அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
வடக்கு, கிழக்குத் தேர்தல் வியூகம்: பலமடைய வேண்டிய தாயகம் Editorial / 2019 ஜனவரி 22 செவ்வாய்க்கிழமை, மு.ப. 01:14 Comments - 0 -இலட்சுமணன் பதின்மூன்றாவது திருத்தத்தின் ஊடாக அமையப்பெற்ற மாகாண சபை ஆட்சியை, தமிழர் தரப்புக் காத்திரமாகப் பயன்படுத்தியிருந்தால், இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கும் அரசியல் போராட்டத்துக்கு, முற்றுப் புள்ளி வைத்திருக்க முடியும். எடுத்தவுடனேயே எல்லாமும் கிடைத்துவிடுமென்றால் எதுவுமே நிறுத்தப்பட்டதாகத்தான் இருக்கும். 2008ஆம் ஆண்டு, தமிழர்களின் பூர்வீக பூமி என்று சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாகவும் 13இன் ஊடாகவும் இணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டன. வடக்கு மாகாண சபைத் தே…
-
- 0 replies
- 516 views
-
-
கிழகு முஸ்லிம்களுக்கு.TO EASTERN MUSLIMS- வ.ஐ.ச.ஜெயபாலன்.முஸ்லிம் இளைஞர்களைக் காட்டிக் கொடுக்காதீர்கள் நல்வழிப்படுத்துங்கள் என 2013ல் இருந்து நான் குரல் கொடுத்து வந்தேன். முதலில் இதனைச் சொன்னபோது பலர் என்னை முறைத்தார்கள். யாரும் ஆதரிக்கவில்லை. இன்று பலர் விழித்து இதுபற்றி அக்கறை செலுத்துவது மகிழ்ச்சி தருகிறது. .இன்று புதிய ஒரு விடயத்தை பதிவு செய்ய விரும்புகிறேன். இப்ப கிழக்கு மாகாண முஸ்லிம்கள் தொடர்பாக புதிய அச்சுறுத்தல் உருவாகியுள்ளது. கிழக்கு மாகான முஸ்லிம் பிரமுகர்கள்பலர் தமிழர் வடக்குடன் இணைய முடியாது என்று விவாதிப்பதிலேயே கவனத்தை சிதற விடுகிறார்கள். முஸ்லிம் பிரதேசங்களின் இணைவு ஒருமித்த நிலைபாடு தொடர்பாக அவர்கள் விவாதிப்பதில்லை. இது அபத்தமானது. .எதிர்காலத்தில் முஸ்லி…
-
- 2 replies
- 929 views
-
-
அடுத்த கட்டம் குறித்து தீர்மானிப்பதில் திரிசங்கு நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பி.கே.பாலச்சந்திரன் இலங்கை தமிழ் மக்களின் பிரதான அரசியல் அணியான தமிழ் தேசிய கூட்டமைப்பு அதன் அணுகுமறைகளையும் செயற்பாடுகளையும் பொறுத்தவரை அடுத்த கட்டம் குறித்து முடிவெடுப்பதில் சிக்கலான ஒரு நிலைமையை எதிர்நோக்குகிறது.எடுக்கக்கூடிய எந்தத் தீர்மானமுமே பிரச்சினையைத் தந்துவிடுமோ என்று அதன் தலைவர்கள் சிந்திக்கவேண்டியிருக்கிறது என்றுதான் கூறவேண்டும். ஒரு புறத்திலே, கூட்டமைப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துடன் ஒத்துழைக்கவேண்டியிருப்பதுடன் அதற்கு முட்டுக்கொடுக்கவேண்டிய தேவையும் இருக்கிறது. தமிழர்களுக்கு விரோதமானவராக நோக்கப்படுகின்ற முன்னாள் …
-
- 0 replies
- 455 views
-
-
சிரியாவில் இஸ்ரேலின் மூலோபாயத் தூரநோக்கு Editorial / 2019 ஜனவரி 21 திங்கட்கிழமை, மு.ப. 01:11 Comments - 0 - ஜனகன் முத்துக்குமார் இஸ்ரேலின் அண்மைய சர்வதேச அரசியல், மூலோபாயக் கொள்கைகளைத் தீர்மானிப்பதில் பல நாடுகளின் அரசியல் நகர்வுகள் செல்வாக்குச் செலுத்துகின்றன. எனினும், சீனாவின் பொருளாதாரப் போட்டிக்கு அப்பால், இன்றைய இஸ்ரேலின் மூலோபாய கொள்கையில் செல்வாக்குச் செலுத்துகின்ற மிகப்பெரிய விடயம், சிரியாவின் அரசியல்களம் என்பது வெளிப்படையான ஒன்றாகும். குறிப்பாக, சிரியாவில் இஸ்ரேலுக்கான பிரச்சினை ரஷ்யா என்ற போதிலும், அதைத் தாண்டி, உண்மையில் சிரியாவின் அரசியல் நிரலில் இஸ்ரேலுக்கு நெருக்கடியை ஏற்படுத்தவல்ல நாடு ஈரான் என்பதை, இஸ்ரேல் வெகுவாகவே புரிந்துகொண…
-
- 0 replies
- 559 views
-
-
வடிவேலின் புதிய அரசியல் யாப்பு ? யதீந்திரா கடந்த வருடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடக்கிய தூதுக் குழுவொன்று சீனாவிற்கு பயணம் மேற்கொண்டிருந்தது. இதன்போது கூட்டமைப்பின் தலைவராக அறியப்படும் இரா.சம்பந்தனும் அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தார். அதே போன்று கூட்டமைப்பிற்கு எதிர்நிலைப்பாடுள்ள பிறிதொரு தமிழ் கட்சியின் தலைவரும் அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தார். இவர்கள் அங்கு தங்கியிருந்த வேளையில் ஆசுவாசமாக மாலை நேரங்களில் பேசிக் கொள்வதுண்டாம். பொதுவாக மக்களுக்கு முன்னால் முரண்பாடுள்ளவர்களாக காண்பித்துக் கொள்ளும் அரசியல்வாதிகள், தனியறையில் மதுக் கோப்பைகளுடன் இருப்பது அரசியலை பொறுத்தவரையில் சர்வசாதாரணமான ஒன்று. சம்பந்தனும் அப்படியான மதுக் கோப்பைகள் உரசிக் கொள்ளும் இரவுகளை விரும…
-
- 0 replies
- 1.2k views
-
-
யாழ்ப்பாணம்-2019 ஜனவரி – வாள் வெட்டுக் குழுக்களும் வீதிச்சோதனைகளும் -நிலாந்தன் January 20, 2019 கடந்த பொங்கல் தினத்தன்று யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயிலடியில் மோட்டார் சைக்கிளில் வந்த வாளேந்திய இளைஞர்கள் நடாத்திய தாக்குதலில் சிலர் காயப்பட்டுள்ளார்கள். நாச்சிமார் கோயில் அதிகம் சனப்புழக்கமான ஓர் இடம். யாழ்ப்பாணத்தில் பெருஞ்சாலைகளில் ஒன்றாகிய காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ளது. யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து நடந்து செல்லக்கூடிய தூரம். இந்த இடத்தில்தான் தைப்பொங்கல் தினத்தன்று தாக்குதல் நடந்தது. இதற்கு முன் கடந்த புதுவருட தினத்தன்று கொக்குவில் காந்தி சனசமூக நிலையத்தில் வாளேந்திய இளைஞர்கள் அட்டகாசம் செய்துள்ளார்கள். தாங்கள் அங்கு வரப்போவத…
-
- 0 replies
- 473 views
-
-
பொறுப்புக் கூறல் சாத்தியமா? பி.மாணிக்கவாசகம்… January 19, 2019 மனித உரிமை மீறல்களுக்கு அரசாங்கம் எவ்வாறு பொறுப்பு கூறப் போகின்றது என்பது, பிறந்துள்ள புதிய ஆண்டில் எழுந்துள்ள பல்வேறு கேள்விகளில், அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டிய அவசியத் தேவையைக் கொண்டுள்ள தமிழர் தரப்பு அரசியலிலும் கூர்மையான விடயமாகக் கருதப்படுகின்றது. மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐநாவின் மனி;த உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை விவகாரம் முன்னெப்போதும் இல்லாத அளவில் சூடு பிடித்திருக்கும் என்பதே இதற்கான காரணமாகும். யுத்தம் முடிவுக்கு வந்து கிட்டத்தட்ட ஒரு தசாப்தமாகின்றது. ஆனால், யுத்தகாலத்தில்; குறிப்பாக இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இ…
-
- 0 replies
- 900 views
-
-
யார் வேட்பாளர்? சூடுபிடிக்கும் போட்டி கே. சஞ்சயன் / 2019 ஜனவரி 18 வெள்ளிக்கிழமை, மு.ப. 04:33 இந்த ஆண்டில் நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தான், கொழும்பு அரசியல் களத்தில், சூடான விவாதப்பொருளாக இருக்கிறது. இந்தத் தேர்தலில் களமிறங்கப் போகிறவர்கள் யார், யாருக்கும் யாருக்கும் நேரடிப் போட்டி? என்பதை மய்யப்படுத்தியே இப்போது, அதிக செய்திகள் வெளிவருகின்றன. இப்போதைய அரசியல் களத்தில், மூன்று பிரதான தரப்புகள் இருக்கின்றன. ஐக்கிய தேசியக் கட்சி. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுன ஆகியவையே அவை. ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ரணில் விக்கிரமசிங்க, கரு ஜயசூரிய, சஜித் பிரேமதாஸ ஆகியோரில் ஒருவர் போட்டியில் இறங்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அடுத்த ஜனாதிபதி வ…
-
- 0 replies
- 754 views
-
-
பிரெக்ஸிட்: அடுத்தது என்ன? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 ஜனவரி 17 வியாழக்கிழமை, மு.ப. 12:54 உறவுகள் எப்போதுமே தனிச்சிறப்பு வாய்ந்தவை. அவை உருவாகும் போது ஏற்படும் மகிழ்ச்சியை விட, அவை பிரியும் போது ஏற்படும் வலியும் அந்தரமும் நிச்சயமின்மையும் அச்சமூட்டுவன. இந்த அச்சமே, பல உறவுகள் பிரியாமல் இருப்பதற்குக் காரணமாகின்றன என்று நம்புபவர்கள் இருக்கிறார்கள்; சேர்வதும் பிரிவதும் இயற்கை என்று கருதுபவர்களும் இருக்கிறார்கள். ஆனாலும், பிரிவென்பது கடினமானது. இந்த ஆண்டின் முதலாவது நெருக்கடி, நேற்று முன்தினம் அரங்கேறி இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான திட்டத்தை, பிரித்தானிய நாடாளுமன்றம் நிராகரித்து இருக்கின்றது. …
-
- 0 replies
- 967 views
-
-
மொழியாலும் ஆக்கிரமிக்கின்றதா சீனா? இலங்கையர்களும் சீன மொழியைக் கற்க வேண்டிய தேவை ஏற்படுமோ ? ஆசிய பொலிஸ்காரனாகும் சகல தகுதிகளும் சீனாவுக்கு இருக்கின்றது. அந்த இடத்தைப்பிடிப்பதற்குரிய தகுதி இன்னும் இந்தியாவுக்கு இருக்கின்றதா என்றால் சந்தேகமே. சகல துறைகளிலும் இன்று ஆசியாவில் முதலிடத்திலிருக்கும் சீனா அமெரிக்காவிற்கு சவாலாக உருவெடுத்துள்ளது. எவ்வாறு ஒரு நாட்டிற்குள் உட்புகுந்து அந்நாட்டின் சகல விடயங்களையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்பதை சீனாவிடம் தான் கற்க வேண்டும். சீனாவின் ஆக்கிரமிப்பு ஒரு நாட்டின் பொருளாதார சந்தை மட்டுமல்ல மொழி,கலாசாரம், அரசியல் ஆகியவற்றிலும் அது தனது கையை ஓங்கச்செய்துள்ளது என்பது இலங்கையைப்பொறுத்தவரை பொருத்தமாகத்தான் …
-
- 0 replies
- 676 views
-
-
போருக்குப் பின்னான தமிழர் அரசியல் வரலாற்றில் இது மிகவும் முக்கியமான காலக் கட்டமாகும். எங்கள் நாடாளுமன்ற அரசியல் அரங்கின் மிக முக்கியமான புதிய அரசியல் அமைப்பு போட்டி ஆரம்பிக்கவுள்ளது. இதுவே இலங்கைத் தீவின் சுதந்திரத்துக்கும் ஒற்றுமைக்கான கடைசிச் சந்தர்பமாகும். நாம் விரும்பினால் என்ன விரும்பா விட்டால் என்ன தமிழ் தேசியக் கூட்டமைபினர் மட்டுமே எங்களுக்காக கழம் இறங்க மக்கள் ஆணையை பெற்றிருக்கிறார்கள். இதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனால் நாம் விரும்பினால் என்ன விரும்பாவிட்டால் என்ன இந்த புதிய அரசமைப்பு சுற்றில் நாம் கூட்டமைப்பை அதரித்தே ஆகவேண்டும். ஆதலால் தயவு செய்து என்னுடன் சேர்ந்து சுமந்திரன் உட்பட அனைத்துக் கூட்டமைப்பினர் மீதுமான விமர்சங்களை சில மாதங்களுக்கு இடை நிறுத்தி …
-
- 0 replies
- 1.4k views
-
-
சதிப்புரட்சியின் தோல்வியில் கோட்டாபயவின் எழுச்சி புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஜனவரி 16 புதன்கிழமை, மு.ப. 06:35 கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தும் உரையாடல்கள் மீண்டும் ஆரம்பித்திருக்கின்றன. கடந்த காலத்தைப் போலல்லாது, இம்முறை அந்த உரையாடல்கள் அடுத்த கட்டத்தை எட்டியிருக்கின்றன. நாட்டு மக்கள் விரும்பினால், ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவதற்குத் தான் தயாராக இருப்பதாக, அவர் கடந்த வாரம் வெளிப்படையாக அறிவித்திருக்கின்றார். கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக, ஜனாதிபதி வேட்பாளர் பற்றிய உரையாடல்களில் கோட்டாபயவின் பெயர் உச்சரிக்கப்பட்டு வந்திருக்கின்றது. அதற்காகவே, ‘வியத்கம’ என்கிற அமைப்பும் உருவாக்கப்பட்டது. ஆனாலும், தன்னுடைய விரு…
-
- 0 replies
- 729 views
-
-
முஸ்லிம் சமூகமும் உணர்ச்சி அரசியலும் முகம்மது தம்பி மரைக்கார் / 2019 ஜனவரி 15 செவ்வாய்க்கிழமை, பி.ப. 04:17 அரசியல் என்பது விஞ்ஞானமாகும். அதனால், அது அறிவுபூர்மாக அணுக வேண்டிய விவகாரமாகவுள்ளது. மறுபுறம், அரசியலை கலை என்றும் சில அறிஞர்கள் கூறுகின்றனர். சிலருக்கு அரசியல் வியாபாரமாகும். சிலருக்கு அதுவே முழுநேரத் தொழிலாகவும் இருக்கிறது. அரசியலை விஞ்ஞானபூர்வமானதொரு விடயமாக விளங்கிக் கொண்டவர்கள், அதை அறிவு ரீதியாக அணுகுவார்கள். அரசியலை உணர்வுபூர்வமான விடயமாக மட்டுமே புரிந்து வைத்திருப்பவர்களுக்கு, அவர்களின் விருப்பத்துக்குரிய கட்சி, “மதம்” போல் இருக்கும். அரசியலை முற்றுமுழுதாகவே, உணர்வுபூர்வமாக அணுகும் சமூகம், தனக்கான விடிவைப் பெற்றுக் கொள்வது சாத்தியமில்லை. …
-
- 0 replies
- 1k views
-
-
சம்பந்தரின் கோரிக்கையும் சம்பந்தருக்கான கோரிக்கையும் காரை துர்க்கா / 2019 ஜனவரி 15 செவ்வாய்க்கிழமை, பி.ப. 04:04 Comments - 0 நாட்டில் மீண்டும் ஒரு குருதிக்களரி ஏற்படாமல் இருக்க வேண்டுமெனின் புதிய அரசமைப்பு உருவாக வேண்டும். இனவாதத்தைக் கக்காமல், பிரிவினையை ஏற்படுத்தாமல் மைத்திரி, ரணில், மஹிந்த தரப்புகளைச் சேர்ந்தோர்; ஓரணியில் நின்று, புதிய அரசமைப்பு வெற்றி பெற உழைக்க வேண்டும். இவ்வாறாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். எந்தத்தடைகள் வந்தாலும் அதைத் தகர்த்தெறிந்து, முழுமூச்சுடன் பயணிப்போம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தரப் பகைவனு…
-
- 0 replies
- 516 views
-
-
அமைச்சர் பதவி என்ற ' பரிசு' கடந்த வருட இறுதியில் மூண்ட அரசியல் நெருக்கடியில் இருந்து பெரும் போராட்டத்துக்குப் பிறகு மீண்டும் பிரதமர் பதவிக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க எதிர்நோக்குகின்ற பெரும் பிரச்சினைகளில் ஒன்று அமைச்சர் பதவி தங்களுக்கு தரப்படவில்லை என்பதால் குமுறிக்கொண்டிருக்கின்ற தனது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சமாளிக்கமுடியாமல் இருப்பது ஆகும். அரசியல் நெருக்கடியின்போது மறுதரப்புக்கு தாவாமல் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக நின்றதற்காக தங்களை அமைச்சர்களாக்க வேண்டும் என்று அவர்களில் பலர் பகிரங்கமாகவே கேட்டிருக்கிறார்கள். வெகுவிரைவில் பதவி தரப்படாவிட்டால் ' கடுமையான முடிவை ' எடுக்கவேண்டிவரும் என்று எச்சரிக்கை விடுப்பதற்கும் அந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தய…
-
- 0 replies
- 630 views
-
-
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கிறது அரசியலமைப்பு வரைவு - பி.கே.பாலச்சந்திரன் இலங்கை பாராளுமன்றத்தில் கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பு சபையின் வழிநடத்தல் குழுவின் நிபுணர் குழுவின் அறிக்கை சகல வல்லமையும் பொருந்திய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழித்து அதற்குப் பதிலாக பலம்பொருந்திய பிரதமரையும் சம்பிரதாயபூர்வமான ஜனாதிபதியையும் கொண்ட வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்ற ஆட்சிமுறையை விதந்துரைக்கிறது. அரசியலமைப்பு வரைவு என்று வர்ணிக்கப்படக்கூடிய இந்த அறிக்கையின் பிரகாரம் ஜனாதிபதி மக்களினால் நேரடியாகத் தெரிவுசெய்யப்படமாட்டார். பதிலாக இரு சபைகளைக்கொண்ட சட்டவாக்கசபையினால் ( 233 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தினாலும் 55 உறுப்பினர்களைக…
-
- 0 replies
- 1.1k views
-
-
புதிய நகல் யாப்பு - பாகம்1 ================== வை எல் எஸ் ஹமீட் நிபுணர்களின் அறிக்கை என்ற பெயரில் புதிய நகல் யாப்பு கடந்த 11/01/2019 அன்று அரசியலமைப்பு சபையில் வெளியிடப் பட்டிருக்கின்றது. இதிலுள்ள மிகவும் முக்கியமான அம்சம் “ இலங்கை சமஷ்டித் தன்மை” உள்ள நாடு என்பதாகும். ஆனால் “சமஷ்டி “ என்ற சொல் பாவிக்கப்படவில்லை. எனவே, தமிழ் மக்கள் மத்தியில் இது சமஷ்டி இல்லை; என்றவொரு கருத்து விதைக்கப்படுகின்றது. மறுபுறம் “ ஒற்றையாட்சி “ என்ற அர்த்தத்தைக் கொடுக்கக்கூடிய “ ஏக்கியராஜ்ய” என்ற சிங்களச் சொல் பாவிக்கப்பட்டிருக்கின்றது. இதன்மூலம் இது ஒற்றையாட்சிதான் என்று சிங்கள மக்களை ஏமாற்ற ஒரு முயற்சி எடுக்கப்படுகின்றது. ஆனால் புதிய நகல் யாப்பின் உள்ளடக்கம் அதியுச்ச சமஷ்டியாகும். …
-
- 0 replies
- 811 views
-
-
சுன்னத் முதல் இறைச்சி வரை - ஐரோப்பிய இஸ்லாமியர்களும் யூதர்களும் இணையும் புள்ளி எது? ஐரோப்பாவின் இஸ்லாமியர்களும், யூதர்களும் இதற்கு முன் ஒன்று சேராமல் இருந்திருக்கலாம். ஆனால் சமீப காலமாக தங்களுடைய மத நம்பிக்கை சுதந்திரத்தைப் பாதிக்கும் சட்டங்களை எதிர்ப்பதற்கு அவர்கள் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். பெல்ஜியம் நாட்டில் ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ள சட்டம் சமீபத்திய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விலங்குகளைக் கொல்வதைப் பாதிக்கும் வகையில் இது அமைந்துள்ளது. கோஷெர் மற்றும் ஹலால் மாமிசத்துக்கு உரிய நம்பிக்கைகள இது பாதிக்கிறது. விலங்குகள் உரிமை இயக்கத்தினர் நீண்டகாலமாகவே இந்தச் சட்டம் வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். ஆனால் சுதந்திரத்துக்கான செயல் …
-
- 0 replies
- 763 views
-
-
அரசியலமைப்பு சபையின் வழிநடத்தல் குழுவின் நிபுணர்குழு அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வீ.தனபாலசிங்கம் கடந்த வெள்ளிக்கிழமை அரசியலமைப்பு சபைபயில் அதன் வழிநடத்தல் குழுவின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிபுணர் குழுவின் ஐந்து அறிக்கைகளைச் சமர்ப்பித்து உரையாற்றியபோது புதிய அரசியலமைப்பை வரைவது தொடர்பில் அடுத்து முன்னெடுக்கப்பட வேண்டிய செயன்முறைகளைத் தீர்மானிப்பது அரசியலமைப்புச் சபையின் பொறுப்பு என்று குறிப்பிட்டார். தனது தலைமையிலான வழிநடத்தல் குழு அதன் பணீயை பூர்த்திசெய்துவிட்டது என்று கூறிய அவர் நிபுணர் குழுவின் அறிக்கையில் உள்ளடங்கியுள்ள விடயங்களில் சகல கட்சிகளினாலும் இணக்கப்பாட்டுக்கு வரக்கூடிய விடயங்களைத் தெரிவுசெய்து கருத்தொருமிப்புக்கு வந்து அ…
-
- 0 replies
- 557 views
-
-
புலம்பெயர்ந்த தமிழர் தொடர்பாகப் பரப்பப்படும் புரளிகளை நம்ப வேண்டாம். - வ.ஐ.ச.ஜெயபாலன் --------------------------------------------------------------------------------- ”மீண்டும் வன்முறையை ஏற்படுத்த. பாதாளக் குழுவினரின் ஆதரவைப் பெற புலம் பெயர் தமிழர்கள் முயற்ச்சி” என புதிய புரளி ஒன்று கிளப்பப் படுகிரது. நான் அறிந்தவரைக்கும் இது உள்நோக்கமுள்ள பொய்ப் பிரசாரமாகும். . இது உண்மையான கதையல்ல. புலம் பெயர் தமிழ் சக்திகளில் பெரும்பாலானவர்கள் சர்வதேச நாடுகளில் முக்கிய பொறுப்புகளிலும் அரசியல் தலைமைகளிலும் இருக்கிறார்கள். அவர்கள் சர்வதேச வரண்முறைகளுக்குக் கட்டுப்பட்டு செயல்பட முழு உரிமையும் கொண்டுள்ளவர்கள்.. அவர்கள்ளில் பலர் பாலத்தீனிய அகதிகள்போல போர்குற்றங்களால் நேரட…
-
- 1 reply
- 1.2k views
-
-
தொல்நிலம் – போகன் சங்கர் வரலாறு எப்போதும் மையம் நோக்கிக் குவிகிறது. வரலாறு மையத்தில் உள்ளோர் நோக்கிச் சாய்வது. இலக்கியமோ வெளிநோக்கிச் சரிவது. அதிலும் முன்னதும் பின்னதும் உண்டு. உரத்ததும் மெலிந்ததும் உண்டு. இலக்கியத்தின் வகைகளிலும் கவிதையே மறக்கப்பட்டவர்களின் குரலாக இருக்கிறது. ஆப்பிரிக்க – அமெரிக்க கறுப்பினத்தவர் துயரங்கள் இலக்கியத்தில் இன்று புறக்கணிக்கப்படாத ஒரு வகை. அங்கிள் டாமின் கேபின் இன்றைக்குப் பாட நூல்களில் ஒன்று. ஒரு சமூகத்தின் பாட நூல்கள் என்பது அந்தச் சமூகம் எந்தெந்தக் குரல்களை அனுமதிக்கிறது என்பதற்கான ஒரு சாட்சியாகும். ஒருவகையில் அது பெரும்போக்குச் சரித்திரத்துக்கான நுழைவுச் சீட்டு. ஆனால் இன்னமும் இலக்கியத்தின் தெருக்களில் கூட …
-
- 0 replies
- 1.5k views
-
-
புதிய ஆளுநர்கள் – புதிய வியூகம்? நிலாந்தன் January 13, 2019 மாகாண ஆளுனர் எனப்படுபவர் அரசுத் தலைவரின் முகவரைப் போன்றவர். இலங்கைத் தீவின் மாகாணக் கட்டமைப்பைப் பொறுத்தவரை அவர் கொழும்பு மைய அரசாங்கத்தின் நலன்களைப் பேணும் ஒருவர். எனவே ஓர் ஆளுனரைப்பற்றி மதிப்பிடுவதென்றால் முதலில் அவரை நியமிக்கும் அரசுத் தலைவரை மதிப்பிட வேண்டும். அவருடைய அரசியல் இலக்குகள் எவையெவை என்று மதிப்பிட வேண்டும். மைத்திரிபால சிறிசேன இன்னமும் ஓர் ஆண்டு வரை தான் பதவியிலிருக்கப் போகிறார். கடந்த ஒக்ரோபர் மாதம் அவர் ஆட்சிக் கவிழ்ப்பு ஒன்றைச் செய்திருந்தார். அதில் அவர் தனக்கு வாக்களித்த சிங்கள தமிழ் முஸ்லிம் மக்களுக்குப் பொறுப்புக் கூறும் விதத்தில் நடந்து கொள்ளவில்லை. அவர…
-
- 0 replies
- 865 views
-
-
மைத்திரி – 2015 – 2018 யதீந்திரா மைத்திரி ஏன் இவ்வாறு நடந்துகொள்கின்றார்? மைத்திரியின் அண்மைக்கால நடவடிக்கைகளை முன்னிறுத்தி சிந்திக்கும் ஒருவரிடம், இவ்வாறானதொரு கேள்வி எழுவது இயல்பே! அதிலும் குறிப்பாக தமிழர்கள் மத்தியில் இவ்வாறான கேள்வி சற்று ஆவேசமாகவே எழுகிறது. சில தினங்களுக்கு முன்னர் ஹிஸ்புல்லா கிழக்கு மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் கிழக்கு தமிழர்கள் மத்தியில் ஆங்காங்கே அதிருப்தி வெளிப்படுவதை காணக்கூடியதாக இருக்கிறது. கடந்த காலங்களில் ஹிஸ்புல்லா தெரிவித்திருந்த சில அபிப்பிராயங்களை பலரும் முகநூலில் பதிவிட்டிருந்தனர். கூட்டமைப்பின் மீதுள்ள கோபத்தின் காரணமாகவே மைத்தரி இவ்வாறானதொரு நியமனத்தை செய்திருக்கிறார் என்பது கூட்டமைப்பைச் சேர்ந்த சிலரது அபிப்பிராயமா…
-
- 0 replies
- 859 views
-
-
ஜனாதிபதி தேர்தலையும் பாராளுமன்றத் தேர்தலையும் ஒரே நாளில் நடத்துவது குறித்து யோசனை முன்வைப்பு - கலாநிதி எஸ்.ஐ.கீதபொன்கலன் கலப்பு அரசாங்கங்களுடனான இலங்கையின் பரிசோதனை துயர்மிகுந்த தோல்வியாக முடிந்துவிட்டது. ஜனாதிபதி ஒரு கட்சியைச் சேர்ந்தவராகவும் நிருவாகம் அல்லது அமைச்சரவை வேறு கட்சியை ( அல்லது ஒரு கூட்டணியை) சேர்ந்தவர்களைக் கொண்டதாக இருப்பதையுமே இங்கு நான் கலப்பு அரசாங்கம் என்று குறிப்பிடுகிறேன். இரண்டாவது குடியரசு அரசியலமைப்பின் கீழ் நாடு மூன்று கலப்பு அரசாங்கங்களைக் கண்டிருக்கிறது. (1) விஜேதுங்க -குமாரதுங்க நிருவாகம், (2) குமாரதுங்க - விக்கிரமசிங்க நிருவாகம், (3) சிறிசேன - விக்கிரமசிங்க நிருவாகம். கலப்பு அரசாங்கங்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் எழுச்ச…
-
- 0 replies
- 489 views
-
-
சுமந்திரனை எதிர்த்தல் எனும் போதை Gopikrishna Kanagalingam / 2019 ஜனவரி 10 வியாழக்கிழமை, மு.ப. 10:53 இலங்கை அரசியலை ஓரளவுக்குக் கவனித்து வருபவர்கள் அனைவருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் மீதான எதிர்ப்புகள் நிச்சயமாகத் தெரிந்திருக்கும். தமிழ்த் தேசிய அரசியல் வெளியில் வெறுக்கப்படுகின்ற டக்ளஸ் தேவானந்தாவுக்குக் கிடைக்காத மீடிறனில், சுமந்திரன் மீதான எதிர்ப்புகள் கிடைத்து வருகின்றன. இந்த எதிர்ப்புகள், தேவையான நேரங்களில் கேலிகளாகவும் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இரண்டாயிரத்துப் பதினைந்தாம் (2015) ஆண்டு, இலங்கை அரசியலில் பாரிய மாற்றமொன்று ஏற்படுவதற்கு முன்பும், சுமந்திரன் இந்த எதிர்ப்பும் கேலி…
-
- 3 replies
- 1.2k views
-