Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. கொரோனா – நவீன பஸ்மாசுரன்? – நிலாந்தன் March 21, 2020 இந்து புராணங்களில் பஸ்மாசுரன் என்று ஓர் அசுரன் உண்டு. தான் தொட்டதெல்லாம் பஸ்பமாக வேண்டும் என்று பஸ்மாசுரன் சிவபெருமானிடம் வரம் கேட்கிறான். வரம் கிடைத்ததும் எதிர்ப்படும் எல்லாரின் தலையிலும் கைவைக்க தொடங்குகிறான். அவன் தொட்டதெல்லாம் சாம்பல் ஆகிறது. அவனைக் கண்டதும் மூவுலகதவரும் ஓடத் தொடங்குகிறார்கள். சிவபெருமானும் ஓட வேண்டியதாயிற்று. ஒரு கட்டத்தில் மகாவிஷ்ணு ஓரழகிய மோகினியாக மாறி பஸ்மாசுரனை மயக்கி அவன் தலையில் அவன் கையை வைக்க செய்கிறார். சீன அதிபர் கொரோனா வைரஸை ஓர் அரக்கன் என்று வர்ணித்தார். கொரோனா வைரஸிலிருந்து தப்புவது என்று சொன்னால் பஸ்மாசுரனிடமிருந்து தப்புவது போல ஒருவர் மற்ற…

  2. பொறுப்பை மறந்தால் முழு நாட்டையும் வைரஸ் தாக்கும் எம்.எஸ்.எம். ஐயூப் கொவிட்-19 எனப்படும், தற்போது உலகை உலுக்கும் நோயின் மரண வீதம், ஆபிரிக்காக் கண்டத்தின் சில நாடுகளில், கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பரவிய, ‘எபோலா’ எனப்படும் நோயின் மரண வீதத்தைப் பார்க்கிலும், மிகவும் குறைவானதாகும். ‘எபோலா’ தொற்றியவர்களில் 50 சதவீதம் முதல் 90 சதவீதமானவர்கள் உயிரிழந்தார்கள். ஆனால், ‘கொவிட்-19’ தொற்றிவர்களில் மூன்று சதவீதமானவர்களே மரணமடைகின்றனர். ஆனால், ‘கொவிட்-19’ பரவும் வேகத்தைப் பார்க்கிலும், உலகளாவிய ரீதியில், அதைப் பற்றிய பீதி பரவும் வேகம், மிகவும் அதிக…

    • 0 replies
    • 729 views
  3. அரசியல் அறம் மறந்த மாவை புருஜோத்தமன் தங்கமயில் / 2020 மார்ச் 18 தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான கவீந்திரன் கோடீஸ்வரன், அவர் சார்ந்திருந்த தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தை (டெலோ) விட்டு, சொல்லாமல் கொள்ளாமல் தமிழரசுக் கட்சியில் இணைந்திருக்கிறார். அவர் இம்முறை தமிழரசுக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். அம்பாறை மாவட்ட வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் கூட்டத்தின் போதே, இந்த விடயம் டெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனுக்கு, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவால் சொல்லப்பட்டிருக்கின்றது. ஒரு மாவட்டத்தின் தலைமை வேட்பாளர், அதுவும் கடந்த பொதுத் தேர்தலில் தன்னை முன்னிறுத்திய கட்சிக்கு இறுதிவரை அறிவிக்…

  4. வன்னி வாக்குகளை பிரிக்கும் பலகட்சி அரசியல் -க. அகரன் ‘அடம்பன்கொடியும் திரண்டால் மிடுக்கு’ என்பது வெறும் வார்த்தை ஜாலங்களாகவே, தமிழ் அரசியல் தரப்பில் காணப்படுகின்றது என்பது, நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வெளிப்படையாகி உள்ளது. தமிழர் தரப்பு அரசியல் நிலைப்பாடுகள், பலதரப்பட்ட விடயங்களை உள்ளடக்கி உள்ளன. தீர்வுகள் கிடைக்கப் பெற வேண்டிய, அவர்களது பிரச்சினைகள், நிறைந்ததே உள்ளன. இந்தச் சூழலில், தமிழர்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் உள்ளதா என்ற ஐயப்பாடு காணப்படுகின்றது. பல தசாப்தங்களாகத் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான நகர்வுகள், கைகூடாத நிலையிலேயே, நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆட்சேர்ப்பில், கட்ச…

  5. கல்வியில் தற்கால பிரச்சினைகள்- ஷானுஜா கல்வியானது மனிதனது அடிப்படைத் தேவைகளில் ஒன்றானதை தொடர்ந்து சமூகத்தில் அனைவரும் பேசப்படுகின்ற ஓர் விடயமாகக் காணப்படுகின்றது.ஆனாலும் தற்கால கல்விமுறைமையிலும் கல்வி நடவடிக்கைகளிலும் பாரிய பிரச்சனைகள ; காணப்படுகின்ற போதிலும் அது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதென்பது கேள்விக்குறியான ஓர் விடயமாகவே காணப்பட்டு வருகின்றது. எமது நாட்டைப் பொறுத்தவரையில் கல்வி தொடர்பான அபிவிருத்தி நடவக்கைகளும் புதியன புகுத்துதலும் மேற் கொள்ளப்பட்டாலும ; சர்வதேசத்தோடு ஒப்பிடுகின்ற போது போட்டியிட முடியாத ஓர் கல்வி முறையாகவே காணப்படுகின்றது. தற்காலத்தில் இலங்கையைப் பொறுத்தவரை முறைசார்ந்த மற்று…

    • 0 replies
    • 2.9k views
  6. ‘பதினாறும் பெற்று, பெருவாழ்வு வாழ்க’ காரை துர்க்கா / 2020 மார்ச் 17 தமிழ் மக்களது விடுதலைக்கான ஆயுதப் போராட்டம், 2009ஆம் ஆண்டு மே மாதம் மௌனம் கண்டது. அதன் பின்னரான, ஓராண்டு காலம் நிறைவு பெறுவதற்குள் (08 ஏப்ரல் 2010) 14ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 13 ஆசனங்களையும் தேசிய பட்டியல் மூலமாக ஓர் ஆசனத்தையும் பெற்று, மொத்தமாக 14 ஆசனங்களைக் கைப்பற்றிக் கொண்டது. அதன் பின்னர், 15ஆவது நாடாளுமன்றத் தேர்தல், 2015 ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெற்றது. அதில் கூட்டமைப்பு, 14 ஆசனங்களையும் தேசிய பட்டியல் மூலமாக, இரண்டு ஆசனங்களையும் பெற்று, மொத்தமாக 16 ஆசனங்களைக் கைப்பற்றியது. இதற்கிடையே, 2010ஆம் ஆண்டு நாடாளுமன்றத் த…

  7. மக்களுக்கு வைத்துள்ள ‘பரீட்சை’ எம். காசிநாதன் “வயது 40 முதல் 45 வரை உள்ள இளைஞர்கள், அதிகாரத்தைக் கையில் எடுக்க வேண்டும்”. “தேர்தல் முடிந்த பிறகு, கட்சியில் பல்வேறு மட்டத்தில் உள்ள பதவிகள், அதிகம் தேவையில்லை” “நான் முதலமைச்சராக மாட்டேன்; வருங்கால முதலமைச்சர் ரஜினி என்று சொல்வதைத் தவிர்த்து விடுங்கள்” என்று, ரஜினி மூன்று முக்கிய அறிவிப்புகளை வௌியிட்டுள்ளார். இந்த அறிவிப்புகள், தன்னை வளர்த்த ரசிகர் மன்றங்களை ரஜினி கைகழுவுகிறார் என்ற ஏமாற்றத்தையும் தோற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ‘வருகிறார்... வருகிறார்’ என்ற ரஜினி, இப்போது வந்து விட்டார். ஆனால், அரசியலுக்கு வரவில்லை. அரசிய…

    • 0 replies
    • 751 views
  8. ’’போலிகளைக் கேட்டு ஏமாறாதீர்கள்” ஊடகவியலாளர்களே அவதானம்! றம்ஸி குத்தூஸ் இன்று ஊடகத்துறை மிகவும் வளர்ச்சியடைந்துகொண்டு போவதைக் காணக்கூடியதாக உள்ளது.சமூக வலைத் தளங்களான பேஸ்புக்,வட்ஸ்அப்,டுவிட்டர் போன்ற பலதளங்களைக் காணலாம். அதேபோல், ஒரு சிலர் சமூக வலைத் தளங்களை வைத்துக் கொண்டு ‘ஊடகவியலாளர்கள்’ என்று மார்தட்டுகின்றனர். ஆனால், இவர்களில் சிலருக்கு ஊடக ஒழுக்ககோவை பற்றிய எந்தவொரு தகவலும் தெரியாது. இதேவேளை, ஊடக நிறுவனங்களோ ஊடகவியலாளர்களோ மக்களுக்குச் சரியான தகவல்களை வழங்குவது மிகவும் முக்கியமான விடயமாகும். கொழும்பு கலதாரி ஹோட்டலில் ‘REAL MEDIA LITERACY FOR A FAKE NEWS’ (போலிச…

    • 0 replies
    • 903 views
  9. தமிழ் அரசியலில் பாலின வன்மம் என்.கே. அஷோக்பரன் / 2020 மார்ச் 16 இலங்கை சனத்தொகையில், 2017ஆம் ஆண்டு தொகைமதிப்பு புள்ளிவிவரத் திணைக்களத்தின் அனுமானத்தின்படி, 51.6 சதவீதமானோர் பெண்களாவர். அதேவேளை, 2016/2017 புள்ளிவிவரங்களின்படி, இலங்கைப் பல்கலைக்கழகங்களில் இளமாணிப் பட்டப்படிப்புக்கு அனுமதி பெற்றுக்கொண்டவர்களில் 60.9 சதவீதமானோர் பெண்கள்; இளமாணிக் கற்கைகளுக்காகப் பல்கலைக்கழகங்களில் இணைந்துகொண்டவர்களில் 62.3 சதவீதமானோர் பெண்களாவர். மேலும், இதே ஆண்டு, இளமாணிப் பட்டம் பெற்றுக்கொண்டோரில், 63.1 சதவீதமானோர் பெண்கள். இதே ஆண்டு, இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் முதுமாணிப் பட்டப்படிப்புக்கு அனுமதி பெற்றுக்கொண்டோரில் 54.9 சதவீதமானோர் பெண்கள்; முதுமாணிக் கற்கையில் இணைந…

  10. மக்களுக்கு புரியாத ‘மாபியா’ அரசியல் -விரான்ஸ்கி நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தமிழ் பிரதேசங்களில் பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. பரவுகின்ற கொரோனா வைரஸிலும் பார்க்க, படுவேகமாகத் தங்களின் அரசியல் கருத்துகளை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்துவிடவேண்டுமென்று, கட்சிப் பிரமுகர்கள் மின்னல் வேகத்தில் செயற்பட்ட வண்ணம் உள்ளனர். முக்கியமாக, இம்முறை தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான சக்தியாக, தமிழ்க் கூட்டமைப்பின் மாற்றுச் சக்தியாகத் தங்களை முன்நிறுத்தியுள்ள விக்னேஸ்வரன் தலைமையிலான அணியினர், எப்படியாவது மக்களின் மனங்களில் புதிய விதைகளைத் தூவி, கூட்டமைப்பினருக்கான விசுவாச மரங்களை அடியோடு தோண்டியெறிந்துவிட வேண்டும் என்று படாதபாடுபடுகிறார்கள். முக்க…

  11. செவ்வி: கஜேந்திரகுமார்

    • 0 replies
    • 489 views
  12. மகிந்த தரப்பின் மூன்றில் இரண்டு சாத்தியமா ? யதீந்திரா தேர்தல் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. இதில் மகிந்த தரப்பின் வெற்றி வாய்பிலும், எந்தவொரு பிரச்சினையும் இருக்கப் போவதில்லை. இதுவும் எதிர்பார்க்கப்படும் ஒன்றுதான். ஆனால் மகிந்த தரப்பிற்கு மூன்றில் இரண்டு பெரும்பாண்மையை பெற முடியுமா என்பது ஒரு பெரிய கேள்வி. கிடைக்கும் தகவல்களின்படி அது இலகுவான ஒன்றல்ல ஆனால் மகிந்த தரப்பு தனது முழு ஆற்றலையும் வளங்களையும் பயன்படுத்தி, தங்களின் வெற்றியை எந்தளவிற்கு பெருப்பிக்க முடியுமோ அந்தளவிற்கு பெருப்பிக்கவே முயற்சிக்கும். பொதுவாக ஒன்றின் பலம் என்பது பிறிதொன்றின் பலவீனத்தில்தான் தங்கியிருக்கின்றது. அரசியலில் ஒவ்வொரு விடயத்தையும் இந்தக் கண்ணோட்டத்தில்தான் பார்க்க வேண்டும். மகிந்தவின் வெற…

  13. தமிழர்களும் கொரோனோ வைரசும். சீன மரபு ஓவியங்களில் வரும் நிலக்காட்சிகளில் ஒரு முக்கியமான அம்சம் உண்டு. அங்கே இயற்கை பிரம்மாண்டமாகக் காட்டப்படும். அப்பேரியற்கைக்கு முன் மனிதன் மிகச் சிறியவனாக வரையப்பட்டிருப்பான். அவன் கட்டிய வீடுகள் அவனுடைய தயாரிப்புக்கள் யாவும் பேரியற்கைக்கு முன் மிகச் சிறியவைகளாகக் காணப்படும். சீன மரபு ஓவியங்கள் சீனாவின் மகத்தான தத்துவ ஞானமாகிய தாவோயிஸத்தின் வழி வந்தவை என்று நம்பப்படுகிறது. அங்கே வெளியை பிரம்மாண்டமாக காட்டுவதற்காக மனிதன் மிகச் சிறியவனாக காட்டப்படுகிறான். இயற்கைக்கு முன் மனிதன் அற்பமானவன் என்ற உணர்வை அந்த ஓவியங்கள் தரும். சீனாவில் முதலில் அடையாளம் காணப்பட்ட கொரோனோ வைரஸ{ம் அப்படி ஒரு உணர்வையே தருகிறது. இப்பொழுது சீனா உலகப் பேர…

  14. கொரோனோவை அந்தந்த மாகாணங்களுள் கட்டுப்படுத்துக. CONTROL CORONA WITHIN PROVINCES. STOP COMMUNALLY SETTING MAIN CORONA DETENTION CAMS IN TAMIL SPEAKING AREA SUCH AS BATTICALOA AND VAVUNIYA. WHY SINHALESE BROTHERS AND SISTERS KEEP SILENT? WHY DIASPORA TAMILS SILENT? WHY INTENTIONAL COMMUNITY SILENT? இனவாத அடிப்படையில் முழு இலங்கைக்குமான கொரோனோ தடுப்பு நிலையங்களை தமிழ்பேசும் வடகிழக்கு மாகாணங்களில் அமைப்பதை நிறுத்து. சிங்கள சகோதர சகோதரிகளே ஏனிந்த மவுனம்? புலம்பெயர்ந்த தமிழர்களா ஏனிந்த மவுனம்? சர்வதேச சமூகமே ஏன் இந்த மவுனம்?

    • 2 replies
    • 864 views
  15. ஓநாய்களிடம் மாட்டிய ஆட்டு குட்டிகளாக தமிழ் மக்கள்.! தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், கடந்த இரு வாரங்களாக, தமிழரசுக் கட்சிக்குள் இடம் பெற்று வரும் வேட்பாளர் நியமனத்துக்கான இழு பறியும் குத்து வெட்டுகளுமே முதன்மைக் கவனத்தைப் பெற்றிருக்கின்றன. தம்முடைய வெற்றிக்கு அச்சுறுத்தலானவர்கள் என்று கருதும் நபர்களை ஓரங்கட்டுவது முதல், ஆளுமையுள்ள புதியவர்களை வேட்பாளர் பட்டியலுக்குள் உள்வாங்குவதைத் தவிர்ப்பது வரை, மிக மிக கொச்சையான நடவடிக்கைகளில், தமிழரசுக் கட்சியின் தலைவரும், அந்தக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஈடுபட்டு வருகிறார்கள். யாழ்ப்பாணத்துக்குள், கூட்டமைப்புக்கு எதிரான சக்தியாக எழுவார்கள் என்று நம்பப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், தமிழ் மக…

  16. கொரொனா வைரஸ் இனவாதத்தை நிறுத்து. STOP CORONO VIRUS COMMUNALISM. WHY YOU ARE BUILDING THE MAIN CRONO VIRUS DETENTION CAMPS IN TAMIL SPEAKING ARES? STOP COMMUNAL HANDLING OF CORONO VIRUS. .WHY LIEUTENANT GENARAL SHARVENDRA SILVA? IS HE A MEDICAL DOCTOR? OR THIS IS THE NEW CHAPTER IN THE GENOCIDE? WHY SINHALESE BROTHERS AND SISTERS KEEP SILENT? WHY INTERNATIONAL COMMUNITY SILENT? ஏன் முக்கிய கொரோனா வைரஸ் தடுப்பு முகாங்களை தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதிகளின் நிறுவுகிறீர்கள்? கொரோனா வைரஸ் சிகிச்சையில் இனவாதத்தை நிறுத்து. எதற்காக இராணுவத் தளபதி சர்வேந்திரசில்வா? அவர் வைத்திய நிபுணரா? அல்லது இது இனக்கொலையில் புதிய அத்தியாயமா? ஏன் சிங்கள சகோதர சகோதரிகள் …

  17. வேட்பாளர் நியமன நெருக்கடி மொஹமட் பாதுஷா நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல், நேற்று ஆரம்பமாகி இருக்கின்றது. இருப்பினும் தனித்தும் கூட்டாகவும் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகின்ற முஸ்லிம் கட்சிகள், அரசியல் அணி சார்பாக யார், யாரை வேட்பாளராகக் களமிறக்குவது, எவ்வாறான தந்திரோபாயங்களைக் கையாள்வது தொடர்பில், இன்னும் இறுதி முடிவுகள் எட்டப்படவில்லை என்றே தெரிகின்றது. எந்தப் பக்கத்தில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கும், இந்தத் தேர்தலானது, மிகவும் சவாலான ஒரு தேர்தலாக அமையும் என எதிர்பார்க்கலாம். கடந்த ஜனாதிபதித் தேர்தலில், பெரும்பாலான முஸ்லிம்கள் பொதுஜன பெரமுனவை ஆத…

    • 0 replies
    • 515 views
  18. கொரோனா: இருமுனை ஆயுதம் கே. சஞ்சயன் / 2020 மார்ச் 13 கொரோனா வைரஸ், இலங்கையின் தற்போதைய அரசாங்கத்துக்கு, ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்குச் சவாலான ஒன்றாக உருவெடுத்து வருகிறது. 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி, ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று வெடிக்க வைக்கப்பட்ட குண்டுகள், இலங்கை அரசியலின் போக்கை அடியோடு திசை திருப்பியிருந்தன. அன்றைய ஆளும்கட்சியான ஐ.தே.கவுக்கு மரண அடி கொடுத்த அந்தத் தாக்குதல்கள், அப்போதைய அரசாங்கத்தின் இயலாமையை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டின. அதுவே, ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவின் தோல்விக்கும், முக்கிய காரணமாக அமைந்தது. மறுபுறத்தில், ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்‌ஷ பெற்ற வெற்றியைக் கொண்டு, தற்போதைய அர…

  19. இந்துக்களும் கிறிஸ்தவர்களும் கூறுகூறானால் தமிழரின் நிலை? -இலட்சுமணன் தேசிய அரசியலில் (தமிழர்களின்) என்றுமில்லாத அளவுக்குப் பிரிவினைகள் தோன்றியுள்ளன. சுயலாப நோக்கிலான அரசியல் மேலோங்கி உள்ளதே, இதற்கான பிரதான காரணமாகும். ஆனால், சிங்கள தேசியவாதத்தை நிலைநிறுத்தும் அரசியல் மாத்திரம், பலமான சக்தியாக மேலெழுந்து செல்கிறது. இத்தகைய சூழ்நிலை ஒன்றின் உருவாக்கத்துக்கு, இராணுவ மேலாதிக்கப் போக்கும், இலங்கை, சிங்கள தேசம் என்ற இனவாதச் சிந்தனையும் அடிப்படையாக அமைந்துள்ளன. ஐக்கிய தேசிய கட்சியின் உட்கட்சி மோதல்களும் அதற்குள்ளே முகிழ்ந்துள்ள வர்க்கவாத சாதியவாதச் சிந்தனைகளும் ஐ.தே.கவின் அரசியல் எதிர்காலம் தொடர்பாகக் கேள்விக்குறியை முதன்மைப்படுத்தி நிற்கின்றன. இந…

    • 5 replies
    • 978 views
  20. ‘ஒருமித்த குரலில் பேசட்டாம்; ஒன்னா மண்ணா போகட்டாம்’ ஒருமித்த கருத்தோடு, ஒரே பயணத்தில் இணைய எல்லோரையும் அழைக்கிறார்கள். இப்போது கொஞ்சக் காலமாய் ஓரே குரலில் பேச வேண்டியதன் அவசியம் பற்றி அடிக்கடி பேசப்படுகிறது. போதாக்குறைக்கு தமிழர்களின் மகுடவாசகம், ‘ஒருமித்த கருத்தும் ஒருமித்த பயணமும்’ என்ற அலப்பறைகள் வேறு. இதில் பிரதானமாய்க் கேட்க வேண்டிய வினா, எந்தத் தமிழர்களின் மகுடவாசகம் அது என்பதுதான்; கோவிலுக்குள் நுழைய இயலாமல் வெளியே நிற்கின்ற தமிழன், தோட்டக்காட்டான் என்று புறக்கணிக்கப்படும் தமிழன், மட்டக்களப்பான் என்று ஒதுக்கப்படும் தமிழன் ஆக…

    • 0 replies
    • 408 views
  21. ஐ.தே.கவே பொதுஜன பெரமுனவின் அதிமுக்கிய ஆதரவாளர் எம்.எஸ்.எம். ஐயூப் ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடரில், இலங்கை தொடர்பாகத் தெரிவிக்கப்பட்ட கருத்துகள், போதியளவில் சமூகத்தில் கலந்துரையாடப்படவில்லை. இதற்கு முன்னர், அப்பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணைகள் நிறைவேற்றப்பட்ட போதும், அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட போதும் அவை, பல வாரங்களாக ஊடகங்களில் விரிவாக ஆராயப்பட்டன. இம்முறை, இலங்கை விடயத்தில் முக்கிய விடயம் ஒன்று, அப்பேரவையில் இடம்பெற்றது. அதாவது, இலங்கை தொடர்பாக, அப்பேரவையில் இதற்கு முன்னர் நிறைவேற்றப்பட்ட பிரேரணையொன்றுக்கு, இலங்கை அரசாங்கம் வழங்கிய அனுசரண…

    • 0 replies
    • 305 views
  22. தமிழரசுக் கட்சியின் தேர்தல்கால குத்து வெட்டுகள் புருஜோத்தமன் தங்கமயில் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், கடந்த இரு வாரங்களாக, தமிழரசுக் கட்சிக்குள் இடம்பெற்றுவரும் வேட்பாளர் நியமனத்துக்கான இழுபறியும் குத்து வெட்டுகளுமே முதன்மைக் கவனத்தைப் பெற்றிருக்கின்றன. தம்முடைய வெற்றிக்கு அச்சுறுத்தலானவர்கள் என்று கருதும் நபர்களை ஓரங்கட்டுவது முதல், ஆளுமையுள்ள புதியவர்களை வேட்பாளர் பட்டியலுக்குள் உள்வாங்குவதைத் தவிர்ப்பது வரை, மிகமிக கொச்சையான நடவடிக்கைகளில், தமிழரசுக் கட்சியின் தலைவரும், அந்தக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஈடுபட்டு வருகிறார்கள். யாழ்ப்பாணத்துக்குள், கூட்டமைப்புக…

    • 0 replies
    • 314 views
  23. ஐக்கிய தேசியக் கட்சியின் பிளவினால் ஏற்படக்கூடிய விளைவுகள் பி.கே.பாலசந்திரன் கொழும்பு (நியூஸ் இன் ஏசியா😞திர்வரும் ஏப்ரல் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஐக்கியப்பட்டுப் பலம்பொருந்தியதாக இருந்தால் மாத்திரமே தங்களால் ஆசனங்களை வென்றெடுக்க முடியுமென நம்பிக்கொண்டிருக்கும் சிலர், கடைசி நேரத்திலாவது கட்சிக்குள் பிளவு தவிர்க்கப்படுமென இன்னமும் நம்புகின்றார்கள். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பெரும்பாலான உறுப்பினர்கள் எந்த நேரத்திலும் பிளவு உறுதியாக்கப்பட்டுவிடும் என்று எதிர்பார்த்தவாறு இருக்கிறார்கள். ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் (சமகி ஜனபல வேகய) தேர்தலில் போட்டியிடுவதற்கான அவற்றின் நோக்கங்களைத் தெரியப…

  24. தேர்தல் கால ஞானம்: ஹரீஸின் ‘மன்னிப்பு’ அரசியல் முகம்மது தம்பி மரைக்கார் முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ், கடந்த வியாழக்கிழமையன்று (05) முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்புக் கோரி, உரையொன்றை ஆற்றியிருந்தார். தமது கட்சியின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப் கூறிய உபதேசம் ஒன்றை, தாம் மீறி விட்டதாகவும் அதற்காக முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்புக் கோருவதாகவும் அந்த உரையில் ஹரீஸ் தெரிவித்திருந்தார். “ரணிலின் பஸ்ஸில் ஏறக் கூடாது என்று, மறைந்த தலைவர் அஷ்ரப் கூறிய உபதேசத்தை, நாங்கள் மீறி விட்டோம். அதற்காக, சமூகத்திடம் மன்னிப்புக் கோருகிற…

    • 0 replies
    • 387 views
  25. உள்ளகப் போட்டியால் தடுமாறும் தமிழ் அரசியல் பாரா­ளு­மன்றத் தேர்தல் வரப்­போ­வது உறு­தி­யா­கி­யுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் சார்பில், யாழ்ப்­பா­ணத்தில் அர­சியல் கருத்­த­ரங்­குகள் நடத்­தப்­பட்டு வரு­கின்­றன. யாழ். வீர­சிங்கம் மண்­ட­பத்தில் பெரி­ய­ள­வி­லான கருத்­த­ரங்கு நடத்­தப்­பட்­டது. வட­ம­ராட்சி, வலி­காமம், தென்­ம­ராட்சி என பிர­தேச ரீதி­யா­கவும் அர­சியல் கருத்­த­ரங்­குகள் நடத்­தப்­பட்டு வரு­கின்­றன. இங்­கெல்லாம், கூட்­ட­மைப்பின் பேச்­சாளர் எம்.ஏ.சுமந்­திரன் தான், பிர­தான பேச்­சா­ள­ராகப் பங்­கேற்று வரு­கிறார். கருத்­தா­ளர்­களின் விமர்­ச­னங்­க­ளுக்கு பதி­ல­ளித்­தி­ருந்தார். பிறர் மீது அவர் குற்­றச்­சாட்­டு­களை முன்­வைக்­கவும் தவ­ற­வில்லை.…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.