அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
கேழ்வியும் பதிலும்..SA Jothi to Jaya Palan கூட்டமைப்புக்கு சொந்தமாக தீர்மானம் எடுக்கும் அதிகாரம் இருக்கிறதா?ஜெயபாலன்..Jaya Palan to SA Jothi ஒரு நாய் யாருக்கு வாலாட்டுகிறது என்பது முக்கியமல்ல நண்பா அது தன் எசமானை காப்பற்றுதா என்பதுதான் முக்கியம். எங்கள் நாயகர்கள் உலகம் முழுக்க வாலாட்டியும் எங்கள் எசமான்கள் இன்னும் கொடுஞ்சிறையில். இனியும் பட முடியாது இத்துயரம்.
-
- 0 replies
- 453 views
-
-
பாலைவனத்துக்கான பயணமா, பால்நிலவுக்கான பயணமா? காரை துர்க்கா / 2018 நவம்பர் 27 செவ்வாய்க்கிழமை, மு.ப. 01:41 Comments - 0 நல்ல உறவு (நல்லுறவு) என்பது மற்றவர்களுடன் ஏற்படுத்திக் கொள்கின்ற கட்டாய ஒப்பந்தம் அல்ல. மாறாக, அது இயல்பாக விரும்பி, மனதில் தோன்ற வேண்டிய ‘புனித உறவு’ ஆகும். ஆனால், 2015ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் திகதி தொடக்கம், கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி வரை, ‘நல்லாட்சி’ என்ற ஒற்றை வார்த்தை, மலிந்து காணப்பட்ட சொல் ஆகும். அவர்கள், வலிந்து ஏற்படுத்திய உறவு என்பதால்தான், நல்லுறவும் நல்லாட்சியும் இன்று வலுவிழந்து விட்டது. இவ்வகையில், இலங்கை அரசியலில், கடந்த ஒரு மாத காலமாகப் பல ‘அசிங்கங்கள்’ அரங்கேறி வருகின்றன. பேரினவாதப் பெருந் தேசியக் கட்சிகள் இர…
-
- 0 replies
- 759 views
-
-
இலங்கையில் நடப்பது மக்களாட்சியா(ஜனநாயகமா), இல்லையா? என்கிற குழப்பத்துக்குள் கொழும்பு அரசியல் சிக்கிக் கொண்டிருக்கையில் தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வருகின்ற ஒரு பெயர் வேலுப்பிள்ளை பிரபாகரன். அவர் இருந்திருந்தால் கொழும்பில் இன்று இந்தப் பிரளயம் எதுவும் நிகழந்திருக்க வாய்ப்பேயில்லை என்பதைச் சிங்களவர்களே ஏற்றுக்கொள்கிறார்கள். அந்தளவுக்கு ஒட்டுமொத்த இலங்கையின் அரசியலையும் தீர்மானிக்கும் அசாத்திய மனிதனாக வரலாற்றில் தன்னை ஆழமாகப் பதித்த ஒரு தலைவன் பிரபாகரன். எண்ணிக்கையில் மிகச் சிறிய ஒரு மக்கள் கூட்டத்தின் மத்தியில் இருந்து முகிழ்த்து, ஒட்டுமொத்த உலகத்தையு…
-
- 0 replies
- 863 views
-
-
o Siritharan MP. நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கு நண்பரே . தங்களது நிலைபாட்டின் உறுதியிலேயே தமிழ் அரசியல் கைதிகளின் இரத்தக் கண்ணீர் துடைக்கப்படுகிற விதி பிணைக்கபட்டுள்ளது என்பதை ஒருபோதும் மறக்க வேண்டாம். ஏற்கனவே கையொப்பமிட்டிருந்தாலும் நிபந்தனையை இணைக்காவிட்டால் திரும்ப பெற்றுவிடுங்கள். . இன்றைய அரசியல் சிக்கலில் முள்ளிவாய்க்கால மகிந்தவை எதிர்த்து வாகளிப்பது மட்டுமே மட்டுமே ஏற்றுக்கொள்ளபட முடியும். மற்றும்படி அதிபர் சிறீசேன ரணில் மோதலில் நிபந்தனையற்ற ஆதரவு தமிழ் மக்களின் நலனுக்கு எதிரான துரோகச் செயலாகும். கடந்த கால அரசியலில் காணி விடுப்பு கைதிகள் விடுதலை போன்ற விடயங்களில் சிறிசேனவைவிடவும் ரணில் கடும்போக்காளராக இருந்தார். இதை எப்படி மறப்பது? இதை எப்படி மன்னிப்ப…
-
- 0 replies
- 523 views
-
-
மாற்று அணி உடையுமா? ஒட்டுமா? – நிலாந்தன் November 25, 2018 தமிழகத்தைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார். இங்கு நடந்த சந்திப்புக்களில் அவர் ஒரு விடயத்தை அழுத்தமாகக் கூறினார். இப்போதைக்கு ஈழத்தமிழர்களுக்கு கையாளக் கூடிய ஒரே அரசியல் வெளியாக காணப்படுவது பிரதிநிதித்துவ ஜனநாயக வெளிதான். இந்தப்பரப்பில் தங்களது பேரம் பேசும் பலத்தை அதிகரிப்பதன் மூலம் தான் ஈழத்தமிழர்கள் அடுத்தடுத்தக் கட்டங்களுக்கு முன்னேறிச் செல்லலாம் என்று. மேலும் அவர் ‘இப்போது அரங்கிலுள்ள பெரும்பாலான சக்திகள் Spent Forces தீர்ந்துபோன சக்திகள்’ என்றும் தெரிவித்தார். இப்படிப்பட்ட தீர்ந்து போன சக்தி…
-
- 3 replies
- 1.1k views
-
-
முதலாவதாக, பாரளுமன்றம் என்றால் என்ன என்பதை யாவரும் அறிந்திருக்க வேண்டும். பிரஞ்சுமொழியில் பார்ல்(parler)பேசு, கதை, போன்ற அர்தமுள்ள சொல்லிருந்து (parliement) பாரளுமன்றம் என்றசொல், 11ம் நூற்றாண்டில் பிரான்ஸில் உருவனது இதனை தொடர்ந்து ஆங்கில நோமன் பிரெஞ்சு காலப் பகுதியான 14ம் நூற்றாண்டில், (parliament) பாரளுமன்றம் என்றசொல் ஆங்கிலத்தில் பிரித்தானியாவில் பாவனைக்கு வந்துள்ளது. இவ்வேளையில் பாரளுமன்றத்தின் நடப்புக்களை கடமைகளை நாம் உலகளாவிய ரீதியில் ஆராய்வோமானால் - பாரளுமன்றத்திற்கு தெரிவாகும் மக்கள் பிரதிநிதிகள, அவர்களது நாட்டு மக்களின் பாதுகாப்பு பொதுநலன்களை மனதில்கொண்டு, விவாதங்கள் பேச்சுவார்த்தைகளை அடிப்படையில் சட்டங்களை வகுப்பதுடன், ஆண்டுதோறும் நாட்டிற்குரிய வரவுசெலவுவிற்…
-
- 0 replies
- 526 views
-
-
தென்கிழக்கு பல்கலைக் கழக உப வேந்தருக்கு. . மதிப்புக்குரிய உபவேந்தருக்கு, ஐயா சிங்கள மாணவர்களின் அமையாமை தொடர்பான குழப்பங்களால் கடந்த ஒக்டோபர் 24ம் திகதி மூடபட்ட தொழில் நுட்ப்ப மற்றும் வியாபார முகாமைத்துவ பீடங்கள் எதிர்வரும் 26ம் திகதி மீண்டும் திறக்கப்படுமென அறிக்கப்பட்டுள்ளது. . அரசாங்கம் செயலிழந்து நாட்டில் அரசியல் நெருக்கடி தீவிரமாகும் நிலையில் சிங்கள முஸ்லிம் உறவுகள் தெளிவற்றிருக்கும் சூழலில் இன்னும் சற்று பொறுத்திருக்கலாம். எனத் தோன்றுகிறது. . நாட்டில் சிங்கள முஸ்லிம் உறவுகள் கொதிநிலையைநோக்கி உயர்ந்து செல்கையில் தென்கிழக்கு பல்கலைக் கழகம் ஒரு முடிவை எடுத்திருக்கிறது. அதனால் முன்னைவிட அதிகரித்த நிதானத்துடனும் கூடிய விட்டுக்கொடுப்புடனும் பல்…
-
- 0 replies
- 661 views
-
-
ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரியை மகிந்த உறுதிப்படுத்துவாரா? அக்டோபர் பிற்பகுதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சர்ச்சைக்குரிய முறையில் பதவி நீக்கப்படுவதற்கு முன்னதாக இலங்கையில் அரசியல் விவாதத்தின் கவனம் பொதுவில் அடுத்து நடைபெறவேண்டிய ( அடுத்த வருடம் இந்த நேரத்தில் அதற்கான அறிவிப்பு அனேகமாக வெளியிடப்பட்டிருக்கும்) தேசியத் தேர்தலான ஜனாதிபதி தேர்தல் மீதே குவிந்திருந்தது. கடந்த பெப்ரவரியில் உள்ளூராட்சி தேர்தலில் பெருவெற்றியைப் பெற்றதைப் போன்று மீண்டும் சாதித்துக்காட்ட முடியும் என்ற நம்பிக்கையில் கூட்டு எதிரணியினர் மாகாணசபைத் தேர்தல்களைப் பற்றி ஆரவாரமாகப் பேசினார்கள். தங்களின் செல்வாக்கு பலவீனமாக உள்ள வடக்கு, கிழக்கு மாகாண…
-
- 0 replies
- 547 views
-
-
1978 நவம்பர் 23ம் திகதி. ஒரு பெருங்காற்று கிழக்கு மண்ணை துகிலுரித்த நாள். குறிப்பாக மட்டக்களப்பு மண்ணை 'சூறாவளி' என்ற அரக்கன் அரைகுறையாக அழித்த சம்பவம் இன்றைக்கும் பலரால் நினைவுகூறப்பட்டுக்கொண்டிருக்கின்றது. நவம்பர் 23ம் திகதி இரவு முழுவதும் வீசிய அந்த கொடூரமான புயல்காற்றில் அகப்பட்டு சுமார் 1000 இற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். 10 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டார்கள். கிட்டத்தட்ட 250,000 வீடுகள் முற்றாக அழிக்கப்பட்டன அல்லது கடுமையாக சேதமாக்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டத்தின் 20சதவீதமான மீன்பிடிப் படகுகள் அழிக்கப்பட்டன. சுமார் 28 ஆயிரம் தென்னஞ்செய்கையில் 90 வீதமானவை முற்றாகவே அழிவடைந்தன. 240 பாடசாலைகள், 90 நெற்களஞ்சியங்கள் சே…
-
- 0 replies
- 544 views
-
-
OPEN LATTER FOR SAMPANTHAN AIYA சம்பந்தன் ஐயாவுக்கு திறந்த கடிதம். - வ.ஐ.ச.ஜெயபாலன் . மதிப்புக்குரிய சம்பந்தன் ஐயா, நாடாளு மன்றில் மகிந்தவுக்கு எதிராக வாக்களியுங்கள். ஆனால் அரசியல் கைதிகளின் உடனடி விடுதலை உட்பட்ட வாக்குறுதிகள் பெறாமல் ரணிலுக்கு வாக்களிக்க வேண்டாம். அத்தகைய துரோகத்துக்கு இடமளிக்கவும் வேண்டாம். அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு போன்ற பிரச்சினைகளில் ரணில் கடும்போக்காளராக இருந்தார் என்பதை தயவு செய்து நினைவுகூரவும்.
-
- 3 replies
- 862 views
-
-
பரபரப்பாக்கும் ‘மறுத்தான்’ ஆட்டங்கள் கே. சஞ்சயன் / 2018 நவம்பர் 23 வெள்ளிக்கிழமை, மு.ப. 06:35 கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி மாலை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ‘பிள்ளையார் சுழி’ போடப்பட்ட அரசியல் குழப்பங்கள், நாடாளுமன்றத்துக்கு உள்ளே தான், பலமாக எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, நாடாளுமன்றத்தையும் கலைத்து விட்டால், எல்லாத் தடைகளும் நீங்கி விடும், புதிதாகத் தேர்தலை நடத்தி, ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று போடப்பட்ட திட்டம், இப்போது முட்டுச்சந்தியில் வந்து நிற்கிறது. மஹிந்த - மைத்திரி தரப்புக்கு, அங்குமிங்குமாக எங்கு திரும்பினாலும், ஒரு முட்டுக்கட்டை வந்து விடுகிறது. நாடாளுமன்றத்துக்கு…
-
- 0 replies
- 599 views
-
-
பிரதமர் பதவிக்கு உரிமைகோரும் இருவரும் மெய்யான அரசியல் தெரிவின்றி தடுமாறும் இலங்கையும் ரோஹினி மோகன் கொழும்பில் லிபேர்ட்டி சினிமாவுக்கும் பிரமாண்டமான கடைத்தொகுதிக்கும் முன்பாக போக்குவரத்துச் சுற்றுவட்டத்தில் கடந்த மூன்று வாரங்களாக தினமும் மாலைவேளையில் மக்கள் கூட்டமொன்று குழுமிநிற்கின்றது. ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் தமிழிலும் கையால் எழுதப்பட்ட சுலோகங்களைக் கொண்ட பதாகைகளை அவர்கள் வைத்திருக்கிறார்கள்.' இதற்காக நாம் வாக்களிக்கவில்லை ' என்று ஒரு பதாகையில் எழுதப்பட்டிருந்தது. ' ஜனநாயகம் விற்பனைக்கு அல்ல ' என்றது இன்னொரு பதாகை. அந்தக் கூட்டத்தவர்களில் சட்டத்தரணிகள், நாடக கலைஞர்கள், அனுபவம்வாய்ந்த அரசியல் மற்றும் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் மாத…
-
- 0 replies
- 543 views
-
-
TO MY DEAREST J.V.P COMRADE - V.I.S.JAYAPALAN POET அன்புகுரிய ஜெ.வி.பி தோழர்களுக்கு. - - வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன். . எனது ஜெ.வி.பி தோழர்களிடம் ஒரு தாழ்மையான விண்ணப்பம். ஜனநாயகத்தைக் காப்பாற்ற தமிழ் தேசிய கூட்டமைப்புடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றுங்கள். அரசியல் கைதிகளின் விடுதலைக்கான எங்கள் இணைந்த போராட்டமின்றி ஜனநாயகத்துக்கு எந்த அர்த்தமுமில்லை. . நாங்கள் வெற்றியே பெறுவோம்.
-
- 0 replies
- 510 views
-
-
இலங்கையின் ட்ரம்ப் தான் சிறிசேன Gopikrishna Kanagalingam / 2018 நவம்பர் 22 வியாழக்கிழமை, மு.ப. 01:57Comments - 0 இவ்வாண்டு ஜூன் முதலாம் திகதி, இப்பத்தியாளரின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கில், “மைத்திரிபால சிறிசேனவின் அண்மைய கருத்துகளைப் பார்க்கும் போது, எனது நண்பர்களுக்கு நான் வழக்கமாகச் சொல்வதைத் தான் என்னால் சொல்ல முடியும்: மைத்திரிபால சிறிசேன என்பவர், [ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி] ட்ரம்ப்பின் இன்னொரு வடிவம். கொள்கைகள் பற்றி இருவருக்கும் எதுவும் தெரியாது; இருவரையும் சுற்றி, திறனில்லாத அலுவலர்கள் இருக்கிறார்கள்; அத்தோடு அவர்களிருவரும் சர்வாதிகாரிகளாக மாற விரும்புகின்றனர்” என்று பதிவுசெய்யப்பட்டது. இக்கருத்து, சிறிது மிகைப்படுத்தப்பட்டது போல அப்போது தெரிந்திரு…
-
- 0 replies
- 1k views
-
-
மனித உரிமைகள்: யாருடையவை, யாருக்கானவை? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2018 நவம்பர் 22 வியாழக்கிழமை, மு.ப. 12:42 மனித உரிமைகள், இலங்கையின் முக்கிய பேசுபொருளாக, நீண்டகாலம் இருந்தன. இப்போது அதைப் பின்தள்ளிப் பல விடயங்கள் முன்னிலைக்கு வந்துள்ளன. இருந்தபோதும், உலகளாவிய ரீதியில் மனித உரிமைகள், இப்போது மீண்டும் முன்னிலைக்கு வந்துள்ளன. கடந்த சில வாரங்களில் நிகழ்ந்த நிகழ்வுகள், மனித உரிமைகள் பற்றிய புதிய கேள்விகளையும் வாதங்களையும் தோற்றுவித்துள்ளன. இவை மீண்டும் ஒருமுறை மனித உரிமைகள் யாருடையவை என்ற வினாவையும் யாருக்கானவை என்ற விவாதத்தையும் தோற்றுவித்துள்ளன. கடந்த வாரம், மியான்மாரின் ஆங் சான் சூகிக்கு வழங்கியிருந்த விருதை சர்வதேச மன்னிப்புச் சபை திரும்…
-
- 0 replies
- 642 views
-
-
DEAR Mr RANIL PRISE OF THE SUPPORT IS JUSTICE. திரு ரணில் அவர்களே ஆதரவின் விலை நீதி . OPEN LATTER TO RANIL WICKREMESINGHE FOR REQUEST HIM TO STOP BLOCKING THE RELEASE OF THE TAMIL POLITICAL PRISSINESS. 2. STOP BLOCKING THE RELEASE OF THE LANDS BELONG TO TAMILS AND MUSLIMS UNDER THE OCCUPATIONS OF THE STATE MACHINERY INCLUDING MILITARY. 3. STOP HIDING THE INFORMATION ABOUT MISSING THE TAMIL AND SINHALESE PEOPLE. PLEASE DO THE JUSTICE BEFORE ASKING SUPPORT. தமிழரின் ஆதரவை கோரும் திரு ரணில் விக்கிரமசிங்கவுக்கு பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தி திறந்த கடிதம். . கோரிக்கைகள். 1.தமிழ் அரசியல் கைதிகள் வி…
-
- 0 replies
- 516 views
-
-
மைத்திரியால் காப்பாற்றப்பட்ட தரப்புகள் புருஜோத்தமன் தங்கமயில் / 2018 நவம்பர் 21 புதன்கிழமை, மு.ப. 01:44 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம், நாட்டை நாளுக்கு நாள், அதள பாதாளத்தை நோக்கித் தள்ளிக் கொண்டிருக்கின்றது. அரசியல் ஸ்திரத்தன்மை மாத்திரமல்ல, பொருளாதாரம், நிர்வாகம் போன்ற துறைகளிலும் முடக்கம் ஏற்பட்டிருக்கின்றது. வருட இறுதியில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் குழப்பத்தால், அடுத்த வருடத்துக்கான பாதீட்டுத் திட்டம் கேள்விக்குறியாகியுள்ளது. ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக்கும் வரை, நாடாளுமன்றத்தில் எந்தவொரு சிறிய விடயத்தையும் மைத்திரியால் நிறைவேற்ற முடியாது. அதைப் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுமதிக்கமாட்…
-
- 0 replies
- 2.1k views
-
-
நவதாராளவாதத்துக்கு எதிரான இறையாண்மையைப் பரப்புதல் Editorial / 2018 நவம்பர் 20 செவ்வாய்க்கிழமை, மு.ப. 05:22 Comments - 0 - அகிலன் கதிர்காமர் மூன்று வாரங்கள் நீடித்த பரிகாசமான அரசாங்கமும் நாடாளுமன்றத்துக்குள் காணப்பட்ட மூர்க்கத்தனமான செயற்பாடுகளும், பாரதூரமான அரசியல் நெருக்கடிக்குள் நாட்டைத் தள்ளியுள்ளன. நாடாளுமன்ற ஜனநாயகம், அரசமைப்புச் சட்டபூர்வத்தன்மை ஆகியன தொடர்பான கேள்விகளிலேயே, ஊடகங்களின் கவனமும் பொதுமக்களின் கலந்துரையாடலும் கவனஞ்செலுத்துகின்ற போதிலும், இந்த நெருக்கடியின் அடிப்படையான காரணங்களாக, பல தசாப்தங்களாகத் தொடர்ந்த நவதாராளவாதப் பொருளாதாரக் கொள்கைகள் மூலமாக உருவாக்கப்பட்ட ஸ்திரமற்ற நிலைமையும் உடைமையழிப்பும் காணப்படுகின்றன. கடந்த சில வா…
-
- 0 replies
- 502 views
-
-
‘அவதந்திரம் தனக்கு அந்தரம்’ காரை துர்க்கா / 2018 நவம்பர் 20 செவ்வாய்க்கிழமை, மு.ப. 01:46 Comments - 0 ‘திருகோணமலை பன்குளத்தில் புலிகளின் கண்ணிவெடியில் சிக்கி, 11 பொலிஸார் கொல்லப்பட்டனர். மேலும் எட்டுப் பேர் காயமடைந்தனர். வவுனியா, ஓமந்தையில் படையினரின் எறிகணை வீச்சில், புலிகளில் எட்டுப் பேர் மரணமடைந்துள்ளனர்’. இவை, பத்து ஆண்டுகளுக்கு முற்பட்ட அன்றாடச் செய்திகள் ஆகும். ஆனால், நாடாளுமன்றத்தில் மஹிந்த அணியினரின் தாக்குதலில் 11 பொலிஸார் காயமடைந்தனர் என்பது, இன்றைய செய்தி ஆகும். கலைகளை வளர்க்கும் கலா மன்றங்கள், வாசிப்பு, பொது வேலைகளை ஊக்குவிக்கும் சனசமூக நிலையங்கள், கிராமங்களை அபிவிருத்தி செய்யும் கிராம அபிவிருத்தி மன்றங்கள் எனப் பல அமைப்புகள் நாட்ட…
-
- 0 replies
- 961 views
-
-
-
- 0 replies
- 685 views
-
-
உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புவரை சபைக்குள் காடைத்தனம் தொடருமா? - வீரகத்தி தனபாலசிங்கம் கடந்தவாரம் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் பாராளுமன்றத்திற்குள் நடந்தவை நாட்டு மக்கள் சகலரையும் கடுமையாகப் பாதித்திருக்கின்றன.பாராளுமன்ற செயற்பாடுகளை தொலைக்காட்சயில் நேரடி ஒலிபரப்பு செய்யும் நடைமுறை இருப்பதால் எமது பாராளுமன்ற உறுப்பினர்களில் கணிசமான பிரிவினர் கடந்த வௌள்ளிக்கிழமை சபைக்குள் முன்னென்றும் இல்லாத வகையில் கட்டவிழ்த்துவிட்ட காடைத்தனத்தை நாட்டு மக்கள் முழுமையாகப் பார்க்கக்கூடியதாக இருந்தது. அந்த பாராளுமன்ற உறுப்பினர்களைத் தங்களது பிரதிநிதிகள் என்று இனிமேலும் அழைக்க மக்கள் விரும்பவேமாட்டார்கள். சபைக்குள் காடைத்தனம் செய்பவர்கள் பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு பொ…
-
- 0 replies
- 432 views
-
-
மைத்திரியின் அளாப்பி அரசியலும் தமிழ்த் தரப்பும் Nillanthan18/11/2018 அப்பா பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் கல்வி கற்றுக்கொண்டிருந்த போதுஒரு முறை வகுப்பத்தலைவராக நியமிக்கப்பட்டார்.உதவி வகுப்புத்தலைவராகநியமிக்கப்பட்ட மாணவர் சற்று வெட்க குணமும் பெண் சுபாவமும் கொண்டவராகஇருந்தார். அத்தோடு அவர் அவரது சில குறிப்பிட்ட நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு ஆங்கிலத்தில் கதைப்பவராகவும் இருந்தார்.இந்த நடவடிக்கைகள்அப்பாவை கோபத்திற்கு ஆளாக்கியது.உடனே வகுப்பாசிரியரிடம் சென்று உதவிமாணவத்தலைவரை பதவி நீக்கம் செய்யுமாறு அடம்பிடித்திருக்கிறார்.இதனால்இரண்டு நாட்கள் பாடசாலைக்கும் செல்லவில்லையாம்.அப்பாவின் முகம்சாதாரண நிலையிலும் கோபக்காரரைப்போலவே இருந்ததால்வகுப்புத்தலைவருக்கு அவரே பொருத்தம் என கருதிய…
-
- 0 replies
- 833 views
-
-
மாலைதீவின் புதிய ஜனநாயகத்தின் மீது விரும்பத்தகாத நிழலை வீழ்த்தும் இலங்கை அரசியல் நெருக்கடி - பிரமா ஷெலானி இலங்கையில் தீவிரமடைந்திருக்கும் அரசியல் நெருக்கடியை இந்தியா அக்கறையுடன் அவதானித்துக்கொண்டிருக்கும் வேளையில், பிரதமர் நரேந்திர மோடி மாலைதீவின் புதிய ஜனாதிபதி இப்ராஹிம் முஹம்மது சோலீயின் பதவியேற்பு வைபவத்தில் ( நவம்பர் 17) கலந்துகொள்வதற்காக மாலே சென்றிருந்தார். மோடியின் இந்த விஜயம் இரு மாதங்களுக்கு முன்னர் தேர்தலில் அதிர்ச்சிகரமான தோல்வியடைந்த எதேச்சாதிகார ஜனாதிபதி அப்துல்லா யாமீனுக்கு அதிகாரத்தை புதியவரிடம் கையளிப்பதைத் தவிர வேறுவழி கிடையாது என்பதை உறுதிப்படுத்தியது. இந்தியா இராணுவரீதியில் தலையீடு செய்யக்கூடும் என்ற எதிர்பார்ப்புகள் உட்பட ஜனநா…
-
- 0 replies
- 703 views
-
-
தமிழ் அரசியல் கைதிகளா? ரணிலா? - வ.ஐ.ச.ஜெயபாலன் . ரணில் கேட்டதற்காக நிபந்தனையின்றி தமிழர் தேசிய கூட்டமைப்பு ரணில் அரசை ஆதரிப்பதாக தெரிவித்திருப்பது அதிற்ச்சி தருகிறது. தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும்படியான குறைந்த பட்சக் கோரிக்கையையும் கூட்டமைப்பு கைகழுவிவிட்டது. . வெட்கக்கேடும் துரோகமுமான இந்த அறிக்கை கூட்டமைப்பை இன்று யார்கைப்பற்றியுள்ளார்கள் என்பதை தெளிவாக காட்டுகிறது. அன்று செல்வநாயகத்தின் முதுமையைப் பயன்படுத்தி கட்சியைக் கைப்பற்றி தமிழரை காட்டிக்கொடுக்கும் முயற்ச்சியில் கொழும்பு வளக்கறிஞர் ஒருவர் தோற்றுப்போனார். வரலாறு திரும்பும் என்பார்கள். இன்று அரை நூற்றாண்டுகளின் பின்னர் இன்னுமொரு கொழும்பு வளக்கறிஞர் ஒருவர் அதே பாணியில் சம்பந்தரின் முது…
-
- 1 reply
- 630 views
-
-
இலங்கையும் செல்வாக்கு மண்டலங்களும். கேழ்வியும் பதிலும். . கேழ்வி. Segudawood Nazeer மேற்க்கு உள் நுளைந்தால் சுரங்கப் பாதையை தகர்த்துக் கொண்டு சீனா உள் நுளையும்,இவைகள் மீண்டுமொரு உலகப் போருக்கு வித்துடக் கூடும் . . பதில். Jaya Palan இலங்கைக்காகவும் மாலைதீவுக்காகவும் உலகபோர் ஒன்றும் வராது. உலகப்போருக்கு சீனா தயாராகவும் இல்லை. . இன்றுள்ள நிலவரத்தில். இலங்கையின் வடகிழக்கிலும் மேற்க்கு கரையிலும் சீனா கால்வைக்கிற வாய்ப்பு இல்லை, மலையக தமிழ் பிரதேசங்கள் தவிர்ந்த வடமத்திய மத்திய மற்றும் தென் இலங்கை பகுதிகள் சீன ஆதரவுய் புலமாகும். அங்கு செல்வாக்கு செலுத்தும் முயற்ச்சிகளில் மேற்க்கு நாடுகளும் இந்தியாவும் அக்கறை கொண்டுள்ளதாகத் தெரியவில்லை. இலங்கையில்…
-
- 1 reply
- 711 views
-