அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
இலங்கையில் தேர்தல் திரிசங்கு நிலை Published by Priyatharshan on 2019-10-28 12:51:34 -மீரா ஸ்ரீனிவாசன் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் ஒரு கோடியே 50 இலட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் இன்னும் 3 வாரங்களில் வாக்களிக்கவிருக்கிறார்கள். மொத்தம் 35 வேட்பாளர்கள் களமிறங்கியிருக்கும் இந்தத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கோத்தாபய ராஜபக்ஷவிற்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாஸவிற்கும் இடையிலேயே பிரதான போட்டி நிலவுகின்றது. ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி) அநுரகுமார திஸாநாயக்கவும் சிவில் சமூக அமைப்புக்களின் ஆதரவிற்கு இணங்க முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவும் அடுத்த இரு முக்கிய வேட்பாளர்களாவர். பிரதான கட்சிகளுக்கு ஒரு …
-
- 0 replies
- 532 views
-
-
செயல்வடிவமும் நம்பகத்தன்மையும் ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் வேட்பாளர்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்தத் தேர்தலில் எந்த வேட்பாளர் வெற்றிபெறப் போகின்றார்? என்று மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இத்தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கும், பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக் ஷ உள்ளிட்ட ஏனைய சில வேட்பாளர்களுக்கும் சிறுபான்மைக் கட்சிகள் ஆதரவு வழங்கி வருகின்றன. மலையகக் கட்சிகளைப் பொறுத்தவரையில் தமிழ் முற்போக்கு கூட்டணி சஜித் பிரேமதாசவிற்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோத்தபாயவி…
-
- 0 replies
- 572 views
-
-
வெற்றிக்கு வித்திடும் பௌத்த மேலாதிக்கம் இலங்கையின் எட்டாவது ஜனாதிபதி தேர்தல் மூன்று முக்கிய விடயங்களில் சுற்றிச் சுழல்கின்றது. இராணுவ நலன்களை முதன்மைப்படுத்திய தேசிய பாதுகாப்பு, பொருளாதார மேம்பாடு, சிறுபான்மை இன மக்களின் தேவைகள், கோரிக்கைகள் புறக்கணிப்பு என்ற மூன்று விடயங்களுக்கான பரப்புரைகள் தீவிரமாக முடுக்கிவிடப் பட்டிருக்கின்றன. ஜனாதிபதி தேர்தல் என்பது மிக முக்கியமானது. நாட்டின் அதிஉயர் அரச தலைவர் ஜனாதிபதியை நாட்டின் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து நேரடி வாக்களிப்பு மூலம் தெரிவு செய்வது. இவ்வாறு தெரிவு செய்யப்படுகின்ற ஒருவர் கட்சி அரசியல் நலன்களுக்கு அப்பால் தேசிய அளவில் பொதுவானவராக…
-
- 1 reply
- 857 views
-
-
தமிழ்த் தேசிய அரசியலின் சாபக்கேடு கே. சஞ்சயன் நாய்க்கு எங்கே அடி விழுந்தாலும், காலை நொண்டிக் கொண்டு ஓடும். அதுபோலத் தான், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், தான் சறுக்குகின்ற இடங்களில் எல்லாம், இந்தியா மீது பழிபோடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறது. 2018 உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ்வுக்கும் இடையில் கூட்டணி அமையவிருந்த நிலையில், கடைசி நேரத்தில் தட்டிப் போனது. ஆனந்தசங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் ஈ.பி.ஆர்.எல்.எவ் இணைந்து போட்டியிட்டது. அப்போது, இந்தியாவின் சொற்படியே சுரேஸ் பிரேமசந்திரன் அந்த முடிவை எடுத்தார் என்று குற்றம்சாட்டினார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இர…
-
- 0 replies
- 492 views
-
-
ஓர் அஸ்தமனத்தின் உதயம்? இலட்சுமணன் போருக்குப் பின்னரான, இன்றைய தமிழ்த் தேசிய அரசியலின் அண்மைக்கால செல்நெறியானது, என்றுமில்லாத அளவு ஓர் இக்கட்டான சூழலுக்குள் சிக்கிக் கொண்டுள்ளது. காரணம், ஐந்து கட்சிகளின் 13 அம்சக் கோரிக்கைகளும் அதன் பின்னரான அரசியல் சூழலும் ஆகும். தமிழ் மக்களின் அரசியல் கட்சித் தலைமைகளை ஒன்றிணைத்து முன்வைத்துள்ள 13 அம்சக் கோரிக்கைகளின் உள்ளடக்கமானது, சிங்களத் தேசியவாதிகளிடத்தில் எந்த அளவுக்குச் சாதகமான வகிபாகத்தைப் பெறும் என்பது, கடந்த கால அனுபவங்களில் இருந்து ஊகித்தறியக் கூடியதே. எதிர்பார்த்தது போலவே, சிங்களத் தேசியவாதிகளின் பரப்புரைகளும் கருத்துகளும் கண்ணோட்டங்களும் அமைந்துள்ளன. தமிழரது உரிமைகள் தொடர்பான அடிப்படை விடயங்களுடன் அமைந…
-
- 0 replies
- 951 views
-
-
பாழ்நரகத்தில் தீர்மானிக்கப்படும் சில கூட்டணிகள் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாட்டால், கடந்த வாரம் ஐந்து தமிழ்க் கட்சிகள் இணைந்து செயற்பட உடன்பட்டனர். ஆறு கட்சிகளுடன் தொடங்கிய பேச்சுவார்த்தை, இறுதியில் ஐந்து கட்சிகள் உடன்பட்ட ஆவணம் ஒன்றில் கையொப்பமிடுவதுடன் நிறைவுற்றது. இந்த இணைவு எதைச் சாதிக்கப்போகிறது என்ற கேள்வி ஒருபக்கம் எழுந்தாலும் இதை ஒரு நல்ல தொடக்கமாகக் கருதியோரும் உண்டு. தமிழ்க்கட்சிகள் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளன என்று மகிழ்ந்தோரும் உண்டு. இந்த மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அதிககாலம் நிலைக்கவில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியான ‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகை, கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினரும…
-
- 0 replies
- 578 views
-
-
சீனா 70: வரலாறும் வழித்தடமும் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ உண்மைகள் கறுப்பு, வெள்ளையாக என்றும் இருந்ததில்லை. எமக்குச் சொல்லப்படுவதன் அடிப்படையிலேயே, நாம் முடிவுகளை வந்தடைகிறோம்; அதில் தவறில்லை. ஆனால், நமக்கு சொல்லப்படுபவை பற்றியும் அதன் உண்மைத் தன்மை பற்றியும் ஆராய்வது முக்கியமானது. அதனடிப்படையில், நாம் புதிய தகவல்களைப் பெறும்போது, எம்மைத் நாம் திருத்திக் கொள்வதற்காகத் திறந்த மனத்துடன் இருக்க வேண்டும். சீனா பற்றி, தமிழ் மக்கள் மத்தியில் தவறான பிம்பம் கட்டப்பட்டுள்ளது. சீனா, தமிழ் மக்களின் எதிரி என்றும் இலங்கை அரசாங்கத்தின் நண்பன் என்றும் தொடர்ந்து சொல்லப்பட்டு வந்துள்ளது. இந்தியா பற்றியும் மேற்குலகு பற்றியும் நாம் அனுபவரீதியாக உணர்ந்த பின்னரும்,…
-
- 0 replies
- 561 views
-
-
தமிழரை அவமானப்படுத்திய யாழ். விமானநிலையத் திறப்பு விழா பேரா. றட்னஜீவன் ஹூல் / கொழும்பு ரெலிகிராப் தமிழில்: சிவதாசன் இக் கட்டுரை Colombo Telegraph பத்திரிகைக்காக பேராசிரியர் றட்னஜீவன் ஹூல் அவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டது. முடிந்தவரை கருத்துப் பிசகின்றி மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. பேராசியர் ஹூலுக்கும் கொழும்பு ரெலிகிராப் பத்திரிகைக்கும் நன்றி. பேராசிரியர் றட்னஜீவன் ஹூல் சென்ற வியாழன் (16.10.2019) சிறீலங்காவிற்குச் சிறப்பான நாள். யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையம் இன்று திறக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தை சிறீலங்காவுடன் இணைப்பது; தமிழ்நாட்டிலிருந்து வரும் (இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் அதிகம்பேர் …
-
- 3 replies
- 660 views
-
-
இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தல் ஈழத் தமிழர் இறைமையை நிலைநிறுத்த சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிக்க வேண்டும்- ஆய்வாளர் ஜோதிலிங்கம் மேற்குலகத்துடனான உரையாடல்கள் அவசியம். எனவே பகிஸ்கரிப்பு சாத்தியமற்றதென்றும் கூறுகிறார் இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் ஈழத் தமிழ் மக்கள் எப்படியான நிலைப்பாட்டை முன்னெடுக்க வேண்டுமெனச் சிவில் சமூக அமைப்புகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. பொது வேட்பாளர் விடயத்தில் தமிழ் அரசியல் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதில் பல்வேறு இடர்கள், தடைகளை எதிர்கொண்ட சிவில் சமூக அமைப்புகள், தற்போது சுயமாகப் போட்டியிடும் சிவாஜிலிங்கத்தை ஒரு குறீயீடாக மாத்திரமே கருதி அவருக்கு வாக்கள…
-
- 0 replies
- 307 views
-
-
தமிழ் மக்களின் தேர்தல் பேரம் தோற்றது யாரால்? புருஜோத்தமன் தங்கமயில் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பது தொடர்பிலான உத்தியோகபூர்வமான அறிவித்தலை, இன்னும் சில தினங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிடும். அதற்கு முன்னதாக, ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பொன்றை இரா. சம்பந்தன் தலைமையிலான குழு நடத்தவுள்ளது. இந்தக் குழுவில் பொது இணக்கப்பாட்டில் கையெழுத்திட்ட தமிழ்த் தேசியக் கட்சிகளின் அனைத்துத் தலைவர்களும் பங்கெடுப்பார்கள் என்று தெரிகிறது. பொது இணக்கப்பாட்டின் கீழ் தமிழ்த் தேசியக் கட்சிகளால் முன்வைக்கப்பட்ட 13 அம்சக் கோரிக்கைகளையும், நாட்டைப் பிரிப்பதற்கான சூத்திரமாகத் தென் இலங்கையில் பிரசாரம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது. குறித்த கோ…
-
- 0 replies
- 872 views
-
-
கிழக்கில் தேர்தல் கால கொக்கரிப்புகள் -லக்ஸ்மன் ஐரோப்பிய நாடு ஒன்றின் கொழும்பிலுள்ள தூதரகத்தில் பணியாற்றும் நீண்ட கால நண்பர் ஒருவர் (தமிழர்) “கோட்டாபயவுக்கு கிழக்கில் அதிகப்படியான வாக்குகள் கிடைக்குமாம், அப்படித்தானே நிலைமை?” என்று சொன்னார். இதற்கு என்ன பதிலைச் சொல்லிவிட முடியும். தேர்தல் ஒன்று வந்தாலே, அது கோடிக்கணக்கில் பணம் புரளும் காலமாக மாறிவிடும். முஸ்லிம்களின் வாக்குகளைச் சிதறடிப்பதற்காக ஒரு தரப்பும் தமிழர்களின் வாக்குகளைச் சிதறடிக்க மற்றொரு குழுவும் சிங்களவர்களின் வாக்குகளைச் சிதறடிப்பதற்கு இன்னுமொரு பெருங்குழுவும் களத்தில் நிற்கின்றன. இதில்தான், பெரும்பான்மையினக் கட்சிகள் இரண்டினதும் வேட்பாளர்களில் ஒருவர், பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற…
-
- 0 replies
- 730 views
-
-
முடிவுகளை எட்டாத கோரிக்கை உடன்படிக்கைகள் -இலட்சுமணன் தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றுப் பின்புலத்தில், வடக்கு, கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் பெரும் முயற்சியில் முன்னெடுக்கப்பட்ட, தமிழ் அரசியல் கட்சிகளின் ஒன்றிணைப்பு முயற்சியானது, பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும். ஏனெனில், ‘சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது’ என்று கடந்த காலங்களில், இளைஞர் முன்னெடுப்புகளைத் தட்டிக் கழித்த தமிழ்த் தலைமைகள், இன்று அவர்களின் அழைப்பில்பேரில் ஒன்றுபட்டது, தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் பாராட்டத்தக்கது; ஒரு முற்போக்கான முயற்சியாகவும் அமைந்துள்ளது. தமிழ் வாக்குகள் பிளவுபடாமல், கணிசமான அளவில் ஒன்றிணைப்பதுடன், தமிழர் தம் பலத்தை ஒரே குரலாய், சிங்கள தேசத்துக்கும், சர்வதேசத்துக…
-
- 0 replies
- 620 views
-
-
அண்மையில் ஜந்து கட்சிகள் இணைந்து ஒரு பொது உடன்பாட்டிற்கு வந்திருந்தன. நீண்ட காலமாக, தங்களுக்குள் தெருச் சண்டை பிடித்துக்கொண்டிருந்த தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகள் அனைத்தும் ஒரு நேர்கோட்டில் சந்தித்திருந்தமை ஒரு நல்ல விடயம்தான். ஆனாலும் அப்போதும் கூட ஒரு சிறிய விடயத்தை முன்வைத்து கஜேந்திரகுமார் வெளியேறிவிட்டார். ஐந்து கட்சிகளும் இணக்கம் காணப்பட்ட தமிழர் கோரிக்கைகளை பிரதான வேட்பாளர்களில் ஒருவரான கோட்டபாய ராஜபக்ச நிராகரித்துவிட்டார். அவ்வாறான ஆவணத்துடன் வரும் கட்சிகளை தாம் சந்திக்கப்போவதில்லை என்று அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டுவிட்டார். இந்த நிலையில் அடுத்த பிரதான வேட்பாளரான சஜித் பிரேமதாச தமிழ் கட்சிகளை சந்திப்பாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இந்த நிலைமை தொடர்ந…
-
- 0 replies
- 547 views
-
-
இனவாத முதலீடு - பி.மாணிக்கவாசகம்…. October 21, 2019 தேர்தல்தான் ஜனநாயகத்தின் உயிர்நாடி. அதற்கு ஆதாரமாக இருப்பது வாக்குரிமை. மக்கள் தமக்குரிய ஆட்சியாளர்களைத் தெரிவு செய்வதற்கு இந்த வாக்குரிமையின் மூலம்தான் வழிசெய்யப்பட்டுள்ளது. இந்தத் தெரிவுரிமை சுதந்திரமானது. நிர்ப்பந்தங்கள் அற்றதாக அமைந்திருத்தல் அவசியம் என்பது ஜனநாயகத்தின் கோட்பாடு. ஆட்சியை நிலைநிறுத்தக் கூடிய தேர்தல் முறையிலான இந்த வாக்குரிமையை மக்கள் அடிக்கடி பயன்படுத்த முடியாது. தேர்தல்களின்போது மட்டுமே பயன்படுத்த முடியும். அப்போதுதான் அது மிகவும் வலிமை பெற்றிருக்கும். ஜனநாயகத்தின் இந்த உன்னதமான அம்சத்தை, உன்னதமான உரிமையை மக்கள் பயன்படுத்தத் தவறக்கூடாது. ஏனெனில் ஆட்சிமைப்பதற்கு உள்ள ஒரேயொரு …
-
- 1 reply
- 1.1k views
-
-
Published by Jayanthy on 2019-10-20 17:11:05 வீ.தனபாலசிங்கம் போர் வெற்றியை ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களில் பயன்படுத்தக்கூடாது ; போர் அரசுக்கு சொந்தமானதே தவிர, எந்தவொரு அரசியல் கட்சிக்கும் சொந்தமானதல்ல ; போர் வெற்றியை தேர்தல் பிரசாரங்களில் எந்த கட்சியும் பயன்படுத்தமுடியாது என்று தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய கடந்தவாரம் செயதியாளர் மகாநாட்டில் கூறியிருந்தார். ஆனால், அவரது அறிவுறுத்தலை அரசியல் கட்சிகள் மதித்துச் செயற்படும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. போரின் முடிவுக்கு பின்னர் மாத்திரமல்ல, முன்னரும் கூட போர் சகல தேர்தல்களிலும் முக்கியமான பிரசாரப்பொருளாக தாராளமாக அரசியல் கட்சிகளினால் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. இரா…
-
- 0 replies
- 902 views
-
-
ஜந்து கட்சிகளின் உடன்பாடு எதை நோக்கி பயணிக்கின்றது? - யதீந்திரா அண்மையில் தமிழ்த் தேசியவாத கட்சிகளான ஜந்து கட்சிகளுக்கிடையில் ஒரு இணக்கப்பாடு ஏற்பட்டிருந்தது. யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஒற்றுமை முயற்சியில் ஆரம்பத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இணைந்திருந்த போதிலும் கூட, இறுதி நேரத்தில் இந்த முயற்சியிலிருந்து காங்கிரஸ் வெளியேறியிருந்தது. ஆனால் கஜேந்திரகுமாரோ, தாங்கள் வெளியேறவில்லை மாறாக வெளியேற்றப்பட்டோம் என்று கூறிவருகின்றார். இடைக்கால அறிக்கை நிராகரிக்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கையை தமிழரசு கட்சி மற்றும் புளொட் ஏற்றுக்கொள்ள மறுத்தநிலையில்தான், கஜேந்திரகுமார் இந்த முயற்சியிலிருந்து விலகிக்கொண்டார். ஆனால் தற்போது ஜந்து கட்சிகளும் கையெழுத…
-
- 1 reply
- 473 views
-
-
ஐந்து கட்சிகளின் கூட்டு: அடுத்தது என்ன ? நிலாந்தன்… October 19, 2019 ஜனாதிபதித் தேர்தலில் முழு அளவிலான தமிழ் பேரத்தை பிரயோகிப்பது என்றால் ஒரே தெரிவு ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர்தான். ஆனால் அதற்கு எந்த ஒரு தமிழ்க் கட்சியும் தயாராக இருக்கவில்லை. அப்படி ஒரு பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று சிந்தித்த சுயாதீனக் குழுவும் மிகவும் பிந்தி விட்டது. பல்கலைக்கழக மாணவர்கள் அதைவிட பிந்தி விட்டார்கள். சுயாதீன குழு கட்சித் தலைவர்களை சந்தித்தபோது அவர்கள் என்ன சொன்னார்கள்? ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு காலம் பிந்தி விட்டது என்றுதானே சொன்னார்கள்? அப்படி என்றால் அதை குறித்து முதலில் சிந்தித்திருக்க வேண்டியது யார்? சில ஆயர்களும் சில சாமியார்க…
-
- 0 replies
- 526 views
-
-
டெய்லர் டிப்போர்ட தமிழில் ரஜீபன் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தங்களிற்கான வெற்றியை சிறுபான்மையினத்தவர்களின் வாக்குகள் உறுதி செய்யும் என ஜிஎல்பீரிஸ் அவ்வளவு நம்பிக்கையுடனும் உறுதியுடனும் ஏன் கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறித்து நான் குழப்பத்தில் உள்ளேன். சிறுபான்மை சமூகத்தினரிற்கு வழங்கிய வாக்குறுதிகளை இந்த அரசாங்கம் கடந்த நான்கரை வருடங்களில் நிறைவேற்ற தவறியுள்ளது என்பது உண்மை தான்.சிறுபான்மை சமூகத்தவர்களின் துயரங்களிற்கு இந்த அரசாங்கம் போதியளவிற்கு தீர்வை காணவில்லை. ஆனால் பதவிக்கு வந்தால் கோத்தாபய அரசாங்கம் எப்படி சிறுபான்மையினத்தவர்களை நியாயமாக நடத்தும் என்பது விளங்காத விடயமாக உள்ளது. மாறாக மற்றுமொரு ராஜபக்ச அரசாங்கம…
-
- 0 replies
- 935 views
-
-
ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஒரு வினாத்தாள் 1.தேசியப் பாதுகாப்பு இந்த ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையில் தேசிய பாதுகாப்பு விடயமானது முக்கியமானதொன்றாக மக்கள் மத்தியில் இடம்பிடித்திருக்கின்றது எனலாம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இந்த நிலை ஏற்படக் காரணமாக அமைந்திருக்கலாம். ஒரு நாடு என்ற அடிப்படையில் தேசிய பாதுகாப்பு குறித்து முறையான பாதுகாப்பு பொறிமுறையொன்று அமைத்துக்கொள்வதில் கவனம் செலுத்துவது மிக மிக அவசியமான விடயம் என்பதில் மாற்றுக் கருத்துகள் இருக்கமுடியாது. விஜேவீர என்பவரால் தெற்கில் ஏற்படுத்தப்பட்ட செயற்பாடுகள் மற்றும் பிரபாகரன் மூலமாக வடக்கே ஏற்படுத்தப்பட்ட செயற்பாடுகள் மற்றும் போரின் பின்னர் சஹ்ரானின் செயற்பாடுகள் என்பன ஊடாக ஏற்பட்ட நாசகார வேலைகள் இல…
-
- 0 replies
- 565 views
-
-
தேர்தல் புறக்கணிப்பு இலங்கையில் ஒரு ஜனாதிபதித் தேர்தல், மீண்டும் நடைபெற இருக்கிறது. தேர்தல் களம், கொஞ்சம் கொஞ்சமாகச் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கும் வேளையில், மீண்டுமொருமுறை தமிழ் மக்களிடையே, ‘ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும்’ என்ற கருத்தும் அந்தக் கருத்துகான எதிர்ப்பும் வாதப்பிரதிவாதங்களை உருவாக்கி வருகின்றன. இந்த வாதப் பிரதிவாதங்களில், தேர்தல் புறக்கணிப்புப் பற்றிப் பல்வேறுபட்ட அபிப்பிராயங்கள் முன்வைக்கப்படுவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இந்தக் கட்டுரையின் நோக்கம், ‘புறக்கணிப்பு’ என்பதன் ஜனநாயக அரசியல் பங்கையும் முக்கியத்துவத்தையும் விளங்கிக்கொள்ள முயற்சிப்பதுடன், இன்றைய சூழலுக்கு, அது ஏற்புடையதா என்ற வினாவுக்கு விடைகாண முயற்சிப்பதும் ஆகும்.…
-
- 2 replies
- 571 views
-
-
பிரஹ்மா செல்லானி ( புதுடில்லி கொள்கை ஆராய்ச்சிகளிற்கான நிலையத்தின் பேராசிரியர்) தமிழில் ரஜீபன் ஆசியாவின் மிகவும் பழமையான ஜனநாயகம் ஆபத்தை சந்திக்கலாம்..இலங்கையில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் ராஜபக்சகுடும்பத்தை சேர்ந்த ஒருவரை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டுவரலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகின்றது.இந்த குடும்பத்திற்கும் ஏதேச்சாதிகாரத்திற்கும், வன்முறைக்கும், ஊழலிற்கும் உள்ள நெருங்கிய தொடர்பு நன்கறியப்பட்ட விடயம். ஒரு வருடத்திற்கு முன்னர் விரைவில் பதவி விலகவுள்ள ஜனாதிபதி சிறிசேன மேற்கொண்ட அரசமைப்பு சதி முயற்சியிலிருந்து இலங்கையின் ஜனநாயகம் தப்பியது. இம்முறை கோத்தாபய ராஜபக்சவின் ஜனாதிபதி ஆட்சியின் கீழ் இலங்கையின் ஜனநாயகம் தப்பாது. …
-
- 4 replies
- 853 views
-
-
யாழ், கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் நல் ஆதரவுக்கான முயற்சி வாக்குறுதிகளை வழங்கித் தடம் புரண்ட தமிழ்க் கட்சிகள் ஆவணத்துக்குப் பொறுப்புக் கூறுமா? ஆய்வாளர் நிலாந்தன் அடிப்படைப் பிரச்சினையும் உடனடித் தேவையும் வெவ்வேறாகப் பிரிக்கப்பட்டிருக்க வேண்டுமென்றும் கூறுகிறார் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் முயற்சியினால் தமிழ்க் கட்சிகள் ஒன்று சேர்ந்து கலந்துரையாடி ஆவணம் ஒன்றைத் தாயரித்துக் கையொப்பமிட்டமை முன்னேற்றகரமான அம்சம் என்று சிவில் சமூகச் செயற்பாட்டாளரும் அரசியல் ஆய்வாளருமான எம் நில…
-
- 0 replies
- 458 views
-
-
காரை துர்க்கா / 2019 ஒக்டோபர் 17 , இனிமையான ஒரு மாலைப் பொழுது; மழையோ வெயிலோ இல்லாத இ(மி)தமான ஒரு காலநிலை. யாழ்ப்பாணத்தின் புறநகர்ப் பகுதியில் உள்ள சனசமூக நிலையத்தில், புதினப் பத்திரிகைகளைப் புரட்டிக் கொண்டிருந்தேன்.... சனசமூக நிலையத்துக்கு வெளியே இருந்த வேப்பமரத்தடி நிழலில், சிலர் அரசியல் உரையாடலில் மூழ்கிப் போயிருந்தனர். கலகலப்பாகவும் ஆனால், அர்த்தங்கள் நிறைந்ததாகவும் உரையாடல் போய்க் கொண்டிருந்தது. கதைக்கின்ற அவர்களைக் காட்டிலும், கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி கிடைத்த மாதிரியான உணர்வு ஏற்பட்டது. “என்ன, எங்கட சுமந்திரன் ஐயா, தங்களிடம் முதிர்ச்சியான அரசியல் தலைமை உண்டு எனக் கூறியுள்ளாராமே” என ஒருவர் கூறினார். “அங்கு தலைமையில…
-
- 0 replies
- 505 views
-
-
எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 ஒக்டோபர் 17 , பி.ப. 06:58 இவ்வருட உயிர்த்த ஞாயிறு தினத்தன்று, அதாவது கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி, முஸ்லிம்களின் பெயரில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து, பௌத்த தீவிரவாதக் குழுக்கள், பயங்கரமான முஸ்லிம் விரோத பிரசாரமொன்றை ஆரம்பித்து, முன்னெடுத்துச் சென்றனர். சில பகுதிகளில் முஸ்லிம்களின் உடைமைகளின் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. அக்குழுக்கள் பெரும்பாலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தவர்களாக இருந்தமையால், அப்பிரசாரத்தில் ஓர் அரசியல் நோக்கமும் தென்பட்டது. எதிர்வரும் தேர்தல்களின் போது, முஸ்லிம்கள் தம்மை ஆதரிக்க மாட்டார்கள்…
-
- 0 replies
- 516 views
-
-
ஐந்து தமிழ் கட்சிகளின் தலைவர்களும் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பொதுவான நிலைப்பாட்டை முன்வைத்து தீர்மானம் ஒன்றை எடுப்பதற்கு ஐந்து தமிழ் தேசியக்கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளன. இதற்கான ஆவணத்திலும் இந்த ஐந்து கட்சிகளினதும் தலைவர்கள் கைச்சாத்திட்டுள்ளனர். ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அனைத்து கட்சிகளும் பொதுநிலைப்பாட்டுக்கு வரவேண்டியதன் அவசியம் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்தது. யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியத்தின் முயற்சியையடுத்…
-
- 0 replies
- 597 views
-