Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. நிற்பது பெரிதல்ல நின்ற இடத்தில் நிற்க வேண்டும் -பா.உதயன் பல படைகளை உருவாக்கி ஒரு காலம் சிங்கள அரசையும் அதன் படைகளையும் நிலை குலைத்து போராடி தமிழர் அடையாளத்தை உலகுக்கு சொல்லி யாருக்காகவும் தன் கொள்கையை விட்டுக்கொடுக்காது ,எவனுக்கும் தலை வணங்காமல் பல அரசியல் கட்சிகளை இணைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ( TNA ) என்ற அரசியல் பலத்தை உருவாக்கி எல்லோரையும் நிற்பது பெரிதல்ல நின்ற இடத்தில் நிற்க வேண்டும். “Not only must you stand, but you must also stay.” என்று வட கிழக்கு உட்பட நாம் தமிழர் என்ற ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து போராடி மடிந்த தலைவர் பிரபாகரனுக்கு இருந்த வீரம், நெஞ்சுரம், திறமை, பொறுப்பு, சுய நலன் இல்லாத பார்வை இதில் ஏதாவது இன்று தேர்தலில் நிற்கும் தமிழ் தலைவர்…

  2. சிங்கங்களும், பன்றிகளும், அறுவான்களும், குறுக்கால போவான்களும்?- நிலாந்தன். adminOctober 13, 2024 கடந்த 15 ஆண்டுகளில் எல்லா ஜனாதிபதித் தேர்தல்களின் போதும் தமிழ் மக்கள் யாரைத் தோற்கடிக்க வேண்டும் என்று தீர்மானித்து, திரண்டு வாக்களித்தார்கள். அங்கே ஒரு திரட்சி இருந்தது. அதேசமயம் ஏனைய தேர்தல்களில் குறிப்பாக, நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களைத் திரட்ட முடியவில்லை. தமிழ் மக்கள் சிதறி வாக்களித்தார்கள். இம்முறை தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் உடைவானது அந்தச் சிதறலை மேலும் அதிகப்படுத்துமா? நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்திய பொழுது “தேசமாகத் திரள்வோம்” என்று கூறப்பட்டது. ஆனால் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிகளாகச் சி…

  3. (புருஜோத்தமன் தங்கமயில்) இலங்கைத் தமிழரசுக் கட்சி ‘தனித்து’ தன்னுடைய வீட்டுச் சின்னத்தில் 47 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தப் பொதுத் தேர்தலில் களம் காண்கிறது. ஏற்கனவே, கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டு, ரணில் அரசாங்கத்தினால் ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெற்றிருந்தால், அது தமிழரசுக் கட்சியின் தனிப் பயணத்தின், மீள்வருகையாக பதிவாகியிருக்கும். இந்தத் தேர்தலில் தமிழரசுக் கட்சியை வெற்றியடைய வைத்து, தங்களின் தனியாவர்த்தனத்துக்கான அங்கீகாரத்தை மக்கள் வழங்குவார்கள் என்று அந்தக் கட்சியின் முடிவெடுக்கும் தலைமை நம்புகின்றது. குறைந்தது எட்டு பாராளுமன்ற ஆசனங்களைப் பெறுவது கட்சியின் எதிர்பார்ப்பு; அதிகபட்சம் 12 ஆசனங்கள். இந்த எண்ணிக்கையைவிட குறைவான ஆசனங்…

  4. சுமந்திரனால் காலியாகும் “வீடு” – அகிலன் October 13, 2024 “வீட்டிலிருந்து வெளியே வர எமக்கு விருப்பமில்லை. ஆனால், அங்கு இப்போது ஒரு தனிநபரின் ஆதிக்கம்தான் மேலோங்கியிருக் கின்றது. அந்த ஒருவரால் பலா் வெளியேறிக் கொண்டிருக்கின்றாா்கள். இறுதியாக கட்சித் தலைவா் மாவை சேனாதிராஜா கூட பதவியைத் துறந்துவிட்டாா்.” இது யாழ். மாவட்ட முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினா் ஈ.சரவணபவனின் கூற்று. தமிழரசுக் கட்சியிலிருந்து வெளியேறி, ஜனநாயக தமிழரசுக் கூட்டணி என்ற பெயரில் புதிய கட்சியை அமைத்து யாழ். மாவட்டத்தில் களமிறங்கியுள்ள இந்தக் கட்சிக்கு பிரபல சட்டத்தரணி கே.வி.தவராஜா தலைமைதாங்குகின்றாா். யாழ்ப்பாணத்தில் வெள்ளிக்கிழமை இக்கட்சியின் சாா்பில் வேட்புமனுவைத் தாக்கல் செய்த பின்னா் சரவணபவன்…

  5. "திண்ணைக் காற்று" [நவம்பர் 14, 2024 அன்று நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் முன்னிட்டு] "திண்ணைக் காற்று புயலாய் வீசுது கண்ணைத் திறந்து மின்னலாய் ஒளிருது மண்ணைக் காப்பாற்ற இடியாய் முழங்குது ஒன்றாய் இணைய எனோ மறுக்குது?" "தேர்தல் வருகுது மனத்தைக் குழப்புது தேசம் இருந்தும் பிரிந்து நிற்குது தேய்வு இல்லா ஒற்றுமை இல்லாமல் தேசியம் பற்றி மேடையில் கத்துது?" "ஆவதும் உன்னாலே அழிவதும் உன்னாலே ஆற அமர்ந்து ஆழமாய் சிந்திக்காயோ ஆக்கம் கொண்ட கொள்கை வகுத்து ஆசை துறந்து அர்ப்பணிப்பு செய்யாயோ?" "உறவை மறவாதே உண்மையைத் துறக்காதே உலகம் உனதாகும் உள்ளம் திறந்தால் உடம்பு ஆற திண்ணையில் இருப்பவனே உயிரோடடம் உள்ள கருத்துக்களை பகிராய…

  6. -நஜீப் பின் கபூர்- ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற போது அதன் முடிவுகளை முன்கூட்டியே தெரிந்து வைத்திருந்த ஒரு சிறு கூட்டமும், இல்லை போட்டியில் நமது தரப்புக்குத்தான் வெற்றி வாய்ப்பு என்று கடைசி நிமிடம் வரை நம்பிக் கொண்டும் இருந்த மற்றுமொரு பெரும் கூட்டமும் நாட்டில் இருந்தது. அந்தத் தேர்தல் பற்றி இப்போது நாம் பேச வரவில்லை. ஆனால் வருகின்ற பொதுத் தேர்தலில் முடிவுகள் என்ன என்பதனை முன்கூட்டி தெரிந்து கொண்டுதான் பெரும்பாலானவர்கள் இந்தத் தேர்தலில் இறங்கி இருக்கின்றார்கள் என்பது தெளிவாகத் தெரிகின்றது. ஆனால், இன்று ஜனாதிபதித் தேர்தலில் பின்னடைந்த அணிகளில் இருந்து போட்டியிடுகின்ற கட்சிகள் – கூட்டணிகளின் வேட்பாளர்கள் தமது வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். தமது …

  7. கலாநிதி ஜெகான் பெரேரா இலங்கையின் ஜனாதிபதி தேர்தலின் முடிவில் அக்கறையுடன் கவனம் செலுத்திய வெளிநாட்டு தூதரகங்கள் ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்கவின் வெற்றிக்கு பிறகு ஒரு கணமேனும் தாமதிக்காமல் அவருக்கு நேசக்கரம் நீட்டின. தேர்தலுக்கு முன்னதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே மேற்குலக நாடுகளின் விருப்பத்துக்குரியவராக விளங்கினார் போன்று தோன்றியது. பொருளாதாரத்தை விக்கிரமசிங்க கையாண்ட முறையைப் பாராட்டி அந்த நாடுகள் அடிக்கடி அறிக்கைகளை வெளியிட்டன. சர்வதேச நாணய நிதியமும் அதேபோன்று அவருக்கு ஆதரவான அறிக்கைகளை வெளியிட்டது. விக்கிரமசிங்கவின் அரசாங்கமும் மேற்குலக நாடுகளின் தலைமையிலான நடவடிக்கைகளுடன் தன்னை அடையாளப்படுத்துவதற்கு விசேட முயற்சிகளை முன்னெடுத்தது…

  8. யுத்த குற்றச்சாட்டுகள் குறித்து புதிய அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும்; அரசியல் தலைவர்கள் கூட வெளிநாடு செல்ல முடியாத நிலையேற்படும் - இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவர் போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்காவிட்டால் அரசியல் தலைவர்கள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள முடியாத நிலையேற்படும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி அனுரமத்தேகொட தெரிவித்துள்ளார் பேட்டியொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, கேள்வி ; ஒவ்வொரு வருடமும் இலங்கை ஜெனீவாவில் யுத்த குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றது-ஐக்கிய நாடுகளின் ஹேக் தீர்ப்பாயத்தில் பணியாற்றியவர் என்ற அடிப்படையில் பிரச்சினைக்கு …

  9. "விழித்தெழு தமிழா!" [நவம்பர் 14, 2024 அன்று நடக்கவிருக்கும் நாடாளு மன்றத் தேர்தல் முன்னிட்டு] [ஏப்ரல் 2004 பொதுத் தேர்தலில், தமிழர் கூட்டணி, ஓரு அணியில் ஆனால் இலங்கைத் தமிழரசுக் கட்சியாக) வடக்கு மற்றும் கிழக்கில் 22 பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றது இன்று இது ஒரு தூர கனவாகி, சென்ற 2019 அது 11 ஆக, அரைவாசியாக மாறியதை எனோ இன்னும் அவர்கள் உணரவில்லை? அப்படி என்றால் இந்த 14 நவம்பர் 2024 இல் ??] "உறக்கம் என்பது விழிகள் காணட்டும் உள்ளம் என்றுமே விழித்தே இருக்கட்டும் உயிரற்ற அரசியல் தலைமை ஒழியட்டும் உயர்ந்த ஒற்றுமை நாட்டி உழைக்கட்டும்!" "அடுப்படியிலே அடைந்து கிடந்தது போதும் அழகு வடிவமே வெ…

  10. அமெரிக்க அதிபர் தேர்தலும், உலக அரசியல் சூழலும்: தமிழர்கள் அறிய வேண்டியவை என்ன? Oct 07, 2024 07:00AM IST ஷேர் செய்ய : ராஜன் குறை உலகின் எந்தப் பகுதியுமே இன்று தனித்தீவு அல்ல. மிக நெருக்கமாகப் பின்னப்பட்ட பொருளாதார வலைப்பின்னல் அனைத்து சமூகங்களையும் பிணைத்துள்ளது. நீங்கள் கேட்கலாம். இது புதியதல்லவே, உலகில் தூர தேசங்களிடையே வர்த்தகம் என்பது பன்னெடுங்காலமாக இருந்து வந்துள்ளதே என்று. உதாரணமாக, தமிழ்நாட்டில் ரோமப் பேரரசின் நாணயங்கள் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டன என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். ஆனால், இத்தகைய வர்த்தகப் பரிமாற்றங்கள் உள்நாட்டு பொருளாதாரத்தை, உள்ளூர் பொருளாதாரத்தைத் தீர்மானிப்பவையாக இருக்கவில்லை. ஏனெனில் பண்டங்கள் அனைத்தையும் தொலைதூரங…

  11. அ. டீனுஜான்சி 64 வயதுடைய மக்கரி ராஜரத்னம், கந்தப்பளையைச் சேர்ந்தவர், தனது இடது கண்ணில் ஏற்பட்ட பார்வைக் குறைபாட்டினை நிவர்த்திப்பதற்காக கடந்த ஆண்டு நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 2023 ஏப்ரல் 5 ஆம் திகதி கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பின்னர், ஏப்ரல் 6ஆம் திகதி வீடு திரும்பினார். அப்போது வைத்தியசாலையால் வழங்கப்பட்ட பிரட்னிசோலோன் கண்சொட்டு மருந்தைப் பயன்படுத்தினார். அதன் பின்னராக, அதிகமான கண்ணீர் வெளியேறல், கண் வலி, தலைவலி போன்ற கடுமையான நோய் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டார். இதனால் மே 10 ஆம் திகதி கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோத…

  12. Published By: DIGITAL DESK 7 06 OCT, 2024 | 05:14 PM ஆர்.ராம்- ‘தமிழ்த் தேசியம்’ தான் வடக்கு, கிழக்கை மையப்படுத்திய அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளினதும் பிரதான கோசமாகும். ஆனால் அந்த அரசியல் கட்சிகளுக்குள் தங்களில் யார் தமிழ்த் தேசியவாதிகள் என்பதில் பாரிய முரண்பாடுகள் காணப்படுகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கோட்பாடுகளுடன் ஒத்துப்போகக் கூடிய ஆகக்கூடுதலான விடயங்களை உள்வாங்கியிருக்கின்ற அரசியல்கட்சிகள் ‘தூய தமிழ்த் தேசியவாத சக்திகளாக’ அல்லது ‘தமிழர்களின் உரிமைக்கான குரல்களாக’ அடையாளப்படுத்தப்படுகின்றன. அதே நேரம், மத்திய அரசாங்கத்துடன் ஒன்றித்துப் பயணிக்கக் கூடிய அரசியல் கட்சிகள் அல்லது அங்கத்துவத்தினைக் கொண்ட…

  13. திசராணி குணசேகர “மழையைத் தேடுகிறேன் மழையைத் தேடுகிறேன்." – கில் ஸ்கொ ட்-ஹே ர ன் (அமெரிக்காவில் குளிர்காலம்) ஜனாதிபதி திஸாநாயக்கவும் அவரது கட்சியும் அவர்களின் நீடித்த ஆதிகால விசுவாசங்களால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு அப்பால் சென்று உண்மையான சமத்துவத்தின் தளத்தில் சிங்களவர்கள் அல்லாத இலங்கையர்களிடம் விண்ணப்பிக்க முடியுமா? தேர்தல் ஆணைக்குழு தொடர்ந்து உலுக்கி வருகிறது. விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு உரம் மற்றும் எரிபொருள் மானியங்களை அதிகரிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் வழங்கப்பட்ட உத்தரவை பாராளுமன்றத் தேர்தல் காலமென இந்த வாரம், நிறுத்தியிருந்தது. அதேபோன்று ஜனாதிபதித் தேர்தலின் போது ரணில் விக்கிரமசிங்கவின் பல கொடுப்பனவுகளை நிறுத்தி…

  14. 07 OCT, 2024 | 12:57 PM வீரகத்தி தனபாலசிங்கம் ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களுக்காக அலைந்த களைப்பு போவதற்கு முன்னதாக அரசியல் கட்சிகள் பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டன. குறிப்பாக, பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களில் தோல்வியடைந்தவர்களின் கட்சிகள் தோல்வியின் தாக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு முன்னதாக மீண்டும் தேசிய தேர்தல் ஒன்றை எதிர்நோக்கவேண்டியிருக்கிறது. புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேர்தல் பிரசாரங்களின்போது நாட்டு மக்களுக்கு உறுதியளித்ததைப் போன்று பதவியேற்ற மறுநாளே பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு உத்தரவிட்டார். கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய நியமனப்பத்திரங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் எதிர்வரு…

  15. கந்தையா அருந்தவபாலன் இலங்கை மக்களுக்கு வளமான வாழ்வையும் அழகான நாட்டையும் தருவதாக வாக்குறுதியளித்த அனுரகுமார திசநாயகவை இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக நாட்டு மக்கள் தெரிவு செய்துள்ளார்கள். ஜனாதிபதியாக பதவியேற்ற அனுர தானும், தனது கட்சிக்கு நாடாளுமன்றத்திலிருந்த மூன்று உறுப்பினர்களும் சேர்ந்து அமைச்சுப் பொறுப்புகளைப் பகிர்ந்த பின் நாடாளுமன்றத்தைக் கலைத்து புதிய நாடாளுமன்றத் தேர்தல் ஒன்றுக்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆந் திகதி தேர்தல் நடைபெறவிருப்பதுடன், 21 ஆந் திகதி புதிய நாடாளுமன்றம் கூடவுள்ளது. இலங்கையின் அரசியலமைப்பின்படி ஜனாதிபதிக்கு அதிகளவு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தாலும் சட்டவாக்கத்துறையான நாடா…

  16. பார் பெர்மிற் – நிலாந்தன் அரசுத் தலைவர் அனுர, பார் பெர்மிற் – மதுச்சாலை அனுமதிகள் தொடர்பான விடயத்தைக் கைவிட்டாலும் சுமந்திரன் அதனைக் கைவிட மாட்டார் போலத் தெரிகிறது என்று ஒரு வெளிநாட்டில் வசிக்கும் நண்பர் முகநூலில் எழுதியுள்ளார். அதில் உண்மை உண்டு. தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு பகுதியினருக்கு ரணில் விக்கிரமசிங்க மதுச்சாலை அனுமதிப் பத்திரங்களை வழங்கினார் என்ற குற்றச்சாட்டை பொதுவெளியில் அதிகமாக முன்வைத்ததும் அதைப் பிரசித்தப்படுத்தியதும் சுமந்திரனும் அவருடைய அணியினரும்தான். ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தன் வசப்படுத்துவதற்கு அவ்வாறு மதுச்சாலை அனுமதிப் பத்திரங்களை வழங்கியதாகக் குற்றஞ் சாட்டப்படுகின்றது. தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்…

  17. "உறவை மறவாதே" [நவம்பர் 14, 2024 அன்று நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் முன்னிட்டு] "உறவை மறவாதே நட்பைக் குலைக்காதே உலகம் உனதாகும் கைகள் இணைந்தாலே! உயிரும் உடலுமாக ஒன்றி வாழ்ந்தாலே உயர்ச்சி பெறுவாய் மனிதம் காப்பாற்றுவாய்!" "தேர்தல் வருகுது மனத்தைக் குழப்பாதே தேசம் ஒன்று உனக்கு உண்டே! தேய்வு அற்ற உறவைச் சேர்த்து தேசியம் காக்க ஒன்றாய் இணை!" "ஆதி மொழி பேசும் மனிதா ஆசை துறந்து அர்ப்பணிப்பு செய்யாயோ? ஆவதும் உன்னாலே அழிவதும் உன்னாலே ஆறஅமர்ந்து ஒன்றாய் நின்றால் என்ன?" "உறவை மறவாதே உண்மையைத் துறக்காதே உலகம் உனதாகும் உள்ளம…

  18. பட மூலாதாரம்,PMD SRI LANKA படக்குறிப்பு, இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்தித்தார். கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலின் ஊடாக ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர், முதல் தடவையாக இலங்கைக்கு வருகைத் தந்த உயர்நிலை வெளிநாட்டு இராஜதந்திரியாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வரலாற்றில் பதிவாகியுள்ளார். இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் கடந்த 21 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகார ஜனாதிபத…

  19. எதிர்வரும் பொதுத் தேர்தலில் தேசிய மற்றும் தமிழ் அரசியலின் வகி பாகம் என்ன? October 5, 2024 — வி.சிவலிங்கம் — நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலும், அதன் முடிவுகளும் புதிய அரசியல் சகாப்தத்தைத் தோற்றுவித்துள்ளன. சுதந்திரத்திற்குப் பின்னதான அரசியல் வரலாற்றில் முதன் முறையாக அதிகார வர்க்கத்திற்கு அப்பால் அரசியல் அதிகாரம் கை மாற்றப்பட்டிருக்கிறது. அதுவும் சாமான்ய குடும்பத்தில் பிறந்து, அதிகாரம் என்பதை சுவைத்து அனுபவிக்காத குடும்பத்தைச் சார்ந்த ஒருவர் அதுவும் மிகவும் கொடுமையான ஒடுக்குமுறைகளுக்கு முகம் கொடுத்த அமைப்பினைச் சார்ந்த ஒருவர் மிக நீண்ட போராட்டத்தின் பின்னணியில் இன்று மக்களால் அதிகாரத்தில் அமர்த்தப்பட்டுள்ளார். இதற்காக அவர்கள் பல சகாப்தங்கள் சளைக்கா…

  20. அநுரகுமார திசாநாயக்கவை (Anura Kumara Dissanayake) தோற்கடிக்க வேண்டுமென்று ஆசைப்பட்ட ஒரு நாடு ( இந்தியா) எப்படி அவருடன் ஒரு சுமூகமான ஒரு உறவை பேண முடியும் என பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் வேல் தர்மா கேள்வியெழுப்பியுள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அநுரகுமார திசாநாயக்கவும் இந்தியாவும் ஒருவரையொருவர் கைவிட முடியாத நிலையிலே உள்ளனர். இந்திய வெளிவிவகாரதுறை அமைச்சரின் இலங்கைகைக்கான பயணம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது. இந்தியாவை பொறுத்தவரையில் இலங்கையில் ஏனைய நாடுகள் தலையீடுவதை விரும்பவில்லை. இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சரின் இலங்கை விஜயத்தின் போது ஜனா…

  21. பாவ மன்னிப்பு பெற்ற சிறீதரன்.. சுமந்திரனின் திடீர் மாற்றம் | இரா மயூதரன்

    • 1 reply
    • 427 views
  22. 05 OCT, 2024 | 12:29 PM டி.பி.எஸ். ஜெயராஜ் இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கவேண்டும் என்ற கோரிக்கை ஒன்றும் புதியது அல்ல. அந்த ஆட்சிமுறை என்றைக்கு அறிமுகப்படுத்தப்பட்டதோ அன்றிலிருந்தே அதை ஒழிக்கவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டு வந்திருக்கிறது. ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கப் போவதாக தேர்தல்களில் வாக்குறுதி அளித்து மக்களின் ஆணையைப் பெற்று ஜனாதிபதியாக ஆட்சியதிகாரத்துக்கு வந்தவர்கள் எவருமே அதை ஒழிக்கவில்லை என்பது அண்மைக்கால வரலாறு. இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் பிரதான வேட்பாளர்களில் அநுரகுமார திசாநாயக்கவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கப்போவதாக மக…

  23. The Sun/Son shines - சுப.சோமசுந்தரம் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டின் துணை முதல்வராகப் பொறுப்பேற்றது தொடர்பாக எனது எண்ணவோட்டத்தைப் பதிவு செய்ய விழைவு. தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தமட்டில் இது எப்போதோ எதிர்பார்த்த நிகழ்வோ, என்னவோ ! எனவே பெரிய அளவில் எவ்விதச் சலசலப்பும் பொதுவெளியில் நிகழவில்லை எனலாம் - ஏதோ ஒன்றிரண்டு எதிர்க்கட்சியினர் வாரிசு அரசியலுக்கு எதிர்ப்பு என்ற பெயரில் தமது வயிற்றெரிச்சலைக் கொட்டியது தவிர. அதுவும் இந்திய அரசியலில் வாரிசு அரசியல் என்பது …

  24. தமிழர் அரசியல் களத்தில் இளைஞர்கள் களமிறங்க வேண்டுமென்றால் சில முதியவர்கள் தாமாக முன்வந்து ஓய்வுபெற வேண்டுமென்று பிரித்தானியாவில் (United Kingdom) இருக்கும் அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் (D. Dibhakaran) சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த விடயத்தை லங்காசிறி ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் 15 ஆண்டுகளாக ஈழத்தமிழர்கள் எந்தவொரு காத்திரமான அரசியலையும் முன்னெடுக்கவில்லை. தமிழர் அரசியல் களம் அழிவின் விளிம்பில் தமிழ் தேசிய கட்டுமானம் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றது. தமிழ் தரப்பில் சில முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள…

  25. இந்தக் காணொளியில் மதுபானசாலை அனுமதிப்பத்திரம் எடுத்தவர்களின் குணாதிசயங்கள் அனுபவங்கள் தமிழ்தேசியம் என்று சொல்லிச் சொல்லியே எப்படி தமிழ்மக்களை அழிக்கிறார்கள் என்று பல்வேறு கோணத்தில் அலசப்படுகிறது. இடையில் ஒரு உதாரணத்துக்கு தேசியதலைவரின் மதிநுட்பத்தையும் குறுகிய சிந்தனை இல்லாமல் நீண்டகாலமாக மக்கள் வளமுடன் வாழ வேண்டும் என்று எண்ணி நந்திக் கடலில் இரால்பண்ணை வைக்கலாம் நிறைய லாபம் எடுக்கலாம் என்று ஒரு திட்டத்தை வைத்த போது இதில் அனுபவம் இல்லாத தலைவர் இரால்பண்ணை எங்கெங்கே செய்கிறார்கள் என்று ஆராய்ந்து நீர்கொழும்மு பக்கத்திலிருந்தவர்களை வரவழைத்து அதன் நன்மைதீமை பற்றி முழுமையாக ஆராய்ந்து கடைசியில் அந்த திட்டம் வருமானமாக இருந்தாலும் இந்த மண்ணும் கடலும் நச்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.