Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. முகமூடிகளாக சுவரோவியங்கள் பட மூலம், Twitter முதன்மையான அரசியல் செயற்பாட்டாளர் ஒருவர் அல்லது அவருடன் இணைந்து செயற்படும் செயற்பாட்டாளர்களின் ஒரு குழுவினர் அதிகாரத்தை பெற்றுக்கொள்வதில் தமக்கு எவ்விதமான அக்கறையுமில்லை என்பது போல் பாவனை செய்யும் அதே வேளையில், மேலும் மேலும் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள விரும்பினால் அவர்கள் அதனை எவ்வாறு செய்துமுடிப்பார்கள்? 2018ஆம் ஆண்டின் படிப்பினைகள், அரசியல் யாப்புக்கு முரணான வழிமுறைகள் மூலம் பொது மக்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள முடியாது என்பதனை அல்லது அத்தகைய வழிமுறைகள் ஆகக்குறைந்தது ஏதேச்சாதிகார ஆட்சி தொடர்பான குரல்கள் ஊடாக அரசியல் எதிரிகள் பெருமளவுக்கு தம்பக்கம் ஆதரவை திரட்டிக் கொள்ளக்கூடிய ஆபத்தை கொண்டுள்ளன என்பதைக் காட்டுகின்றன. இன்…

    • 1 reply
    • 1.7k views
  2. ‘கோட்டா அச்சம்’- சுமந்திரன் தரப்பின் புதிய தேர்தல் வியூகம்? - யதீந்திரா இதுவரை சம்பந்தன் தரப்பு என்றே இப்பத்தியாளர் எழுதியும் பேசியும் வந்திருக்கிறார் ஆனால் இனி அதற்கு அவசியமிருக்காது. ஏனெனில் வருங்காலத்தில் சம்பந்தன் தரப்பு என்று ஒன்று இருக்கப் போவதில்லை. இனி அது சுமந்திரன் தரப்பாகவே இருக்கும். தனிநபர்களை முதன்மைப்படுத்தி அரசியலை ஆராய்வதில் இப்பத்தியாளருக்கு எப்போதுமே உடன்பாடிருந்ததில்லை ஆனாலும் மீண்டும் மீண்டும் தனிநபர்களை முன்னிறுத்தியே சிந்திக்கவும் விவாதிக்கவும் வேண்டியிருக்கின்றது. இது துரதிஸ்டவசமானது. ஆனாலும் இதுவே தமிழ்த் தேசிய அரசியலின் யதார்த்தமாக இருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவுகள் எவ்வாறு எடுக்கப்படுகின்றன என்பதை அனைவருமே அறிவர். இதில் ஒழ…

  3. கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றும் உள்ளூர் பெண் ஊழியர் ஒருவர் தான் கடத்தப்பட்டு, விசாரணைக்க உட்படுத்தப்பட்டதாகத் தெரிவித்த முறைப்பாடு தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளின் காரணமாக இலங்கை விவகாரங்களில் சர்வதேச சமூகத்தின் பாத்திரம் மீண்டுமொரு தடவை முக்கியய கவனத்தைப் பெற்றிருக்கிறது. பொய்யான தகவல்களைத் திரிபுபடுத்தியதாகவும், அரசாங்கத்தின் மீது அதிருப்தி ஏற்படுத்துவதற்குக் காரணமாக இருந்ததாகவும் கூறியே அந்த ஊழியர் கைது செய்யப்பட்டிருப்பது துரதிஷ்டவசமான ஒரு நிலைவரமாகும். அவரின் கடத்தல் தொடர்பாகக் கூறப்பட்ட விபரங்கள் விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்ட தகவல்களுடன் ஒருங்கிசைவாக அமையவில்லை என்று அரசாங்கம் கூறியிருக்கிறது. ஆனால், அந்தக் கட…

  4. இலங்கையில் இப்போது அரசியல் கட்சிகளின் பசியும் ஊடகங்களின் பசியும் பெரிய வினைகளை உருவாக்குகின்றன. தமிழ் மக்கள் பெரும் ஒடுக்குமுறைகளையும் பெரும் பின்னடைவுகளையும் சந்தித்து வருகின்ற காலத்தில் தனிப்பட்ட நலன்கள் கருதிய இப் பசிகள் ‘பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த’ கதையாய் ஈழத் தமிழ் இனத்தை வேட்டை ஆடுகின்றது. அறிவாலும் போராட வேண்டிய ஒரு இனமாக இருப்பதனால் இது குறித்து சிந்திக்கவும் உரையாடவும் இடித்துரைக்கவும் தலைப்பட்டுள்ளோம். நேற்றைய தினம் இலங்கை தமிழரசுக் கட்சியின் எழுபதாவது ஆண்டு நிறைவு விழா யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனது பேச்சானது, ஒரு சில ஊடகங்களால் ‘வெட்டிக் கொத்தி’ தமது ஊடக அரசியல் தேவைகளுக்…

  5. தமிழ் மக்களின் தேவை: மாற்று அரசியலா, ஒன்றிணைந்த அரசியலா? தமிழ் மக்களின், இன்றைய அரசியல் தேவை என்ன என்பது, ஆழமாக அலசப்பட வேண்டிய ஒன்றாகும். போர் முடிந்து, பத்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், கடந்த 10 ஆண்டுகால தமிழ் அரசியலைத் திரும்பிப் பார்த்தால், நாம் இன்று எங்கு வந்து நிற்கின்றோம் என்பதை அறிவதில் சிரமங்கள் இருக்க மாட்டாது. கடந்த பத்தாண்டுகளில் எதிர்ப்பு அரசியல், இணக்க அரசியல் ஆகிய இரண்டையும் செய்திருக்கிறோம். இரண்டும் எமக்கு, எதுவித பலனையும் தரவில்லை என்பது, புதிய கண்டுபிடிப்பு அல்ல. இன்று, எமது அடிப்படை உரிமைகளுக்கான கோரிக்கைகளுக்காகவே, போராட வேண்டிய நிலையில், தமிழர்கள் இருக்கிறார்கள். இது, இலங்கையின் ஏனைய சிறுபான்மை இனங்களுக்கும் பொருந…

  6. கொலம்பியா: ஆயுதங்களை கைவிடுவதன் ஆபத்துகள் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 டிசெம்பர் 19 , மு.ப. 10:51 சமாதானத்துக்குக் கொடுக்கப்படும் விலை பெரியது. ஆனால், அவ்விலை யாருடைய சமாதானம், எதற்கான சமாதானம் என்பவற்றில் தங்கியுள்ளது. சில சமயங்களில், எதற்காகச் சமாதானம் எட்டப்பட்டதோ, அதன் தேவையும் நோக்கமும் கேள்விக்கு உள்ளாவதுண்டு. விடுதலைப் போராட்ட இயக்கங்கள், அவர்களது போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும், இந்தப் புதிரை எதிர்நோக்குகின்றன. சமாதானத்துக்கான விருப்பு, விடுதலையின் அடிப்படைகளையே கேள்விக்கு உட்படுத்திய நிகழ்வுகள், வரலாறெங்கும் உண்டு. போராட்ட இயக்கங்கள், சமாதானத்தின் பெயரால், தொடர்ச்சியாகச் சிதைக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் உள்ளன. இந்த அனுபவங்கள், ஆயுதங…

  7. தமிழர் அரசியலின் ‘ஆகாத காலம்’ -இலட்சுமணன் தமிழ்த் தேசிய அரசியல் வரலாறு தெரியாதவர்கள், தாம் நினைத்ததை எல்லாம் வரலாறாக எடுத்தியம்பி, வரலாற்றுத் திரிபுகளைச் செய்து வருகின்றார்கள். இதன்மூலம், அர்ப்பணிப்புகளும் தியாகங்களும் நிறைந்த தமிழர் வரலாறு, திரிபுபடுத்தப்பட்டு, மூடிமறைக்கப்பட்டு வரும் நிலை உருவாகிறது. புறநானூற்று காலத்துப் பாரம்பரியம் எனப் பரப்புரை செய்யப்படும் 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தையும், அதற்கு முன்னரான தமிழர் தம் அஹிம்சை வழிப் போராட்டத்தையும் உள்ளடக்கிய, இலங்கையின் சுதந்திரத்துக்கு (1948க்கு) பின்னரான வரலாறு, தமிழர் வரலாறு, தமிழிலக்கிய வரலாறு என எழுதப்பட்டாலும், அவற்றில் அஹிம்சை, போர், வீரம், வெற்றி, தோல்விகள் போன்றவை, வரலாறாகப் பதியப்படுவதற்கான …

  8. மணல்மேடான நம் தாயகத்தை காப்போம் - வ.ஐ.ச,ஜெயபாலன். * கடந்த டிசம்பர் 5ம் திகதி புதிய இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்ச தலைமையில் கூடிய அமைசரவை அனுமதியின்றி (cancelation of permits for the transportation of rocks, sand, and soil) கல் மண் மணல் ஏற்றிசெல்ல அனுமதிக்கும் ஆபத்தான முடிவை எடுத்தது. டிசம்பர் 5ம் திகதியே உடனடியாக இந்த சூழல் விரோதச் சட்டம் அமூலுக்கு வந்த கையோடு யாழ்பாணக்குடாநாட்டையும் இலங்கையையும் இணைக்கும் சுண்டிக்குளம் மணல்திட்டை அபகரிக்கும் முயற்சி தீவிரமானது. மக்கள் எதிர்த்த இடங்களில் எல்லாம் பொலிசாரைக் கொண்டு மக்கள் அடித்து ஒடுக்கப்பபட்டார்கள். உண்மையிலேயே பெரும்பாலும் மணல் மேடுகளான தமிழ் பேசும் மக்களின் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்கள் அழிவின் வ…

    • 0 replies
    • 426 views
  9. கோட்டாவின் ‘அபிவிருத்தி’ மாயாஜாலம் புருஜோத்தமன் தங்கமயில் / 2019 டிசெம்பர் 18 , மு.ப. 03:22 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ “சாதாரண மக்களுக்கு அதிகாரப் பகிர்வு, சமஷ்டி பற்றிய யோசனைகள் எதுவுமில்லை. அவர்கள் அபிவிருத்தி தொடர்பிலேயே சிந்திக்கிறார்கள்” என்று தெரிவித்திருக்கின்றார். நாட்டின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பிலான, கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே, அவர் இவ்வாறு கூறியிருக்கின்றார். கோட்டா பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலந்தொட்டு, தேசிய பாதுகாப்பு, (வெளித்தெரியும்) அபிவிருத்தி என்பவை குறித்தே செயற்பட்டு வந்திருக்கின்றார். அவர், சமூக மேம்பாட்டுக்கான அடிப்படை விடயங்கள் குறித்துச் சிந்தித்ததில்லை. எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக, நாட…

  10. சிதையும் தமிழர் அரசியல் கட்சிகள்: நிலை தடுமாறும் தமிழ்த் தேசியம் -க. அகரன் ‘சட்டியில் இருந்து அடுப்பில் விழுந்த’ கதையாகி இருக்கும் தமிழர் அரசியல் களம், தொடர்ந்தும் நிதானமின்றிப் பயணிக்கின்றதா என்கின்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ் மக்கள், தமது அரசியல் தலைமைகளிடம் ஒற்றுமையின் தேவையை உணரச் செய்கின்ற போது, அரசியல் தளத்தில் இருக்கின்றவர்கள், தமக்குள் இருக்கும் காழ்ப்புணர்ச்சிகளைக் கக்கியவாறு, தமக்கான தனித்தனித் தளங்களை ஆரம்பிக்கும் படலங்கள் தொடங்கியுள்ளன. தனிக்கட்சி அரசியலும் அதன் பின்னரான கூட்டும் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் அரசியல்வாதிகளிடம் நாகரிகமாக ஒட்டிக்கொண்டுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாக்கின்ற போது, த…

  11. மகிந்த அண்ட் கோ பாகம் இரண்டும் தமிழீழ மக்களின் எழுச்சியும் எந்த ஒரு நாட்டிலும் மக்கள் விழிப்பாக இருந்தால் மட்டுமே அவர்களால் தங்களை பாதுகாக்க முடியும். கிட்டத்தட்ட ஒரு மாதம் கடந்த புதிய சனாதிபதி ஆட்யில் சில எதிர்பார்த்த நிகழ்வுகளும் எதிர்பாராத மாற்றங்களும் நடக்கின்றன. மணல் தோண்டி தாய்நிலத்தை புதைப்பவர்களுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் மண்ணில் உள்ள மக்களின் பாசத்தை மீண்டும் நிலைநாட்டி காட்டுகின்றது. இங்கே இதில் பெரியளவில் அரசியல் வாதிகள் இல்லாமை சிறப்பாக தெரிகின்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோத்தாவின் கருத்திற்கு மறுப்பு தெரிவித்து அடுத்த நாளே செய்யும் போராட்டம் மக்கள் ஒரு போர்க்குற்றவாளிக்கும் அவர்தம் ஒடுக்குமுறைகளுக்கும் பயந்தவர்கள் இல்லை என சிங…

    • 0 replies
    • 924 views
  12. வாழ்த்துக்கள் சகோதரி திருமதி சாள்ஸ் - வ.ஐ.ச.ஜெயபாலன் செய்தி வடக்கு ஆளுநராக திருமதி சார்ள்ஸை நியமிக்க ஜனாதிபதி முடிவு !இதன்படி இவ்வாரம் வடக்கு ஆளுநரின் நியமனம் இடம்பெறவுள்ளது.முன்னதாக சுகாதார சேவைகள் அமைச்சின் செயலாளராக திருமதி சார்ள்ஸ் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. - உதயன் செய்தி. . . வாழ்த்து. எங்கள் பல்கலைக்கழக மாணவி தோழமைக்குரிய திருமதி சாள்ஸ் அவர்களுக்கு நல்வாழ்த்துக்களும் ஆதரவும். நிர்வாகப் பணிகளில் தமிழர் கூட்டமைப்பும் ஏனைய தமிழ் தலைவர்களும் உங்களை ஆதரிக்க வேண்டும் என்பது எனது பிரார்த்தனை. . போர்க்காலத்தில் சிதைந்த காடுகள் பனந்தோப்புகள் பார்த்தீனியம் ஆக்கிரமித்த வயல்வெளிகள் நீராதாரங்கள் என்பவற்றை மேம்…

    • 0 replies
    • 752 views
  13. தமிழ்த் தேசியக் கட்சிகள் ‘மீண்டும்’ ஒன்றிணைய வேண்டும் என்.கே. அஷோக்பரன் / 2019 டிசெம்பர் 16 இலங்கை அரசியல் வரலாற்றில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் உருவாக்கம், மிக முக்கியமானதொரு மைல்கல்லாகும். 1971-1972இல், தமிழ் மக்களின் எந்தவொரு கருத்துகளும் உள்ளடக்கப்படாமலும் தமிழ் மக்களின் பங்களிப்பு இல்லாமலும், அதைவிடவும் இந்திய வம்சாவளி மக்களின் பிரதிநிதிகள் இல்லாமலும், சிறிமாவோ மற்றும் அவரது தோழர்களின் அரசாங்கத்தில், நாடாளுமன்றத்துக்கு வௌியில் அரசமைப்புப் பேரவை கூட்டப்பட்டது. இதன்போது, இலங்கையின் முதலாவது குடியரசு அரசமைப்பு நிறைவேற்றப்பட்டு, 1972இல் நடைமுறைக்கு வந்தது. முற்றாகச் சிறுபான்மையினரை, குறிப்பாகத் தமிழ் மக்களைப் புறக்கணித்து, அவர்களது அ…

  14. ஈழத் தமிழர்களை முன்வைத்து இந்திய குடியுரிமைச் சட்ட விவாதங்கள் எம். காசிநாதன் / 2019 டிசெம்பர் 16 , மு.ப. 01:39 இந்திய அரசியல் நிர்ணய சபையில், பேசிய டொக்டர் அம்பேத்கர், “வரைவு அரசமைப்புப் பிரிவுகளில், குடியுரிமை வழங்கும் இந்தப் பிரிவு போல், அரசமைப்பு வரைவுக் குழுவுக்குத் (Drafting Committee) தலைவலி கொடுத்த வேறு எந்த பிரிவும் இல்லை” என்று, குடியுரிமை பற்றிய அரசமைப்புப் பிரிவு ஐந்தின் மீதான விவாதத்தில் 10.8.1949 அன்று கூறினார். அவருடையை வார்த்தை, இன்றைக்கு 70 ஆண்டுகள் கழித்து, உண்மையாகும் என்பது, இப்போது நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் உருவாகியுள்ள தலைவலியில் பிரதிபலிக்கிறது. மாநிலங்களவையில் ஐக்கிய ஜனதா தளம், அ.தி.மு.க போன்ற ம…

  15. அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளராக பிரிகேடியர் துவான் சுரேஷ் சாலே நியமிக்கப்பட்ட செய்தி சர்வதேச ஊடகங்களில் கடந்த வாரம் அதிக முக்கியத்துவத்தை பிடித்திருந்தது. இலங்கையின் புலனாய்வுப் பிரிவு ஒன்றுக்கான பணிப்பாளர் நியமனம் இதற்கு முன்னர் இந்த அளவுக்கு சர்வதேச முக்கியத்துவம் பெற்றிருந்தது கிடையாது. அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளராக இராணுவ அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது இதுதான் முதல் முறை. அது மாத்திரமே இந்த அளவுக்கு சர்வதேச கவனம் ஈர்க்கப்பட்டமைக்கு காரணமல்ல. புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனக்கு நெருக்கமான படை அதிகாரிகளுக்கு அளித்து வரும் உயர் பதவிகள், கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களின் பின்னரான சூழல், பிரிகேடியர் துவான் சுரேஷ் …

    • 1 reply
    • 1.1k views
  16. லண்டனில் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றம் பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவை குற்றவாளியாக அறிவித்து தண்டப்பணம் செலுத்த உத்தரவிட்டுள்ள விவகாரம் இலங்கையின் புதிய அரசாங்கத்துக்கும், பிரித்தானியாவுக்கும் இடையிலான உறவுகளில் உரசல்களை ஏற்படுத்தியிருக்கிறதாக கட்டுரையாளர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார். தனது கட்டுரையில் அவர் மேலும், கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் நான்காம் திகதி லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தமிழர்களை, கழுத்தை அறுத்து விடுவது போல சைகை மூலம் எச்சரிக்கை செய்திருந்தார் பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ. இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பணியிலிருந்த அவரது இந்த செயல் கடுமையான கண்டனங்களுக்கு உள்ளாகி இருந்தது. அவருக்கு…

  17. இலங்கையில் முஸ்லிம் எதிர்ப்பு வன்முறையின் வரலாறு பட மூலம், Getty Images கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை குறிவைத்து சில மாதங்களுக்கு முன்னர் நடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இலங்கையை பேரழிவிற்கு உட்படுத்தியது. 250 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்தனர். தாக்குதல் நடந்து ஒரு சில நாட்களின் பின்னர் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் இலங்கையில் தீவிர இஸ்லாமிய குழுக்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்பது வெளியானது. எவ்வாறாயினும், குற்றவாளிகளை இஸ்லாமிய நம்பிக்கையினைப் பின்பற்றுபவர்கள் என மேம்போக்காக அடையாளம் காண்பது இலங்கையில் வாழும் பரந்த முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான பாகுபாடு மற்றும் வன்முறையின் வாயில்களைத் திறக்கக் காரணமாக அமைந்தது. …

  18. அண்மையில் இந்தக் காணொளி கண்ணில் பட்டது. 2015 இல் ஐக்கியநாடுகள் சபையினால் இலங்கைதொடர்பாகக் கொண்டுவரப்பட்ட தீர்மானம் பற்றிய கலந்துரையாடல் ஒன்று இந்திய ஆங்கிலமொழித் தொலைக்காட்சியொன்றில் நடந்தது. இதில் இந்தியாவின் மூத்த வெளியுறவுத்துறை அதிகாரி பார்த்தசாரதி, தில்லி பேராசிரொயர் சகாதேவன், பத்திரிக்கையாளர் சாஸ்த்திரி ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் அடங்கலாக அனைவரும் போர்க்குற்அங்கள் தொடர்பாக பக்கச் சார்பற்ற விசாரணை வேண்டும் என்ற கருத்தில் வாதிட, பார்த்தசாரதி மட்டும் இலங்கையின் இறையாண்மை பாதிக்கப்படும் வகையில் தாம் எதையும் செய்யக்கூடாதென்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறான். இவன்போன்ற தமிழர்மேல் காழ்ப்புணர்வுகொண்ட பிராமணியர்களால் நாம் இவ்வளவுகால…

  19. புதிய அரசுத் தலைவர் ஐநாவுக்குப் பொறுப்பு கூறுவாரா? – நிலாந்தன் December 15, 2019 கோட்டாபய ராஜபக்ச அரசுத் தலைவராக தெரிவு செய்யப்பட முன்னரே தெளிவாக சொல்லிவிட்டார் தான் தேசத்துக்குதான் பொறுப்பு கூறுவேன் என்று. மிக அழகாக வடிவமைக்கப்பட்ட ஒரு இலத்திரனியல் தேர்தல் விளம்பரத்தில் அது வருகிறது. தேசத்துக்கு பொறுப்புப் கூறும் தலைவர் என்று. அப்படி என்றால் என்ன? அவர் தமிழ் மக்களுக்கு பொறுப்புக் கூறமாட்டார். முஸ்லிம்களுக்கு பொறுப்புக்கூற மாட்டார். அனைத்துலக சமூகத்துக்கு பொறுப்புக்கூற மாட்டார். ஐநாவுக்கு பொறுப்புக்கூற மாட்டார். பொறுப்புக் கூறுவது என்றால் அது முதலில் இறந்த காலத்துக்குப் பொறுப்பு கூறுவதுதான். இறந்த காலத்துக்கு பொறுப்புக்கூறத் தயா…

  20. இலங்கையின் ஜனாதிபதி தேர்தலின் முடிவு சிங்களவர்களின் மனோநிலையை தெளிவாக படம்பிடித்துக் காட்டியிருக்கின்றது. சிங்களப் பெரும்பாண்மை தங்களுக்கான தலைவரை காண்பித்திருக்கின்றது. எவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இனிவரப் போகும் ஐந்து வருடங்களுக்கு கோட்டபாயதான் இலங்கையின் ஜனாதிபதி. அவரது அரசியல் நகர்வுகளைத்தான் தமிழர் தரப்பு எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது. கோட்டபாய முன்னைய கோட்டபாயவாகத்தான் நடந்து கொள்வாரா அல்லது முற்றிலும் வித்தியாசமான ஒரு தலைவராக நடந்து கொள்வாரா? இந்தக் கேள்விக்கு ஆம் என்றோ இல்லை என்றோ இப்போதைக்கு எதனையும் கூற முடியாது. ஏனெனில் அரசியலில் ஒருவர் எப்படி தன்னை வெளிப்படுத்துவார் என்பது அவர் எதிர்கொள்ளப் போகும் சவால்களும், அந்தச் சவால்களை அவர் எவ்வாறு வெற்றிகொள்க…

  21. பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் கே. சஞ்சயன் / 2019 டிசெம்பர் 13 , மு.ப. 10:57 இந்திய அரசாங்கத்தால், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு, கடும் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. இந்தத் திருத்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள், தமது நிலைப்பாட்டுக்கு கூறுகின்ற முக்கியமான இரண்டு காரணங்களில் ஒன்று, இலங்கைத் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகும். அடுத்தது, முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகும். பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வெளியேறி, இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பார்சிக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள் போன்ற ஆறு மதத்தவர்கள், எந்த ஆவணங்களுமின்றி, இந்தியாவ…

  22. புதிய அரசமைப்பு: செத்த கிளிக்கு சிங்காரம் எதுக்கு? புதிய அரசமைப்புக்கான சாத்தியங்கள் இன்னமும் உள்ளதாகத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், அண்மையில் தெரிவித்திருந்தார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அதைச் செய்வார் என்றும் தெரிவித்திருந்தார். இந்த முத்துகளை, அந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஏன் உதிர்த்தார் என்ற வினா, இங்கு பிரதானமானது. நல்லாட்சி அரசாங்கத்தின் வருகையைத் தொடர்ந்து, சூடுபிடித்த புதிய அரசமைப்பு உருவாக்கப் பணிகள், இரண்டு ஆண்டுகளிலேயே முடங்கிவிட்டன. இதற்கான விருப்பமோ, அவசியமோ அரசாங்கத்திடம் இருக்கவில்லை. நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை மய்யப்படுத்தியே, புதிய அரசமைப்புப் பற்றிப் பேசப்பட்டபோதும், தே…

  23. உரிமைக்கான போராட்டம் நடைபெற்ற ஒருநாட்டில், அபிவிருத்தி மூலம் தீர்வு காணப்பட்ட ஒரு நாட்டை உங்களால் உதாரணம் காட்ட முடியுமா என பிரான்ஸ் நாட்டின் மனித உரிமைகள் செயற்பாட்டு மையத்தின் இயக்குனரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமாகிய ச.வி. கிருபாகரன் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிற்கு எழுதியுள்ள பகிரங்க மடலில் கேள்வியெழுப்பியுள்ளார். அவரின் பகிரங்க மடலில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அவர்கட்கு, வணக்கம்! உங்களுக்கு என்னைபற்றிய அறிமுகம் தேவையில்லையென நம்புகிறேன்! சுருக்கமாக, எது எப்படியானலும் இன்று இக் கடிதத்தை உங்களுக்கு எழுதகூடிய நிலையில் உள்ளேன்! ஸ்ரீலங்காவின் நிறைவேற்று ஜனாதிபதியாக நீங்கள் அண்மையில் பெற்ற வெற்றிக்கு, எனது உணர்வு உ…

    • 1 reply
    • 1.1k views
  24. இந்தியக் குடியுரிமை சட்டம்-B.Uthayan இந்தியக்குடியுரிமை ஈழத்தமிழ் அகதிகளுக்கு இல்லையாம் இந்திய ஜனநாயகத்தின் இந்துத்துவா கொள்கை இதுவாம்.ஐரோப்பாவுக்கு அகதியாக வந்த எம்மை அணைத்துக்கொண்டு அடிப்படை உரிமைகளை தந்தது அது அவர்கள் ஜனநாயகம். ஈழத்து அகதிகள் மருத்துவம் ,சட்டம் படிப்பதற்கான உரிமை கூட மறுக்கப்பட்டுள்ளது இது இந்திய ஜனநாயகம். அம்பேத்கரின் அரசியல் சட்டமும் காந்தியால் கட்டப்பட்ட சமத்துவமும் இல்லாத தேசமாகி விட்டது இந்தியா.இன்னும் தான் ஈழத் தமிழர் உங்களை நம்புகின்றனர். இழப்பதற்கு ஒன்றும் இல்லாமல் தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வி நிற்கும் ஈழத் தமிழனை கை விட்டு எந்தக் கங்கையிலும் கழுவிட முடியாத பாவம் சுமந்தவராகிவிடாதீர்கள். Gandhi's idea of a secular India Sha…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.