அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
வேலையில்லாதவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உற்பத்திசார் பொருளாதார கொள்கைகளே தேவை - கருணாகரன் வேலைகோரும் பட்டதாரிகள் வீட்டிலும் வீதியிலுமாக நிறைந்து போயிருக்கிறார்கள். படித்துப் பட்டம் பெற்ற பிறகு வேலை கிடைக்கவில்லை என்றால், அவர்களால் என்ன செய்ய முடியும்? வேலை கேட்டுப்போராடுவார்கள். இந்தப் போராட்டத்தைப் பற்றி அரசாங்கம் அக்கறைப்படவில்லை என்றால், அதைக் கோவிப்பார்கள், அரசாங்கத்துக்கு எதிராகக் குரல் எழுப்புவார்கள். கூடவே தங்களுக்கு முன்னே உள்ள அரசியல்வாதிகளையும் அதிகார அமைப்புகளையும் எதிர்ப்பார்கள். இப்போது நடந்து கொண்டிருப்பது இதுதான். மட்டக்களப்பிலும் யாழ்ப்பாணத்திலும் பட்டதாரிகளின் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இங்க…
-
- 0 replies
- 330 views
-
-
மருத்துவ ஊர்தி ஓட்டுநர் ஃபிரான்ஸிஸ் ஹாரிசன் தமிழில்: அகிலன் எத்திராஜன் ஓவியங்கள்: ரோஹிணி மணி கூடாரத்துக்குள்ளிருந்து ஒரு பெண்ணின் கால் துருத்திக்கொண்டிருப்பதை அவன் ஓரக் கண்ணால் பார்த்தான். அதில் அசைவு ஏதும் தெரியவில்லை. எனவே அவன் அதற்கு அதிகக் கவனம் கொடுக்கவில்லை. தற்காலிகத் தூக்குப் படுக்கைகளில் உயிரோடிருப்பவர்களை இழுத்துப் போட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதில் அவன் மும்முரமாயிருந்தான். எங்கு பார்த்தாலும் கதறலும், குழப்பமுமாய் இருந்தது. ஆனால் சாவைப் பார்த்துப் பார்த்து உணர்வு மரத்துப்போய் அவன் ஒரு ரோபோ போல இயங்கிக்கொண்டிருந்தான். அவன்கூட, அங்கே எளிதாக அப்படி விழுந்து கிடக்கக்கூடும் என்ற எண்ணம் பணியினூடே அவனுக்கு வந்து போனது. பன்முகத் த…
-
- 0 replies
- 351 views
-
-
கண்களை இழந்து ஓவியமா? ஆசியாக் கண்டத்தில் இலங்கை ஒரு சிறிய நாடு; அழகான நாடு. பல இயற்கை வளங்களையும் தன் அகத்தே கொண்ட நாடு. இவ்வாறு இருந்த போதிலும் பல ஆயிரம் பிரச்சினைகளுக்கு மத்தியிலேயே இந்த நாட்டு மக்கள் வாழ்கின்றனர். பொதுவாக மக்கள் அனுபவிக்கும் பிரச்சினைகளில் பல, இனப்பிரச்சினையின் தொடர்ச்சியான அறுவடைகளே. அதாவது பல தசாப்தமாகத் தொடரும் நீண்ட கால இனப்பிரச்சினையால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உதிரிகளாக ஏற்பட்ட பிரச்சினைகள் எனலாம். சிங்கள மக்களை நோக்கின் அவர்கள் நாளாந்தம் பலவாறான சமூக பொருளாதார பிரச்சினைகளுடன் வாழ்கின்றனர். இவற்றில் சில இனப்பிரச்சினையுடன் சம்பந்தம் இல்லாதவையாக இருக்கலாம். …
-
- 0 replies
- 649 views
-
-
வாழ்ந்தாலும் கேப்பாப்பிலவில் வீழ்ந்தாலும் கேப்பாப்பிலவில் தமது நிலைப்பாட்டில் மக்கள் உறுதி Share முல்லைத்தீவு மாவட்டம், கேப்பாப்பிலவு மக்கள் தங்கள் சொந்த வாழ்விடங் களில் மீள்குடியேறுவதில் மிக நீண்ட இழுபறி நிலை காணப்படுகின்றது. தமக்குச் சொந்தமான நிலங்களைக் கொண்ட 138 குடும்பங்க ளுக்கு மாற்று நிலம், வீடு போன்ற வசதி வாய்ப்புக்கள் அரசால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட போதி லும், அவர்கள் தங்கள் சொந்த நிலங்கள்தான் தமது வாழ்வாதாரத்துக்குத் தேவை எனக் கோரி தொடர் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களது போராட்டம் த…
-
- 0 replies
- 504 views
-
-
(S.Vinoth) காணாமல் போனவர்கள், கண்களுக்கு முன்பாக பிடித்துக்கொண்டு செல்லப்பட்டவர்கள் எங்கே இருக்கின்றார்கள் என்பது எமக்குத்தெரியாது. ஆனால் நாம் கண்டிருக்கின்றோம் யார் அவர்களை எங்கே கொண்டு சென்றார்கள். கொலை செய்தவர்களும் அவர்கள்தான். நீதி சொல்பவர்களும் அவர்கள்தான். நீதிபதியும் அவர்கள்தான் என்றால் எப்படி உண்மை வெளிவரப்போகுது என மன்னார் மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்கூரிய இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்தார். மாந்தை லூர்து அன்னை ஆலயத்தின் கொடியேற்றம் நேற்று புதன்கிழமை மாலை இடம் பெற்றது. இதன் போது காணமல்போன,கடத்தப்பட்டவர்களுக்காக விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. அதன் போது உரையாற்றுகையிலேயே மன்னார் ஆயர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ம…
-
- 0 replies
- 395 views
-
-
புலம்பெயர் சமூகத்திடமிருந்து தாயக மக்கள் எதிர்பார்ப்பது என்ன? புலம்பெயர்ந்திருக்கும் சமூகத்தினரிடமிருந்து தாயக மக்கள் எதிர்பார்ப்பது என்ன? அல்லது அவர்கள் எத்தகைய செயற்றிட்டங்களுக்கு உதவவேண்டும்”? என்று இரண்டு நாட்களுக்கு முன்பு, கேட்டார் புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடொன்றில் வாழ்கின்ற நண்பர் ஒருவர். யுத்தம் முடிந்து எட்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், எழுப்பப்பட்டிருக்கும் கேள்வி இது. இன்னும் சொல்லப்போனால், யுத்தத்துக்குப் பிறகு, இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்கள் நடந்த பிற்பாடு, எழுப்பப்பட்டிருக்கும் கேள்வி இது. இந்த இரண்டு தேர்தல்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பெரும்பான்மையாக வெற்றியடைந்த பிறகு, எழுப்பப்…
-
- 0 replies
- 331 views
-
-
தமிழ்த் தேசிய அரசியலிலிருந்து கிழக்கு மாகாணம் விலகிச் செல்கின்றதா? முத்துக்குமார் தமிழ்த்தேசிய அரசியலிலிருந்து கிழக்கு மாகாணம் மெல்ல,மெல்ல விலகிச் செல்கின்றதா என்ற சந்தேகம் தமிழ்த் தேசிய ஆர்வலர்களிடையே இன்று எழுந்துள்ளது. வட-கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை என கிழக்கின் முன்னேறிய பிரிவினர் சிலர் நினைப்பதும், உடனடிப் பிரச்சனையாக முஸ்லிம்களுடனான முரண்பாடு இருப்பதால் அரசாங்கத்தின் ஆதரவுடனேயே அதற்கு முகம் கொடுக்க முடியும் எனக் கருத முற்படுவதும் இச் சந்தேகத்தை கிளப்பியுள்ளது. இந்தப் போக்கு ஆரம்பத்தில் கல்முனையில் தோன்றி இன்று மட்டக்களப்பு, திருகோணமலை என கிழக்கு மாகாணம் முழுவதும் பரவுகின்றது. கல்முனையில் தமிழ் பிரதேச செயலாளர் பிரிவினை மூடப் போகின்றனர் என்ற செய்தி வந்ததும்…
-
- 0 replies
- 565 views
-
-
உணவு, நெருக்கடியை.. எதிர் கொள்வது! -நிலாந்தன்.- வரும் ஓகஸ்ட்,செப்டம்பர் மாதமளவில் ஏற்படக்கூடிய உணவு நெருக்கடியை நோக்கி தமிழ் மக்கள் மத்தியில் ஏதோ ஒரு விகிதமளவுக்கு விழிப்பு ஏற்பட்டிருப்பது சந்தோஷமே.இந்த விடயத்தில் செயல்பூர்வமாக தற்காப்பு நடவடிக்கைகளை தொடக்கி வைத்த கட்சியாக ஐங்கரநேசனின் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தைக் குறிப்பிடலாம்.அக்கட்சியானது, சிறுதானியங்களுக்கு “ராசதானியம்” என்று பெயர் வைத்து, விதைத் தானியங்களை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கியது.அதைத் தொடர்ந்து அரச நிர்வாக கட்டமைப்புக்கள் சிலவும், செயற்பாட்டு அமைப்புகளும் தனி நபர்களும் அதுபோன்ற செய்முறைகளை முன்னெடுக்கப்படுகின்றனர். தவிர சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியிலும் விவசாய செயற்பாட்டாளர்கள் மத்தியிலும் குறிப்ப…
-
- 0 replies
- 244 views
-
-
சீனாவின் ராணுவ பலம்: அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளை ஆயுத போட்டியில் முந்தப்போவது எப்படி? டேவிட் பிரவுன் பிபிசி நியூஸ் 23 டிசம்பர் 2021 புதுப்பிக்கப்பட்டது 9 மணி நேரங்களுக்கு முன்னர் சீனா தனது படைகளை அதிவேகமாக பெருக்கிக் கொண்டிருக்கிறது. ஏவுகணை தொழில்நுட்பம், அணு ஆயுதங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் அதன் முன்னேறும் வேகம் பல மேற்கத்திய நிபுணர்களிடையே தீவிர கவலையை ஏற்படுத்தியுள்ளன. ராணுவ ஆற்றல் அடிப்படையிலான உலகளாவிய சமநிலையில் திட்டவட்டமான மாற்றம் நடந்து வருவதாக அவர்கள் நம்புகிறார்கள். 2035-ஆம் ஆண்டுக்குள் சீனாவின் படைகளை நவீனமயமாக்குமாறு அத…
-
- 0 replies
- 402 views
- 1 follower
-
-
தேர்தல் முடிவுக்கு பின்னால் நடப்பது என்ன? உள்ளூராட்சித் தேர்தல் எல்லா மட்டங்களிலும் குழப்பங்களைத் தான் தீர்வாகத் தந்திருக்கிறது. தேர்தல் முடிவுகள், மஹிந்த ராஜபக் ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு சாதகமாக அமைந்ததால், ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்கள் ஒரு புறம் நீடிக்கிறது. தற்போதைய அரசாங்கம் நீடிக்குமா- நிலைக்குமா என்ற கேள்வியை அது உருவாக்கி விட்டிருக்கிறது. இந்த அதிகாரப் போட்டியினால் அரசாங்கத்தின் பெரும்பாலான செயற்பாடுகள் குழப்பமடைந்து போயிருக்கின்றன. அடுத்து என்ன நடக்கும் என்று அரசாங்கத்தில் உள்ளவர்களாலும் சரி, நாட்டு மக்களாலும் சரி, கணிக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கி…
-
- 0 replies
- 332 views
-
-
ஜெயலலிதா எமக்கான நிரந்தர நேச சக்தி கிடையாது. அவரது ஆரம்ப கால நவடிக்கைகளை பார்த்தாலே அது புரியும். அத்தகைய ஒருத்தரை எமது தொடர் போராட்டங்களினூடாக எமக்குச் சார்பாகத் திருப்பியது சமகால வரலாறு. தமிழக மக்களின் ஒட்டுமொத்த எண்ணப்பிரதிபலிப்பாய், தமிழீழ பொதுவாக்கெடுப்புக்கு தீர்மானம் நிறைவேற்றியது தொடக்கம் அவரது சமகால பங்களிப்புக்களை நிறையவே சொல்லலாம். இது எம்மீதான அக்கறையின்பாற்பட்;டதல்ல என்றபோதும் சமகால அரசியல் களம் என்பது இத்தகைய நலன் சார்ந்த பின்புலத்தில்தான் கட்டியெழுப்பப்படுகிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழீழம் சார்ந்து டெல்லிக்கு அச்சுறுத்தலாக இருந்த ஒருத்தரை நாம் இழப்பது எமது விடுதலை சார்ந்து நல்ல அறிகுறி அல்ல. அதுவும் சிங்களத்திற்கு எதிராக …
-
- 0 replies
- 1.3k views
-
-
எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறுமென்று வலுவாக எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு என்ற கேள்வி இப்போது முதன்மை பெறத் தொடங்கியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கிலும் கிழக்கிலும் கொண்டுள்ள வாக்கு வங்கி, இத்தேர்தலில் மிகவும் முக்கியமானதொரு விடயமாகக் கருதப்படுகிறது. சுமார் நான்கு இலட்சம் தமிழர்களின் வாக்குகளை வைத்துக்கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதித் தேர்தலில் பேரம் பேச முனைவதாக, அண்மையில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்திருந்தார். இந்தக் கருத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதான அமைச்சர் விமல் வீரவன்சவின் காழ்ப்புணர்வை காட்டுவதாக மட்டும் எடுத்துக்கொள்ளக்கூடாது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட…
-
- 0 replies
- 498 views
-
-
இந்தியாவுக்கு சவாலாக சீனா அள்ளியிறைக்கும் நிதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், 2 பில்லியன் யுவான்களை கொடையாக வழங்க முன்வந்திருக்கிறார். அதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரும்புகின்ற எந்த திட்டத்துக்கு வேண்டுமானாலும் செலவிடலாம் இலங்கையில் தமது செல்வாக்கை அல்லது தலையீடுகளை உறுதிப்படுத்திக் கொள்வதில், சீனாவும் இந்தியாவும், கடுமையான போட்டியில் தான் குதித்திருக்கின்றன என்பதை இரண்டு நாடுகளினதும் அண்மைய நகர்வுகள் தெளிவாக உணர்த்தி வருகின்றன. ஒன்றுக்கு ஒன்று சளைக்காமலும், விட்டுக் கொடுக்காமலும், நகர்வுகளை முன்னெடுத்து வருவதைக் காண ம…
-
- 0 replies
- 395 views
-
-
நீர்ச்செல்வத்தை ஏன் எதிர்க்கின்றார்கள்? உலகமே நீருக்காக அலைபாய்ந்து கொண்டிருக்கும்போது ஒரு நதியின் வருகையைக் கண்டு, ஒரு மக்கள் கூட்டம் அச்சப்படுவது இலங்கையில் தானாக இருக்க வேண்டும். இந்த அச்சம் நாற்பது ஆண்டுகளாக நீடிக்கிறது. இது மேலும் நீடிக்கலாம். “மகாவலிகங்கை வடக்கு நோக்கிச் செல்கிறது” என்று அரசாங்கம் அறிவிக்கும் போதெல்லாம் பெரும்பாலான தமிழர்கள் பதைப்போடு தங்களுடைய நெஞ்சைப் பொத்திக் கொள்கிறார்கள். அப்படித்தான் கடந்த 28ஆம் திகதி முல்லைத்தீவில் நாலாயிரத்துக்கும் அதிகமானவர்கள் ஒன்று கூடி வடக்குக்கான மகாவலித்திட்டத்தை மறுத…
-
- 0 replies
- 772 views
-
-
மகிந்தவின் தெரிவு – இந்தியாவா? அல்லது சீனாவா? முன்னாள் அரச தலைவர்என்ற மதிப்புடன் மகிந்தராஜபக்ச இந்தியாவுக்குச் சென்று தலைமை அமைச்சர் மோடி, முதன்மை எதிர்க்கட்சியான காங்கிரஸின் முக்கி யஸ்தர்கள் ஆகியோரைச் சந்தித்து உரையாடியுள்ளார். இலங்கையின் இன்றை சூழ்நிலையில் மகிந்தவின் இந்தியப் பயணம் முக்கி யத்துவம் பெறுகின்றது. சுமார் 10 ஆண்டுகாலம் அரச தலைவர் பதவியை வகித்தவர் என்ற பெருமை மகிந்தவுக்கு உள்ளது. அவர் மூன்றாவது தடவையும் அந்தப் பதவிக்குப் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவியபோதிலும் ஆட்சிக்கு வருவதில் உள்ள ஆர்வத்தை இன்னமும் கொண்டிருக்கிறார். இதனால் புதி…
-
- 0 replies
- 474 views
-
-
முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் நேர்காணல் சமகால அரசியல் பற்றியது! thanks cmr.fm
-
- 0 replies
- 393 views
-
-
பேராயர் மல்கம் ரஞ்சித்தின் மனட்சாட்சி ஆயர் இராஜப்பு ஜோசப் சொன்னது என்ன? சிங்கள ஆட்சியாளர்கள், சிங்கள இராணுவ உயர் அதிகாரிகள் சிலரினால் கையாளப்பட்ட தமிழ் – முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் 2009 முள்ளிவாய்க்கல் போரின்போது தமிழர் தாயகப் பிரதேசங்களில் தேசியத்தை மலினப்படுத்தும் அசிங்கமான அரசியலில் (Ugly Treacherous Politics) ஈடுபடுத்தப்பட்டிருந்தன என்பதை சனல் 4 வெளியிடவில்லை. இந்த அசிங்க அரசியலின் தொடர்சிதான் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல். அங்கிருந்துதான் சனல் 4 ஆவணப்படத்தைத் தயாரித்திருக்க வேண்டும். அ.நிக்ஸன்- 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சூத்திரதாரி யா…
-
- 0 replies
- 372 views
-
-
ஜோர்ஜ் ஃபெர்னாண்டர்ஸ் – தமிழ் மக்களுக்குக் கதாநாயகன் – சிங்கள மக்களுக்கு வில்லன்? -நிலாந்தன் February 10, 2019 கருணாநிதி உயிர் நீத்தபொழுது முகநூலில் ஈழத் தமிழர்கள் இரு கூறாகப் பிரிந்து நின்றார்கள். ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல ஒரு பகுதி தமிழகத்தவர்களும் இரு கூறாகப் பிரிந்து நின்றார்கள். புலிகள் இயக்கத்தை ஆதரித்தவர்கள் கருணாநிதியை கடுமையாக விமர்சித்தார்கள். புலிகள் இயக்கத்தை எதிர்த்தவர்கள் அல்லது விமர்சித்தவர்கள் கருணாநிதியை நியாயப்படுத்தினார்கள். ஆனால் அண்மையில் ஜோர்ஜ் ஃபெர்னாண்டர்ஸ் உயிர்நீத்த பொழுது ஈழத்தமிழர்களில் பெரும் பகுதியினர் அவரைக் கண்ணியமாக நினைவு கூர்ந்தார்கள். தமிழகத்திலும் ஜோர்ஜ் ஃபெர்னான்டஸ் மதிப்போடு நினைவு கூரப்பட்டார். தமிழகத்த…
-
- 0 replies
- 938 views
-
-
ஏமாற்றி விட்டதா அமெரிக்கா?Aug 30, 2015 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியதும், ஜெனிவா களம் குறித்த கலக்கத்துடன் காத்திருந்த இலங்கை அரசாங்கத்துக்கு, ஆறுதல் அளிக்கும் செய்தியோடு வந்திறங்கியிருந்தார் தெற்கு, மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால். இந்த ஆண்டில் – இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், அவர் மேற்கொண்ட மூன்றாவது பயணம் இது. கடந்த ஜனவரியில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, பெப்ரவரி 2ஆம் திகதி கொழும்பு வந்திருந்தார் நிஷா பிஸ்வால். அந்தப் பயணத்தின் போது, அவர் கொழும்புக்கு ஒரு புதிய சமிக்ஞையைக் காட்டி விட்டுச் சென்றிருந்தார். மார்ச் மாதம் நடந்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 29ஆவது அமர்வ…
-
- 0 replies
- 258 views
-
-
ஊழல், இலஞ்ச முறைகேடுகளை அகற்றுவதில் தேசிய மக்கள் சக்தியால் எவ்வளவு தூரம் செல்ல முடியும்? கந்தையா அருந்தவபாலன் ஊழல், இலஞ்சம் போன்ற சொற்களை நாம் கருத்து வேறுபாடின்றி பொதுவாகப் பயன்படுத்தினாலும் இரண்டும் ஒன்றல்ல. ஒருவரின் தீர்மானம் அல்லது செயல் மீது செல்வாக்குச் செலுத்தும் வகையில் சட்டமுரணாக அல்லது நெறிபிறழ்வாக ஏதாவது பெறுமதியொன்றை வழங்குதல் அல்லது பெறுதல் ஊழல் எனப்படும். உதாரணமாக ஒப்பந்தம் ஒன்றைப் பெறுவதற்காக அதனைத் தீர்மானிப்பவருக்கு பணம் கொடுப்பது ஊழல் எனப்படும். ஆனால் இலஞ்சம் என்பது சட்டமுரணாக அல்லது நெறிபிறழ்வாக ஒருவர் தனது பதவியை அல்லது அதிகாரத்தைப் பயன்படுத்தி பெறுவது அல்லது தனிப்பட்ட ரீதியில் நன்மையடைவதாகும். உதாரணமாக ஒரு பணியாளரை நியமிப்பதற்கு அல்லது இ…
-
- 0 replies
- 260 views
-
-
13ஆவது திருத்தம் படும் பாடு -லக்ஸ்மன் “கடந்த 70 ஆண்டுகளாக, அடுத்தடுத்து பதவிக்கு வந்த தலைவர்கள், ஒரேயோர் உறுதிமொழியையே அளித்துள்ளனர். அதிகாரப் பகிர்வு, அதிகாரப் பகிர்வு, அதிகாரப் பகிர்வு. ஆனால், இறுதியில் எதுவும் நடக்கவில்லை. பெரும்பான்மை சமூகத்தின் விருப்பங்களுக்கும் உணர்வுக்கும் எதிராக, நீங்கள் எதுவும் செய்ய முடியாது என்று நான் நம்புகிறேன். பெரும்பான்மையினரின் விருப்பத்துக்கு எதிராக, எதையாவது உறுதியளிக்கும் எவரும் பொய்யானவர். எந்தச் சிங்களவரும் வடக்கு, கிழக்கில் அபிவிருத்தி செய்யாதீர்கள்; அவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டாம் எனச் சொல்லமாட்டார்கள். ஆனால் அரசியல் பிரச்சினைகள் வேறு”. இது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கருத்து. இந்திய விஜயத்தின் போது, ‘ஹிந்த…
-
- 0 replies
- 575 views
-
-
ஈகச் சுடரும் வெற்றி முழக்கமும் இலங்கையில் பன்நெடுங்கால வரலாற்றை கொண்ட சித்திரை வருடப்பிறப்பு நாளன்று, தமிழர் சக்கரைப்பொங்கல் பொங்கிக் கொண்டாடுவர்; சிங்களவர் பால்சோறு சமைத்துக் கொண்டாடுவர். இது தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் பொதுவான பண்டிகை நாளாகக் கருதப்படினும், சைவர்களும் பௌத்தர்களும் தவிர்ந்த வேறு மதத்தவர் கொண்டாடுவது அரிது. எனினும் அவர்கள் கொண்டாட்டத்தில் மகிழ்வுடன் பங்குகொள்வதுண்டு. இன ரீதியான, மதரீதியான வேற்றுமைகளைக் களைந்து இலங்கையராக ஒன்றுசேரும் மகிழ்வான தருணம் இது. சித்திரை புதுவருடம் முடிந்து ஒரு மாதம் ஐந்து நாள்களுக்குள் மீண்டும் பால்சோறு பொங்கிக் கொண்டாடும் நிகழ்வொன்று சிலவருடங்களுக்கு முன்னர் சிங்களவர்கள் மத்தியில் உருவாகியது. இதன் பின்னணியில் …
-
- 0 replies
- 585 views
-
-
பலி ஆடுகள் ஆக்கப்பட்ட தமிழர்கள் - கே.சஞ்சயன் ஆலயத்தில் பலியிடுவதற்காகக் கொண்டு செல்லப்படும் ஆட்டின் தலையில் பூசாரி மஞ்சள் தண்ணீரைத் தெளிப்பார். தண்ணீர் பட்ட சிலிர்ப்பில் ஆடு தலையை ஒருமுறை ஆட்டி அதனை உதற முனையும். அதுதான் ஆடு செய்யும் தவறு. தன்னைப் பலிகொடுப்பதற்கு ஆடு விடை கொடுத்து விட்டதாக யாரோ ஒருவர் கூறுவார். அவ்வளவு தான், அத்தோடு முடிந்தது ஆட்டின் கதை. பலிகொடுப்பதற்குத் தன்னிடம் அனுமதி கேட்பதற்காகத் தான், தன் மீது மஞ்சள் தண்ணீர் தெளிக்கப்படுகிறது என்று ஆட்டுக்குத் தெரியாது. அவ்வாறு தெரிந்திருந்தால் ஆடு அதற்கு ஒருபோதும் தலையாட்டியிருக்காது. ஆட்டிடம் கேட்காமலேயே, அதன் ஒப்புதலைப் பெற்றது போலத்தான் இப்போது போர…
-
- 0 replies
- 445 views
-
-
இலங்கையோடு ஜேர்மனி பேரம் பேசியதா? ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் சூழ்ச்சியா? —-பிரித்தானியா வெளியேறியதால் இலங்கை விவகாரத்தை ஐரோப்பிய ஒன்றியத்தில் கையாள ஆரம்பித்துள்ள ஜேர்மன் அரசு, தனியே இலங்கை அரசைப் பாதுகாப்பதற்கான அல்லது நியாயப்படுத்துவதற்கான தளபதியாக மாத்திரம் இயங்க முடியாது– -அ.நிக்ஸன்- இலங்கை தொடர்பான விவகாரத்தைக் கையாள்வதற்கான ஜெனீவா மனித உரிமைச் சபையின் கருக்குழு நாடுகள் பட்டியலில் (Core Group on Sri Lanka) பிரதான அங்கம் வகிக்கும் ஜேர்மன் அரசு இலங்கைக்குச் சாதகமானதொரு போக்கையே பின்பற்றி வருகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்திலும் ஜேர்மனி அங்கம் வகிக்கின்றது. 2009 ஆம் ஆண்டுக்கு முன்ன…
-
- 0 replies
- 412 views
-
-
ஈழத் தமிழர்களுக்கான வெளிவிவகாரக் கொள்கை சாத்தியமான ஒன்றா ? - யதீந்திரா ஈழத் தமிழர்களுக்கான வெளிவிவகாரக் கொள்கை ஒன்றின் தேவை தொடர்பில் பேசப்படுகின்றது. பொதுவாகவே நமது சூழலில் விடயங்கள் பேசப்படும் அளவிற்கு, அந்த விடயங்கள் ஆழமாக நோக்கப்படுவதில்லை. அதாவது, நாம் முன்வைக்கும் விடயங்களை எவ்வாறு சாத்தியப்படுத்தலாம், உண்மையிலேயே அதனை சாத்தியப்படுத்த முடியுமா? முடியுமென்றால் எவ்வாறு? இப்படியான கேள்விகளுக்குள் எவரும் செல்வதில்லை. ஒரு நுனிப்புல் மேய்ச்சலாகவே அனைத்தும் முடிந்துவிடுகின்றன. இதன் காரணமாகவே பெரும்பாலான விடயங்கள், சாதாரணமாக வாசித்துவிட்டு சாதாரணமாக கடந்து செல்லப்படுகின்றது. சாதாரணமாக எழுதிவிட்டுப் போதல் – என்னும் நிலைமை இருக்கின்ற போது, சாதாரணமாக…
-
- 0 replies
- 508 views
-