Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. தமிழ் மொழிச் சமூகங்களைப் பலி எடுக்கும் பிரித்தாளும் தந்திரம் ‘பிரித்தாளும் தந்திரத்தில் பிரித்தானியர்களுக்கு நிகரில்லை’ என்று சொல்வார்கள். ஆனால், அவர்களையும் விடச் சிங்கள அரசியல் தலைமைகள் நிபுணத்துவம் மிக்கவை என்பது இலங்கையின் அண்மைய வரலாறு. இதற்கு மிக எளிய உதாரணம், 1970 கள் வரையில் இணக்கமாக, ஒருமுகப்பட்டிருந்த இலங்கையின் சிறுபான்மையினங்கள், இப்போது மிக ஆழமாகப் பிளவு படுத்தப்பட்டுள்ளன. அகரீதியாகவும் புறரீதியாகவும் இந்தப் பிளவு மிக ஆழமாகச் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பிளவை, முரண்நிலையை, பகையை, மிக நுட்பமாக உருவாக்கி, அதை வலுவாக்கியிருக்கிறது சிங்களத்தரப்பு. இனி எப்போதுமே இணைந்து கொள்ள முடியாது என்ற அளவுக்கு இன்று த…

  2. 2009 மே மாதம் 18ஆம் திகதி மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நிலைத்துநின்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதவிடுதலைப் போராட்டம் இராணுவ ரீதியில் முற்றுப்பெற்றது. இதன்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பில் வேறுபட்ட பதிவுகள் உண்டு. ஜ.நாவின் கணிப்பின்படி 10,000 – 40,000 வரையிலான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம். அரசியல் கட்சிகள் சிலவற்றினது தகவல்களின்படி 50,000 இற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். எண்ணிக்கைகள் எதுவாக இருப்பினும் தமிழ் மக்கள் பெருந்தொகையில் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டனர் என்பதுதான் உண்மை. கடந்த 18ஆம் திகதியுடன் யுத்தம் நிறைவுற்று எட்டு ஆண்டுகள் ஆகின்றன. இந்த எ…

    • 0 replies
    • 514 views
  3. சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் ரவிராஜ் கொலை வழக்கின் தீர்ப்பு பத்து வருடங்களுக்கு முன்னர், நவம்பர் மாதம் 10 ஆம் திகதி. அழகிய சுறுசுறுப்பான ஒரு காலை நேரம். கொழும்பு நாரஹேன்பிட்டி மணிங் பிளேஸ் பகுதியில் இருந்த தனது வீட்டில் இருந்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ், மெய்ப்பாதுகாவலர் சாந்த லக்ஸ்மன் லொக்குவெல என்பவருடன் காரில் அலுவலகம் நோக்கிப் புறப்பட்டுச் செல்கின்றார். வீட்டில் இருந்து சிறிது தொலைவு சென்றதும், வாகன நடமாட்டங்களும் பெருமளவிலான மக்கள் நடமாட்டமும் மிகுந்திருந்த ஒரு பிரதான வீதியில் நகர்ந்து கொண்டிருந்த அவருடைய க…

  4. 9/11 தாக்குதலுக்குப் பிறகு கற்றுக் கொண்ட அல்லது கற்றுக்கொள்ளாத 5 முக்கியப் பாடங்கள் ஃப்ராங்க் கார்டனர் பிபிசி பாதுக்காப்புச் செய்தியாளர் 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ராணுவத்தினர் 20 ஆண்டு கால, உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்புப் போரில் நாம் ஏதேனும் பாடம் கற்றுக் கொண்டுள்ளோமா? இன்று ஆப்கானிஸ்தான் மீண்டும் அல்-காய்தாவின் ஆதரவு அமைப்பு ஒன்றால் ஆட்சி செய்யப்படும் நிலைக்கு வந்துள்ளது. 2001 செப்டம்பர் 11 அன்று காலையை விட நாம் இப்போது எந்த அளவுக்கு மேம்பட்டுள்ளோம்? என்பது குறித்த அலசல் தான் இது. மிக மோசமான பயங்கரவாதத…

  5. ஜனாதிபதியின் ஐ.நா.உரை நல்லிணக்க சவால்களை நன்கு புலப்படுத்தும் ஆட்சிமுறைப் பிரச்சினைகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மைக்காலத்தில் செய்திருக்கும் தலையீடுகள் அவரின் தலைமையிலான அரசாங்கத்திற்குள் நிலவுகின்ற கடுமையான அபிப்பிராய வேறுபாடுகளை வெளிச்சத்துக்கு கொண்டுவருகின்றன. அவற்றில் முக்கியமானது போர்க்காலத்தில் இடமபெற்றதாகக் கூறப்படுகின்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்லான பொறுப்புக்கூறல் விவகாரத்தில் சர்வதேச சமூகத்திற்கு அரசாங்கத்தினால் அளிக்கப்பட்ட உறுதிமொழிகளில் இருந்து விடுபடுவதற்கு அவர் மேற்கொள்கின்ற முயற்சியாகும்.முன்னைய அரசாங்கத்துக்கும் சர்வதேச சமூகத்தின் சில பிரிவுகளுக்கும் தீவிரமடைந்திருந்த பதற்றநிலையை புதிதாக தெரிவுசெய்யப்பட்ட அரசாங்…

  6.  பிரெக்ஸிட் வாக்கெடுப்பு: பிரித்தானியா வெளியேறுமா? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ தீர்மானிக்கும் சக்தியாக, மக்கள் எப்போதும் இருப்பதில்லை. ஆனால், அவர்கள் தீர்மானமான சக்தியாகும்போது, பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் மாயத்தை நிகழ்த்துவார்கள். ஐனநாயகம் என்ற அழகிய முகமூடி, தேர்தல் என்ற கவசத்தினூடு முழுமையாக மறைத்திருக்கின்றபோதும், அக்கவசத்தையை ஆயுதமாக்கி மக்கள் நிகழ்த்தும் மாயம், ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை அல்ல, மக்கள் மீதான நம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாயுள்ளது. நடக்கும் என்பார் நடக்காது, நடக்காது என்பார் நடந்துவிடும் என்ற பாடல் வரிகள், அண்மைய பிரித்தானிய நிலைவரங்களை விளக்கப் பொருத்தமானவை. பிர…

  7. காஷ்மீரின் நிலை: ஒரு மக்கள் தொகுதியைக் காணாமலடிக்கும் முறை செப்டம்பர் 2019 - அஷ்வக் மசூதி · கட்டுரை ஆக்கிரமிப்பு நிலை நிலையின்மை இல்லாமல் காஷ்மீரில் வாழ்வதென்பது, வசந்த காலத்தில் மலராத மரங்களைப் போலாகும். மரணங்கள் இல்லாத நாட்கள் ஆச்சரியமளிப்பவை. ஆகவே, எதால், எப்பொழுது, யாரால் கீழே தள்ளப்படுவோம் என்று தெரியாமலேயே மலையுச்சியின் விளிம்பில் வாழப் பழகிவிட்டோம். ஆகஸ்ட் 5ஆம் தேதி முதலே வதந்திகள் உலா வந்தன. காஷ்மீருக்கு சிறப்பு சலுகைகளைத் தரும் சட்டப்பிரிவு 370ம் வெளி மாநிலத்தவர் காஷ்மீரில் நிலம் வாங்க தடை விதிக்கும் பிரிவு 35கி’வும் ரத்து செய்யப்படும் என்று ஒரு செய்தி உலாவியது. தீவிரவாததுக்கு எதிராக ஒரு பெரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிலர் எச்சரித…

  8. சிரியாவின் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும் 2011ஆம் ஆண்டு சிரி­யாவில் அர­சுக்கு எதி­ராக மக்கள் செய்த கிளர்ச்­சியில் பல அமைப்­புக்கள் இணைந்­து­கொண்­டன. பல புதிய அமைப்­புக்­களும் உரு­வா­கின. சிரியத் தேசிய சபை, சுதந்­திர சிரி­யப்­படை, ஜபத் அல் நஷ்ரா, இஸ்­லா­மிய சகோ­த­ரத்­துவ அமைப்பு, மத­சார்­பற்ற மக்­க­ளாட்­சிக்­கான அமைப்பு, டமஸ்கஸ் பிர­க­டன அமைப்பு, சிரிய மக்­க­ளாட்சி கட்சி, சிரியப் புரட்­சிக்­கான உச்ச சபை, சிரிய உள்ளூர் ஒருங்­கி­ணைப்புக் குழு, மக்­க­ளாட்சி மாற்­றத்­திற்­கான தேசிய ஒருங்­கி­ணைப்புக் குழு, தேசிய மக்­க­ளாட்சி அணி, சிரி­யப்­ பு­ரட்­சிக்­கான தேசிய ஆணை­யகம், சிரிய விடு­த­லைப்­படை, சிரிய இஸ்­லா­மிய முன்­னணி, சிரியத் தேசிய விடு­தலை முன்­னண…

  9. வெளியுறவுக் கொள்கையில் நடுநிலை தவறியது அரசு-தயான் ஜயதிலக வெளியுறவுக் கொள்கையில் நடுவுநிலை தவறியது அரசு சுட்டிக்காட்டுகிறார் தயான் ஜயதிலக கொழும்பு ஒக்.12 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் அணிசேராக் கொள் கையிலிருந்து விலகியிருப்பது கவலை அளிப்பதோடு அண் மைய காலத்தில் வெளியுறவுக் கொள்கையில் நடுவுநிலை தவறிவிட்டது என்று ஐ.நாவுக் கான முன்னாள் வதிவிடப் பிரதிநிதியும் பிரபல அரசியல் விமர்சகருமான கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்தார். …

    • 0 replies
    • 513 views
  10. தென்னாபிரிக்க முயற்சிகள் வெற்றிபெறுமா? -நிலாந்தன்:- 13 ஜூலை 2014 தென்னாபிரிக்காவின் துணை ஜனாதிபதியும் விசேட தூதுவருமாகிய சிறில் ரமபோஷா இலங்கை வந்து போயிருக்கிறார். ஐ.நா.மனித உரிமை ஆணையகத்தின் விசாரணைக் குழு அதன் செயற்பாட்டை தொடங்கவிருக்கும் ஒரு பின்னணியில் அவருடைய விஜயம் நிகழ்ந்திருக்கிறது. மற்றொரு தென்னாபிரிக்கரான நவிப்பிள்ளையின் வருகையை எரிச்சலோடு எதிர் கொண்ட அரசாங்கம் ரமபோஷாவை அமைதியாக வரவேற்றிருக்கிறது. ஒரு அரசியல்வாதி என்பதற்கும் அப்பால் ரமபோஷா ஒரு வெற்றிபெற்ற தொழிற்சங்கவாதியும் செயற்பாட்டாளரும் பெரு வணிகருமாவார். தென்னாபிரிக்காவின் சுரங்கத் தொழிலாளர்களுக்கான ஆகப் பெரிய தொழில் சங்கத்தை அவர் கட்டியெழுப்பினார். அதேசமயம், சுரங்கத் தொழில்துறையும் …

  11. கிழக்கிற்கான தொல் பொருள் செயலணி தமிழ் தலைமைகளிடமுள்ள உபாயம் என்ன? - யதீந்திரா சில தினங்களுக்கு முன்னர், கிழக்கு மாகாணத்திலுள்ள புராதன அடையாளங்களை பாதுகாப்பதற்கென, ஒரு ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டிருந்தது. (The Presidential Task Force for Archaeological Heritage Management in the Eastern Province). இந்தச் செயலணியின் நோக்கங்களில், எந்தவொரு இடத்திலும் பௌத்த அடையாளங்களை பாதுகாப்பது தொடர்பில் பேசப்படவில்லை. தொல்பொருள் பாரம்பரியத்தை முகாமை செய்வது தொடர்பில், பொதுவாகவே குறிப்பிடப்பட்டிருக்கின்றது. தமிழ்த் தலைமைகள், வழமைபோல் கண்டன அறிக்கைகளை வெளியிட்டிருக்கின்றன. அதே வேளை, சர்வதேச அமைப்புக்கள் சிலவும் இது தொடர்பில் கண்டனங்களை பதிவு செய்திருந்தன. ஆனால் இவ்வாறான கண்டனங்கள் எத…

  12. 2022 – ஈழத் தமிழர் அரசியல் ? - யதீந்திரா நாலடியாரில் ஒரு கூற்றுண்டு. அதாவது, கழிந்து செல்லும் நாட்கள் அனைத்தும் உனது வாழ்நாளாகும். நமது அரசியலுக்கும் இது பொருந்துமா? ஏனெனில் ஒரு அரசியல் போராட்டத்தில் – ஆண்டுகள் கழிகின்ற போது, நத ஆண்டுக்கான அடைவுகளை மக்கள் காணவேண்டும். ஆனால் ஈழத் தமிழ் தேசிய அரசியலை பொறுத்தவரையில், அடைவுகள் எப்போதுமே எட்டாக் கனியாகவே இருக்கின்றது. வரலாம் – நடக்கலாம் – நடக்கூடும் – இப்படியான சொற்களோடு, பன்னிரெண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்படி ஒவ்வொரு ஆண்டும் கழிந்து செல்கின்ற போது, தமிழர் அரசியலில் எவ்வித முன்னேற்றங்களும் பதிவாகவில்லை ஆனால் பல்வேறு விடயங்கள் நடக்கின்றன – நடப்பதாக காண்பிக்கப்படுகின்றன. இந்த அடிப்படையில் சிந்தித்…

  13. கொழும்பிலிருந்து ஜெனிவாவிற்கு உணர்த்தப்படும் செய்திகள்? நிலாந்தன்:- 23 மார்ச் 2014 "ஜெனிவாவை நோக்கி அரசாங்கம் அனுப்ப நினைக்கும் சமிக்ஞை களுக்கான விலையைக் கொடுப்பது தமிழ் மக்கள் தான் என்பதே இங்கு மிகக் கொடுமையான யதார்த்தமாகும்" அண்மை வாரங்களில் வடக்கில் நடப்பவற்றைத் தொகுத்துப் பார்த்தால் ஜெனிவாவை நோக்கித் தெளிவாகச் சில சமிக்ஞைகள் அனுப்பப்படுவதாகத் தெரிகின்றது. முதலாவது சமிக்ஞை - அரசாங்கத்தைத் தண்டிக்க முற்படும் தரப்புக்கள் அல்லது அத்தகைய தரப்புகளிற்கு உதவ முற்படும் தரப்புகள் எதிர்கொள்ளக் கூடிய ஆபத்துக்கள் பற்றியது. இரண்டாவது சமிக்ஞை, அரசாங்கத்தைத் தண்டிக்கும் விதத்திலான ஜெனிவாத் தீர்மானங்கள் ஆயுதமேந்திய தமிழ் அரசியலை ஊக்குவிக்கக் கூடும் என்பது. அதாவது, எந்தவொ…

  14. கொவிட்- 19 மரணங்கள்: ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய முஸ்லிம் சமூகம் அனுமதி கோருவது நியாயமானதா? அஷ்ஷெய்க் ஷிஹான் ஜவாத் இன்று கோவிட்- 19 காரணமாக மரணிக்கும் முஸ்லிம்களை தமது மார்க்கத்தின் அடிப்படையில் அடக்கம் செய்ய முஸ்லிம் சமூகம் அனுமதி வேண்டுவது பல்வேறு தளங்களில் வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. சமூகத்தின் பிடிவாதாமா? அல்லது இஸ்லாத்தின் பொருத்தமற்ற வழிகாட்டலினால் எழுந்துள்ள பிரச்சினையா? இந்த விவகாரத்தை வைத்து அரசியல் செய்யப்படுகிறதா? முஸ்லிம் சமூகம் வேண்டுமென்றே பழிவாங்கப்படுகின்றதா? என்று பல கேள்விகள் எழுப்பப்பட்டும் வருகின்றன. இந்நிலையில், கோவிட்- 19 காரணமாக மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்குமாறு…

  15. பிழையாக வழிநடத்தும் மதவாதமும் இனவாதமும் காரை துர்க்கா / 2019 மே 07 செவ்வாய்க்கிழமை, பி.ப. 07:47 Comments - 0 அழகிய இலங்கைத் தீவை, கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி பயங்கரவாதம் பந்தாடியது. நாட்டின் அனைத்து இன, மத, மொழி மக்களும், இனி என்ன நடக்கும் என நடுங்கியவாறு இருந்தார்கள்; இருக்கின்றார்கள். ஒட்டுமொத்த நாடுமே அதிர்ந்தது ஆட்டம் கண்டது. இந்நிலையில், ஏப்ரல் 23ஆம் திகதி அமைச்சர்களின் விசேட சந்திப்பு நடைபெற்றது. அதையடுத்து, தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன், ஊடகவியலாளர்களோடு உரையாடினார். அதன் போது, “இந்த நாட்டில் இன்று, இனவாதத்துக்கு அரச ஆசீர்வாதம் இல்லை என்பது, நிம்மதி தரும் உண்மை ஆகும்” என்பதாகக் கரு…

  16. அர­சி­யலைத் தாண்­டிய பொரு­ளா­தார அடா­வ­டித்­தனம் உலக ஒழுங்கை மீறி பொரு­ளா­தா­ரத்தை அபா­யத்தில் தள்ளும் ட்ரம்ப் சதீஷ் கிருஷ்­ண­பிள்ளை உலக வல்­ல­ரசின் ஜனா­தி­பதி பதவி. அந்தப் பத­வியை அலங்­க­ரிப்­பவர் சற்று நிதானம் தவ­றி­ய­வ­ராக இருந்தால் போதும். ஒட்­டு­மொத்த உல­கமும் பாது­காப்­பற்­ற­தாக மாறி விடும். இன்­றைய அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனல்ட் ட்ரம்ப். தாம் மன­நல ஆரோக்­கி­யத்­துடன் இருப்­பதை உள­வியல் மருத்­துவ சோத­னைகள் மூலம் நிரூ­பிக்க நிர்ப்­பந்­திக்­கப்­பட்ட தலைவர். உலக நலன் கரு­திய மரபு சார்ந்த சிந்­த­னை­களைத் தாண்டி, வல்­ல­ரசு மனப்­பான்­மை­யுடன் முதலில் அமெ­ரிக்கா(America First) என்ற கொள்­கையை முன்­னி­றுத்­தி­யவர். அதன் அடிப்…

  17. படை குவிப்புக்கு புதிய நியாயம் 2017ஆம் ஆண்­டுக்­கான வர­வு­செ­ல­வுத்­திட்­டத்தில் பாது­காப்பு அமைச்­சுக்­கான நிதி ஒதுக்­கீடு தொடர்­பாக கடந்­த­வாரம் நடந்த குழு­நிலை விவா­தத்தின் போது, பல்­வேறு தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருக்­கின்­றன. உள்­நாட்டு, வெளி­நாட்டு பாது­காப்பு அச்­சு­றுத்­தல்கள் இல்­லாத சூழ­லிலும், முப்­ப­டை­க­ளையும் பலப்­ப­டுத்தும் திட்­டத்தில் அர­சாங்கம் உறு­தி­யாக இருக்­கி­றது என்­பது இதன் மூலம் தெரி­ய­வந்­தி­ருக்­கி­ றது. அடுத்த ஆண்டு பாது­காப்­புக்கு, 284 பில்­லியன் ரூபா ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. புதிய போர் விமா­னங்­களின் கொள்­வ­னவு, ஆழ்­கடல் கண்­கா­ணிப்புக் கப்­பல்கள் கொள்­வ­னவு, இரா­ணு­வத்தை மறு­சீ­ர­மைக்கும் திட…

  18. - எம்.றொசாந்த் 'தமிழத் தேசிய அரசியல் என்பது வணிகம் அல்ல தியாகம். உண்மையான இலட்சியத்திற்காக உயிரிழந்தவர்களின் குருதியில் நின்றுதான் நாங்கள் இங்கே தேசியம் பேசுகின்றோம். எனவே நாங்கள் தியாகம் செய்தே எமது தேசியத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்' என வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் மற்றும் தோழமைக் கட்சிகளினை ஒன்றிணைத்த மாநாடு ஞாயிற்றுக்கிழமை (20) யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 'போரின் தாக்கம், போரின் கொடுமை காரணமாகவே நான் அரசியலில் பிரவேசித்தேன். இந்தப் போர் எமது தமிழ் சகோதரிகள் மத்தியில் பாரிய மாற்றத்தின…

  19. மேற்குலகம் ஏன் பதற்றமடைகின்றது? | அரசியல் களம் | போரியல் ஆய்வாளர் அருஸ்

  20. கொரோனா – நவீன பஸ்மாசுரன்? – நிலாந்தன் March 21, 2020 இந்து புராணங்களில் பஸ்மாசுரன் என்று ஓர் அசுரன் உண்டு. தான் தொட்டதெல்லாம் பஸ்பமாக வேண்டும் என்று பஸ்மாசுரன் சிவபெருமானிடம் வரம் கேட்கிறான். வரம் கிடைத்ததும் எதிர்ப்படும் எல்லாரின் தலையிலும் கைவைக்க தொடங்குகிறான். அவன் தொட்டதெல்லாம் சாம்பல் ஆகிறது. அவனைக் கண்டதும் மூவுலகதவரும் ஓடத் தொடங்குகிறார்கள். சிவபெருமானும் ஓட வேண்டியதாயிற்று. ஒரு கட்டத்தில் மகாவிஷ்ணு ஓரழகிய மோகினியாக மாறி பஸ்மாசுரனை மயக்கி அவன் தலையில் அவன் கையை வைக்க செய்கிறார். சீன அதிபர் கொரோனா வைரஸை ஓர் அரக்கன் என்று வர்ணித்தார். கொரோனா வைரஸிலிருந்து தப்புவது என்று சொன்னால் பஸ்மாசுரனிடமிருந்து தப்புவது போல ஒருவர் மற்ற…

  21. பயங்கரவாதம்: முகம் மூடும் முகமூடி பொருட்கள் உலகளாவிய காலமொன்றிருந்தது. பின்னர் சேவைகள் உலகளாவத் தொடங்கின. பின்னர் அரசியலும் பொருளாதாரமும் உலகளாவின. நடை, உடை, பாவனைகள் அவற்றைத் தொடர்ந்தன. உலகமயமாக்கல் இதைச் சாத்தியமாக்கியது என்று சிலாகிக்கப்பட்டது. இன்று பயங்கரவாதம் உலகளாவியுள்ளது. உலகமயமாக்கல் அதற்கான வழிவகைகளைச் செய்து கொடுத்துள்ளது. எதற்காக உலகமயமாக்கல் போற்றப்பட்டதோ, இன்று அதற்காகவே தூற்றப்படுகிறது. எவ்வாறு உலகமயமாக்கல் ஏற்படுத்திய சீர்கேடுகளை இலகுவில் சீர்படுத்தவியலாதோ, அதேபோலவே இன்று உலகமயமாகியுள்ள பயங்கரவாதமும் எல்லைகளின்றித் தொடர்கிறது. இரண்டுக்குமான ஒற்றுமை, இரண்டுமே திட்டமிட்டு சில நலன்கள…

  22. இறுதிப்போரின் போது சரணடைந்தவர்களை கொன்றுவிட்டதாக கோட்டாபய சொன்னார் – அம்பலப்படுத்துகின்றார் ஸ்டீபன் ரப் 7 Views “கடந்த காலங்களில் பொறுப்புக்கூறலிற்கு என்ன நடந்தது என ஆராய்வதற்காக ஆணைக் குழுவொன்றை சிறீலங்கா அரசாங்கம் நியமித்துள்ளதாக அறிகின்றோம். இது கதவை மூடுவதற்கான இன்னொரு முயற்சி. நீதியை தடுப்பதற்கான இன்னொரு முயற்சி” என அமெரிக்காவின் யுத்த குற்ற விவகாரங்களிற்கான முன்னாள் தூதுவர் ஸ்டீபன் ரப் தெரிவித்துள்ளார் உலகத் தமிழர் பேரவை, மனித உரிமைகள் மற்றும் சர்வதேச நீதிக்கான நிலையம், இலங்கையில் நீதி மற்றும் சமாதானத்துக்கான பரப்புரை, கனேடிய தமிழ் காங்கிரஸ் ஆகியன இணைந்து முன்னெடுத்த இணையவழி கருத்தரங்கில் கருத்து தெரிவிக்கையில் …

  23. அமைச்சரவை மாற்றம்: ஏன் - எதற்கு? கடந்த 2015 ஓகஸ்ட் மாதம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், ஐ.தே.கவும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து, அமைத்த கூட்டு அரசாங்கத்தின் அமைச்சரவை முதல்முறையாக மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. அமைச்சரவை மாற்றம், இந்த வாரம், அடுத்த வாரம் என்று கடந்த பல மாதங்களாகவே செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. ஜனாதிபதியும் பிரதமரும் கூட அமைச்சரவையில் மாற்றங்களைச் செய்வதற்கு பலமுறை முயற்சிகளை மேற்கொண்டிருந்த போதிலும், அவை வெற்றி பெறவில்லை. அமைச்சரவை மாற்றம் ஒன்றுக்காக இலங்கையின் ஜனாதிபதி ஒருவர் இந்தளவுக்கு நெருக்கடிகளைச் சந்தித்தமை இதுவே முதல் முறை. அமைச்ச…

  24. வாலில்லாத காளை மாடும் இலையான்களும் - நிலாந்தன் கடந்த ஒக்டோபர் மாதம் 10ஆம் ஒரு சூம் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. பரந்துபட்ட ஒரு மக்கள் இயக்கத்துக்கான குறிக்கோள்கள் குறித்து அதில் ஆராயப்பட்டன. பேராசிரியர் அர்ஜுன பராக்கிரம உட்பட முஸ்லிம் தமிழ் வளவாளர்கள் உரையாற்றினார்கள். தமிழ்ப் பகுதிகளில் உள்ள அரசியல் செயற்பாட்டாளர்களும் அரசசார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்த செயற்பாட்டாளர்களும் அதில் பங்குபற்றினார்கள். இது நடந்து கிட்டத்தட்ட மூன்று கிழமைகளின் பின் இம்மாதம் மூன்றாம் திகதி ஒரு சந்திப்பு யாழ்ப்பாணத்தில் யு எஸ் ஹோட்டலில் இடம் பெற்றது. பேராதனை பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த புத்திஜீவிகளும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் நாடா…

  25. அலெப்போ: சிரிய யுத்தத்தின் திருப்புமுனை - தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ ஊடகங்கள் எதைச் சொல்லுகின்றன என்பதை விட எதைச் சொல்லாமல் தவிர்க்கின்றன என்பது முக்கியமானது. சொல்லாமல் தவிர்க்கப்படுகிற விடயங்களின் அரசியல் முக்கியத்துவம் பெரிது. எமக்குச் சொல்லப்படுபவை உண்மைகளா என்பதைத் தேடியறிய வேண்டிய கட்டாயத்தில் வாழ்கிறோம் என்பதை அண்மைய நிகழ்வுகள் மீண்டுமொருமுறை நினைவூட்டியுள்ளன. தகவல்களைப் பரப்பும் வழிகள் நவீனமயமாக்கப்பட்டுள்ள சூழலில், உண்மைக்கும் பொய்க்கும் இடையிலான இடைவெளி மெதுமெதுவாக இல்லாமல் போகிறது. பொய்கள் மெய்களாகப் பரப்பப்படுகையில், மெய்யைப் பொய்யென இலகுவில் நம்ப வைக்க முடிகிறது. இது ஆபத்தானது. இதை உணர மறுக்கும் சமூகங்கள், இதன்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.