அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
ஹிஷாலினியின் மரணம்: பல்வேறு பரிமாணங்களில் மலையகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது – பி.மாணிக்கவாசகம் July 29, 2021 சிறுமி ஹிஷாலினியின் மரணம், கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் ஒரு குற்றவியல் சம்பவமாகப் பதிவாகி இருக்கின்றது. ஆனால் அந்த மரணம் தொடர்பில் எழுந்துள்ள பல்வேறு வினாக்களும், ஏற்கனவே பலதரப்பினராலும் எழுப்பப் பட்டுள்ள வினாக்களும் மலையகத்தின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பான பரிமாணங்களை வெளிப் படுத்துவதாக அமைந்திருக்கின்றன. அந்தச் சிறுமியின் மரணம் இன மத சமூக நிலைமைகளைக் கடந்து நாடளாவிய ரீதியில் பலதரப்பினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருப்பதே இதற்கு முக்கிய காரணம். அவருடைய மரணத்திற்கு ந…
-
- 0 replies
- 265 views
-
-
காலதாமதமும் காத்திருப்பும் – செல்வரட்னம் சிறிதரன் காணாமல் போனோருக்கான செயலகச் சட்டம் திருத்தத்துடன் நாடாளுமன்றத்தி;ல் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் காணாமல் ஆக்கப்பட்;டவர்களின் உறவினர்கள் அந்தச் சட்டத்தை ஏற்கப்போவதில்லை என தெரிவித்திருக்கின்றார்கள். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டுபிடித்துத் தர வேண்டும் அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும் என கோரி நூறு நாட்களாகப் போராட்டம் நடத்தி வருகின்ற உறவினர்களே இந்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றார்கள். நிலைமாறுகால நீதிக்கான …
-
- 0 replies
- 403 views
-
-
வட–கிழக்கில் தமிழர்களை ஒடுக்கும் வகையான இராணுவ கட்டமைப்புகள் கலைக்கப்பட வேண்டும் – கஜேந்திரகுமார் இன்றைய நெருக்கடியிலிருந்து மீள இராணுவச் செலவினங்கள் குறைக்கப்பட்டேயாக வேண்டும். இதனை ஓர் முன்நிபந்தனையாக வைக்குமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் நாம் வேண்டுகோள் விடுப்போம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவா் கஜேந்திரகுமார் எம்.பி. தெரிவித்தார். வடக்கு – கிழக்கில் வாழும் தமிழர்களின் மீதான ஒடுக்குமுறையாளராகச் செயற்படும் இராணுவக் கட்டமைப்புகள் கலைக்கப்பட வேண்டும். தமிழர்களினதும், முஸ்லிம்களினதும் அச்சத்தை நீக்குவதற்கு ஆட்சியாளர்கள் முயல்வார்களேயானால் நிச்சயமாக பாதுகாப்புச் …
-
- 0 replies
- 257 views
-
-
இவ்வாண்டு இடம்பெற்றுள்ள மிலான் பயிற்சி நடவடிக்கையானது கிழக்காபிரிக்கா தொடக்கம் மேற்கு பசுபிக் வரை விரிவுபடுத்தப்பட்டமையானது இந்திய-பசுபிக் பிராந்தியத்தில் இந்தியா தனது செல்வாக்கை விரிவுபடுத்துகின்றது என்பதைச் சுட்டிநிற்கிறது. இவ்வாறு அவுஸ்திரேலியாவின் சிட்ணியை தளமாகக் கொண்ட The Interpreter* இணையத்தளத்தில் Dr David Brewster** எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. சிறிலங்கா, மாலைதீவு மற்றும் இந்தியா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து இந்திய மாக்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்புத் தொடர்பில் மேற்கொண்ட முக்கூட்டு நடவடிக்கையுடன் இந்திய மாக்கடலிலுள்ள தீவுளான செச்செல்ஸ் மற்றும் மொறிசியஸ் போன்றன இணைந்துள்ளதாக மார…
-
- 0 replies
- 811 views
-
-
அகதிகள் உருவாக்கம் எழுதப்படாத விதியா? உலகம் முழுவதிலும் மனித குலம் அமைதியாக வாழ்ந்து வருகின்றதா? மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனநாயக அரசுகளாக இருந்தாலும் சரி, மன்னராட்சி அரசுகளாக இருந்தாலும் சரி, சர்வாதிகார ஆட்சிகளாக இருந்தாலும் சரி மக்கள் சகல உரிமைகளையும் பெற்று வாழ்கின்றனரா? பஞ்சம், பசி, பட்டினியின்றி உலக மக்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பதை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியுமா? நாட்டுக்கு நாடு ஏற்படுகின்ற போர், உள்நாட்டுப் போர்கள், இனத்தின் மேலான அரசின் ஒடுக்குமுறைகள், மதப் பிணக்குகள் எனப் பல்வேறு பிரச்சினைகள் உலகத்தின் கண்முன்னால் தினமும் நடந்தேறி வருகின்றன. …
-
- 0 replies
- 739 views
-
-
சர்வகட்சி அரசாங்கம் தீர்வைத் தருமா? எம்.எஸ்.எம். ஐயூப் சர்வகட்சி அரசாங்கம் ஒன்றைத் தாம் உருவாக்கப் போவதாகவும், அதில் இணையுமாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் சகல உறுப்பினர்களுக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தக் கடிதமும் சர்வகட்சி அரசாங்கம் என்ற எண்ணக்கருவும், இப்போது அரசியல் கட்சிகளுக்கு இடையேயும் அரசியல்வாதிகளுக்கு இடையேயும் பல்வேறு வாதப்பிரதிவாதங்களை தோற்றுவித்துள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், சர்வகட்சி அரசாங்கம் ஒன்றில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக அக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரனை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது. ரணில் விக்கிரமசிங்க, சிங்கள மக்களின் து…
-
- 0 replies
- 664 views
-
-
மைத்திரியிடம் எதை எதிர்பார்க்கலாம்? மூன்றாண்டுகளுக்கு முன்னர், மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தாமும் பத்தோடு பதினொன்றாகிய அரசியல்வாதி மட்டுமே என்பதை, நாளாந்தம் நிரூபித்து வருகிறார். 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், தாம் பதவிக்கு வரும்போது, இனப் பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட பல வாக்குறுதிகளை வழங்கிய அவர், இப்போது அவற்றை நிறைவேற்ற முடியாமலும் நிறைவேற்ற மனமின்றியும் இருப்பதை அவதானிக்க முடிகிறது. கடந்த வாரமும் அவர், தாம் 2015 ஆம் ஆண்டு தெரிவித்த முக்கியமானதொரு கருத்தை மறுத்து, கருத்து வெளியிட்டு இருந்தார். தாம், ஒரு முறை மட்டுமே ஜனாதிபதியாகப் பதவி வ…
-
- 0 replies
- 379 views
-
-
சலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்! அவன் கிடக்கிறான் குடிகாறன் எனக்கு வார் என்று சொன்ன குடிகாரன் கதையாக சலுகைகளைக் காட்டி தமிழர்களை ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து சலுகைகளைக் கையேந்திப் பெற்றிருக்கிறார் என்ற சங்கதி அம்பலமாகியுள்ளது! மாகாண முதலமைச்சர் பதவியில் இருக்கும் எவரும் விமானத்தில் பயணம் செய்ய பணம் கொடுக்கப்படுவதில்லை. இதற்கு விதிவிலக்காக இருப்பவர் சாட்சாத் விக்னேஸ்வரன்.. முதலமைச்சராகப் பதவியேற்ற பின்னர் விக்னேஸ்வரன் யாழ்ப்பாணம் – கொழும்பு – யாழ்ப்ப…
-
- 0 replies
- 511 views
-
-
ரஷ்ய மொழி ஆதிக்கத்தின் ஒரு கதை மரியா மன்சோஸ் இரு மொழி (ரஷ்யன் + உக்ரைன்) பேசும் கீவ் நகரில் 1990களில் வளர்ந்த நான் உக்ரைனிய மொழியை, பழமையானதாகக் கருதி மனதுக்கு நெருக்கமாகக் கொள்ளாமல், நுட்பங்களை உணராமல், முழு ஆர்வம் இல்லாமல் படித்தேன். மிகவும் முக்கியமான நாள்கள், நிகழ்ச்சிகளிலும் பள்ளிக்கூடங்கள், வங்கிகள் போன்ற இடங்களிலும்தான் இனப் பெருமையோடு உக்ரைனியைப் பயன்படுத்துவோம். ஆயினும், அன்றாடப் பயன்பாட்டிலும் நெருக்கமான நண்பர்கள் உறவினர்களுடனான உரையாடலிலும் ரஷ்ய மொழியே ஆதிக்கம் செலுத்தும். பள்ளி, கல்லூரி நாள்களில் இடைவேளையின்போதும், பத்திரிகைகளுக்கு எழுதும்போதும், பெற்றோருடன் சண்டை போடும்போதுகூட ரஷ்ய மொழியைத்தான் நாடுவோம். என்னுடைய பாட்டி இவ்விரண்டும் கலந்த க…
-
- 0 replies
- 317 views
-
-
பாராளுமன்றத்தைக் கலைக்க முடியுமா? முடியாதா? - சட்ட விளக்கம் இதோ ! இன்றைய இலங்கையின் அரசியல் சூழ்நிலையில் ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைக்கமுடியுமா? முடியாதா? என்பது தெடர்பாக பலரும் பல்வேறு கருத்தாடல்களை வழங்கி வருகின்றனர். இவ்விடயம் தொடர்பாக அரசியல் விமர்சகரும் சட்ட முதுமானியுமான வை. எல்.எஸ்.ஹமீட் ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கை 19 ஆவது திருத்தத்திற்குமுன் பொதுத்தேர்தல் நடைபெற்று முதல் ஒரு வருடத்திற்குள் ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைக்க முடியாது. அதன்பின் வேண்டியநேரம் கலைக்கலாம். இந்த அடிப்படையில்தான் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக குமாரதுங்க அவரது ஆட்சியில் இரு தடவைகள் பாராளுமன்றத்தைக் கலைத்தார். 19 ஆவது திருத்தத்தின் பின் முதல் 4 1/2 வருடங்…
-
- 0 replies
- 484 views
-
-
ஜனாதிபதி தேர்தலும் தமிழர் அரசியலும் June 24, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — ஏற்கெனவே குழம்பிப்போயிருந்த இலங்கை தமிழர் அரசியல் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கு தமிழர்கள் எத்தகைய நிலைப்பாட்டை எடு்க்கவேண்டும் என்பது தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகள் மத்தியில் நிலவுகின்ற முரண்பாடுகள் காரணமாக மேலும் சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறது. தமிழ் கட்சிகள் ஐக்கியப்பட்டு செயற்படுவதில் நாட்டம் காட்டும் என்றோ அல்லது போரின் முடிவுக்கு பின்னரான இன்றைய காலப்பகுதியில் தமிழ் மக்கள் முகங்கொடுக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகள் உட்பட தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதற்கு ஒன்றிணைந்த நிலைப்பாடுகளுக்கு வரும் என்றோ எதிர்பார்ப…
-
- 0 replies
- 526 views
-
-
தேர்தலில் தமிழ் மக்களின் ஆதரவு யாருக்கு..?: சூடு பிடிக்கும் தேர்தல் களம் ஆட்சி மாற்றத்துக்காக 2015ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில் தமிழ் மக்கள் அளித்திருந்த ஆதரவின் மூலம் நன்மைகள் விளை வதற்குப் பதிலாகக் குழப் பகரமான நிலைமையை உருவாக்குவதற்கே வழியேற்ப டுத்தி இருந்தது. அந்த வகையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வழங்கியிருந்த உறுதியான – நிபந்தனை யற்ற ஆதரவு விழலுக்கு இறைத்த நீராகி உள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் யாரை ஆதரிப்பது? யார் தமிழ் மக்களுக்கு விசுவாசமாகச் செயற்படுவார்கள்? யாரைத் தெரிவு செய்தால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும்? என்ற கேள்விகள் சாதாரண வாக்காளர்களின் மனங்களைக் குடைந்து கொ…
-
- 0 replies
- 488 views
-
-
தென்புலத்தில் சீனாவின் கரம் ஓங்கும் போது வடபுலத்தில் காணப்படக்கூடிய இந்திய - சீன எல்லையில் கடும் பதற்றம் ஏற்படும். எனவே தான் இலங்கையின் அரசியல் நிலைப்பாடு இந்தியாவுக்கு முக்கியமாகின்றது. அதற்காக குறுக்கீடுகள் தொடர்பான குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. மறுபுறம் கடந்த ஆட்சியில் இடம்பெற்றதைப்போன்று இலங்கையில் மீண்டும் சீனாவின் கரம் மேலோங்குமாக இருந்தால் அதன் தாக்கம் இந்தியாவுக்கு கடுமையாக இருக்கும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழக துணைத்தலைவர் எம்.அப்துல் ரஹுமான் தெரிவித்தார். இலங்கை என்பது இந்தியர்களுக்கு குறிப்பாக தமிழகத்துக்கு மிகவும் நெருக்கமான நாடாகும். அவ்வகையான நெருக்கமான உணர்வுடன் தான் இலங்கை…
-
- 0 replies
- 673 views
-
-
கிழக்கின் நிலை உணர்ந்த ஈ.பி.ஆர்.எல்.எப் -இலட்சுமணன் இன்றைய சமகால அரசியல் சூழ்நிலையில் தமிழர் தேசிய அரசியல் போக்குகளும் அதுதொடர்பான கருத்தாடல்களும் ஆரோக்கியமானதாகத் தெரியவில்லை. கட்சிகளுக்கு இடையில் நிலவும் அதிகாரப் போட்டிகளும் தனிப்பட்ட குத்து வெட்டுகளும் காழ்ப்புணர்வுகளும் தமிழ்த் தேசிய அரசியலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பது, இன்று தமிழ் மக்களுக்குள் எழுந்துள்ள அச்ச நிலையாக உள்ளது. இத்தகைய சூழலில், தமிழ்த் தேசிய அரசியலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகப் பல்வேறு வியூகங்கள், பெரும்பான்மை அரசியல் கட்சிகளாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போக்குகளுடனும் செயற்பாடுகளுடனும் ஒத்துவராத, முரண்பட்ட கட்சிகளாலும் அமைப்புகளாலும் வகுக்க…
-
- 0 replies
- 628 views
-
-
தமிழ்த் தேசிய அரசியலில் துரோகி அடையாளம் சூட்டுதல் புருஜோத்தமன் தங்கமயில் / 2020 ஜூன் 03 பதினோர் ஆண்டுகளுக்கு முன், அதாவது, இறுதிப் போர் முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்திருந்த நேரம்… விடுதலைப் புலிகள் தொடர்பாகவும் ஆயுதப் போராட்டம் தொடர்பாகவும், தமிழ் மக்களின் எண்ணவோட்டம், எப்படி இருக்கின்றது என்பதை அறிந்து கொள்வதற்குப் பல தரப்புகளும் ஆர்வம் கொண்டிருந்தன. அரச படைகளும் அதன் புலனாய்வுத் துறையும், தமிழ் மக்களை, ஒவ்வொருவராக அலசி ஆராயும் முனைப்பில் ஈடுபட்டிருந்தன. அந்தத் தருணத்தில்தான், என்றைக்கும் இல்லாதளவுக்கு, புலிகளுக்கும் ஆயுதப் போராட்டத்துக்கும் தமிழ்த் தேசிய நிலைப்பாடுகளுக்கும், எதிரான கட்டுரைகளும் பத்திகளும் தமிழ்ப் பரப்பில் வெளிவர ஆரம்பித்திருந்தன. …
-
- 0 replies
- 489 views
-
-
தமிழ்நாட்டில் தமிழ்த் தேசிய எழுச்சி என்பது ஒரு நீண்ட வரலாறு கொண்டது -கொளத்தூர் மணி திராவிடர் விடுதலைக் கழக தலைவரும், ஈழ விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பவருமான கொளத்தூர் மணி அவர்கள் எமது ‘இலக்கு’ ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேகமான நேர்காணலை இங்கு தருகின்றோம். கேள்வி காந்தி தேசம், காந்தியை விட உறுதியுடன் போராடிய போராளிகளின் வேண்டுகோளை கண்டுகொள்ளாமல் போனது ஏன்? ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் சூழ்ச்சிக்கு ராஜீவ் காந்தி பலியாகியிருந்தார் என்று தான் சொல்ல முடியும். ஒப்பரேஷன் பூமாலை என்ற உணவுப் பொட்டலங்களைப் போட்டது. மற்றும் மில்லரின் கரும்புலித் தாக்குதல் நடைபெற்றது. இவற்றிற்கிடையான காலப்பகுதியில் ஜே.ஆர். ராஜீவ் காந்தியை வசப்படுத்திக் கொண்டார் என்று தான் சொல்ல…
-
- 0 replies
- 729 views
-
-
வெற்றியின் அடுத்த கட்ட படிகளை நோக்கி முன்னேறுவோம்! தமிழீழ ஆதரவு அனைத்து கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு / திங்கள், 25 மார்ச் 2013 12:51 தமிழகமெங்கும் கல்வி வணிகமயமாக்கப்பட்டு கல்விக்கூடங்கள் சிறைகூடங்களாக மாற்றப்பட்டுள்ளன. சேனல் 4-ல் வெளிவந்த இனப்படுகொலை காட்சிகளும், மழலைச் செல்வன் பாலச்சந்திரனின் நெஞ்சை பதறவைக்கும் படுகொலையும் நம்மை பூட்டி வைத்திருந்த சிறைக் கதவுகளை உடைத்து சீறியெழ வைத்தது. ஈழத் தமிழர்களை படுகொலை செய்த "சிங்கள இனவெறியன் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக, இனப்படுகொலையாளனாக சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும்", "வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு …
-
- 0 replies
- 1k views
-
-
2021ஆம் ஆண்டு ஐ.நா.மனிதஉரிமைகள் சபைத் தீர்மானப் பலன் – சூ.யோ.பற்றிமாகரன் April 14, 2021 Share 82 Views சிறீலங்காவின் இறைமை இழப்பு பயன்படுத்தி உரிமைபெற ஈழத்தமிழர்க்குப் புதியவழி இது ஈழத்தமிழர்களின் உள்ளக தன்னாட்சியின் மூலம் உலகநாடுகள் அவர்களுக்கான பாதுகாப்பான அமைதியை சிறீலங்காவிடம் பெற்றுக் கொடுக்க இயலாத நிலையின் வெளிப்பாடு. ஆதலால் இது ஈழத்தமிழர்களின் வெளியக தன்னாட்சி உரிமையினை உலகநாடுகள் ஏற்று, அவர்களுக்கான அரசியல் எதிர்காலத்தை அவர்களே அமைத்துக் கொள்வதற்கான அனுமதியை வழங்க வைப்பதற்கான திறவுகோலாக அமைகிறது. இப் பெ…
-
- 0 replies
- 412 views
-
-
மீம்ஸ் அரசியலும் பொதுமக்களும்: கைய புடிச்சு இழுத்தியா? ஆர். அபிலாஷ் வேறெப்போதும் இல்லாத அளவுக்கு அரசியல் ஒரு சிறந்த பொழுதுபோக்காக இன்று மாறி உள்ளது. வடிவேலுவின் சவடால் நாயகனான ”கைப்புள்ள” தொன்மம், பிற நகைச்சுவை காட்சிகள், மக்களுக்கு அரசியல் அரட்டைகளில் பங்கெடுக்கையில் கிடைக்கும் ஒரு திருவிழா மனநிலையின் குதூகலம், அரசியல் மாற்றங்களை வெறும் அபத்தமாய், வேடிக்கை விநோதமாய் காணும் ஆசை, அரசியல் நாயகர்களை தம்மை விட மட்டமானவர்களாய் சித்தரிக்கையில் பொதுமக்களுக்கு கிடைக்கும் சில-நிமிட அதிகாரம் ஆகியவை ஒன்று சேர்ந்து இந்த புது அலையை தோற்றுவித்துள்ளது. இந்த இணைய மீம் (meme) அலை வேறொரு வடிவில் பகடி கோட்டோவியங்களாய் முன்பு நம் பத்திரிகைகளில் இருந்தது. ஆனால் அவை எப்போதும…
-
- 0 replies
- 851 views
-
-
முதுகெலும்புடைய தலைவர்கள் தேவை – நிலாந்தன்:- கேப்பாப்பிலவில் படைத்தளத்தின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் போர்த்தாங்கியின் நிழலில் போராடிக் கொண்டிருக்கும் மக்களில் இருவர் கடந்த வாரம்; சாகும் வரையிலும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார்கள். இவர்களில் ஒருவரின் உடல்நிலை மோசமடையத் தொடங்கிய பொழுது சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த மக்களைச் சந்தித்தார்கள். சாகும் வரையிலுமான உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். திலீபன், அன்னை பூபதி போன்றவர்கள் இவ்வாறு உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த போதிலும் எதிர்பார்த்த இலக்குகளை அடைய முடியவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். ஓர் உயிர்தானும் இழக்கப்படுவதை தாங்கள் விரும்பவில்…
-
- 0 replies
- 560 views
-
-
கொரிய போர்ப் பதற்றம் : இலங்கைக்கும் தொற்றுமா? கொரியக் குடாநாட்டை அண்டியதாக போர்ப்பதற்றம் தீவிரமடைந்து வருகிறது. வடகொரியாவின் அணுகுண்டு சோதனை மிரட்டல், அணுசக்தி ஏவுகணைப் பரிசோதனைகள் போன்றவற்றின் தொடர்ச்சியாக, அமெரிக்கா தனது படைகளை அந்தப் பகுதியில் குவிக்கத் தொடங்கியிருக்கிறது. மூன்று குண்டுகளைப் போட்டு உல கத்தையே அழித்து விடுவோம் என்று எச்சரிக்கிறது வடகொரியா. அமெரிக்காவின் விமானந்தாங்கிக் கப்பலை ஒரே நொடியில் அழித்து விடுவோம் என்றும் மிரட்டுகிறது. இவ்வாறாக அவுஸ்திரேலியா, தென்கொரியா, ஜப்பான் என்று தனக்கு அருகே உள்ள அமெரிக்காவின் கூட்டாளிகள் எல்லோரையும் மிரளவைத்துக் கொ…
-
- 0 replies
- 511 views
-
-
பெளத்த மேலாதிக்கம்! வெசாக் தினக்கொண்டாட்டம் காரணமாக திருகோணமலை நகரத்தின் சில பகுதிகள் அலங்கரிக்கப்பட்டு வெசாக்கூடுகள் தொங்கவிடப்பட்டுள்ள காலப்பகுதியில் மடத்தடி வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்துக்கு முன்பாக பிள்ளையாரின் வில்லனாக பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார் புத்த பெருமான். வெசாக் தினத்துக்காக வைக்கப்பட்ட பெருமான் தொடர்ந்தும் வீற்றிருக்கும் நிலை கொண்டவராகவே காணப்படுகின்றார். இனவாதபூக்கள் வாரந் தவறாமல், மாதந்தவறாமல் பூக்கும் ஒரு நாடாக இலங்கை ஆகிவிட்டதை அண்மைக்கால சம்பவங்கள் நிரூபிக்கின்றன. இனவாத நாட்டுக்கு அடையாளமிட்டு காட்டக்கூடிய அளவுக்கு இந்ந…
-
- 0 replies
- 872 views
-
-
இந்தியாவை நோக்கி முன்வைக்கப்படவிருக்கும் கூட்டுக்கோரிக்கை எது? நிலாந்தன். தமிழ்க் கட்சிகளை ஒருங்கிணைத்து இந்தியாவுக்கு ஒரு கூட்டுக் கோரிக்கையை முன்வைக்கும் நோக்கத்தோடு டெலோ இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஒருங்கிணைப்பு முயற்சிகள் கடந்த செவ்வாய்க்கிழமையோடு புதிய திருப்பத்தை அடைந்திருப்பதாக தெரிகிறது. டெலோ இயக்கம் அந்த நகர்வை முன்னெடுத்த பொழுது 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவது என்பதே பிரதான கோரிக்கையாக காணப்பட்டது. அக்கோரிக்கையை தமிழரசுக் கட்சி ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் அந்த ஒருங்கிணைப்பு முயற்சிகளில் தமிழரசுக்கட்சி ஈடுபட மறுத்தமைக்கு அது மட்டும்தான் காரணமல்ல. அதைவிட ஆழமான காரணங்கள் உண்டு. சிறிய பங்காளிக் கட்சியான டெலோ அவ்வாறான ஒருங்கிணைப்ப…
-
- 0 replies
- 318 views
-
-
தமிழர் அரசியலில் புரிந்துகொள்ளப்பட வேண்டிய யதார்த்தங்கள் - க. அகரன் தமிழர் அரசியல் தளம், இன்றைய நிலையில் பல சுவாரஸ்ய களங்களைக் கொண்டதாக அமைந்து வருகின்றது. ஜனநாயக விழுமியங்களுக்கு உட்பட்டதாகத் தமது நகர்வுகள் உள்ளதாகக் கூறிக்கொள்ளும் தமிழ் அரசியல் தலைமைகள், அதனூடாகத் தமிழ் மக்களுக்கு எழுந்துள்ள ஐயப்பாடுகளைக் களைவதற்கான ஏதுவான நடவடிக்கைகளை எடுத்துள்ளனவா என்பது தொடர்ந்தும் கேள்விக் குறிகளாகவே காணப்படுகின்றன. வட மாகாண சபையின் செயற்பாடுகளும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நகர்வுகளும் மக்களின் எதிர்கால நலன்கள் என்ற வகையில், எதை ஆக்கபூர்வமாக முன்வைக்கின்றன? குறிப்பாக, வரவுள்ள புதிய அ…
-
- 0 replies
- 417 views
-
-
நவதாராளவாதமும் சர்வாதிகார ஜனரஞ்சகவாதமும் Ahilan Kadirgamar / இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டு ஏற்பட்ட பூளோக பொருளாதார நெருக்கடி, உலகைத் தொடர்ந்தும் சின்னாபின்னப்படுத்துகிறது. பூகோள பொருளாதார வளர்ச்சி, சர்வதேச வர்த்தகம் ஆகியவற்றின் பாரிய வீழ்ச்சியும், இந்தப் பொருளாதார வீழ்ச்சிக்குச் சான்று பகர்கின்றன. மறுபுறத்தில், இந்த நெருக்கடியின் விளைவுகள், ஜனரஞ்சக சர்வாதிகாரத்தின் தோற்றத்தையும் உறுதிப்படுத்தலையும் நெறிப்படுத்துகின்றன. 1980களில் தொடங்கிய நவதாராளவாத பூகோளமயமாதலானது, சுதந்திர வர்த்தகம், சுதந்திரமான மூலதனம் வாங்கல், அரச தலையீட்டை அகற்றுதல், தனியார்மயப்படுத்தல் என்பவற்றின் மீதான ஊக்கமளிப்பில் மையம் கொண்டிருந்தது. மீயுயர் பூகோளமயம…
-
- 0 replies
- 503 views
-