அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
ஆரோக்கியமற்ற அரசியல் தளம்: புஷ்வாணமாகும் கோரிக்கைகள் Editorial / 2019 மார்ச் 05 செவ்வாய்க்கிழமை, மு.ப. 01:10 Comments - 0 -க. அகரன் சாண் ஏற முழம் சறுக்கும் கதையாகிப்போயிருக்கும் தீர்வு விடயங்களில், முன்னேற்றம் காணப்படுகிறதா என்பது சந்தேகம் நிறைந்ததாகவே காணப்படுகின்றது. தமிழர்கள் கோரி நிற்கும் தீர்வு, அவர்களது அபிலாஷைகள், யுத்தத்தின் தாக்கத்தால் ஏற்பட்ட அநீதிகளுக்கான தீர்வு என்பனவற்றை நிவர்த்திக்கும் வகையிலானதாக அமைதல் என்பது, தென்னிலங்கை அரசியல்ப் போக்கைப் பொறுத்தவரையில் சாத்தியமானதொன்றாக அமைய முடியுமா என்ற கேள்வி நிறைந்தே உள்ளது. ஜனநாயகத்துக்கான போராட்டம், இலங்கை தேசத்தில் பல தரப்பாலும் முன்னெடுக்கப்படும் நிலையில், இதன் விழுமியங்களைக் க…
-
- 0 replies
- 363 views
-
-
ந.ஜெயகாந்தன் கிராமங்களை அபிவிருத்தி செய்யும் உள்ளுராட்சி சபைகளுக்கு தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ளன. இந்தத் தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது என்றும், அந்த வாக்குகள் எவ்வாறு எண்ணப்படும் என்றும் மக்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல் முறைமைகளை விடவும் உள்ளூராட்சித் தேர்தல் முறைமை முற்றிலும் வித்தியாசமானது என்பதனால் வாக்களிக்க முன்னர் மக்கள் இது தொடர்பில் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டியுள்ளது. அதாவது ஜனாதிபதித் தேர்தல் முழுநாடும் ஒரே தேர்தல் மாவட்டம் போன்று கணிக்கப்பட்டு வெற்றி பெற்றவர் தீர்மானிக்கப்படுவர். அதேபோன்று பாராளுமன்றத் தேர்தல் விகிதாசார அடிப்படையில் 22 தேர்தல் மாவட்டங்களில…
-
- 0 replies
- 277 views
- 1 follower
-
-
விக்னேஸ்வரனும் மாற்று தலைமைக்கான வெளியும் புருஜோத்தமன் தங்கமயில் / 2020 பெப்ரவரி 05 சி.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ‘பி ரீம்’ (B Team) போல செயற்படுவதாக, தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் என். சிறிகாந்தா, கடந்த வாரம் குற்றஞ்சாட்டியிருந்தார். அத்தோடு, எதிர்வரும் பொதுத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கட்சி, தனித்துப் போட்டியிடப் போவதாகவும் அறிவித்திருக்கின்றார். ஜனாதிபதித் தேர்தலில், சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதாகக் கூட்டமைப்பு எடுத்த முடிவை எதிர்த்து, டெலோவில் இருந்து பிரிந்து சென்ற சிறிகாந்தாவும் என்.கே.சிவாஜிலிங்கமும் புதிய கட்சியை ஆரம்பித்து, விக்னேஸ்வரனோடு இணக்கமாக இருந்தனர். கூட்டமைப்புக்கு எதிரான மாற…
-
- 0 replies
- 688 views
-
-
-
- 0 replies
- 168 views
- 1 follower
-
-
பூகோள அரசியலுக்கு ஏற்ப ரணில் விக்கிரமசிங்கவை அணைக்க முற்படும் ராஜபக்ச ஆட்சி Posted on June 11, 2020 by தென்னவள் 11 0 கோட்டாபயராஜபக்சஜனாதிபதியாகத்தெரிவுசெய்யப்பட்டு,மகிந்தராஜபக்ச பிரதமராகப் பதவியேற்றதும் 2009ஆம் ஆண்டு இறுதிப் போரை நடத்திய ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டனரெனத் தமிழர்கள் அங்கலாய்க்கின்றனர். முற்போக்கான சிங்கள மக்கள் மத்தியில் அதிகாரத் துஸ்;பிரயோகத்தில் ஈடுபட்ட ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டனர் என்ற கவலையும், இஸ்லாமியர்கள் என்ற காரணத்தால் தம்மை ஒரங்கட்ட முற்பட்டவர்கள் மீண்டும் பதவிக்கு வந்துவிட்டனர் என்ற அச்சம் முஸ்லிம் மக்கள் மத்தியிலும் உருப்பெற்றதுவிட்டது எவ்வாறாயினும் தமிழ் முஸ்லிம் மக்களைவிட சிங்கள ம…
-
- 0 replies
- 448 views
-
-
தமிழ் மக்கள் கேட்க வேண்டிய மூன்று கேள்விகள் தேர்தல் எங்கள் கண்முன்னே நிற்கின்றது. இன்னொரு தேர்தல் என்று, வெறுமனே புறந்தள்ளிவிட முடியாதபடி, எதிர்காலம் குறித்த கேள்விகளைத் தன்னுள் உட்பொதித்து, இத்தேர்தல் எம்முன்னே வந்து நிற்கிறது. தமிழ் மக்கள், தங்களுக்குள் கேட்கவேண்டிய கேள்விகளும் அதற்கு, அவர்கள் தேட வேண்டிய பதில்களும் உள்ளன. துரதிர்ஷ்டவசமாகத் தமிழ் மக்களின் கேள்விகளுக்கான எந்தவொரு விடையும், தமிழ்த் தேசிய கட்சிகள் என்று தங்களை அறிவித்துள்ள கட்சிகளிடம் இல்லை. ஆனால், தமிழ் மக்கள், சில கேள்விகளைக் கேட்டேயாக வேண்டும். இந்தத் தேர்தல் மூன்று அடிப்படைகளில் தமிழர்களுக்கு முக்கியமானது. அதில் பிரதானமானதும் அவசரமானதும், இலங்கை ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்த நெருக்…
-
- 0 replies
- 469 views
-
-
சிறிலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்சவின் இந்தியப் பயணம் அவருக்கு பெருத்த அவமானத்தையும் சங்கடத்தையுமே அவருக்கு உருவாக்கியுள்ளது. பீகார் மாநிலத்திலுள்ள புத்தகாயாவுக்குச் செல்வதாக மகிந்த ராஜபக்ச மேற்கொண்ட இந்தியப் பயணம் உண்மையிலேயே ஆன்மீக நோக்கங்களை மட்டும் கொண்டதல்ல. அதற்கும் மேலாக, அது மிகவும் முக்கியமான அரசியல் இலக்கோடு மேற்கொள்ளப்பட்டது. ஆன்மீகப் பயணம் என்ற பெயரில், இந்திய ஆட்சியாளர்களிடம் உள்ள உறவை மேம்படுத்தி, எதிர்வரும் ஜெனிவா ஐ.நா. அமர்வில் தனக்கு எதிராக உருவாக்கக்கூடிய அழுத்தங்களுக்கு எதிராக இந்திய ஆதரவைக் கோருவதுதான் அவரது முதன்மைத் திட்டமாக இருந்தது. 1600 இந்துக் கோவில்களை அழித்த ராஜபக்ச பக்தி மேலீட்டால் திருப்பதிக்கு விஜயம் செய்தார் என்று நம்ப முடியா…
-
- 0 replies
- 602 views
-
-
அரசியல் தர்க்கபூர்வ விதி ஈழத்திற்கான வழியைத் திறந்துவிட்டுள்ளது தத்தர் தமிழகத்தை முள்ளிவாய்க்கால் பெருநெருப்பு பெரிதும் கொதிநிலையடையச் செய்துள்ளது. உலகப் பெரு வல்லரசுகளுக்கும் பிராந்திய வல்லரசுகளுக்கும் இடையேயான முரண்பாடுகளினால் அவை ஒன்றுடன் ஒன்று உரசுண்டு அல்லது மோதுண்டு ஏற்படுத்தும் தீப்பொறிகள் அவ்வப்போது தமிழக அரசியலைப் பற்றி எரிய வைக்கின்றன. இராஜபட்சேக்கள் முள்ளிவாய்க்கால் பெருநெருப்பில் குளிர்காய்ந்து பெருவெற்றி ஈட்டியுள்ளார்களே ஆயினும் அந்தப் பெருவெற்றியின் பாதையில் அவர்கள் தமது பாதையில் தோல்விக்கான குழிகளைத் தோண்டவும் அதற்கான விதைகளை விதைக்கவும் தவறவில்லை. எனவே அவர்கள் உருவாக்கிய வெற்றிப் பாதையில் தோல்விக்கான குழிகளைத் தோண்டத் தவறவில்லை. இதனை அரசியல் வர…
-
- 0 replies
- 724 views
-
-
நசுக்கப்படும் மனித உரிமை : சட்டங்களை கடந்து போராட தமிழ் தலைமைகள் தயாரா.? ஒரு இனத்தின் மீது இன்னொரு ஆதிக்க இனம் ஒடுக்கு முறையை மேற்கொள்ளுகின்ற போது சட்டங்கள் மேலாதிக்கம் கொண்டவர்களின் அதிகாரமாகவே துலங்குகிறது. இது இலங்கையில் மாத்திரமல்ல, இலங்கை போன்ற இன மேலாதிக்க நாடுகள் பலவற்றிலும் இருக்கின்ற நடைமுறை. ஆனாலும் தேச விடுதலை, சமூக விடுதலை என சிந்திக்கும் மக்கள் தரப்பினரும் அவர்களின் ஆளுமை மிக்க தலைவர்களும் அதனைக் கடந்து ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். உண்மையிலே சட்டங்களுக்காக மக்கள் இல்லை. மக்களுக்காகவே சட்டங்கள் இயற்றப்பட்டன. இந்த எண்ணப்பாங்கில்தான் நாடுகளின் அரசியலமைப்பு சட்டங்கள் கூட உருவாக்கப்பட்டன. மக்களிடம் அதிகாரம் இருக்கவும் அவர்கள் அதனை பாதுகாக்கும…
-
- 0 replies
- 1.2k views
-
-
அனைத்துத் தரப்பினரதும் கவனத்தை ஈர்த்த உண்ணாவிரதப் போராட்டம் முழுநாட்டினதும் தமிழ் பேசும் மக்களின் கவனத்தையும் அவதானத்தையும் ஈர்த்த காணாமல்போனோரின் உறவினர்களின் உண்ணா விரதப்போராட்டம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தனவின் எழுத்துமூல உத்தரவாதத்தை அடுத்து இடைநிறுத்தப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை முதல் காணாமல்போனோரின் உறவினர்கள் மேற்கொண்டுவந்த உண்ணாவிரதப் போராட்டம் நாட்டு மக்கள் மத்தியில் பரபரப்பான நிலைமையை ஏற்படுத்தியிருந்தது. சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் என்ற அறிவிப்பானது அனைவர் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்ததுடன் பாதிக்கப்பட்டோரின் உ…
-
- 0 replies
- 212 views
-
-
நினைவுத்திற வெளியின் வெறுமையும், கூட்டழிவினதும் அடக்குமுறை எதிர்ப்பினதும் பொதுப்படிம அவசியமும் – எழில் May 8, 2021 139 Views வடக்கு கிழக்கில் நினைவுத்திற வெளியின் வெறுமையின் தோற்றம், நினைவுச் சின்னங்களைப் பற்றிச் சிந்திக்கின்ற போது எழுவது நியாயமானது. ஈழத் தமிழ்த் தன்மையை அடையாளப்படுத்திப் பிரதிபலிக்கக் கூடிய வரலாற்றுச் சின்னங்கள் என்று சொல்லக் கூடிய அளவிற்கு தமிழ் மன்னர்களின் சிலைகளைத் தவிர வேறு எதையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாதுள்ளது. நினைவுத்திற வெளியின் வெறுமைத் தன்மை திட்டமிட்டு தக்க வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றதை யாரும் அறியாமல் இல்லை. முள்ளிவாய்க்காலில் உள்ள உருவச் சிலையும் ஒரு கூட்டு அழிவின் படிவமாக உள்வாங்கப்படவில்லை. இனப் படுகொலைச் சொல…
-
- 0 replies
- 274 views
-
-
அவசரகால நிலைமை பிரகடனத்தின் இலக்கு பொருளாதாரமா, வாழ்வாதாரமா? லக்ஸ்மன் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுகையில் பிரகடனப்படுத்து வதற்கானதாகவே அவசரகால நிலைமைப்பிரகடனத்தைக் கொள்ளலாம். ஆனால், நமது நாட்டில் அதலபாதாளத்தில் வீழ்ந்திருக்கும் பொருளாதாரத்தைத் தூக்கி நிமிர்த்துவதற்காக இது பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. இலங்கையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை , கடந்த சில மாதங்களாகவே வெகுவாக அதிகரித்து வருகின்ற பின்னணியில், அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் விலை உயர்வால் நாட்டு மக்கள் நாளாந்தம் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். சீனி, பால்மா, அரிசி, கிழங்கு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தொடர்ச்சியாகவே தட்டுப்பாடு…
-
- 0 replies
- 310 views
-
-
வடக்கு - கிழக்கு துண்டாடப்பட்ட துயரம்: - மு.திருநாவுக்கரசு [Sunday 2017-07-09 18:00] தமிழ்த் தலைவர்கள் சிங்களத் தலைவர்களுடன் சேர்ந்து எதனையும் பெறவில்லை மாறாக சேர்ந்து அனைத்தையும் கொடுக்கின்றனர். மு. திருநாவுக்கரசு ஒரு தேசிய இனம், ஓர் அரசு என்பன அவற்றிற்குரிய தாயக நிலப்பரப்பினாற்தான் நிர்ணயம் பெறுகிறது. ஒரு தேசிய இனத்திற்கு இருக்கக்கூடிய பல்வேறு அடையாளங்களுள் முதலாவது அதற்குரிய பொதுவான நிலப்பரப்பாகும். ஆங்கில மொழி பேசும் பிரித்தானியர், அமெரிக்கர், கனேடியர், அவுஸ்திரேலியர் என பலர் ஒரு மொழியைப் பேசினாலும் அவை வொவ்வொன்றும் தனித் தனித் தேசங்களாகவும், வேறு வேறு அரசுகளாகவும் அடையாளம் காணப்படுகின்றன. எனவே மொழியின் அடிப்படையில் ஒரு தே…
-
- 0 replies
- 674 views
-
-
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்.கே. அஷோக்பரன் twitter: @nkashokbharan ‘மாவீரன் கர்ணன்’ என்ற வாசகத்தைத் தனது ஓட்டோவின் பின்புறத்தில் ஒட்டிய முல்லைத்தீவை சேர்ந்த இளைஞர்கள் இரண்டுபேர், முல்லைத்தீவு பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாக செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. ‘மாவீரன்’ என்ற சொல்லை, ஓட்டோவில் பதிந்திருந்தமை தொடர்பில், வாக்குமூலத்தைப் பெற்றுக்கொள்ள முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு ஓட்டோவுடன் வருகைதருமாறு சகோதரர்களான 21, 19 வயதுடைய இளைஞர்களை, முல்லைத்தீவு பொலிஸார் அறிவுறுத்தி இருந்தனர். அவர்களை அழைத்து, வாக்குமூலம் பெற்றுக்கொண்டிருந்தவேளை, ஊடகங்களுக்கும் இலங்கை மனித உரிமைகள்…
-
- 0 replies
- 2.4k views
-
-
'சிறிலங்காவில் ஈழத்தமிழர்களின் அரசியல் போராட்டம் தொடர்பறாமல் முன்னெடுக்கப்படுகின்றது' - ஊடக ஆய்வு [ ஞாயிற்றுக்கிழமை, 08 டிசெம்பர் 2013, 10:55 GMT ] [ நித்தியபாரதி ] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது சமவலுவில் செயற்பட வேண்டும். அனைத்துலக சமூகமானது சிறிலங்கா அரசாங்கம் மீது நாட்டில் மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்துவது மற்றும் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவது தொடர்பில் அழுத்தங் கொடுப்பதிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியானது தங்கியுள்ளது. இதில் புலம்பெயர் சமூகம் பெரும் பங்காற்ற வேண்டும். இவ்வாறு The Diplomat ஊடகத்தில் ஊடகவியலாளர் Kim Wall* எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. இரண்டு மாதங்களுக்கு முன்னர் சிறிலங…
-
- 0 replies
- 634 views
-
-
இந்திய பிரதமருக்கான தமிழக கட்சிகளின் கடித விவகாரம் திசை திருப்பப்படுமா?
-
- 0 replies
- 271 views
-
-
தரப்படுத்தலும் தரந்தாழ்ந்த அரசியலும் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ ஸ்ரீ லங்கா முதல் சிங்கலே வரை - 12 1970ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள், தமிழ்த் தேசியவாத அரசியலில் மிகுந்த பின்னடைவை ஏற்படுத்தியிருந்தன. அந்தப் பின்னடைவைச் சரிக்கட்டும் முகமாக, அப்போதிருந்த ஆட்சியாளரின் நடவடிக்கைகள் இருந்தன. இலங்கையின் இனமுரண்பாட்டின் முக்கியமான திருப்புமுனைகளில் ஒன்றாகச் சொல்லப்படுவது, 1971ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பல்கலைக்கழகத் தரப்படுத்தல்; இதைச் சுற்றி நிகழ்ந்த நிகழ்வுகள், தரம் தாழ்ந்த அரசியலின் பக்கங்களை எமக்கு எடுத்துக் காட்டுகின்றன. தரப்படுத்தலை நியாயப்படுத்தி, சிங்கள சமூகத்தினர் முன்வைக்க…
-
- 0 replies
- 975 views
-
-
அரசியலாகிப்போன மே தினம் லக்ஸ்மன் புதிய பிரதமருடன் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்திருப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கிறார். இதுவும் ஒருவகையில் மேதினத்துக்கான செய்திதான். இது மகிழ்ச்சியான செய்தியும்கூட! தொழிலாளர் தினத்துக்கிடையில் இது நடைபெறுமானால் தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் மே தினத்தைக் கொண்டாடுவார்கள். இல்லையானால் ஏக்கத்துடன் எதிர் கொள்வார்கள். அரசியல் ஆதாயத்துக்காகவே மே தினம் பயன்படுத்தப்பட்டு வருகின்றமையை இப்போது காண்கிறோம். அத்தோடு இன, மத, மொழி என இன்னோரன்ன வேறுபாடுகளுடனும் தொழிலாளர் தினம் தற்போது நடைபெறுகின்றமையையும் காணலாம். அதனாலேயே…
-
- 0 replies
- 277 views
-
-
வடக்கு கிழக்கு இணைப்பின் அவசியம் பெப்ரவரி 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலானது ஆளும் அராசாங்கத்துக்கு மக்கள் ஆதரவு உள்ளதா அல்லது குறைந்து விட்டதா என்பதை மதிப்பீடு செய்யும் தேர்தலாக இருக்கப்போகிறது. அதேவேளை எதிர்க்கட்சிகளுக்கு குறிப்பாக மஹிந்த ராஜபக் ஷ அணிக்கு பரீட்சைப் போராக இருக்கப் போகிறது என்பது ஏதோவொரு வகையிலுண்மை. வட – கிழக்கைப் பொறுத்தவரை மேற்குறிப்பிட்ட வாய்ப்பாட்டை பிரயோகிக்க முடியாவிட்டாலும் இந்த தேர்தலானது கூட்டமைப்புக்கும் அதற்கு எதிரே அணிகட்டி நிற்கும் மாற்றுக் கட்சிகள் மற்றும் சுயேச்சைக்குழுக்கள் ஆகியவற்றுக்கிடையிலான பலப்பரீட்சையை பரி…
-
- 0 replies
- 429 views
-
-
தேர்தலில் யார் தோற்றார்கள்? உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை, குப்பையள்ளுவதற்கான தேர்தல் என்று, கொச்சையாகவும் கேலியாகவும் குறிப்பிடும் வழக்கம் இருக்கிறது. இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அதிகாரம், மிகக்குறைவானது என்ற நிலையில், அவர்களின் முக்கியமான பணிகளுள் ஒன்றாக, கழிவகற்றலே காணப்படுவதைச் சுட்டிக்காட்டித் தான், இவ்வாறு அழைப்பதுண்டு. அப்படிப்பட்ட தேர்தலொன்று, நாட்டின் தேசிய அரசியலையே மாற்றியமைக்கும் அளவுக்கு மாறியிருக்கிறது என்றால், யோசிக்கத் தான் வேண்டியிருக்கிறது. நடந்துமுடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் முடிவுகள் வந்திருக்கின்றன. கொழும்பு அரசியலில் ஏற்பட்டுள்ள பதற்றங்களை, பத்திரிகைகளை வாசிப்போர்,…
-
- 0 replies
- 485 views
-
-
மனித உரிமைகள் பேரவை தொடர் கதையா? எம். எஸ். எம் ஐயூப் நான்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளான ‘ஹியூமன் ரைட்ஸ் வொச்’, ‘சர்வதேச மன்னிப்புச் சபை’, ‘மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஆசிய அமைப்பு’, ‘சர்வதேச சட்ட வல்லுனர்களின் ஆணைக்குழு’ ஆகியன கூட்டாக, ஐ. நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு, இலங்கை விடயத்தில் ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளன. தற்போது சுவிட்சர்லாந்து, ஜெனீவா நகரில் நடைபெற்று வரும் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரின் போது, இலங்கை தொடர்பாக கடுமையான பிரேரனையை நிறைவேற்ற வேண்டும் என்று கோரியே, அவ்வமைப்புகள் இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளன. மனித உரிமைகள் விடயத்தில், இலங்கை அரசாங்கம் நம்பகமான முறையில் நடந்து கொள்வதில்லை என்ற அடிப்படையிலேயே, …
-
- 0 replies
- 501 views
-
-
கூட்டமைப்பின் முடிவில் தங்கியுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தேசிய அரசாங்கம் என்ற மகுடத்தின்கீழ் அல்லது கூட்டு அரசாங்கமென்ற இணைப்புடன் இதற்கு முதல் இலங்கையில் பல கட்சிகளின் கூட்டுடன் அல்லது ஆதரவுடன் அரசாங்கங்கள் அமைக்கப்பட்டு ஆட்சி நடத்தப்பட்டாலும் அவை தமது முழுமையான காலப்பகுதியை முடிக்க முடியாமல் குலைந்துபோன, கலைந்து போன சந்தர்ப்பங்கள்தான் இலங்கை அரசியல் வரலாறாக இருந்துள்ளது. அதேபோன்றதொரு நிலைதான் இன்றைய தேசிய அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருப்பதுடன் பிரதமரின் நாற்காலியும் ஆட்டநிலை கண்டுள்ளது. என்னதான் தேசிய அரசாங்கம் என்று சிலர் பெருமைப்பட்டாலும் எதிரும் புதிருமாக பல பாராளுமன்றங்களில் இர…
-
- 0 replies
- 440 views
-
-
மாற்றுப் பாதை- சாத்தியமாகுமா? தமிழ் மக்கள் ஒருபோதுமே இரண்டாம்தரக் குடிமக்களாக இருக்க மாட்டார்கள். அவர்களை அரசு தொடர்ந்து ஏமாற்றினால் அவர்கள் மாற்றுப் பாதையொன்றை நாடவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுவார்கள். இவ்வாறு எதிர்க் கட்சித் தலைவரான சம்பந்தன் இலங்கையிலிருந்து விடைபெற்றுச் செல்லும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரிடம் கூறியமை இன்றைய சூழ்நிலையில் கவனத்தில் கொள்ளத்தக்கது. எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் சம்பந்தனின் கருத்துக்களுக்கு பன்னாட்டுச் ச…
-
- 0 replies
- 671 views
-
-
மூன்றாவது தடவையாக அரச தலைவர் பதவி மகிந்தவுக்குக் கிட்டுமா? அடுத்த அரசதலைவர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச போட்டியிட முடியாதென அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, அவரது வெற்றியைத் தடுக்கவே அரசு, அவருக்கு எதிரான புலன்விசாரணைகளை மேற்கொள்வதாக கூட்டு எதிரணி விமர்சித்து வருகிறது. தற்போது நடைமுறையிலுள்ள அரசமைப்பின் பிரகாரம், மகிந்த அரசதலைவர் தேர்தலில் மீண்டும் போட்டியிட முடியாதென வரையறை செய்யப்பட்டுள்ளது. அரசமைப்பின் 20ஆவது திருத்தம் இதை உறுதி செய்கின்றது. ஆனால் இந்த விடயத்தில் சமீப நாள்க…
-
- 0 replies
- 313 views
-
-
சீனாவின் இராணுவ நோக்கத்துக்கு துணை போகின்றது இலங்கை முன்னைய மகிந்த அரசின் தூரநோக்கற்ற செயற்பாடுகள் நாட்டை அந்நியருக்குத் தாரை வார்த்துக் கொடுக்கின்ற நிலையை உருவாக்கிவிட்டது. இதன் காரணமாகவே, சீனா இராணுவ நோக்கங்களுக்காகவே இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்கிறது என்று அமெரிக்காவின் இராணுவத் தலைமையகமான பென்டகன் கூறுகின்ற நிலை உருவாகியுள்ளது. சிறிய நாடுகளுக்கு உதவிகளை வழங்கி அவற்றை வளைத்துப் போடுகின்ற செயற்பாடுகளைச் சீனா முன்னெடுத்து வருகின்றது. பெரும்பாலான ஆசிய நாடுகளில் சீனா இதைத்தான் செய்து கொண்டிருக்கின்றது. படை பலமும், பொருளாதா…
-
- 0 replies
- 548 views
-