துமுடைய மையங்களாகவுங…

  13. இந்தியா தொடர்பில் சம்பந்தனின் தடுமாற்றம் - யதீந்திரா பொதுவாக தேர்தல் காலங்களில்தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு, குறிப்பாக இராஜவரோதயம் சம்பந்தனுக்கு இந்தியாவின் ஞாபகம் வருவதுண்டு. அண்மையில் திருகோணமலையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் பேசும்போது, கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், தங்களுக்கு பின்னால் இந்தியா இருப்பதாக தெரிவித்திருக்கின்றார். ஆனால் ரணில்-மைத்திரி அரசாங்கத்துடன் தேனிலவில் மெய்மறந்திருந்த காலத்தில் சம்பந்தனுக்கு இந்தியாவின் நினைவு எழவில்லை. கடந்த ஜந்து வருடகால ரணில்-மைத்திரி ஆட்சியில் கிட்டத்தட்ட, இந்தியா என்று ஒரு நாடு இருப்பதையே சம்பந்தனும் அவரது சகாக்களும் மறந்;திருந்தனர். புதுடில்லிக்குச் சென்றால் சிங்களவர்கள் கோபிப்பார்கள் என்ப…

    • 5 replies
    • 1.4k views
  14. கிழக்கு வெளுக்குமா..? July 20, 2020 இலங்கையில் தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை என்ற ஒரு கருத்து தமிழர்களிடையே இருக்கிறது. தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் கலைஞருமான மு.கருணாநிதி யும் இதனையே சொல்லி தனது பொறுப்பில் இருந்து விலகிக் கொள்ள காரணம் தேடிக்கொண்டார். ஏன் உலகெங்கும் வாழும் தமிழிரிடையே கூட இந்த ஒற்றுமை இல்லை என்ற ஒரு கருத்து உண்டு. உலகில் எந்தவொரு இனமும் எல்லோரும் எதிர்பார்க்கும் இந்த ஒற்றுமையை அடையவில்லை என்பது ஒருபுறமிருக்க, இலங்கையில் தமிழர்களிடையே ஒற்றுமையை அரசியலில் மாத்திரம் எதிர்பார்ப்போர், மொழியைப் போல ஏனைய கலை, கலாசார, பண்பாட்டு இலக்கிய தளங்களில் ஒற்றுமையாக இணைந்து செயல்படுகின்றனரா அல்லது அதற்கான முயற்சிகளை எடுக்கின்றார்களா எனும் கேள்வியை முன்வை…

  15. சிறுபான்மைக் கட்சிகளுக்குள் வங்குரோத்து அரசியல் வேண்டாம்’ ப. பிறின்சியா டிக்சி நாம் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக, அவர்களைத் தாக்கிப் பேசினால் அல்லது இவர்களை இழுவுபடுத்திப் பேசினால் இந்தப் பகுதி மக்கள் எமக்கு ஆதரவு தருவார்கள் என்ற வங்குரோத்துநிலை அரசியலை, சிறுபான்மைக் கட்சிகள் விட்டுவிட வேண்டுமென, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ‘மரம்’ சின்னத்தில், இலக்கம் 01இல் மட்டக்களப்பு மாவட்டத்தில், முதன்மை வேட்பாளராகப் போட்டியிடும் அலிஸாஹிர் மௌலானா வேண்டுகோள் விடுத்தார். எதிர்கால சமூகம், ஒட்டுமொத்தமாக நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கான நல்ல கருத்துகளை, மக்கள் மத்தியில் முன்வைத்து, தேர்தல் பிரசாரத்தைச் செய்கின்ற போது, மக்கள் ஆதரவு நிச்சயம் கிடைக்கும் என்றும் அவர…

  16. வெற்றித் திமிர் குப்புறக் கவிழ்க்குமா? ராஜபக்‌ஷ சகோதரர்கள் தலைமை தாங்கும் அரசாங்கம், தோல்விகள் அல்லது அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்பது, பொதுவான குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. 2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளைத் தோற்கடித்ததன் மூலம் மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கம் உச்சக்கட்ட வெற்றியைப் பெற்றிருந்தது. இன்றும் சிங்கள மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தப் பயன்படுத்தும், ‘விடுதலைப் புலிகளை’ தோற்கடித்து பெறப்பட்ட வெற்றி அது. அந்த வெற்றியைக் கொண்டாடாத சிங்களவர்கள் யாருமே இல்லை எனலாம். அந்தளவுக்கு, உச்ச வெற்றியைத் தொட்ட மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கம், அடுத்த ஆறு ஆண்டுகளுக்குள் சரிந்து வீழ்ந்தது. ஓர் இரும்புக் கோட்டையைக் கட்டுவதற்குச் சாதகமான ப…

  17. தேர்தல் கால முகமூடிகளும் முகக் கவசங்களும் ஒவ்வொரு கட்சியினதும் வேட்பாளரினதும் போலி முகமூடிகளைக் கழற்றி, உண்மை முகங்களைக் கண்டறிவதுடன், சுகாதார நடைமுறைகளுக்காக, முகக் கவசங்களை அணிந்து கொள்ள வேண்டிய ஓர் இக்கட்டான காலகட்டத்தில், இலங்கை மக்கள் இருக்கின்றனர். முஸ்லிம்களும் தமிழ் மக்களும் இந்த விடயத்தில், அதீத கரிசனை எடுத்துக் கொள்ளவில்லை என்றால், ஓகஸ்ட் ஐந்தாம் திகதிக்குப் பின்னர், கைசேதப்பட வேண்டி வரலாம். இந்தத் தேர்தலும் அதற்குப் பின்னர் அமையப் போகின்ற நாடாளுமன்றமும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கப் போகின்றன. எந்தப் பெருந்தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அரசமைப்பு மறுசீரமைப்பு, எம்.சி.சி உடன்படிக்கை, அதிகாரப் பகிர்வு கோட்பாடு, மாகாண சபை முறைமை மீ…

  18. தமிழர்களின் தலைவிதி ? இந்திரன் ரவீந்திரன்

    • 0 replies
    • 422 views
  19. தேர்தல் தொடர்பாக தமிழ் மக்களிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்தது தமிழ் மக்கள் பேரவை! Posted on July 19, 2020 by நிலையவள் 6 0 எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக தமிழ் மக்களிடம் தமிழ் மக்கள் பேரவையால் ஐந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தேர்தல் அரசியல் கடந்து எமது மக்களின் சுபீட்சமான எதிர்காலத்தை இலக்காகக்கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ் மக்கள் பேரவையானது மக்களிடம் அன்புரிமையுடன் பின்வரும் 5 கோரிக்கைகளை முன்வைத்து நிற்கின்றது. 1. தமிழ் மக்களாகிய நாம் அனைவரும் அணிதிரண்டு தவறாமல் வாக்களிப்போம் என உறுதிபூணுவோம். எமது பிரதேசத்தில் இயங்கும் பொது அமைப்புக்கள் தொடர்ந்து தமிழ் மக…

    • 0 replies
    • 371 views
  20. சிங்கள, சீன உறவு ஆரம்பித்தது 60 களில் மகிந்தா தான் சீனத்து உறவுகளை தொடக்கி வைத்தவர் இல்லை. அது ஸ்ரீமாவோவினால் ஆரம்பிக்கப்பட்டது. கொழும்பிலுள்ள, பண்டாரநாயகே சர்வதேச மகாநாட்டு மண்டபம், இவரது முயல்வில், சீனாக்காரன் கட்டி கொடுத்தது.

  21. தளம் 3: ஈழத் தமிழ் அரசியல் நேற்று - இன்று - நாளை ஈழத் தமிழர் அரசியல் பல்வேறு அரசியல் இயக்கங்களைத் தன்னகத்தே கொண்டது. வெளியிலிருந்து வரும் பேரினவாத ஒடுக்குமுறை, ஏகாதிபத்திய தலையீடுகள், வல்லரசுகளின் மேலாதிக்கம் முதல் தன்னுள்ளே இயங்கும் ஒடுக்குமுறைகள், சாதியம், பெண்ணடிமைத் தனம் என்பவற்றுடன் ஏனைய தேசிய இனங்களுடனான உறவும் முரணும் எனப் பலதரப்பட்ட, சிக்கலான அரசியல் இயக்கங்களை ஈழத் தமிழ் அரசியல் உள்ளடக்குகிறது. இந்த அரசியலின் பல்வேறு பரிமாணங்கள் பற்றிய உரையாடலாக இன்றைய தளம் அமையும் என நிகழ்ச்சியின் மட்டுறுத்துநர் மு. மயூரன் வழங்கிய அறிமுகத்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில் முதலில் சட்டத்தரணி என்.கே.அஷோக்பரன், சட்டத்தரணியும் யாழ், பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளருமா…

  22. நிலத்தடியில் புதைந்த கடந்தகாலமும், அகழப்படும் உண்மைகளும் 2019 - ராஜன் குறை · கட்டுரை உண்மைகள் தங்களைத் தாங்களே என்றும் நிறுவிக்கொள்வதில்லை. அதிகாரத்தின் கரங்களே அவற்றை நிறுவகின்றன. புலனாகும் உண்மைகள், ஆங்கிலத்தில் ஃபாக்ட்ஸ் எனப்படுபவைகூட கருத்துசார் உண்மைகள் உருவாகும்போது அவற்றுள் புதையுண்டுவிடுகின்றன. ஜெயந்தன் ‘மனுஷா மனுஷா’ என்ற நாடகத்தில் எழுதியதுபோல, மன்னனின் புத்தாடைகள் என்ற கதையில் வருவதுபோல கண்ணுக்குப் புலனாகாத மன்னனின் ஆடைகளை அனைவரும் பாராட்டும்போது மன்னவனின் நிர்வாணத்தைக் கேள்வி கேட்பவனே பைத்தியக்காரன், முறை தவறிப் பிறந்தவன். சுருக்கமாகச் சொன்னால் அனைவரும் ஏற்றுக்கொள்வதே உண்மை. அனைவரும் ஏற்றுக்கொள்ளும்போது பிறப்பதுதான் அதிகாரமும். பொது ஏற்பின் இர…

  23. நேர்பட உரைத்தல் அரசியல் என்பது பெண்களுக்கு மிகவும் சவாலான விடயம் என்பது உண்மைதான். ஆனால், எத்தகைய சவால்களையும் துணிந்து விருப்பத்துடன் ஏற்கும் பெண்களுக்கு அது மிகவும் சுவாரசியமான விடயமும் கூட. ஒரு தேர்தல் களத்தில் போட்டியிடும் பெண்களின் மீது அவரது சமூகத்தின் அனைத்துப் பெண்களையுமே பிரதிநிதித்துவப்படுத்தும் பாரிய பொறுப்பு சுமத்தப்படுகிறது. இதனை சிறப்புற எதிர்கொள்ளுவதற்கு வெறுமனே அரசியலில் ஆர்வம் இருந்தால் மட்டும் போதாது அதில் தொடர்ந்து பயணிப்பதற்குத் தேவையான வலுவும் புத்திசாதுர்யமும் துணிவும் ஆண்களைவிட சற்று அதிகமாகவே பெண்களுக்குத் தேவை. இதற்கு முக்கியக் காரணம் இதுவரை காலமும் ஆண்களை மட்டுமே பெரும்பான்மையாகக் கொண்டிருந்த கட்சி அரசியலானது மக்களின் பிரச…

  24. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் எனும் மாயை பட மூலம், PageTamil சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையைப் பாரதீனப்படுத்தி விசாரித்தால், அதன்பால் வரும் சிக்கல்களைத் தீர்த்துக்கொள்ள சிங்கள தேசம் தம்மோடு பேச்சுவார்த்தைக்கு வரும் என்கிறார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். இந்தக் கட்டுக்கதை உச்சக்கட்ட ஏமாற்று வேலை. ஏன் என்பது வருமாறு: சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பிரதான வழக்குத் தொடுனர் (chief prosecutor) என்றொருவர் இருக்கிறார். அவருக்கு சர்வதேச குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றங்களாகக் கொள்ளப்படக் கூடிய – இனப்படுகொலை (genocide), போர்க்குற்றங்கள் (war crimes), மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் (crimes against humanity) மற்றும் வலியத் தீங்கு செய்தல் (crime…

  25. ‘மாவோவாத இயக்கத்துக்கு சர்வதேச ரீதியில் பெரும் கோட்பாட்டு பங்களிப்புச் செய்த தலைவர்’- பிறந்ததின நூற்றாண்டில் சண்முகதாசனை நினைவுகூருதல் – கலாநிதி ஜெகான் பெரேரா அரசியல் ஆளுமை ஒருவரை அவர் வாழ்ந்த காலகட்டத்தின் பின்புலத்தில் வைத்தே மதிப்பீடு செய்ய வேண்டும்.ஆனால், அவரது செயற்பாடுகளின் நீடித்த பொருத்தப்பாட்டை உறுதிசெய்து பின்னறிவைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடனும் மதிப்பிடலாம். ‘ தோழர் சண் ‘ என்று பிரபலமாக அறியப்பட்டிருந்த நாகலிங்கம் சண்முகதாசனின் பிறந்ததின நூற்றாண்டை (2020 ஜூலை 3) முன்னிட்டு அவரைப் பற்றிய ஒரு மதிப்பீட்டை செய்வது பொருத்தமானதாகும் என்று நம்புகிறேன். கடந்தகால நிகழ்வுகளின் தொடரை திரும்பிப்பார்ப்பதை நாம் வாழும் இன்றைய தருணத்தில் இருந்து தொடங்குவோம். ‘ மன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.