அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
ஆயுதப் போராட்டத்திற்கான அறம்:குட்டி ரேவதி ஆயுதப் போராட்டம் என்பது ஒரு வன்முறை என்று கூறுதலே ஒரு சமூக இயக்கத் தந்திரமாகவும் அதை ஒரு நாடு இராணுவத்தின் பெயரால் செயல்படுத்தும் போது அதுவே ஒரு ராஜதந்திரமாகவும் அர்த்தம் பெறுகிறது. ஆயுதம் என்றால் என்னவோ உலோகங்களாலும் இன்ன பிற ஆக்கங்களாலும் ஆக்கப்பட்டதாகவும் கருதப்படுகிறது. இது ஓர் ஒற்றைப் பரிமாணச் சிந்தனையே. ஒடுக்குமுறையைச் செயல்படுத்துபவர்கள் தங்களால் இயன்ற எல்லாவற்றையும் ஆயுதமாகப் பயன்படுத்துகையில் நாம் ஆயுதத்தையே ஆயுதமாகப் பயன்படுத்துவது அறம் பிழைத்ததாகாது. ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஆயுத இயக்கமும் ஆயுதப் போராட்ட வடிவங்களும் முன்னிலை வகுத்ததாலேயே அதை ஒரு வன்முறை இயக்கம் என்று கூறுதலும் அதன் அடிப்படைக் கோரிக்கைகளை ஒட்…
-
- 0 replies
- 1.1k views
-
-
கண்ணாடியில் நிலவைக் காட்டும் அரசியல்? நிலாந்தன். சில மாதங்களுக்கு முன் கனடாவுக்கு போக வெளிக்கிட்டு சிங்கப்பூர் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 303 தமிழ்க் குடியேறிகளைக் குறித்துக் கேள்விப்பட்டோம். அவர்கள் வியட்நாமில் உள்ள இடைத்தங்கல் முகாம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.அவர்களிற் பெரும்பாலானவர்கள் பொருளாதார காரணங்களுக்காக சட்டவிரோதமாகப் புலம் பெயர்ந்தவர்கள் என்று ஐநாவும் உலக பொது நிறுவனங்களும் நம்புவதாகத் தெரிகிறது. இந்த அடிப்படையில் அவர்களை ஐநாவின் அகதிகளுக்கு பொறுப்பான அமைப்பு பொறுப்பேற்கத் தயாரில்லை என்றும் தெரிகிறது.இதனால் அப்புலம்பெயரிகளில் ஒரு தொகுதி நாடு திரும்பிவிட்டது. ஏனைய தொகுதி படிப்படியாக நாடு திரும்பி வருகிறது. இவர்கள் யாரும் விருப்பத்தோடு …
-
- 0 replies
- 604 views
-
-
“பிள்ளையான் என்னை கொல்ல விரட்டிக்கொண்டு வந்தார்.... தமிழ் தேசிய முன்னணி மூலம் எனக்கு கொலை அச்சுறுத்தல் இருக்கிறது” இப்படி கூறியிருப்பவர் அம்பிடியே சுமனரதன தேரோ என்கிற பௌத்த பிக்கு. இவர் சமீப காலமாக சிங்கள ஊடகங்களில் ஒரு சிங்கள ஹீரோவாக ஆக்கப்பட்டுள்ளார். கடந்த 19 அன்று மட்டகளப்பில் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்திற்காக ஜனாதிபதி மகிந்த சென்றிருந்தபோது சுமனரதன தேரோ சிங்களவர்களை அழைத்துக் கொண்டு சென்று கூட்டம் நடந்த இடத்துக்கு வெளியில் பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார். அந்த ஆர்ப்பாட்டத்தை கலைக்க போலீசார் எடுத்த முயற்சி இறுதியில் கைகலப்பில் முடிந்தது. ஆர்ப்பாட்டாத்தில் ஈடுபட்ட ஒருவரை கட்டுபடுத்த எடுத்த முயற்சியில் அவரது உள்ளாடைகள் களைந்தது. இவை அனைத்தையும் வீடியோ எடுக்கும்படி …
-
- 0 replies
- 666 views
-
-
அயோத்தியில் இராமர் கோவில் விவகாரம்: சமரசத் தீர்வும் சந்திக்கப் போகும் தேர்தலும் எம். காசிநாதன் / 2019 மார்ச் 12 செவ்வாய்க்கிழமை, பி.ப. 12:14 Comments - 0 1850களில் தொடங்கப்பட்ட அயோத்தியில், இராமர் கோவில் கட்டும் பிரச்சினை, சுதந்திர இந்தியாவில், பல பிரதமர்களைக் கண்டும் இன்னும் தீர்ந்தபாடில்லை. பிரதமராக இருந்த நேரு, ராஜீவ் காந்தி, வி.பி. சிங், சந்திரசேகர் என்று தொடர்கதையாகி, பிரதமராக நரசிம்மராவ் இருந்தபோது, ஒரு ‘வலுக்கட்டாயமான’ முடிவுக்கு வந்தது. அதாவது, அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, பிரதமராக நரசிம்மராவ் இருந்தபோது “க்ளைமாக்ஸ்” காட்சியை எட்டியது. பாரதிய ஜனதாக் கட்சியின் இன்றைய வளர்ச்சிக்கு முக்கிய காரணகர்த்தாவாக இருக்கும் எல்.கே. அத்வானி, நாடு முழுவ…
-
- 0 replies
- 430 views
-
-
நான் ஜே.வி.பி. இற்கே வாக்களிப்பேன் – | அருந்ததி சங்கக்கார [இக்கட்டுரை அருந்ததி சங்கக்கார என்பவரால் ‘Colombo Telegraph’ பத்திரிகைக்காக எழுதப்பட்டது. இந்த ‘கூகிள்’ யுகத்தில் அரசியல் சிந்தனைகளின் மீளொழுங்கிற்கான அவசியம் இக் கட்டுரையில் தொனிக்கிறது. இயன்றவரை அர்த்தம் பிசகாது தமிழிலும் தர முயற்சித்திருக்கிறோம். தமிழில்: சிவதாசன். நன்றி: Colombo Telegraph’/ Arundathie Sangakkara] https://www.colombotelegraph.com/index.php/i-will-vote-for-jvp/ நான் ஜே.வி.பி.யிற்கே வாக்களிப்பேன் – அருந்ததி சங்கக்காரஐ.தே.கட்சி என் இரத்தத்தில் இருக்கிறது. சரத் பொன்சேகாவிற்கா…
-
- 0 replies
- 599 views
-
-
கூட்டமைப்பின் ஏமாற்று நாடகமும் தமிழ் மக்களும் - யதீந்திரா அண்மைக்காலங்களில் இது போன்றதொரு ஏமாற்று நாடகம் தமிழ் அரசியல் சூழலில் இடம்பெறவில்லை. தமிழ் மக்களை எந்தளவிற்கு ஏமாற்றலாம் என்பதற்கும், தமிழ் மக்கள் எந்தளவிற்கு ஏமாறுமாவர்கள் என்பதற்கும் இது ஒரு வரலாற்று உதாரணம். பல்வேறு விடயங்கள் மிகவும் ஆர்ப்பாட்டமாக இடம்பெற்றன. இரவுபகலாக விவாதங்கள் இடம்பெற்றன. இதில் பல்கலைக்கழக மாணவர்கள், புத்திஜீவிகள், அரசியல் ஆய்வாளர்கள் மதத்தலைவர்கள் எனப்பலரும் ஈடுபட்டனர். இதன் விளைவாக 13அம்ச கோரிக்கைகள் அடங்கிய ஆவணம் ஒன்றில் ஜந்து கட்சிகளின் தலைவர்கள் கையெழுத்திட்டனர். அந்த ஆவணம் ஒரு வரலாற்று ஆவணம் போல் சிலாகிக்கப்பட்டது. ஆனால் அனைத்தும் இறுதியில் புஸ்வானமாகிவிட்டது. இந்த முயற்ச…
-
- 0 replies
- 662 views
-
-
02 Oct, 2025 | 06:19 PM அ. அச்சுதன் உலகிலேயே மிக அழகான தீவுகளின் 2025ஆம் ஆண்டுக்கான பட்டியலில் இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ள நிலையில், அதே இலங்கையின் வட பகுதியில் உள்ள செம்மணியில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வாராய்ச்சியில் இதுவரை குழந்தைகள் உட்பட 235 ற்கும் மேற்பட்டவர்களின் மனித எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. இது, அழகிய இலங்கைத் தீவின் பின்னால் மறைந்துள்ள மனிதாபிமானமற்ற கடந்த கால கொடூரங்களை வெளிக்கொணர்வதாக உள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் ஆழத்தைக் கருத்தில் கொள்ளும்போது, அங்கு சட்டவிரோதப் படுகொலைகள் நடைபெற்று, அந்த உடல்கள் இரகசியமாகப் புதைக்கப்பட்டிருக்கலாம் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள…
-
- 0 replies
- 182 views
- 1 follower
-
-
த. தே. ம. மு மாற்றுத் தலைமையாகுமா ? | கருத்தாடல் | நடராஜர் காண்டீபன்
-
- 0 replies
- 575 views
-
-
விலகுமா கூட்டமைப்பு? - கே.சஞ்சயன் மிகவும் பரபரப்புமிக்க ஒரு சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் புகைச்சல்களும் குழப்பங்களும் இருப்பது வழக்கமான ஒன்றுதான். அவ்வாறானதொரு நிலை இல்லாத சூழல் இருந்தால்தான், அது ஆச்சரியப்பட வேண்டிய விடயம். அத்தகைய குழப்பங்களையும் தாண்டி, சில ஆக்கபூர்வமான விடயங்களில் முடிவுகளை எடுக்க வேண்டிய ஒரு தருணத்தில்தான், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. குறிப்பாக, அரசியலமைப்பு மாற்றம் தொடர்பான தெளிவானதும் தீர்க்கமானதுமான முடிவுகளை எ…
-
- 0 replies
- 526 views
-
-
இந்துசமுத்திரப் பிராந்திய ஆதிக்கப் போட்டி – கைமாறியது மியான்மார் – வேல்ஸ் இல் இருந்து அருஸ் 4 Views கடந்த வாரம் மீண்டும் நான்காவது தடவை இராணுவ ஆட்சியினுள் சென்றுள்ளது மியான்மார். முன்னர் மூன்று தடவைகள் அங்கு கொண்டுவரப்பட்ட இராணுவ ஆட்சி என்பது 51 ஆண்டுகள் நீடித்திருந்தது. கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற தேர்தலில் பெரும்பான்மையாக வெற்றிபெற்ற தேசிய ஜனநாயக லீக் கட்சியை சேர்ந்த ஆங் சாங் சூகி மற்றும் அரச தலைவர் யூ வின் மியின்ற் ஆகியோர் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை சிறைப்பிடித்த இராணுவம், கடந்த முதலாம் நாள் அன்று அதிகாரத்தை கைப்பற்றியிருந்தது. மியான்மாரில் இராணுவம் மிகவும் சக்தி வாய்ந்த இயந்திரம், …
-
- 0 replies
- 470 views
-
-
மக்கள் இறைமையை பிரதிநிதித்துவ ஜனநாயகம் பிரதிபலிக்கவில்லை கோட்பாட்டிலும் நடைமுறையிலும் ஜனநாயகம்-மக்கள்; இறைமை-நாடாளுமன்றம் - 2 - சட்டத்தரணி எஸ்.மோகனராஜன் இன்றைய அரசியலில் ஜனநாயகம், மக்கள் இறைமை, நாடாளுமன்றம் என்பன எவ்வாறு அர்த்தமுள்ளதாக, பிரயோக தன்மையுள்ளதாக, அங்கிகாரமுள்ளதாக உள்ளது? என்பது பலரிடம் தோன்றியுள்ள கேள்வியாக உள்ளது. இந்நிலையில், இலங்கை கடந்த காலங்களிலும் தற்போதும் ஜனநாயகத்துக்கும் மக்கள் இறைமைக்கும் மதிப்பளித்துள்ளதா? மதிப்பளிக்கின்றதா? என்ற மிகப்பெரிய சந்தேகத்துக்கு விடைதேடும் முகமாக நாடாளுமன்றம் நீதியியல் ரீதியாக எவ்வாறான கடப்பாட்டைச் செலு…
-
- 0 replies
- 421 views
-
-
ட்ரம்பின் ஆசியப் பயணம்: போருக்கு பிச்சையெடுத்தல் பயணங்கள் பலவிதம்; அரசியல் பயணங்கள் அதில் ஒருவிதம். அரசியல் பயணங்களின் நோக்கங்கள் பலவிதம்; அதில் பிச்சைகேட்கும் பயணங்கள் ஒருவிதம். இராஜதந்திரம், அனைத்துக்கும் அதற்குப் பொருத்தமான, அழகான சொல்லாடல்களைக் கொண்டுள்ளது. பிச்சையெடுத்தலை ‘உறவைப் பலப்படுத்தல்’ என்றும் உதவி கேட்டலை ‘தார்மீக உதவி’ என்றும் கட்டளைக்குப் பணிந்து கூட்டுச்சேருதலை ‘மூலோபாயக் கூட்டணி’ என்றும் இன்னும் பலவாறும் அழைப்பதற்கு இராஜதந்திரச் சொல்லாடல்களும் அயலுறவுக் கொள்கைக் கூற்றுகளும் வழியமைக்கின்றன. இருந்தபோதும், நேரடியான மயக்கங்களற்ற மொழியில் இவற்றை விளங்குவது, இச்சொற்களுக்கான உண்மையான பொருளை வ…
-
- 0 replies
- 407 views
-
-
உள்ளுராட்சித் தேர்தலில் தமிழரசு கட்சி வெற்றிபெற்றால் என்ன நடக்கும் ? யதீந்திரா மூன்று வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் பேசிய சம்பந்தன், வீட்டுச் சின்னத்தின் கீழ் துப்புத்தடியொன்றை நிறுத்தினாலும் கூட, மக்கள் எங்களுக்குத்தான் வாக்களிப்பார்கள் என்று கூறியிருந்தார். மக்களை தும்புத்தடியுடன் ஒப்பிடுவதிலிருந்து, சம்பந்தன் எந்தளவிற்கு மக்களை மதிக்கின்றார் என்பது தெளிவு. இன்று அவரும், அவரால் வழிநடத்தப்படும் இலங்கை தமிழரசு கட்சியும் பெரும் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். அதாவது தும்பும்தடிகளை மக்கள் பெருவாரியாக பெற்றிபெறச் செய்வார்கள். ஏனெனில் தமிழரசு கட்சியின் தலைவர்களது பார்வையில் மக்கள் என்பவர்கள் வெறுமனே வாக்கள…
-
- 0 replies
- 494 views
-
-
உள்ளூராட்சி தேர்தலும் வடக்கு தெற்கின் நிலையும் உள்ளூராட்சித் தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கின்றன. தேசிய மட்டத்தில் எதிர்க்கட்சிகளை விமர்சிக்கின்ற தேர்தல் பிரசாரங்களுடன், ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுந்திரக் கட்சியும் தங்களுக்குள் பிணை முறி விவகாரத்தில் மோதிக் கொண்டிருக்கின்றன. நாட்டின் முக்கிய பெரும் அரசியல் கட்சிகளாகிய ஐக்கிய தேசிய கட்சிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குமிடையே ஏற்பட்டுள்ள குற்றம் சுமத்துகின்ற சொற்போரானது நல்லாட்சி அரசாங்கத்தின் இருப்பு குறித்து அரசியல் வட்டாரங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் பல சந்தேகங்களை எழுப்பியிருக்கின்றது. …
-
- 0 replies
- 496 views
-
-
அழைத்து வந்தவர்கள் அணைத்துச் சென்றால் என்ன? இலங்கை இனப்பிரச்சினையைத் தீர்க்கும் பொருட்டு, இடர்பாடுகள் பலவற்றுக்கு மத்தியில், 1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் திகதி, இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தானது. அதன் ஊடாக, மாகாண சபை முறைமையிலான அரசியல் பொ(றி)தி அறிமுகம் செய்யப்பட்டது. தமிழ் மக்களது அபிலாஷைகளுக்கு (யானைப்பசிக்கு) சோளப்பொரி போட்டது போலவே, தீர்வு அமைந்தது. ஆனாலும், பிராந்திய வல்லரசின் சொல்லுக்கும் செயலுக்கும் மறுப்புத் தெரிவிக்க முடியாத நிலை, இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ்த் தரப்புக்கும் ஏற்பட்டது. மாகாண சபை முறைமையில் பல குறைகள் காணப்பட்டாலும் வடக்கு, கிழக்கு இணைந்த ஆட்சிமுறை, பெரு…
-
- 0 replies
- 454 views
-
-
விக்னேஸ்வரனின் (பதவி) நாட்கள் எண்ணப்படுகின்றன! நல்லூர் கந்தசாமி கோயிலில் கொடியேற்றம். அடுத்த 27 நாளும் திருவிழா. இருபத்து நான்காம் நாள் தேர்த் திருவிழா. அதற்கு முந்திய நாள் சப்பரத் திருவிழா. தேருக்கு அடுத்த நாள் தீர்த்தம். திருவிழாக் காலங்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும். குறிப்பாக தெற்கு வீதியில் முருகனுக்குத் தீபாதூபம் காட்டும் போது நெரிசல் அதிகமாகும். பக்தர்கள் முண்டி அடிப்பார்கள். வினை தீர்க்கும் வேலனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என்ற முழக்கம் வானைப் பிளக்கும். இந்தச் சூழ்நிலையை உள்ளூர் அயலூர் திருடர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்வார்கள். பெண்களது கழுத்தில் உள்ள தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடுவார்கள். ஓடும்போது கைகளைக் கும்பிடுவத…
-
- 0 replies
- 406 views
-
-
நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ முடிவு வெளியாகிவிட்டது. அதாவது, எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதாக கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கின்றார். கூட்டமைப்பின் மேற்படி முடிவு சிலருக்கு ஆச்சர்யத்தையும், சிலருக்கு ஏமாற்றத்தையும், சிலருக்கோ ஆதங்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்துவரும் சில கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில், சம்பந்தனின் மேற்படி முடிவு தொடர்பில் அதிருப்திகள் இருக்கின்றபோதிலும் கூட, அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்…
-
- 0 replies
- 2.4k views
-
-
டெல்லியில் ரணில்: 13மைனஸ்? நிலாந்தன்! adminJuly 23, 2023 டெல்லிக்கு போவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் கடந்த 18ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, ரணில் விக்கிரமசிங்க தமிழ்க் கட்சிகளுக்கு எதைத் தரமுடியும் என்று கூறினாரோ, அதைத்தான் இந்தியப் பிரதமரின் முன்னிலையில் வைத்தும் திரும்பக் கூறிவிட்டு வந்திருக்கிறார். தமிழ்க் கட்சிகளுக்கு அவர் சொன்னது போலீஸ் அதிகாரம் இல்லாத ஒரு மாகாண சபை. போலீஸ் அதிகாரம் என்பது என்ன? ஒரு சட்டமன்றம் தான் உருவாக்கிய சட்டங்களை அமல்படுத்துவதற்கான ஓர் அதிகாரக் கட்டமைப்புத்தான். அதை இன்னும் தெளிவாகச் சொன்னால், ஒரு சட்டமன்றத்தின் அதிகாரத்தை அமுல்படுத்தும் பிரிவு போலீஸ்தான். உலகம் முழுதும் அதுதான் நிலைமை. அந்த அதிகாரம் இல்லையென்றால், நிதி அதிகாரம், கல்வி…
-
- 0 replies
- 280 views
-
-
இனத் தேசிய அரசியலும் ‘பயன்தரு கடந்த காலமும்’ என்.கே அஷோக்பரன் அரசியலில், வரலாறு என்பது நாடுகள் மற்றும் சமூகங்களின் சித்தாந்தங்கள், அடையாளங்கள் மற்றும் அபிலாஷைகளை வடிவமைக்கும் ஒரு சக்திவாய்ந்த கருவியாக செயல்படுகிறது. ‘பயன்தரு கடந்த காலம்’ என்ற கருத்து, குறிப்பிட்ட நிகழ்ச்சி நிரல்களை முன்னெடுப்பதற்கு, பெரும்பாலும் இன-மத தேசியவாத அரசியலுக்காக, வரலாற்றுக் கதைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட வியாக்கியானம் மற்றும் கையாளுதலைக் குறிக்கிறது. வரலாற்றிற்கான இந்த அணுகுமுறை சமூகத்தை ஒன்றுபடுத்தவும் வல்லது, பிரிக்கவும் வல்லது. ஏனென்றால், ‘பயன்தரு கடந்த காலம்’ ஒன்று சமகால அரசியலினால் கட்டமைக்கப்படும் போது, அது சமகால சமூகம் சமகாலப் பிரச்சினைகளை குறித்த பயன்தரு கடந்த காலக்…
-
- 0 replies
- 327 views
-
-
ஏன் மீண்டும் 13வது திருத்தச்சட்டம் பேசுபொருளானது? - யதீந்திரா 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் பேசுவது தொடர்பில் பலவாறான அபிப்பிராயங்கள் கூறப்படுகின்றது. இன்றைய அரசியல் நிலைமைகளை புரிந்துகொண்டவர்கள் இதனை சரியென்று கூறுகின்றனர். தொடர்ந்தும் இப்படியே சென்றால் நிலைமைகள் மோசமடைந்துவிடும் – எனவே ஏதாவதொரு புள்ளியில் நாம் சந்திக்க வேண்டும். ஆனால், நிலைமைகளை புரிந்துகொள்ள மறுப்பவர்களோ அல்லது, புரிந்து கொள்ள விரும்பாதவர்களோ வேறு விதமாக பேசுகின்றனர். இவர்கள் இந்தியாவின் நிகழ்சிநிரலை முன்னெடுக்க விரும்புகின்றனர் – இது ஒரு சாராரின் கருத்து. இவர்கள் தமிழ் மக்களின் சமஸ்டிக் கோரிக்கையை திட்டமிட்டு பலவீனப்படுத்துகின…
-
- 0 replies
- 258 views
-
-
கொழும்பின் எண்ணப்போக்குகள் - ராஜீவ் பாதியா இலங்கையின் அரசியல் நெருக்கடியில் வெற்றியாளர் எவருமில்லை. நெருக்கடி உருவாக காரணமாயிருந்த நடவடிக்கைகளை எடுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இரு நம்பிக்கை வாக்கெடுப்புகளில் தோல்வி கண்ட மகிந்த ராஜபக்ச, பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைக்கொண்டிருக்கும் ரணில் விக்கிரமசிங்க ஆகிய மூவருமே பலப்பரீட்சையில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த பின்புலத்திலே, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக பிரதான அரசியல் பாத்திரங்கள் மத்தியில் இருக்கக்கூடிய எண்ணப்போக்குகள் எவை? முன்னாள் வெளியுறவு செயலாளரும் கலிங்க லங்கா பவுண்டேசனின் தலைவருமான லலித் மான்சிங் தலைமையிலான …
-
- 0 replies
- 618 views
-
-
ஐ.நா நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத இஸ்ரேல் | அரசியல் களம் | அரசியல் ஆய்வாளர் அருஸ்
-
- 0 replies
- 493 views
-
-
கியூப சமூகமும் கலைஞனின் சுதந்திரமும் : பிரான்ஸிஸ் போர்டு கொப்பாலாவுடன் ரோபர்ட் ஸ்டார் உரையாடல் (மொழிபெயர்ப்பு : யமுனா ராஜேந்திரன்) ஞாபக மறதிக்கு எதிரான போராட்டம் என்பது கலைஞர்களும் அறிவாளிகளும் இன்று எதிர்கொள்ளும் மிகப்பெரும் சவால்களில் ஒன்றாக இருக்கிறது. கியூப சமுகத்தின் மீது வைக்கப்படும் மிகப் பெரும் குற்றச்சாட்டுக்களில் ஒன்று அங்கு சுதந்திரம் இல்லை என்பது. பிறிதொரு குற்றச்சாட்டு அங்கு வறுமை நிறைந்திருக்கிறது என்பதாகும். இலத்தீனமெரிக்க நாடுகளின் தொடர்ந்த வறுமைக்கான காரணங்களாக 500 ஆண்டு காலத்திற்கும் மேலான காலனியச் சுரண்டலையும் அதற்குப் பின் இன்று வரை இராணுவச் சர்வாதிகாரிகளை அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ஊட்டி வளர்த்ததையும் இன்று வரை கியூப சமூகத்தின் மீது …
-
- 0 replies
- 1.5k views
-
-
அரசியல் தந்திரோபாயம் நாட்டில் ஜனநாயகம் கோலோச்சுகின்றது. அது ஜனாதிபதி ஆட்சி முறையைக் கொண்டது என்று கூறப்படுகின்றது. ஆனால், அந்த ஜனநாயகத்தில், தானே தன்னிகரில்லாத உயர்ந்த சக்தி என்பதை நிறைவேற்று அதிகாரம் மீண்டும் ஒரு முறை உரத்து வெளிப் படுத்தி இருக்கின்றது. நிறைவேற்று அதிகாரம், நீதித்துறை, சட்டவாக்கம் ஆகிய மூன்றுடன் சமூகத்தின் காவல் நாய் என வர்ணிக்கப்படுகின்ற ஊடகத்துறையையும் சேர்த்து நான்கு தூண்களில் கட்டி எழுப்பப்பட்டிருப்பதே ஜனநாயகம் என்பதே கோட்பாடு. இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் நான்கு சக்திகளும் தம்மளவில் தனித்துவமானவை. ஓன்றையொன்று மிஞ்ச முடியாது. ஒன்று மற்றொன்றை மேவிச் செயற்…
-
- 0 replies
- 750 views
-
-
(சிறிலங்கா அரசு வடக்கிலும் கிழக்கிலும் பாரிய கட்டுமானத் திட்டங்களையும் பொருண்மிய மேம்பாடுகளையும் மேற்கொள்வதாகப் பறை சாற்றுகிறது. தமிழ்மக்களைப் பொறுத்தளவில் அவர்களது பொருளாதாரம் இரண்டு முக்கிய தொழில்களில் தங்கியுள்ளது. ஒன்று விவசாயம். மற்றது மீன்பிடி. இதில் வடக்கில் மீன்பிடித் தொழில்பற்றி இக்கட்டுரை ஆராய்கிறது. சுமித் சாமின்டா (Sumith Chaaminda) என்ற சிங்கள ஆய்வாளர் எழுதிய இக்கட்டுரை த அய்லாந்து நாளேட்டில் ஏப்பிரில் 02 ஆம் நாள் வெளிவந்தது. வட மாகாணத்தில் நலிந்து போயிருக்கும் மீன்பிடித் தொழில்பற்றி முடிந்தளவு பக்கசார்பில்லாது எழுதியுள்ளார். (தமிழழாக்கம் - நக்கீரன்.) யாழ்ப்பாணத்தில் மீன்பிடித் தொழில்: யாழ்ப்பாணக் குடாநாட்டைப் பொறுத்தளவில் மீன்பிடி…
-
- 0 replies
- 557 views
-