அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
முந்தைய பகுதிகள் ஆறாம் நூற்றாண்டின் இறுதிக்குப்பின்னால் தான் இலங்கையில் மிகப்பெரிய மாற்றங்கள் உருவாகத் தொடங்கியது. இந்தியாவில் இருந்த பல்லவ பேரரசுவின் எழுச்சியினால் வணிக ரீதியான மாற்றங்கள் மொத்தமும் இலங்கைக்கு சென்றடைந்தது. அப்போது இருந்த கடல் வணிகம் அதனை சாத்தியப்படுத்தியது. தென்னிந்திய வணிகர்கள் மூலம் இலங்கைக்கு தென்கிழக்காசியா, மேற்கிழக்காசியாவுடனும் நெருங்கிய வணிக உறவுகள் ஏற்பட்டன. இந்த காலகட்டத்தில் உருவான கருத்துப் பறிமாற்றங்கள் தான் உள்ளே உள்ள சமூக அமைப்பையும் புரட்டிப்போட்டது. நீர்பாசன வளர்ச்சிகளும், விவசாய முன்னேற்றங்களும் தொடங்கி புதிய முன்னேற்றத்தை உருவாக்கியது. ஒவ்வொரு காலகட்டத்திலும் வணிகம் என்ற நோக்கத்தினால் உள்ளே வந்து சேர்ந்தவர்களால் தமிழ் இனக்குழு…
-
- 0 replies
- 924 views
-
-
சிதறிப்போகும் நிலையிலுள்ள சுதந்திரக்கட்சியை கட்டிக் காக்க முயலும் அரச தலைவர்!! அரச தலைவராகவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவுமிருக்கும் மைத்திரிபாலவினால் சுதந்திரக் கட்சியை ஒரு கட்டுக்கோப்புக்குள் வைத்திருக்க இயலாமற் போய்விட்டது. 1980 களில் சுதந்திரக்கட்சியின் தலைமைத்துவம் தொடர்பாக சிறிமாவோ பண்டாரநாயகவிற்கும், மைத்திரிபால சேனநாயகவுக்குமிடையில் முறுகல் நிலைதோன்றிய போதிலும், பின்னர் அது நேர்சீர் …
-
- 0 replies
- 476 views
-
-
முள்ளிவாய்க்கால் படுகொலைகள் பற்றிய எனது நெடுங்கவிதையின் கரு இதுதான். PLOT OF MY LONG POEM UNDER WRITING -TAMILS OF THE WORLD NEVER FORGET THE BACKGROUND OF THE GENOCIDE 2019 . . Home Minister P Chidambaram said the Sri Lankan government's statement meant that it is end and cessation of hostilities which Indian interlocutors had been urging. - India Today 2009-04-27 , பொய்யெனத் தெரிந்தும் யுத்தநிறுத்தம் என உள்நோக்கத்துடன் அமைச்சர் கிண்டலடித்ததை நம்பி மறைவிடங்களால் வெளிவந்த பல்லாயிரம் தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொன்றொளிக்கபட்ட நிகழ்வை நந்திக் கலம்பகம்போன்ற ஒரு குறுங்காவியமாக எழுதி வருகிறேன். (https://www.indiatoday.in/…/karunanidhi-ends-fast-after-sl-…) …
-
- 0 replies
- 507 views
-
-
சிதறடிக்கப்படும் தமிழ் கவனக் குவிப்பு – நிலாந்தன். August 20, 2023 குருந்தூர் மலை, வெடுக்குநாறி மலை, பறளாய் முருகன் கோயில், தையிட்டி, திருகோணமலை, பெரியகுளம் உச்சிப்பிள்ளையார் மலை மாதவனை மயிலைத்த மடு மேய்ச்சல் தரை ராவணன் தமிழனா இல்லையா? மேர்வின் டி சில்வா தமிழர்களின் தலைகளைக் கொய்வாரா. என்றிவ்வாறாக அண்மை காலங்களில் தமிழ்க்கட்சிகள் செயற்பாட்டாளர்கள் ஊடகங்களின் கவனம் வெவ்வேறு திசைகளில் ஈர்க்கப்படுகின்றது .கிழமைக்கு ஒன்று அல்லது நாளுக்கு ஒன்று என்று ஏதோ ஒரு விவகாரம் தமிழ் மக்களின் கவனத்தை ஈர்க்கிறது. எங்காவது ஒரு புதிய விகாரை கட்டப்படுகிறது, அல்லது எங்காவது ஒரு தொல்லியல் சின்னம் அபகரிக்கப்படுகிறது, எங்காவது ஒரு நிலத்துண்டு அளவீடு செய்யப்படுகிறது அல்லது அல்ல…
-
- 0 replies
- 239 views
-
-
சிதறிப்போன ஒரு மக்கள் கூட்டம் ? – நிலாந்தன். adminJuly 9, 2023 காற்றுவழிக் கிராமங்களைப் பற்றிய எனது கடந்தவாரக் கட்டுரையானது பெருமளவுக்கு தீவக மக்களால் வரவேற்கப்பட்டிருக்கிறது. எனினும் ஒரு பகுதியினர் அதற்கு வேறுவிதமாக வியாக்கியானம் தருகிறார்கள். கோவில்களில் காசைக் கொட்டுவது என்பது ஒரு விதத்தில் ஊரில் தனது முதன்மையை நிலைநாட்டும் நோக்கத்தையும் கொண்டது என்று அவர்கள் கூறுகிறார்கள். ஒரு காலம் நீருக்கு கஷ்டப்பட்ட கிராமத்தில் இருந்து பொருளாதார மற்றும் போர்க் காரணங்களுக்காக ஊரை விட்டுப்போன மக்கள் இப்பொழுது அதே ஊரில் கற்பனை செய்ய முடியாத ஒரு தொகையைச் செலவழித்து ஒரு கோவிலைப் புனரமைப்பது என்பது, தங்களால் முடியும் என்பதனைச் சாதித்துக்காட்டும் ஒரு நிகழ்வாக ஏன் எடுக்கக் க…
-
- 0 replies
- 566 views
-
-
சிதறிப்போயுள்ள தமிழ் தேசியமும் ஆதிக்கம் செலுத்தும் இலங்கை தேசியமும்! Posted on August 12, 2020 by தென்னவள் 36 0 நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் அதிக முக்கியத்துவமும் தனித்துவமும் கொண்டதாக அமைந்துள்ளதாகவே தெரிகிறது. வடக்கு கிழக்கு ஒரு மையமாகவும் தென் இலங்கை இன்னோர் மையமாகவும் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. பொதுஜன பெரமுனக் கட்சி விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் கீழும் அதிக பெரும்பான்மையை எட்டியுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள உறுதியான அரசாங்கம் இலங்கைத் தீவில் மட்டுமல்ல பிராந்திய அரசியலையும் சர்வதேச அரசியலையும் கையாளும் வல்லமை பொருந்தியதாக மாறும் சூழலை எட்டியுள்ளது. அதே நேரம் வடக்கு கிழக்கில் தமிழ் அரசியல் தலைமைகளும் அவற்றின் ஒருமித்த பலமில்லா…
-
- 1 reply
- 608 views
-
-
சிதைக்கப்படும் தமிழரின் பலம் கே. சஞ்சயன் / 2018 ஒக்டோபர் 26 வெள்ளிக்கிழமை, மு.ப. 05:18 தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தி, அரசியல் நடத்த வருபவர்களும், அரசியல் நடத்திக் கொண்டிருப்பவர்களும், தமிழ் மக்களின் இன்றைய அடிப்படைத் தேவையைச் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார்களோ என்ற சந்தேகமே இப்போது ஏற்படுகிறது. வடக்கில் புதிது புதிதாக உருவெடுக்கும் கட்சிகள்தான், இந்தச் சந்தேகம் எழுவதற்குக் காரணம். தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், அவர்களின் இன்றைய முக்கியமான அரசியல் ரீதியான தேவை, உரிமையை உறுதிப்படுத்திக் கொள்வதும், நிலையான அரசியல் தீர்வு ஒன்றை எட்டுவதும் தான். தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிலையானதும் நிரந்தரமானதும் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற, அவர்களின்…
-
- 0 replies
- 425 views
-
-
சிதைக்கப்படும் தமிழர் தாயகமும் அச்சுறுத்தப்படும் தமிழ்த்தேசியமும் July 14, 2021 பி.மாணிக்கவாசகம் இந்தத் தாயகப் பிரதேசத்தில் இறைமை சார்ந்த அரசியல் உரிமைகளுடன் தங்களைத் தாங்களே ஆளத்தக்க அதிகார பலத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பதே அவர்களின் அரசியல் கோரிக்கையாகும். இது சாதாரண அரசியல் கோரிக்கை அல்ல. அது இரத்தமும், சதையும் உள்ளடங்கிய உணர்வுக் கலவை சார்ந்த உயிர் மூச்சின் பிரகடனம் என்றே கூற வேண்டும். அத்தகைய உன்னதமான தாயகக் கோட்பாட்டு அரசியல் உரிமைக்காகவே அவர்கள் ஏழ…
-
- 0 replies
- 435 views
-
-
சிதைந்த மாற்றுத் தலைமைக் களம் புருஜோத்தமன் தங்கமயில் / 2020 ஜூன் 10 தமிழ்த் தேசிய அரசியலில், 'மாற்றுத் தலைமை' என்கிற உரையாடல் களம், கடந்த ஐந்து ஆண்டுகளில் என்றைக்கும் இல்லாதளவுக்கு நீக்கம் செய்யப்பட்டு இருக்கின்றது. அதுவும், மாற்றுத் தலைமை பற்றிய நம்பிக்கையைத் தொடர்ச்சியாக வெளியிட்டு வந்த தரப்புகளாலேயே 'நீக்கம்' செய்யப்பட்டு இருக்கின்றது என்பதுதான் வேதனையானது. புலிகளுக்குப் பின்னரான காலத்தில், இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அரசியலில், அதிருப்தியுற்ற தரப்புகளும் அப்படித் தங்களைக் காட்டிக் கொண்ட தரப்புகளும் புலம்பெயர் தேசமும், 'மாற்றுத் தலைமை' என்கிற உரையாடல் களத்தைத் திறந்தன. குறிப்பாக, 2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், கூட்டமைப்பி…
-
- 0 replies
- 648 views
-
-
சிதையும் கோட்டாபயவின் கனவு! திணறும் இலங்கை (Video) விளம்பரம் இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின்(Gotabhaya Rajapaksha) தலைமையில் ஆட்சி மாற்றம் ஒன்று இடம்பெற்று கடந்த 18ஆம் திகதியுடன் இரண்டு வருடங்கள் கடந்துவிட்டன. 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற்ற கோட்டாபய ராஜபக்ச இலங்கையில் மன்னராட்சி காலத்தில் தலைநகராக விளங்கிய அநுராதபுரத்தில் பதவியேற்றுக் கொண்டார். இந்த பதவியேற்பு வரலாற்று முக்கியத்தும் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது. ருவன்வெலி மகா சாய பௌத்தர்களின் சின்னமாக விளங்குவது மற்றும் சிங்கள மன்னர்களால் அநுராதபுர யுகம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட ஆட்சியாக வரலாற்றில் குறிக்கப்படுவது ஆகிய காரணங்களே தமது பதவிப் பிரமாண …
-
- 0 replies
- 371 views
-
-
சிதையும் தமிழர் அரசியல் கட்சிகள்: நிலை தடுமாறும் தமிழ்த் தேசியம் -க. அகரன் ‘சட்டியில் இருந்து அடுப்பில் விழுந்த’ கதையாகி இருக்கும் தமிழர் அரசியல் களம், தொடர்ந்தும் நிதானமின்றிப் பயணிக்கின்றதா என்கின்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ் மக்கள், தமது அரசியல் தலைமைகளிடம் ஒற்றுமையின் தேவையை உணரச் செய்கின்ற போது, அரசியல் தளத்தில் இருக்கின்றவர்கள், தமக்குள் இருக்கும் காழ்ப்புணர்ச்சிகளைக் கக்கியவாறு, தமக்கான தனித்தனித் தளங்களை ஆரம்பிக்கும் படலங்கள் தொடங்கியுள்ளன. தனிக்கட்சி அரசியலும் அதன் பின்னரான கூட்டும் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் அரசியல்வாதிகளிடம் நாகரிகமாக ஒட்டிக்கொண்டுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாக்கின்ற போது, த…
-
- 0 replies
- 377 views
-
-
-
- 0 replies
- 702 views
-
-
சித்தார்த்தனும் செல்வமும் என்ன செய்யப் போகிறார்கள்? புருஜோத்தமன் தங்கமயில் / 2018 செப்டெம்பர் 12 தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான உறவு இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. பிரிவுக்குப் பின்னர், எவ்வாறான பாதையைத் தேர்தெடுக்க வேண்டும் என்பது தொடர்பிலும் கூட்டமைப்பினரும் விக்னேஸ்வரனும் ஓரளவுக்குத் தெளிவான நிலைப்பாட்டுக்கு வந்துவிட்டார்கள். உறவை ஒட்டுமொத்தமாக முறித்துக் கொள்வதற்கு முன்னரான, சம்பிரதாயபூர்வ சந்திப்புக்கான காத்திருப்பு மட்டுமே இப்போதுள்ளது. டெல்லிப் பயணத்தை முடித்துக்கொண்டு, இரா.சம்பந்தன் நாடு திரும்பியதும், ‘கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், கூட்டமைப்பின் முதலமைச்சர்…
-
- 0 replies
- 714 views
-
-
சித்திரவதைகளை முற்றாக தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் இலங்கையில் இரகசிய முகாம்கள் இருந்தனவா என்றும் வெள்ளை வேன் கடத்தல் சம்பவங்கள் தொடர்கின்றனவா எனவும் சித்திரவதைக்கு எதிரான ஐக்கியநாடுகள் குழுவின் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் குழுவின் 59 ஆவது அமர்வு நேற்று முன்தினம் ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் ஆரம்பமானது. இந்த அமர்வில் இலங்கை விவகாரம் தொடர்பில் ஆராயப்பட்டபோதே இவ்வாறான கேள்விகளை அந்தக்குழுவின் உறுப்பினர்கள் எழுப்பியுள்ளனர். இலங்கையின் யுத்தகாலத்தில் இரகசிய முகாம்கள் பேணப்பட்டதா? பொறுப்புக்கூறல் பொறிமுறையின்…
-
- 0 replies
- 373 views
-
-
சித்திரவதைகள் தொடர்கின்றனவா? திருமலை நவம் முழுப்பூசணிக்காயை ஒரு தட்டுச் சோற்றில் மறைக்க முற்படுவது போல் இன்றைய நல்லாட்சி அரசாங்கமானது முன்னைய ஆட்சியாளர்களின் அத்துமீறல்களையும் குற்றத் தொகுப்புகளையும் குலநாச செயல்களை யும் மறைக்க முயல்வது எவ்வளவு காலத்துக்கு உள்நாட்டு அரங்கி லும் சர்வதேச அளவிலும் செல்லுபடியாகப் போகிறது என்பதும் ஒரு விபரீதமான எதிர்ப்பார்ப்புத்தான். சித்திரவதைகள் கடத்தல்கள், காணாமல் ஆக்கப்படுதல், இரகசிய தடுப்பு முகாம்கள்,மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள், பாலியல் வன்மங்கள் என்ற மனித நாகரிகத்துக்கு அப்பாற்பட்ட கேவல வித்தைகளில் ஈடுபடும் எந்தவொரு ந…
-
- 1 reply
- 400 views
-
-
சிந்தித்துச் செயற்படுவோம் -இலட்சுமணன் கடந்த 70 ஆண்டுகளில், தமிழர்கள் தமது நியாயங்களை முன்வைத்து, அகிம்சை வழியிலும் ஆயுத ரீதியிலும் பல்வேறு போராட்டங்களை நிகழ்த்தியும் பல்வேறு விட்டுக்கொடுப்புகளைச் செய்தும் எந்தப் பயனும் கிடைக்கவில்லை; எல்லாம் எட்டாக்கனிகளாகவே காணப்படுகின்றன. கடந்த 25 ஆண்டுகளில், வடக்கு, கிழக்கில் தமிழர் ஆயுத பலத்துடன் இருந்த வேளையில், சமஸ்டித் தீர்வுக்குச் சம்மதித்த இலங்கை அரசாங்கம், அது தொடர்பாகப் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் பேச்சுவார்த்தைகளையும் நடத்தி இருந்தது. பண்டா - செல்வா ஒப்பந்தம், பின்னர், திம்புப் பேச்சுவார்த்தை, இலங்கை-இந்திய ஒப்பந்தம், சந்திரிகா - புலிகள் ஒப்பந்தம், ரணில் - பிரபா ஒப்பந்தம் என, உள்ளூரிலும் சர்…
-
- 0 replies
- 614 views
-
-
சிந்துவெளி நாகரிகம் சிந்துவெளி நாகரிகம் (Indus valley civilization) எகிப்து, மெசொப்பொத்தேமியா, சீனா போன்ற இடங்களில் தழைத்தோங்கியிருந்த, உலகின் மிகப் பழைய நாகரிகங்களையொத்த தொன்மையான ஒரு நாகரிகமாகும். இன்றைய பாகிஸ்தானிலுள்ள சிந்து நதியை அண்டித் தளைத்தோங்கியிருந்த இந்த நாகரிகம் மிகப் பரந்ததொரு பிரதேசத்தில் செல்வாக்குச் செலுத்திவந்தது. கி.மு 3000 க்கும் கி.மு 2500 க்கும் இடிப்பட்ட காலப்பகுதியில் உச்ச நிலையிலிருந்த இந்த நாகரிகம், இன்னும் தெளிவாக அறியப்படாத ஏதோவொரு காரணத்தினால் சடுதியாக அழிந்து போய்விட்டது. இங்கு வாழ்ந்த மக்களினம் பற்றியோ, அவர்கள் பேசிய மொழிகள் பற்றியோ ஆய்வாளர்களிடையே கருத்தொற்றுமை கிடையாது. தொல்லியல் ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான முத…
-
- 3 replies
- 11.5k views
-
-
நன்றி - யூரூப்
-
- 0 replies
- 390 views
-
-
சின்னத்தில் என்ன இருக்கிறது? - நிலாந்தன் தமிழரசுக் கட்சிக்கு எதிராக ஒரு புதிய கூட்டமைப்பை அமைக்கும் முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இதனால் விக்னேஸ்வரன்-மணிவண்ணன் அணியானது மான் சின்னத்தின் கீழும் ஏனைய கட்சிகள் குத்துவிளக்கு சின்னத்தின் கீழும் போட்டியிடுவதாக முடிவாகியுள்ளது. தமிழரசுக் கட்சிக்கு எதிராக ஒரு பெரிய கூட்டை உருவாக்கப் போகின்றன என்று எதிர்பார்க்கப்பட்ட கட்சிகள் ஒரு பொதுச் சின்னத்தை கண்டுபிடிக்க முடியாமல் தங்களுக்கு இடையே இரண்டாக உடைந்து விட்டன. இந்த உடைவை தொகுத்துப் பார்த்தால் வெளிப்படையாக ஒரு விடயம் தெரிகிறது. ஆயுதப்போராட்ட மரபில் வந்த கட்சிகள் ஓரணியிலும் ஆயுதப்போராட்ட மரபில் வராத கட்சிகள் இன்னொரு அணியாகவும் நிற்பதைக் காணலாம். இது ஆ…
-
- 3 replies
- 920 views
- 1 follower
-
-
சிம்பாப்வே ஆட்சி மாற்றத்தின் பின்னணி அரசியல் January 14, 2018 ரொபேர்ட் முகாபே சிம்பாப்வே நாட்டின் ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்ததன் மூலம் 37 வருட முகாபேயின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. சிம்பாப்வேயின் ஆளுங்கட்சியான சானு பிஎப் (Zanu – PF) கட்சியின் தலைமைப் பதவியைக் கைப்பற்றிப் பின்னர் தற்பொழுது சிம்பாப்வேயின் இரண்டாவது ஜனாதிபதியாகியிருக்கும் எமர்சன் மனாங்கக்வா ஆட்சிக்கு வந்துள்ளமையால் இனி சிம்பாப்வேயில் ஜனாநாயகம் மலர்ந்துவிடும் என்பதுபோல் சில மேற்கத்தைய ஊடகங்கள் பிரச்சாரம் செய்கின்றன. உண்மை நிலைமை அதுவல்ல ஏனெனில் இதுவரை காலமும் முகாபேயின் வலதுகரமாக செயற்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்களையும், தொழிலாளர்களைய…
-
- 0 replies
- 363 views
-
-
சிம்பாப்வே: ஆபிரிக்காவின் கலகக்காரன் - தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ உலக அரசியல் அரங்கில் கலகக்காரர்களுக்கு தனியான இடமுண்டு. கலகக்காரர்கள் எல்லோரும் ஓரே இயல்புடையவர்கள் அல்லர். அவர்கள் வாழ்ந்த காலம், இடம், உலகச் சூழல் என்பனவும் அவர்களின் நடத்தையுமே அனைத்தையும் தீர்மானிக்கிறது. கலகக்காரர்களே உலக அரசியல் அரங்கை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள் என்பதைத் துணிந்து சொல்லவியலும். அவர்கள் இல்லாவிடின் ஒற்றைப் பரிமாண உலக அரசியலை சத்தமின்றி ஏற்று நடக்கும் இயல்புடனேயே உலகம் இயங்கிக் கொண்டிருக்கும். ஆனால், உலகம் இப்போது அவ்வாறு இயங்குவதில்லை. அவ்வாறு இயங்குவதையே அதிகார மையங்கள் விரும்புகின்ற போதும் அது சாத்தியமாவதில்லை. …
-
- 0 replies
- 574 views
-
-
http://www.zionpress.org) http://www.mfa.gov.il http://www.thiruvalluvar.in/2009/12/blog-post.html
-
- 0 replies
- 940 views
-
-
சியோனிஸ்டுகளும், இஸ்ரேலும் - சில குறிப்புகள் தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்களுக்கு யூதர்கள், பாலஸ்தீனர்களின் வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய உண்டு. யூதர்கள் இஸ்ரேலை உருவாக்கியது பற்றிய ஒப்பீடு தமிழ் பேசும் மக்களுக்கு அறிமுகமாகியுள்ளது போன்ற ஒப்பீட்டு முயற்சியல்ல இப்பிரதி. வெறுமனே ஒப்பீடுகளில் மிதப்பதால் மனித இனம் விடுதலையை பெறவும் முடியாது. 1948 வரையில் இஸ்ரேல் என்பது கனவாக இருந்தது. அதற்காக யூதர்கள் உலகமெங்குமிருந்து ஒன்றுதிரண்டு உழைத்தார்கள். இன்று அமெரிக்க அரசியலில் கருத்துக்களை உருவாக்கி, கொள்கை முடிவுகளை எடுக்க வைக்கிற பெரும்பலம் கொண்டவர்களாக யூதர்கள் இருக்கிறார்கள். பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்திய சர்வதேச மனித உரிமை குற்றங்களை ஐ.நா.ம…
-
- 1 reply
- 1.1k views
-
-
சிரிய அகதிகளும் வெளிவிவகார அரசியலும் ஜனகன் முத்துக்குமார் சிரியாவில் மோதலின் தொடக்கத்திலிருந்து சிரிய அகதிகள், உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் பிரச்சினையானது சர்வதேச மனிதாபிமான அமைப்புக்களின் அறிக்கைகள், சிரிய மோதலில் ஈடுபட்டுள்ள வகிபங்குதாரர்களின் நடவடிக்கைகள் பற்றி எழுதப்பட்ட பல கட்டுரைகளில் சித்தரிக்கப்பட்டிருந்த போதிலும், அரசியல் நலன்களுக்காக பொதுமக்கள் பணயமாக வைக்கப்படுதலுக்கு ஒரு மோசமான உதாரணம் கிழக்கு சிரியாவில் ஐக்கிய அமெரிக்காவின் விருப்பத்துடன் இணங்கிச் செயற்படும் ஆயுதக்குழுக்களால் கட்டுப்படுத்தப்படும் அல்-டான்ஃப் தளத்தை சுற்றி 55 கிலோ மீற்றர் மண்டலத்துக்குள் அமைந்துள்ள ருக்பான் அகதிகள் முகாம் ஆகும். உத்தியோகபூர்வ தகவல்களின்படி, 50,000 க்கும் மேற்பட்ட …
-
- 0 replies
- 1.1k views
-
-
சிரியா விடயம் சின்னதல்ல சிரியா விடயம் சின்னதல்ல சிரியா விடயம் இன்று உலகின் அனைத்து மக்களையும் பாதித்து விட்டது என்பதற்கப்பால், மனிதத்தை நேசிக்கும், சுதந்திரத்தை விசுவாசிப்பவர்களை மட்டும் தான் அது கவலை கொள்ள வைத்துள்ளது, மாறாக இன அழிப்பை மேற்கொள்ளக் காரணகர்த்தாவாக இருப்போருக்கு சிரிய விடயம், சிறிய விடயமாகவும், சிரிப்புக்குரிய விடயமாக வுமே அமையும். உலக வல்லரசுக…
-
- 0 replies
- 405 views
-